Click here to read Part-I
நானும் அனுமார் வாலுக்கு பொட்டு வைக்க சதா வருவானு பார்த்தா, சதாக்கு பாட்டி மாதிரி சோதாவா ஒரு மாமி தான் வந்தா. "அம்பி! கொஞ்சம் என் செருப்ப பாத்துக்கோ! பெருமாள சேவிச்சுட்டு வந்துடறேன்"னு கடுப்பேத்தினா.
ஆப்படித்து விட்டாரே என் அனுமார்!
மாமி! புளியோதரை நைவேத்யமா?னு கையில இருந்த தூக்க பார்த்து கேட்டேன்.
"வட மாலை டா அம்பி! பேத்திக்கு நல்ல வரனா அமையணும்னு 4 வாரமா வேண்டுதல்!"
"பேத்திய கூட்டிண்டு வந்துருந்தா அனுமார்(அம்பி) அருள் பரிபூரணமா கிடைக்குமே மாமி!"னு சும்மா ஒரு பிட்ட போட்டேன்.
அவளுக்கு எதோ எக்ஸாமாம்! சாயந்தரம் வந்து சேவிக்கரேனுட்டா!
யுனிவர்ஸிட்டி எக்ஸாம் போர்டை மனதார சபித்தேன்.
அதுக்குள்ள, என் சித்தப்பா வந்து, "அம்பி, இங்க என்னடா பண்ற? உன்னை எல்லாரும் தேடறா டா அங்க!"னு ஒலை வாசிச்சார்.
"ஒரு மாமி கோவிலுக்கு உள்ள் போயிருக்கா. வட மாலை ப்ரஸாதம் தருவா! நீங்க வாங்கி வைங்கோ! நான் இதோ வந்துடரேன்"னு நைஸா சித்தப்பாவ செருப்புக்கு காவல் வைத்து விட்டு நான் கம்பி நீட்டி விட்டேன்.எனக்கு எப்படி
கேசரி மீது காதலோ, அது போல சித்தப்பாவுக்கு உளுந்து வடை.
பொதுவாக இந்த மாதிரி சொந்தக்காரா கல்யாணங்கள், பேச்சுலர் பையன்/பெண்களுக்கு ஒரு ரஞ்சி டிராபி மேட்ச் மாதிரி. பல (செலக்டர்கள்) பெண்ணை/பிள்ளையை பெற்றவர்கள் உன்னிப்பாக கவனிப்பார்கள். நல்ல பிள்ளை மாதிரி ஸீன் போட தெரியனும். இந்த விஷயத்துல நான், எங்க அருமை அண்ணன்
டுபுக்கு எல்லாம் டாக்டர் பட்டம் பெற்றவர்கள்.
இந்த மாதிரி இடங்களில் பிகர்களை கவர் செய்ய கூடாது. அவர்களை பெற்ற புண்ணியவான்களை நன்றாக கவனிக்கனும்.ரொம்ப பொறுப்பான பிள்ளை மாதிரி வந்தவர்களை வரவேற்று சிம்மாசனத்தில் அமர்த்தனும்.பஞ்சு மிட்டாய் கலர் பட்டு புடவைய கூட "அட்டகாசமான கலர்"னு அள்ளி விடனும்.4 இட்லிக்கு ஒரு வாளி சாம்பார் கேட்டா கூட சலிக்காம பறிமாறனும்.
இந்த டகால்டி வேலை எல்லாம் ரொம்ப தெளிவா செஞ்சேன். என் டிரிக் ஒர்க்கவுட் ஆக ஆரம்பித்தது.
"யாரு இந்த அம்பி? துறுதுறுனு இருக்கானே?னு என் அம்மாவிடமே சில செலக்டர்கள் விசாரிக்க ஆரம்பித்து விட்டனர்.
இன்னும் ஒரு படி மேல போய், ஒரு ரூபாய் ஸைஸுக்கு குன்னக்குடி வைத்ய நாதன் மாதிரி பொட்டு வைத்த ஒரு பாட்டி, "அம்பி இங்க வா! எங்க வேலை பாக்ற? சம்பளம் எல்லாம் ஒழுங்கா தறாளா?னு சிபிஐ ரேஞ்சுக்கு கேப் விடாம கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.
எல்லா விபரமும் (பல்லை கடித்து கொண்டு)சொன்னேன். ஓ! நீ அங்க யா வேலை பாக்கற? அதே பில்டிங்ல தான் என் பேத்தி, 6 வது மாடியில இருக்கா!(வடாம் காய போடற வேலையோ?)
சுபா!னு கூப்டா திரும்பி பார்ப்பா! (அடடா! இது வல்லவா அடையாளம்!)
