Wednesday, April 26, 2006

உம்மாச்சி காப்பாத்து..!

Click here to read the Part-1தமிழ் வருட பிறப்பு - விஷு என்பதால் கையில் வீணையுடன் ஷாரதாம்பாளுக்கு விஷேச அலங்காரம், வைர கீரீடம்,காதில் வைர தாடகங்கள், கழுத்தில் மலர் மாலைகள், காலில் சிலம்புகள்,பச்சை பட்டு,ரத்ன சிம்மாசனத்தில் சாந்தமான,கருணை பொங்கும் பார்வை, அம்பி,வந்து சேர்ந்தாயா? என்று கேட்பது போன்ற இதழோரம் மெல்லிய புன்சிரிப்பு,காண கண் கோடி வேண்டும்.

"ஷ்ரி சக்ர ராஜ சிம்மாசனேஷ்வரி
ஷ்ரி லலிதாம்பிகையே! - புவனேஷ்வரி"

என்று என்னை அறியாமல் பாட ஆரம்பித்து விட்டேன்.

" உழன்று திரிந்த என்னை
உத்தமனாக்கி வைத்தாய்
உயரிய பெரியரொடு, ஒன்றிட
கூட்டி வைத்தாய்!
நிழலென தொடர்ந்து வந்த
என் கொடுமையை நீக்க செய்தாய்!"

எவ்வளவு சத்யமான வரிகள்! (ராகம் என்னவோ? ராகமாலிகையா? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்!)
என் அப்பா, பெரியப்பா, எல்லாம் மிக உருக்கமாக இந்த பாடலை பாடுவார்கள். நமக்கு கேள்வி அறிவு தான்.

ஒரு பெண்மணி மிக இனிமையான குரலில் சவுந்தர்ய லகரி சொல்ல ஆரம்பித்தார்கள். என்னை அறியாமல் கண்களில் இருந்து கண்ணீர் பெருகியது. ஆதி ஷங்கரர் சம்ஸ்க்ருத ஸ்லோகங்களாக ஷ்ரி லலிதா தேவியை வர்ணிப்பார். தமிழிலில் பாஷ்யம் கிடைக்கிறது. படித்து பாருங்கள். நேரில் பார்த்தால் மட்டுமே அவ்வளவு அழகாக வர்ணிக்க முடியும்.

மகா மேருவுக்கு, தாழம்பு குங்கும அர்ச்சனை செய்து கொண்டிருந்தார்கள். ஷ்ரி சக்ரத்தின்
3-D வடிவம் தான் மகா மேரு. 44 முக்கோணங்கள் குறிப்பிட்ட டிகிரியில் பிரமிடுகளாக தோற்றம் அளித்து ஒன்றை ஒன்று சந்திக்கும். ஷ்ரி சக்ரம் மற்றும் மகா மேருவை பற்றி ஷ்ரி காஞ்சி பரமாச்சார்யார்(மகா பெரியவா) தனது தெய்வத்தின் குரல் புத்தகத்தில் மிக அற்புதமாக விளக்கி இருக்கிறார். மொத்தம் 7 வால்யூம்கள். 4 வது வால்யூம், 275 வது பக்கம் என்று நினைகிறேன்.

ஏறக்குறைய இதே லாஜிக்கில் தான் எகிப்து பிரமிடுகள் கட்டப்பட்டுள்ளன. எந்த பொருளும் பிரமிடுக்குள் வைத்தால் கெட்டு போகாது.இன்று கோவில் கடைகளில் கூட மகா மேரு என்று விற்க ஆரம்பித்து விட்டர்கள். கலி காலம்!.

கொஞ்ச நேரம் என்னை மறந்து அந்தர்முக தியானத்தில் லயித்து இருந்தேன். நம்மை நாமே உள் நோக்கி உற்று பார்ப்பது தான் அந்தர்முக தியானம். ஒரு இருண்ட குகைக்குள், தன்னந்தனியாக வேகமாக ரோலர் கோஸ்டரில் பயணம் செய்வது போன்று இருக்கும். அம்மா, அப்பா, உடன்பிறந்தவர்கள், நண்பர்கள், நமது பிளாக், பிளாக் கமெண்ட்ஸ், நமக்கு பிரியமானவர்கள் என எல்லார் முகமும் மறைந்து கடைசியாக ஒரு வெறுமை ஏற்படும். பின் தோன்றும் மிக பெரிய பேரோளியில் நாம் கரைந்து போவோம். இது தான் அந்தர்முக தியானம். முதலில் கஷ்டமாக இருக்கும். பின் பழக, பழக யோகம் கைகூடும்.(அம்பி, நிஜமாகவே நீ தானா பேசுவது?னு நீங்கள் ஆச்சர்யப்படுவது எனக்கு தெரிகிறது.)

