Thursday, April 20, 2006

தனி ஒருவனுக்கு உணவில்லையெனில்....?தீடீர்னு, கன்னட படவுலகின் தலைமகன், பிதாமகன்(விக்ரம் இல்லை)இறையடி சேர்ந்து விட்டார். கன்னட ரசிக கன்மணிகளுக்கு எமதர்ம ராஜன் தன் கடமையை செய்தது பிடிக்க வில்லையோ என்னவோ? பொங்கி எழுந்து விட்டனர்.


கண்ணில் பட்டதை கொளுத்தி, கையில் கிடைத்ததை எறிந்து 2 நாளுக்கு ஒரே கும்ப மேளா தான்.

அவசரம், அவசரமாக, எங்களை ஆபிஸிலிருந்து அடித்து விரட்டாத குறையா பஸ்ஸில் ஏற்றி அனுப்பி வைத்தனர் பெரிய தலைகள். இன்னும் வேலை பாக்கி இருக்கு!(பிளாக் படிக்க முடியலையேனு வாசிக்கவும்) லேட்டா போறேனே!னு நான் சொன்னதை எல்லாம் காதுலயே வாங்க வில்லை.


சரினு ரூமுக்கு வந்த பிறகு தான் தெரிந்தது, எல்லா கடையும் பெருமாள் கோவில் கதவு மாதிரி நடையை உச்சி காலத்துகே சார்த்தி விட்டனர் என்று. ஆகா! இன்று இரவு புவாவுக்கு என்னடா செய்ய போற அம்பி?னு அதுக்குள்ள வயிறு கேள்வி எழுப்பியது. சரி, நம்ப வீட்டுக்கு போன் பண்ணி கொஞ்சம் அனுதாப அலைய எழுப்பாலாம்னு டயல் செய்தேன்.

போன எடுத்தது என் உடன்பிறப்பு.

நான்: பத்ரமா ஒரு வழியா ரூமுக்கு வந்து சேர்ந்தேன் டா இப்பொ தான்!
தம்பி: எனக்கு தெரியும் டா! பாகிஸ்தான்ல வேலை பார்த்தாலும் நீ தப்பிச்சு வந்துடுவ டா! (ஆகா! இன்னிகி நம்மள ஓட்டனும்னு சங்கல்பமா?)

நான்: நைட்டு சாப்ட ஒன்னுமே இல்லடா!(அழும் குரலில்).
தம்பி: இன்று, புதன் கிழமை. பெருமாளுக்கு உகந்த நாள். உபவாசம் இரு! கொஞ்சம் நல்ல புத்தியாவது கிடைக்கட்டும்.
நான்: Ghrr...rrrr. நீ போன அம்மாட்ட குடுக்கறியா?
தம்பி: உனக்கு நல்ல புத்தி வரணும்னு வேன்டிக்க அம்மா கோவிலுக்கு போயிருக்கா!
நான்: போன வைடா! நேர்ல வந்து வச்சுக்கரேன்டி உன் கச்சேரிய!

சரியாக 15 நிமிடம் கழித்து, என் செல் அழைத்தது.

அம்மா:(பதட்டமான குரலில்) என்னப்பா! என்ன நடக்குது அங்க? உனக்கு ஒன்னும் இல்லியே? நைட் எங்க சாப்ட போற?
நான்: பத்ரமா இருக்கேன். ஏரியால சுத்தி பாக்றேன். இல்லைனா பட்னி தான்.
அம்மா: பிரட் கூடவா கிடைக்காது?
நான்: மெடிக்கல்ஸ் கடை மட்டும் தான் திறந்து இருக்கு. அதுலயும் பிரட் இல்லை.
தம்பி: பேசாம ரெண்டு க்ரொஸின், நாலு மெட்டாஸின் வாங்கி போட்டுக்கோ. அம்மாவ விட்டு கேசரி கிண்டி கொரியர்ல அனுப்ப சொல்லவா?
அம்மா: பேசாம இருடா! பாவம்! அவனே பட்னியா இருக்கான்!
நான்: சரிமா! நான் ஏதாவது கிடைக்குமானு பாக்ரேன். நீ கவலைப்படாதே! குட் நைட்!

நம்ம கால வார, எல்லா வீட்டுலயும் ஒன்னு இப்படி இருக்கும் போலிருக்கு.

