Thursday, June 15, 2006

பாட்டு பாட வா!

இந்த நிகழ்வும் (கூத்தும்), சென்னை கம்பெனியில் நடந்தது தான்.

வருடா வருடம் அப்ரைசல் வருதோ இல்லையோ, கம்பெனி ஆண்டு விழா கரெக்ட்டா வந்து விடும். போன வருடமும்,அப்படி தான்.

பொதுவாக, கடற்கரை சாலையில் உள்ள ஏதாவது ஒரு ரிஸார்ட்டில் தான் நடக்கும். இந்த தடவை, VGP-கோல்டன் பீச்சீல் நடத்தலாம்னு சாமி (எம்.டி) வரம் குடுக்க, பூசாரியும் (HR) தலையசைக்க, கும்பமேளாவுக்கு நாள் குறிக்கப்பட்டது.

இந்த போட்டி, அந்த போட்டினு பல போட்டிகள் இருந்தாலும், எல்லார் கண்ணும் பாட்டு போட்டி மேல தான். விஷயம் இருக்கு அதுல.
கிட்டத்தட்ட, முக்கால் வாசி பேர், பாத்ரூம் பாடகர்கள், எங்கள் எம்.டி உட்பட. தங்கள் பாடும் திறமையை நீரூபிக்க இதை விட ஒரு நல்ல சந்தர்ப்பம் வராதுனு எல்லாருக்கும் புரிஞ்சு போச்சு.
எனவே பாட்டு போட்டியை
1) தனி திறமை
2) கூட்டத்தோடு கோவிந்தானு 2 விதமா பிரிச்சா.

100+ நபர்களை 8 டீமா பிரிச்சா.

ரொம்ப தில் உள்ளவர்கள் மட்டும் தனி திறமைக்கு நான் தயார்!னு மார் தட்டினா.
பங்க்ஷனுக்கு 2 நாளைக்கு முன்னரே கச்சேரி களை கட்ட தொடங்கியது.
எம்.டி.யும் ஒரு டீம்ல இருந்ததால், ஆபிஸ்ல 2 நாளைக்கு ஒரு வேலையும் நடக்கலை.

மேனேஜர் யாராவது தப்பி தவறி பிராஜக்ட் ஸ்டேடஸ் கேட்டா, "அவன நிறுத்த சொல்லு! நான் நிறுத்தறேன்"னு நாயகன் டயலாக் பேச ஆரம்பிச்சுட்டானுங்க எங்க பசங்க.

என்ன பாட்டு பாடலாம்?னு ஒரு பெரிய ஆராய்ச்சியே நடந்தது.
எம்.டி டீம், உஷாரா, "ரண்டக்க! ரண்டக்க!" பாட்டை காப்பி ரைட் வாங்கி விட்டது. 2 நாளைக்கு எம்.டி ரூம்லேயே, ஒரே ரண்டக்க! ரண்டக்க! பிராக்டிஸ் தான்.

இதுல சில டீம், "நாங்க விழா மேடையில தான் பாட்டை அறிவிப்போம்!"னு ரொம்ப ரகசியமா பிராக்டிஸ் பண்ண ஆரம்பிச்சுட்டா.

எனக்கும் ஒரு டீம் வந்து சேர்ந்தது. டீம்ல ஒரு லேடி மெம்பர் கூட கிடையாது. பொதுவா, கேள்ஸ் குரல் கும்பல் கோரஸ்ஸுக்கு எல்லாம் நன்னா இருக்கும்.

அது மட்டும் இல்லை, என் டீம்ல சொல்லி வெச்ச மாதிரி எல்லா பேரும், நாங்க பாத்ரூம்ல மட்டும் தான் பாடுவோம்!னு சத்தியம் பண்ரா. இதுக்காக, விழா மேடையில் தோட்ட தரணியை கூப்பிட்டு பாத்ரூம் செட்டா போட முடியும்? அப்படியே போட்டாலும், நாங்க குளிச்சுண்டே தான் பாடுவோம்!னு சொன்னா என்ன பண்றது?

