Thursday, June 29, 2006

என்ன தவம் செய்தனை!

2 வாரமாக ஒரே யோசனை. இந்த பிளாக் எழுத ஆரம்பித்து 5 மாதங்கள் ஆகி விட்டது. ஒரு 42 பதிவுகளும் போட்டாச்சு. நாலு பாசக்கார மக்களும் வந்து போறாங்க.
ஒரே மெக்கானிக்கலாக செல்லும் வாழ்க்கையில் இந்த பிளாக் எழுதுவது ஒன்று தான் மகிழ்ச்சியை தந்தது.

போதுமே! பிளாக்கை இழுத்து மூடி விடலாமா?

வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை பற்றி தீவிர சிந்தனை. நாம எழுதலைனா ஒன்னும் குறைந்து விடாது!

கதம்! கதம்!னு சொல்லிவிடலாம் என்று கிட்டத்தட்ட முடிவுக்கு வந்தாச்சு.

இந்த நிலையில், நேற்று ஒரு ISD- கால். என்னடா! நாளைக்கு தானே கான்பிரன்ஸ் கால்!னு நம்ம தல சொல்லிட்டு போச்சு! அதுவும் இப்படி நம்ம மொபைலுக்கு எல்லாம் கூப்பிட மாட்டாங்களே!னு குழப்பம்.

சும்மா வெள்ளைகார துரை மாதிரி, இங்லிபீஸ்ல என் பெயரை உச்சரித்து, நீங்க நல்ல பிளாக் எல்லம் எழுதறிங்க!னு பாராட்டு.

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் (வடிவேலு மாதிரி இழுக்கவும்).

"யாருப்பா, நீ?"னு கேட்டேன்.
அட! நம்மஅர்ஜுனா!

நான் எழுதிய பதிவுகள், (சில கமண்ட்ஸ் கூட) பலதை வரிசையாக சொல்லி, சூப்பரு! எப்படி இதேல்லாம்?னு கேட்க கேட்க, எனக்கு பேச்சே வரலை. ரேவதி சொன்ன மாதிரி, "வெறும் காத்து தேங்க்" வந்தது!

நீண்ட நாளாக பழகியது போன்ற ஒரு உரையாடல், சினேகம். பல பல விஷயங்கள் பேசி விட்டு, "நல்லா எழுதுங்க!, உங்க Tag பாக்கி இருக்கு, ஆராய்ச்சி பணிகள் அதிகமா இருப்பதால் முடியவில்லை!"னு அர்ஜுனா சொல்ல, சொல்ல, எனக்கு "இப்படி ஒரு நல்லவனா?( நீ தான் அர்ஜுனா!)னு ஆச்சர்யம்.

இந்த ஒரு சந்தோஷம் போதுமே வாழ்க்கை முழுதும்! இனி என்ன வேண்டும்?

"ஜப்பான்லேந்து சாக்கிசான் கூப்டாக!
அமேரிக்காலேந்து மைக்கேல் சாக்சன் கூப்டாக!
லண்டன்லேந்து அர்ஜுனா கூப்டாக!!"னு இனி நானும் கோவை சரளா மாதிரி சொல்லிக்கலாம்.

நன்றி!னு ஒரு சொல்லில் உன்னை சிறியவனாக்க விரும்ப வில்லை அர்ஜுனா!

என்றேன்றும் நன்றியுடன்,
அம்பி

43 comments:

Gopalan Ramasubbu said...

என்ன குருவே வீட்டுல பொண்ணு பார்த்துடாங்களா? புரியுது புரியுது,வரவேன்டியவங்க வரபோறாங்க பிளாக் எழுத நேரம் இல்லனு சொல்றத விட்டுட்டு எதுக்கு மெக்கானிக்,ஏரோனாடிக்,ரோபோடிக் டயலாக் எல்லாம் ;).

Comeon Ambi,cheerup :)

வேதா said...

oh my god, ambi inimey blog ezhutha porathillaiya. pochu, blog ulagamey sthambichu poga porathu, innum yenenomo aga porathu, ipdiyellam yaarum varutha pada porathulla, yenna neenga ezhuthartha nirutha porathilla-nu ellarukum theriyum. athanala namma gops sonna mathiri, why so much dialogue?:)(ithey mathiri naan ezhuthina pothu ennama kalasina nii? ippa nala matniiya:))

செந்தழல் ரவி said...

லோக்கல் காலுக்கு எப்பவும் மரியாதை இல்லை பாருங்க...லன்டன் காலுக்கு (!?) தான் எப்பவும் மரியாதை...பதிவு...ஹும்...

