Friday, July 21, 2006

கும்பாபிஷேகா! ஆராதனா!


பொதுவா நாம ரொம்ப பிசியா இருக்கோம்னு சொல்லனும்னா "எனக்கு தலைக்கு மேல வேலை இருக்கு"னு சீன் போடுவோம்.

ஆனா, சில பேருக்கு தலையில தான் வேலையே! சரி பாயிண்டுக்கு வரேன்! ஒரு மூணு மாதமா வேலையில ரொம்ப பிசியா இருந்ததுல *ahem* நம்ம பெர்ஸ்னாலிடிய கொஞ்சம் கவனிக்காம விட்டுடோம். அது என்ன ஆச்சு, த்லையில இருக்கற முடி, நெற்றி, மூக்கு வரை விழுந்து ஒரு அன்னியன் லுக் குடுக்க ஆரம்பித்து விட்டது.

"ஓ! ஷக்க மஷிஷா! அன்னியா!",அபராஜிதடு ஒச்சாயினு!"னு டீம்ல சில குல்டிகள் நக்கல் விட ஆரம்பிச்சுடானுங்க. சரி, இனி பொறுக்க முடியாது!னு முடிவு பண்ணி, இந்த ஜிலேபி தேசத்துல என் ஏரியாவுல சலூன் எங்க இருக்குனு பார்த்தா, ஒன்னு கூட இல்லை.

எங்க பார்த்தாலும் இந்த அரிவை, தெரிவை, பேதை, பெதுமை,மங்கை,மடந்தை,பேரிளம் பெண்களுக்கு தான் அழகு நிலையங்கள் இருக்கு.(எதாவது பருவத்தை மிஸ் பண்ணி இருந்தா or order மாத்தி இருந்தா சுட்டி காட்டவும்).

நகம் வெட்ட, அது மேல சாயம் பூச, புருவத்தை கட்டிங்க்-ஒட்டிங்க் பண்ண, அட! இந்த கண் இமைகளுக்கு கூட ஏதோ பண்றாங்க பா! முகத்துக்கு சுண்ணாம்பு அடிக்க, சாரி, சாரி ப்ளிச் பண்ண, உதடுக்கு ரத்த காட்டேரி மாதிரி சாயம் பூச!னு எல்லாத்துக்கும் நிலையங்கள் இருக்கு.

நானும் சுத்தி சுத்தி பாக்கறேன், ஒரு பாய்ஸ் சலூன் கூட இல்லை. என்னடா இந்த ஊருல ஒரு பயலும் முடி வெட்டிக்க மாட்டானோ?னு எனக்கு சந்தேகம் வந்துடுத்து!

அப்புறம் ஒரே ஒரு கடையை பார்த்ததும், "கண்டேன் சலூனை!"னு துள்ளி குதிக்காத குறையா கடைக்கு உள்ள போயி வரிசையில உக்காச்சுண்டேன்.

சரி, இப்ப ஆபிஸ்ல இருந்து (வெட்டியா) இந்த பதிவை படிக்கும் எல்லாரும் ஒரு தடவை உங்க சேர்ல சுத்திக்கவும், வீட்டுல இருக்கறவங்க மார்டீன் கொசுவர்த்தி சுருளை சுத்தி பார்த்து கொள்ளவும், பிளாஷ்பேக் பா!

Before 20 years, கல்லிடைகுறிச்சியில் நான் இருந்த காலங்களில் முடி வெட்ட இந்த சலூன் எல்லாம் போனதே கிடையாது.(பார்த்ததே கிடையாது!)
நடமாடும் சலூனாக பதினட்டு பட்டிக்கும் ஒரு நல்லவர், வல்லவர் வருவார். எனக்கு எல்லாம் கரெக்ட்டா ஒரு மாதம் தான், மூளை வளருதோ இல்லையோ, முடி வளந்துடும்.
வீட்டு அழி(ரிஷப்ஷன்)ல தான் கும்பாபிஷேகா! ஆராதனா!னு(ஜீன்ஸ் படம் நினைவில் உள்ளதா?) தலையில் தண்ணி தெளிச்சு,நல்லா தடவி பட்டாபிஷேகம் நடக்கும்.

