Thursday, July 13, 2006

அல்வா நகரத்தில் பிளாக்கர்கள் மாநாடு!அரணி பரணி பாடி வரும் தாமிரபரணியாம் எங்கள் நெல்லை சீமையிலே ஆகஸ்ட் மாதம் இரண்டாம் வாரத்தில் பிளாக் பதிவாளர்கள் சந்திப்பு நடக்க இருக்கிறது.

"தென்னாட்டு வேங்கை, தெவிட்டாத தெள்ளமுது,சீறும் சிறுத்தை, பிகருக்கு வடை அளித்து கை சிவந்த வள்ளல், 3 வருடமாக பிளாக் உலகின் மன்னன், அம்பையின் அழகன், தொடர்ந்து தேன்கூட்டில் கப்பு(he, hee) வாங்கி வரும் வெற்றி வீரன், நல்லவர், வல்லவர், நாலும் தெரிந்தவர், என் அசின் பிரதர், ச்சீசீ, கசின் பிரதர், "லன்டன் புகழ்" நமது
டுபுக்கு அழைக்கிறார்! கூடவே அவரது பிளாக் உலக கலை வாரிசு(கண்டுக்காதீங்க அண்ணாச்சி!) உங்கள் அம்பியும் சேர்ந்து அழைக்கிறார்.

முதலில் மெரினாவில் தான் கூட்டம் கூட்டலாம் என்று இருந்தோம், ஆனால் அலை கடலென உங்கள் எண்ணிக்கை கண்டு மீன்டும் சுனாமியோ? என்ற அச்சம் வரலாம் என்று எண்ணி கூட்டத்தை நெல்லைக்கு மாற்றினோம்.

"பிளைட் டிக்கட் அதும் பிசினஸ் கிளாஸ் போதும்!"னு காமடி கீமடி எல்லாம் பண்ண படாது! வேணும்னா நம்ம கஜா கிட்ட சொல்லி தலைக்கு 50 ரூபாய் குடுத்து, கள்ள தோணி ஏறி வரவும். உள்ளூர் மக்கள் நடராஜா சர்வீசை பயன் படுத்தி கொள்ளவும்.

நெல்லைக்கு வாருங்கள்! திருநெல்வேலி சம்ரதாய விருந்தோம்பலை உங்களுக்கு அளிக்கிறோம். (ஏல மக்கா! அருவாள நல்லா தீட்டி வைல! ரொம்ப நாளு ஆச்சு!)

பாரதி ராஜா படத்தில் மட்டும் பார்த்திருக்கும் கிராமத்தை காட்டுகிறோம். ஒடினா தான் அதுக்கு பேர் நதி! தேங்கினா அது குட்டை!

ஒடுகிற நதியை காட்டுகிறோம் வாருங்கள். சென்னை வாசிகள் ஒரு செங்கல், கொஞ்சம் வைக்கல் கொண்டு வரவும். கொஞ்ச அழுக்கா ஒட்டி இருக்கு..? நல்லா தேய்ச்சு குளிக்கனும் இல்ல, அதுக்கு தான்!

மதுபாலா, திவ்யபாரதி, மனிஷா, த்ரிஷா, ஜோதிகா என பல பேர் காலடி பட்ட புண்ணிய மண் அது!
(வீர பாண்டிய கட்ட பொம்மன், பூலிதேவன், வீரன் வாஞ்சி ஆகியோரது ஆன்மா இந்த அடியவனை மன்னிக்கட்டும்!)

இந்த அரிய விழாவில், என் அண்ணனின் பிளாக் உலக கலை சேவையை பாராட்டி அவருக்கு இந்திய பணம் ஆயிரம் பொற்கிழி அளிக்க உள்ளேன். அவரும் எனக்கு ஆயிரம் பவுண்டுகள் மட்டும், பொற்கிழி அளிக்க போகிறார் எனபதை தெரிவித்து கொள்கிறேன்.

உங்கள் சுற்றமும் நட்பையும் கூட்டி வர இது ஒன்னும் அம்பியின் திருமணம் அல்ல, பிளாகர் மாநாடு, ஆகவே அடையாள அட்டை கொண்டு வரவும்.

