Saturday, September 30, 2006

சொல்லுக்கடங்காதே! பராசக்தி சூரத்தனங்கள் எல்லாம்!



இந்த ஒன்பது என்ற எண்ணுக்கு தான் எத்தனை சிறப்பு!

1) நவ கிரகங்கள் ஒன்பது.
2) நவ ரத்னங்கள் ஒன்பது
3) ஜோதிஷத்தில் நவாம்சம் என்று சொல்வர்கள்
4) சக்தி உபாசனையில் ஷ்ரி சக்ரத்துக்கு நவாபர்ண பூஜை என்று ஒன்று உண்டு.
5) நவமி திதியில் தானே ராமர் மானிடராக ஜனித்தார்.
6) ஒன்பது ஒளஷதங்களை கொண்டு தான் நவபாஷணம் என்ற அரிய மருந்து தயாரிக்கப் படுகிறது.
7) நவ ரசங்கள் - கோபம், சிருங்காரம், ஹாஸ்யம் என உணர்வுகள் ஒன்பது விதமானதே!
8) பூவுலகில் எம் பெருமாளுக்கு திருப்பதிகள் ஒன்பது.( நவ திருப்பதி)
9) நவராத்திரி - தேவி கொலுவிருந்து ஆட்சி செய்யும் திரு நாட்கள்.


இன்று துர்க்காஷ்டமி. சக்தி சீற்றம் கொண்டு மகிஷனை சம்காரம் செய்த நாள். கருணையே வடிவம் கொண்ட அவளா இவள்? என்று உலகே அதிசயித்த நாள்.

எனக்கு சின்ன குழந்தையிலிருந்தே பாட்டியிடம் கதை கேட்கும் போது அஷ்டபுஜங்களில், சகல விதமான ஆயுதஙளுடனும் சிங்க வாகனத்தில் புயலென நேரில் வருவதை போல உணர்வேன்.


மேலும் சாந்தமான அம்மனை விட, இந்த துர்க்கா, காளி, சண்டி, அபராஜிதா தேவி போன்ற உக்ர தேவிகள் தான் என்னை மிகவும் கவர்ந்தனர்.

சக்தி, இந்த உலகத்துக்கே அவள் தான் ஆதாரம். அந்த சிவனும் இயங்குவதே இந்த சக்தியால் தானே!
துர்க்கை, லக்ஷ்மி, சரஸ்வதி என நாம் அந்த ஆதார சக்தியை பிரித்து அவர்களுக்கு ஒரு உருவமும் குடுத்து வழிபடுகிறோம். ஆனால் இம் மூன்று சக்திகளும் நம்முடனே உள்ளது.

துர்கை (இச்சா சக்தி) - மன உறுதி.
லக்ஷ்மி (க்ரியா சக்தி) - மனம் லயித்த செயல்பாடு.
சரஸ்வதி (க்னான சக்தி) - தெளிந்த ஆறிவு.

நம் உடம்பை கிரியா சக்தியும், புத்தியை இச்சா சக்தியும், ஆத்மாவை க்னான சக்தியும் ஆள்கிறது.

தெளிந்த அறிவுடன் புத்தி சரியாக கட்டளை இட்டால் மனம் லயிகிறது. உடம்பு சொன்னபடி கேட்கிறது. ஒரு வேலையில் உடல், மனம், புத்தி எல்லாம் மன உறுதியுடன் ஈடுபடுகிறது.

நல்ல பழக்கமும், புலன்களை நம் கட்டுக்குள் வைப்பதன் மூலம் லக்ஷ்மி வந்தடைகிறாள். மனதை கட்டுபடுத்துவதன் மூலம் துர்க்கை நம்மை வந்தடைகிறாள்.
உண்மையான, குளிர்ந்த சொற்களை பேசுவதன் மூலம் சரஸ்வதி வருகிறாள்.

இந்த துர்க்காஷ்டமி அன்று தேவியை பார்த்தால் அடுத்த நாள் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்ற நம்பிக்கை உண்டு. ஏனெனில் துர்க்கை உக்ரமாக தீப்பறக்கும் கண்களுடன், "இனி உனக்கு மன்னிப்பில்லை! தைரியம் இருந்தால் வாடா!"னு அசுரனை அறைகூவல் விடுத்து சம்காரம் முடித்து, குருதி அபிஷேகத்துடன் கோபம் தணியாமல் நின்ற கோலம் அது.



ஆனால் மறு நாள், கருணையே வடிவாக, கையில் மாணிக்க வீணையேந்தி, மதுர மொழிகள் பேசி, அபய முத்திரை காட்டி, தம்மை நாடி வருபவர்களுக்கு அவரவர் தகுதிக்கு ஏற்ப கலைகளை வாரி வழங்கும் சரஸ்வதியாக அருள் பாலிக்கிறாள்.

Pic courtasy: www.starsai.com

போஜ ராஜன் தீவிர லக்ஷ்மி உபாசகன். எனவே, அவனது மெய்யான பக்திக்கு கட்டுபட்டு, அஷ்ட லக்ஷிமிகளும் அவனது தேசத்தில் வாசம் செய்தனர்.

ஒரு நாள், மாஹாலக்ஷ்மி அவன் முன் தோன்றி, "போஜ ராஜனே! உன் நாட்டிலேயே பல காலமாக நாங்கள் தங்கி இருந்தால், மற்ற இடங்களுக்கு நாங்கள் எப்போழுது செல்வது? என முறையிட்டாள்.

போஜனும், சரி அம்மா! ஒரெ ஒரு லக்ஷ்மியை தவிர மீதி எல்லோரும் விடை பெறுங்கள்" என கூற, மஹாலக்ஷ்மியும் சம்மதிதாள்.

போஜன் கேட்டது தைரிய லக்ஷ்மியை தான்!

தைரிய லக்ஷ்மி அவனுடன் இருக்க, மற்ற லக்ஷ்மிகளும் வேறு வழியில்லாமல் மறுபடி அவனிடமே வந்தடைந்தனர்.


இந்த நவராத்திரி - விஜயதசமி நன் நாளில் நம் எல்லோர் மனதிலும் அந்த தைரிய லக்ஷ்மி குடி கொள்ளட்டும். மற்ற எல்லா லக்ஷிமிகளும் தன்னாலே நம்மை வந்தடைவார்களாக!

If she is with You, Who can be against to You?

Friday, September 22, 2006

கடவுள் பாதி! மிருகம் பாதி!



கேப்டனின் அகில உலக கொள்கை பரப்பு செயலாளரும், எனது நண்பனுமான அர்ஜுனா மற்றும் புளியோதரை மன்னனின் பாசமலருமான வேதா(ளம்) இருவரும் "Five wierd Things in Me" என்ற தலைப்பில் எழுத சொன்னார்கள். அது தான் "கடவுள் பாதி! மிருகம் பாதி!" என்று நான் என் ஸ்டைலில் மாற்றி விட்டேன்.

ரெளத்ரம் பழகு!
சிறு வயதில் நான் கொஞ்சம் அதிகமாகவே பழகி விட்டேன். கோபம் அதிகமாக வரும். போதா குறைக்கு சின்ன வயதிலிருந்தே நரசிம்மர்(கேப்டன் படம் இல்லை)மீது தீவிர பக்தி, உபாசனை. கோபம் வரும் சமயங்களில் அம்மா மட்டும் தான் சமாதானப் படுத்த முடியும். நானும் இந்த கோபத்தை அடக்க வேண்டும்! என்று பல வழிகள் கையாண்டு பார்த்து விட்டேன்.
ஒரு சத்ரு சொன்னானேனு தாமிர பரணி நதியின் 12 அடி ஆழத்தில் தம் பிடித்து யோகத்தில் அமர்ந்து எல்லாம் பார்த்தேன். கண் முன்னால் ஒரு பாம்பு வந்து, "என்ன அம்பி சவுக்கியமா?"னு குசலம் விசாரித்ததில் அலறி புடைத்து கொண்டு துண்டை காணும், துணியை காணும்!னு வந்தது தான் மிச்சம். அப்புறம் என் உடன்பிறப்பு கிருஷ்ண பரமாத்மா மாதிரி கரையில் வந்து துண்டு குடுத்து காப்பற்றினான். இதை கேட்டு விட்டு அந்த சத்ரு சொல்றான், "அது நாக கன்னிகை டா மாப்ளே! நாக லோகம் போயி அமிர்தம் எல்லாம் பருகி இருக்கலாம். நல்ல சான்ஸை மிஸ் பண்ணிடியே!"

அடப்பாவி! பொட்டுனு ஒரு போடு போட்டிருந்தா தெரிஞ்சு இருக்கும், அது நாக கன்னிகையா? இல்ல நான் தான் ஜெமினி கனேசனா?னு. Now i'm Mr.Cool. (upto some extent) :)

சுதந்திரம் எமது பிறப்புரிமை!
ஒரு விஷயம் வேண்டும்/செய்ய வேண்டும்! என்று முடிவெடுத்து விட்டால் ரொம்ப உறுதியாக இருந்திருக்கிறேன். ஸ்கூல் படிக்கும் போது பஞ்சாபில்(யாரு யா அது? நமுட்டு சிரிப்பு சிரிக்கறது?) (Ambala District) நடந்த ஒரு NCC கேம்ப்பில் கலந்து கொள்ள நான் தேர்வாகி விட்டேன். ஆனால் அப்போ தீவிரவாதிகள் அட்டகாசம் அதிகம் என்பதால் என் அப்பா என்னை அனுப்ப மறுத்து விட்டார். எனக்கு பயங்கர கோபம், வருத்தம், ஏமாற்றம், எல்லாம்! ஒரு மாதம் என் அப்பாவிடம் நான் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அதன் பின் சுசீந்தரத்தில் நடந்த இன்னொரு கேம்புக்கு அப்பாவே அனுப்பி வைத்தார்.
அந்த அளவுக்கு பிடிவாதம் இப்போ இல்லை.

நாராயண! நாராயண!
இனியவர்களை வம்புக்கு இழுத்து, கலகம் மூட்டி, சீண்டுவது மிகவும் பிடிக்கும். என் உடன்பிறப்பை செமையா சீண்டுவேன். "இன்னிக்கி அம்மா சுட சுட கேசரி பண்ணி இருந்தா! கொஞ்சமா இருந்ததா, நானே எல்லாத்தையும் சாப்டாச்சே! ஏவ்வ்வ்வ்!னு ஒரு ஏப்பமும் விட்டாச்சுனா உடன்பிறப்புக்கு(Srini) பிரஷர் குப்புனு ஏறிடும். அப்புறம் என்ன? ஏது?னு கூட விசாரிக்க மாட்டான். தாமிரக்கனி ஸ்டைலில் என்னை நாலு தட்டு தட்டுவான். அம்மாவிடம் போயி குதிப்பான். எனக்கு செம ஜாலி. இப்ப பிளாக்குலயும் இந்த சேவையை செவ்வனே செய்து வருகிறேன். விட்டு விடலாமா?னு யோசிக்கிறேன்.

நியாபகம் வருதே! நியாபகம் வருதே!
என் நியாபக சக்தி மீது எனக்கு அபார நம்பிக்கை உண்டு. பல சமயங்களில் இது வரம், சில நேரங்களில் சாபம். நம் முதுகில் குத்தியவர்களை பார்த்தால் அவர்களது கீழான செயல் தான் நினைவுக்கு வந்து தொலைக்கும்.
"மன்னிகறவன் மனுஷன்!
மன்னிப்பு கேட்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்!" - விருமாண்டி டயலாக் தான் இப்போ எல்லாம் சொல்லி பழகறேன்.


"நான் சந்தோஷம் கொண்டாடும் சன்யாசி!"
2 நாட்களுக்கு முன்னால் கீதையில் கர்ம யோகம் படித்து கொண்டு இருந்தேன்.(நம்புங்க ப்ளிஸ்).

அதில் ஒரு வரி, "ஏ பார்த்தா! எவன் ஒருவன் தன்னுடய கடமையில் உறுதியாக இருந்து, முழு மனதுடன் அதில் ஈடுபடுகிறானோ, அவனை அந்த கர்மத்தின் பலன் பாதிப்பதில்லை!" எனவே உன் கடமையில் இருந்து சிறிதும் பிறழாதே!"

அடடா! என்ன ஒரு சத்யமான வரிகள்!னு அனுபவித்து கொண்டிருக்கும் போது தானா ஒருத்தன் என்னை செல் போனில் அழைகணும்?

"சற்று தொலைவிலே அவள் முகம் பார்த்தேன்!
அங்கே தொலந்தவன் நானே!"

என்ற தேவ கானம்(ஹி, ஹி) காதில் விழ, இந்த பாடலை எழுதிய கவிதாயினி தாமரையின் வரிகளை மெச்சுவதா? அந்த பாடலில் கண்ணாலேயே எல்லாம் பேசி, ஒயிலாக நடை பயிலும் அசினின் நடைழகை மெச்சுவதா? என்று நான் பேரின்ப நிலையை அடைந்தேன்.
(அடச்சீ! இது ஒரு பொழப்பா?னு நீங்க துப்பினாலும் பரவாயில்லை. ஏனெனில் கர்மத்தின் பலன் என்னை சாராது, ஹி,ஹி, கிருஷ்ணர் சொல்லியிருகாரே)

கத்திரிக்கா! கத்திரிக்கா!
யாரு தான் இதை கண்டுபிடிச்சாங்களோ? சே! எனக்கு பிடிக்காத காய்கறியில் டாப் - 10 இல் தொடர்ந்து 26 வருடங்களாக முதலிடம் வகிக்கிறது. ஊரில் "அம்மா! உங்க பெரிய பையன் வீட்டுல இல்லையே"?னு கேட்டு விட்டு தான் தெருவில் கத்திரிகாய் விற்க காய்கறிகாரன் வருவான். TRC ஸார், உங்க வீட்டுல நான் வரும் போது இந்த காய் செஞ்சு போட்டு என்னை பழி வாங்கிடாதீங்க. நான் பாவம் இல்ல?

சரி, உண்மையை சொல்றவங்க தெய்வத்துக்கு சமம்! தன்னுடைய குறைகளை வெளிப்படையாக சொல்வதே ஒரு நல்ல குணம் தானே! (ஆமாம்!னு சொல்லுங்கோ)நான் என்னை மாற்றி கொள்வேன், கொள்கிறேன்!

"ஒரு குழந்தையை வையாதே பாப்பா!"னு எனக்காக பாரதி அன்னிக்கே சொல்லிருக்கார். அதுனால ஹி,ஹி!

இந்த தொடர் பதிவில் சில பேரை இழுத்து விடலைனா நன்னாவா இருக்கும்?

1) 'கில்லி' ப்ரியா! - புதிதாக வீடு கட்டி இருப்பவர். இவரது எழுத்து நடை எனக்கு மிகவும் பிடிக்கும்.

2) 'கொடி கொடியாம்' பொற்கொடியாம்! - டகால்டி ராணி! என்னிடம் பென்ஸ் கார் கேட்ட புண்ணியவதி.

3) 'எந்தரோ மஹானுபாவுலு' TRC ஸார் - எதுகை மோனையில் புகுந்து விளையாடுபவர். என்னை அவர் வீட்டுக்கு அழைத்து பெரிய ரிஸ்க் எடுத்துள்ளார். ம்ஹும்... விதி யாரை விட்டது?

பி.கு: அடுத்த பதிவு ஒரு ஆளுக்கு வசமா ஆப்பு! யாருக்கு?னு யோசிச்சுண்டே இருங்க.

Saturday, September 16, 2006

சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா?....



செப் - 17 எமது இனிய தோழி விஜி பூவுலகில் உதித்த நாள்.

காவிரிக்கரையில் உதித்த தோழிக்கு எவ்வுலகமும் போற்றும் தாமிரபரணியிலிருந்து ஒரு பிறந்த நாள் வாழ்த்து மடல்.

"ஆதியும் நானறியேன்! நிஸ்ரமும் நானறியேன்!
கண்டசாப்பை கனவிலும் அறியேன்!
ரூபகமாய் நான் வரைந்த வாழ்த்திதுவே!"


"உனது காலைபொழுது பூபாளமாய்
வார்த்தைகள் அனைத்தும் கல்யாணியாய்
காட்சிகள் முழுதும் இன்பம் சுரக்கும் ஆரபியாய்
பிரியமானவர்கள் மனதில் என்றும் மோஹனமாய்
கயவர்கள் காதுகளுக்கு கம்பீர நாட்டையாய்

மக்களின் நெஞ்சுருட்டிச் செல்லும் செஞ்சுருட்டியாய்
நீல வானில் சுடர்விடும் நீலாம்பரியாய்
மலைத்தேனை வெட்க செய்யும் நாட்டை குறிஞ்சியாய்
சோர்ந்து விழும் மனங்களுக்கு ஒரு காப்பியாய்
எளியவர் துயர் தீர்க்கும் சாரங்கனாய்

அறிவில் உயர்ந்தவர் கொலுவிருக்கும் தர்பாராய்
வள்ளிக் கணவன் துள்ளி குதிக்கும் காவடிச்சிந்தாய்
ஆதிசேஷனும் கிரங்கி நிற்க்கும் புன்னக வராளியாய்
பாதி தந்தவனை மீதியும் தர வைக்கும் காம்போதியாய்
சுக துக்கங்கள் அனைதிலும் மத்யாமாவதியாய்

ஆபரணங்கள் எதிலும் உயர்ந்த சங்கராபரணமாய்
கண்டவர் முகங்களுக்கு என்றும் நளின காந்தியாய்
பெற்றவர் மனதிற்க்கு தித்திக்கும் ஷ்ரிரஞ்ஜனியாய்
நான்முகன் நாவில் களி நடம் புரியும் கீரவாணியாய்
குழந்தை மனம் கொண்டு குதூகலிக்கும் ஆனந்த பைரவியாய்

தோழிகள் மனம் மகிழ வைக்கும் தோடியாய்
மிஸ்ரசாப்புடன் தேனாய் இனிக்கும் சாருகேசியாய்
(அ)ரங்கனின் திருமார்பில் அம்சமாய் வீற்றிருக்கும் ஷ்ரியாய்
நல்லவர் என்றுமே முகழும் ராகமாலிகையாய்
பல்லாண்டு வாழ இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்!"

- Srini (அம்பியின் உடன்பிறப்பு)

என் உடன்பிறப்புக்கு தமிழில் என்னை விட புலமை அதிகம். லெப்ட், ரைட், U-Turn போட்டு வருவான். பேச்சு, கவிதை போட்டினு கல்லூரியில் கும்மி அடித்து விட்டு வருவான். ஒவ்வோரு முறை நான் ஊருக்கு போகும் போதும் கப்பு, மெடல்கள்னு மேஜையில் அடுக்கி இருக்கும். "லீவுக்கு வந்தது தான் வந்துட்ட, எல்லாத்தையும் சுத்தமா தொடச்சு வை!னு நக்கல் விடுவான். என்ன செய்ய? நான் ஜெயித்த போட்டிகளில் எல்லாம் கேசரி சாப்பிடும் பேசின் தான் எனக்கு குடுத்தா.