சும்மா சொல்ல கூடாது, அந்த வல்லவர்,கத்ரியையே மிஷின் ரேஞ்சுக்கு யூஸ் பண்ற வித்தை தெரிஞ்சவர். அப்ப மிஷனை எப்படி யூஸ் பண்ணுவார்னு பாத்துக்கோங்க!

எனக்கு முடி வெட்டும் போது என் அப்பாவும் புட்பால் கோச் மாதிரி களத்துக்கு அருகில் வந்து உட்கார்ந்து விடுவார்.
"இந்தாங்க Mr.வல்லவர்! நல்லா மிஷின் போட்டு க்ளோஸா வெட்டுங்க!"னு சொன்னதோட இல்லாம, அடிக்கடி "லெப்டுல குறைச்சுடு, ரைட்டுல குறைச்சுடு! அப்படியே ஒரு U turn போட்டு முன்னாடி போயி நல்லா வெட்டு!"னு தந்தை மகனுக்கு ஆற்றும் உதவியை செவ்வனே செய்து விடுவார்.

இது போதாதா? அந்த வல்லவருக்கு! பய புள்ள சும்ம சுத்தி சுத்தி வெட்டுவார், நின்று கொண்டு வெட்டுவார், முட்டி போட்டு வெட்டுவார், சாய்ந்து கொண்டு வெட்டுவார்.

கத்ரி சேவை முடிஞ்சதும் மிஷின் சேவை ஆரம்பிக்கும். இந்த பிளக்குல சொருகி சர்ர்ர்ருனு எடுக்கற மிஷின் இல்லை அது! கையால தான் இயக்குவார். ரொம்ப வலிக்கும். அது முடிஞ்சு பினிஷிங்க் டச் குடுக்கறேன்!னு கத்தி மாதிரி ஒரு வஸ்துவை எடுத்து என் கண் முன்னாலயே அதை சவர கல்லுல சானை பிடிப்பார்.

எங்கே கொஞ்சம் முன்ன பின்ன அசங்கினா சூர்பனகை மாதிரி காதை இழந்துடுவோமோ?னு பயத்துல நான் மூச்சு கூட விட மாட்டேன் ஒரு 2 நிமிஷத்துக்கு.
அந்த கண் கொள்ளா காட்சியை என்னால் பார்க்க முடியாது. ஏனெனில் கண்ணாடி எல்லாம் காட்ட மாட்டார்.
அவருக்கு கை வலிச்சு, கத்தரிகோலுக்கும் வலிச்சு,போதும்னு எங்க அப்பா தீர்ப்பு சொன்ன பிறகு தான் கும்பாபிஷேகம் இனிதே நிறைவடையும். முடி வெட்டின பிறகு வீட்டுகுள் நுழைய முடியாது. கட்டின துண்டோட பட்டினத்தார் மாதிரி நேர தாமிரபரணி தான்!

போற வழியில மக்கள் விடற நக்கல் இருக்கே!
"என்ன இந்த மாதம் ராமருக்கு பட்டாபிஷேகம் நல்ல படியா முடிஞ்சதா?"னு ஒரு மாமாவின் நக்கல்.
"நல்ல அறுவடை போலிருக்கு! மகசூல் மூணு போகமோ?"னு ஒரு மாமியின் நக்கல்.

சே! ஏண்டா முடி வெட்டின்டோம்னு ஆயிடும்.
இந்த குருதி புனல், காக்க காக்க கட் எல்லாம் அப்பவே கண்டு பிடிச்ச புண்ணியவான்.
இவ்வளவுக்கும் சர்வீஸ் சார்ஜ் ஒரு ரூபாய்! ஒரே ரூபாய்! தான் வாங்கி கொள்வார்.