அட! யாரும் வரலை! என்றாலும், எனது அண்ணன் சொன்னது போல் இந்த பிளாகர் மாநாடு,எங்கள் வீட்டு அடுக்களையிலோ அல்லது என் அண்ணன் வீட்டு அடுக்களையிலோ நடந்தே தீரும்! என்பதை 136 வது வட்டதின் சார்பாக எதிர் கட்சிகளுக்கு இங்கு கூறி கொள்ள ஆசை படுகிறேன்.

மா நாட்டுக்கு வரும் எல்லோருக்கும் திருநெல்வேலி அல்வா அம்பி கையால் கிண்டி குடுக்கப்படும். பார்சலும் வாங்கிக்கலாம்.

இந்த நெல்லை மாநாட்டை தொடர்ந்து பெங்களுர்,சென்னை ஆகிய இடங்களிலும் உங்கள் அம்பி மாநாடு நடத்த உள்ளார். சென்னை மாநாட்டின் முழு பொறுப்பையும் என் அருமை சகோதரி "One Post per Day" சுபா கவனித்து கொள்வார் என்பதில் எனக்கு துளியும் ஐயமில்லை.

"அலை கடலென திரண்டு வாரீர்! அமோக ஆதரவு தாரீர்!"

"இந்த படை போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?" என்ற கோஷம் விண்ணை சாடட்டும்.

முக்கிய குறிப்பு: ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு நல்ல சிறுகதையை படிச்சேன். கைல காசு கொஞ்சம் இருந்திருந்தா இந்த கதையை ஒரு குறும்படமா எடுத்து திரைகதைக்கு National award/Oscar அவார்டு வாங்கி இருப்பேன். இது எங்க அண்ணன் எழுதின கதை தான்! நீங்களும் படிச்சு பாருங்க!


நெல்லையில் பிளாகர்கள் மா நாடு!  டுபுக்கு & அம்பி அழைகிறார்!   அலை கடலென திரண்டு வாரீர்!  ஆதரவு தாரீர்!

59 comments:

ராபின் ஹூட் said...

ப்ளாக்கர்கள் மாநாடா? பார்ப்பனர்கள் மாநாடா? விளக்கமாக எழுதவும்.

ambi said...

அதேல்லாம் ஒன்றும் இல்லை!
யாதும் ஊரே! யாவரும் கேளீர்!
ஐயம் நீங்கியதா?
தங்கள் வருகைக்கும்,சந்தேகத்துக்கும் மிக்க நன்றி.

Syam said...

அம்பி நீயும் உங்க அண்ணன் டுபுக்கும் சேர்ந்து புரோட்டா சால்னா சாப்பிட போறேன்னு சொல்றதுக்கு இவ்வளவு பில்டப்பா...நடத்துங்க நடத்துங்க :-)

மு.கார்த்திகேயன் said...

ஆஹா.. நல்ல சிந்தனை தான் அம்பி.. ஆனா நெல்லை என்பது தான் கொஞ்சம் கலைஞர் மாதிரி எனக்கும் தொல்லை தான்.. சென்னைல ஏற்பாடு பண்ணுங்க.. கூட்டதிற்கு நான் கியாரண்டி..

எப்படியோ அண்ணன் கைல இருந்து ஆயிரம் பவுண்டு புடுங்கபோறீங்க.. வாழ்த்துக்கள்

வேதா said...

நெல்லைக்கு வரமுடியாவிட்டாலும் சென்னை வட்டத்தின் சார்பா என் ஆதரவு உண்டு(அப்படியே அல்வாவ கிண்டி ஒரு பார்சல் அனுப்பிடு):)


@ ராபின் ஹூட்
//ப்ளாக்கர்கள் மாநாடா? பார்ப்பனர்கள் மாநாடா? விளக்கமாக எழுதவும்//

யாருப்பா அது?
ப்ளாகர் ஒற்றுமையைக் குலைப்பது?

My days(Gops) said...

vaanganey vaanga...
thala, nammala vuttu'tu blog maanaadu nadathuri'ey paa..
(maan aadu (deer is dancing?)
its ok..
chennai'la edhuvum maanaadu vaikira maadhiri idea irrundha, please keep after sept 13th...adiyen kandipaaaga varuven..
manuva konjam maru paruseelanai pannunga thala..

