Monday, May 08, 2006

Mistress of Spices - a Review

"Persons attempting to find a motive in this narrative will be prosecuted; persons attempting to find a moral in it will be banished; persons attempting to find a plot in it will be shot."- Mark Twain in Adventures of Huckleberry Finn. (thanks Viji)

உழைப்பாளிகள் தினத்தை சிறப்பா கொண்டாடனும்னு முடிவு பண்ணி, முந்தைய நாளே, மிஸ்ட்ரெஸ் ஆப் ஸ்பைஸிஸ்கு டிக்கெட் புக் பண்ணிட்டு வந்துட்டேன்.
மார்னிங்க் ஷோக்கே செம கூட்டம். எல்லாரும் நம்மை மாதிரி உழைப்பாளிகள் தினத்தை கொண்டாடறா போலிருக்கு.

பொதுவாக மருத்துவம், ஆன்மிகம், ஜோதிடம் போன்ற துறைகளில் இருப்பவர்கள், தங்களை அந்த துறைக்கு அர்பணித்து விட வேண்டியது காலத்தின் கட்டாயம். தனது சொந்த விருப்பங்களை தியாகம் செய்து விட வேண்டும். முன்னாடி அரசியலும் இந்த பட்டியலில் இருந்தது. இப்போ மகன், மறுமகன், பேரன் என குடும்ப அரசியலாகி விட்டதால், அதை நான் சேர்க்க வில்லை.(பொதுவா சொன்னேன் பா!)

சரி, கதைக்கு வருவோம். Chithra divakaruni என்ற பெங்காலிய எழுத்தாளரின் கதையை அப்படியே படமாகிருக்கிறார்கள். கதைப்படி, ஐஸ் நிஜமாவே குழந்தையா இருக்கும் போதே, டெலிபதி என்ற சக்தி இருப்பதால், ஒரு கொள்ளை கூட்டம் ஐஸின் பெற்றோரை உம்மாச்சிட்ட அனுப்பி விட்டு, ஐஸை கடத்துகிறது. ஆனா, நம்ம ஐஸ் குட்டி நைஸா தப்பிச்சு ஒரு இயற்கை மருத்துவம் போதிக்கும் பாட்டியிடம் வந்து சேர்கிறாள். ஸ்பைஸிஸ் என நம் உபயோகிக்கும் கிராம்பு, இஞ்சி,சுக்கு,மிளகு, பட்டை, சோம்பு, மிளகாய் வத்தல், இவற்றுக்கெல்லாம் அதீத சக்தி உண்டு என அந்த பாட்டி சொல்லி தருகிறார்.

அதோடு மட்டுமல்ல 3 முக்கிய நிபந்தனை இடுகிறார்.
1) ஸ்பைஸிஸை உனது சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்த கூடாது.
2)பிற மனிதர்கள் உன் உடலையோ, அல்லது நீ பிறரையோ தீண்டக் கூடாது. (ஆகா! பாட்டி, நீ வாழ்க!)
3)ஸ்பைஸிஸ் இருக்கும் (shop)இடத்தை விட்டு, நீ ஜாலியாக,அபிஷேக் பச்சன் கூட எல்லாம் சுத்த கூடாது.(அம்பியோட சுத்தலாம், தப்பில்லை)

குட்டி ஐஸ், வளர்ந்து, பெரிய ஐஸ் குட்டியாகி ஸ்பைஸிஸ் ஷாப் வைக்க அமெரிக்காவுக்கு பறந்து விடுகிறார்.

எங்க ஊர்லயும் தான் ஒரு கடை இருக்கு. கட்டம் போட்ட லுங்கிய முட்டி வரை மடிச்சு கட்டி, வீல் சோப்பு படம் போட்ட பனியன் போட்டு, ஸ்டண்ட் நடிகர் பொன்னம்பலம் சாயல்ல ஒருத்தன் தான் கடையில இருப்பான். "வேற என்ன வேணும்?னு அவன் கேட்கற தொனியிலயே, எனக்கு கதி கலங்கிடும். அம்மா வாங்கிண்டு வர சொன்ன பத்து ஐட்டதுல நாலு ஐட்டம் மறந்துடுவேன். இப்படி ஐஸ் குட்டி கடையில இருந்தா, தினமும் 50 கிராம் கடுகாவது வாங்க கடைக்கு வர மாட்டேனா?