என் மீது பாசம் அதிகம். இந்த கவிதையை எழுதி வாங்க நான் குட்டிகரணம் எல்லாம் போட வேண்டி இருந்தது. நாம, இந்த கவிதை ஏரியாவில் கொஞ்சம் வீக்.

"கண்மணி! பொன்மணி!" எல்லாம் போட்டு, இந்த மானே! தேனே! எல்லாம் நடுவுல தூவி எப்படியாவது ஒரு கவிதை எழுதிடனும்!னு தான் பாக்கறேன்.
ஒன்னும் தோண மாட்டேங்கறது. படிக்கற காலத்துல படிப்பே கதி!னு இருந்துட்டோமா! அதான்! (இதை நீங்க நம்பி தான் ஆகனும்!) ஒரு வேளை ஓட்டலில் ரூம் போட்டு யோசிச்சா, எழுத வருமோ என்னவோ?

பி.கு: இது ஒரு அவசர பதிவு. விரைவில் எதிர்பாருங்கள்! உங்கள் அபிமான பிரவுஸர்களில் கடவுள் பாதி! மிருகம் பாதி!

Saturday, September 09, 2006

பூ மழை தூவி, வசந்தங்கள் வாழ்த்த!.....



9 th செப். இந்த நாள் ஒவ்வொரு தமிழரும் மறக்க கூடாத நாள். எனது பிளாக் உலக அருமை தங்கை, பாச மலர், பவள கொடி, நல்லவள், வல்லவள், நாற்பதும் தெரிந்தவள், சென்னையின் சுனாமி, ஒரு வாய் தண்ணி! தண்ணி(ஹி, ஹி) கூட குடிக்காமல் போர் முரசு போல பிளாகில் முழங்குபவள், "தினம் ஒரு பிளாக்" புகழ் சுபா பூமியில் திருஅவதாரம் செய்த நாள். மறக்காமல் எனக்கு ரக்ஷா பந்தன் வாழ்துக்கள் சொன்ன போதே என் தங்கைக்கு நான் வாக்களித்திருந்தேன், "உடன்பிறப்பே! உனக்கு ஒரு Swift கார் உண்டு!" என்று!
சொன்ன சொல் மாறாத சூரிய குலத்தில் உதித்த இந்த அம்பி, குடுத்த வாக்கை நிறைவேற்ற இரவு பகல் பாராமல், வியர்வை, ரத்தம், ஜொள்(சே! பழக்க தோஷம்) எல்லாம் சிந்தி கடுமையாக உழைத்து இதோ வாங்கி விட்டான்.


"பூ மழை தூவி, வசந்தங்கள் வாழ்த்த ஊர்வலம் நடக்கின்றது!
எழில் பொங்கும் அன்பு தங்கையின் நெற்றியில்
குங்குமம்(or ஸ்டிக்கர் பொட்டு) சிரிக்கின்றது"

என்று நான் அவளது திருமண ஊர்வலத்தில்
பாட்டு பாட, என் தங்கை காரில் வரும் நாள் வெகு தொலைவில் இல்லை.
அது மட்டுமா? அவளது திருமண ஊர்வலத்தில்

"அத்தானை பார்!(not surya, ofcourse) என்று தோழி உனை கிள்ள
முகம் நாணத்தால் செந்தூர நிறம் கொள்ள"
என்ற பாச காட்சியும் உண்டு.

தனது அறிவை வளர்க்க ஒரு பரமார்த்த குரு போதாது! என்று கருதி இரண்டு பரமார்த்த குருக்களிடம் கல்வி பயிலும் என் தங்கையின் அறிவே அறிவு!

இப்போழுது கட்சி பணி காரணமாக, திருச்சி, கும்பகோணம்(ஹி, ஹி) என சுற்று பயணம் செய்து கொண்டிருக்கும் எனது தங்கையை நேரில் வாழ்த்தி கார் சாவியை வழங்க முடிய வில்லை. தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்த என்னிடம் "சில்லுனு ஒரு காதல் கதை" பிளாப்பா அண்ணா?"னு பொறுப்பு சிகாமணியாக தனது இன்னொரு அண்ணன் சூர்யாவை பற்றி விசாரித்த என் தங்கையின் சகோதர பாசத்தை என்ன என்று சொல்ல்வது?

எனவே அன்பு தங்கையே! எப்பொழுது வேண்டுமானாலும் வந்து உனது காரை தாராளமாக பெற்று கொள் கண்மணி! அது வரை நானும், உனது மன்னியும் காரை பத்திரமாக பார்த்து கொள்வதில் உனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லயே பொன்மணி!

இந்த பொன்னான தருணத்தில், எதிர் கட்சிகளுக்கு நான் ஒரு அறைகூவல் விடுக்கிறேன்!
தில்லு இருந்தால், உப்பு போட்டு புளியோதரை(ஹி, ஹி) தின்பவராக இருந்தால், சொன்ன சொல்லை காக்க நினைத்தால், எங்கே நீங்கள் வாக்களித்த அந்த வைர மூக்குத்தியை
பரிசளியுங்கள் பார்க்கலாம்! அப்படி பரிசளிப்பதாக இருந்தால், எங்கள் சார்பாக மூக்கு குத்த ஒரு கோணி ஊசி வழங்கப்படும். நாங்கள் ரெடி! நீங்கள் ரெடியா?( ஜாதி பெயர் இல்லீங்கோ!)
நல்ல சான்ஸ்! மிஸ் பண்ண வேண்டாம்!

ஒரு செல்ல தங்கை Octavia கார் கேட்டு உள்ளார். இன்னொரு பாச மலர், பென்ஸ் கார் கேட்டு உள்ளார். அவை இரண்டும் பரீசீலனையில் உள்ளன.

பி.கு: குடுத்த காசுக்கு அதிகமாவே கூவிட்டேன் மா! மறக்காம account transfer பண்ணிடு! என்ன? :)

Friday, September 01, 2006

உமையொரு பாகன்!



கடவுளின் விசித்ரமான படைப்புகளில் அரவாணைகளும் அடங்குவர். உருவத்தால் பெண் போலவும், குரலில் ஆணாகவும், சிவனின் "உமையொரு பாகன்!" தத்துவத்தை விளக்க வந்த படைப்பாகவே எனக்கு தோன்றும். இவர்களை பற்றி மகாபாரததில் கூட குறிப்பு உள்ளது.

மகாபாரத போர் துவங்குமுன், களபலியாக அர்ஜுனன் மகன் அரவாணன் தேர்ந்தெடுக்கப்பட்டு, களபலி ஆவான். அவனையே தங்கள் கணவனாக வரித்து, இந்த அரவாணைகள் சித்திரை மாத பவுணர்மி அன்று கூத்தாண்டவர் கோவிலில் (விழுப்புரம் அருகில் உள்ளது) தங்களுக்கு தானே தாலி கட்டி கொண்டு, அடுத்த நாள் அவன் இறந்ததாக பாவித்து, அந்த தாலியை அறுத்தெறிந்து அழுது புலம்புவது ஒரு சடங்காக உள்ளது.

வட இந்தியாவிற்கு நாம் ரயிலில் பயணம் செய்ய நேரிட்டால், சில ஸ்டேஷன்ங்களில் கூட்டம் கூட்டமாக இவர்கள் ரயிலில் ஏறி பயணிகளிடம் காசு வசூலிப்பார்கள் என்றும், சேட்டு வீட்டு திருமணங்கள் நடக்கும் இடங்களுக்கு இவர்கள் சென்று அந்த தம்பதியரை ஆசிர்வாதம் செய்து வசூல் வேட்டையும் நடத்துவர் என்றும் கேள்விப்பட்டுள்ளேன்..

மும்பையில் அதிரடியாக, ஸ்கார்பியோ காரில் வலம் வரும் ஒரு பிரபல தாதா ஒரு அரவாணை. பின்பு என்கவுண்டர் செய்யப்பட்டதாக கேள்வி!
அவனை மையமாக வைத்து தான் அப்பு என்ற படத்தில் பிரகாஷ் ராஜ் ஒரு அரவாணையாக நடித்திருப்பார்.

எத்தகைய வேதனையை தமக்குள் சுமந்து கொண்டு, அதை துளியும் வெளிக் காட்டி கொள்ளாமல் இவர்களால் எப்படி முடிகிறது? என்று நான் பலமுறை வியந்தது உண்டு.

பெறும்பாலும் பல அரவாணைகள் தங்கள் பெற்றவர்களால் புறக்கணிக்கப்பட்டு, துரத்தப்பட்டு நாடோடியாக திரிகிறார்கள்.
இந்த சமூகமும் இவர்களை ஏளனமாகவும், ஒரு வித வேற்று கிரக ஜந்துவை போலவும் தான் நடத்துகிறது.
சினிமாவில் காமடி டிராக்கில் இவர்கள் கண்டிப்பாக தேவைப்படுவார்கள். பெறும்பாலும் நமது ஹீரோக்களை கலாய்க்க, பாட்டுக்கு நடுவில் ஏடாகூட வசனம் பேச இவர்களை தான் பயன்படுத்துவார்கள்.

ஒரு வாரமாக இந்த ஜிலேபி தேசத்தில் ஒரு கூத்தை பார்த்து வருகிறேன். முக்கியமான டிராபிக் சிக்னல்களில் வண்டிகள் குறைந்த பட்சம் 5 - 10 நிமிடங்கள் நிற்க வேண்டி உள்ளது. அப்பொழுது, குபீரென ஒரு அரவாணை கூட்டம் கொரில்லா தாக்குதல் நடத்தி அவர்கள் வழக்கப்படி கைகளை தட்டி,அனைவரது தலைகளிலும் இலவசமாக ஆசிர்வாதம் செய்து, காசு குடு! என்று அன்பாக மிரட்டுகிறார்கள். மினிமம் பத்து ரூபாய் குடுக்க வேண்டும். இல்லா விட்டால் என்ன நடக்கும்? என்று நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை.

இப்படி தான் ஒரு நாள் மாலை அதிசயமாக கொஞ்சம் சீக்கிரமாக 6.30 மணிக்கே ஆபிசை விட்டு கிளம்பி எம்.ஜி.ரோட்டில் வரும் போது, வசமாக ஒரு அரவாணையிடம் மாட்டிக் கொண்டேன். நாம தான் தர்ம மகா பிரபு ஆச்சே! 5 ரூபாய் குடுத்தால், முடியாது! 10 ரூபாய் தான் வேண்டும்! என்று அடம். அடுத்த கட்ட கொரில்லா தாக்குதல் நடக்குமுன் நான் சுதாரித்து கொண்டேன்.

"ஒரு காரணம்! ஒரெ ஒரு காரணம் சொல்! உனக்கு ஏன் நான் 10 ரூபாய் குடுக்கனும்? என்று எனது "ஏக் காவ் மேம் ஏக் கிஸான்" இந்தியில், புருவத்தை உயர்த்தி குரலில் கோபம் தெறிக்க கேப்டன் போல கேட்டேன்.
சில சமயங்களில் ரெளத்ரம் பழக வேண்டி இருக்கிறது. என்னை ஆழ்ந்து ஒரு பார்வை பார்தார்(ள்). "ஒரு பத்து ரூபாய் குடுக்க கூடாதா?" என்று பாவமாக முகத்தை வைத்து கொண்டு கேட்க, அதற்கு மேல் நான் எதுவும் பேச முடியலை. குடுத்து விட்டு நகர்ந்தேன்.

சரி, எனக்குள் சில கேள்விகள்:
1) அரசாங்கம் இவர்களை கண்டு கொண்டுள்ளதா? ஒரு துரும்பையாவது இவர்களுக்காக நகர்த்தி உள்ளதா? இவர்களுடைய நிலை என்ன? என்பதை இந்திய அரசு தெளிவுபடுத்துமா?
இவர்களை "Physically Challenged Category"ல் சேர்த்தால் ரிசர்வேஷன் கோட்டா கிடைக்க வழி உண்டே!

இவர்களது எண்ணிக்கை மட்டும் ஒரு தொகுதிக்கு பத்தாயிரம் இருந்தால் நமது கரை வேட்டிகள் வாக்குறுதிகளை அள்ளி வீசி இருக்க மாட்டார்கள்? அப்பவும் உங்களுக்கு சினிமாவில் நடிக்க சான்ஸ் வாங்கி தரோம்!னு தான் சொல்லி இருப்பார்கள், அது வேற விஷயம்!
வாக்குறுதி அள்ளி வீசுவதில் எல்லா X.மு.க. கட்சிகளும் ஒன்னு தான். (X = You pple fill up the blanks)

2) இவர்களும், தங்கள் தன்மானத்தை ஏன் விட்டு கொடுத்து, இப்படி திரிய வேண்டும்? படங்களில் தங்களை கேவலமாக சித்தரித்துக் கொள்ள வேண்டும்?

3) நேர்மையாக பிழைக்க எத்தனையோ வழிகள் உள்ளதே! சுய உதவி குழுக்கள் உதவியை நாடலாமே!

பண்டைய தமிழகத்தில் அந்தப்புர காவலில்(ஹி,ஹி, நம்மூர் ராஜாக்கள் ரொம்ப தான் உஷாரு!) அரவாணைகள் இருந்ததாக படித்து உள்ளேன்.
தனியார் செக்யூரிட்டி சர்வீஸ்களில் இவர்களை ஏன் சேர்க்க கூடாது? இவர்கள் ஏன் சேர கூடாது?

ம்ம்ம், இந்த 33% சதவீத ஒதுக்கீட்டுக்கே துப்பை காணோம்! ம்ம்ம்ம்! யானைக்கு யார் Snuggy pad கட்டுகிறார்கள்?னு பார்ப்போம்!பூனைக்கு யார் மணி கட்டுகிறார்கள் என்ற டயலாக்கையே எத்தனை நாளைக்கு சொல்வது? :)

பி.கு: அடுத்த பதிவு "கடவுள் பாதி! மிருகம் பாதி!"

Saturday, August 26, 2006

மாபெரும் வெற்றி பெற்ற நெல்லை பிளாக்கர்கள் மாநாடு!


நெல்லை பிளாக்கர்கள் மாநாட்டை மாபெரும் வெற்றியடைய
செய்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி!
நன்றி! நன்றி!  
.

நெல்லை பிளாகர்கள் மாநாட்டுக்கு பக்காவா பிளான் பண்ணி வைத்து இருந்த நேரத்தில், நம்ம ஆபிஸ்ல மேனேஜர், "அம்பி! லீவு இப்ப கிடையாது!"னு டமால்னு ஒரு குண்டை தூக்கி போட்டார். ஆஹா! இப்பவே எதிர் கட்சியின் சதி தொடங்கி விட்டதா?னு ஒரு நிமிடம் மலைத்து விட்டேன். அத தொடர்ந்து என் உடன்பிறப்புடன் அவசர ஆலோசனை நடத்தி, பயண திட்டத்தை மாற்றி விட்டேன். முந்தய நாளில் எனது அருமை அண்ணன் டுபுக்கு போனில் அழைத்து நான் வருவதை உறுதி செய்து கொண்டார்.

அப்புறம் என்ன? "எலெய்! எடுறா வண்டிய!"னு கிளம்பி விட்டேன். நெல்லைக்கு சரியாக 65 கிலோமீட்டர் தொலைவில் வரும் போது பஸ் டயர் பஞ்சர். சே! இப்படி ஒரு சோதனையா? "எத்தனை சதி வந்தாலும் முறியடிப்போம்! இப்படை தோற்பின் எப்படை வெல்லும்?"னு நமது தொண்டர்களின் உற்சாக குரல் கேட்டு சிலிர்த்து விட்டேன்.

பெங்க்ளுரில் இருந்து புறப்படும் போதே எனக்கு சிறிது உடல் நல குறைவு, ஜல தோஷம், இருமல் எல்லாம் இருந்தது. இருந்தாலும், கொள்கை பெரிதா? நமது உடல் நலம் பெரிதா? வீடு பெரிதா? நாடு பெரிதா? என்ற தன்மான உணர்ச்சி பொங்கி வழிந்திட, பிடரிகள் சிலிர்க்க, கர்ஜனை புரிந்து, தோள் தட்டி,அதோ தெரிகிறது பார் இமயம்! என்று கூறிக்கொண்டே வந்து சேர்ந்தேன் கல்லிடை.

வந்து விட்டான் எங்கள் யசோதை இளஞ்சிங்கம்! என்று அன்னையின் ஆனந்த கண்ணீர் ஒருபுறம், ஆபிஸ்ல ஒழுங்கா வேலை எல்லாம் செய்றியா?னு தந்தையின் அன்பான விசாரிப்புகள் ஒரு பக்கம் என்றால், "என்ன மாப்ளே! பெங்க்ளுரில் இருந்து தனியா தான் வந்தியா? சே! சப்புனு போச்சே!"னு நண்பர்களின் வழக்கமான வாரல்கள் மறுபுறம் என்று கச்சேரி ஆரம்பமே களை கட்ட தொடங்கியது.

2 வாரமாக துவைக்காத டிஷர்ட் நாலு, துவைத்து 2 மாதமே ஆன(ஹி,ஹி) 2 ஜீன்ஸ்களை என் பையில் இருந்து என் அம்மா கைப்பற்றினார்கள்.
உடல் நிலை சரி இல்லாததால் அம்மா தாமிர பரணி நதியில் குளிக்க 144 தடை உத்தரவு பிறப்பித்தார்கள். பின் நான் கொஞ்சம் அழுது அடம் பிடித்து, உருண்டு புரண்டதில், 30 நிமிடம் மட்டும் சென்று வர அனுமதி கிடைத்தது. ஆனால் நான் 1 மணி நேரம் ஜலக்ரீடை நடத்தி விட்டு தான் வந்தேன்! அதன் பலனாக நிமிட்டாம்பழம் ஒன்று கூட கிடைத்தது,அது வேறு விஷயம்.
பின் வழக்கம் போல தட்டில் மல்லிகை பூக்கள்(தமிழ்நாட்டில்,இட்லினு பொதுவாக சொல்வார்கள்) தக்காளி சட்னியுடன், சுட சுட பறிமாறப்பட்டன.

அதன் பின் அம்மாவுடன் துணைக்கு சமையல் செய்து கொண்டே(சும்மா வறுத்தல், கிண்டுதல் தான்) ஆபிஸ் கதை, சில மாஹானுபாவுலு பிளாக்கர்கள் பற்றி எல்லாம் கதையடித்து விட்டு மாலை மாநாடுக்கு செல்ல தயார் ஆனேன். எல்லா மாவட்டத்திலிருந்தும் கூட்டம் வந்திருப்பதால் கூட்டம் பெரிய திடலுக்கு மாற்றபட்டதாக என் அண்ணாச்சி தகவல் சொன்னார்.

மாவட்ட வாரியாக வண்டி கட்டிக் கொண்டு "உடல் மண்ணுக்கு! உயிர் பிளாக்குக்கு!
இதை உரக்க சொல்வோம் உலகுக்கு!"னு வந்திருக்கும் கூட்டதின் ஒரு பகுதி தான் இது!


மாலை ஆனதும், என் அண்ணாச்சியின் காரை பின் தொடர்ந்து ராமரை தொடரும் இளவலை போல நான் மக்கள் கூட்டதில் நீந்தி செல்லும் காட்சியை பாரீர்.