(மனதுக்குள்: எங்கியாவது ஆன்சைட் போனா முதல்ல இவருக்கு ஒரு போனப்போட்டுட்டு தான் மறு வேலை...சாமி பதிவு எல்லாம் போடும் )

:) :)

நாகை சிவா said...

//"ஜப்பான்லேந்து சாக்கிசான் கூப்டாக!
அமேரிக்காலேந்து மைக்கேல் சாக்சன் கூப்டாக!
லண்டன்லேந்து அர்ஜுனா கூப்டாக!!"னு இனி நானும் கோவை சரளா மாதிரி சொல்லிக்கலாம்.//
நம்பர் சொல்லுங்க பங்காளி, சூடானில் இருந்து சிவா கூப்பிட்டாகனும் சொல்லிகலாம்......

இது நல்ல ஐடியாவா இருக்கே.... அம்பிக்கு போன் பண்ணுனா, தனியா நம்மளை பத்தி ஒரு பதிவு போடுவார் போல இருக்கே..........போடுறா போனை அம்பிக்கு...........

Arjuna_Speaks said...

Ambi - it was nice of u to put a post on me :) - I am honoured my friend :)..Infact - I also wrote about u today morning :)..It was nice talking to u - and we will be in touch :)..thanks once again my friend :)

Shuba said...
This comment has been removed by a blog administrator.
Shuba said...

Ambi ungalukku call vandutta romba santhosam!

aanaaa unga scene thaangalapa...inga enna one big post....anga pona athavida big post!adaddaaa bloggers blockaa rendu perukkum...........paasakaaatchi!

கீதா சாம்பசிவம் said...

அம்பி,
நிஜமாவே நிறுத்தப்போறீங்களா?ரொம்ப வருத்தமா இருக்கு. உங்க பதிவும் படிச்சேன். அர்ஜுனா உங்களைப் பத்தி எழுதி இருக்கிறதையும் படிச்சேன். நேரம் இருக்காது வாஸ்தவம்தான். ஆனால் ஒரு நல்ல நகைச்சுவையான பதிவை இழந்துடுவுமோனு வருத்தமா இருக்கு.

Viji said...

aahaaa, Arjuna blog pona, ungala pathi oru post. seri nu inga vandha, neenga Arjuna pathi ezhudahringa. cha, enna nadakkudhu inga?? "enna kodumai saravanan idhu?"
rendu perum othumaya irukkingala... yenakku pudikkave illa, manasu patharudhu. epdiyavadhu sanda mooti vittu, "Naraayana,Naarayana" sollanum pola irukku! :-D

மாரி said...

அற்புதமான நகைச்சுவை உணர்வுடன் பதியப்பட்ட பதிவுகள். இந்த பதிவில் கடையை சாத்துவது (பதிவை மூடுவது) குறித்து நீங்கள் குறிப்பிட்டிருந்தது அந்த நகைச்சுவை உணர்வுடன் கூடிய பில்டப் தான் என்று கருதுகிறேன்.

வலையுலகம் சிரித்த முகத்துடன் திகழ தாங்கள் இது போன்ற பதிவுகளை தொடர்ந்து அளித்து வாருங்கள்.

வாழ்த்துக்கள்.

Harish said...

Thalaiva...Unakku velai adigmaa pochchu nu inda mudivukku vandutiya? Enna pananum sollu? Un Manager a pottu thalanuma? dayavu seydu vera enda mudivukku poidadae ppu.....

Shuba said...

viji neeyum naanum than pesikkarom naamalum intha maadiri blog puratchi seyyalaama!

Syam said...

அம்பி என்னப்பு இது...ஒன்னும் காமெடி கீமெடி பன்னலயே...ஆள் ஆளுக்கு பிளாக்க இழுத்து மூடரத பத்தி பேசிட்டு இருக்கீக...அப்படி எல்லாம் உங்க இஷ்டத்துக்கு முடியாது...இங்கன கமென் ட் போடுற எல்லாரும் ஷேர் ஹோல்டர்கள்..எங்க அனுமதி இல்லாம இப்படி எல்லாம் முடிவு எடுக்க முடியாது..ஆமா உங்க போன் நம்மர் என்ன (என்னைய பத்தியும் ஒரு போஸ்ட் வந்தா நல்லா இருக்குமேனு தான்) :-)

kuttichuvaru said...

soober appu!! Arjuna ungalukku energy tonic kuduthuttaaru..... so inime thirumba full form-kku vaanga!!