ஸ்கூலுக்கு போனா என் பக்கத்து சீட்டு உமா மகேஷ்வரி(லங்கினி!னு வாசிக்கவும்) அவ பேனா எழுதறதா?னு என் பின் மண்டையில அவ ஆட்டோகிராப் போட்டு செக் பண்ணிப்பா. எனக்கு கோவம் கோவமா வரும். இருந்தாலும் சண்டைக்கு போனா காம்பஸ்ஸால குத்திடுவாளோனு பயமா இருக்கும். அதோட மட்டும் இல்லை, அடிக்கடி அவள் எனக்கு ஆரஞ்சு மிட்டாய் எல்லாம் தருவா. போனா போகுதுனு விட்ருவேன்.(மீசையில மண் ஒட்டலை டா அம்பி!)

சில மாதங்களுக்கு முன் ஊருக்கு போயிருந்தேன். அதே வல்லவரை பார்த்தேன். "நல்லா இருக்கீங்களா?"னு இருவரும் பாசமுடன் விசாரித்து கொண்டோம். அவரின் மகன் நல்லா படித்து இப்போ சென்னையில் நல்ல வேலையில் இருப்பதாக சொன்னார். மிகவும் மகிழ்ச்சியா இருந்தது.

பாரதியின் கனவு நிறைவேறி கொண்டிருப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.

சரி, மறுபடி பெங்க்ளூருக்கு வருவோம்.
அந்த கடைகாரர் கேட்டார்,"சார், எப்படி வெட்டனும்?".
நான், "மிஷின் போட்டு நல்லா க்ளோஸா கட் பண்ணுங்க!"

பின்குறிப்பு: கமெண்ட் என்ற பெயரில் முதலில் நக்கல் விடுபவர்களுக்கு புளியோதரை மற்றும் சுண்டல் வழங்கப்படும்.

40 comments:

நாகை சிவா said...

அம்பி, புளியோதரை மேட்டர நான் தான் ஆரம்பித்தேன் என்று நினைக்கின்றேன். கடைசியில் எனக்குகே அது U turn அடிச்சு வருது. சரி, கிடைப்பதே ஏன் வேண்டாம் என்று சொல்வானே. அனுப்பி வைக்கவும்.

நாகை சிவா said...

உன் மேட்டர நமக்கு ஸ்கூலில் படிக்கும் போது நடந்து இருக்கு. அப்ப வீட்டல வர்கார்ந்து எல்லாம் முடி வெட்ட முடியாது என்று பெரும் பேச்சு பேசிட்டு கடையில் போய் இரண்டு மணி நேரம் காத்து இருந்து முடி வெட்டனும் மேட்டர எல்லாம் இப்ப ஞாபகத்துக்கு வருது.
இங்கன நமக்கு அந்நியன மீறி போயிகிட்டு இருக்கு. பாக்கலாம் எப்ப தான் அதுக்கு ஒரு முடிவு வருதுனு

வேதா said...

என்ன அம்பி எழுத நல்ல மேட்டர்(ஜிகிடி மேட்டர் எனப் படிக்கவும்) எதுவும் கிடைக்கலையா? நம்ம அர்ஜுன் தான் முடிவெட்டிக்கிட்டத பத்தி எழுதினப்ப பயங்கர நக்கல் எல்லாம் விட்ட:) அப்ப இது என்ன?
சிவாக்கு ஏறகனவே சூடான்ல இட்லி கூட கிடைக்காம காய்ந்துப் போய் இருக்கார், அதனால முதல்ல அவருக்கு ஒரு புளியோதரைப் பொட்டலம் கூரியர்ல அனுப்புங்க:)

கைப்புள்ள said...