சரி, டீமுக்கு தலைவரா போயிட்டோம், நாம தான் சமாளிக்கனும்! அதோட மட்டும் இல்லை, நாம தான் மார்கழி மாத பஜனையில் எல்லாம் பாடி இருக்கோமே! நம்ம பாட்டை மெச்சி, எக்ஸ்ட்ரா பொங்கல் எல்லாம் தந்தாளே!னு ஒரு அசட்டு தைரியத்துல, நான் பாத்துக்கறேன்!னு சொல்லிட்டேன்.

என் கோஷ்டியும், "தல! நீ அப்டியே முன்னால பாடிட்டே போ தல! நாங்க பின்னாடியே, லல்லல் லா பாடிட்டே வரோம் தல!"னு கைப்புள்ளையை ஏத்தி விட்ற மாதிரி ஏத்தி விட்டானுங்க.
அடுத்து, என்ன பாட்டு பாடலாம்னு ஒரே யோசனை.

இவனுங்க லல்லல் லா மட்டுமே பாடனும்னா, அது கண்டிப்பா விக்ரமன் & S.A.ராஜ்குமார் பட பாடல்கள் தான். ஏன்னா, அவர் படத்துல தான், முதலில் ஆண் குரலில் ஒரு பாட்டு வரும், பின் அதே பாட்டு பெண் குரலில் வரும். பின் ஆண்,பெண் ரெண்டு பேர் குரலிலும் அதே பாட்டு வரும். அந்த பாட்டோட பல்லவி மட்டும்
"லல்லல்லா லாலே லல்லல்லா!"னு படம் முழுக்க வரும். (ரோஸாப்பூ சின்ன ரோஸாப்பூ!னு நீங்க பாடினா, அதுக்கு நான் பொறுப்பில்லை)

தியேட்டரிலிருந்து,வீட்டுக்கு போய் ஒரு வாரம் வரைக்கும் நம்ம காதுல ஒரே லல்லல்லா தான் கேட்கும்.
ஆகவே, அப்படிபட்ட பாட்டு எது?னு நெட்டுல தேடினோம்.(இதுக்கு தானே ஆபிஸ்ல நெட் கனக்க்ஷன் எல்லாம்!)

மத்த டீம் எல்லாம் வேட்பாளர் பட்டியல் அறிவிச்சு, பிராக்டிஸ் எல்லாம் பண்ணி பின்னி பெடலெடுக்க ஆரம்பிச்சுட்டானுங்க.

பாத்ரூம் பாடகர்கள் எல்லாம் சரியான மூடு வரணும்னு கும்பல் கும்பலா ஒரே பாத்ரூமுக்குள்ள போயிண்டு, "ரண்டக்க! ரண்டக்க!"னு பாடி பிராக்டிஸ் பண்ணி பக்கத்து பாத்ரூமுக்குள்ள போறவாளை பயமுறுத்த ஆரம்பிச்சுட்டா.

இது போதாதுனு,
"வருது! வருது! விலகு! விலகு! வேங்கை வெளியே வருது!!"னு தனி தவில்கள் உபத்ரவம் வேற! (ரெஸ்ட் ரூம்ல பாடற பாட்டா டா இது?னு மத்தவங்க மொத்திட்டானுங்க.)

எங்களுக்கு,ஒரு பாட்டும் திருப்திகரமா இல்லை. போட்டிக்கு 2 நாள் தான் இருக்கு.

"என்ன தல, ஆட்டத்துல நாம இருக்கோமா, இல்லையா? ஜெய்காட்டியும் பரவாயில்லை, டெபாசிட்டே இழந்துடுவோம் போலிருக்கே!"னு என் டீம்காரர்களே சந்தேகபட ஆரம்பித்து விட்டனர். இது போதாதுனு எதிர் கட்சிகாரர்களின் நக்கல் வேற!

இந்த நிலையில் தான், நச்சுனு அந்த பாடல் நினைவுக்கு வந்தது.

அது எந்த பாடல்னு அடுத்த போஸ்ட்டுல பார்ப்போமா?

