Saturday, June 24, 2006

ஆறு, மனமே ஆறு!

சில கேள்விகளுக்கு பதில் தெரியாம நான் பல தடவை முழிச்சதுண்டு. அதுல சில கேள்விகளை இங்கே லிஸ்ட் பண்ணிருக்கேன். பாருங்க,

ஒன்னு: அது என்னங்க, எல்லா பொண்ணுகளுக்கும் டெடி பியர்(கரடி பொம்மை) ரொம்ப பிடிக்குது? ச்ச்ச்சோ ச்வ்வ்வீட்ட்ட்!னு பில்டப் வேற! பேசாம கரடி பொம்மையா பொறந்து இருக்கலாம் போலிருக்கு!

டி.ராஜேந்தர் கூட டெடி பியர் மாதிரி தான் இருக்காரு, எங்கே யாராவது அவர் கன்னத்தை கிள்ளி, ச்ச்ச்சோ ச்வ்வ்வீட்ட்ட்!னு சொல்லி பாருங்களேன்!
"நானா கரடி?
நீ தான் என் எதிரி!
அடிச்சா ஆயிடுவ உதிரி!
ஓடி போ பதறி!"னு அடுக்கு மொழியில குதறி விட மாட்டார் மனுஷன்!

இரண்டு: இப்ப அனேகமாக எல்லா செல்போன் கம்பெனிகளும் நீங்க வாழற வரைக்கும்(Lifetime) இன்கம்மிங்க் பிரீ!னு அறிவிச்சாலும் அறிவிச்சானுங்க, தொல்லை தாங்க முடியலை.

அதுலயும் இந்த CUG (Closed User Group)வசதி வேற இருந்தா அவ்வளவு தான். ஆபிஸ்ல, அடுத்த அடுத்த கேபினுக்கு எல்லாம் போன் போட்டு, சாப்பிட போகலாமா? டீ குடிக்க போகலாமா?னு ஒரே டார்ச்சர் தான். இதுலயும் கேள்ஸ் தான் முண்னணி.
அவங்க குசு குசுனு பேசற விதம் இருக்கே! யப்பா! எதிராளி டென்ஷன் ஆயிடுவான். (ஒன் பிலாக் காப்பி பிளீஸ்!னு ஒரு விளம்பரம் கூட வந்ததே!)

இதுல ஆண்களுக்கு செல்போன்ல பேசவே தெரியாது!

தண்டயார்பேட்டையில தீப்பொறி ஆறுமுகம் (ஒரு செந்தமிழ் பேச்சாளர், காது குடுத்து கேக்க முடியாது) கட்சி மீட்டிங்க் மாதிரி பேசுவாங்க. இப்படி தான் நான் மதுரையில பஸ்ல போகும் போது, பக்கத்துல இருந்த ஒருத்தன் அவன் பொண்ணு பூப்புனித நீராட்டு விழாவுக்கு அவன் சாதி சனத்துக்கு செல் போன்ல முதல் தகவல் சொன்னான். மொத்த பஸ்ஸுக்கும் கேட்டது. பஸ்ஸுல இருந்த சில பேர் அவன் சொல்ல, சொல்ல, அட்ரஸ் எல்லாம் குறிச்சுண்டா.

இதுக்கு நேர்லயே போய் பேசிட்டு வந்துடலாம்.

இந்த செல் போன் இல்லாம நாம வாழவே முடியாதா? அண்ணா யுனிவர்சிட்டியில ஆப்பு அடிச்சது சரி தான்!

மூணு: மெடிக்கல் ரெப்/மார்கெட்டிங்க் துறை என்றாலே டை கட்டிண்டு தான் உலா வரனுமா? நல்ல மே மாத வெயிலுல கூட அவர்கள் டை கட்டிண்டு போறத பாத்தா எனக்கு பாவமா இருக்கும். யாரு இந்த ரூல்ஸ போட்டா?

