Wednesday, July 05, 2006

அலோ! செக்! மைக் டெஸ்டிங்க் 1..2..3

மிகுந்த வேலை பளு காரணமாகவும், வேறு சில சொல்ல விரும்பாத காரணங்களால் ஏற்பட்ட மனசோர்வினாலும் நான் பிளாக்கை இழுத்து மூட நினைத்தது என்னவோ உண்மை தான்.
அர்ஜுனாவுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஒரு போஸ்ட் போட்டு, கடையை இழுத்து மூடிவிடலாம்னு நினைத்தேன். ஆனல் நடந்தது எல்லாமே உல்டா.

ஆனால் அர்ஜுனாவின் உரையாடல் அந்த முடிவை மாற்றி விட்டது.

சும்மா சொல்ல கூடாது! அட டா! இ-மெயிலில் அன்பு கட்டளைகள், மிரட்டல்கள் மற்றும் உங்களின் நக்கல் கமெண்ட்ஸ், என பய புள்ளைங்க பாச மழை பொழிஞ்சுட்டீங்க.

"விட்டெறிந்த கீரையை வழிச்சு போடுடி என் சுரனை கெட்ட வல்லாட்டி!"னு எல்லாம் நக்கல் விடறாங்க.
இந்த பழமொழிக்கு விளக்கத்தை இங்கு பார்க்கவும்.

பிளாக் உலகின் பெரிய தலை (சும்மா அஸால்ட்டா 50 கமெண்ட்ஸ் விழும்) எல்லாம் போன் போட்டு விசாரிப்பு. (இதை படித்து விட்டு தலை இப்போ மெலிதாக புன்முறுவல் செய்யும்).
அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து 12 நிமிடம் 30 செகண்ட் ஆலோசனை நடந்தது.

எல்லாம் அந்த ஷ்ரிதேவி, பூதேவி சமேத நாரயண மூர்த்தியின் தனிப்பெருங் கருணை!

யாரு அந்த தலை..? கண்டுபிடிச்சாசா? அதான்! அதே தான்!

மனித உரிமை கமிஷனில் ரிப்போர்ட் பண்ணுவேன்! என்று எல்லாம் அன்பு மிரட்டல்கள் வந்தன.

கைபுள்ள சொல்ற மாதிரி இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி தான் உடம்பு ரணகளமா இருக்கு!

இதற்கு நடுவில், அம்பிக்கு ஒரு தங்கமணி(அக்னி நட்சத்திரம்) வர போறாங்க! அதான் காரணம்!னு ஒரு நல்லவன் கிளப்பி விட்டதில் "அப்படியா? எந்த ஊரு? என்ன பேரு?"னு விசாரிப்புகள்.

இதுவரை அப்படியேல்லாம் ஒன்னும் இல்லை. 18 பட்டிக்கும் வீட்டிலிருந்து சேதி பறந்திருக்கிறது. அட! ஒரு சக பிளாக்கர் கூட எனக்காக பொண்ணு தேடறாங்க பா!

அப்படியே வர வேண்டியவங்க வந்தாலும், அவங்களையும் சேர்த்து பிளாக் எழுத வச்சுட மாட்டோம்? he hee,I'll dictate, she will type.(ஆணாதிக்கம் ஒழிக!னு இப்பவே
சுபா கத்தறாங்க பாரு! ஒரு பன்னீர் சோடா ஒடச்சு ரெடியா வைங்க பா!

"என்னை மீறி யாரு வரானு அதையும் தான் பார்த்துடுவோம்!"னு அசின் ஒரு பக்கம், கோபிகா மறுபக்கம் மிரட்டல் விடுத்து உள்ளனர். நயன்,மற்றும் ஐஸ் குட்டிக்கு இன்னும் விஷயம் தெரியாது. (kutti, arjuna, syam, karthi, pls note the point your honour!)
சே! அசினுக்கு லிஸ்ட் கூடிட்டே போகுதுடா சாமி! இத சமாளிக்கறதே பெரும் பாடா இருக்கு!

