Monday, April 10, 2006

மலையேற போனாலும் மச்சினன் தயவு வேணும்! - I

என் பெரியப்பாவுக்கு 2 செல்(ல)வ மகள்கள். முதல் பெண்ணுக்கு சென்ற வருடம் சென்னையில் திருமணம் சிறப்பாக நடந்தது. என் பெரியப்பாவுக்கு மகன்கள் இல்லை. எனவே அம்பியாகிய நான் அவசரத்துக்கு உப்புமா போல ஆக்டிங் மச்சினன் ஆக்கப்பட்டேன். எனக்கும் சொந்த அக்கா, தங்கை இல்லாததால், புதிய போஸ்டிங்கை ரொம்ப குஷியா ஏற்று கொண்டேன். நானும் எப்போ தான் பாச மலர் சிவாஜி ஆறது?

மாப்பிளைக்கு மாலை போடுவது, சந்தனம் இடுவது போன்ற முக்கிய பொறுப்புகள் அடியேனுக்கு கிட்டியது. இது எல்லாம் சும்மா ஜுஜுபி வேலைகள் தான். மாப்பிளை வீட்டார், தஞ்சாவூர் காரர்கள் என்பதால், எங்க ஸைடில் லேசா சின்ன உதறல்.

இங்கு தஞ்சாவூர் காரர்கள் பத்தி நான் கண்டிப்பாக சில வார்தைகள் சொல்ல வேண்டும். மாப்பிள்ளைக்கு மாலை போடுகிறோமோ இல்லையோ, அவரின் பெரியப்பா, சித்தப்பா, தாய் மாமா, என எல்லா பரிவார தேவதைகளுக்கும் மல்லிகை மாலை சார்த்த வேண்டும். அரை மணிக்கு ஒரு தடவை, "டிபன் சாப்டேளா அண்ணா? காபி சாப்டேளா அண்ணா?னு விசாரிக்க வேண்டும்.

நான் கும்பகோணம் வெத்தலை போட்டா தான், என் தம்பி பையன் தாலி கட்டுவான்னு சில தஞ்சாவூர் பெரியப்பாக்கள் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருவார்கள். இதுக்காக, பெண்ணை பெற்றவர் கும்பகோணமா போயிட்டு வர முடியும்? காப்பில சர்க்கரை கம்மியா இருக்கே!னு சில சவுரி வைத்த சொர்ணா அக்கா மாமிகள் சட்ட ஒழுங்கு மசோதா தாக்கல் செய்வார்கள். அதான் உங்க உடம்பு முழுக்க ஸுகர் இருக்கேனு நம்ப நுனி நாக்கு வரை வந்து விடும், சொல்லிட்டோம், அவ்ளோ தான், சொர்ணா அக்கா பரவை முனியம்மா குரலில் கத்த ஆரம்பித்து விடுவார்கள்.இந்த TCC (Tanjore Code of Conduct) ரூல்ஸை மறந்தோம், பேக்கப்! என்று டிக்ளேர் செய்து விடுவார்கள், அந்த மகானுபாவர்கள்.
எல்லா தஞ்சாவூர் காரர்களையும் நான் குத்தம் சொல்லலை. இப்படியும் சில தஞ்சாவூர் புண்ணியவான்கள் இருக்கானு தான் சொல்ல வரேன்.

நல்ல வேளை, என் பெரியப்பா சம்பந்திகள் மிகவும் பெருந்தன்மையாக நடந்து கொண்டனர். நானும் என் பெரியப்பாவும், நல்ல (பிகர்கள் இருக்கும்) ஏரியாவான மேற்கு மாம்பலத்தில், ஒவ்வொரு மண்டபமா ஏறி இறங்கி சல்லடை போட்டு சலித்து, ஒரு மண்டபத்தை பிடித்து விட்டோம். மண்டபம் வாடகையில இன்னொரு பெண்ணுக்கு கல்யாணமே நடத்திரலாம் போலிருக்கேனு பெரியப்பா கணக்கு போட்டார்.
தி. நகர், பாண்டி பாஜார் எல்லாம் ரொம்ப பக்கம், மாப்பிளையாத்து காரா ஜானுவாசத்துக்கு தீடீர்னு ஏரொபிலேன் தான் வேணும்னு கேட்டா கூட, சரவணா ஸ்டொர்ஸ்ல வாங்கிண்டு வந்துரலாம் பெரியப்பா!னு நான் சொன்னத அப்படியே நம்பிட்டார் என் பெரியப்பா.