அதற்குள் என் அம்மா வந்து, அவன் ரொம்ப சின்ன பையன் மாமி!(அப்படியா மம்மி?)என்று சொல்லி என்னை அந்த பொட்டு மாமியிடமிருந்து மீட்டு கொண்டு போனார்கள்.
ஆபிஸ் போனதும், 6வது மாடிக்கு போயி, "சுபா!னு கூப்பிட்டு பார்க்கலாமா?னு நினைத்தேன். ஒரு வேளை, சுபாக்கு பதில், சுபாஷினி, சுபலட்சுமி, சுபஷ்ரி, சுபப்ரியானு பல சுபாகள் திரும்பி பார்த்தா என்ன பன்றது? அதோட மட்டும் இல்லை, பல சுபாக்கள் குதிகால் உயர செருப்பு வேற அணிந்து இருந்தனர். எனவே அந்த ஐடியாவை டிராப் செய்து விட்டேன்.
ரகளைகள் தொடரும்.....
15 comments:
pottu maami kitta vera adayaalam kekka koodatho? aiyo pavam ...
mummykku purinchirukkum neenga sadavai thedum padalam
adada, kuzhandaya ambi nee? unga amma paavam, ippadiellam unnai pathi ninaichindruka..naan vena pesatuma un amma-kitta?
kadaisila ulundhu vadai kedachuthaa illaiyaa? evenin poi try panneengalaa exam mudichu anumaar vaalukku pottu vekka Sada vanthuttu ponaalaannu??
ethuku ipoo sadha,sadha nu chumma chinnapulla thanama polambitu irukenga?;).Mummy small boynu sonna nenga big boy thaan nu prove pani katunga.ungaluka solli tharanum;)
@paavai, enakku appo thonalai.. he hee,just missu..
@usha, venaamaa, venaam. nee enna pesuvanu enakku theriyum.
@veda, he hee, arasiyal vazhkaiyila ithellam jagajam.
@kutti, porumai, porumai...
@gops, yeeh, i'm a complan boynu ippo ellam mummy kitta adigadi solren ph'la.. :)
andha maami sonna madari kupitu parunga anumaar kapathuvar!
ஆஹா, அம்பி, அதுதானே பார்த்தேன், டுபுக்கு எங்கேயோ போய் ஒளிந்து கொண்டு பின்னூட்டம் மட்டும் விடுகிறாரே என்று பார்த்தால் "தம்பியுடையான் படைக்கு அஞ்சான்" என்று இருக்கிறார் என இப்போது தான் தெரிந்து கொண்டேன்.
அம்பி, உங்கள் "நச்சுனு நாலு பதிவு" மட்டும் எப்படியோ என் கண்ணிலிருந்து தப்பி விட்டது. இன்று பார்த்து விட்டேன். மற்றபடி உங்கள் அம்மா இருந்தது கோபால கொத்தன் தெருவா என்று கேளுங்கள். எனக்கு அங்கேயும் சிநேகிதிகள் இருந்தார்கள். இப்போது எங்கு இருக்கிறார்கள் தெரியவில்லை.
neenga krishnar ku vadai saathi parunga sadha alladhu subha kadaksham kidaikudhaannu paakalaam... enna irundhaalum anumaar bachelor thaane
@nayagan, thambriii,anubavam pesuthoo?
@geetha, will checkout with my mom and let u know soon.
@ daydreamer, good idea, but i thought only being bachelor,anumaar knows the real bachelors problem. he hee :)
maamu
Unga aathu number thaango...Maami kitta solraen paiyanukku kalyaana aasai vandiduthunu :-)
Ambi, i dont think anumaar knows bachelors problems. Therinja avar innum bachelor-aa iruppaaraa?
தோ வந்துட்டேன்! Part 1 க்கு comment பண்ணேன்,பாத்திங்களா? :)
ஹும், நீங்க ஏதோ try பண்ணும் போது உங்க அம்மா வந்து ஆப்பு அடிச்சுட்டாங்க. உங்க "லீலை" பத்தி ஒரு வேலை தெரிஞ்சுருக்குமோ? ;)
ஒரே company'னா Internal directory ல வேண்ணா சுபா'வ தேடி பாருங்களேன்... :P
@harish, pasaakara payalugala irukaangaa paa!
@manoj, oh apdi kooda irukumoo?
@viji, viewed ur comments for the first part. yeeh, my mom is too smart and she is more like my elder sister, no generation gap at all.. btw, that subha is not in the same company. if so, track panni irukka mattenaa? :)
Soopera poittu irukku...aama yeppo climax...am i missing anything?
Post a Comment