மாநாட்டின் முக்கிய ஹைலேட்டே அம்பி தலைமையில் நடந்த சைக்கிள் பேரணி தான்!
"சிங்கமொன்று புறப்பட்டதே!
அதுக்கு நல்ல காலம் பொறந்திருக்கு!"னு குழாய் மைக் செட்டில் பாடல் ஒலிபரப்ப பட்டது.


"முதல்வனே! எனை கண் பாராய்!....
ஆசை பூவை தவிக்க விட்டு அமைச்சரோடு நகர்வலமா?"னு பல நெல்லை ஜிகிடிகள் மாடியிலிருந்து பூ தூவிய படியே பாடியதை எல்லாம் இந்த அம்பி கேட்கவே இல்லை.

நமக்கு கொள்கை தானே முக்கியம்!

பின் இரவு சுமார் 9.30 க்கு மாநாட்டு மேடையில் கொள்கை சிங்கம், தாமிர பரணி தங்கம்! தமிழர் குலகொழுந்து! எனது அண்ணன் டுபுக்கு அவர்களை சந்தித்தேன். உணர்ச்சி பெருக்கில் இருவருக்கும் பேச்சே வர வில்லை. வெறும் காத்து தேங்க்(வாயிலிருந்து தான்) வந்தது.

"ஒரு மந்தையிலிருந்து இரண்டு ஆடுகள் தனி தனியே சென்றன. மீண்டும், அவையிரண்டும் சந்தித்த போது பேச முடியவில்லையே?"
(ஆடு எங்கடா பேசும்?னு கமண்ட் போட கூடாது! சொல்லிட்டேன் ஆமா!)

3 வருடம் கழித்து இருவரும் சந்தித்து கொள்கிறோம். அந்த சந்திப்பு, வராலாற்று சிறப்பு வாய்ந்த ஒரு சந்திப்பு. நதி கடலை சேருவது போன்றது.
"நாம் இருவரும் சேரும் சமயம்! நம் கைகளில் வரும் இமயம்!"

தம்பி! எப்படி பா இருக்கே? என்று படையப்பா சிவாஜி மாதிரி உச்சி முகர்ந்தார்.(நல்ல வேளை தலைக்கு ஷாம்பு போட்டு குளித்திருந்தேன்).

இதயமும், இதயமும் அங்கு பேசி கொண்டன. எனவே வார்த்தைகளுக்கு அங்கு இடம் இல்லை. (செமத்தியா என்னை ஓட்டு ஓட்டுனு ஓட்டினார்!னு உண்மையை இங்கு சொல்லவா முடியும்?).

மாநாட்டிற்க்கு வந்திருந்த மழலை பிளாக்கர்கள் படை(என்னையும் சேர்த்து தான்)


சித்தப்பாவின் கன்னத்தில் முத்தமிட்டால்
இதற்கு தானே செல்லம் 600 கிலோமீட்டர் தாண்டி வந்தேன்!


பல முக்கிய தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.
1) பதிவில் முதல் கமண்ட் போடுபவர்களுக்கு புளியோதரை, சர்க்கரை பொங்கல், ரவா லட்டு, பால் திரட்டி பால் என தாராளமாக குகிள்.காம் வழங்க வேண்டும்.

2)மொக்கை பதிவு போடுபவர்களுக்கு வயதில் மூத்த பிளாக்கர் கீதா மேடம், தனது சொந்த செலவில் தங்க கங்கணம் வழங்குவார்.

பிளாக் ஸ்பாட்டை தடை செய்ததற்க்கு கடும் கண்டனம் தெரிவித்து, தீர்மானம் இயற்றப் பட்டது.

1) ஆட்சியாளர்கள் 108 தோப்பு கரணம் போட வேண்டும். இல்லாவிட்டால், மாதம் ஒரு போஸ்ட் போடும் ஒரு குழந்தை, இனி வருடம் ஒரு போஸ்ட் போட ஆரம்பித்து விடும்.

2) "தினம் ஒரு போஸ்ட்" புகழ் சுபா இனி ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை மொக்கை போஸ்ட் போட ஆரம்பித்து விடுவார்கள்.

3) பிளாக் புளியோதரை மட்டுமே சாப்பிட்டு உயிர் வாழும் ஷ்யாம் இந்த தடையை எதிர்த்து ஆட்சியாளர்கள் வீட்டிலும் இனி புளியோதரை கேட்க ஆரம்பித்து விடுவார்.

வந்திருந்த அத்தனை பேருக்கும்(இதை படிப்பவர்களுக்கும் சேர்த்து தான்) நெல்லை அல்வா கிண்டி கொடுக்கப்பட்டது. இவ்வாறு நெல்லை மாநாடு இனிதே நிறைவுற்றது.

பி.கு: மேல சொன்ன மாதிரி எல்லாம் மாநாடு நடத்த எனக்கு மட்டும் ஆசை இல்லையா என்ன? ஆனால் நானும், என் அண்ணனும் அவர்கள் மாமியார் வீட்டு (சே! சே! லாக்கப் எல்லாம் இல்லை) ஹாலில் சுட சுட வாழைக்காய், உருளைகிழங்கு பஜ்ஜி, கெட்டி சட்னியுடன் பிளாக்கர்கள் மாநாட்டை கொண்டாடினோம். ஒரு சின்ன வருத்தம், வெறும் பஜ்ஜி தான் தந்தார்கள், கேசரியும் தரலை -(ஹி,ஹி) ஒரு பொண்ணையும் காட்ட வில்லை.

Saturday, August 19, 2006

தீராத விளையாட்டு பிள்ளை...!



இது கொஞ்சம் விவகாரமான பதிவு. எழுதலாமா? வேண்டாமா?னு ஒரே யோசனை. இப்ப நம்ம பிலாக்குக்கு TRC சார் நடேசன் சார் போன்ற மகானுபாவர்களும் கீதா மேடம் போன்ற வயசானவாளும்(ஹி,ஹி) வரா! இருந்தாலும் அம்பியின் குழந்தை மனசை எல்லாரும் புரிஞ்சுப்பா!னு நம்பி களம் இறங்கறேன்.

சரி இனி மேட்டருக்கு போவோம். 2 நாளா ஆபிச்ல ஒரு டிரைனிங்குக்கு என்னை அனுப்பி என் மேனேஜர் நன்னா பழி வாங்கிட்டா. சாதாரணமாவே தொடர்ந்து 2 மீட்டிங்க்ல கலந்துண்டாலே எனக்கு தூக்கம்,தூக்கமா வரும். அதுவும் மதிய வேளைனா கேக்கவே வேண்டாம்.
இந்த பிரோக்ராம் 2 நாளைக்கு நடந்தது.காலை 9 க்கு ஆரம்பிச்சு மாலை 6 மணி வரை. ஒரே பவர்பாய்ண்ட் பிரசேன்டேஷன்ஸ். என்னையும் சேர்த்து 50 பேர் கலந்து கொண்டோம். பேசின பாதி பேர் சும்மா கொத்து கொத்துனு கொத்தி எடுத்துட்டா. எல்லார் காதுலயும் ஒரே பிளட்.
"காலை சுத்தின பாம்பு கடிக்காம விடாது!"ங்கறது மாதிரி சில புண்ணியாவான்கள் கேள்வி எல்லாம் கேட்டா. எங்களுக்கு புரிஞ்சதா? இல்லையா?னு டெஸ்டிங்காம். அதனால வழக்கம் போல தூங்க கூட முடியலை. மானம் போயிடுமே!(எங்க இருக்கு? போறதுக்கு).

ஒரு நல்ல காரியம், என்னனா இந்த பிரோக்ராமை ஒரு நல்ல ஓட்டலில் ஹால் புக் பண்ணி ஏதோ பார்ட்டி மாதிரி ரவுண்ட், ரவுண்டா டேபிள் எல்லாம் போட்டு நடத்தினா. என் டேபிளில் ஒரு 5 பேர் வந்து உக்காச்சுண்டா. புதுசா ஒரு பஞ்சாபி குதிரை எங்க ஆபிஸ்ல வந்து இருக்கு. சொல்லி வெச்ச மாதிரி கரெக்ட்டா என் டேபிளில் தான் அதுக்கு சீட் போட பட்டிருந்தது. கரெக்ட்டா சீட்டு போட்ட புண்ணியவான் வாழ்க!னு நான் மனதுக்குள் வாழ்த்தவேயில்லை. ப்ளீஸ் நம்புங்கோ!

லக்னத்துக்கு பதினோறாம் இடதுல கால் மேல கால் போட்டு ஆட்சியில் அமர்ந்து இருக்கும் சுக்ரன் வேலையை காட்ட ஆரம்பித்தார். இதுல என்னை யாரும் குத்தம் சொல்லப் படாது!

"அங்கிள்! அங்கிள்!னு நன்னா மிங்கிள் ஆறாளே டா!"னு விவேக் எதோ ஒரு படத்தில் சொன்ன மாதிரி, குதிரை முதல் நாளில் இருந்தே நமது திறமை, புலமைய பார்த்து நன்னா மிங்கிள் ஆயிட்டா. என் டேபிளில் இருந்த மீதி பேரும் "குருவே! எப்படி இதெல்லாம்? உங்க கூட போட்டி போட முடியாது பா சாமி!"னு அடக்கி வாசிக்க ஆரம்பிச்சுட்டா.

ரெண்டவது நாள் தான் இந்த பதிவோட ஹைலேட்டே!
இந்த நிகழ்சியை நடத்தின ரசகுல்லாவை கூப்பிட்டு, "கொஞ்சம் போர் அடிக்குது! அப்பப்ப சில கேம்ஸ் எல்லாம் நடத்து!"னு பொறுப்பு சிகாமணியா நான் சொன்னது தான் எனக்கே வினையா போச்சு!

"அம்பி சொன்னா அப்பீலே கிடையாது!"னு அதுவும் முடிவு பண்ணி மதியம் நல்ல தூக்கம் வர 2.45 - 3.15 வேளையில ஒரு கேமை நடத்தியது.

எல்லா டீமுக்கும் ஒரு தினசரி பேப்பரை குடுத்து அதை தரையில் போட்டு டீமில் இருக்கும் எல்லோரும் தங்கள் ஒரு காலை மட்டும் அந்த பேப்பர் மேல வைத்து கொண்டு நிக்கனும். "இது என்ன ஜுஜுபி!"னு முதலில் எல்லாரும் நின்று விட்டோம். (எங்கள் டீமில் 6 பேர்). அதுக்கு அப்புறமா அதே பேப்பரை ரெண்டாக மடித்து அதன் மேல் டீமில் உள்ள எல்லாரும் நிக்கனும். சரி நின்னாச்சு!

நாலாக மடித்து நில்லு!னு சொன்னா. காலில் உள்ள ஷுவை கழற்றி எப்படியோ சமளிச்சு நின்னாச்சு!

எட்டாக மடித்து நில்லு!
ரொம்ப கஷ்ட்டப்பட்டு ஒரே விரலில் பேலன்ஸ் பண்ணி நின்னாச்சு!

பதினாறாக மடித்து நில்லு!
என் டீம்ல இருக்கற குதிரை அசரவேயில்லை. அழகா, என் கழுத்தை வளைத்து பிடிச்சுண்டு பேலன்ஸ் பண்ணி விட்டது. மூக்கில் மோப்பம் பிடித்து இந்த பிராண்ட் செண்ட் தான் யூஸ் பண்றியா? எனக்கு ரொம்ப பிடிச்ச பிராண்ட்!னு சர்டிபிகேட் வேற. "டாமி கேள் செண்ட் தான் நீ யூஸ் பண்றியா?னு பதிலுக்கு நான் அவளிடம் கேக்கவேயில்லை.

மத்த டீம்ல இருக்கற பசங்க எல்லாம் "எச்சூஸ்மி! அம்பி! எனி ஹெல்ப்?"னு நக்கல் விட ஆரம்பிச்சுட்டா. அடடா! அடடா! ஜேம்ஸ்பாண்ட் படம் பாக்ற மாதிரியே இருக்கே!னு ஒரு தடியன் கமண்ட் அடிக்கறான். என்னாடா இது வம்பா போச்சு? ஒரு குழந்தை மனம் கொண்ட நல்ல உள்ளத்துக்கு இப்படி ஒரு சோதனையா?

இதுக்கு நடுவுல 3 டீம் போட்டியில் அவுட் ஆகி விட்டது!

கடைசியாக அந்த பேப்பரை மேலும் ஒரு தடவை மடித்து நிக்கற டீமுக்கு தான் பரிசு!னு ரசகுல்லா அறிவிக்க, மேலும் 2 டீம்கள் தாமாகவே விலகி கொண்டன.

இப்ப தான், குதிரை ஒரு யோசனை சொன்னது! "பேசாம அலாக்கா என்னை தூக்கிக்கோ! நீ மட்டும் பேப்பர் மேல நில்லு!"
சரி தான்! நான் என்ன அன்பே வா! எம்.ஜி.ஆரா? "ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்!"னு பாடிண்டு அவளை தூக்கிகறத்துக்கு? சே! ஒரு ஹனுமார் பக்தனுக்கு இப்படியெல்லாமா சோதனை வரும்?

அட! நம்ம மனசு கள்ளம், கபடம் இல்லாத என் நண்பன் அர்ஜுனாவை போல வெள்ளை உள்ளம்.

விகல்பம் இல்லாம, ஒரு வேளை தூக்கிகலாம்!னு வெச்சுக்குவோம். ஆனா அந்த குதிரை, கர்ணம் மல்லேஸ்வரிக்கு ஒன்னு விட்ட ஓர்படி பொண்ணு மாதிரி ஆஜானுபாகுவா இருக்கு. பஞ்சாப் கோதுமையின் மகிமையை பற்றி கேள்விபட்டு இருக்கேன். இப்ப தான் பாக்கறேன். வீட்ல பொண்ணு வளர்க்க சொன்னா புளி மூட்டைய வளர்த்துருக்கா!

"சத்தியமா என்னால முடியாது தாயி!"னு சொல்லிட்டேன்.

"அப்ப நான் உன்னை தூக்கறேன்!"னு கையை பிடிச்சுண்டா. ஆள விடுமா தாயே!னு நான் எஸ்கேப் ஆகி விட்டேன். இதுக்காக, "கைய பிடிச்சு இழுத்தியா?"னு ஊர் நாட்டாமைய வெச்சா பஞ்சாயத்து பண்ண முடியும்?
போட்டிய நடத்தின அந்த புண்ணியவதியும் சரி, இதுவே போதும்!னு தீர்ப்பு சொல்லிட்டா. "உனக்கு தாண்டா பம்பர் பரிசு!"னு சில சத்ருக்கள் நக்கல் விட்டா! இப்படி எல்லாம் போட்டி நடத்தினா, யாருக்காவது தூக்கம் வருமா என்ன?

பி.கு: ஒழுங்கா நடந்த கதைய உள்ளது உள்ளபடி சொல்லு!னு யாரும் இந்த குழந்தைய (நான் தான்) டார்ச்சர் பண்ணப் படாது!
அடுத்த பதிவு நெல்லை மாநாட்டு செய்திகள். (இன்னும் போட்டோக்கள் லண்டனில் இருந்து வரவில்லை)

Monday, August 14, 2006

50) எந்தரோ மஹானுபாவுலு!.....



"எந்தரோ மஹானுபாவுலு!
அந்தரிக்கி வந்தனமு!!"

- இந்த லோகத்தில் வாழும் எத்தனையோ கோடானுகோடி புண்ணியவான்களை நான் நமஸ்கரிகிறேன்!
- நாதப் பிரம்மம் தியாராஜ ஸ்வாமிகள்.

தாமிர பரணி நதிக்கரையாம் ஆழ்வார்குறிச்சியை மையமாக வைத்து சத்தமில்லாமல் ஒரு பசுமைப் புரட்சி நடந்து வருகிறது. அங்கு உள்ள பரமகல்யாணி கல்லூரியில் பயோ டெக்னாலஜி துறையில் பணி புரியும் இளம் புரபஸர் திரு.விஷ்வநாதன் அவர்கள் The Tree என்று ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தை தொடங்கி ஓசைப் படாமல் பல நல்ல விஷயங்களை செய்து வருகிறார். அதை பற்றி என் உடன்பிறப்பு மூலம் கேள்விப்பட்டு, சரி, நமது 50-வது பதிவாக போட்டு உலகுக்கு தெரியபடுத்தலாம்னு ஒரு சின்ன ஆசை.

"தனி மரம் தோப்பாகாது!" என்பது போல தனக்கு மட்டும் ஆர்வம் இருந்து பயன் இல்லை, ஒரு சொந்த லாபமற்ற நிறுவனமாக மாற்றினால் தான் முடியும் என உணர்ந்து கொண்ட நமது புரபஸர், அரும்பாடு பட்டு இதை தொடங்கினார்.

இந்த நிறுவனத்தின் சில நோக்கங்கள்:
1) மக்களிடையே மரங்களை பற்றியும், பசுமையாக நமது சுற்றுபுறத்தை வைக்க என்ன செய்ய வேண்டும்? என பல நல்ல விஷயஙளை எடுத்து கூறுவது.

2) சொன்னால் மட்டும் போதாது! காரியத்திலும் இறங்கி, மரக் கன்றுகளை தந்து உதவி அதை பரமாரிக்கவும் உதவி செய்வது.

இலவசமாக அட்வைஸ் சொல்ல ஆயிரம் பேர் வருவா! ஆர்வத்தை கெடுக்க பத்தாயிரம் பேர் வருவா! பர்ஸை திறந்து பத்து ரூபாய் தர பத்து பேர் கூட வர மாட்டா நம்ம ஊருல!

அது போல, "இந்தாப்பா, விச்சு! உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை எல்லாம்? லோகத்தை நம்மால மாத்த முடியாது! எல்லாம் விதி படி தான் நடக்கும்!னு சில Old Monks(அய்! இது என் பிராண்டு பேர் ஆச்சே!னு ஷ்யாம் குதிக்கறான் பாரு!) சொன்னதை எல்லாம் கேட்டு சோர்ந்து விடாமல், "உன்னால் முடியும் தம்பி!" சத்யமூர்த்தி மாதிரி உற்சாகத்துடனும், ரமணா விஜயகாந்த் ரேஞ்சுக்கு ஒரு மாணவர் படை அமைத்து உண்மையிலேயே களப்பணி ஆற்றி வருகிறார்.
சில பேர் வயசான காலத்துல ஊர், ஊரா சுத்திட்டு களப்பணி ஆற்றுகிறேன்!னு பீலா விடுகிறார்களே, அது மாதிரி எல்லாம் இல்லை, இவருடைய களப்பணி.

சில தனியார் தொண்டு நிறுவனங்கள், மற்றும் தமிழக அரசாங்கத்தின் குறிப்பிட்ட ஒரு பிரிவின் நிதி உதவி யானை பசிக்கு சோள பொரி மாதிரி வருகிறது.