நாகை சிவா said...
This comment has been removed by a blog administrator.
நாகை சிவா said...

அம்பி, உங்க அண்ணனுக்கு நல்லாவே விளம்பரம் கொடுக்குறீங்க... எல்லாம் அந்த 100 பவுண்ட்டுக்கு தானே!
கண்டிப்பாக மெரீனாவில் நடத்து வேண்டும் என்றால் நம்ம ஷாம், உங்களுக்காகவும், வேதாக்காகவும் சீரணி அரங்கை மறுபடியும் கட்டுவதற்கு தயாராக உள்ளார் என்று அவர் சார்பாக கூறி அமர்கின்றேன்.(தற்பொதைக்கு)

Shuba said...

adaddaa!!!nellai ennappaaa paavam pannithu?thidirnu enna m,atter kattam pottu thittam theetriinga?danks enna pathi eluthinathukku!!!!

Shuba said...

சென்னை வாசிகள் ஒரு செங்கல், கொஞ்சம் வைக்கல் கொண்டு வரவும். கொஞ்ச அழுக்கா ஒட்டி இருக்கு..? நல்லா தேய்ச்சு குளிக்கனும் இல்ல, அதுக்கு தான்!
hellllo anna dooo muchaa pesarreeenga!!!!

Dubukku said...

ஐய்யோ ஐய்யோ ஐய்யோ...குடுத்திருக்கிற பில்டப்ப பார்த்தா எனக்கே காதுல ரத்தம் வருதேடா...இப்படி ப்ளான் பண்ணி மொத்தமா பழிவாங்கிட்டியே...சந்தோசமா அப்பூ?

இந்த விளம்பரத்துக்கு ஆயிரம் பவுண்டுன்னு மறைமுகமா சொல்றியா??.....

(சரி சரி ...நம்ம பாசமலர் படத்த கொஞ்சம் அடக்கிவாசி...வலையுலகத்துல மக்கள் கடுப்பாகிடப் போறாங்க...)

கீதா சாம்பசிவம் said...

நான் நெல்லைக்கு ஆகஸ்ட்டில் போக இருந்த என்னோட ப்ளானைக் கான்சல் பண்ணிட்டேனே! ஹையா, ஜாலி, அம்பியோட அறுவை இல்லை.

தி. ரா. ச.(T.R.C.) said...

சென்னை வாசிகள் ஒரு செங்கல், கொஞ்சம் வைக்கல் கொண்டு வரவும். கொஞ்ச அழுக்கா ஒட்டி இருக்கு..? நல்லா தேய்ச்சு குளிக்கனும் இல்ல, அதுக்கு தான்!
அம்பி அத்தனை செங்கல்லும், வைக்கோலையும் ரொம்பநாளா குளிக்காத உன் உடம்புலேயா வச்சித் தேச்சிக்க போறே.பாவமா இருக்கு உன்னை நினைச்சா. இப்பவே நீ எலும்பும் தோலுமாஇருப்பே. மீட்டிங்போது நீ எலும்பாதான் இருப்பே.சிங்கப்பூர்--திருநெல்வேலி பிளைட் இருக்கா/ இருந்தால் நேரா வருவேன்.என்னோட வாழ்த்து மடலை படித்து விடுங்கள். தி ர ச

Syam said...

//(சரி சரி ...நம்ம பாசமலர் படத்த கொஞ்சம் அடக்கிவாசி...வலையுலகத்துல மக்கள் கடுப்பாகிடப் போறாங்க...) //

என்ன டுபுக்கு இப்படி சொல்லீட்டீங்க..அப்படியெல்லாம் ஒருத்தரும் தப்பா நினைச்சுக்க மாட்டாங்க.. :-)
(எனக்கும் ஒரு 1000 பவுண்டு குடுப்பீங்க தான)

Syam said...

//நம்ம ஷாம், உங்களுக்காகவும், வேதாக்காகவும் சீரணி அரங்கை மறுபடியும் கட்டுவதற்கு தயாராக உள்ளார்//

நான் ரெடி பங்கு...ஐநா சபைல சொல்லி அமெரிக்கன் டாலர் நோட்டு கட்டு ஒரு 500 கிலோ டொனேசன் மட்டும் வாங்கி தந்துடுங்க.. :-)

வேதா said...