பூரி கட்டை, தோசை திருப்பி போன்ற திவ்ய ஆயுதங்களால் நான் என்கவுண்டர் செய்யபடுவது உறுதியாகி விட்டது.(யாரு தான் இத எல்லாம் கண்டுபிடிச்சானோ?)

சரி, மீண்டும் ஜே.கே.பி! மாதிரி புத்தூணர்வுடன் இதோ எழுந்து விட்டேன்.

நாகை சிவாவின் கண்ணி வெடிகளை பற்றிய போஸ்ட் படித்ததும், நமக்கும் ஒரு சின்ன ஆசை. சீரியஸான மேட்டரை தொட்டு ரொம்ப நாள் ஆச்சே!
Men In Black - "The Elite NSG Commondos" பற்றி ஒரு 2 or 3 போஸ்ட் போடலாம்னு இருக்கேன். இப்போ தான் ஸ்கெட்ச் போட்ருக்கேன். பார்ப்போம்.

சரி, நம்ம பிளாக், எந்த அளவுக்கு மக்களிடம் அங்கீகாரம் பெற்றுள்ளதுனு தெரிந்து கொள்ள ஒரு சின்ன நப்பாசை. அதன் விளைவு தான் முந்தய பதிவு.

பிளாக் பிரமோஷன் டெக்னிகில் இது அடுத்த கட்டம். மார்கெட்டிங்க்ல இதை Brand Recoginisation என்று சொல்வார்கள். பரவாயில்லை, ரிஸல்ட் நல்லா தான் இருக்கு,

பின்குறிப்பு: அடுத்த போஸ்ட்
Pubs In banglore 

30 comments:

வேதா said...

so ambi, back with a bang:)

//சரி, நம்ம பிளாக், எந்த அளவுக்கு மக்களிடம் அங்கீகாரம் பெற்றுள்ளதுனு தெரிந்து கொள்ள ஒரு சின்ன நப்பாசை. அதன் விளைவு தான் முந்தய பதிவு. //

இத தான நானு அப்போ புடிச்சு சொல்லிகினு இருந்தேன். மக்களே,
இதுவும் ஒரு ப்ளாக் ப்ரோமஷன் டெக்னிக் தான்.


//சே! அசினுக்கு லிஸ்ட் கூடிட்டே போகுதுடா சாமி! இத சமாளிக்கறதே பெரும் பாடா இருக்கு!//

ஒன்னும் சொல்றதுக்கு இல்ல, நீ திருந்தவே மாட்ட அம்பி;)

மு.கார்த்திகேயன் said...

அம்பி, இந்த உலகமே உங்க பின்னால இருந்தாலும் எனக்கு கவலை இல்லை.. என் கண்மணி, செல்லகுட்டி அசினை நான் விட்டுத் தரவே மட்டேன்.. பாவம் இந்த அசின் பொண்ணு.. என்னை மனசுல வச்சுகிட்டு அதை வெளிய சொல்லமுடியாம தவிக்கிற கஷ்டம் எனக்கு தானே தெரியும்.. நீ கவலைபடாதேடா அசின் செல்லம்..

மு.கார்த்திகேயன் said...

அம்பி, நாந்தான் சொன்னேன்ல இது கலைஞர் ராஜினாமா செய்ற மாதிரி ஒரு ஸ்டண்ட்ன்னு..

Shuba said...

padu paavi padu paavi...naane en peraye click panni paathathula en malaithulikku poi vittathu!ennna pathi perumaiya naalu vaarthai naallavi pallavi arivaalinu elutha koodatha!!!!Grrrrrrr!

Gopalan Ramasubbu said...

////சே! அசினுக்கு லிஸ்ட் கூடிட்டே போகுதுடா சாமி! இத சமாளிக்கறதே பெரும் பாடா இருக்கு!//


அம்பி குருவே, கவலை படாதீங்க அஸின் பிரச்சனை எல்லாம் ஒரு பிரச்சனையே இல்ல.என் அடுத்த போஸ்ட்ல உங்க அஸின் பிரச்சனைக்கு ஒரு முடிவுகட்றேன் பாருங்க.