மத்திய அரசின் நிதி கிடைக்க அளித்த பைல்கள், வழக்கம் போல கோடு வைத்து கோவிந்தா சட்டை போட்ட கொட்டாவி விடும் ஆபிஸர்கள் மேஜையில், அவர்கள் பிஸி! என காட்ட சாட்சியாக உள்ளது. இந்தியன் தாத்தா மாதிரி, நமது பிளாக் உலக அம்மையார்(பாட்டி!னு யாராவது வாசித்தால் அதுக்கு நான் பொறுப்பில்லை)
திருமதி கீதா அவர்கள் போய் குத்தினால் தான் வேலை நடக்குமோ என்னவோ?.(ஹி, ஹி, இது எப்படி இருக்கு மேடம்?)

கோவிலில் ஒரு டியூப் லைட் போட்டாலே "மாவு.வேவு.சேவு.முனா.பானா"னு தனது பாட்டன், மாமன், மச்சினி பேர்களை அந்த டியூப் லைட்டில் எழுதி விட்டு, "ஒரு விளம்பரந்தேங்க்"னு பல்லை காட்டும் இந்த காலத்தில் தனது பேர் வெளியே தெரியாமல் இவர் ஆற்றும் சேவைகள் ஏராளம்! ஏராளம்!

தினமும் ஒரு ரூபாய்! ஒரே ஒரு ரூபாய் வீதம் நீங்கள் ஒரு வருடம் சேமித்து தந்தால் உங்கள் பெயரில் அல்லது உங்கள் பெற்றோர் பெயரிலோ மரம் நட்டு அதை பராமரிக்கும் பொறுப்பையும் இந்த நிறுவனம் ஏற்று கொள்கிறது.

எத்தனை காலத்துக்கு தான் அசோகர் மரம் நட்டார்!னு படிப்பது?
உங்கள் பெயரும் வரலாற்றில் இடம் பெறட்டுமே!

"இந்த பாட்டை யாருக்கு டெடிகேட் பண்ண விரும்பறீங்க?"னு சன் மியூசிக்கில் ஒரு ஜீன்ஸ் அணிந்த சின்ன கிளி கேட்டால் நம்ம ஆளுங்க ஒரு பெரிய லிஸ்டே குடுப்பாங்க. இந்த மரத்தை அக்கா அசினுக்கு டெடிகேட் பண்றேன்! அண்ணன் சூர்யாவுக்கு டெடிகேட் பண்றேன்! ஹி,ஹி மச்சினி கோபிகாவுக்கு டெடிகேட் பண்றேன்!னு ஸ்டைலா சொல்லிக்கலாம் இல்ல? என்ன நான் சொல்றது?

"சோறு போட்ட கோவிந்தசாமிக்கு மொய் பணம் நூறு ரூபாய்ய்ய்ய்!"னு செந்தில் மாதிரி ஏலம் விடும் இந்த காலத்தில், தன் சொந்த அக்கா வீட்டு கிரகபிரேவேசத்துக்கு கூட ஆயிரம் ரூபாய்க்கு மர கன்றுகளாய் வாங்கி நட்டு விட்டார் இந்த புரபஸர்.

இவரது தளராத முயற்சிகளை பார்க்கும் போது
இந்த பாட்டில் வரும் வரிகளான "அந்த வாசுதேவன், இவன் தான்!" என பாட தோன்றுகிறது.

இந்த நிறுவனத்தை பற்றி மேலும் தகவல் அறியவோ அல்லது நாலு வார்தை பாரட்ட வேண்டும்! போல தோன்றினால் இந்த greenvishu@rediffmail.com ஈ.மெயில் முகவரிக்கு மெயில் அனுப்பலாமே! (இவரது புகைப்படம் எனக்கு வந்து சேர்ந்ததும் எனது பதிவில் போட்டு விடுகிறேன்!)

பி.கு: அடுத்த போஸ்ட் "மாபெரும் வெற்றி பெற்ற அம்பியின் நெல்லை மாநாடு!"(அம்பியின் அரிய புகைபடங்களுடன்)

Thursday, August 03, 2006

யார் அந்த கர்ம வீரன்?



எப்போழுதெல்லாம் அதர்மம் தலை தூக்குகிறதோ
அப்பொழுதெல்லாம் நான் அவதரிப்பேன்!
- பகவத் கீதையில் கண்ணன்.

டிசம்பர் மாதம் ஒன்றாம் நாள்.
பாரத தேசத்தின் வரலாற்றில் அது ஒரு பொன்னாள். பாரதத்தை வல்லரசாக்குவதற்க்கு,
கார்த்திகை மாதம், தனுர் லக்னத்தில் ஒரு குழந்தை அவதாரம் எடுத்தது.

தேவர்கள் பூ மாரி பொழிந்தனர். யக்க்ஷர்கள் யாழ் மீட்டி தேவ கானம் இசைத்தனர். தேவ மங்கையர்கள் இன்னிசை நடனமாடினர். பூத கணங்கள் சங்க நாதம் செய்தனர்.

பூவுலகில், குயில்கள் கூவின, மயில்கள் தோகை விரித்தாடின. பசுக்கள் தாமாகவே பாலை சொரிந்தன. காட்டில் வாழும் புலி, சிங்கங்கள் எல்லாம் பயந்து கர்ஜனை செய்து, அடர்ந்த காட்டில் ஓடி ஒளிந்தன. கொடியவர்களுக்கு தம்மை அறியாமலேயே நடுக்கம் உண்டானது.

வங்காள விரிகுடா, அரபிக்கடல், இந்து மகா சமுத்திரம் எல்லாவற்றிலும், அலைகள் ஆர்பரித்தன. தேவ தாரு மரங்கள் பூக்களை வர்ஷித்தன. வழக்கத்துக்கு மாறாக அன்று பூக்கள் எல்லாம் மிகவும் மலர்ச்சியாக இருந்தது. அந்த தெய்வீக குழந்தையை பெற்றவர்கள் மகிழ்ச்சியில் பூரித்தனர்.
"உலகை வெல்ல வந்து விட்டான் எங்கள் இளஞ்சிங்கம்!" என்று கர்ம வீரர்கள் "வீரவேல்! வெற்றி வேல்!" என முழக்கம் இட்டனர்.

யார் அந்த கர்ம வீரன்?
இராஜ இராஜ சோழனா? இல்லை!

உங்கள் ஆர்வம் எனக்கு புரிகிறது.அந்த கர்ம வீரனை பற்றி அறிய
இங்கு கிளிக் செய்யுங்கள்.

பி.கு: அடுத்த போஸ்ட் ஐம்பதாவது பதிவு - சிறப்பு பதிவு.

Friday, July 28, 2006

மெக்காலே கல்வி முறை



எப்படி கட்டம் போட்டு திட்டம் தீட்டி நம்மை அடிமைப்படுத்தி விட்டனர்!
மெக்காலே கல்வி முறை என்று ஒன்றை அறிமுகப்படுத்தி நம்மை மழுங்க அடித்து விட்டர்கள்.
உலகமயமாகல் படி குன்டு சட்டிக்குள் குதிரை ஓட்ட முடியாது தான். ஆனால் சைனா, ஜப்பான் தங்கள் தாய்மொழியில் படிக்க வில்லையா? முன்னேற வில்லையா?

சரி, ஆங்கிலத்தை ஒதுக்க வேண்டாம். ஆனால் நமது தனி தன்மை வாய்ந்த கலாசாரத்தை நாம் ஏன் விட்டு குடுக்க வேண்டும்?

இதே விஷயத்தை பற்றி வெறு ஒரு கோணத்தில் ஒரு நல்லவள்! வல்லவள்!
சகோதரி சுபா ஏற்கனவே அலசி, காய போட்டு விட்டார்கள்.
ஆபிஸ் முழுக்க ஆங்கிலம், கன்னடம், இந்தி, பெங்காலி!னு கேட்பதால்/பேசுவதால் தான் மணக்க மணக்க தமிழில் (நிறைய ஆங்கிலம் கலந்து தான்) எழுதுகிறேன்.
சங்கம் வெச்சு தமிழ் வளர்க்க ஆசை தான்.(நான் வ.வா சங்கத்தையும் தான் சொல்றேன்) ஆனா நம்ம லெவலுக்கு இது தான் முடியும்.

ஆபிச்ல நிறைய வேலை பளு. அதான் இப்படி ஒரு Forwarded mail பதிவு. மன்னிக்கவும்.

Friday, July 21, 2006

கும்பாபிஷேகா! ஆராதனா!


பொதுவா நாம ரொம்ப பிசியா இருக்கோம்னு சொல்லனும்னா "எனக்கு தலைக்கு மேல வேலை இருக்கு"னு சீன் போடுவோம்.

ஆனா, சில பேருக்கு தலையில தான் வேலையே! சரி பாயிண்டுக்கு வரேன்! ஒரு மூணு மாதமா வேலையில ரொம்ப பிசியா இருந்ததுல *ahem* நம்ம பெர்ஸ்னாலிடிய கொஞ்சம் கவனிக்காம விட்டுடோம். அது என்ன ஆச்சு, த்லையில இருக்கற முடி, நெற்றி, மூக்கு வரை விழுந்து ஒரு அன்னியன் லுக் குடுக்க ஆரம்பித்து விட்டது.

"ஓ! ஷக்க மஷிஷா! அன்னியா!",அபராஜிதடு ஒச்சாயினு!"னு டீம்ல சில குல்டிகள் நக்கல் விட ஆரம்பிச்சுடானுங்க. சரி, இனி பொறுக்க முடியாது!னு முடிவு பண்ணி, இந்த ஜிலேபி தேசத்துல என் ஏரியாவுல சலூன் எங்க இருக்குனு பார்த்தா, ஒன்னு கூட இல்லை.

எங்க பார்த்தாலும் இந்த அரிவை, தெரிவை, பேதை, பெதுமை,மங்கை,மடந்தை,பேரிளம் பெண்களுக்கு தான் அழகு நிலையங்கள் இருக்கு.(எதாவது பருவத்தை மிஸ் பண்ணி இருந்தா or order மாத்தி இருந்தா சுட்டி காட்டவும்).

நகம் வெட்ட, அது மேல சாயம் பூச, புருவத்தை கட்டிங்க்-ஒட்டிங்க் பண்ண, அட! இந்த கண் இமைகளுக்கு கூட ஏதோ பண்றாங்க பா! முகத்துக்கு சுண்ணாம்பு அடிக்க, சாரி, சாரி ப்ளிச் பண்ண, உதடுக்கு ரத்த காட்டேரி மாதிரி சாயம் பூச!னு எல்லாத்துக்கும் நிலையங்கள் இருக்கு.

நானும் சுத்தி சுத்தி பாக்கறேன், ஒரு பாய்ஸ் சலூன் கூட இல்லை. என்னடா இந்த ஊருல ஒரு பயலும் முடி வெட்டிக்க மாட்டானோ?னு எனக்கு சந்தேகம் வந்துடுத்து!

அப்புறம் ஒரே ஒரு கடையை பார்த்ததும், "கண்டேன் சலூனை!"னு துள்ளி குதிக்காத குறையா கடைக்கு உள்ள போயி வரிசையில உக்காச்சுண்டேன்.

சரி, இப்ப ஆபிஸ்ல இருந்து (வெட்டியா) இந்த பதிவை படிக்கும் எல்லாரும் ஒரு தடவை உங்க சேர்ல சுத்திக்கவும், வீட்டுல இருக்கறவங்க மார்டீன் கொசுவர்த்தி சுருளை சுத்தி பார்த்து கொள்ளவும், பிளாஷ்பேக் பா!

Before 20 years, கல்லிடைகுறிச்சியில் நான் இருந்த காலங்களில் முடி வெட்ட இந்த சலூன் எல்லாம் போனதே கிடையாது.(பார்த்ததே கிடையாது!)
நடமாடும் சலூனாக பதினட்டு பட்டிக்கும் ஒரு நல்லவர், வல்லவர் வருவார். எனக்கு எல்லாம் கரெக்ட்டா ஒரு மாதம் தான், மூளை வளருதோ இல்லையோ, முடி வளந்துடும்.
வீட்டு அழி(ரிஷப்ஷன்)ல தான் கும்பாபிஷேகா! ஆராதனா!னு(ஜீன்ஸ் படம் நினைவில் உள்ளதா?) தலையில் தண்ணி தெளிச்சு,நல்லா தடவி பட்டாபிஷேகம் நடக்கும்.

சும்மா சொல்ல கூடாது, அந்த வல்லவர்,கத்ரியையே மிஷின் ரேஞ்சுக்கு யூஸ் பண்ற வித்தை தெரிஞ்சவர். அப்ப மிஷனை எப்படி யூஸ் பண்ணுவார்னு பாத்துக்கோங்க!

எனக்கு முடி வெட்டும் போது என் அப்பாவும் புட்பால் கோச் மாதிரி களத்துக்கு அருகில் வந்து உட்கார்ந்து விடுவார்.
"இந்தாங்க Mr.வல்லவர்! நல்லா மிஷின் போட்டு க்ளோஸா வெட்டுங்க!"னு சொன்னதோட இல்லாம, அடிக்கடி "லெப்டுல குறைச்சுடு, ரைட்டுல குறைச்சுடு! அப்படியே ஒரு U turn போட்டு முன்னாடி போயி நல்லா வெட்டு!"னு தந்தை மகனுக்கு ஆற்றும் உதவியை செவ்வனே செய்து விடுவார்.

இது போதாதா? அந்த வல்லவருக்கு! பய புள்ள சும்ம சுத்தி சுத்தி வெட்டுவார், நின்று கொண்டு வெட்டுவார், முட்டி போட்டு வெட்டுவார், சாய்ந்து கொண்டு வெட்டுவார்.

கத்ரி சேவை முடிஞ்சதும் மிஷின் சேவை ஆரம்பிக்கும். இந்த பிளக்குல சொருகி சர்ர்ர்ருனு எடுக்கற மிஷின் இல்லை அது! கையால தான் இயக்குவார். ரொம்ப வலிக்கும். அது முடிஞ்சு பினிஷிங்க் டச் குடுக்கறேன்!னு கத்தி மாதிரி ஒரு வஸ்துவை எடுத்து என் கண் முன்னாலயே அதை சவர கல்லுல சானை பிடிப்பார்.

எங்கே கொஞ்சம் முன்ன பின்ன அசங்கினா சூர்பனகை மாதிரி காதை இழந்துடுவோமோ?னு பயத்துல நான் மூச்சு கூட விட மாட்டேன் ஒரு 2 நிமிஷத்துக்கு.
அந்த கண் கொள்ளா காட்சியை என்னால் பார்க்க முடியாது. ஏனெனில் கண்ணாடி எல்லாம் காட்ட மாட்டார்.
அவருக்கு கை வலிச்சு, கத்தரிகோலுக்கும் வலிச்சு,போதும்னு எங்க அப்பா தீர்ப்பு சொன்ன பிறகு தான் கும்பாபிஷேகம் இனிதே நிறைவடையும். முடி வெட்டின பிறகு வீட்டுகுள் நுழைய முடியாது. கட்டின துண்டோட பட்டினத்தார் மாதிரி நேர தாமிரபரணி தான்!

போற வழியில மக்கள் விடற நக்கல் இருக்கே!
"என்ன இந்த மாதம் ராமருக்கு பட்டாபிஷேகம் நல்ல படியா முடிஞ்சதா?"னு ஒரு மாமாவின் நக்கல்.
"நல்ல அறுவடை போலிருக்கு! மகசூல் மூணு போகமோ?"னு ஒரு மாமியின் நக்கல்.

சே! ஏண்டா முடி வெட்டின்டோம்னு ஆயிடும்.
இந்த குருதி புனல், காக்க காக்க கட் எல்லாம் அப்பவே கண்டு பிடிச்ச புண்ணியவான்.
இவ்வளவுக்கும் சர்வீஸ் சார்ஜ் ஒரு ரூபாய்! ஒரே ரூபாய்! தான் வாங்கி கொள்வார்.

ஸ்கூலுக்கு போனா என் பக்கத்து சீட்டு உமா மகேஷ்வரி(லங்கினி!னு வாசிக்கவும்) அவ பேனா எழுதறதா?னு என் பின் மண்டையில அவ ஆட்டோகிராப் போட்டு செக் பண்ணிப்பா. எனக்கு கோவம் கோவமா வரும். இருந்தாலும் சண்டைக்கு போனா காம்பஸ்ஸால குத்திடுவாளோனு பயமா இருக்கும். அதோட மட்டும் இல்லை, அடிக்கடி அவள் எனக்கு ஆரஞ்சு மிட்டாய் எல்லாம் தருவா. போனா போகுதுனு விட்ருவேன்.(மீசையில மண் ஒட்டலை டா அம்பி!)

சில மாதங்களுக்கு முன் ஊருக்கு போயிருந்தேன். அதே வல்லவரை பார்த்தேன். "நல்லா இருக்கீங்களா?"னு இருவரும் பாசமுடன் விசாரித்து கொண்டோம். அவரின் மகன் நல்லா படித்து இப்போ சென்னையில் நல்ல வேலையில் இருப்பதாக சொன்னார். மிகவும் மகிழ்ச்சியா இருந்தது.

பாரதியின் கனவு நிறைவேறி கொண்டிருப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.

சரி, மறுபடி பெங்க்ளூருக்கு வருவோம்.
அந்த கடைகாரர் கேட்டார்,"சார், எப்படி வெட்டனும்?".
நான், "மிஷின் போட்டு நல்லா க்ளோஸா கட் பண்ணுங்க!"

பின்குறிப்பு: கமெண்ட் என்ற பெயரில் முதலில் நக்கல் விடுபவர்களுக்கு புளியோதரை மற்றும் சுண்டல் வழங்கப்படும்.

Thursday, July 13, 2006

அல்வா நகரத்தில் பிளாக்கர்கள் மாநாடு!



அரணி பரணி பாடி வரும் தாமிரபரணியாம் எங்கள் நெல்லை சீமையிலே ஆகஸ்ட் மாதம் இரண்டாம் வாரத்தில் பிளாக் பதிவாளர்கள் சந்திப்பு நடக்க இருக்கிறது.

"தென்னாட்டு வேங்கை, தெவிட்டாத தெள்ளமுது,சீறும் சிறுத்தை, பிகருக்கு வடை அளித்து கை சிவந்த வள்ளல், 3 வருடமாக பிளாக் உலகின் மன்னன், அம்பையின் அழகன், தொடர்ந்து தேன்கூட்டில் கப்பு(he, hee) வாங்கி வரும் வெற்றி வீரன், நல்லவர், வல்லவர், நாலும் தெரிந்தவர், என் அசின் பிரதர், ச்சீசீ, கசின் பிரதர், "லன்டன் புகழ்" நமது
டுபுக்கு அழைக்கிறார்! கூடவே அவரது பிளாக் உலக கலை வாரிசு(கண்டுக்காதீங்க அண்ணாச்சி!) உங்கள் அம்பியும் சேர்ந்து அழைக்கிறார்.

முதலில் மெரினாவில் தான் கூட்டம் கூட்டலாம் என்று இருந்தோம், ஆனால் அலை கடலென உங்கள் எண்ணிக்கை கண்டு மீன்டும் சுனாமியோ? என்ற அச்சம் வரலாம் என்று எண்ணி கூட்டத்தை நெல்லைக்கு மாற்றினோம்.