@ச்யாம்,
அப்ப அந்த அரங்கக்கு என் பேரையே வச்சுடுங்க:) எப்ப திறப்பு விழா? சீக்கிரம் முடிச்சிட்டா நம்ம ப்ளாகர் மாநாட்டை அங்கயே வச்சுக்கலாம்:)

Usha said...

adhu seri, neenga rendu perum edahvadhu veetla parthukalam-nu plan pantu periya arasiyal manadu madhiri koopta? Dhoda! Mariyadhaiya ellarukum chennai-la nadathu, appuram paaru evalo per varanga-nu.

kuttichuvaru said...

build up thaanga mudiyala pa raasa!! dubukku annan varaar-nnu therinju avara paarkka vara nenaikkaravanga kooda neenga varathu therinju odi poiduvaanga pola irukke!!

Gopalan Ramasubbu said...

Ambi Guruve,

Unga post ah vida enaku pudichathu

//அதேல்லாம் ஒன்றும் இல்லை!
யாதும் ஊரே! யாவரும் கேளீர்!
ஐயம் நீங்கியதா?//

above lines thaan.nalla bolded lines la oraikara maathire sonnenga.Good on u.
btw,ennoda native kuda tirunelveli dist thaan.Melbourne-Chennai ku oru return ticket anupina naanum varuven ;)

ambi said...

@syam, உனக்கும் உண்மை தெரிஞ்சு போச்சா..? நம்ம சிவா தர போற நிதியை வச்சு நீ கட்ட போற அரங்கத்துக்கு வேத பெயரையே வெச்சுடு பா ஷ்யாம்!

@karthik,
//சென்னைல ஏற்பாடு பண்ணுங்க.. கூட்டதிற்கு நான் கியாரண்டி..//
ஆகா! என் உடன்பிறப்பே! சென்னை சென்னை மாநாடும் நம்ம திட்டதுல இருக்கு பா! கவலை வேண்டாம்!

@veda,
//அப்படியே அல்வாவ கிண்டி ஒரு பார்சல் அனுப்பிடு):)//
he hee,பார்சல் தானே! அனுப்பறேன், அனுப்பறேன்.

@mydays(gops), nee illamalayaa? marupariseelanai ennapaa? unakaaga maanaattaiyee sep ku othi potruvoom. நீ தான் பா கழக போர் வாள்! :)

@nagai siva,
//எல்லாம் அந்த 100 பவுண்ட்டுக்கு தானே!//
என்னப்பா! 1000 கேட்டா தான் எங்க அண்ணன் கிட்ட இருந்து 100 ஆவது பெயரும்னு என் நப்பாசை.( நப்பாசை தான்!) நீ பொசுக்குனு ஒரு முட்டைய குறைச்சுட்ட. 10 பவுண்டாவது பெயருதானு பார்ப்போம்.

@shuba,
//danks enna pathi eluthinathukku!!!! //
kavalai padathee, unakku oru thani postee podarenn. :)
//hellllo anna dooo muchaa pesarreeenga!!!! //
he hee, unnai vidavaa thangachi..?

ambi said...

@dubukku, he hee,
Y blood..?
same blood!
//இந்த விளம்பரத்துக்கு ஆயிரம் பவுண்டுன்னு மறைமுகமா சொல்றியா??.....//
கரெக்ட்டா பாயிண்டுக்கு வந்தீங்க பாருங்க! அங்க நிக்கறார் எங்க டுபுக்கு!

btw, செக் எல்லாம் வேண்டாம், IT problem வரும். கேஷ் போதும்! :)

ambi said...

@geetha,
//ஹையா, ஜாலி, அம்பியோட அறுவை இல்லை. //
நீங்க பெங்களூர் வாங்க, உங்களுக்கு மண்டகபடி இருக்கு! :)

@TRC,
//பாவமா இருக்கு உன்னை நினைச்சா. இப்பவே நீ எலும்பும் தோலுமா இருப்பே.//

அதேல்லாம் ஒன்னும் இல்லை, ஆறு அடி, 68 கிலோனு ஜம்முனு இருக்கேன்!