மணியோசையுடன் தீப ஆரத்தி காட்டினார்கள். ஊண் உருக, உள்ளம் உருக பிறந்த பயனை அடைந்தேன்.

பின் ப்ரகாரம் சுற்றி, ஷக்தி கணபதி, தோரண கணபதியை வணங்கி குங்கும அர்ச்சனை ப்ரஸாதம் வாங்கி கொண்டு, துங்க பத்ரா நதிக்கரைக்கு வந்தேன்.

எவ்வளவு பெரிய பெரிய மீன்கள்! இந்த மீன்களில் ஒன்றாக நான் பிறந்து இருக்க கூடாதா? என தோன்றியது. இதே போல, சரவண பொய்கையில் ஒரு மீனாக பிறக்க வேண்டுமென ஒரு முருகன் பாடல் வரும். ராகம், தாளம் பல்லவி எல்லாம் மறந்து விட்டது. தெரிந்தவர்கள் சொல்லலாமே?


சிருங்கேரி ஆச்சார்யார் இருக்கும் இடமான ந்ருசிம்மவனத்துக்கு செல்ல வில்லை. கேம்ப் சென்றிருப்பதாக தகவல் அறிந்தேன். மிகவும் பழமை வாய்ந்த சந்ரமெளீஸ்வரர் ஸ்படிக லிங்க பூஜை பார்க்க முடியவில்லை. இந்த லிங்கம் பற்றி மேலும் தகவல்களை
இங்கே அறியலாம்.

அனேகமாக எல்லா இடங்களிலும் கேமரா அனுமதி இல்லை. சில விஷயங்களை, இடங்களை நேரில் பார்த்தால் மட்டுமே ரசித்து, உணர முடியும். போட்டோக்கள் அதை உணர்த்த முடியாது. (கலவர பயத்தால் நான் கேமரா எடுத்து போக வில்லைனு உண்மையை சொல்லவா முடியும்?)


சிருங்கேரி இன்னும் வியாபார தலமாக மாறவில்லை என்பது ஒரு பெரிய ஆறுதல். தாஜ் ஓட்டல்காரன் பார்த்தான் என்றால் " 2 இரவு, 3 பகல், இந்த கோடையை குடும்பத்துடன் சிருங்கேரியில் கொண்டாடுங்கள்!"னு விளம்பரப்படுத்தி விடுவான். சிருங்கேரி பற்றி மேலும் தகவல் அறிய, visit this website: www.sringeri.net

மறுபடி உலக பற்றுகள் தொற்றி கொண்டது. டிபன் சாப்பிட ஓட்டல் தேடினேன். ஒரு அக்ரகார வீட்டில் மெஸ் நடத்துகிறார்கள். பல மாதங்களுக்கு பிறகு, சம்மணம் போட்டு இலையில் மல்லிகைப்பூ(இட்லி) சாப்பிட்டேன். ஆகா! இப்படி ஒரு சுவையை என் அம்மா சமையல் நீங்கலாக(என் அம்மா பிளாக் படிச்சா கோச்சுக்க கூடாது இல்லையா?) நான் சுவைத்ததில்லை.

என் பக்கத்தில் ஒரு குஜராத்தி குடும்பம் மல்லிகைப்பூக்களை(இட்லிகளை) வேட்டையாடு! விளையாடு!னு எனக்கு போட்டியாக வெளுத்து வாங்கிக் கொண்டு இருந்தது. என்னடா! எதாவது இட்லி பந்தயம் நடக்கிறதா?னு மீதி பேருக்கு சந்தேகம் வந்து விட்டது. பாவம்! நம்மை போல கலவரத்தில் சிக்கி இருப்பா போலிருக்கு! பந்தையத்தில் குஜராத்திகளே ஜெயித்தார்கள். அந்த நள சக்ரவர்த்தியை தனியே கூப்பிட்டு மனமார வாழ்த்தினேன்.

சங்கீதமும், சமையலும் ஒன்னு!னு எங்க பெரியப்பா சொல்வார். இரண்டுக்கும் உடனே ரிஸல்ட் தெரிந்து விடும். நாரத கான சபாவில் பாட்டு நன்னா இருந்தா சபாஷ்! பலே!னு ( நமது)தொடையை தட்டி தாளம் போடலாம். நல்லா இல்லைனா நைஸா உருளைகிழங்கு போண்டா சாப்பிட கேண்டீனுக்கு நழுவிடலாம். தில்லு இருந்தா, கல்ல விட்டு எறியலாம். சமையல் நன்னா இருந்தா சமைச்ச கைக்கு தங்க வளையல் போடறேன்!னு எங்க அப்பா மாதிரி அல்வா குடுக்கலாம்.(சாரி அப்பா!).