"பிளைட் டிக்கட் அதும் பிசினஸ் கிளாஸ் போதும்!"னு காமடி கீமடி எல்லாம் பண்ண படாது! வேணும்னா நம்ம கஜா கிட்ட சொல்லி தலைக்கு 50 ரூபாய் குடுத்து, கள்ள தோணி ஏறி வரவும். உள்ளூர் மக்கள் நடராஜா சர்வீசை பயன் படுத்தி கொள்ளவும்.

நெல்லைக்கு வாருங்கள்! திருநெல்வேலி சம்ரதாய விருந்தோம்பலை உங்களுக்கு அளிக்கிறோம். (ஏல மக்கா! அருவாள நல்லா தீட்டி வைல! ரொம்ப நாளு ஆச்சு!)

பாரதி ராஜா படத்தில் மட்டும் பார்த்திருக்கும் கிராமத்தை காட்டுகிறோம். ஒடினா தான் அதுக்கு பேர் நதி! தேங்கினா அது குட்டை!

ஒடுகிற நதியை காட்டுகிறோம் வாருங்கள். சென்னை வாசிகள் ஒரு செங்கல், கொஞ்சம் வைக்கல் கொண்டு வரவும். கொஞ்ச அழுக்கா ஒட்டி இருக்கு..? நல்லா தேய்ச்சு குளிக்கனும் இல்ல, அதுக்கு தான்!

மதுபாலா, திவ்யபாரதி, மனிஷா, த்ரிஷா, ஜோதிகா என பல பேர் காலடி பட்ட புண்ணிய மண் அது!
(வீர பாண்டிய கட்ட பொம்மன், பூலிதேவன், வீரன் வாஞ்சி ஆகியோரது ஆன்மா இந்த அடியவனை மன்னிக்கட்டும்!)

இந்த அரிய விழாவில், என் அண்ணனின் பிளாக் உலக கலை சேவையை பாராட்டி அவருக்கு இந்திய பணம் ஆயிரம் பொற்கிழி அளிக்க உள்ளேன். அவரும் எனக்கு ஆயிரம் பவுண்டுகள் மட்டும், பொற்கிழி அளிக்க போகிறார் எனபதை தெரிவித்து கொள்கிறேன்.

உங்கள் சுற்றமும் நட்பையும் கூட்டி வர இது ஒன்னும் அம்பியின் திருமணம் அல்ல, பிளாகர் மாநாடு, ஆகவே அடையாள அட்டை கொண்டு வரவும்.

அட! யாரும் வரலை! என்றாலும், எனது அண்ணன் சொன்னது போல் இந்த பிளாகர் மாநாடு,எங்கள் வீட்டு அடுக்களையிலோ அல்லது என் அண்ணன் வீட்டு அடுக்களையிலோ நடந்தே தீரும்! என்பதை 136 வது வட்டதின் சார்பாக எதிர் கட்சிகளுக்கு இங்கு கூறி கொள்ள ஆசை படுகிறேன்.

மா நாட்டுக்கு வரும் எல்லோருக்கும் திருநெல்வேலி அல்வா அம்பி கையால் கிண்டி குடுக்கப்படும். பார்சலும் வாங்கிக்கலாம்.

இந்த நெல்லை மாநாட்டை தொடர்ந்து பெங்களுர்,சென்னை ஆகிய இடங்களிலும் உங்கள் அம்பி மாநாடு நடத்த உள்ளார். சென்னை மாநாட்டின் முழு பொறுப்பையும் என் அருமை சகோதரி "One Post per Day" சுபா கவனித்து கொள்வார் என்பதில் எனக்கு துளியும் ஐயமில்லை.

"அலை கடலென திரண்டு வாரீர்! அமோக ஆதரவு தாரீர்!"

"இந்த படை போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?" என்ற கோஷம் விண்ணை சாடட்டும்.

முக்கிய குறிப்பு: ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு நல்ல சிறுகதையை படிச்சேன். கைல காசு கொஞ்சம் இருந்திருந்தா இந்த கதையை ஒரு குறும்படமா எடுத்து திரைகதைக்கு National award/Oscar அவார்டு வாங்கி இருப்பேன். இது எங்க அண்ணன் எழுதின கதை தான்! நீங்களும் படிச்சு பாருங்க!


நெல்லையில் பிளாகர்கள் மா நாடு!  டுபுக்கு & அம்பி அழைகிறார்!   அலை கடலென திரண்டு வாரீர்!  ஆதரவு தாரீர்!

Saturday, July 08, 2006

Pubs In Banglore



பெங்க்ளுரில் நீங்கள் ரோட்டில் தடுக்கி விழுந்தால் மூன்று இடங்களில் விழ வாய்ப்புள்ளது.

1) அனுமார் கோவில்கள் - தினமும் நான் சாஷ்டாங்கமாக விழும் இடம்.
2) பூங்காக்கள் - 1 அல்லது 2 வாரங்களுக்கு ஒரு முறை சன்டேக்களில் லால் பாகில் அதி காலை தடுக்கி விழுவேன்.
3) பப்புகள்.

நான் நெல்லை மாவட்டத்தில் பள்ளி செல்லும் காலங்களில்(ஒரு 8th படிக்கும் போது), நம்ம தோஸ்து ஒருத்தன் லீவுக்கு பெங்க்ளுர் போய்ட்டு வந்து, எங்களிடம் 70 எம்.எம் சினிமாஸ்கோப்பில் பி.வாசு மாதிரி சூப்பரா கதை விட்டான். அதில் சில துளிகள்:

1) பெங்க்ளுரில் எப்போ பார்த்தாலும் பனி மழை தான். நன்னாரி சர்பத் பாட்டில் கையில இருந்தா, நாம ஜூஸ் போட்டு, போட்டு குடிச்சுண்டே இருக்கலாம்.

(இங்கு இருக்கும் மிதமான கிளைமேட்டுக்கு தான் அந்த p.வாசு இவ்வளவு பில்டப் குடுத்தான்னு எனக்கு அப்போ தெரியாது. ஆஆ!னு வாய் பிளந்தேன்.)

2) சகஜமா நாம, தெருவுல கூட எல்லா இந்தி நடிகைகளையும் பார்க்கலாம். மாதுரி தீட்சித்தை கூட நான் பார்த்தேன்.(அப்போ, ஏக்! தோ! தீன் பாட்டு சக்கை போடு போட்டது!)

(இங்கு உலா வரும் சில சப்பாத்திகளை தான் அந்த நாதாரி பாத்துட்டு, "மாதுரி தீட்சித்"னு எங்களிடம் கதை விட்டான்னு எனக்கு இப்போ தான் உரைக்கிறது.)

3) அங்கே நிறைய பப்புகள் இருக்கு!

மூணாவது பாயிண்ட் தான் எங்களுக்கு புரியலை.

"போடா! நீ ஆக்ஸ்போர்ட் டிக்க்ஷனரியில் ஏதோ ஒரு வார்த்தையை பாத்துட்டு எஙகளிடம் ரீல் விடறியா?"னு எங்கள் செட்டில் ஒருத்தன் சுதாரித்து விட்டான்.

நானும் என் பங்குக்கு, " நான் குழந்தையா இருக்கும் போது(இப்பவும் நான் குழந்தை தான்) என் அம்மா நெய் விட்டு பிசைஞ்சு பிசைஞ்சு எனக்கு ஊட்டி விட்ட பப்பு சாதம் விக்கற ஓட்டலை தானேடா நீ சொல்ற?" இது ஒரு பெரிய விஷயமா?னு புத்திசாலிதனமா அவனை மடக்கி விட்டேன்.

அந்த கூட்டத்துக்கு நான் தான் மொட்டை பாஸ்.
என் கூட்டத்துக்கு நான் சொல்றது தான் தீர்ப்பு! செல்லாது! செல்லாது!னு அவனது மூணாவது பாயிண்டை தள்ளுபடி செய்து விட்டோம்.

அதன் பின் நான் காலேஜ் படிக்க மதுரை வந்தாச்சு. இரண்டாம் ஆண்டு படிக்கும் போது, இங்கேயும் ஒரு நண்பன் லீவுக்கு பெங்க்ளூர் போயிட்டு வந்து, "பெங்க்ளூர் கலக்கலா இருக்குடா மச்சான்! கிளைமேட்டும் சரி, அத விடு, பப்ஸ் எல்லாம் அட்டகாசமா இருக்கு டா மாப்ளே!"னு சொல்ல, நான் "சரி, இவன் ஏதோ ஐயங்கார் பேக்கரி கடையில் கிடைக்கும் பப்ஸை தான் சொல்றான்!"னு நினைத்துக்கொண்டேன்.

வேலைக்கு சென்னை வந்து ஒரு வருடம் ஓடிய பின் தான் கொஞ்சம் விவரம் புரிந்தது. அதுவும், கம்பெனியில் எதாவது பார்ட்டி வந்தா, உடனே, நண்பர்கள் "எலா! சன்முகம்! எடுறா வண்டிய!"னு நாட்டாமை விஜயகுமார் ரேஞ்சுக்கு சவுண்டு விட்டு, பப்ஸை நோக்கி படை எடுப்பார்கள்.(அங்கு சென்று வாந்தி எடுப்பார்கள், அது வேற விஷயம்!)

நீயும் வா! சும்மா வேடிக்கை பாரு!னு கெஞ்சினாலும் நான் சிக்கியதில்லை.

அதன் பின் பெங்க்ளுரில் வேலை கிடைத்தவுடன், ஊருக்கு போய் அம்மா, அப்பாவிடம் சொல்லிவிட்டு ஜாயின் பண்ணலாம்னு போனேன்.

என் பக்கத்து வீட்டுல ஒரு புண்ணியவான் இருக்கார். அவர் நின்ன இடம் தீப்பற்றி எரியும். கொளுத்தி போடுவதில் டாக்டர் பட்டம் பெற்றவர்.

சும்மா நான் லீவுக்கு போனாலே, "ஏய்! என்ன அம்பி வந்துட்ட? வேலை அவ்ளோ தானா?"னு கேட்டவர். யோவ்! லீவுக்கு வந்திருக்கேன்யா! 4 நாளுல திரும்பி போயிடுவேன்!னு நான் மட்டும் விளக்கம் சொல்லலை அவ்ளோ தான்!

"நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி!அம்பியை வேலயை விட்டு தூக்கிட்டா! அதான் திரும்பி வந்துட்டான்!'னு டமுக்கு அடித்து விடுவார் அந்த மனுஷன்.

நான் தாமிர பரணியில் குளிக்க போயிருக்கும் போது(சுமாரா ஒரு 4 மணி நேரம் ஊறுவேன்) என் அம்மா அப்பாவிடம் என்ன சொன்னாரோ தெரியாது.

நான் (ஊறி) வந்தவுடன் என் அம்மா, "இதோ பாரு! பெங்களுரில் கண்ட கண்ட இடத்துக்கேல்லாம் போக கூடாது! நல்லவாளோட சேரணும்! உனக்கு நல்ல புத்தியை குடுக்கனும்னு அந்த பகவானிடம் நாங்க வேண்டிப்போம்! நீயும் வேண்டிக்கோ! என்ன புரிஞ்சதா?"னு என்னை போட்டு தாக்க, "ஆகா! பத்த வெச்சியே பரட்டை!"னு நான் அந்த ஆள் வீட்டை பார்த்து முறைத்தேன்.

என் தம்பி, இது தான் நல்ல சமயம்னு, அம்மா! அண்ணா அத மாதிரி எல்லாம் பண்ண மாட்டான் மா! தண்ணி அடிச்சாலும், வாந்தி எடுக்க மாட்டான் மா!னு ஸேம் சைடு கோல் அடித்தான்.

அடப்பாவி! உனக்கு பேண்ட், டி.ஷர்ட், sweets எல்லாம் நான் வாங்கி தறலையா? ஏன்டா இந்த நேரத்துல பழி வாங்கற?னு நான் கெஞ்சினேன்.

அதன் பின், தென் ஆப்ரிக்காவுக்கு போகும் காந்தி ரேஞ்சுக்கு, "பெருமாள்/அனுமார் கோவில் தீர்த்தம் தவிர எதையும் நான் இதுவரை தொட்டதில்லை! இனி தொட போவதும் இல்லை!"னு டிஸ்கிளைமர் குடுத்த பின் தான் வீடு சகஜ நிலைக்கு திரும்பியது.

போன வாரம், நண்பர் ஒருவருடன் M.G.ரோடில் ரோடில் உள்ள ஒரு ரெஸ்டாரெண்டில் இரவு டிபன் சாப்பிட நேர்ந்தது. பில்லை அவர் கட்டுவார்னு நான் நினைக்க, என்னை விட பார்ட்டி படு உஷாரு. பின் இரண்டு பேரும் ஷேர் பண்ணினோம்.

மாடியில் இருந்த அந்த ஓட்டலுக்கு கீழே ஒரு பப் இருந்ததை நான் கவனிக்க வில்லை. அவர் பார்த்து விட்டு, "என்ன, அம்பி! இதேல்லாம் பாத்ருக்கீங்களா? தண்ணி அடிச்ச்ருக்கீங்களா?னு கேட்டார்.

இது என்ன, மைசூர் ராஜா அரண்மனையா? மற்றபடி, மதுரையில் இரண்டு நாளைக்கு ஒரு தரம் வைகை தண்ணீர் கார்பரேஷனில் விடுவார்கள். குடம் குடமா எங்க பாட்டிக்கு அடிச்சு குடுத்ருக்கேன்னு நான் நக்கல் விட்டதில் பார்ட்டி டென்ஷனாகி விட்டார்.

சம்போ மகாதேவா! நாம கிளம்பலாமே!னு அவஸ்தையாக நெளிந்தேன்.

அவர் விடாமல், எப்படி இருக்கு?னு சும்மா உள்ள போயி பாருங்க!னு கூட்டி போனார்.

நைட் லேம்ப் தான் எல்லா டேபிள்களிலும் போட்டிருந்தனர். ஒரே புகை மண்டலம். எல்லார் கையிலும் புகைந்து கொண்டு இருந்தது.

சிவ சிவா! ராம ராமா! சில பாரதி கண்ட புதுமை(?) பெண்களும் ஊதிக் கொண்டு இருந்தனர். சில பேர் கையில் சோம பானம் வேறு!

பாவம்! அவாளுக்கு வீட்டில் என்ன கஷ்டமோ, மாமியார் கொடுமையோ யாரு கண்டா!

"மூச்சு முட்றது! போகலாம்!"னு நான் வெளியே வந்து விட்டேன்.

ரூமுக்கு வந்ததும், ஜில்லுனு(night 10 pm) ஒரு குளியல் போட்டு அனுமார் ஸ்லோகங்கள் சொன்ன பிறகு தான் நிம்மதி பிறந்தது!
நான் UG - B.sc(chem)படித்ததால், சிகரெட், மற்றும் தண்ணியால் என்னவேல்லாம் வரும்னு நல்லா தெரியும்.

பின் குறிப்பு: அடுத்த போஸ்ட் "கும்பாபிஷேகா! ஆராதனா!"
எட்டாவது அதிசயமான ஐஸ் குட்டி நடித்த ஜீன்ஸ் படம் பார்த்து விட்டு இந்த போஸ்ட்டை படிக்கவும்.

Wednesday, July 05, 2006

அலோ! செக்! மைக் டெஸ்டிங்க் 1..2..3

மிகுந்த வேலை பளு காரணமாகவும், வேறு சில சொல்ல விரும்பாத காரணங்களால் ஏற்பட்ட மனசோர்வினாலும் நான் பிளாக்கை இழுத்து மூட நினைத்தது என்னவோ உண்மை தான்.
அர்ஜுனாவுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஒரு போஸ்ட் போட்டு, கடையை இழுத்து மூடிவிடலாம்னு நினைத்தேன். ஆனல் நடந்தது எல்லாமே உல்டா.

ஆனால் அர்ஜுனாவின் உரையாடல் அந்த முடிவை மாற்றி விட்டது.

சும்மா சொல்ல கூடாது! அட டா! இ-மெயிலில் அன்பு கட்டளைகள், மிரட்டல்கள் மற்றும் உங்களின் நக்கல் கமெண்ட்ஸ், என பய புள்ளைங்க பாச மழை பொழிஞ்சுட்டீங்க.

"விட்டெறிந்த கீரையை வழிச்சு போடுடி என் சுரனை கெட்ட வல்லாட்டி!"னு எல்லாம் நக்கல் விடறாங்க.
இந்த பழமொழிக்கு விளக்கத்தை இங்கு பார்க்கவும்.

பிளாக் உலகின் பெரிய தலை (சும்மா அஸால்ட்டா 50 கமெண்ட்ஸ் விழும்) எல்லாம் போன் போட்டு விசாரிப்பு. (இதை படித்து விட்டு தலை இப்போ மெலிதாக புன்முறுவல் செய்யும்).
அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து 12 நிமிடம் 30 செகண்ட் ஆலோசனை நடந்தது.

எல்லாம் அந்த ஷ்ரிதேவி, பூதேவி சமேத நாரயண மூர்த்தியின் தனிப்பெருங் கருணை!

யாரு அந்த தலை..? கண்டுபிடிச்சாசா? அதான்! அதே தான்!

மனித உரிமை கமிஷனில் ரிப்போர்ட் பண்ணுவேன்! என்று எல்லாம் அன்பு மிரட்டல்கள் வந்தன.

கைபுள்ள சொல்ற மாதிரி இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி தான் உடம்பு ரணகளமா இருக்கு!

இதற்கு நடுவில், அம்பிக்கு ஒரு தங்கமணி(அக்னி நட்சத்திரம்) வர போறாங்க! அதான் காரணம்!னு ஒரு நல்லவன் கிளப்பி விட்டதில் "அப்படியா? எந்த ஊரு? என்ன பேரு?"னு விசாரிப்புகள்.

இதுவரை அப்படியேல்லாம் ஒன்னும் இல்லை. 18 பட்டிக்கும் வீட்டிலிருந்து சேதி பறந்திருக்கிறது. அட! ஒரு சக பிளாக்கர் கூட எனக்காக பொண்ணு தேடறாங்க பா!

அப்படியே வர வேண்டியவங்க வந்தாலும், அவங்களையும் சேர்த்து பிளாக் எழுத வச்சுட மாட்டோம்? he hee,I'll dictate, she will type.(ஆணாதிக்கம் ஒழிக!னு இப்பவே
சுபா கத்தறாங்க பாரு! ஒரு பன்னீர் சோடா ஒடச்சு ரெடியா வைங்க பா!

"என்னை மீறி யாரு வரானு அதையும் தான் பார்த்துடுவோம்!"னு அசின் ஒரு பக்கம், கோபிகா மறுபக்கம் மிரட்டல் விடுத்து உள்ளனர். நயன்,மற்றும் ஐஸ் குட்டிக்கு இன்னும் விஷயம் தெரியாது. (kutti, arjuna, syam, karthi, pls note the point your honour!)
சே! அசினுக்கு லிஸ்ட் கூடிட்டே போகுதுடா சாமி! இத சமாளிக்கறதே பெரும் பாடா இருக்கு!

பூரி கட்டை, தோசை திருப்பி போன்ற திவ்ய ஆயுதங்களால் நான் என்கவுண்டர் செய்யபடுவது உறுதியாகி விட்டது.(யாரு தான் இத எல்லாம் கண்டுபிடிச்சானோ?)