//சிங்கப்பூர்--திருநெல்வேலி பிளைட் இருக்கா/ இருந்தால் நேரா வருவேன்.//
நம்ம கஜா கிட்ட சொல்லி இருக்கேன். கள்ள தோணியில உங்களுக்கு டிக்கட் கிடையாது. :)

@kutti, U too brutas?
ithee asin varaa!nu naan solli irunthaa alari adichu vanthu irukka maatte nee? :)

@usha, he hee, chennaila meeting potruvoom, unakaaga thaan waiting!

@gops,
//Melbourne-Chennai ku oru return ticket anupina naanum varuven //
shishyaa, unakku returnlayum kalla thoni erpaadu panni irukken pa! gaja kitta solli irukken. :)

@kasi, thanks alot... :)

மு.கார்த்திகேயன் said...

ambi, adikadi udanpirappenu solli bold-a vera podureenga..

Bala.G said...

அம்பி என்னால் களந்து கொள்ள இயலாது....அல்வாவ FedEx கூரியர்ல அனுப்பி வைக்கவும் ;-)

smiley said...

ஒடுகிற நதியை காட்டுகிறோம் வாருங்கள். சென்னை வாசிகள் ஒரு செங்கல், கொஞ்சம் வைக்கல் கொண்டு வரவும். கொஞ்ச அழுக்கா ஒட்டி இருக்கு..? நல்லா தேய்ச்சு குளிக்கனும் இல்ல, அதுக்கு தான்!
athu ennappa oru nakkal. chennaili ippo mazhai peyuthu theriyuma, road il kooda thamara parani thanikku mela jastiyaga thanni oduthu. amabyil thamara paraniyil railway bridgukku adiyil mug vaithu erumai, ++++ ungalukku theriyum kalakiya neeril kulithathathu niyabagam vanthathu.
all the best for ur bloggers meet

Sasiprabha said...

Ambi Nellai makkal ellaam kootani potu engalai kavukka paakireengale.. Chennaila veingappa.. Enakkum sondha bandham ellaathaium paakanumnu aasaiyaa irukku...(sondha bandham means blogger friends)

Shuba Chennai blogger sangathula irundhu namma indha nellai partiesukku edhir kural kodukkalainna nalla irukkaadhu.. Kelambunga..

My days(Gops) said...

// நீ தான் பா கழக போர் வாள்!//
thala idhuku enna artham'pa?
he he he

Ms.Congeniality said...

arasiyal la sera poreengala?S/W bore adhichi pochaa?illa Premji thani katchi aarambikaraara..

Arjuna_Speaks said...

yappa ambi - ennaku oru flight ticket anupu-pa - naanum varen..I luv coming to tirunelveli..I luv Ambasamudram..Have u been there? There is a sivan temple, where the linga has a kudmubi :)..Also there is a hill, where Arthini maharishi lived..I have been there too..Awesome..will let u know more details :)

Anonymous said...

have a good time. :)
-Viji

ambi said...

@karthik, yen apdi podarennnu konjam yosichu paaru! unakku puriyum :)

@bala.g, courierlayaa? LOL :) anupitta pochu!

@smiley, Ohh! ungalukku chennaiyaa? roadla pora thanni ellam thamira baranikku samanam Agumaa? :) btw, danks for the wishes.

@sasiprabha, chennailayum vechduvoom,
//Enakkum sondha bandham ellaathaium paakanumnu aasaiyaa irukku//
yekka, enakku apdiyee pullarichu pochu!

@mydays(sachin), he hee, athellam naan solla matten.(ethoo ellarum use panraangale nu naanum sonnen, kandukkathee!) :)

@Ms.C, he hee, athu yethirkaala thittam, athukku ippove ready ayittu varen. :)

@arjuna, Hey! arjuna,
//There is a sivan temple, where the linga has a kudmubi :)..Also there is a hill, where Arthini maharishi lived//
nee anga ellam vanthiyaa? athu thaanpa yen sontha Ooru..! U r correct! that lingam is in shrisailam. drop a mail to my inbox, i need your mail-id.

@viji(anonymous), danks. :)

Shuba said...

hello anna teivame blogs are blocked in india u can read them thro...www.pkblogs.com

ambi said...

