Monday, March 13, 2006

கப்பல் ஓட்டிய கேப்டன்!

டைட்டானிக் படத்தை நம்ப கேப்டனை herovaa போட்டு எடுத்தால் எப்படி இருக்கும்னு நேற்று இரவு ஒரு சின்ன trailer ஓட்டி பாத்தேன்.

சரி, இத பத்தி bloggaலாம்னு தோனித்து நேக்கு!

தோட்டா தரணி புண்ணியத்தில், 150 container லாரிய ஒன்னா சேர்த்தா டைடானிக் கப்பல் ரெடி.

முதல் ஷாட், நம்ப கேப்டன், White naval uniform மற்றும், முட்டி வரை தொடும் ஒரு நீள கோட் அணிந்து, கருப்பு கலர் cooling glass கெட்டப்புல slow motionla நடக்குற மாதிரி வெச்சுடலாம்!( side effectukku !ஒரெ சமயத்தில், 10 கேப்டன் வர மாதிரி செட் பண்ணிடலாம்)

Title song இல்லாம கேப்டன் படமா?

"வாரான்டா தமிழன்!
பேச்சிமுத்து பேரன்!
கப்பல் ஓட்ட போறான்!
நம்ம காக்க வாரான்!!"

C centersla விசில் பறக்காதோ?

டைரக்டர் கன்டிப்பா "ஸென்டிமெண்ட் சிங்கம்" K.S.Ravikumar or "உல்டா மன்னன்"P.Vaasu தான்!

மியுஜிக், நம்ம "காப்பி ஸ்பெஷலிஸ்ட்" தேவா தான். கன்டிப்பா ஒரு கானா பாடல் உண்டு.

அடுத்து, கதா நாயகி யாரு?னு மண்டைய பிச்சுக்கவே வேண்டாம்.

நமீதா தான் கேப்டனுக்கு best choice! (ரெண்டும் weight party)

அசின்,or திரிஷா தான் வேணும்னு கேப்டன் அடம் பிடிச்சா நான் பொறுப்பில்லை!

அப்படி நடந்தா,ரெண்டு பேரும், கேப்டன பெரியப்பானு தான் படம் முழுக்க கூப்பிட்டாகனும்னு censor board object பண்ணும்!

உனக்கு கப்பல பத்தி என்ன தெரியும்னு? தப்பி தவறி யாராவது கேட்கட்டும் பாப்போம்!

வழக்கமான தனது அடிக்குரலில், "ஏய்! இந்த கப்பல்ல மொத்தம் 6000 பேர் இருக்காங்க. அதுல ஆண்கள் 2756, பெண்கள் 2232, குழந்தைகள் 1012.
பெண்கள்ல பிகர்கள் எண்ணிக்கை மட்டும் 1075.
மொத்தம் 1145 தமிழர்கள் இந்த கப்பல்ல இருக்காங்க!
Withoutla பயணம் செய்ற எண்ணிக்கை மட்டும், என்னையும் சேர்த்து 750!
மொத்தம் 300 ரூம்கள் இருக்கு, 450 கக்கூஸ் இருக்கு, அதுல சரியா தண்ணி விடாத கக்கூஸ் எண்ணிக்கை மட்டும் 272!" nu லியாகத் அலிக்கான் வசனத்த சொன்னா படம் 250 நாளுக்கு நான் கியாரண்டி.

காமெடிக்கு, கப்பல் சர்வராக வடிவேலுவை போடலாம்.

சரி ரொமான்ஸ் இல்லாம தமிழ் படமா? (அதுவும் நமீதா இருக்கும் போது!)

கண்டிப்பா ஒரு மழை song வெச்சாகணும்! நமீதா Costume செலவு மட்டும் கம்மி! அம்மணி தீவன செலவு அதை ஈடு கட்டி விடும்.

எதுக்கும் கேப்டன் படபிடிப்புக்கு முன், ஜிம் சென்று வருவது உசிதம். அப்ப தான் நமீதாவ தூக்கி டூயட் எல்லாம் பாட முடியும்.

அம்மா சென்டிமென்டுக்கு, "ஒரு வாயி சாப்டு போட்டு வண்டி(கப்பல்) ஓட்டு கண்ணு!"னு மனோரம்மா ஆச்சி இருக்கும் போது என்ன கவலை?

"எங்க ஊரு ஏரி வழியா கப்பல் ஓட்டாத கேப்டன 18 வருஷம் இந்த பஞ்சாயத்து தள்ளி வைக்குதுனு!" நாட்டாமை விஜயகுமார தீர்ப்பு சொல்ல வைக்கலாம்.

கிளைமாக்ஸ் காட்சியில், ஒரு கையில் நமீதவை சுமந்து, கயிற்றில் தொங்கியபடி, ஐஸ் பாறையை தனது இடது காலால் கேப்டன் உதை விட்டா தூள், தூளாகி விடாதோ அந்த பாறை!

Last, but not least, ஒரு 45 நிமிஷ கோர்ட் ஸீன் கண்டிப்பா வெச்சே ஆகனும்.