இப்படியாக, நமது ஐஸ் குட்டி ஸ்பைஸிஸ் பஜார்னு ஜம்முனு ஒரு கடைய அமெரிக்காவுல போட்டு, தனது வாடிக்கையாளர்களுக்கு தொண்டாற்றி வருகிறார்.

ஐஸின் சேவைக்கு சில சேம்பிள்கள்:
1) ஒரு காஷ்மீரிக்கு, அவனது எதிர்காலத்துக்கு தேவையான ஆலோசனைகள்.
2) ஒரு நீக்ரோவுக்கு அவனது காதலியை கவர, பூண்டு உபயோகிக்க சொல்லி ஆலோசனை.
3) ஒரு சீக்கிய பயந்தாங்கொள்ளி பையனை திருத்த பட்டை சோம்பு குடுத்து உதவுதல்.
4) வயசான அனுபம் கேருக்கு தனது பேத்தி கன்னா பின்னானு டிரஸ் பண்றாளே!னு, பேத்திய பத்தி ரொம்ப கவலை. இந்தியர்கள் என்ற உணர்வையும் விட முடியாமல், துரைகளின் கலாச்சாரத்தையும் ஏத்துக்க முடியாமல் தவிக்கும் நியாயமான கவலை. எனவே அவரது மன அமைதிக்கும், பேத்திக்கு நல்ல புத்தி வரவும் தேவையான மருத்துவ மூலிகைகள்.

இந்த நேரத்தில், படத்தின் கதா நாயகன் வருகிறான். (1.50 பைசா குடுத்து ஒரு பிளேடு வாங்கி ஷேவ் பண்ணிக்கபடோதோ?) அவனை, என்னால் Heroவா ஒத்துக்கவே முடியலை.
"பூ விழி வாசலிலே"னு ஒரு சத்யராஜ் படம் வந்தது தெரியுமா? அதுல நடித்த தாடிக்கார வில்லன் மாதிரி இருக்கான். சரியான த்ராவை!( நெல்லை வட்டார வழக்கில் சில நல்ல வார்த்தைகள் என் வாயில வருது, கஷ்டப்பட்டு என்னை கட்டுபடுத்திக்கிறேன்).

அந்த தடியன், ஐஸ் குட்டிய சுத்தி சுத்தி வறான். பாவம், ஐஸ் குட்டி, உலகம் அறியா குழந்தை. பாட்டி சொன்னதை எல்லாம் மறக்காமல் உஷாரா தான் இருக்கா.
இருந்தாலும், கைப்புள்ள சொன்ன மாதிரி, "இது வாலிப வயசு!"னு கொஞ்சம் சலனப்படுகிறாள்.இது போதாதுனு அந்த தடியன் அம்மா சென்டிமெண்ட் பேசி அனுதாப அலையை எழுப்பி விடுகிறான்.
ஐஸ் குட்டி,வாடிக்கையாளர்களுக்கு தப்பு தப்பா மருந்து குடுக்கறா.
1) டாக்ஸி டிரைவர் ரவுடிகளால் தாக்கப்படுகிறான்.
2) நீக்ரோவின் காதல் புட்டுகுது.
3) சீக்கீய பையன், தறுதலையாகிறான்.
4) அனுபம் கேர் பேத்தி, ஆத்த விட்டு ஓடி போறா.
5) அந்த த்ராவையோட ஊர் சுத்தினதுனால, ஐஸின் கடை கொள்ளை போகிறது.

இப்போ தான் ஐஸ் தனது தவறை உணர்ந்து, ஒரு முடிவுக்கு வருகிறாள்.