@shuba,yen vayathula paalaa(soda!nu vaasikaathe thangachi) vaartha maa!

will try to post rgsing this soon and will give u an alternative solution. also thanks for the link.
Un postukku ennala poga mudiyalai.
namba konjam overaaaa pasaa kaatchi nadathittoomnu nenaikiren.

நாகை சிவா said...

இந்த http://www.blogger.com/comment.g?blogID=10267267&postID=115319907938327120 உரலை வெட்டி ஒட்டுங்கள், இது போல் உங்கள் ஐடியை, முகப்பில் நீங்கள் எழுதும் பதுவில் முதலில் சேர்த்துவிட்டால் பின்னூட்டமிடவும், மறுமொழியிடவும், பயன் படும்.

உங்களுக்கு தேவையான பதிவுகளை படிப்பதற்கும் பின்னூட்டற்கும் post ஐடியுடன் அவர்களை உங்கள் பதிவில் பின்னூட்ட மிட உங்கள் பதிவில் வேண்டுகோள் விடுங்கள். பிளாக்கர் அக்வண்ட் மூலம் நீங்கள் பின்னுட்டத்தை பார்க்க முடியும், அதன் மூலம் மூலம் பின்னூட்டமிடவும், பதிவுகளை படிக்கவும் முடியும். show original post என்ற லிங்கை அழுத்தினால் பதிவு முழுவது ப்ளாகர் வழியாகவே தெரியும். இது ப்ளாக் ஸ்பாட் மூலம் செல்லாததால் உங்களால் முழுப்பதிவையும் பின்னூட்டதையும் படிக்க முடியும்

போஸ்ட் ஐடியை கண்டுபிடிப்பது எப்படி? post command மவுசை மேய்த்தால் முழு உரலும் தெரியும்

உங்கள் பதிவின் போஸ்ட் ஐடியை, கண்டுபிடிக்க உங்கள் ப்ளாக்கர் எடிட் போஸ்ட் மீது மவுசை ஓடவிட்டீர்கள் என்றால் தெரியும், உங்களுக்கு தேவை ப்ளாக்கர் எண் மற்றும் போஸ்ட் ஐடி. இது உங்கள் பதிவிற்கு பின்னூட்டததை படிக்கவும், மறுமொழியிடவும் பயன்படும். இரண்டையும் சேர்த்து அட்ரஸ் பாரில் http://www.blogger.com/comment.g?blogID=10267267&postID=115319907938327120 ரீப்ளேஸ் செய்தால் உங்கள் எல்லா பதிவுகளும் படிப்பதற்கு தயார்.

நாகை சிவா said...

http://www.anniyalogam.com/scripts/freedom.php

நாகை சிவா said...

More Updates follow..

பிளாக்ஸ்பாட் படிக்க முடியாமல் கஷ்டப்படுபவர்களுக்கு இதோ ஒரு வழி

நீங்கள் செய்ய வேண்டியது
1. இந்த Tor என்னும் மென்பொருளை இந்த இடத்திலிருந்து http://www.vidalia-project.net/dist/vidalia-bundle-0.1.1.22-0.0.7.exe டவுன்லோட் செய்யவும்.

2. செய்முறை விளக்கத்தை ஒழுங்காக படிக்கவும் http://tor.eff.org/docs/tor-doc-win32.html.en

3. கீழே உங்கள் உங்கள் கணிணியில் (P) பச்சையில் தெரிந்தால் எல்லாம் சுபம். நீங்கள் blogspot.com எந்த பிரச்சனையும் இல்லாமல் பார்க்கலாம். என்ன கொஞ்சம் மெதுவாக இருக்கும்.

Ram said...

//உங்கள் சுற்றமும் நட்பையும் கூட்டி வர இது ஒன்னும் அம்பியின் திருமணம் அல்ல, பிளாகர் மாநாடு, ஆகவே அடையாள அட்டை கொண்டு வரவும்//

//"அலை கடலென திரண்டு வாரீர்! அமோக ஆதரவு தாரீர்!"
"இந்த படை போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?" //


Yov , yennaiya Karunanidhi maathiri pesureeenga, ore contradiction aa??? :))

Namma 'Bangaluru' la oru Maanila Maanadu podunga Ambi...naa vizha yerpaadugalai paathukuren...
(paisa mattum kuduthudunga) :))

Harish said...