நாகை சிவா said...

//யாரு அந்த தலை..? கண்டுபிடிச்சாசா? அதான்! அதே தான்//
இது யாரு தெரியலை!

//அம்பிக்கு ஒரு தங்கமணி(அக்னி நட்சத்திரம்) வர போறாங்க! அதான் காரணம்!னு ஒரு நல்லவன் கிளப்பி விட்டதில் //
யாரு இந்த நல்லவர். ரொம்ப நல்லவரா இருப்பாரோ....


//Men In Black - "The Elite NSG Commondos" //
எழுது அப்பு, ஆனா இதை விட உன்னூட அடுத்த போஸ்ட் மக்கள் ரொம்ப ஆவலா எதிர்பாக்குறாங்க, என்ன ஷாம் நான் சொல்லுறது சரி தானே?

//அசினுக்கு லிஸ்ட் கூடிட்டே போகுதுடா சாமி! இத சமாளிக்கறதே பெரும் பாடா இருக்கு!//
உனக்கு மேட்டர் தெரியாதுனு நினைக்கிறேன், நம்ம ஷாம் சங்கத்துக்கு வந்து நயன் தாராவை பத்தி பேசியதால் தான் இந்த கண்ணி வெடி மேட்டரே ஆரம்ப்பம் ஆச்சு. இப்ப அசின பத்தி நீ ஆரம்பிச்சு இருக்க. ஹ்ம் பாப்போம்.....

நாகை சிவா said...

//ஒன்னும் சொல்றதுக்கு இல்ல, நீ திருந்தவே மாட்ட அம்பி;) //
நல்லா சொல்லுங்க வேதா, இது எல்லாம் அம்பிக்கு தேவையா???

//naane en peraye click panni paathathula en malaithulikku poi vittathu!//
நல்லா அறிவாளியாதான் இருக்கீங்க. வாழ்த்துக்கள்.

//ennna pathi perumaiya naalu vaarthai naallavi pallavi arivaalinu elutha koodatha!!!!//
அம்பிய கொஞ்சம் பொய் சொல்ல சொல்லுறீங்க....அம்பி வந்து சொல்லுப்பா....நல்லவி, பல்லவி, அறிவாளி....

ஆனா பாருங்க சுபா, அம்பிக்கு முன்னாடியே உங்கள நான் அறிவாளினு சொல்லிட்டேனாக்கும்....

நாகை சிவா said...

//கலைஞர் ராஜினாமா செய்ற மாதிரி ஒரு ஸ்டண்ட்ன்னு.. //
என்ன கார்த்திகேயன், கலைஞர் ராஜினாமாவா........ புதுசா இருக்கே....

My days(Gops) said...

ada, pottu vaangitiyaa'pa?
nalla irrukku indha formula...
adhu sare.,
asin asin'nu yempa
_ _ _ _ vudura?


@shuba:- naallavi & arivaali enakku therium
adhu enna'nga=> pallavi?
ennakku neenga solli aaganum...

Viji said...

ooru evlo dhan sonnalum ongulku enga pochu buthi?? sonna sol thavara koodadhu Ambi... ummachi kanna kuthiduvar! ;) :-D

Usha said...

Neram sariyilla rasa unaku...avlodhan solven. *Oh shaka safaiya maashisa anniya*..beat innum sound-a adika poradhu unaku..

Adhu sari, en innum scene udaradha niruthalaya nee? ;) Adhan veda soltala, blog ulagam sthambichu ninnudadhu-nu..;-) innum enna scene unaku?

கீதா சாம்பசிவம் said...