சரி, மீண்டும் ஜே.கே.பி! மாதிரி புத்தூணர்வுடன் இதோ எழுந்து விட்டேன்.

நாகை சிவாவின் கண்ணி வெடிகளை பற்றிய போஸ்ட் படித்ததும், நமக்கும் ஒரு சின்ன ஆசை. சீரியஸான மேட்டரை தொட்டு ரொம்ப நாள் ஆச்சே!
Men In Black - "The Elite NSG Commondos" பற்றி ஒரு 2 or 3 போஸ்ட் போடலாம்னு இருக்கேன். இப்போ தான் ஸ்கெட்ச் போட்ருக்கேன். பார்ப்போம்.

சரி, நம்ம பிளாக், எந்த அளவுக்கு மக்களிடம் அங்கீகாரம் பெற்றுள்ளதுனு தெரிந்து கொள்ள ஒரு சின்ன நப்பாசை. அதன் விளைவு தான் முந்தய பதிவு.

பிளாக் பிரமோஷன் டெக்னிகில் இது அடுத்த கட்டம். மார்கெட்டிங்க்ல இதை Brand Recoginisation என்று சொல்வார்கள். பரவாயில்லை, ரிஸல்ட் நல்லா தான் இருக்கு,

பின்குறிப்பு: அடுத்த போஸ்ட்
Pubs In banglore 

Thursday, June 29, 2006

என்ன தவம் செய்தனை!

2 வாரமாக ஒரே யோசனை. இந்த பிளாக் எழுத ஆரம்பித்து 5 மாதங்கள் ஆகி விட்டது. ஒரு 42 பதிவுகளும் போட்டாச்சு. நாலு பாசக்கார மக்களும் வந்து போறாங்க.
ஒரே மெக்கானிக்கலாக செல்லும் வாழ்க்கையில் இந்த பிளாக் எழுதுவது ஒன்று தான் மகிழ்ச்சியை தந்தது.

போதுமே! பிளாக்கை இழுத்து மூடி விடலாமா?

வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை பற்றி தீவிர சிந்தனை. நாம எழுதலைனா ஒன்னும் குறைந்து விடாது!

கதம்! கதம்!னு சொல்லிவிடலாம் என்று கிட்டத்தட்ட முடிவுக்கு வந்தாச்சு.

இந்த நிலையில், நேற்று ஒரு ISD- கால். என்னடா! நாளைக்கு தானே கான்பிரன்ஸ் கால்!னு நம்ம தல சொல்லிட்டு போச்சு! அதுவும் இப்படி நம்ம மொபைலுக்கு எல்லாம் கூப்பிட மாட்டாங்களே!னு குழப்பம்.

சும்மா வெள்ளைகார துரை மாதிரி, இங்லிபீஸ்ல என் பெயரை உச்சரித்து, நீங்க நல்ல பிளாக் எல்லம் எழுதறிங்க!னு பாராட்டு.

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் (வடிவேலு மாதிரி இழுக்கவும்).

"யாருப்பா, நீ?"னு கேட்டேன்.
அட! நம்மஅர்ஜுனா!

நான் எழுதிய பதிவுகள், (சில கமண்ட்ஸ் கூட) பலதை வரிசையாக சொல்லி, சூப்பரு! எப்படி இதேல்லாம்?னு கேட்க கேட்க, எனக்கு பேச்சே வரலை. ரேவதி சொன்ன மாதிரி, "வெறும் காத்து தேங்க்" வந்தது!

நீண்ட நாளாக பழகியது போன்ற ஒரு உரையாடல், சினேகம். பல பல விஷயங்கள் பேசி விட்டு, "நல்லா எழுதுங்க!, உங்க Tag பாக்கி இருக்கு, ஆராய்ச்சி பணிகள் அதிகமா இருப்பதால் முடியவில்லை!"னு அர்ஜுனா சொல்ல, சொல்ல, எனக்கு "இப்படி ஒரு நல்லவனா?( நீ தான் அர்ஜுனா!)னு ஆச்சர்யம்.

இந்த ஒரு சந்தோஷம் போதுமே வாழ்க்கை முழுதும்! இனி என்ன வேண்டும்?

"ஜப்பான்லேந்து சாக்கிசான் கூப்டாக!
அமேரிக்காலேந்து மைக்கேல் சாக்சன் கூப்டாக!
லண்டன்லேந்து அர்ஜுனா கூப்டாக!!"னு இனி நானும் கோவை சரளா மாதிரி சொல்லிக்கலாம்.

நன்றி!னு ஒரு சொல்லில் உன்னை சிறியவனாக்க விரும்ப வில்லை அர்ஜுனா!

என்றேன்றும் நன்றியுடன்,
அம்பி

Saturday, June 24, 2006

ஆறு, மனமே ஆறு!

சில கேள்விகளுக்கு பதில் தெரியாம நான் பல தடவை முழிச்சதுண்டு. அதுல சில கேள்விகளை இங்கே லிஸ்ட் பண்ணிருக்கேன். பாருங்க,

ஒன்னு: அது என்னங்க, எல்லா பொண்ணுகளுக்கும் டெடி பியர்(கரடி பொம்மை) ரொம்ப பிடிக்குது? ச்ச்ச்சோ ச்வ்வ்வீட்ட்ட்!னு பில்டப் வேற! பேசாம கரடி பொம்மையா பொறந்து இருக்கலாம் போலிருக்கு!

டி.ராஜேந்தர் கூட டெடி பியர் மாதிரி தான் இருக்காரு, எங்கே யாராவது அவர் கன்னத்தை கிள்ளி, ச்ச்ச்சோ ச்வ்வ்வீட்ட்ட்!னு சொல்லி பாருங்களேன்!
"நானா கரடி?
நீ தான் என் எதிரி!
அடிச்சா ஆயிடுவ உதிரி!
ஓடி போ பதறி!"னு அடுக்கு மொழியில குதறி விட மாட்டார் மனுஷன்!

இரண்டு: இப்ப அனேகமாக எல்லா செல்போன் கம்பெனிகளும் நீங்க வாழற வரைக்கும்(Lifetime) இன்கம்மிங்க் பிரீ!னு அறிவிச்சாலும் அறிவிச்சானுங்க, தொல்லை தாங்க முடியலை.

அதுலயும் இந்த CUG (Closed User Group)வசதி வேற இருந்தா அவ்வளவு தான். ஆபிஸ்ல, அடுத்த அடுத்த கேபினுக்கு எல்லாம் போன் போட்டு, சாப்பிட போகலாமா? டீ குடிக்க போகலாமா?னு ஒரே டார்ச்சர் தான். இதுலயும் கேள்ஸ் தான் முண்னணி.
அவங்க குசு குசுனு பேசற விதம் இருக்கே! யப்பா! எதிராளி டென்ஷன் ஆயிடுவான். (ஒன் பிலாக் காப்பி பிளீஸ்!னு ஒரு விளம்பரம் கூட வந்ததே!)

இதுல ஆண்களுக்கு செல்போன்ல பேசவே தெரியாது!

தண்டயார்பேட்டையில தீப்பொறி ஆறுமுகம் (ஒரு செந்தமிழ் பேச்சாளர், காது குடுத்து கேக்க முடியாது) கட்சி மீட்டிங்க் மாதிரி பேசுவாங்க. இப்படி தான் நான் மதுரையில பஸ்ல போகும் போது, பக்கத்துல இருந்த ஒருத்தன் அவன் பொண்ணு பூப்புனித நீராட்டு விழாவுக்கு அவன் சாதி சனத்துக்கு செல் போன்ல முதல் தகவல் சொன்னான். மொத்த பஸ்ஸுக்கும் கேட்டது. பஸ்ஸுல இருந்த சில பேர் அவன் சொல்ல, சொல்ல, அட்ரஸ் எல்லாம் குறிச்சுண்டா.

இதுக்கு நேர்லயே போய் பேசிட்டு வந்துடலாம்.

இந்த செல் போன் இல்லாம நாம வாழவே முடியாதா? அண்ணா யுனிவர்சிட்டியில ஆப்பு அடிச்சது சரி தான்!

மூணு: மெடிக்கல் ரெப்/மார்கெட்டிங்க் துறை என்றாலே டை கட்டிண்டு தான் உலா வரனுமா? நல்ல மே மாத வெயிலுல கூட அவர்கள் டை கட்டிண்டு போறத பாத்தா எனக்கு பாவமா இருக்கும். யாரு இந்த ரூல்ஸ போட்டா?

நாலு: இந்த இந்தி கார பசங்க எல்லாம் மொழுக்குனு மீசைய எடுத்துடுவாங்க. இந்தி பேசனும்னா மீசை வெச்சுக்க கூடாதா? என்னையும், "மீசையை எடுத்துடு"!னு இந்த ரசகுல்லா ரொம்ப டார்ச்சர் குடுத்தது. முடியவே முடியாது! நாங்க எல்லாம் பாரதி வம்சம். மீசையை எடுத்தா எங்க அம்மா ரேஷன் கார்டுலேருந்து என் பெயரை எடுத்துடுவா, என்னை வீட்டுகுள்ளவே விட மாட்டா!னு கண்டிப்பா சொல்லிட்டேன்.

அது மட்டுமா, அசின் ஆத்திரப்படுவா! ஐஸ் குட்டி அழுவா! கோபிகா கோச்சுப்பா! நயன் தாரா நக்கல் விடுவா!னு உங்க எல்லாருக்கும் தெரியாதா என்ன?
(அசினுக்கு ரொம்ப போட்டி கூடிடே போகுது, அதான் ஒரு சேப்டிக்கு கோபிகா, நயன் எல்லாம்).

ஐந்து: இந்த ஜீன்ஸ் பேண்டை பார்த்தாலே துவைக்கனும்னே தோண மாட்டேங்குதே, அது ஏன்? இந்த விஷயுத்துல பேச்சுலர் பசங்களை அடிச்சுக்கவே முடியாது. 2 மாதம், 3 மாதம்னு ஒரே ஜீன்ஸ போட்டு அடிப்பானுங்க பாரு! அதுக்கு வாய் இருந்தா அழுதுடும். நான் லீவுக்கு ஊருக்கு போனா, என் அம்மா கேட்கிற முதல் கேல்வி, "எப்போ ஜீன்ஸை தோய்ச்ச?"


ஆறு: நாம ஸ்கூல் படிக்கும் போது, எல்லாருக்கும் ஒரு ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது லெட்டர் ரைட்டிங்க் சொல்லி தருவாங்க. முதல் லெட்டர் என்ன சொல்லுங்க பார்ப்போம்.
லீவு லெட்டர் தான். "As i'm suffering fever" எழுதாத ஆளுங்களே கிடையாது. இன்னிக்கும் ஆபிஸ்ல லீவு வேணும்னா அதே பொய் தான் சொல்ல வேண்டி இருக்கு. மேக்னி ஷோ படம் பார்க்க போறேன்! அதனால லீவு வேணும்னா சொல்ல முடியும்? ஒரு சேஞ்சுக்கு, ஏன் வேற லெட்டர் எழுத எல்லாம் சொல்லி தர மாட்டேங்கிறாங்க?

இந்த ஆறு மனமே ஆறு! விளையாட்டுக்கு, என்னை இழுத்து விட்ட புண்ணியம் ஒரு
சின்ன பெண்ணை போய் சேருகிறது.

நான் ஏற்கனவே என்னை பத்தி
நச்சுனு நாலு விஷயங்கள் சொல்லிடதுனால, ஆறு கேள்விகளா இங்கு கேட்ருக்கேன்.

ஒரு ஆறு பேரை இழுத்து விடுவோம் முடிவு பண்ணி,

1) சுபா - ஒரு நாளைக்கு ஒரு பிளாக் போடும் பிளாக் உலக இளம் புயல். ( நாளைக்கே இத பத்தி இவங்க போஸ்ட் போட்ருவாங்க, பாருங்க!)

2) Ms.Congeniality - பிளாக் உலகம் கண்டேடுத்த பத்மா சுப்ரமணியம். இவங்க எழுதறதும் ரொம்ப நளினமா இருக்கும்.

3) சச்சின்(கோப்ஸ்) - செம காமெடியா எழுதுவாரு. சமையல் கலையில அறுசுவை நடராஜன்.

4) விஜி - மாசத்துக்கு ஒரே ஒரு போஸ்ட் போடும் குழந்தை. பேசாம இவங்க பிளாக் யுசர் ஐடி, பாஸ்வேர்டை தந்தாங்கனா, நாமளே போஸ்ட் போட்டுடலாம்.(அந்த பொறுப்பை சுபா பார்த்துப்பாங்க)

5) கோப்ஸ் - ரொம்ப நல்ல்ல்லவன். திருப்பூர் பா.சிதம்பரம். என்னையும் குருவா ஏற்று கொண்ட சிஷ்யன்.

6) அர்ஜுனா - ஏடாகூடமா போஸ்ட் போடற ஆளு. இவர் முடி வெட்டிடுண்டதை கூட பிளாக்ல சொல்லிடுவார்.

நீங்கள் உங்களை பத்தி ஆறு விஷயங்கள் சொல்லலாம், என்னை மாதிரி ஆறு கேள்விகள் தான் கேக்கனும்னு இல்லை.

முதலில் இந்த வேதா, ஷ்ரி, 'கொடுமை'உஷா இவங்களை இழுக்கலாம்னு நினைத்தேன். அப்புறம் நான் தர்ம அடி வாங்க வேண்டி இருக்கும். எதுக்கு வம்பு?

இந்த ஆறு பேர் தான் எழுதனும்னு இல்லை. ஆறு கோடியே ஐம்பது லட்சம் தமிழர்களும் எழுதலாம். தப்பில்லை.

Tuesday, June 20, 2006

பாட்டு பாட வா - II

Part-1

மத்த டீம் எல்லாம் புது, புது பாட்டா செலக்ட் பண்ணியிருந்தனர். ஒரு சேஞ்சுக்கு, நாம ஏன் பழைய பாட்டு பாடக்கூடாது?னு தோணியது.
என் டீம்ல இருந்த ஒருத்தன் உடனே, "ஆயிரத்தில் ஒருவன்" படத்திலிருந்து "அதோ அந்த பறவை போல" பாடலாம்! அதுலயும் நிறைய தடவை லலா! லா! எல்லாம் வரும்னு உருப்படியா ஐடியா குடுத்தான்.

உடனே மளமளவென காரியத்தில் இறங்கினோம். ஒருத்தன், நெட்டுலேருந்து பாட்டை எம்.பி.3யா டவுன்லோட் பண்ணி மொபைல் போனுக்கு கொண்டு வந்தான். இன்னொருவன், பாட்டு வரிகளை ப்ரிண்ட் அவுட் எடுத்து பனகல் பார்கில் சரவணா ஸ்டோர்ஸ் நோட்டிஸ் மாதிரி மத்தவர்களுக்கு வினியோகம் செய்தான். எதுக்கு தெரியுமா? கரெக்ட்டா, எந்த எடத்துல, எத்தனை தடவை லலா! லா! பாடனும்னு தெரியனும் இல்ல? அதுக்கு தான்!

நாங்களும், ரகசியமா பிராக்டிஸ் பண்ண ஆரம்பிச்சோம்.
எங்க டீம்ல ஒரிசாகாரர் ஒருத்தர் இருந்தார். தனி தவிலுக்கு,இந்தி பாட்டு பாடலாம்னு முடிவு பண்ணி, "ஓ! எக் லடிக்கி கோ தேக்கா தோ ஏஸா லகா!"னு 1942-லவ் ஸ்டோரி (R.D பர்மனின் கடைசி படம்)யை செலெக்ட் பண்ணிவிட்டேன். அவருக்கு அருமையான குரல்.

ஏதோ மிஸ்ஸாகிற மாதிரி எனக்கு ஒரு உறுத்தல். நாங்க தலைகீழா நின்னு பாடினா கூட டி.எம்.ஸ் மாதிரி பாட முடியாது. அந்த பாட்டு வேற நல்ல பாட்டு. நம்ம குறை தெரியாம இருக்கனும்னா பார்கற மக்களை திசை திருப்பனும்! ஏதாவது டகால்டி வேலை பண்ணிட வேண்டியது தான்!னு முடிவு பண்ணினேன்.

நாங்கள் எதிர்பார்த்த நாள் வந்து சேர்ந்தது. காலையிலிருந்தே பலப்பல போட்டிகளில் எங்கள் டீம் நன்னா புகுந்து விளையாடியது. மதியம் நடந்த எறிபந்து போட்டியில், எல்லா பயலும் மேனேஜருக்கே குறி வெச்சு எறிஞ்சானுங்க. (he, hee,எறிய சொன்னதே நான் தானே!)

மதியம் லஞ்ச்க்கு வந்த ஐஸ்கீரீமை பாட்டு பாடற கோஷ்டி யாருமே தொடலையே! குரல் கெட்டு விடுமாம்.

மாலை வெயில் தாழ்ந்ததுக்கு அப்புறம், கடற்கரை மணலில் எல்லாரும் சேர் போட்டு உக்காச்சுண்டா. முதலில் தனி தவில்களின் போட்டி ஆரம்பிச்சது. VGP-ஆர்கெஸ்ட்ரா சப்போர்ட் வேற கிடைத்தது.

முதலில் எல்லா பெரிய தலைகலையும் ஜட்ஜுகளா போடலாம்னு முடிவாச்சு. ஆனா, ஒரு தீவிரவாதி கும்பல், "எங்க பக்கம் தீர்ப்பு சொல்லலைனா, ஒரு பிராஜக்ட்டும் கிளைண்டுக்கு டெலிவரி ஆகாது. அப்படியே ஆனாலும், 1 வரிக்கு 4 எரர் வரும், எப்படி வசதி?"னு அன்பாக மிரட்டியதால் பெரிய தலைகளின் உள்துறை அமைச்சர்களை (மனைவி மார்களை) "நல்ல தீர்ப்பு சொல்லு தாயி!"னு சேர் போட்டு உக்கார வெச்சோம்.

பல பாம்பே ஜெயஷ்ரீகளும், சுவர்ண லதாக்களும் வசீகராவையும், அழகிய அசுரனையும் கூவி,கூவி கூப்பிட்டு கொண்டு இருந்தனர். சுருதி, தாளம் எல்லாம் சேரவேயில்லை.

எங்க டீம் ஒரிசாகாரர் போய் பட்டய கிளப்பிட்டார்.

போட்டி ரிஸல்ட் உடனே அறிவிக்கப்பட்டது. நாங்க தான் முதல் இடம்.
கடுப்பாகி போன மத்த டீம், நாங்க கோஷ்டி கானத்தில் ஒரு கை பாத்துக்கறோம்!னு உறுமினர்.

எம்.டி "நான் பாடறேன்! பார்க்க வாங்க!"னு தன் அப்பா, அம்மா, மனைவி, மச்சினினு குடும்பத்தையே கூட்டி வந்திருந்தார். இவ்வளவுக்கும் அவர் ரண்டக்க! ரண்டக்க!! கோரஸ் தான் பாடினார்.