he hee, நம்ப கணக்கே வேற!

பக்கத்துல ஒரு பெருமாள் கோவில் இருக்கு. எப்படியும் அனுமார் வாலுக்கு பொட்டு வைக்க சில பல ஐய்யங்கார் வீட்டு சதாக்கள் வருவா! நமக்கும் கொஞ்சம் கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கும். அப்டியே ஒன்ன பிக்கப் பண்ணி கலர் கலரா பூக்கள் உள்ள தோட்டதுல ஓ! சுகுமாரி!னு டூயட் பாடலாம்னு பிலான் போட்டு தான் அந்த மண்டபத்த புக் பண்ண் வெச்சேன். உன் புத்திய காட்டிடியேடா!னு என் அக்கா கண்டுபிடிச்சுட்டா.

கல்யாணத்தன்று என் பெரியப்பாகள், பெரியம்மாக்கள், அத்தங்கார்கள், அத்திம்பேர்கள், சித்தி, சித்தப்பா என ஒரு படையே போர் கால நடவடிக்கை மாதிரி பம்பரமாக சுத்தி, சுத்தி வந்து தஞ்சாவூர் காரர்களை கவனித்து வந்தோம்.
சொந்த அக்கா ஒண்ணும் இல்லையே! லீவு எல்லாம் கிடையாதுனு ரொம்ப அன்பாக ப்ராஜக்ட் மானேஜர் அல்வா குடுத்ததால், மண்டபம் - ஆபிஸ் - மண்டபம் என அவ்வை ஷன்முகனாக அல்லாடிக் கொண்டு இருந்தேன். முத்து பிள்ளை ரொம்ப தான் பிலிம் காட்றான்னு நல்ல பேரும், நம்ம சாதி சனம் மத்தியில் இலவசமா கிடைத்தது.
இருந்தாலும், கரெக்ட்டா வர வேண்டிய நேரத்துக்கு கேப்டன் மாதிரி வந்து ராம காரியத்தில் ஒரு அணில் போல (தன்னடக்கம் பா!) ஓடியாடி வேலை செய்து வந்தேன். மறக்காம வீடியோக்கு போஸ்சும் குடுத்து வந்தேன்.(ஒரு விளம்பரம் தான்!)
எங்க குடும்பத்தில் ஷ்ரிராம்( நான் தான்) என்றால், 66.5 கிலோ சொக்க தங்கம்னு பேர் வாங்கி இருப்பதால், என் வால கொஞ்சம் சுருட்டி வைத்தேன்.
மொத்த குடும்பமும் குழுமி இருந்ததால், ஜானுவாசத்துக்கு எழுந்தருளிய பச்சை கல் நெக்லஸ், சின்னதா காதுல ஒரு ஜிமிக்கி, கையில சாம்சங் செல், ஆலிவ் கிரீன் கலர் மெட்டல் ஷிபான் புடவை, கருப்பு கலர் வெல்வட் ஜாகெட் அணிந்த குதிரை வால் பிகரை கூட சரியா(?) பார்க்க வில்லை.

அம்பியின் ரகளைகள் தொடரும்.....

18 comments:

கீதா சாம்பசிவம் said...

இந்தப் பதிவிலேயே அவன் Dooondu என்ற பெயரிலே விஷம் கக்கி உள்ளான். இது அவந்தானா அல்லது புதிய ஆளா தெரியவில்லை. அதை அழித்து விட்டேன். கடவுள் காப்பாற்ற வேண்டும்.