31 comments:

Shuba said...

paaaaaaaaavi ithula enna suspense!ooooooooffff....thirunthu magane thirunthu

மு.கார்த்திகேயன் said...

aHa..ithulaiyum suspense-a? enna patta erukumnu oru clue koduththu erukalam..nangalum ethO pOttinnu cholli..nEraththai pOkki irupOm :-))

வேதா said...

'enna paduvathu, paatellam enaku pada theriyaathu' apdinu paadiyirupeenga. ithuku oru suspense vera?

கீதா சாம்பசிவம் said...

"என்ன தான் பாடுவது?
எப்படித் தான் ஆடுவது" னு பாடுங்க. சூழ்நிலைக்குப் பொருத்தமா இருக்கும். இன்னிக்கு என்ன உங்களைக் காணோம்?

kuttichuvaru said...

ha ha.... nalla comedy-aa ezhuthirukkeenga.... naan chinna vayasaa irukkumpothu enga Flats-la yetho competition vechaanga..... appo enga pakkathu veetu uncle appdi thaan stage-la poi bayangara build-up ellam kuduthu, kadaisila 'Mahaaaaaaaaabhaaaaaaarath!!' appdinnu TV serial startin song paadittu vanthuttaaru!!

Syam said...

saami, poojari nalla eluthi irukeenga...aana thodarum pottuteengale :-)

Prabhu said...

lalalalalaaa.. sammaiya ezhuthi irukkeenga...

SArajkumar ipo ellam paatu podarathu illa??

Ram said...

ithu yenna Salmon Pappaiya voda 'thinam oru kural' aa,adutha post la solrathukku?


//எம்.டி.யும் ஒரு டீம்ல இருந்ததால், ஆபிஸ்ல 2 நாளைக்கு ஒரு வேலையும் நடக்கலை. //

Oho...pazhaya company MD 'work' pannuvaara yenna? Nalla company aa irukke...:))
Oh shit..I had bad opinion ant MGRs and MDs till date. :))

shree said...

daay, kavuthittiye patta sollama. hmm. yeppavume indha pattu contest jollya dhan irukkum.

shree said...

btw anniyan recenta release ana padam? so u r that new to wipro? adhukkulla ivvlo kalaikkara anga?

Viji said...

suspense thaangala... seekram adutha post podunga!

Gopalan Ramasubbu said...

Guru,nenga entha paatu ready panirupenganu enaku therium ?;)

கீதா சாம்பசிவம் said...

அம்பி, சிரிப்பா இருக்கா?
உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்பரவாயில்லை, 15 வயசுனு சொன்னதாலே மன்னிக்கிறேன். கரண்ட் இருந்தால்ல "மேகம் கருக்குது " போடறதுக்கு.

Usha said...

aaha, seridhan...nee pesama Iyengar veetu azhage-nu padittiya?

gayathri said...

emmm nan venna oru guess pannatuma [YM's thinking]..
edhachum vijay patta?? like "kokara kokara ko.." or "machan peru madhura"...
enna bathroom singers-ku ellam endha madhiri pattu nalla suit aagum :p

My days(Gops) said...

@மேடையில் தோட்ட தரணியை கூப்பிட்டு பாத்ரூம் செட்டா போட முடியும்?
ha ha ha, elaey, enna'la ninachikittu irruka?
btw, sema comedy'a irruku..

my guess at ur song..
"our national anthem..jana gana mana"?

Bala.G said...

nallaa irundhuchu....neenga oru dubaakoor paattu paadi adi odha ellam vaangi irupeenganu nenaikiren....adhayam marakaama ezhudhunga

கீதா சாம்பசிவம் said...

அம்பி, இதுதானே வேணாங்கிறது, அப்போ அப்போ என்னோட வயசை நான் நினவு வச்சுக்க வேண்டாமா? அப்புறம் சென்னை ராஜஸ்தான் போஸ்ட் போடலாம். அப்போதான் முதல் முதல் தாஜ்மஹால் பார்த்தோம். யோசிக்கிறேன். இன்னும் ஊருக்குப் போகவே இல்லையே? அதை அப்படியே விடலாமா, தொடரலாமானு யோசிக்கிறேன். இதுக்கே இப்படின்னா பிரயாணம் செய்த எங்களுக்கு எப்படி இருக்கும்?