Narayanan Venkitu said...

Ambi,

Came from Arjuna.!! Yeah, keep writing.!

First time for me here and I like your writings too.!

Prabhu said...

Arjunaruku Krishnar ubathesama senjaa madhiri ungaluku intha kaalthu Arjunar ubathesam senju irukaar...ozhnga adha kettu nadanga :)

Ram said...

//வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை பற்றி தீவிர சிந்தனை. //

Explain pannunga.!!! :))

@Gopalan Ramasubbu - LOL...Nalla narukku nnu kettenga.!!! :))

Bala.G said...

Pasakaara payaluvala irukeenga!!

நாகை சிவா said...

//வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை பற்றி தீவிர சிந்தனை. //

//Explain pannunga.!!! :))//


அண்ணனுக்கு ஆகஸ்ட் மாசம் ஆப்பு இருக்குனு கேள்விப்பட்டேன். அதான் அந்த ஆப்பை எப்படி சமாளிப்பதுனு ..........................

Shuba said...

ei ambi naaagai siva solratha paatha aug la kalyaanama?congrats!anga innoruthar veetkllayum visesham solliruppare!So ponnu entha oor?

ambi said...

@gops, shishya, veen puraliya kelappi vidathappa! this is for some other reason. :)

@veda, summa solla kudaathu, nallava kalasi iruka. kuthunga ejamaan! kuthunga! :)LOL.

@senthamizh ravi, welcome, kadaya moodara nerathukku vareengaleepaa! (read it in sivaji style). will think over it..

@naagai siva, ROTFL on your comment.

@arjuna, neraiyaa poraamai pasanga irukaangapaa!

@shuba, scenaa..? gr..rrr. augustla vera oru Aapu irukku Londonlenthu enga Annachi dubukku varaar ennaku Aapu adikka. (konjamaa kalasi irukken avara!)atha thaan siva mentioned.

@geetha, thanx, will reconsider twice my decision.

@viji, ethanai peru ipdi kilambi irukeenga? ulagathil entha sakthiyum pirikka mudiyaathu. sambo mahadeva!

@ulagan, welcome here and thanx, i'm really honoured. let's see.

@harish, LOL on ur comment. evloo anbaa en melaaaa? AVVVVVVVVVVVVVVV!

@syam, he, hee i've mentioned my no in my old post (kesari).. share holdersaaa? ahaaaaa! ithu verayaa?

@kutti, danks paa! yeeh, coz of his talk i've to rethink. Hhhhmmm.. let me see.

@narayan, welcome here.. ithanai naala engappaa iruntheenga neenga ellaam? :) will try to sort out.

@prabhu, hahaaa, avan nejamaave upadesam thaan panninaan. :)

ambi said...

@Ram, he hee, pala pala sinthanaigal.. ethai naan solluven?

@bala.g, danks paa! :)

@naagai siva, pangaali, neenga etho solla poga, inga oru vathanthi paravuthu parunga.

@subha, athellam illai. but parents started in full swing. will update U. :) btw, sonnaru, sonnaru! unnai, vijiya pathiyum sonnaru. :)

aruna said...

oru phone pannina oru pathivu ilavasamnu offer pola inga ! I am sure your phone keeps ringing these days :-) Keep up the good work & keep writing.

My days(Gops) said...

elay, naan krk'va "pudhu maapillai'nu sollikittu irrundha nee pudhu maapillai aagaporia?"
gud gud...
btw.. mavaney nee(nga) mattum blog'a niruthu 'na?(ri'via?) "manidha urimai commission" kitta unna pudichi koduthiruven........

PS:- adhu enna naan phone pannu'na mattum unakku line'a kidaikka maatengudhu? (sare sare)

Ms.Congeniality said...

ambi,
Ur blogs are tooo good!!U write extremely well..pls do reconsider ur decision :)

அனுசுயா said...

அம்பி ப்ளாக் எழுதுவதை நிறுத்தும் என்னம் கொஞ்ச நாளிலேயே அனைவருக்கும் கட்டாயம் வரும். ஆனால் நம்மால் அதை நிறுத்த முடியாது. எழுதிய கை சும்மாயிருக்காது.

smiley said...

s everyday, very true :)good one

வேதா said...

அம்பி, ப்ளாக் உலகில் உங்க stand-அ பத்தி தெரிஞ்சுக்க தான் இப்படி ஒரு பதிவு எழுதி ஒரு பிட்ட போட்டீங்கன்னு நான் சொல்றேன்:) என்ன கரீட்டா?(ஆமா இத எழுதியதிலிருந்து உங்க கைப்பேசி விடாம அடிச்சுருக்குமே;)

Marutham said...