சும்மா ஒரு பாவ்லா காட்டிப் பார்த்தீங்களாக்கும்? ம்ம்ம்ம், இன்னும் அசினும், கோபிகாவும் மிரட்டல் விட்டிருக்காங்களா? அதானே பார்த்தேன்? திடீர்னு எழுத வரீங்களேனு. இன்னும் எத்தனை பேர்? அது யாரு உங்களுக்குப் பொண்ணு பார்க்கறது? அப்புறம் இது என்ன புதிசா "pubs in Bangalore"? ஓடுது?

தி. ரா. ச.(T.R.C.) said...

நீங்களே அசினுடன் கைத்தலம் பற்ற கனாக்கண்டேன் தோழி கேசு இதில் கார்திக் வேறு எனக்கு மிரட்டல் அசினை விட்டு தர மட்டேன் என்று.எனக்கு அபயம் கொடுங்கள்.அப்பப்போ எனபதிவுக்கும் வந்து கொஞ்சம் கல்லாய்கிறது. அன்பன் தி ரா ச

Syam said...

அடிச்சான்யா அந்தர் பல்டி...அப்பு அம்பி நடத்துங்க நடத்துங்க..

மத்தபடி எல்லாத்தயும் பத்தி சூடான் சிங்கம் அண்ணன் நாகை சிவா தேவையான அளவு அலசி விட்டதால்..

இப்போ ஜகா வாங்கிக்கிட்டு மறுபடியும் வரேன்... :-)

Bala.G said...

தலைவரே, ஒரே ஒரு விஷயத்த இவ்ளோ பெரிய பதிவா எப்படி உங்களால போட முடியுது??...தயவு செய்து 'Boys' ஹரினியை விட்டு வைக்கவும் ;-)

smiley said...

mike testingaaay ivalau jora irunthaaa, real kutcheri eppadi irukkum.
enjoying ur blog :)

Harish said...

aaha...inimae neenga blog panina maadhiri thaan ponga

Syam said...

@bala, ஏங்க சும்மா இருந்த சங்க ஊதி கெடுக்கறீங்க...அவர் ஏதாவது சொன்னாரா ஹ்ரினிய பத்தி :-)

Ponnarasi Kothandaraman said...

Hehehe... Naama asin fan'a ;) Hm.. irukatum irukatum :P
Nice post :) Sorry lost the page for few days..Inimey will keep in track :)

Prabhu said...

Aanaalum ivvlo periya build-up kuduthu , "Aiyooo kolraangale" effect kondu vanthutteenga.

Pubs a pathi ezhuthum pothu konjam poto poteenga nna oru kilu kiluppa irukum.. (poto potaa neraiya peru varuvaanga, adhuvum oru technique)

ambi said...

@veda, நான் இப்போ என்ன தப்பு பண்ணிட்டேன் , திருந்த சொல்ற என்னை..? :)

@karthik, வேணாம் தம்பி, விட்டுடு! நான் அழுதுடுவேன்! அசின் அண்ணி வந்து உனக்கு ஒரு நல்ல பொண்ணு பார்ப்பாங்க என்ன? :)

@shuba, nee puthisaali!nu arjuna sonnan, anna evloo puthisaalinu enakku ippo thaan theriyuthu! ROTFL,
ammam, athu enna pallavi..? sachin, ketkaraan paaru..!

@Gops, நன்றி சிஷ்யா! ஏதவது பண்ணுப்பா! (என்ன வெச்சு ஏதும் காமெடி, கீமெடி பண்ணிட மாட்டியே..?)

@naagai siva, தல! நீ இருக்கற வரைக்கும் எனக்கு கமெண்ட்ஸ்க்கு பஞ்சமே வராது பா!
வேதாவுக்கு நான் குடுத்த பதிலை படிக்கவும்! :)

@mydays(gops), (with innocent look)asin thaanpa yen Uyiru! naan epdi athaa vida mudiyum..? subhakku Un doubtaa kettuten..

@viji, enakku buthiyee kidayaathu! pothumaaa? ennaiye target panra nee..!

@usha, unakku nerayaa bathil kuduthaachu, so no comments here.