நாலு: இந்த இந்தி கார பசங்க எல்லாம் மொழுக்குனு மீசைய எடுத்துடுவாங்க. இந்தி பேசனும்னா மீசை வெச்சுக்க கூடாதா? என்னையும், "மீசையை எடுத்துடு"!னு இந்த ரசகுல்லா ரொம்ப டார்ச்சர் குடுத்தது. முடியவே முடியாது! நாங்க எல்லாம் பாரதி வம்சம். மீசையை எடுத்தா எங்க அம்மா ரேஷன் கார்டுலேருந்து என் பெயரை எடுத்துடுவா, என்னை வீட்டுகுள்ளவே விட மாட்டா!னு கண்டிப்பா சொல்லிட்டேன்.

அது மட்டுமா, அசின் ஆத்திரப்படுவா! ஐஸ் குட்டி அழுவா! கோபிகா கோச்சுப்பா! நயன் தாரா நக்கல் விடுவா!னு உங்க எல்லாருக்கும் தெரியாதா என்ன?
(அசினுக்கு ரொம்ப போட்டி கூடிடே போகுது, அதான் ஒரு சேப்டிக்கு கோபிகா, நயன் எல்லாம்).

ஐந்து: இந்த ஜீன்ஸ் பேண்டை பார்த்தாலே துவைக்கனும்னே தோண மாட்டேங்குதே, அது ஏன்? இந்த விஷயுத்துல பேச்சுலர் பசங்களை அடிச்சுக்கவே முடியாது. 2 மாதம், 3 மாதம்னு ஒரே ஜீன்ஸ போட்டு அடிப்பானுங்க பாரு! அதுக்கு வாய் இருந்தா அழுதுடும். நான் லீவுக்கு ஊருக்கு போனா, என் அம்மா கேட்கிற முதல் கேல்வி, "எப்போ ஜீன்ஸை தோய்ச்ச?"


ஆறு: நாம ஸ்கூல் படிக்கும் போது, எல்லாருக்கும் ஒரு ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது லெட்டர் ரைட்டிங்க் சொல்லி தருவாங்க. முதல் லெட்டர் என்ன சொல்லுங்க பார்ப்போம்.
லீவு லெட்டர் தான். "As i'm suffering fever" எழுதாத ஆளுங்களே கிடையாது. இன்னிக்கும் ஆபிஸ்ல லீவு வேணும்னா அதே பொய் தான் சொல்ல வேண்டி இருக்கு. மேக்னி ஷோ படம் பார்க்க போறேன்! அதனால லீவு வேணும்னா சொல்ல முடியும்? ஒரு சேஞ்சுக்கு, ஏன் வேற லெட்டர் எழுத எல்லாம் சொல்லி தர மாட்டேங்கிறாங்க?

இந்த ஆறு மனமே ஆறு! விளையாட்டுக்கு, என்னை இழுத்து விட்ட புண்ணியம் ஒரு
சின்ன பெண்ணை போய் சேருகிறது.

நான் ஏற்கனவே என்னை பத்தி
நச்சுனு நாலு விஷயங்கள் சொல்லிடதுனால, ஆறு கேள்விகளா இங்கு கேட்ருக்கேன்.

ஒரு ஆறு பேரை இழுத்து விடுவோம் முடிவு பண்ணி,

1) சுபா - ஒரு நாளைக்கு ஒரு பிளாக் போடும் பிளாக் உலக இளம் புயல். ( நாளைக்கே இத பத்தி இவங்க போஸ்ட் போட்ருவாங்க, பாருங்க!)

2) Ms.Congeniality - பிளாக் உலகம் கண்டேடுத்த பத்மா சுப்ரமணியம். இவங்க எழுதறதும் ரொம்ப நளினமா இருக்கும்.

3) சச்சின்(கோப்ஸ்) - செம காமெடியா எழுதுவாரு. சமையல் கலையில அறுசுவை நடராஜன்.