வேதா said...

enna ambi ponna sariya paakatha pothe ithana ragalaiya. ithula ragalaiya thodara vera poreenga, nadathunga,nadathunga. engalukum ilavasama oru comedy padam patha madiri irukkum:) kadasila janavasathuku car thana kondu vanthel, yena ungala namba mudiyathu, aeroplane kooditu vanthenu sonnalum solvel:)

கீதா சாம்பசிவம் said...

நல்லா கலக்கி இருக்கீங்களே பெரியப்பா தயவிலே. நீங்கள் பார்த்த அதே figure நானும் பார்த்தேன்.நீங்கள் திருட்டுத்தனமாகப் பார்ப்பதை. பெரியப்பாவிடம் சொல்லி விட்டேன். Office இல்லை என்றால் browsing centre போயாவது தமிழ் மணம் படிக்கவேண்டும்.இல்லாவிட்டால் இவ்வளவு கஷ்டப் பட்டு நான் தமிழ் எழுதுவது வேஸ்ட் ஆகி விடும். ஏற்கெனவே போணி ஆகாமல் நொந்து போய் இருக்கிறேன்.

ambi said...

@ geetha, just ignore and don't afraid of these kind of culprits.
hope anniyan have to take some action. "Oh shaka safaiyaa anniyaa" Bground music :) (also we have a anniyai operating from UK)..
Your blog will soon be promoted..

@veda, he hee danks, januvaasathuku car thaan kootitu vanthen...

Gopalan Ramasubbu said...

அம்பி குருவே,கல்யாணத்துல ஒரு Figure கூட பிக்கப் பன்ன முடியலயா?என்ன கொடுமை சரவணா இது? உங்களுக்கு சிஷ்யனாக இருக்க வேன்டுமா என்று என்னை யோசிக்க வைத்துவிடாதீர்கள்.

உங்க பெரியப்பா கல்யாண பத்திரிக்கை கொடுக்க போகும் போது ஓசி டீ,காபி கிடைக்குமேனு நிங்களும் கூட போயிருந்தா அதுல ஏதாவது ஒரு வீட்ல சதா கிதாவ பிக்கப் பண்ணிருக்கலாம் இது மாதிரி "சதா" பொலம்பிட்டு இருக்க வேன்டியதில்ல;))

Usha said...
This comment has been removed by a blog administrator.
Harish said...

Ennamo pongo Ambi...
Nalla per vaangitel...inimae enna...nalla ponna paathu settle aaga vendiyadhu thaane?

BLOGESWARI said...

i liked your headline

malaiyera-p-ponaalum machinan dayavu venum! lol !

Dubukku said...

>>unga periyappa sammandhi aathu kaara intha blog padippaalaa??

dei anga kuzhapattha undu pannidatha da...very dangerous statements.Dont get carried away by fun, atleast be discreet.

dondu(#4800161) said...

Doondu என்பது போலி டோண்டுதான் கீதா அவர்களே.

நன்னா எழுதறேயாப்பா அம்பி (பிரஸ்டீஜ் பத்மநாபன் குரலில்). நோக்கு என்னோட உள்ளங்கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதன் அருள் கிட்டட்டும்.

உண்மையான டோண்டுதான் இதை இட்டான் என்பதைப் பார்க்க போட்டோ, மற்றும் எலிக்குட்டி சோதனையில் என் சரியான பிளாக்கர் எண் தெரிகிறதா என்பதைப் பார்க்கவும். இரண்டு சோதனைகளும் ஒன்றாக தேற வேண்டும். சந்தேகம் இருப்பின் கீதா அவர்களைக் கேட்கவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ambi said...

@gops,பொறுமை சிஷ்யா! இது சும்மா டிரைலர் தான். முழு படம் இனி தான் வரும்.

@kutti, vitta neengale Aavaaluku yen blog address kuduththuruveenga polirukkee? btw, danks.

