Tuesday, May 02, 2006

உம்மாச்சி காப்பாத்து..!

Click here to read Part-1 Part-2

முன்குறிப்பு: பஸ்ஸில் வந்த மஞ்சள் கலர் ஜிகிடி, சரியாக 1.30 am ku பெயர் தெரியாத ஒரு ஊரில், அத்தையுடன் (ஆமா! அழகு பெண்ணின் தாயார் என்றால் அத்தை தானே! வைரமுத்து சொல்லிருக்காரே!) இறங்கி விட்டது. அவள் பறந்து போனாளே!

சிருங்கேரி பஸ் நிலையம், மிக சின்னது. 9 மணிக்கு உடுப்பி செல்லும் பஸ் வரும்னு அரைகுறையா கன்னடத்தில் சொன்னதை புரிந்து கொண்டேன். அங்கு காவி உடையில் ஒரு வெள்ளைகார துரை இருந்தார். என்னை அறிமுகப்படுத்தி கொண்டேன். அவரும் உடுப்பி செல்ல தான் காத்திருப்பதாக சொன்னார். புளி மூட்டை மாதிரி அடைத்து கொண்டு பஸ் வந்தது.
துரை ரொம்ப அஸால்டாக பஸ்ஸில் ஏறி, என்னை பார்த்து, "it’s very usual, get inside!"னு கை குடுத்தார். தோடா! திரு நெல்வேலிக்கே அல்வாவா?
பின் கூட்டதில் நீந்தி பின் சீட்டுக்கு அருகில் நின்று கொண்டோம்.

அவர் ஜெர்மன் நாட்டை சேர்ந்தவர். சிருங்கேரியில் தான் தங்கி உள்ளார். வருடத்துக்கு 3 மாதம் ஷ்ரிலங்காவில் யோகா கிலாஸ் எடுப்பாராம். 3 மாதம் ஜெர்மனியில். 6 மாதம் சிருங்கேரியில் தங்குவாராம். குடும்பம் ஒன்றும் இல்லை. பின் பேச்சு, யோகா பற்றி சென்றது. சில பல ஆசனங்கள் பற்றி விவாதிதோம். ஜெர்மனியில் தடுக்கி விழுந்த இடம் எல்லாம் யோகா பள்ளிகள் தானாம். நம்மை விட துரைகள் யோகா, தியானம் எல்லாம் ஆர்வமாக கற்று கொள்கிறார்கள்.
இவர், கண்ணன் மீது பற்று கொண்டு "Hebert" என்ற தனது பெயரை முகுந்தா!னு மாற்றி கொண்டு உள்ளார்.

" கிருஷ்ணா! முகுந்தா! முராரே!னு பாகவதர் குரலில் எனது மிமிக்ரி வித்தையை அவரிடம் காட்டினேன். சந்தோஷம், தாள முடியலை மனுஷனுக்கு!
இந்தியா எவ்வளவு சிறந்தது! இதை விட்டு நீங்க ஏன் அமெரிக்கா, லண்டன்னு போறீங்க?னு கேள்வி எழுப்பினார்.

"பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை!
அருளிலார்க்கு அவ்வுலகம் இல்லை!! என்பதை சூசகமாக புரிய வைத்தேன். உண்மை தான்!னு ஒத்துக் கொண்டார்.

பஸ்காரன் மேலும்,மேலும் ஆட்களை அடைத்துக் கொண்டிருந்தான். டிரைவரே கிட்டத்தட்ட நின்று கொண்டு தான் வண்டி ஓட்டினார்.

பகலில், மலை பாதையின் வளைவுகள், நெளிவுகள் எல்லாம் அற்புதமான காட்சி.(he hee, பக்தி போஸ்ட் என்பதால் இதை வேறு விதமாக கம்பேர் பண்ண விரும்பலை.)
2.5 மணி நேரம் நானும், முகுந்தாவும் நின்று கொண்டே வந்தோம். ஒரு பயலும் சீட்டு தரலை.வெள்ளைகாரியா இருந்தா மடியில உக்காச்சுகோ!னு பல்ல காட்டி இருப்பானுங்க கேடிப்பசங்க!

ஒரு வழியா உடுப்பி வந்து சேர்ந்தோம். 2 நாள் தங்கி உடுப்பி க்ருஷ்ணணை தரிசிக்க போறேன், ஓட்டல் ரூம் பார்க்க போறேன்னு முகுந்தா விடை பெற்றுக் கொண்டார். நான் மட்டும், மறுபடி, தனியே, தன்னந்தனியே கோவிலை நோக்கி சென்றேன். தாகத்தை தணிக்க ஒரு உடுப்பி ஓட்டலில் ஜூஸ் குடித்தேன். நாங்க எல்லாம் உடுப்பிக்கே போய் உடுப்பி ஓட்டலில் ஜூஸ் குடிச்சோம்னு இனிமே ஸ்டைலா என் நண்பர்களிடம் சொல்லிக்கலாம்.