பின்பு, அங்கு விசாரித்ததில் சிருங்கேரியில் இருந்து உடுப்பி 2.5 மணி நேர பயண தூரம் தான் என்று தெரிந்தது. சரி, உடுப்பி ஓட்டல் தான் பாத்துருக்கோம், அசல் உடுப்பி எப்படி இருக்குனு பாத்துடுவோம்னு முடிவு பண்ணி, "சன்முகம்! எடுறா வண்டிய!"னு சிருங்கேரி பஸ் நிலையம் வந்து சேர்ந்தேன்.

....இன்னும் பயணிப்பேன்.

பின்குறிப்பு: எல்லா படங்களும் வெப்சைட்டில் இருந்து சுட்டது.

18 comments:

Gopalan Ramasubbu said...

Boss,
bakthi rasam sotta eluthirukenga, good on u.nenga ethanai mallikai poo(Idly) saptenganu enaku mattum thaniya email panunga.nan yarukum solamaten;).

வேதா said...

romna nalla ezhuthiyurukeenga.
naan ange pogum pothu nadai sathiuyirunthathal kitta thatta 2 mani neram nathikaraiyil amarthu irunthen. arumaiyana anubhavam, ithellam ange poi anubavicha thaan theriyum. athe pol naan poyiruntha pothum madhathil aacharyar illai, aanal madathai suthi paarthen. miga arumaiyana idam. ungal vivaranai migavum arumai. aduthathu udupiya? romba araumaiyana idam, naanum sringeri pona pothu udipikkum ponen. udupi krishnanin thanga ther urvalam paarkum paakiyam perren. ennai ange tholaithen.(next enga darmasthalava? illa kollur moogambigaiya?

BLOGESWARI said...

Moondram baagathukkaaga waiting

Viji said...

பலே, பலே! சாரதாம்பாள் வர்ணணை அற்புதம்! நானே நேர்ல பாத்த மாதிரி, சிலிர்த்தது! (இத்தனைக்கும், எனக்கு அந்த அளவுக்கு பக்தி கூட கிடையாது! இப்போ தான்... beginner).
"ஸ்ரீ சக்ர ராஜ" ராகம்... ராக மாலிகை தான். செஞ்சுருட்டி, புன்னாகவராளி, நாதநாமக்ரியா, சிந்து பைரவி.
"நிழலென தொடர்ந்த முன்னூழ்" னு நெனைக்கறேன்...
(முன்னூழ்- Previous birth?)
சரவணப் பொய்கை பாட்டு தெரில... எனக்கு ஞாபகம் வந்தது ஊத்துக்காடு பாட்டு, "புல்லாய் பிறவி தர வேணும்".

Anonymous said...

u r a good boy - ambi

Viji said...

அதென்ன? பச்சை பட்டுனு சொல்லிட்டு, சிகப்பு பட்டு photo போட்டு இருக்கிங்க? திருடர்துல கூட ஒரு புத்திசாலி தனம் இல்லியா? lol :P

ambi said...

@Gops, danks. he hee, i'm a வளர்ற குழந்தை!கண்ணு போட கூடாது! :)

@veda, danks, Naan blog arambichu, ithana nallula, ippo thaan evloo periya comment potrukeenga... :)

@Blogeswari, varuthu, varuthu, miga viraivil...

@viji, danks. U made my day. i know that U r gud in karnatic sangeetham. தஞ்சாவூர் ஜட்கா வண்டிகாரன் கூட சங்கீதம் பாடுவான்!னு ஒரு பழமொழி உண்டு. புன்னாகவராளி பாடினா பாம்பு வருமாமே? அது மகுடி மாதிரி மயக்கும்னு கேள்விப்பட்டு இருக்கேன். உண்மையா?
"புல்லாய் பிறவி தர வேணும்" is about krishna. i heard that murugan song, sung by Aruna sairam in live. Ohhh God! wat a mesmarising voice she has!

@anonymous, he hee, danks. yeeh, i'm a very good boy.(it seems U haven't seen my part-1.)

@viji, வெப்சைட்ல இந்த படம் தான் இருந்தது. நானும் இந்த பாய்ண்ட யோசிச்சேன்.

Dubukku said...

நல்லா எழுதி இருக்கடா...அதானே இந்தப் பய (பக்திப்) பழமாச்சே ஆனா ப்ளாக்ல ரொம்ப ரெமோ ஆக்ட் குடுக்கறானேன்னு இன்னும் அந்த பழ வாசனையே வரலையேன்னு பார்த்தேன். (சாரிடா ரொம்ப கலாசிட்டேனா...I couldn't resist this...:))) )


//என் அப்பா, பெரியப்பா, எல்லாம் மிக உருக்கமாக இந்த பாடலை பாடுவார்கள்//

ஹீ ஹீ அவங்க பாடும் போது நாம என்ன பண்ணுவோம்ன்னு சொல்லவே இல்லையே? :P

Arjuna_Speaks said...

ambi arumaiyana post :)..