அம்பி!
மூணு மாசம் எல்லாம் சிகை அலங்காரம் செஞ்சிக்காம...டூ மச். மண்டை கணம் ரொம்ப அதிகமாயிருக்குமே? வெட்டிக்கிட்டதும் தலைக்கு மேலே ஒரு கிலோ வெயிட் கொறஞ்சதும் ஒரு ஆனந்தம் கெடச்சிருக்குமே? எல்லாம் பழைய நெனப்பு தான். ஆனா இப்பல்லாம் குடுக்கற காசுக்கு வசூல் பண்ணிடறது இல்ல?

சரி இப்ப என்ன திடீர்னு கும்பாபிசேகம்? முடி வெட்டிக்கிட்டு பாக்க நல்லா இருந்தா தான் அண்ணன் ஆயிரம் பவுண்டு தருவாரா என்ன?
:)

Syam said...

ROTFL...அம்பி பேக் டூ ஃபார்ம்...
ஆபீஸ் சேர நாலு சுத்து சுத்துன ஃபீலிங்கு... :-)

நான் கொஞ்சம் லேட்டோ...புளியோதரய பங்கு தட்டிட்டு போய்ட்டாரே...சரி பெட்டர் லக் நெக்ஷ்ட் டைம்... :-)

quator govindan said...

enakku puliotharai illatta paravalla,oru quator um water paketum irundha adjees pankuven :)

kuttichuvaru said...

நானெல்லாம் சின்ன வயசுல முடி வெட்டிக்கணும்னா சாக்லேடெ குடுத்தா தான் வேலை நடக்கும்..... என்னோட அப்பா ஒரு 5-star சாக்லேடெ கைல வெச்சிகிட்டு ஆசை காட்டி முடிச்சிடுவாரு...... எனக்கு தான் இப்படின்னு பார்த்தா, என்னோட தம்பிக்கும் அதெ
டெக்னிக் பண்ணிணாரு.......

Gopalan Ramasubbu said...

//பெதுமை//=பெதுப்பை


நான் சின்ன வயசுல முடிவெட்டும் போது எங்கப்பாவும் இதே மாதிரிதான் லெப்டு,ரைட்டுனு ஒட்ட வெட்ட சொல்வாரு. வீட்டுக்கு வந்தவுடனே எங்கம்மா கேப்பாங்க, "என்னது முடிவெட்டின மாதிரியே தெரில இன்னும் நல்லா ஒட்ட வெட்டிருக்கலாம்"னு. எங்கப்பா என்ன பார்ப்பாரு, நான் ரெண்டுபேரையும் பார்த்து திரு திருனு முழிப்பேன்.

Ms.Congeniality said...

mudi vettardhu enna avlo periya velaiyaa..ithana varushathula edhaavadhu time thappa vetti total aa mottai adika vendiyadha irundhurka? :-p

Bala.G said...

ambi Bgl maanagarathil saloon illainu reel vidaadheenga....neenga endha area-la irukeenga?? (I am not gonna open any saloon ;-))

கீதா சாம்பசிவம் said...

அம்பி,
அசினுக்குத் தாத்தா, இது ஒரு பதிவு, இதுக்கு ஒரு பின்னூட்டம், கேவலமா இல்லை? விளக்கெண்ணெய் பாட்டில் அனுப்பிச்சேனே வந்ததா?

கீதா சாம்பசிவம் said...

@ நாகை சிவா,
புளியோதரை இத்தனை நாள் ஊசிப் போயிருக்கும். இன்னும் அது தானா? வேறே கேளுங்க.

Shuba said...

hello pathinettu patti sithar athu ithunnu solittu mudi vetra kadaiya eluthareenga!!!!mmm!!!boys kku ithellam oru kavalaiyaaa athu sari!!!!typical ambi post!

தி. ரா. ச.(T.R.C.) said...

அம்பி முடிவெட்டி முடிந்தவுடன் கடைசியில் கல்யாணத்தில் நலுங்குபோது கண்ணாடி காண்பிப்பார்களே அதுபோல ஒரு சடங்கு நடக்குமே அதைப் பத்தி சொல்லவேயில்லை

ambi said...