கீதா சாம்பசிவம் said...

அம்பி,, இன்னுமா பாட்டுப் பாட ஆரம்பிக்கலை? ஆஃபீஸுலே நிஜமான வேலை வந்திருக்காக்கும்?

ambi said...

@shuba, ithellaam oru blog promotion technique.. he hee..

@karthi, aapichla romba vettiya iruke polirukku!

@veda, athellam onnum illai, wait ma waitu..

@geetha, wait and see..

@kutti, danks pa! nee sonna matter sema comedy..

@syam, danks, wait pls.

@prabhu, he hee, danks. yeeh, U r rite.

@Ram, he hee, naanum avare thaan(solomon papaiya) nenaichen. our old MD will watch whether we're working or not.

@shree, he hee, athu thane ambi style. btw, yeeh i joined wipro 7 months back.

@viji, puriyuthu, wait ma waitu..

@gops, sollu parpoom enna paattu nu!

@usha, he hee, apdi paadi irunthaa yen TL mothi iruppa ennai.

@gayathri, welcome back. keep guessing. antha paattu ellam illai.

@my days, t'veli yaa la neeyum? jana gana vaa? gr..rrr.

@bala.g, danku, dubakoor paatu ellam illai.

@geetha, correct, Aapichla niraya velai vaangaraa..(with innocent look)

Ms.Congeniality said...

//என் டீம்ல சொல்லி வெச்ச மாதிரி எல்லா பேரும், நாங்க பாத்ரூம்ல மட்டும் தான் பாடுவோம்!னு சத்தியம் பண்ரா. இதுக்காக, விழா மேடையில் தோட்ட தரணியை கூப்பிட்டு பாத்ரூம் செட்டா போட முடியும்? அப்படியே போட்டாலும், நாங்க குளிச்சுண்டே தான் பாடுவோம்!னு சொன்னா என்ன பண்றது?//

ROTFL!!!!!!!!!!!

idhula suspense vera!!Maargazhi maadha bhajanai nu sonneenga..adhanaala ayengaar veetu azhage paaditeengalaa?

Illa adhuku appdiye opposite aa oru kuthu paata..of the likes naanga site adipom,dhum adipom ;-)

Vinesh said...

இவனுங்க லல்லல் லா மட்டுமே பாடனும்னா, அது கண்டிப்பா விக்ரமன் & S.A.ராஜ்குமார் பட பாடல்கள் தான்.

hahahahahahhahahahahahahahahahhaaha

Vinesh said...

Ayyo, enna paattu-nnu sollunga..
"Adho andha paravai pola" oru paattu dhaan en ninaivukku varudhu... full aambala group song-a..

Harish said...

Suspense??appu...ithu romba over

Delhi_tamilan said...

Part II podupa....

கீதா சாம்பசிவம் said...

அம்பி, நீங்களும் கடைசிலே பாரதியை மேற்கோள் காட்ட ஆரம்பிச்சுட்டீங்க. வாழ்த்துக்கள்.

Balaji S Rajan said...

Ambi I have visited your blog lots of times. Quite hilarious. Keep up your good work. Your humour is coming up very naturally. Please do not let us to guess.

ezhilarasi said...

Anna enna than suspense

ezhilarasi said...

ENNA PADURATHUKU EPADI ORU SUSPENSA...

PAPPU said...

Enna da suspense vachirukka
sollaen

奇堡比 said...

新女性徵信
外遇調查站
鴻海徵信
亞洲徵信
非凡徵信社
鳳凰徵信社
中華新女性徵信社
全國新女性徵信社
全省女人徵信有限公司
私家偵探超優網
女人感情會館-婚姻感情挽回徵信
女子偵探徵信網
女子國際徵信
外遇抓姦偵探社
女子徵信社
女人國際徵信
女子徵信社
台中縣徵信商業同業公會
成功科技器材
女人國際徵信社
女人國際徵信
三立徵信社-外遇
女人國際徵信
女人國際徵信
大同女人徵信聯盟
晚晴徵信