நம்ம தமிழ் படத்துல எல்லா மறுமகளும் சொல்வாளே, "இந்த வீட்டுல,ஒன்னு நான் இருக்கனும், இல்ல உங்க அம்மா இருக்கனும்!" அது போல, ஐஸும், பலசரக்கு கடைய மூடிட்டு,அந்த த்ராவையோட ஒரு நாளாவது வாழனும் (குஜால்சா இருக்கனும்னு படிக்கவும்), இல்லை, மூட்டை முடிச்சோட, இந்தியாவுக்கு கிளம்பிடனும்னு முடிவு பன்றா பரதேவதை.


என் வயிறு பத்தி எறிய, ஐஸ் முதல் முடிவையே எடுக்கறா. மிளகாய்பழ கலர்ல புடவை, காத்தோட்டமா ஜன்னல் வெச்ச, இல்லை,இல்லை கதவே வெச்ச சோளினு சொக்கா டிரஸ் பண்ணிண்டு,(படம் போட்ருக்கேன் பாருங்கோ) அந்த த்ராவையோட கைய கோத்துண்டு ஊர சுத்தறா. எனக்கு பத்திண்டு வந்தது.

ஒரு நாள் ஆனதுக்கு அப்புறம், கடைக்கு தீய வெச்சுண்டு, பத்தினி தெய்வமாட்டும் தானும் அதுலயே விழறா. ஆனா ஐஸ் குட்டி சாகலை. அது எப்படினு கேட்டு டைரக்டருக்கு மெயில் அனுப்பிருக்கேன். அவரும் ஐஸ் குட்டி ரசிகர் போலிருக்கு.

படம் முழுக்க முகத்தில் ஒரு வித பரிதவிப்போடவே ஐஸ் குட்டி நடிச்சு இருக்கா. புரடியூசர் பேசிய சம்பளத்தை ஒழுங்கா தருவாரோ? மாட்டாரோ?னு பயம் போலிருக்கு.

படம் முழுக்க கொஞ்சம் டாக்குமெண்ட்ரி வாடை வருது.
படம் பார்க்க போறவா, கையில ஒரு சின்ன நோட்புக் கொண்டு போறது நல்லது. ஐஸ் எத்தனை கலர் புடவை மாத்தினானு குறிக்கறதுக்கு இல்லை, என்ன ஸ்பைஸிஸ் எதுக்கு நல்லது?னு குறிக்க.
சில சேம்பிள்ஸ்:
1) மிளகு - பிறர் மனதில் உள்ளதை வெளிக் கொண்டு வர.
2) துளசி - நல்ல நினைவாற்றலுக்கு
3) கடுகு, மி-வற்றல், எள் - கண் திருஷ்டி கழிய

காமிரா, நம்ம சந்தோஷ் சிவன். அழகுக்கு(ஐஸுக்கு) அழகு சேத்ருக்கார். மிளகாய் பழம் கூட குளோஸப்புல அழகா தெரியுது.
கடைசில கிளைமாக்ஸ் செம சொதப்பல். ஐஸ் இருக்கும் போது,கிளைமாக்ஸாவது கத்திரிக்காயாவது!

பின் சீட்டுல 2 தடிப்பசங்க. அதுல ஒருத்தன் சொல்றான், "மச்சான்! ஒரு பிட்டு கூட இல்லயேடா"
அடப்பாவி மக்கா! பக்கத்து தியேட்டர்ல(yeeh, it's a multiplex complex) போட்ருக்கற Basic Instinct-IIகு டிக்கெட் வாங்கிட்டு, தெரியா தனமா இந்த தியேட்டர்ல நுழன்சுட்டானுங்க போலிருக்கு!
(He hee, முந்தின நாளே அந்த படத்துக்கு டிக்கெட் எல்லாம் வித்து போச்சு.)

இதே கதைய நம்ம ஊர் "உல்டா மன்னன்" P.வாசுவோ, "செண்டிமென்ட் சிங்கம்" K.S.ரவிகுமாரோ எடுத்துருந்தா அம்மா செண்டிமென்ட், தாலி செண்டிமென்ட், மாரியம்மன் பாட்டு, நடுவுல வடிவேலு காமடி, முக்கியமா மும்தாஜ் குத்து ஸாங்க் எல்லாம் வெச்சு "மசாலா மங்கை"னு படத்தை ஒரு நூறு நாளைக்கு ஓட்டிபுடுவாங்க. ம்ம்ம்ம்....துரைகளுக்கு இன்னும் விவரம் பத்தலை.