பின் கோவிலுக்கு உள்ளே நுழைந்தேன். சரியான டூரிஸ்ட் கூட்டம். கோவில் கொஞ்சம் கேரளா பாணியில் இருந்தது. நடை சார்த்தி விட்டனர். இருந்தாலும், ஒரு சிறிய ஜன்னல் வழியாக குட்டி கண்ணணை பாத்துக்கோனு அனுமதி அளித்தனர்.

அடடா! அடடா! கொள்ளை அழகு!


நெய் விளக்கொளியில், மயில் பீலி மெல்லிய காற்றில் அசைந்தாட, காலில் கட்டிய சலங்கையுடன், கண்களில் குறும்பு கொப்பளிக்க, குறு நகை புரிந்து, ஒரு கையில் புல்லாங்குழலுடன், மறு கையை இடுப்பில் கை வைத்துக் கொண்டு, சவுக்யமா இருக்கியா அம்பி?னு கண்ணால் கேட்பது போன்று இருந்தது.

"குழலூதி மனமெல்லாம் கொள்ளை
கொண்ட பின்பு, குறை ஏதும் எனகேதடி?"னு ஊத்துகாடு வெங்கட சுப்பையர் பாடியது ஆச்சரியமே இல்லை! ( நன்றி விஜி).


இந்த தேவகி மைந்தன், யசோதை குமாரன் புரிந்த லீலைகள் தான் எத்தனை! குழந்தையாக பாவித்தால் அவர்களுக்கு குழந்தையாக, நண்பனாக,

கலாபக் காதலனாக!(சே! சே!ஆர்யா இல்லை), தூதுவனாக, கடமை போதிக்கும் கர்ம வீரனாக! அப்பப்பா!


வையகத்தில் ஒரு பிள்ளை!
அம்மம்மா நான் கண்டதில்லை!

அன்னமாச்சார்யார், மிக அழகாக தெலுங்கில் க்ருதிகளாக இயற்றி உள்ளார். எம்.எஸ் அம்மா பாடி இருக்கும் கேஸட் போன வாரம் தான் லேண்ட்மார்கில் வாங்கினேன். இரவு நல்ல தூக்கம் வருகிறது.

சரியாக ஒரு நிமிஷம் தான் தரிசனம். இருந்தும் ஆவல் அடங்க வில்லை. மனித ஜென்மம் தானே!


குறை ஒன்றும் இல்லை, மலை மூர்த்தி கண்ணா!
குறை ஒன்றும் இல்லை கண்ணா!னு வாய் தான் பாடுகிறது. மனம் முழுக்க கோரிக்கைகள், வேட்பு மனுக்கள். ம்ம்ம்ம்! நிறைய பக்குவப்படனும் போலிருக்கு.

தரிசனம் முடிந்து கோவிலிலேயே மம்மம் எல்லாம் போட்டனர். சாம்பார், ரசம், கூட்டு, கடலை பருப்பு பாயசம்(கண்ணனும் நம்ம மாதிரி நிறைய கடலை போட்டவர் என்பதாலா?), மைசூர் பாகுனு சாப்பாடு அட்டகாசமா இருந்தது.

கோவிலுக்கு வெளியே வந்தவுடன், ஆபிஸிலிருந்து போன்!

இந்த பைலை எங்கே சேவ் பண்ணிருக்கே? அந்த பைலை எங்கே சேவ் பண்ணிருக்கேனு! ரொம்ப சைட் அடிக்காதே!னு இலவசமா அட்வைஸ் வேற!
காசிக்கு போனாலும் கழுதையோட பாவம் தொலையாது போலிருக்கு!

பாவி பசங்க! உடுப்பில கூட உம்மாச்சி படம் போட்ருக்கானுங்க!( Gops உம்மாச்சி படம்னா என்னனு கமண்ட்ஸ்ல சந்தேகம் கேக்காதே!). (Arjuna யாரு நடிச்சதுனு சந்தேகம் கேக்காதே!). (Kutti DVD எங்கே கிடைக்கும்னு சந்தேகம் கேக்காதே!)
தேசிய ஒருமைப்பாடு இதுல தான் போலிருக்கு. க்ருஷ்ணா! க்ருஷ்ணா!னு கன்னத்துல போட்டுன்டேன்.(போஸ்டர பாத்து இல்ல, உடுப்பி கோபுரத்தை பாத்து!)