@nagai siva, ha haaa, than vinai thannai sudum!nu summavaa solli irukkaa!
sivaaku oru potlam parcccccccceeel..

@veda, inime apdi ellam ezhutha maaten, naan chamathu aayiten!
epdi ellam ethi vittu enakkum en nabanukkum sandai mooti vida paakaathe! :) LOL

//ஒரு ஆனந்தம் கெடச்சிருக்குமே? //
@kaipulla, Ahaa, kidachathu thala kidachathu.
//அண்ணன் ஆயிரம் பவுண்டு தருவாரா என்ன?//
he hee, avaru kozhanthainga intha chithappava paarthu bayanthuda koodathu illa? 100 illa, illa 10 pound tharuvaara?nu paarpoom!

@syam, he hee, Danks, பெட்டர் லக் நெக்ஷ்ட் டைம்... :-)

@Q-govindan, ahaaa! welcome, ambi ta poyi ithellam kekka padaathu! :)

@kutti, aii, unakkumaaa? same pinch, no back pinch (he hee)

@gops, //பெதுமை//=பெதுப்பை
r u sure..?
btw, same pinch, my mom also used to say the same dialogue.

@Ms.C, ammam, mudi vetrathuperiya velai thaan! these are ambalainga vishyam(read in ithayam nallaennai style). mottaiyaa? gr..rr.

@bala.g, naan boys sallon thaanpa thedineen! :)koramangala is my area.

@geetha, poramai yaakkum? *ukkum* Gelusil kudingoo!
naan asinukku thambi thaan! en shishyan sollitaan. :)

@shuba, wait maa wait. 18-sithars pathi neraya reasearch panna vendi irukku! carefulla thaan ezhuthanum. sontha karuthu ellam solla mudiyaathu. 1 month Aagum.

@TRC sir, he hee, pazhaya nyabagamoo? :)

வேதா said...

அம்பி என்ன டபுள் கேம் ஆடறீங்க, என் பதிவுக்கு வந்து தேன் குடித்த மாதிரி இருக்குன்னு ஒரு பிட்ட போட்டுட்டு சம்பந்தப் பட்டவங்களுக்கு ஒரு மெயில் அனுப்பி என்னை கவுத்துட்ட. ஆனா அவங்க உன்னையே போட்டுக் கொடுத்துட்டாங்க:) இனிமேலாவது என் நல்ல மனசு புரிஞ்சுக்கோ:)

ambi said...

//அம்பி என்ன டபுள் கேம் ஆடறீங்க, //

naan double game ellaam adalai! summaa kombu seevi vitten geetha madamukku! he hee :)
nee nallaval!nu nenaichutu irunthanga illa, athaan ennala mudinja "narayana! narayana!" velai. :) LOL

நாகை சிவா said...

யோவ், நம்ம ஊருல இரண்டு சித்தர் இருந்தாங்க. எதாவது தப்பா எழுதினேன், நம்ம ஊருக்கார பசங்க பாய்ச்சிடுவான்ங்க ஜாக்கிரதை.

மு.கார்த்திகேயன் said...

அதெப்படி.. எல்லா அப்பாக்களும் மகன்கள் முடி வெட்டும்போது, ஒட்ட வெட்ட சொல்றாங்க.. நான் மொட்டையே அடிச்சுட்டு வந்தாலும் என் அப்பா, இன்னும் நல்ல அடிக்கலாம்னு சொல்லுவார்.. அது சரி அம்பி.. ஜல்லிகட்டுல என்கூட மோதுறதுக்கு பயந்துகிட்டு ஏதோ சதி வேலை எல்லாம் செய்ற மாதிரி இருக்கு..

கீதா சாம்பசிவம் said...