4) விஜி - மாசத்துக்கு ஒரே ஒரு போஸ்ட் போடும் குழந்தை. பேசாம இவங்க பிளாக் யுசர் ஐடி, பாஸ்வேர்டை தந்தாங்கனா, நாமளே போஸ்ட் போட்டுடலாம்.(அந்த பொறுப்பை சுபா பார்த்துப்பாங்க)

5) கோப்ஸ் - ரொம்ப நல்ல்ல்லவன். திருப்பூர் பா.சிதம்பரம். என்னையும் குருவா ஏற்று கொண்ட சிஷ்யன்.

6) அர்ஜுனா - ஏடாகூடமா போஸ்ட் போடற ஆளு. இவர் முடி வெட்டிடுண்டதை கூட பிளாக்ல சொல்லிடுவார்.

நீங்கள் உங்களை பத்தி ஆறு விஷயங்கள் சொல்லலாம், என்னை மாதிரி ஆறு கேள்விகள் தான் கேக்கனும்னு இல்லை.

முதலில் இந்த வேதா, ஷ்ரி, 'கொடுமை'உஷா இவங்களை இழுக்கலாம்னு நினைத்தேன். அப்புறம் நான் தர்ம அடி வாங்க வேண்டி இருக்கும். எதுக்கு வம்பு?

இந்த ஆறு பேர் தான் எழுதனும்னு இல்லை. ஆறு கோடியே ஐம்பது லட்சம் தமிழர்களும் எழுதலாம். தப்பில்லை.

26 comments:

நாகை சிவா said...

//அடுக்கு மொழியில குதறி விட மாட்டார் மனுஷன்!//
டண் டணக்கா, டண் டணக்கா....
சூப்பர்.

//2 மாதம், 3 மாதம்னு ஒரே ஜீன்ஸ போட்டு அடிப்பானுங்க பாரு! //
இவ்வளவு கம்மியா சொல்லுறீங்க.

//நாங்க எல்லாம் பாரதி வம்சம்.//
இல்லையா பின்ன. மீசை இருந்தால் தானே அவன் ஆண்மகன்

மொத்ததில் மிக நன்றாக உள்ளது உங்கள் ஆறு.

இலவசக்கொத்தனார் said...

:)

Gopalan Ramasubbu said...

Tagitengala will post it soon.T.rajender illa guru avaru name Vijaya T.Rajender(numerology u know) antha manusana poi Teddy bear nu solrengale nyayama?

My days(Gops) said...

ha ha ha....
mamey unna adichika aaley illa...
VTR adukku moli jooper'po...

#1:- கரடி பொம்மை mattum million dollar illa.,
nanum rendu kelvi ketpen anga paarunga..
#2:- neenga jigidi'oda pesuna pasangala paarthe'dhey illai'ah?
cellphone irundhaalum/illatium, vaalavey mudiaadhu...
#3:- paavam'nga adhu avanga uniform..naan 2 reps'a interview edhu irruken., avanga sonadhu..
1.Tie illama duty paaartha, avanga rep illanu mudivu panniduvaangalam.
#4:- "meesai"'a mattum pathi pesaadheenga, naaan aludhruven..enga HR naan meesai vatcha'thuku 1day salary deduction varaikum poitaar....
(Receptionist'a vellai paarkum bodhu)
#5:- jeans'a thoavaichi, pullincha thaan adhan magimai therium..
pinna? enna'mo 100 thandaal edutha effect illa varum..?
#6:- school'la leave letter thaampa solli kodupaanga..
neeenga ketkuradha paartha=> thappu thappa love letter eludhi kodhuthu jigidi kitta adi vaanga effect'o nu enaku theriudhu..
ok ok...

sorry pa, peria comment eludhiten...nalla kelvigal...
@அறுசுவை நடராஜன்=> konjam over'a illa?
tag'a 2row kandipa naan pottren
he he he..

Ms.Congeniality said...