Hey Lovely post!!
//
"ஜப்பான்லேந்து சாக்கிசான் கூப்டாக!
அமேரிக்காலேந்து மைக்கேல் சாக்சன் கூப்டாக!
லண்டன்லேந்து அர்ஜுனா கூப்டாக!!"னு இனி நானும் கோவை சரளா மாதிரி சொல்லிக்கலாம்.

//
:))
Nice frends u have!! :) Nadathunga..Blog PULSHTOP yosichukooda pakadheenga ;)

Viji said...

Shuba- athellam vendaam de. ivangala madhiri namba onnum publicity'a nambi vaazhala! ;)

Usha said...

adada, arjuna call pannana? avalo impactu?? nadathu rasa nadathu!

hey, naan kooda izhuthu moodidalama-nu yosichindruken..it is good sometimes to resign with a good name, wht say?

Seri thalaiva, btw, naan post pottuten..ippadilam mirattadha ennai. Adhu ennangna thideernu mariyadhai ellam thareenga?? konnuduven!!

Usha said...

ada paavi narada!! Unkitta vandhu sonnen paar..send me your number, mavane naanum London-lerndhu call panni 4 nalla varthai solren. Anuparaya?

daydreamer said...

Hello

indha blog a nirutha poren ... adhu idhunnu sollikittu edhuna senjeenga.. appram neenga enakku badhil solla vendi varum.... en post ku regular aa comment panra oru blogger a naan izhakka virumbala... yedhunna research help venumna solli anuppunga... seyya paakaren .. summa blog nirutharennu .ularikittu..

மு.கார்த்திகேயன் said...

Ambi..ippadi ellam sattu puttu niruththidatheenga..nanga ellam paavam..

ama..ithu onnum karunanidhi kachchi postai resign panra stunt onnum illiye :-))

Sasiprabha said...

Thodanguvadhu Elidhu.. Mudippadhu Romba Kastam.. Blog mattum illa.. Vaazhkkaiyil neraiya vishayam appadithaan. Dont forget that, sharing happy moments makes us double times happy.. ie. one time for remembering that happy moment, 2nd time for making someone happy.

Viji said...

Ambi- I've untagged myself. poi parunga.

Usha said...

*Oh shaka safaiya...* - as a reminder for what i said ;)

மு.கார்த்திகேயன் said...
This comment has been removed by a blog administrator.
மு.கார்த்திகேயன் said...

அம்பி, சத்தியமா இது கருணாநிதி கட்சி பதவியை ராஜினாமா செய்ரேன்னு அடிக்கடி மிரட்டுறது மாதிரி தான் இருக்கு.. அம்பி, எப்போதிருந்து இது மாதிரி..

BTW, அப்படி எல்லாம் எழுதுறதை நிப்பாடிடாதீங்க அம்பி அண்ணா..

ambi said...

@aruna, he hee, coimbatore kusumbu ithu thaanungalaa?

@sachin(gops), bayama irukkupa! ipdi yellam mirataathe!

@Ms.C, thanx for honouring me.

@anusuya, correctaa sonningaa. :) thanx alot.

@smiley, thanks alot.

@veda, unakku porukkaathee? will reply in next post.

ambi said...

@marutham, thanks amrutham, yeeh, i'm blessed with frnz.

@viji, kumbakonam kusumbu ithu thaana? :)

@usha, danks, danks.. marakka maatten.. don't worry.

@daydreamer, he hee, LOL on ur comment. danks..

@karthi, danks paa! katchi pathaviyaa? ROTFL :)

@viji, partheen, dropped a comment too. :)

@sasi, ada daa, romba peel panna vechuteenga.. :)

Viji said...

ada! enna Ambi, ella oor kusumbu pathiyum aaraichi panringala enna? ;)

奇堡比 said...

新女性徵信
外遇調查站
鴻海徵信
亞洲徵信
非凡徵信社
鳳凰徵信社
中華新女性徵信社
全國新女性徵信社
全省女人徵信有限公司
私家偵探超優網
女人感情會館-婚姻感情挽回徵信
女子偵探徵信網
女子國際徵信
外遇抓姦偵探社
女子徵信社
女人國際徵信
女子徵信社
台中縣徵信商業同業公會
成功科技器材
女人國際徵信社
女人國際徵信
三立徵信社-外遇
女人國際徵信
女人國際徵信
大同女人徵信聯盟
晚晴徵信