"இதழோரம் மெல்லிய புன்சிரிப்பு...," "என்னை அறியாமல் பாட ஆரம்பித்து விட்டேன்"

ungal padalai ketuma Sharadambal punnagai sinthinaar? :))..suma sonnen :P

Ambi, andar mugathil, when ur mind is silent, when there are no thoughts, u feel there is an observer who is observing ur stillness of ur mind..when u observe that observer for a long period of time - u reach the state of samadhi...

Arjuna_Speaks said...

Ambi - idliku enna sambhar potarkal endru kuravilayae? sigapu chutney, thakkali chutney ellam kudutharkala? sari mukiyamana vishayam, manja color jigidiyum koviluku vanthucha? :P lol

kuttichuvaru said...

bakthi sottuthu ambi!! nalla write-up.... naan kekkanum-nnu nenachen manja jigudi pathi, 'arjuna' kettuttaaru.... update kudunga!!

Arjuna_Speaks said...

ambi - ungal postai innoru murai vasitha piragu thaan ithai kandu pidithen..super :))

"நாரத கான சபாவில் பாட்டு நன்னா இருந்தா சபாஷ்! பலே!னு ( நமது)தொடையை தட்டி தாளம் போடலாம்"

Pakkathil rambha illamal iruntha sari :)) lol

ambi said...

@dubukku, danks anna,he,hee.. kalasinaalum paravayillai. neenga mrudhangkam adichu, manniya correct paneenengoo nu En bloglayum podanumaa? :)

@arjuna, danks, only one time i expd that samadhi stage. still trying. not successful yet. btw, kothamalli chatney, paruppu sambhar, superrra Bondaa.

@arjuna & kutti, மஞ்சள் கலர் ஜிகிடி, சரியாக 1.30 am ku பெயர் தெரியாத ஒரு ஊரில் அத்தையுடன் (ஆமா! அழகு பெண்ணின் தாயார் என்றால் அத்தை தானே! வைரமுத்து சொல்லிருக்காரே!) இறங்கி விட்டது. அவள் பறந்து போனாளே!

@kutti, danks pa! see above comment.

//நாரத கான சபாவில் பாட்டு நன்னா இருந்தா சபாஷ்! பலே!னு ( நமது)தொடையை தட்டி தாளம் போடலாம்"//

@arjuna, he heee, foundoutaa? bakthi postla kuda namma budhi pogaathu polirukku.

Viji said...

ambi- பாம்பு வரும்னு சொல்றது எல்லாம், ஒரு ஐதீகம் தானே! :P
btw, "புல்லாய் பிறவி தர வேணும்", க்ருஷ்ணர் பற்றிய பாடல் தான்.
This conversation has inspired me to put up a post. வந்து பாருங்கோ! :-D

Arjuna- "ungal padalai ketuma Sharadambal punnagai sinthinaar? :))"- LOL :)

கீதா சாம்பசிவம் said...

இது என்ன அநியாயம் அம்பி, கரெக்டாக நான் சிருங்கேரியில் இருந்த சமயம் பார்த்து அங்கே வந்து விட்டு எனக்கு முன் பதிவு போட்டு, சரியான மித்திர துரோகம். அது சரி, பார்த்தது சாரதாம்பாளையா அல்லது மஞ்சள் கலர் சிங்குசாவா? ஏனென்றால் இங்கே ஓடுவது துங்கா மட்டும்தான். பத்ரா கொஞ்சம் தள்ளி வேறு ஒரு ஊரில் சேருகிறது. அப்புறம் சொல்ல மறந்துட்டேனே, காஞ்சீபுரத்தில் இருப்பது குமரக்கோட்டம். கந்த கோட்டம் இல்லை.

gayathri said...

ada ada bakthi paravasama eruku..

Usha said...

acho, indha post endha cycle gap-la vitta nee? Naan parkave illaye! Romba bhakti rasam sottaradhu kanna, niruthiko...un scene-ku alave illama poindruku.

奇堡比 said...

新女性徵信
外遇調查站
鴻海徵信
亞洲徵信
非凡徵信社
鳳凰徵信社
中華新女性徵信社
全國新女性徵信社
全省女人徵信有限公司
私家偵探超優網
女人感情會館-婚姻感情挽回徵信
女子偵探徵信網
女子國際徵信
外遇抓姦偵探社
女子徵信社
女人國際徵信
女子徵信社
台中縣徵信商業同業公會
成功科技器材
女人國際徵信社
女人國際徵信
三立徵信社-外遇
女人國際徵信
女人國際徵信
大同女人徵信聯盟
晚晴徵信