Wednesday, March 22, 2006
கள்வனின் காதலி
எப்டியாவது இந்த வாரம் ரங் தே பாசந்தி பாத்துடனும்னு தொடர்ந்து 4 வது வாரமா, அந்த Multiplex theatreku படையெடுத்தேன். எல்லா டிக்கட்டும் வித்து போச்சே! போயா! போ!னு ஜெயம் சதா ஸ்டைலில் கௌண்டர்காரன் கைய காட்டினான். சே! என்னடா இது? இப்படி ஒரு சோதனைனு நொந்து நூடூல்ஸாகி, வேற் என்ன படம் ஒடுதுனு பாத்தேன்.
கள்வனின் காதலி கண்ணடித்தாள்.
சரினு டிக்கெட் எடுத்து உள்ள போயி உக்காந்தேன். இதோ இந்த ப்ளாக் ரெடி!
சில விஷயங்களை/மனிதர்களை மறுபடி, மறுபடி செய்து/பார்த்து வந்தால் நமக்கு பழகி விடும்! அது போல தான் SJ.சூர்யாவும்!
எந்த கிரக வாசி இதுனு முதல் படத்தில் எல்லாரும் கொழம்பி போயிட்டா! இப்பொ நமக்கு முகம் பழகி விட்டது!மனிதர் என்னம்மா ஆட்டம் போடுகிறார்! ( நான் danceaa சொன்னேன்)
"ஒரு நல்லவன் எப்பொ வேணா கெட்டவனாகலாம்! ஆனா ஒரு கெட்டவன் நல்லவனா மாறிட்டானா, அவன் கெட்டவன் ஆக மாட்டான்!!" இது தான் படத்தோட லைன்.
முழு கதைய நான் இங்க சொன்னா டைரக்டர் என்னை அடிக்க வருவார்.
இப்பொதெல்லாம், A சர்டிபிகேட் வாங்கினா தான் படத்துக்கு பெருமை போலிருக்கு! ஸென்சார், கொஞ்சம் கத்ரிய சானை பிடிச்சு இருக்கலாம்! (எல்லாம் பாத்துட்டு, நல்ல புள்ளையாட்டும் நடிக்காதடானு உங்க பொருமல் கேக்கறது!)
நயன் தாராவை பத்தி 4 வரி எழுதலைனா, நான் நைட்டு சாப்பிட போகும் பிரைடு ரைஸ் செமிக்காது நேக்கு!
வஞ்சகம் இல்லாம வளர்ந்து இருக்கு குழந்தை!
கேமிரா மேன் அடிக்கடி நயனின் முகத்தை க்ளொஸப் ஷாட்ல வேற காட்டி தொலைக்கிறார். 70 mm ஸ்கிரீன் பத்த வில்லை! அம்மணி, நமீதாவுக்கு போட்டியா வந்துன்ட்ருக்கா!
உடனடியா ஜிம் போகலைனா, மார்டன் டிரஸ் எல்லாம் தை மாத போகி பண்டிகைக்கு கொளுத்த வேண்டியது தான்!
கவிஞர் வாலி, மற்றும் சில கவிஞர்களை குயின்ஸ் லெண்டில் உள்ள ரொலர் கோஸ்டரில் ஏத்தி விட்டு, கீழே இறங்குமுன் பாடல்கள் வேண்டும்னு டைரக்டர் சொல்லி இருப்பார் போல! எல்ல பாடல்களும் படு ஸ்பீடு!ஒரு வரி கூட நினைவில் இல்லை!
காமடிக்கு சூர்யா போதாதுனு விவேக் வேற தனி டிராக் ஒட்டுகிறார். அரைத்த மாவை அரைச்சா கூட தாங்கிகலாம். ஆனா புளிச்ச மாவை புளிக்க வச்சு அரைச்சா கடுப்பு தான் வரும், இல்லையா? இன்னும் எத்தனை படத்தில், பின்னாடி தீ பட்ட ஜோக்கை அரைக்க போகிறாரோ?
சில காட்சிகள், சிங்கிள் மீனிங், டபுள் மீனிங்,ட்ரிபுள் மீனிங்னு அவ்வையார் வரிசை படுத்தி பாடி விடும் அளவுக்கு உள்ளது! சென்சார் மெம்பர்கள், நடுவுல பக்கோடா திங்க போயிருப்பா போலிருக்கு!
புது டைரக்டர், யுவன் ஷங்கர் ராஜாட்ட நன்னா வேலை வாங்கி இருக்க வேண்டாமோ? (யுவன்! நீங்க செல்வ ராகவனுக்கு மட்டும் தான் சோக்கா மீஜிக் போடுவேளா?)
குத்து பாட்டு இல்லாத தமிழ் படமா? "சின்ன வீடா வரட்டுமா" புகழ் தேஜாஷ்ரி சும்மா வாங்கின காசுக்கு வஞ்சகம் இல்லாம ஆடி (குத்தி) இருக்கார்!
"கொட கூலி குடுத்தாச்சு!
குடியேற வரலாமே!"
ஆகா! ஆழ்ந்த கருத்து! அற்புதமான சிந்தனை! 6.5 கோடி தமிழர்களுக்கும் தீர்ந்தது சந்தேகம்!