பாகிஸ்தான் தீவிரவாதிகள், தன்டயார்பேட்டை வழியாக இந்தியாவுக்குள் ஊடுரூவி, டைடானிக் கப்பல் போகும் பாதையில் அவ்லோ பெரிய்ய ஐஸ் பாறை வெடிகுண்டை சிவகாசியில் தயாரித்து, வைகை, காவேரி, கூவம் வழியா அரபி கடலில் செட் செய்து விட்டனர்!
அதை தமிழ் நாடு போலீஸ் உளவுபிரிவு கண்டுபிடித்து, நமது கேப்டனை ஸ்பெசல் ஆபிஸராக நியமித்து, 10 நாளில் கப்பல் ஓட்ட பயிற்சியும் அளித்தது! என்ற சஸ்பென்ஸ் கடைசி ரீலில் தான் தெரிய வரும்.

படத்தின் ஒரு காப்பியை, James camroonuku அனுப்பி வைத்தால் இனிமேல், அவர் படம் எடுப்பார்?

பின்குறிப்பு: "படத்த ஆஸ்காருக்கு அனுப்பலைனா தீ குளிப்போம்!" என்று கேப்டன் ரசிகர்கள் போராட்டம் நடத்தினா ஆச்சர்யபடாதீர்கள்!

11 comments:

Known Stranger said...

what the hell you thought of my thalivar. it is shame. shame puppy shame . shit.. i am also joing mansur alikhan dialogue group..

yaruu da anga.. dai.. evana thukkituu poii ... vendam.. chinaaa pulla thanaaaama ella pessuran..

vendamm sollureen vendamm.. ethooda nippatikkaa en thalivaraaa oootrathu.. apurammm ... he will..

solla mattaruu da enn thallaaaa.. sonna mari vanthutaruu la..

hey.. enjoyed your blog post.

வேதா said...

ipdi ethavathu nadanthucu vachiko ulagam azhinjurum(unga dialogue thaan) neengalam ipdi yosikarthunala tsunami yen varathu?
seri athellam vidu, kuthu pattuku yaara set panniyirukeenga?

neighbour said...

naan thaan indha padathuku US distributer... erkanave James camerooon indha kadhai avaraku veenumnu kaathukitu irukaaru... indha kadhai maatum avaruku kedachuthunaa yella sectionlaiyum oscar vaangi record pannuvaaraam..

Please enaku kodungalaenu udhatha kadichukitu(Captain style) ketkarrau..
enna pannaradhunu sollunga.....

Ponnarasi Kothandaraman said...

Hehehe. Tht was damn hilarious. And Paavam K.S ravikumar and Vaasu paathanganna ungalukku Kovil vechu kumbuduvaanga :P

unknown said...

vanthuten minnalai ambiyayai thakka
trunelveliya annachchi..ammanchiyaka blore ulavurara..
enna captaina ippadi thakka ringa..captain ninaichcha namitha mattum illa titanic shipaye thukkuvaru check pannanumma vendumna samplekku shakilava next padathukku heroin pottu parunga thookarara illayaanu parpom...enna vachchikkunu captaina thappa pesa kudathu
enna kavithai varallannu sollittu title songe asathala irukku...
cameroon padam eduppara surely he will
evvalavu naalaikku achchiye poduvinga oru changekku vera yaravuthu podarathu...
kana songukku guest heroin yarum illaya

unknown said...

ithaivoda tsunami vanthu ellarayum captain kappathara mathiri ethavuthu puthu script try pannungalen...

ambi said...

@known stranger, Ahaaa, captain rasigaiyaa neenga?
@veda, neenga sethupathi IPS padam ellam paakliyaa? climaxla summa vadai suduraa madhiri yellaraiyum suduvaree?
@neigh, Ahaa, US dbtn varaikkum poyaachaa? yethoo, namakku royalty vantha seri.
@ponnarasi, tanq! pathukite erunga, some magzine will give these titles to them in a function.
@ammu, shakilavaa? yemmaaa! this is too much! title song nalla irukka? ellam unga asirvaatham. Aachi thaan correct mom touch kudupaanga! (antha dialogue innoru tharam solli parunga!) second script kooda nalla irukke!

unknown said...

i know shakila too much rendum sema weightunnu sonningala athukkuthaan shakilava kupitten..
captainoda weight kamikka..lol

Usha said...

Super kadhai ambi, anniyai-ku pidichu pochu...eppo release?

Known stranger rasiga'n'-la ninaichen, rasigai-a????

சிறுதுளி said...

nice இன்னும் கொஞ்ம் tightடா work பன்னியிருகலாம்......

奇堡比 said...

新女性徵信
外遇調查站
鴻海徵信
亞洲徵信
非凡徵信社
鳳凰徵信社
中華新女性徵信社
全國新女性徵信社
全省女人徵信有限公司
私家偵探超優網
女人感情會館-婚姻感情挽回徵信
女子偵探徵信網
女子國際徵信
外遇抓姦偵探社
女子徵信社
女人國際徵信
女子徵信社
台中縣徵信商業同業公會
成功科技器材
女人國際徵信社
女人國際徵信
三立徵信社-外遇
女人國際徵信
女人國際徵信
大同女人徵信聯盟
晚晴徵信