ஒரு வழியா போட்டி ஆரம்பித்தது.
முதலில் "சகலகலா வல்லவன்" இளமை இதோ! இதோ! பாட்டு பாடியது ஒரு கோஷ்டி. (அதுலயும் லலா லலா வருமே!)
ரொம்ப நல்லா பாடினாங்க.

ரெண்டாவதா, அன்னியன் உலா வந்தார். எம்.டி. மனைவி விழுந்து, விழுந்து சிரிச்சாங்க.

'Ahem' மூணாவதா, நம்ம பாட்டு! உஷாரா மேடை ஸ்கீரினை போட சொன்னேன். பேக்ரவுண்ட் மியூசிக் ஒலிக்க ஆரம்பித்ததும், திரை விலகியது. மேடையில நாங்க ஒருத்தருமே இல்லையே!
திமு திமுனு ஒரு பத்து பேரு, மேடைக்கு சைடுலேருந்து ஓடி வந்து மேடை ஏறினாங்க. எல்லோரும் ஒரே மாதிரி 5 பீளிட் வச்ச பேகி பேண்ட், கை இல்லாத பனியன், தலையில குல்லா!
லலா லா! லா! லலா லா லா!னு பாடிகிட்டே மேடையில அங்கேயும், இங்கேயும் ஓடினாங்க.

"அதோ! அந்த பறவை போல வாழ வேண்டும்!
இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்!"னு மேடைக்கு சைடுலேருந்து ஒரு கயிற்றில் தொங்கியபடி இப்போ தான் எம்.ஜி.ஆர்(அம்பி) என்ட்ரி. எனக்கும் அதே காஸ்டியூம் தான்.

பொதுவா, எம்.ஜி.ஆர் மாதிரி ஆடறது ரொம்ப ஈஸி. இடது கைய 4 தடவை தூக்கனும், வலது கைய 8 தடவை தூக்கனும். கையை தூக்கும் போது மறக்காம தலையை ஆட்டனும். ஒரு இடத்துலயே நிக்க கூடாது. கையை பின்னாடி கட்டிண்டு வளைஞ்சு வளைஞ்சு ஓடணும். எல்லா கூத்தும் தெளிவா பண்ணினேன்.

ஒருத்தனை நம்பியார் மாதிரி செட் பண்ணினேன். அவனும், கையை பிசைந்து கொண்டு, கையில வாள் எல்லாம் வச்சுண்டு தலைய, தலைய ஆட்டிண்டு,அங்கேயும், இங்கேயும் நடந்தான். ஒரு சரணம் முடிஞ்சதும், எம்.ஜி.ஆரும், நம்பியாரும் வாள் சண்டை எல்லாம் போட்டனர். எப்பவுமே, எம்.ஜி.ஆர் மூணு தடவை அடி வாங்கிட்டு தான் திருப்பி அடிப்பார். அந்த கூத்தும் நடந்தது. என் குரல் ஏதோ பரவாயில்லை. டி.எம்.ஸ் மாதிரி எல்லாம் என்னால பாட முடியுமா? அதான், இப்படி ஒரு டகால்டி வேலை.

கடைசி லலா லா முடிஞ்சதும், எங்க டீம்ல ஒருத்தன், "ரீப்பீட்ட்ட்டு"னு கத்தினான். மறுபடி ஒரு லலா லா பாடினோம்.

மேடைக்கு கீழே கூட்டம் விழுந்து விழுந்து சிரிக்குது. ஜட்ஜுகளும் சிரிப்பை அடக்க முடியாம தவிக்கறாங்க.
எம்.டி.யின் அப்பா தீவிர எம்.ஜி.ஆர் ரசிகராம். அவரால சந்தோஷத்தை கட்டுப்படுத்த முடியலை. "பாட்டு பாட சொன்னா, ஒலியும் ஒளியும் காட்றீங்களே பா!"னு ஓடி வந்து எங்க டீமை அணைத்துக் கொண்டார்.

நம்பியாரை நோக்கி எங்க ஆபிஸ்ல வேலை பார்க்கற ஒரு பொண்ணு வந்தா. அவளுக்கு நாங்க சரோஜா தேவினு பட்டபெயர் வெச்சு இருந்தோம். கண்ணுக்கு இட்டுகற மை காது வரைக்கும் போகும், அதான் அந்த பட்டபெயர். நம்பியார் அந்த பொண்ணை டாவடிச்சுகிட்டு இருந்தான்.

சரோஜா தேவி: நீங்க சரியான மாங்கா!னு இத்தனை நாளா நினைச்சேன். இவ்ளோ நல்லா டான்ஸ் எல்லாம் ஆடுவீங்களா? நடிப்பும் ரொம்ப நல்லா இருந்தது.

நம்பியார்: (வழிந்தபடி) ரொம்ப தேங்க்ஸ்ங்க! உங்களுக்கு பிடிச்சு இருந்ததா?

சரோஜா: (பதிலுக்கு வழிந்தபடி) ம்ம்! ஆமா! ரொம்ப பிடிச்சு இருந்தது.(அட்ரா சக்கை! அட்ரா சக்கை!)

நம்ம பயலுக தான், கோடு காட்டினா போதுமே, ஜல்லி அடிச்சு, தண்ணி தெளிச்சு, தார் ஊத்தி, NH-7 ரோடே போட்ருவாங்களே! அப்படியே பிக்கப் பண்ணிட்டான் பையன். நான் பெனால்டி கார்னர்லேருந்து பந்தை பாஸ் பண்ணினேன், கரெக்ட்டா நம்பியார் கோல் போட்டுட்டான்.

நம்பியாரா நடிக்கவே மாட்டேனு அடம் பிடிச்சான். இமேஜ் ஸ்பாயில் ஆயிடுமாம். நான் தான் நல்ல வார்த்தை சொல்லி சம்மத்திக்க வெச்சேன்.

போட்டி முடிவு அறிவிக்கப்பட்டது. சகலகலாவல்லவனுக்கு முதல் இடம், எங்களுக்கு இரண்டாம் இடம், அன்னியனுக்கு மூன்றாம் இடம். எம்.டி.யின் அப்பா தனியாக எங்கள் டீமுக்கு ஆயிரம் ரூபாய் பரிசளித்தார். மொத்த போட்டிகளிலும் வாகை சூடி நாங்கள் சிறந்த டீமாக தேர்ந்தெடுக்கப்பட்டோம். குஷி தாங்காமல் என் அணியினர், என்னை தூக்கி, தூக்கி போட்டு பிடித்து, தங்கள் விசுவாசத்தை காட்டினர். பரிசுப் பணம் 15 ஆயிரம் தேறியது.

ஓட்டல் போகலாம், தீர்த்தம் சாப்டலாம்னு ஆளாளுக்கு யோசனை.

தாம்பரத்தில் உள்ள தொண்டு நிறுவனத்துக்கு உதவி அளிக்கலாம்னு நான் முன்மொழிந்ததை ஏக மனதாக ஏற்று கொண்டனர். இரண்டாம், மூன்றாம் இடத்தை பெற்ற அணிகளும் எங்களோடு சேர்ந்து கொண்டது. எம்.டி கையாலேயே, அந்த நிதியை நன்கொடை அளித்தோம். எம்.ஜி.ஆர் பாட்டு பாடிட்டு நன்கொடை அளிக்கலைனா நல்லாவா இருக்கும்? தர்மம் தானே தலை காக்கும்!

2 நாள் கழித்து, ஆபிஸ்லேயே திரை கட்டி, டெண்ட் கொட்டகை மாதிரி படம் போட்டு காட்டினர். சரோஜா தேவியும், நம்பியாரும் அருகருகே அமர்ந்து படம் பார்த்தனர். நாங்க அவங்களை பார்த்து கொண்டு இருந்தோம். போன நவம்பரில், இரு வீட்டார் சம்மததுடன் நம்பியாருக்கும், சரோஜா தேவிக்கும் டும் டும் டும்.

பின் குறிப்பு: இப்போ சரோஜா தேவி ஐந்து மாதமாம். (ஆனாலும், நம்பியார், ரொம்ப தான் பாஸ்ட்டு). பையன் பொறந்தா என் பெயர் தான் வைக்க போறானாம்! "ப்ளீஸ் அதேல்லாம் வேண்டாம்!"னு சொல்லிட்டேன்.

Thursday, June 15, 2006

பாட்டு பாட வா!

இந்த நிகழ்வும் (கூத்தும்), சென்னை கம்பெனியில் நடந்தது தான்.

வருடா வருடம் அப்ரைசல் வருதோ இல்லையோ, கம்பெனி ஆண்டு விழா கரெக்ட்டா வந்து விடும். போன வருடமும்,அப்படி தான்.

பொதுவாக, கடற்கரை சாலையில் உள்ள ஏதாவது ஒரு ரிஸார்ட்டில் தான் நடக்கும். இந்த தடவை, VGP-கோல்டன் பீச்சீல் நடத்தலாம்னு சாமி (எம்.டி) வரம் குடுக்க, பூசாரியும் (HR) தலையசைக்க, கும்பமேளாவுக்கு நாள் குறிக்கப்பட்டது.

இந்த போட்டி, அந்த போட்டினு பல போட்டிகள் இருந்தாலும், எல்லார் கண்ணும் பாட்டு போட்டி மேல தான். விஷயம் இருக்கு அதுல.
கிட்டத்தட்ட, முக்கால் வாசி பேர், பாத்ரூம் பாடகர்கள், எங்கள் எம்.டி உட்பட. தங்கள் பாடும் திறமையை நீரூபிக்க இதை விட ஒரு நல்ல சந்தர்ப்பம் வராதுனு எல்லாருக்கும் புரிஞ்சு போச்சு.
எனவே பாட்டு போட்டியை
1) தனி திறமை
2) கூட்டத்தோடு கோவிந்தானு 2 விதமா பிரிச்சா.

100+ நபர்களை 8 டீமா பிரிச்சா.

ரொம்ப தில் உள்ளவர்கள் மட்டும் தனி திறமைக்கு நான் தயார்!னு மார் தட்டினா.
பங்க்ஷனுக்கு 2 நாளைக்கு முன்னரே கச்சேரி களை கட்ட தொடங்கியது.
எம்.டி.யும் ஒரு டீம்ல இருந்ததால், ஆபிஸ்ல 2 நாளைக்கு ஒரு வேலையும் நடக்கலை.

மேனேஜர் யாராவது தப்பி தவறி பிராஜக்ட் ஸ்டேடஸ் கேட்டா, "அவன நிறுத்த சொல்லு! நான் நிறுத்தறேன்"னு நாயகன் டயலாக் பேச ஆரம்பிச்சுட்டானுங்க எங்க பசங்க.

என்ன பாட்டு பாடலாம்?னு ஒரு பெரிய ஆராய்ச்சியே நடந்தது.
எம்.டி டீம், உஷாரா, "ரண்டக்க! ரண்டக்க!" பாட்டை காப்பி ரைட் வாங்கி விட்டது. 2 நாளைக்கு எம்.டி ரூம்லேயே, ஒரே ரண்டக்க! ரண்டக்க! பிராக்டிஸ் தான்.

இதுல சில டீம், "நாங்க விழா மேடையில தான் பாட்டை அறிவிப்போம்!"னு ரொம்ப ரகசியமா பிராக்டிஸ் பண்ண ஆரம்பிச்சுட்டா.

எனக்கும் ஒரு டீம் வந்து சேர்ந்தது. டீம்ல ஒரு லேடி மெம்பர் கூட கிடையாது. பொதுவா, கேள்ஸ் குரல் கும்பல் கோரஸ்ஸுக்கு எல்லாம் நன்னா இருக்கும்.

அது மட்டும் இல்லை, என் டீம்ல சொல்லி வெச்ச மாதிரி எல்லா பேரும், நாங்க பாத்ரூம்ல மட்டும் தான் பாடுவோம்!னு சத்தியம் பண்ரா. இதுக்காக, விழா மேடையில் தோட்ட தரணியை கூப்பிட்டு பாத்ரூம் செட்டா போட முடியும்? அப்படியே போட்டாலும், நாங்க குளிச்சுண்டே தான் பாடுவோம்!னு சொன்னா என்ன பண்றது?

சரி, டீமுக்கு தலைவரா போயிட்டோம், நாம தான் சமாளிக்கனும்! அதோட மட்டும் இல்லை, நாம தான் மார்கழி மாத பஜனையில் எல்லாம் பாடி இருக்கோமே! நம்ம பாட்டை மெச்சி, எக்ஸ்ட்ரா பொங்கல் எல்லாம் தந்தாளே!னு ஒரு அசட்டு தைரியத்துல, நான் பாத்துக்கறேன்!னு சொல்லிட்டேன்.

என் கோஷ்டியும், "தல! நீ அப்டியே முன்னால பாடிட்டே போ தல! நாங்க பின்னாடியே, லல்லல் லா பாடிட்டே வரோம் தல!"னு கைப்புள்ளையை ஏத்தி விட்ற மாதிரி ஏத்தி விட்டானுங்க.
அடுத்து, என்ன பாட்டு பாடலாம்னு ஒரே யோசனை.

இவனுங்க லல்லல் லா மட்டுமே பாடனும்னா, அது கண்டிப்பா விக்ரமன் & S.A.ராஜ்குமார் பட பாடல்கள் தான். ஏன்னா, அவர் படத்துல தான், முதலில் ஆண் குரலில் ஒரு பாட்டு வரும், பின் அதே பாட்டு பெண் குரலில் வரும். பின் ஆண்,பெண் ரெண்டு பேர் குரலிலும் அதே பாட்டு வரும். அந்த பாட்டோட பல்லவி மட்டும்
"லல்லல்லா லாலே லல்லல்லா!"னு படம் முழுக்க வரும். (ரோஸாப்பூ சின்ன ரோஸாப்பூ!னு நீங்க பாடினா, அதுக்கு நான் பொறுப்பில்லை)

தியேட்டரிலிருந்து,வீட்டுக்கு போய் ஒரு வாரம் வரைக்கும் நம்ம காதுல ஒரே லல்லல்லா தான் கேட்கும்.
ஆகவே, அப்படிபட்ட பாட்டு எது?னு நெட்டுல தேடினோம்.(இதுக்கு தானே ஆபிஸ்ல நெட் கனக்க்ஷன் எல்லாம்!)

மத்த டீம் எல்லாம் வேட்பாளர் பட்டியல் அறிவிச்சு, பிராக்டிஸ் எல்லாம் பண்ணி பின்னி பெடலெடுக்க ஆரம்பிச்சுட்டானுங்க.

பாத்ரூம் பாடகர்கள் எல்லாம் சரியான மூடு வரணும்னு கும்பல் கும்பலா ஒரே பாத்ரூமுக்குள்ள போயிண்டு, "ரண்டக்க! ரண்டக்க!"னு பாடி பிராக்டிஸ் பண்ணி பக்கத்து பாத்ரூமுக்குள்ள போறவாளை பயமுறுத்த ஆரம்பிச்சுட்டா.

இது போதாதுனு,
"வருது! வருது! விலகு! விலகு! வேங்கை வெளியே வருது!!"னு தனி தவில்கள் உபத்ரவம் வேற! (ரெஸ்ட் ரூம்ல பாடற பாட்டா டா இது?னு மத்தவங்க மொத்திட்டானுங்க.)

எங்களுக்கு,ஒரு பாட்டும் திருப்திகரமா இல்லை. போட்டிக்கு 2 நாள் தான் இருக்கு.

"என்ன தல, ஆட்டத்துல நாம இருக்கோமா, இல்லையா? ஜெய்காட்டியும் பரவாயில்லை, டெபாசிட்டே இழந்துடுவோம் போலிருக்கே!"னு என் டீம்காரர்களே சந்தேகபட ஆரம்பித்து விட்டனர். இது போதாதுனு எதிர் கட்சிகாரர்களின் நக்கல் வேற!

இந்த நிலையில் தான், நச்சுனு அந்த பாடல் நினைவுக்கு வந்தது.

அது எந்த பாடல்னு அடுத்த போஸ்ட்டுல பார்ப்போமா?

Thursday, June 08, 2006

ஓ! பார்ட்டி, நல்ல பார்ட்டி தான்!

நான் சென்னை தரமணியில் உள்ள ஒரு கம்பெனியில் வேலை பார்த்த போது நடந்த நிகழ்வு இது.

பிராஜக்ட் மேனேஜர், பிராஜக்ட் டெலிவரி நெருங்குகிறதுனு ஏதோ அவர் மனைவி டெலிவரி டேட் நெருங்குவது போல கிட்டத்தட்ட 4 டீம்களை சொடுக்கி விட்டு கொண்டிருந்தார்.

கல்யாணமானவர்கள் எல்லாம், 6.30 மணிக்கு, "சந்தைக்கு போனும், ஆத்தா வைய்யும்"னு என்னை மாதிரி பேச்சுலர் அப்பாவி பசங்க (இ.வா பசங்க) தலையில மிச்ச வேலைகளை கட்டி விட்டு, நைசா கம்பி நீட்டிடுவாங்க.

நாங்களும், நைட்டு லேட்டா கிளம்பினா, கம்பேனி செலவுல சரவண பவன் பிரியாணியும், சப்பாத்தி, சென்னா மசாலா சாப்டலாம்னு சப்பு கொட்டிண்டு மாங்கு மாங்குனு வேலை பார்த்தோம்.
ஒரு வழியா, கிளைன்டுக்கு சொன்ன தேதியில டெலிவரியும் பண்ணிட்டார் அந்த புண்ணியவான்.
ஏதோ தும்பா ஏவுதளத்துலேந்து இன்சாட் 2-D விட்ட மாதிரி ஆகாசத்துக்கும் பூமிக்குமா குதிச்சார் அந்த மகானுபாவர்.

எம்.டி. ரொம்ப அப்பாவி (என்னை மாதிரி). வெளுத்தது எல்லாம் பினாயில்னு நினைப்பவர்.
20 நாள் கழிச்சு கிளைன்ட் காறி துப்ப போறான் என்ற விஷயம் எங்களுக்கு தனே தெரியும்!

உழச்சு, உழச்சு ஓடா தேஞ்ச எங்களுக்கு, கிண்டி-கதிப்பாரா கிட்ட இருக்கற அந்த 5 ஸ்டார் ஓட்டலுக்கு மதியம் லஞ்சு ஏற்பாடு ஆச்சு.
நம்ம பசங்களும், "ஓ சாமி! சோறு போடறாங்க, சோறு!"னு அவனவன் முந்தின நாள் நைட்டுல இருந்தே சாப்டாம ஏகாதசி விரதம் அனுஷ்டிக்க ஆரம்பித்து விட்டனர்.

எல்லாரையும் ஒரு பஸ்ல ஏத்தி, பாட்டு எல்லாம் போட்டு கூத்தடிச்சுண்டே போய் சேர்ந்தோம்.
வீரப்பனுக்கு ஒன்னு விட்ட ஓர்படி பையன் மாதிரி மீசை வச்சுண்டு, சும்பன், நிசும்பன் மாதிரி வாசல்ல இருந்த இரண்டு செக்யூரிடிகளை பார்த்ததும், "சார்! பில்லுக்கு போதுமான பணம் எல்லாம் கொண்டு வந்து இருக்கேளா?"னு என் டவுட்டை கிளியர் பண்ணின்டேன்.