//டி.ராஜேந்தர் கூட டெடி பியர் மாதிரி தான் இருக்காரு, எங்கே யாராவது அவர் கன்னத்தை கிள்ளி, ச்ச்ச்சோ ச்வ்வ்வீட்ட்ட்//

Teddy bear um kaatula irukara karadi yum compare pannapdaadhu :-p

CUG pathi naanum idhe kelvigaloda oru post potruken..same pinch :-)
http://mscongenialityforall.blogspot.com/2006/04/cug-paduthum-paadu.html

Medical rep/salespeople appdi pona thaan ellaarum madhikaraanga..andha 5-6 inch thuni ku appdi enna madhipo

Meesai-Individuality venum..general comment: hrithik roshan maadhiri aaganum nu oru oma kuchi nenacha mudiyuma..

Naan jeans ovvoru thadavayum thochi thaan pottupen..odane oru range aa paakaadheenga, coz washing machine iruka bayam en?

Sachingops ketta maadhiri oru love letter ezhudha sollitharalaame nu idea kudupeenga pola?

Ms.Congeniality said...

naa erkanave enna pathi oru biography kuduthurken
http://mscongenialityforall.blogspot.com/2006/05/if-given-chance.html

aana after reading ur //நச்சுனு நாலு விஷயங்கள் // I want to post some exp of mine and some learnings..will do it soon :-)

Shuba said...

Hello boss!unga 4 vathu point is best!messaiya malicha pasangala paathale pathindu varum....hillarious post!vilunthu vilunthu sirichen...wait but till i knew that i was tagged paravala ungala madichu naan blog podalana approm ithu periya ilukku!so i have decided to write the tag i planned to write on sumthing but then im modifying it!and fulfilling yr tag~!

kuttichuvaru said...

sooper post!! unga annan Mr. Dubukks also kalakki irunthaaru intha post-la!! nalla nakkal post!!

Asin manasula naan thaan irukkennu purinjikittu Annan-aa perunthanmai-yaa vilagikitta unga nalla manasa paaraattaren MACHAAN!!

Syam said...

na...kalkalkiteengna....6 kelviyum athuku 6 pathilkaalum attakaasamngna... :-)

Bala.G said...

Ambi, nice post man.

கீதா சாம்பசிவம் said...

மீசை இல்லாத மனைவி, சீச்சீ, மீசை பிடிக்காத மனைவியும், மாமனாரும் வர ஒரு சின்னப்பெண்ணின் வாழ்த்துக்கள்.பெண் பார்க்கப் போகும்போதாவது ஜீன்ஸைத் துவைங்க.

கீதா சாம்பசிவம் said...

டுபுக்குவோடு போட்டி போட்டு எழுதறீங்க? எப்படி அண்ணனும், தம்பியும் ஒரே மாதிரி யோசிக்கிறீங்க?

barath said...

Nice blog!!

வேதா said...

//அது என்னங்க, எல்லா பொண்ணுகளுக்கும் டெடி பியர்(கரடி பொம்மை) ரொம்ப பிடிக்குது//
athu epdi generalise panreenga?
enaku pidikathu theriyumo?
//அதுலயும் இந்த CUG (Closed User Group)வசதி வேற இருந்தா அவ்வளவு தான். //
antha kootha yen kekareenga? antha tholla thaanga mudiyala:)

//நாங்க எல்லாம் பாரதி வம்சம். மீசையை எடுத்தா எங்க அம்மா ரேஷன் கார்டுலேருந்து என் பெயரை எடுத்துடுவா, என்னை வீட்டுகுள்ளவே விட மாட்டா!னு கண்டிப்பா சொல்லிட்டேன்.//
ROTFL:)


//முதலில் இந்த வேதா, ஷ்ரி, 'கொடுமை'உஷா இவங்களை இழுக்கலாம்னு நினைத்தேன். அப்புறம் நான் தர்ம அடி வாங்க வேண்டி இருக்கும். எதுக்கு வம்பு?//
athu, antha payam irukattum:)

Harish said...

umakku vera velaiyae illaya?
unga manager kitta pottu kodukanum...

Shuba said...

unga tag mudichitten but i think i havnt understood properly!

ambi said...

@naagai siva, welcome here, danks alot..