நாரத அம்பி, இது தேவையா? கடைசிலே அசினும் இல்லை, பிசினும் இல்லை. கோந்து தான் கிடைக்கப் போகுது. விளக்கெண்ணெய் குடிச்சதைப் பத்தி ஒண்ணுமே சொல்லலியே?

@வேதா, அம்பியோட சதி புரிஞ்சுதா? இனிமேலாவது ஜாக்கிரதை!

வேதா said...

@ம்பி,
நீ செய்ற நாரத வேலை உனக்கே ஒரு நாள் திரும்ப போகுது ஜாக்கிரதை. அப்புறம் சித்தர்கள் பத்தியெல்லாம் என்ன திடீர்னு, எனக்கும் ஏதோ கொஞ்சம் கொஞ்சம் தெரியும் அதனால பாத்து எழுது.:)

@கீதா,
அம்பி எப்பவுமே அப்படித் தாங்க, பாருங்க நீங்க அனுப்பின விளக்கெண்ணய குடிச்சத பத்தி பேச்சே காணும்:)

My days(Gops) said...

ha ha ha .....
rendu perum sametime orey topic'a pathi eludhi irrukom...
thalai'ku mela velai namakku mattum thampa undu...
gud gud.

thala, neenga office'laiey irrupeengalo? cos, bangalore'la oru saloon koooda therialai'ey ungallukku? but, eppadi ladies beauty parlour mattum theriudhu?
konjam yosikanum....ok ok

//முடி வெட்டும் போது என் அப்பாவும் புட்பால் கோச் மாதிரி களத்துக்கு அருகில் வந்து உட்கார்ந்து விடுவார்.//
indha punch thaan unga kitta irrukum oru advantage'ey......

Gopalan Ramasubbu said...

@Ambi:It's பெதும்பை Guruve.

Stages of woman's life, of which there are seven, viz., pētai, petumpai, maṅkai, maṭantai, arivai, terivai, pēriḷampeṇ; பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் என்ற எழுவகைப் பெண்பருவம். (திவா.)

2. Stages of woman's life, numbering four, viz., vālai, taruṇi, piravuṭai, viruttai; வாலை, தருணி, பிரவுடை, விருத்தை என்ற நால் வகைப் பெண்பருவம்.

ambi said...

@nagai siva, ammam pa! athaan detailaa R&D pannitu irukken. romba jakrathaiyaa thaan ezhutha poren. :)

//என்கூட மோதுறதுக்கு பயந்துகிட்டு ஏதோ சதி வேலை எல்லாம் செய்ற மாதிரி இருக்கு.. //
@karthik, yen Udanpirappa paarthu naan ethukku pa bayapadanum? :)
pottiye vendaam!nu thaan solren..

//விளக்கெண்ணெய் குடிச்சதைப் பத்தி ஒண்ணுமே சொல்லலியே?//
@geetha, neenga bnglre vaanga, solren. ungalukku irukku :) gr..rrr.

@veda, neenga ezhuthinathu thappu illayaakum? paavam geetha madam paathu paravasapadatume!nu naan mail panni ungalukku oru comment increase panni vittathu oru thappaa?(with a innocent look)btw, honeyaa chennaila velakennai!nu solluvaalaa? :) LOL

@sachin(gops), danks pa! Great men think alike! :)

@gops, danks shishya, HM(teacher) payan nee, correctaa thaan solluva.
gud that i got corrected my mistake. btw, send your email id to my ID (available in my profile).

@

வேதா said...

//btw, honeyaa chennaila velakennai!nu solluvaalaa? :) LOL//
haiyo joke pa thaangala,:)

Usha said...

close-a vetradhuku innoru idam kooda iruku..adhuku Tirupathi-nu per...appuram 2 masathuku kavalaiye irukadham..poraya?

daydreamer said...