ரிஷப்ஷன்ல சோக்கா ஒரு கிளியை போட்ருந்தா. விமான பணிபெண்கள், ரிஷப்ஷனிஸ்ட், இவாளெல்லாம் இதுக்குனே பிரம்மா படைப்பார் போலிருக்கு.
அடடா! என்ன நளினம்!, என்ன இங்லிபீஸு!, எங்க பசங்க வாயிலேர்ந்து ஜொள் ஆறு கரை புரண்டு ஓடியது.

என் நேரம், என் அப்பாவின் நண்பர் அங்கு வந்து இருந்தார். அதனால, ரொம்ப பவ்யமா இருந்தேன். என்னடா, ஆபிஸுக்கு போகாம இங்கே என்ன பன்ற?னு விசாரிப்பு. ஆபிஸ்லேர்ந்து தான் கூட்டீண்டு வந்தானு அவருக்கு புரிய வைத்தேன்.

விவரமா சொல்லலைனா, ஊருக்கு போய், "உன் பையன் 10 தடிப்பசங்களோட ஓட்டல், ஓட்டலா சுத்திண்டு இருக்கான். கூட ஏழு, எட்டு குட்டிகள் வேற!னு கொளுத்தி விடுவார் அந்த மகானுபாவர்.

அதுக்குள்ள பசங்க எல்லாம் கிளி பேச்சு கேக்க போயிட்டானுங்க.
லிப்ட் எங்கே இருக்கு?ங்க்றான் ஒருத்தன்.
லிப்டுக்கு சுவிட்ச் எங்கே இருக்கு?னு பஸ்ட் கியர் போட்டு தூக்கறான் இன்னொருத்தன்.

இப்படியாக கடலை சாகுபடி ஏக்கருக்கு 100 கிலோவை தாண்டி விட்டது.
ஒரு வழியா சாப்பிட அழைப்பு வந்தது.

சாப்பாடு பபே முறை. முதல்ல சூப் வந்தது. வெஜுக்கு எல்லாம் தக்காளி சூப், மத்தவாளுக்கு எல்லாம் சிக்கன் சூப். அதயே, மாரியம்மன் திருவிழா கூழ் மாதிரி ஆளுக்கு அரை லிட்டர் குடிச்சானுங்க. ஒருத்தன் பழக்க தோஷத்துல, "தொட்டுக்க ஊறுகாய் இல்லையா?'னு உளறி விட்டான்.

கர்மம்!னு மேனேஜர் தலையில அடிச்சுண்டார்.

அடுத்து, கார்கில் போருக்கு போற மாதிரி ஒரு கூட்டம், பந்திக்கு முந்தியது.

நான்-வெஜ்ஜுக்களுக்கு சரியான வேட்டை.

ஒரு படத்துல விவேக் சொன்ன மாதிரி, ஓடறது! ஓடறது போடறது!! பறக்கறது, நீந்தறது, எல்லாம் இருந்தது. மீன்ல இத்தனை வகை இருக்குனு எனக்கு அன்று தான் தெரிஞ்சது.

"சரக்கு வெச்சுருக்கேன்!
இறக்கி வெச்சுருகேன்!"னு அழகு காட்ற மீனாவை தான் நமக்கு தெரியும்.

சொன்ன நம்ப மாட்டீங்க, அந்த 30 - 35 பேர்ல 2 பேர் தான் வெஜ். நானும், என் டீம் லீட் (அய்யங்கார் வீட்டு அழகு). என்னை அவங்க சொந்த தம்பி மாதிரி பாசம் காட்டுவாங்க.

பாவப்பட்ட வெஜ்ஜாகிய எங்களுக்கு பிரைட் ரைஸ், பரோட்டா, கோபி, தயிர் சாதம் தான்.
அவனவன் பிளேட்டுல எல்லா ஐட்டங்களும் ரொம்பி வழிஞ்சது. காடை இல்லையா?னு ஒரு பீடைக்கு ரொம்ப குறை.

சில பேர் குடும்பம், குட்டி எல்லாம் அழைச்சுண்டு வந்திருந்தா. எங்க மேனேஜர், அவர் மனைவியை அழைச்சுண்டு வந்திருந்தார்.
எனக்கு ஒரு பிரண்ட் இருக்கான். கொஞ்ச நேரம் கழிச்சு பிறந்து இருந்தானா வாலோடு பிறந்து இருப்பான். அவ்ளோ சேட்டை.
எங்க மேனேஜர் தீவிர நயன் தாரா ரசிகர். அவர் ரிங்க்டோன் கூட அய்யா படத்துல வர "ஒரு வார்த்தை சொல்ல" பாட்டு தான்.
என் பிரண்டு தன் வேலையை காட்ட ஆரம்பிச்சான். மெதுவா என் மேனேஜர் கிட்ட போய், "சார்! ஒரு ஷூட்டிங்க் முடிஞ்ச்சு, ரெஸ்ட் எடுக்க நயன் தாரா இந்த ஓட்டலுல தான் தங்கி இருக்காளாம்"னு கொளுத்தி போட்டான். அவ்ளோ தான்! மேனேஜர், சீதையை தேட புறப்பட்ட அனுமார் மாதிரி துள்ளி குதிச்சு ரிஷப்ஷனை நோக்கி ஓடிட்டார், அதுவும் அவங்க மனைவிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம.

பிரண்டு, மெள்ள மேனேஜர் மனைவியிடம் மேற்படி விஷயத்தை சொல்லி(கொளுத்தினு வாசிங்கோ), நாரதர் வேலைய காட்டிட்டு வந்துட்டான்.

இது ஒன்னும் தெரியாம, மேனேஜர், என் பிரண்டு கிட்ட வந்து, "என்னப்பா! நயன் தாரா எல்லாம் தங்கலைனு சொல்றாளே அந்த ரிஷப்ஷன் குட்டி"னு அப்பாவியா கேட்டார். பிரண்டு சளைக்காம, அப்படி தான் சார் அவ சொல்லுவா! நீங்க ரூம் பாய் கிட்ட விசாரிங்க!னு ஏவி விட்டான்.
இவரும், தன் முயற்சியில் சற்றும் சளைக்காத விக்ரமாதித்தன் மாதிரி கிளம்பிட்டார். ஆனா வேதாளம் மாதிரி அவர் மனைவி, வழியிலேயே மடக்கிட்டா.

அப்புறம் என்ன, ஒரு 10 நிமிஷத்துக்கு மேனேஜருக்கு ரண்டக்க! ரண்டக்க!! ரண்டக்க!!
தான்! லட்சார்சணை பலமா இருந்தது.

வெஜ்ஜுக்கு இவ்வளவு தான் ஐட்டங்களா?னு நான் விரிவாக கஸ்டமர் கேரில் குமறி விட்டேன். அதற்கு பலன் 2 நாள் கழித்து கொரியரில் அந்த ஓட்டல் கஸ்டமர் கேர் மேனேஜரிடம் இருந்து ஒரு கடிதமும், 2 பேருக்கான டின்னர் கூப்பனுமாக(60% discount) வந்தது.

அஸின் வெளி நாடு ஷூட்டிங்க் போயிருப்பதால், டின்னர் சாப்பிட வர முடியாமைக்கு வருத்தம் தெரிவித்து போன் பண்ணினா. (kutti, note the point)
ஐஸ் குட்டி போன்ல ஒரு பாட்டம் அழுதே விட்டாள். சமாதானம் படுத்துவதற்குள் போதும், போதும்னு ஆகி விட்டது.

எனவே கூப்பனை, பவ்யமா, என் மேனேஜர் கிட்ட குடுத்துடேன்.

லூஸா டா நீ?னு நண்பர்கள் கத்தினார்கள்.

விஷயம் இருக்கு இதுல, வேடிக்கை பாருங்க!னு சொல்லிட்டேன்.
அடுத்த மாதம், சுட சுட ஒரு இன்க்ரிமன்ட் வந்தது.
ஷத்ரியன் இல்லைடா நீ, சாணக்யன் டா!னு புகழ்ந்து விட்டு,ட்ரீட் என்ற பெயரில் என் கழுத்தில் மாலை போட்டு, மஞ்சள் தண்ணி தெளிச்சு, வெட்டி விட்டனர்.

பின் குறிப்பு: he hee,என் பிரண்டுக்கு, அந்த நாரதர் ஐடியாவை குடுத்தது நான் இல்லீங்கோ! நம்பிடீங்க தானே?

Friday, June 02, 2006

Applying Thoughts

முன்குறிப்பு: இந்த சம்பவம் நடந்து ஒரு மாதம் இருக்கும். சுட சுட பதிய முடியலை.

ஒரு நாள் காலை ஆபிஸுக்கு வந்ததும் வராததுமா, அவசரமா பத்ரகாளியிடமிருந்து(my team lead) அழைப்பு.
பத்ரகாளியின் திருவிளையாடல்களை அறிய read
Part-1 and
Part-2

என்னடா, நாம இப்போதைக்கு ஒரு சேட்டையும் பண்ணலையே, எதுக்கு கூப்படறா?னு யோசனையோடு போனேன்.

உக்காச்சுகோ அம்பி!னு ரொம்ப பாசம சொன்னா. சரி! எதோ குஷியான மேட்டர் தான்னு முடிவு பண்ணினேன்.

என் குழந்தைக்கு ஒரு வயசு ஆறது. மொட்டை போடனுமாம்.

நல்ல விஷயம் தானே? (அய்யோ! மொட்டைக்கு மொய் எழுதனுமா?)

சொந்த ஊரு, ராஞ்சில தான் போடனும்னு என் மாமியார் கண்டிப்பா சொல்லிட்டா. அவள் ரொம்ப பொல்லாதவள். சொன்னா, சொன்னது தான்.

(மனசுக்குள்ள,"உனக்கே ஆப்பு அடிக்க ஒருத்தி இருக்காளா?")

நான்,"பெரியவங்க சொன்னா அதுல ஒரு அர்த்தம் இருக்கும்". கண்டிப்பா சொந்த ஊருல தான் தான் மொட்டை போடனும்.

(கடுப்போட) சரி, சரி,15 நாள் லீவுல போரேன் அம்பி. நீ சேட்டை பண்ணினாலும், வேலைல கெட்டி. நீ தான் டீமை பாத்துக்கனும். ஒழுங்கா செய்வியா?

நீ உக்காந்த சீட்ல நானா? சிங்கம் உக்காந்த சீட்ல சுண்டலியா? எப்படி? எப்படி மா? வேணும்னா உன் பாத ரட்சகைய குடுத்துட்டு போ மா! நான் பரதன் மாதிரி ஆட்சி நடத்துரேன்னு ஐஸ் மழை பொழிஞ்சேன்.

சிரிப்போடு, சரி, சரி, இந்த மேட்டர டீம்ல இப்பவே டமுக்கு அடிக்க வேன்டாம். சரியா?
சரி, சரி...

ஒரு வழியா, பத்ரகாளி next day ஊருக்கு போயிட்டா...

எனக்கு அக்னி நட்சத்திரம் ஜனகராஜ் மாதிரி, "பத்ரகாளி (தங்கமணி) ஊருக்கு போயிட்டா!னு கத்தனும் போல இருந்தது..

அடுத்த நாள் காலையில, அவசரமா என் கேபினெட்ட(டீமை) Team மீட்டிங்க்!னு சொல்லி கூட்டினேன்.
ஒரு குஷியான மேட்டர் சொல்ல போரேன், நான் சொல்லி முடிச்சதும் யாரும் விசில் எல்லாம் அடிக்க கூடாது, சேச்சி, உனக்கு தான் மா!

சேச்சி நன்னா விசில் அடிப்பா. அவ அடிச்சா, பாலக்காடு வரைக்கும் கேக்கும். என் மண்டையில குட்டி, குட்டி எனக்கு அவ தான் விசில் அடிக்க சொல்லி தரா. கொஞ்சம் தேறிருக்கேன்.
என் டீம்ல எல்லாம் சரியான வானரங்கள்! (என்னையும் சேர்த்து தான்). மீட்டிங்னு எல்லாரையும் கூட்டினா, சேர்ல ஒக்காச்சுகாம, டேபிள ஏறி உக்காரும். அதான் ஒரு முன்னெச்சரிக்கை அறிவிப்பு.
பக்குவமா, விஷயத்தை போட்டு உடைத்தேன்.
சொல்லி முடிச்சதும், உய்ய்ய்ய்ய்னு ஒரு விசில் பறந்தது. யாருனு பார்த்தா, பெங்காலி ரசகுல்லா. ரெண்டு வெண்டைக்காய்களை (he hee, ladies fingers = விரல்களை) மடக்கி வாயில் வைத்து நச்சுனு விசில் அடிச்சா.
அடிச்சுட்டு, லைலா மாதிரி ஒரு சிரிப்பு வேற. அவளை நான் எதுவும் சொல்ல மாட்டேன். பாவம், தாய் இல்லா குழந்தை. அவ ஆத்துல எது நடந்தாலும், ஓடி வந்து என் கிட்ட தான் யோசனை கேப்பா.
அவ ஆத்து வேலைகாரி பாலம்மா வேலைய விட்டு நின்னுட்டா, அவ செல்ல நாய்குட்டி அவ பெட்டுல உச்சா போயிடுத்துனு சொல்லின்டே போகலாம். நானும், அறிவுப்பூர்வமா, பாலம்மா போனா என்ன, ஒரு நாகம்மாவை சேத்துக்கோ, உன் நாய்குட்டிக்கு snuggy pad கட்டி விட்டுடுனு யோசனை வாரி வழங்குவேன்.

சரி, இந்த வானர கூட்டத்திடம் வேலை வாங்கனும்னா டகால்டி வேலை காட்டி தான் முடியும்னு எனக்கு தெரியும். அதனால, ஒரு அறிவிப்பு செய்தேன்.

எல்லாரும், ஒழுங்கா வேலைய முடிச்சா, லஞ்ச் முடிஞ்சதும், கேம்ஸ் ஷோ எல்லாம் நடத்துவேன். சரியா?னு ஒரு பிட்ட போட்டேன்.

பிரமாதமான வரவேற்பு. உடனே, என்ன கேம்ஸ் எல்லாம் நடத்தலாம்னு கூட்டம் சிந்திக்க ஆரம்பிச்சது.

ஒரே குரல்ல, எல்லாரும் அந்தாக்க்ஷரினு கத்தியது. அந்த ஏரியாவுல நான் கொஞ்சம் வீக். தமிழ் பாட்டுனா பொளந்து கட்டிடலாம்.
ஆனா, இங்க எல்லாம் "சனம், மனம்,தீவானா,இஷ்க்,பிஷ்க்னு இந்தி பாட்டுனா பாடும்!"

நமக்கு, "ரூப் தேரா மஸ்தானா!" (அதுவும் முதல் 4 வரி) தான் தெரியும். நாம பெப்பரபேன்னு வாய தான் பாத்துண்டு இருக்கணும்.

செல்லாது! செல்லாது!னு நான் தீர்ப்பு சொன்னா " நாட்டாமை, தீர்ப்பை மாத்தி சொல்லு! இல்ல, தலைய எடுத்துருவோம்"னு மிரட்டல் விடுகிற கூட்டம் இது. அரை மனசா சரினு சொல்லிட்டேன். ரசகுல்லா டீம்ல நான் சேர்ந்து கொன்டேன். (அவ இதுல கில்லாடி).

அப்புறம், "ரிங்கா ரிங்கா ரோஸஸ்", தம்ஷராட், Ad-act, குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.

நானும் என் பங்குக்கு, "குலை குலையா முந்திரிக்கா" கேம்ஸை முன்மொழிந்தேன்.

அப்படினா என்ன?னு எல்லாரும் கேட்டா. ஆட்ட விதிகள் எல்லாம் சொன்னவுடன், எல்லாருக்கும் ரொம்ப பிடிச்சு போச்சு. இப்பவே ஒரு ட்ரயல் பாக்கலாமா?னு ஒரு கூட்டம், தோள் தட்டியது. சரி தான்! கிழிஞ்சது க்ரிஷ்ணகிரி!னு ரொம்ப கஷ்டப்பட்டு மதியம் வரை பொறுத்திருக்க சொன்னேன்.

எல்லா பிராஜக்ட் வேலைகளையும், சரி சமமா, எல்லாருக்கும் அஸைன் பண்ணிட்டு, இருக்கருதுலயே கஷ்டமான வேலையை எனக்கு எடுத்துக் கொண்டேன்.

அது தானே ஒரு நல்ல தலைக்கு அழகு! அது என்ன வேலைனு சொல்ல மறந்துட்டேனே! பிளாக் எழுதற/படிக்கற வேலை தான் அது! ( நீங்க காறி துப்புவீங்கனு எனக்கு தெரியும்)

ஒரு வழியா, டீம் மீட்டிங்க் முடிவடைந்தது!னு சொல்லி சங்கத்தை கலைத்தேன். இவ்ளோ கூத்து நடந்தும், பெரிய தலைகள் எல்லாம் அவா, அவா கேபினை விட்டு வெளியே வரவேயில்லை. அவாளும் என்னை மாதிரி பிளாக் எழுதரா போலிருக்கு!

என் டெக்னிக் நல்லவே வொர்க்கவுட் ஆச்சு. இத முடிக்க 2 நாள் ஆகும்னு டகால்டி காட்டும் பசங்க எல்லாம் அரை நாளுல முடிச்சுடாங்க. எப்பவுமே ஓப்பி அடிக்கும் குல்டி ஜிகிடிகள் எல்லாம் 2 நாள் வேலையை சேர்த்து முடிச்சுடுத்து.

அப்புறம் என்ன, மதியம் லஞ்ச் முடிஞ்சதும், ஒரே கூத்து தான்.

இத பாத்துட்டு, பக்கத்து டீம்ல பல பேர் (ஜிகிடிகள்னே வாசிக்கலாம், தப்பில்லை), எங்களையும் ஆட்டதுல சேர்த்துக்க சொல்லு!னு சின்ன புள்ள தனமா காங்கிரஸ் மாதிரி ரசகுல்லா மூலமா என்னிடம் தூது விடும் படலம். (ரசகுல்லா விடு தூதுனு புற நானூறுல ஒரு கவிதை வரலாம் எதிர்காலத்தில், யாரு கண்டா!)

எதுனாலும், யாருனாலும், நான் பொது குழுவை கூட்டி தான் ஒரு முடிவு எடுப்பேன்னு பந்தாவா சொல்லிட்டேன்.

ஆட்டம் ரொம்ப சுவாரஸ்யமா நடந்துண்டு இருக்கும் போது, பத்ரகாளியிடம் இருந்து போன். பிராஜக்ட் எப்படி போகுதுனு விசாரிப்பு. சூப்பரா போகுது தாயே! ஒன்னும் அவசரம் இல்லை, உன் கொழந்தைக்கு மொட்டை அடிச்சு, மறுபடி முடி வளர்ந்ததுக்கு அப்புறமா நீ வந்தா போதும், அவசரப்பட்டு பிளைட்டுல எல்லாம் வந்துடாதே! ரயிலுல வந்தா போதும்!னு பவ்யமா சொல்லிட்டேன்.

Ofcourse, we are not doing anything against our company policy. Yeeh, we are just "Applying thoughts".