28 comments:

kuttichuvaru said...

kadaisiyaa enna solreenga? padatha paarkkalaamaa vendaamaa??

Geetha Sambasivam said...

உழைப்பாளிகள் தினம் நல்லாத்தான் கொண்டாடி இருக்கீங்க. ஆனால் இந்த ஐஸ் தான் உங்களை விட வயசு ரொம்ப ஜாஸ்தி, பரவாயில்லையா? உங்க அம்மாவுக்கு கடிதம் எழுதறேன்.

Marutham said...

Pathindu varradhaa??? Appo poi nannaaiytu oru lotta ICE water adingo :P
Hehehe :P Maradhi thaatha.Yaru tagku reply panrom'nu reminder potu vechindu iniMetuku post panungo! :P
JUST KIDDING yo!

Anonymous said...

Ambi Sir, sambandame ellama oru kelvi, Postal Vote pootingala?

vishy said...

Aishwarya Rai.. sootu pottalum avalukku nadippe varathu... oru expression katta triyathu.. and she looks totally pathetic when she cry's / try to give a dull expression..

Spiceless gal selling spice..

enna idha padichu.. innum pathindu varatha... 911 dial pannungo.. fire engine varum.

Geetha Sambasivam said...

மற்படி பக்திப் பழமா மாறிடுங்க அம்பி, வேறே வழியே இல்லை.

Gopalan Ramasubbu said...

thaanum paduka matan ,thalium padukamatan nu oru saying iruku,athuku best example ithu than //*2)பிற மனிதர்கள் உன் உடலையோ, அல்லது நீ பிறரையோ தீண்டக் கூடாது. (ஆகா! பாட்டி, நீ வாழ்க!)//*;)

smiley said...

Dabba chetti kadai kathai pola irukku :)

Gnana Kirukan said...

Ambi - he he - nalla irunthuchu..Ippadi oru mattamana padama? Yappa - naan innum pakala..I was never a fan of Ash anyway..romba oliya iruka!! Athukaka dont ask me if I like shakeela! nammaku eppothum medium size-la oru Ayesha Takia rangeku iruntha thaan sari :P lol..Btw Ash sirikum pothu enga veetula velai seynch ponnu polave irukum - ditto!

ambi said...

@kutti, he hee, Aish irukka illa, parunga.

@geetha, //உங்க அம்மாவுக்கு கடிதம் எழுதறேன். //
Yarunga athu Aish? enakku onnume theriyathu. enna solreeenga neenga? (yappa! enga amma nimitampazham kuduppa)

@marutham, Thoda... romba thaan lollu ungalukku.

@anonymous, he hee, naan romba chinna payan. innum vote podura vayusu varalai..

@vishy, read the first paragraph. Aish pathi enime ethavathu sonna... Gr..rrrr.

@gops, he hee, shishyaa, romba kalasara nee..

@smiley, nalla padam thaanga, pls parunga..

@arjuna, thoda, Ayesha takia venuma unakku..? Gr..rrr. Aish kuttiya unga veetu velai senja ponnu koudaa comparing..? read my first paragraph..

shree said...

sss.. ore karamda ambi, not the spices in the movie but the jollus and kovams of urs..
yepdi ipdi oru ambuli mama kadhaiya yeludhi, adha padama vera yeduthu, adhukku ne vera vimarsanam yeludhi.. thangala!!

totally agreeing with visy.

shree said...

ne potturukkara padathukku yengathukkararayum pakka vittenna, indha laptopla screen savera andha padam varum. indha pakkam koopdave illaye nan avara.. grrrrrrrrrrrr

Anonymous said...

kashta kaaalam....innum Aish paatikellam poi jollu vittindu irukkiye...

seri etho chinna paiyan aasa pattuta...hmmm

Blogeswari said...