@usha, Un lolluku oru alavee illaiyaa? btw, i'ven't written anything offence against them. i gave my general comments abt few tanjore pple.

@harish, he hee, danks paa! (enna konja nallaa Aaleye kanoom?)

@blogeswari, danks yekka! heading mattum thanaa? :(
btw, unga profile pic mathiteenga polirukku?

@dubukku, anna, i'ven't written anything offence against them. i gave my general comments abt few tanjore pple. blog ellaam padikka matta Avaa! anyway, will take ur advise seriously.

@Dondu, நன்றி திரு ராகவன். எல்லாம் உங்களை போன்ற பெரியவர்கள் ஆசிர்வாதம். உங்களுக்கு நெல்லை ஜில்லாவா?
// மகரநெடுங்குழைகாதன்// எவ்வளவு இனிய தமிழ் பெயர்!

Dubukku said...

thambrii mail check pannu nethikku mail adichirukken...:)

manu said...

ambi, have not that dooo visited you? Take care.a real fantastic presentation. marriage paarkkira maathiri irunthathu.Truer words have never been spoken like this.washington thirumanam revisited again.

dondu(#4800161) said...

என் சொந்த ஊர் கும்பகோணம் திருவையாறு சாலையின் ஓரத்தில் உள்ள சருக்கை என்னும் கிராமம்.

என் உள்ளங்கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகர நெடுங்குழைகாதனின் தரிசனம் போன ஆண்டுதான் கிடைத்தது. அதைப் பற்றி நான் போட்டப் பதிவைப் பார்க்க: http://dondu.blogspot.com/2005/03/blog-post_22.html

அப்பதிவின் பின்னூட்டங்களையும் பார்க்கவும்.

உண்மையான டோண்டுதான் இதை இட்டான் என்பதைப் பார்க்க போட்டோ, மற்றும் எலிக்குட்டி சோதனையில் என் சரியான பிளாக்கர் எண் தெரிகிறதா என்பதைப் பார்க்கவும். இரண்டு சோதனைகளும் ஒன்றாக தேற வேண்டும். சந்தேகம் இருப்பின் கீதா அவர்களைக் கேட்கவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Ravi said...

Ambi, sooooper post! I especially liked the write-up on 'Thanjavur kaarars'. I have heard from my dad about that (since he grew up in Thanjavur). Apart from the naggings, I think its these things which really light up marriage and are very unique to our "Indian culture". No wonder when Ilayaraja sang "Sorgamae endraalum..."!! :-)

Ambi, Unga writing style-kku oru periya 'O' esp the choice of words and the fluency in Tamizh. Its really surprising (and happy too) to see your interest in Tamil. Keep going Ambi!!

Viji said...

adhenna, thanjavur kaara?? vanmaya kandikkaren! :(
[nan porandhadhu Thanjavur, valandhadhu kumbakonam... enna madhri oru chamatha pathu irukkingala? :)]

பொன்ஸ்~~Poorna said...

ரொம்ப நன்னா இருக்கேடா அம்பி.. தஞ்சாவூர்க்காராளைப் பத்தி எல்லாத்தையும் எழுதிட்டு, தஞ்சாவூர் ஜில்லா டோண்டு ஐயரண்டையே நல்ல பேர் வாங்கிட்டயே!! நீங்கள்ளாம் எந்த ஊரு??

奇堡比 said...

新女性徵信
外遇調查站
鴻海徵信
亞洲徵信
非凡徵信社
鳳凰徵信社
中華新女性徵信社
全國新女性徵信社
全省女人徵信有限公司
私家偵探超優網
女人感情會館-婚姻感情挽回徵信
女子偵探徵信網
女子國際徵信
外遇抓姦偵探社
女子徵信社
女人國際徵信
女子徵信社
台中縣徵信商業同業公會
成功科技器材
女人國際徵信社
女人國際徵信
三立徵信社-外遇
女人國際徵信
女人國際徵信
大同女人徵信聯盟
晚晴徵信