@ilavasam, :)

@gops, ohh, sorry, danks for the info. :)

@sachin(gops), danks pa! sathyama,letter ellam naan ezhuthinathe kidayaathu.

@Ms.C, danks. //Meesai-Individuality venum// not able to understand...

@shuba, i'm really honoured. danks.

@kutti, yeeh, my Annan Dubukku always kalakkal post than poduvaar.
btw, oru safetyku thannu sonnen. vittu tharennu sollaliyee! Gr..rrr.

@syam, danks naa, naan romba chinna payan, neenga ennai thambi ne kupadalaam. :)

@bala.G, danks.

@bharath, welcome here.

@geetha, Gr..rrr. wife ok.. athu enna mamanaar..?
btw, avarukku pottiyaa? thappu, thappu! Avar thala , naan thondan. Oru kodiyil pootha iru malargal.. he hee..

@veda, danks, neenga ellam terrorist groups nu enakku theriyathaa? past timela konja adiyaa vaangi irukken..?

@harish, anna, enna naa periya periya vaarthai ellam solli intha kozhanthaiya payam kaatreenga!

@subha, wait, i'm landing to your blog now..

shree said...

hey, TR adiyaala nee?? kalakkala kavidhai yeludhi irukka. un kelvikkellam rombo sincerea indha gops anna yeludhi irukkaru paren pavam.

"முதலில் இந்த வேதா, ஷ்ரி, 'கொடுமை'உஷா இவங்களை இழுக்கலாம்னு நினைத்தேன். அப்புறம் நான் தர்ம அடி வாங்க வேண்டி இருக்கும். எதுக்கு வம்பு?" - hmm andha bayam irukkattum

smiley said...

1) what would T. Rajender say...
Once more please :)

2) I heard the boys have a cell phone separately for each girlfriend? avangalukka use panna theriyathu? :)

3) konjam body spray vangikondal jeans'um thvaika vendam, kalattavum vendam, kulikavum vendam :)

4) thatta patti ellaraiyum kolai pannalam for leave :)

Dubukku said...

"அவர் தல நான் தொண்டன்" - டேய் டேய் டேய்...தாங்கலடா....இங்க இவ்வள்வு பீலிங் காட்டிட்டு அங்க என் ப்ளாக்ல வந்து கலாசற....(அத்தோட நீ கொடுமை உஷா ப்ளாக்ல என்னப் பத்தி சொல்லியிருந்ததையும் நான் படிச்சுட்டேன்..)

இன்னா நடிப்புடா சாமி :)))

இருந்தாலும் உன் பக்தியைக் கண்டு மெச்சினோம்

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Usha said...

TR paatu super! Tag pannama irundhadhanala pozhaicha...infact oru thigil-oda dhan padichen un list-a...idhe madhiri chamatha iru

ambi said...

@shree, he hee, danks..

@dubukku, anna, athu yaaroo oru paiyan, naan illanganaa, he hee

@smiley, danka alot..

@usha, neenga sonna seringa. apdiye irukken. :)

Viji said...

haha. Ambi, it made a good read. :))

unga alavuku ezhudha mudiyadhu. enaku konjam time kudunga. oru 2 naal la edho ennala mudinjadhu ezhudharen! ;)

மு.கார்த்திகேயன் said...

Ambi..
paatheengala sidela asin perai use panni irukeengka..thambi wife name-ai ipdiya post panrathu..

Nayan anni nalla irukangkala

奇堡比 said...

新女性徵信
外遇調查站
鴻海徵信
亞洲徵信
非凡徵信社
鳳凰徵信社
中華新女性徵信社
全國新女性徵信社
全省女人徵信有限公司
私家偵探超優網
女人感情會館-婚姻感情挽回徵信
女子偵探徵信網
女子國際徵信
外遇抓姦偵探社
女子徵信社
女人國際徵信
女子徵信社
台中縣徵信商業同業公會
成功科技器材
女人國際徵信社
女人國際徵信
三立徵信社-外遇
女人國際徵信
女人國際徵信
大同女人徵信聯盟
晚晴徵信