En thambi mudi vettikittu veetukku varum podhu amma thittradhu nyabagam varudhu... "enna ezhavuda idhu step kattu thodappakatta cut nu.. evan andha saloon kaaran.. vaa poi kaasu thiruppi vaangalaam"thambi vasool raja va maarama... dekka kuduthuttu oodiduvaaru.. ippo adhukellam vazhiye illa otta vettupaa thaan paavam...

Arjuna_Speaks said...

yappa mudi vetrathuku koodava oru post - he he he LOL..

Veda - solrathu romba correct-u :D lol

Syam said...

@GR
//பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் //

recent ah Baba padam paartheengala..:-)

Anonymous said...

Hi, ungaloda writing skill romba nalla irundadu, ingae comment panninavanga ethanai peraala ippadi ezhutha mudiyum. Really I enjoyed it ammanchi.
regards,
Narmada

ambi said...

@usha, nee chennai vaa! unakku irukku rivittu! gr..rr

@daydreamer, ohh! same blood every where! y soo long absent? stand up on the bench! :) LOL

@arjuna, he hee, intha postuku inspirationee nee thaan pa! :)

@syam, en shishyan evloo correcttaa solli irukkaan, atha paratra vazhiya kanoom! gr..rr.

@anoy(narmadha), ohhhhhhh! danks, danks! danks! really i'm honoured. U made my day! (adikadi vaango!)
btw, inga varaa ellarumee supeerrrra ezhuthuvaanga. naan innum pachaa kozhanthai thaan! :D

Ram said...

//yappa! ram. nee(nga) bnglreaa? if so call me drop a mail to rengaramang@yahoo.co.in with your mobile no.//

Ambi - Blore thaan pa...but i am in Riyadh for last 4 months.next week anga vanthuduven...apram podalam maanaadu :)) yenna solreenga?

வேதா said...

ambi unmaiya sollu antha anonynous comment nee potathu thana:)

ambi said...

@ram, ok, ok..vanthathum call pannu.we will meet. but rendu peeru koodina athukku peru maanaada? yes, yess! t'velila athaan next month nadakka poguthu! :)

@veda, gr..rr. antha nallavanga narmadha ithukaagavaathu oru blog open pannanum intha ambi kutramatravan!nu oorukku niroobikka..

Syam said...

Veda, correct ah sonneenga ithu kooda nalla technic ah irukey...ambi itha mattum marketing technic post la sollave illa.. :-)

Balaji S Rajan said...

Ambi,

Thalaikku mela velai panninathu, thalai ganam ayiduchunnu mathavanga feel panrathu, chinna vayasula shavaram pannindathu, super appu... Ungaludaiya yella postum padichindu thaan irukane. Aanal comment poda time illai. Inimey thavarama comment potudarane. Mudichuthuna pazhaiya postuku yellam kooda poi podrane. Banglore-la saloon illainnu solrathu ...konjam over... Saloon illatha vooril kudi irukka vendam... Inga vanga... yellam ponnunga thaan mudi vettum. Unga dubukku annavai kelunga... Kuzhaintanga bommai mathiri iruppanga... Neenga inga vantheengana vara varam saloon poyiduveenga... jollindey irukalam...

smiley said...

bangalore'il mudi vettinall oru perumai thaan :)

gils said...

wow..mandaila autograph poata ammaniku oru O

Anonymous said...

Very cool design! Useful information. Go on! » » »

奇堡比 said...

新女性徵信
外遇調查站
鴻海徵信
亞洲徵信
非凡徵信社
鳳凰徵信社
中華新女性徵信社
全國新女性徵信社
全省女人徵信有限公司
私家偵探超優網
女人感情會館-婚姻感情挽回徵信
女子偵探徵信網
女子國際徵信
外遇抓姦偵探社
女子徵信社
女人國際徵信
女子徵信社
台中縣徵信商業同業公會
成功科技器材
女人國際徵信社
女人國際徵信
三立徵信社-外遇
女人國際徵信
女人國際徵信
大同女人徵信聯盟
晚晴徵信