@Geetha, //அது யாரு உங்களுக்குப் பொண்ணு பார்க்கறது? //

அதானே யாருங்க அது..?
//அப்புறம் இது என்ன புதிசா "pubs in Bangalore"? ஓடுது? //
he hee, நான் தான் அதை ஓட விட்டேன்!

ambi said...

@TRC sir, he, hee,உங்கள் ஆசி இருந்தா கனவு மெய்ப்படும்! இனி தவறாது வருவேன்!

@syam, he hee, இதேல்லாம் கண்டுக்கப்படாது!

//தலைவரே, ஒரே ஒரு விஷயத்த இவ்ளோ பெரிய பதிவா எப்படி உங்களால போட முடியுது??...//
@bala.g, he, hee, இதேல்லாம் பொது வாழ்க்கையில் ஜகஜம்! கண்டுக்கப்படாது!
harini Un Aalaa? :)
i've no objection, syam kitta permission vaangikoo!

@smiley, danks, enime thaan kalai katta poguthu! :)

@harish, perplexed with your comment, enna solra thala..? puriyalaiyee..?

@ syam, see bala.g comment. :)

@pons, vaama minnal! fan illa, Air conditioner..

@prabhu, ROTFL on your comment. porumai, porumai.. already my image has gone down, nee vera enna Ethi vidara..?

Bala.G said...

adapaavigala....approval ellaam vaanga sollureenga....edhaavadhu form fill panni submit pannanuma?? ;-)

Arjuna_Speaks said...

yappa Ambi - Asin list-la enna sethudathey pa..Its been ages since I divorced her!! U can have her..I dont want...Freeya kodutha kooda vendam LOL..

Gopalan Ramasubbu said...

//என்ன வெச்சு ஏதும் காமெடி, கீமெடி பண்ணிட மாட்டியே.//

mmmm,Guruve nenga solrathu enaku puriyuthu.panna kudathunu sonna namma baasaila pannu nu artham.kavalaya vidunga ;)

gayathri said...

enakum blog panna time-y illa..
aanalum mathavangaluku mokka podradha nirytha koodadhu-nu oru mudivoda eruken..
so neegalum endha punidhamana paniyayai thodarungal.. :p

Ms.Congeniality said...

//பிளாக் பிரமோஷன் டெக்னிகில் இது அடுத்த கட்டம். மார்கெட்டிங்க்ல இதை Brand Recoginisation என்று சொல்வார்கள். பரவாயில்லை, ரிஸல்ட் நல்லா தான் இருக்கு, //

Nice technique.. :-)

ambi said...

@bala.g, he hee, syam kitta kettukoo! avan thaan intha matterla motta boss

@arjuna, ROTFL on your comment, puriyuthu, puriyuthu!

@shishya, guru sabathukku Aalaagathee! Gr..rr!

@gayathri, punithamaa paniyaa? :) LOL

@MS.C, danks, nenga sonna sariyaa thaan irukkum. :)

Anonymous said...

Keep up the good work Cholesterol free receipes product 100mg viagra Mike steven suzuki Find adipex $97 didrex $79 meridia $149 Motorcycle bussiness cards http://www.no-gambling-poker.info/Casino-in-new-stone-turning-york.html buspar combining with tylenol pm Black sports cars Finding a domain name

奇堡比 said...

新女性徵信
外遇調查站
鴻海徵信
亞洲徵信
非凡徵信社
鳳凰徵信社
中華新女性徵信社
全國新女性徵信社
全省女人徵信有限公司
私家偵探超優網
女人感情會館-婚姻感情挽回徵信
女子偵探徵信網
女子國際徵信
外遇抓姦偵探社
女子徵信社
女人國際徵信
女子徵信社
台中縣徵信商業同業公會
成功科技器材
女人國際徵信社
女人國際徵信
三立徵信社-外遇
女人國際徵信
女人國際徵信
大同女人徵信聯盟
晚晴徵信