அப்புறம் மறுபடி ஏரியவை ஒரு சுத்து, சுத்தி வந்தேன். திறந்து இருந்த மெடிகல்ஸும் மூடி விடுவான் போல தெரிந்தது. நேர போயி, 2 குலுகோஸ் பாக்கெட் வாங்கி வந்து, காவேரி தண்ணியில் கலந்து குடிச்சுட்டு பெட்ல தாச்சுன்டேன்.

மறு நாள் காலை அதிசயமா ஒரு கடை காந்தி ஜயந்தியன்று சில வைன் ஷாப் பாதி கதவு திறந்து வைப்பது போல, லேஸா திறந்து வைத்தான். வெறும் பிஸ்கோத்து மட்டும் தான் தேறியது. இப்படியாக காலை டிபன் பிஸ்கோத்தும், காவேரி ஜலமுமாக முடிந்தது.

மதியம், எப்படியோ ஒரு நம்ம நெல்லை ஜில்லாகாரர் ஒருத்தர் ரொம்ப தில்லாக, கடையை பின்பக்கம் மட்டும் திறந்து வைத்து, சாப்பாடு பார்சல் கட்டி குடுத்தார். சாம்பாரும், ரசமும் மட்டும் தான் (அதுவும், எங்கிருந்தோ அவுட்ஸோர்ஸிங்). காயிகறி எல்லாம் இல்லை.

கடுச்சுக்க கட்டை விரல் இருக்குல்ல!னு நக்கல் விட்டார்.(பாசக்கார பயலுக). போனா போகுதுனு அப்பளம் தந்தார்.ஊர்காரன் அண்ணாச்சினு ஐஸ் வைச்சு 4 அப்பளம் வாங்கிட்டேன்.
எங்க கல்லிடை குறிச்சியிலிருந்து, பாரினுக்கு எல்லாம் அப்பளம் ஏற்றுமதி ஆகும். சில மாமிகள், அவா ஆத்துலேயே அப்பளம் எல்லாம் தயார் செய்து அமெரிக்காவில் இருக்கும் தங்கள் பெண்களுக்கு எக்ஸ்போர்ட் செய்து விடுவார்கள். ம்ம்ம்... அது ஒரு காலம். இப்போதெல்லாம், மாமிகளுக்கு கோலங்கள் அபியையும், செல்வியையும் கவனிக்கவே நேரம் சரியா இருக்கு. கமர்ஷியல் பிரெக்ல தான் மாமாக்களுக்கு மம்மம் எல்லாம்.

சரி, நம்ம கதைக்கு வருவோம்.

செம பசியோட ரூமுக்கு வந்து சோத்து மூட்டைய பிரிச்சேன். சாம்பாரா, ரசமானு சாலமன் பாபையாவை வைத்து பட்டிமன்றமே வைக்கலாம். அந்த லட்சணத்துல இருந்தது சாம்பார்(?). ரொம்ப கஷ்டப்பட்டு அதையும் உள்ள தள்ளிடேன். 2 அப்பளம் தான் மிச்சம் இருந்தது.

அப்போ தான் சனி பகவான் தன் திருவிளையாடலை துவங்கினார்.

எனக்கு பக்கத்து போர்ஷன்ல 3 பஞ்சாபி குதிரைகள் குடி இருக்கு. சும்மா சொல்ல கூடாது, கோதுமையா தின்னு, 6 அடி, 65 கிலோனு அரேபிய குதிரை மாதிரி இருக்கும். நம்ம இந்தி அறிவை அதுகளோட பேசி (கடலை போட்டு என்று வாசிக்க வேண்டாம்!) தான் நாம வளர்த்துக்கறோம்.
2 குதிரைகள் நான் ரசம் சாதம் சாப்பிட(முழுங்க) ஆரம்பிக்கும் போது வந்து சேர்ந்தது. பப்பட்! பப்பட்!னு கத்திண்டு ஒரு குதிரை ஒரு அப்பளத்தை எடுத்து படக்குனு கடித்தது. ரொம்ப தாராளமா இன்னொரு அப்பளத்தை எடுத்து, 2வது குதிரைக்கு ஊட்டி விட்டது. எனக்கு உள்ள போன ரசம் சாதம்(?) மெல்லவும் முடியலை, முழுங்கவும் முடியலை.