Nalla kaara saaramana review.. ice mazhai.. yabbaah! kottudaee

Paavai said...

masaala mangai eppo releasenu track vechukkanum, nichayama mistress of spicesai vida nalla irukkum

dubukku - aish pattiyaa ... ungalukku mathram varusha varusham vayasu kuraiyudaa.. :)- just kidding

இராமச்சந்திரன் said...

ஐஸ்-எல்லாம் உருகி ரொம்ப நாளாச்சு. இன்னமும் ஐஸ நெனச்சு ஜொள்ளவேண்டாம். ரிவியூ..இன்னொருதபா படம் பாத்த மாதிரி இருக்கு...

வெள்ளைக்காரன் நாட்டுக்கு வந்து "நீக்ரோ"ன்னு சொன்னா உயிருக்கு உத்தரவாதம் கெடையாது. அது அவமதிக்கிற வார்த்தை. இங்க U.S.A-ல "African American" அல்லது "Black"-ன்னு சொல்லுவா. Europe-ல எப்பிடியோ? தெரியலை...

KC! said...

Basic Instinct part 2 bit padama? kidayadhe! ambi, aish partha mayakathula ennanamo solladha...appuram vangi kattipa! So Mistress of Spices waste-a? Inga odudhe, parkalam ninaichen :(

Butterflies said...

Seems i don need to watch the movie....vikatan review padicha effect

Viji said...

I second Vishy!

gayathri said...

nalla review..

neengalum notebook edukitu poonengala?? :d

masala mangai comparison sooper..

Unknown said...

ambi 1.50 paisaavuku blade kedaikaadhu....btb enjoyed reading...

ambi said...

@shree, Gr..rrr, (intha vishy payan commenta thooki irukanam, che, miss panniten). he hee, unga hubby email-id kudunga, michathe naan pathukaren. (result will be daily one Aish pic @ ur laptop)

@ dubukku, Aish pattiyaa? Gr..rrr he, hee, azhagana Party.

@blogeswari, he, hee danks.

@ paavai, danks,nalla keetenga oru vaarthai,enga annaachiaa!

@veda, che, chee, naan apdi solluvena Aish kutti padathe! Aish, Asin pathi enna ipdi oru krotham..? Arjuna, kutti padicha enna Aagum.. theriyuma? Gr...rr.

@ramachandran, Aish ennikum Aish thaan. kai vali epdi irukku..?

@usha, yen frnd thaan BS-II pathi apdi sonnan. he hee, (with jollu)nee pathutiyaa? Mistress poyi paaru..

@shuba, Aish ellam nerla parthaa than azhagu. anyway danks.

@viji, rendu perukum (vishy and u kozhandhai)othai vizhum.

@gayathri, danks, yeeh, naan mindlaye note panninen.

@bala.G, 1.50 ku kidaikuthe! he hee, danks..

Harish said...

kola panita
Aish kutty padichcha bangalore pakkamae vara maata

Ram said...

"Director kku mail anupeerukken..."...hahaha...
Goor narration, ambi..
Ilavasama padam paathuttan..paathuttan...

ambi said...

@harish, read the first paragraph.. Gr...rrr.

@ram, welcome here, danks alot..

Ponnarasi Kothandaraman said...

Hahaha, Ipdi aniyayathukku comedy panna koodathu... It was damn hilarious... :) Enjoyed reading!

Blogeswari said...

அம்பி, என்ன ஒரே தூக்க கலக்கமா? க்ளூ குடுத்த பிறகும்.. க்ளூவே குடுக்கலயேன்னா என்ன அர்த்தம். சரி, வோட்டு யாருக்கு?

கைப்புள்ள said...

//இப்படி ஐஸ் குட்டி கடையில இருந்தா, தினமும் 50 கிராம் கடுகாவது வாங்க கடைக்கு வர மாட்டேனா?//

நான் வேணா மாமி கிட்ட பேசறேனே...சீக்கிரம் புள்ளாண்டானுக்கு கால்கட்டு போடுங்கன்னு...ஐஸ்குட்டியாம்லே ஐஸ்குட்டி?

மத்தபடி படம் "திராவை"ன்னு சொல்ல வர்றீங்க?