ஒடினா தான் அதுக்கு பேர் நதி! தேங்கினா அது குட்டை!
Idula punch dialouge vera..neer thirunda vae maateer...

Shuba said...

ambi anna!software kkum enakkum tuliyum sambandam illai viji is n vacation enakkum contact illai,...entha fld?

Shuba said...

swift caarlaam venaam....actualla im totally into engg abckground...so commerce pathi avlo vivaram terilaaaa.Mcom kku enna jobs finance///...mm...actuaalla im into finance research but here they take only MBAs etc!

there in bangalore there are some financial research companies like price water coopers etc...auditing firms anga try pannalaam....but anga yaarayum terilaaa!will think and get back

Pavithra said...

First time here !!
Enjoyed your post !!

KK said...

Nice post...உங்க "Pubs in B'lore" போஸ்ட் சூபர். மிகவும் அழகாக இருந்தது.

Chinnakutti said...

சென்னை மாநாடு எப்போ, ஆவலோடு காத்திருக்கின்றேன்.....................

ambi said...

@ram, arasiyal, intha maanaadu ellame contradiction thaane! :)
btw, drop a mail pa! r u in bnglre?

@harish, punch dialogue nalla irunthathaa? ennapa naan thappu senjan, thiruntha solre? :)

@pavithra, danks alot.

@kk, welcome, glad that U enjoyed.

@chinnakutti, welcome again. sure, will inform u while organising!

vishy said...

Ambhi.. thanga kambi.. Madras la oru madanu nadatharathu..

Why Blood. Same Blood/ lol!! eppa enakku mela ekkachekkam padam paarthu dialogue nyabakam vechukkara allunga naraya peru irukkanga pola irukku.

Vicky Goes Crazy... said...

onnu mattum nalla theriyuthu ... neee romnba padam parukurey da saamy [:d]

கீதா சாம்பசிவம் said...

அம்மாஞ்சி, ஒண்ணும் எழுதலியா? அதான் புகையுதா?

ambi said...

@vishy, madrasla thaane! erpaadu pannitu iruken pa! :)
but nee US la illa irukkaa?

ambi said...

@viky, che che! naan apdi onnum padam paarka matten. :D

ambi said...

@geetha, inniki post poda poren. :D

Hiyaaaaa! pashtu time naan fifety adichuteeennnnnnnnnnnn! :))))

pls yaaraavathu 51 podungka paa!

வேதா said...

51 potachu pothuma:)(en neram mokka postukellam 50 comments varuthu, etho pona porathunu intha comment)

Kannan Raman said...
This comment has been removed by a blog administrator.
Balaji S Rajan said...

Annanum thambiyum kilambitangaiya kilabitanga.... Paarthu .... Halwa romba kuduthudatheengao.

Suthan said...

கலக்குரீங்க டலிவா.

Arthini said...

kadaisi varai alva kilo avla nu sollavae illaiye

Anonymous said...

Looking for information and found it at this great site... flannel western shirt buying clomid and clenbuterol Buy graphic cards for your comuputer Foldable table legs air hockey Prices for industrial dishwashers normal progesterone level clomid day 21 minolta qms laser printers Battery lowest price watch Uniform needle t shirt Funeral march ringtones clomid vs nolvadex

Anonymous said...

That's a great story. Waiting for more. » » »

Anonymous said...

I have been looking for sites like this for a long time. Thank you! Canada payroll loan cooper toric contact lenses adipex jeep air suspension Nissan using edi Surplus barcode scanners Black hoe with fat pussy home insurance Www answering service companies com Business home internet marketing opportunity search engine propecia order

奇堡比 said...

新女性徵信
外遇調查站
鴻海徵信
亞洲徵信
非凡徵信社
鳳凰徵信社
中華新女性徵信社
全國新女性徵信社
全省女人徵信有限公司
私家偵探超優網
女人感情會館-婚姻感情挽回徵信
女子偵探徵信網
女子國際徵信
外遇抓姦偵探社
女子徵信社
女人國際徵信
女子徵信社
台中縣徵信商業同業公會
成功科技器材
女人國際徵信社
女人國際徵信
三立徵信社-外遇
女人國際徵信
女人國際徵信
大同女人徵信聯盟
晚晴徵信