"பிச்சை எடுத்தாராம் பெருமாளு!
பிடுங்கி தின்னாராம் அனுமாரு!!"
ரேஞ்சுக்கு என் நிலமை ஆகி விட்டது.

சரி, நிறையா சிரிச்சாச்சு! கொஞ்சம் சிந்திப்போமா?

1) இந்த மாதிரி கடையடைப்புகள் நியாயமான காரணங்களுக்காக நடத்தப்படுகிறதா?


2) நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்களாய் உருவாகின்ற இந்த ரவுடிகளுக்கு எங்கிருந்து வருகிறது இவ்வளவு தைரியம்?3) இந்த ரவுடிகளால் சேதப்படுத்தப்பட்ட பஸ்களின் எண்ணிக்கை 522. சேத மதிப்பு 1.28 கோடி (courtasy Times of India).இந்த இழப்பீட்டை மக்கள் தான் தங்கள் வரிப்பணத்தில் ஈடு கட்ட வேண்டுமா? ரவுடிகளும் வரி கட்டுகிறார்களா?

4)என்ன தான் நாம சாப்ட்வேர் எழுதினாலும், இன்னும் அன்டர்வேர் வெளியே தெரியும்படி வேஷ்டி கட்டிய கூட்டம் கையில் தான் ஆட்சி அதிகாரம் உள்ளது! இது மாறவே மாறாதா? அல்லது மாற்ற முடியாதா?

கடைசியாக கர்னாடகா முதல்வருக்கு ஒரு வார்த்தை!

உங்கள் அப்பா எத்தனை டகால்டி வேலைகள் செய்து உங்களை முதலமைச்சர் நாற்காலியில் உட்கார வைத்தார் என்பது நாடு அறிந்த விஷயம்.

ஏஸி ரூமுக்குள் மூக்கை நோண்டிக் கொண்டிருப்பதற்காக, உங்களை முதலமைச்சர் ஆக்க வில்லை. சட்டம் என்ற சவுக்கை சரியான நேரத்தில் சொடுக்க தெரியனும்.

இந்த விஷயத்தில் தமிழ் நாட்டின் அம்மா எவ்வளவோ பரவாயில்லை.

"தனி ஒருவனுக்கு உணவில்லையெனில்
ஜகத்தினை அழித்திடுவோம்!"

என்றான் பாரதி.

இங்க கதையே உல்டாவா போயிடுத்து!

"ஜகத்தினை அழிப்பதினால்
தனி ஒருவனுக்கு உணவில்லை!"

20 comments:

வேதா said...

enna ambi, adikadi ipdi ethavathu urupadiyana post podu:) but as u said i was really surprised by the clashes that followed by his death. i have never heard or seen any such incidents, even when our cine stars like sivaji,mgr died, i dont think incidents of such measure happened. its really disgusting. its a real shame to the karnataka govt and u are rite it will never happen in amma's aatchi.

Naayagan said...
This comment has been removed by a blog administrator.
Naayagan said...

r right ambi death is natural,
but the action of karnataka people is very arrogant.the govt itself cannot do anything.inda madri nadakardu idhu dhan mudhal murai.

smiley said...

ithuku thaan solrathu eppavum maggi noodles... stock pannikoo... iranday nimcham... sapadu thayar... my remedy for emergencies always in stock

kuttichuvaru said...

aamam, intha maathiri time-la uthavaatha oru sattam ethukku venum?? thevai illaatha nerathula ubayoga paduthuvaanga!! Rajkumar kettaara ippdi ellam pannunga-nnu?? eppo thaan vidivu kaalam varumo!!

Gopalan Ramasubbu said...

all these incidents are disgusting.


/*தனி ஒருவனுக்கு உணவில்லையெனில்
ஜகத்தினை அழித்திடுவோம்!"
என்றான் பாரதி*/

அம்பி, ஜகம் என்றால் காடு என்று இன்னோரு meaning இருக்கு. காட்டை அழித்து விவசாயம் செய்து உனவு படைப்போம் என்று தான் பாரதி பாடினார்.

ambi said...

@veda, adikadi itha madhiri post potruvoom.. danks for your view.

@nayagan, yes, U r right. atleast next generation should not continue these stupid things.

@smiley, thappu thaan, namma mandaikku patta thane budhi varum.