பக்கத்து சீட்ல உட்காந்து இருந்தவர் குழந்தை ( நிஜமான குழந்தை - 6 வயசு இருக்கலாம்) ஒரு சந்தேகம் கேட்டது அவ அப்பா கிட்ட. நான் நைஸா ஒட்டு கேட்டேன்.
பொதுவா இப்ப எல்லாம், படத்தோட டைட்டில் போடும் போது, அந்த படத்துக்கு ஒரு சப்-டைட்டில் வேற போடுகிறார்கள். For example, காக்க காக்க – The Police.
இந்த படத்துக்கும் ஒரு சப்-டைட்டில் போட்டாங்க! கள்வனின் காதலி (36-28-36)
அந்த குழந்தை கேட்டது, "what does those numbers mean daddy?"
டாடி முகம் போன போக்க பார்கனுமே, அடடா! கண் கொள்ளா காட்சி!
குடும்பத்துடன் காண வேண்டிய படம்னு advertise பண்ணிடானா என்ன?
அதுக்கு அந்த டாடி சொன்ன பதில் செம காமெடி. "அதுவாடா கண்ணா! Those are the bus numbers for the director’s home town”.
மொத்ததில், கள்வனின் காதலி இனிக்கவும் இல்லை! கசக்கவும் இல்லை! (read as if Sun TV - Sunday super Top Ten effect)
மதியம் செஞ்ச பாவத்தை தொலைக்க, மாலை banglore khemfort ஷிவா மந்திர் போயி பாவ மன்னிப்பு கேட்டேன்.
பிள்ளையார் பிடிக்க போயி குரங்கானாலும் பரவாயில்லை! பெருச்சாளி ஆகி விட்டது!
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
Sema review thalaiva...pinnita po
anda kuzhandai kaetta kaelviyum avanga daddy samalichadum ....uhumm...romba kashtham
padam innum pakkalae...but unga review pramatham... kalakkarel pongoo...
haa ha haa...
Koviluku pavammanipiu keta pooneglaa illai site adicihutu prasaadhaam vaangi saapida poonengalaaa...
longing to watch Rang de Basanti as well
Music pathi sonnadhu sooper appu! Aana kempfort-a per mathi solli kolai panteenga, but still, forgiving you for the good review! Shivan unnai maniparaga!
naan kooda title paarthuttu, pic paarthuttu 'enna da ithu, intha scene namma padathula paarkave illaiye' appdinnu yosichen... appram thaan, prakaasama erinjuthu, thalaikku pinnaadi.... appo purinjikitten!!
aanaalum bayangra dhariyum sir ungalku..rang de basanti pakkardhukku poi apram ipdi SJ Surya padam paarthuttu adha review vera pannirkel..RDB mudilangardhukkaaga ipdi oru suicide attempta..vaazhga..ungal dhariyithai mechugiren...:)
btw thanks for visiting my blog..yaarume andha meendum sandhippom a paaka maatengra..adhoda continuation ippove long due..
Ambi, kalvanin kathali padutha kaasu kuduthu parthenu public ah vera solarengale ?enna irunthalum ungaluku konjam Dhillu jasthi.
@harish, danks paa! nowadays kids are very smart.
@kannan, nadri thala!
@neigh, nejamma paava mannippu thaan kekka ponnen, kovilla pakuthula okaanthu iruntha oru nachhu ticketa kooda naan thirumbi pakala theriyumaa? :)
@veda, kallathanamavaa? ticket ellam eduthu thaan ponnen.
@dubukku, seekram parungoo anna.
@usha, oh! ic.. un commentukku thaan naan romba bayapaduven. thanx for the correction.
@kuttichuvaru, he, hee nayan thara padam podalaamnu than irunthen. "UK pogazh" ushaku bayanthu post pannalai!
@bhooma, vangoo, romba naalu achee inga vanthu! sila samayam, naan calculated risk eduppen. intha thadavai, kojam adhigama poiduthu. will see ur post today! come again & freq :)
@Gops, romba vareenga! naane 100 Rs nashtam aayiduthunu varuthathula irukken.
neenga naachu figura parkalaindarhaa BBClaiyum, ABClaiyum Telecast panni kaatittanga theriyumaaa...
ye tamil nattule ipadi sex padama edukiringe? vere padame kidaikata, nalle oru kudambe padam eduta enne? anthe surya ye arupedutu alaiyira? anthe kalatu mgr padangalai partate illaiya, evele arumaiya iruku, yenda manatai vangiringe.
ஹாய், உங்கள் blog இப்பதான் படிக்க ஆரம்பிச்சிருக்கேன். Office-la free டைம் இருக்கும் போது படிக்க எந்தவது கிடைக்குமா என்று தேடிகொண்டிருக்கும் போது my kichenpitch (Jayashree's blog, what happen to her? no post from her) கொள்ளு பொடி- க்கு உங்க comments பாத்து கிளிக் பான்னா உங்க blog வந்துச்சு, அப்பா, அடுத்து வர சில நாட்களுக்கு சாப்பாடு கிடைத்து விட்டது என்று santhosamaaga உங்க blog படிக்க ஆரம்பித்து உள்ளேன்..... நாளைக்கு சனி & ஞாயறு கிழமை வருவதால், திங்கள் வந்து continue பண்ணுறேன். நான் இந்திய வந்திருந்தபோ, இந்த சிவன் கோயிலுக்கு போயிருக்கேன். very nice temple.....மறுபடி வந்தால் கண்டிப்பா போகணும்.
Post a Comment