@kutti, ellam namma neram, unnaiya mathiri bulbu vanganumnu irukku. :)

@gops, is it..? teacher magan, nee sonna seriyaa thaan irukum..

Viji said...

Ambi- super post, nachunnu irukku! And ennoda amma vum idhe dhan solvanga, "kovil ku poi kozhandhelukku nalla budhiya kudu nu vendinden" nu! ;)
"பிச்சை எடுத்தாராம் பெருமாளு!
பிடுங்கி தின்னாராம் அனுமாரு"- LOL
Nan oru similar post thatti vechurken, inime dhan podanum.... :-D
Veda- Ille, engamma sonnanga, Thamizh nattula MGR sethappo kooda, romba anyayam nadandhudham...

ராம்கி said...

Excellent.. keep it up

Dubukku said...

ridiculous ....
hmmm
glad that you are safe

Arjuna_Speaks said...

Ambi first time here -

"இந்த ரவுடிகளால் சேதப்படுத்தப்பட்ட பஸ்களின் எண்ணிக்கை 522. சேத மதிப்பு 1.28 கோடி "

Etho namma Captain pada dialogue mathri irunthuchu :))..

Ennaku intha galatta - adi thadi na romba pudikum - aana intha paala pona oorla (aberdeen,UK) ippadi onnume nadaka matenguthey :(..

Arjuna_Speaks said...

"எனக்கு பக்கத்து போர்ஷன்ல 3 பஞ்சாபி குதிரைகள் குடி இருக்கு. சும்மா சொல்ல கூடாது, கோதுமையா தின்னு, 6 அடி, 65 கிலோனு அரேபிய குதிரை மாதிரி இருக்கும்"

Ambi - kuthirainga alaga irukuma? Btw pen kuthirainga thaane :))

Arjuna_Speaks said...

Ambi - unga matra postulkalayum parthen - neengal besha eluthurel..ranganathar koviluku poi perumale shemikira mathri - ini dinamum unga bloguku vanthudren..:)

Manoj said...

unga comments section-la bad words ellaam allow pannuvaelaa? Naan konjam thittindraenae.

Usha said...

ellarum un views-a appreciate pannita, naanum semaya appreciate panren ambi, it was truly thought-provoking...aana ore oru sandhegam, indha 1.5 days pattini-la konjamavadhu un udambula cholestrol (kozhuppu enru vasikkavum) kurainjudha?? ;-)

ambi said...

@Viji, danks, all parents are alike... btw, i've commented ur post..
@rajni ramki, danks. (romba theevara rasigaroo?)

@dubukku, danks anna.
@arjuna, he hee, naanum athe effectla thaan ezhuthinen. unga Urla thaan last year gundu pottalee? btw, all gal horses are cute. he hee :)
danks for reading my posts.. and promising for visiting freq. naanum varen unga aathuku(blogukku)..

@manoj, Y so? ennaya thitta porelaa? illa karnataka ravudigalaiyaa? :)
@usha, appadi, first time a appreciation from u...
1.5 days la nallave kozhuppu koranju pochu. thirupi serthundu irukken. :)

Ponnarasi Kothandaraman said...

Hi,
Tht was a very nice post... Serious issue though..
U r tagged..Pls check out my blog 2 know more..

Usha said...

hey eppo snaps ellam add pannina nee?The last time, it wasnt there, right? Illa ennoda extreme nyabaga sakthi-oda effect-a idhu?

BTW, adikadi ellam pugazha matten, edho namma ambi nallathanama post pantane-nra oru adhirchi ;)

Ram said...

Ambi,Antha Bhrathiyar vanthutu ponathu maathiri irukku..Good one.

奇堡比 said...

新女性徵信
外遇調查站
鴻海徵信
亞洲徵信
非凡徵信社
鳳凰徵信社
中華新女性徵信社
全國新女性徵信社
全省女人徵信有限公司
私家偵探超優網
女人感情會館-婚姻感情挽回徵信
女子偵探徵信網
女子國際徵信
外遇抓姦偵探社
女子徵信社
女人國際徵信
女子徵信社
台中縣徵信商業同業公會
成功科技器材
女人國際徵信社
女人國際徵信
三立徵信社-外遇
女人國際徵信
女人國際徵信
大同女人徵信聯盟
晚晴徵信