அக்கம் பக்கம் விசாரிச்சா, கொல்லூர் மூகாம்பிகை அருகில் தான்னு தெரிய வந்தது. என் லக், வழியிலேயே பஸ் கிடைத்தது.
....பாதைகள் நீளும்.

பின்குறிப்பு: அடுத்த போஸ்ட் இன்பம், துன்பம்! Tagged by Ponnarasi...

14 comments:

Gnana Kirukan said...

"பாவி பசங்க! உடுப்பில கூட உம்மாச்சி படம் போட்ருக்கானுங்க!( Gops உம்மாச்சி படம்னா என்னனு கமண்ட்ஸ்ல சந்தேகம் கேக்காதே!). (Arjuna யாரு நடிச்சதுனு சந்தேகம் கேக்காதே!). (Kutti DVD எங்கே கிடைக்கும்னு சந்தேகம் கேக்காதே!)"

Yow Ambi - enna unga thalaivi Shakeela padama potanga? LOL

KC! said...
This comment has been removed by a blog administrator.
KC! said...

eppadi ambi eppadi? eppadi unnala thideernu bhakthi margathula poi ennamo neethan bakthi pazham madhiri scene uda mudiyudhu?? Ennala mudiyala, thappi thavari nallavan aayitaya enna?

KC! said...

eppadi ambi eppadi? eppadi unnala thideernu bhakthi margathula poi ennamo neethan bakthi pazham madhiri scene uda mudiyudhu?? Ennala mudiyala, thappi thavari nallavan aayitaya enna?

Gopalan Ramasubbu said...

Bakthi post ngarathala summa vidaren.
Thaniya 300 kms travel panni kovilku pora alavuku nenga bakthi maana Ambi?good on u.

kuttichuvaru said...

ya, veda is right.... ellaarume Jannal vazhiyaa thaan paarkkanum :-)

USHA ungala namba maattaanga pola irukke.... court-la niruthi kekkaraa maathiri 3 times ketturukkaanga!!

Viji said...

unga ellarukkum puriyave illa, Usha 3 parts of ummachi kaapathu'kkum serthu kekkaranga... :))
narukkunu oraikkara madhiri, nachunnu kettinga Usha! :P

eppavum jannal vazhiya dhan pakka viduvanga, ore oru naal mattum nadaiya thorandhu, pooja panradha pakka mudiyum... ennikunnu therila, vijarichu solren. Nice post... :)

ambi said...

@Arjuna, sari, sari, romba kalasitten polirukku. pongi ezhunthutaa.

@veda, Ohh apdiyaa? naan kadhavu ellam thuranthu viduvaanganu nenaichen. btw, naana iruntha vellaikaariku seata kuduthutu, ava madiyila naan ukaachuppen, he hee, naan kuzhandhai maadhiri.

@usha, namba matiyaa ennai? athukkuga epdi 3 times comment pottu yen manathaa vaanganumaa? un pazhi vaangum padalathukku ore alavee illiyaa?

@gops, thaniyaa thanpa poga mudiyum. ithukaaga kooda oru ticketaya kootitu poga mudiyum? :)travelled totally 450 + 450 kms in 34 hrs.

@kutti, nee udipi kovila thane solre? :)

ambi said...

@viji, U too brutus? he hee,nejamaave naan romba nalla payan. Aey! usha, sathi leelavathi, ipdi pazhi vaangitiye! :)

Geetha Sambasivam said...

என்ன அம்பி, ரொம்ப பக்தி முத்திப் போயிடுச்சா? சரி, சரி, அந்த மஞ்சக்கலர் ஜிங்குச்சா பற்றி என்ன வாயை மூடிக்கொண்டு இருக்கீங்க?டுபுக்குவிற்குப் பயமா? அவர்தான் டுபுக்கு, டுபுக்குனு காணாமல் போயிடறாரே? வலப்பதிவிலே கூட மாட்டிக்கறதில்லை? பீட்டர் விடாறாருன்னு கேள்விப்பட்டேன்.இன்னும் என்ன என்னவெல்லாம் எழுதி என் ப்ளாகிற்கு வர கொஞ்ச ஆளுங்களையும் உங்க பக்கம் இழுக்கப்போறீங்களோ? இப்பப்பார்த்து இந்த server problem வேறே. நீங்கள் போகாத ஒரு ஊருக்கு நான் போயிட்டு வந்தேன். பார்க்கலாம் நீங்க கண்டு பிடிக்கிறீங்களானு?

Anonymous said...

நல்ல எழுதியிருக்க...பக்தி ரசம் ரொம்ப சொட்டறதே... நான் ஒன்னும் சொல்லலப்பா...

Geetha Sambasivam- அட என்னங்க...எனக்கு பயப்புடற மாதிரியா இருக்கான் அம்பி? :))

//பீட்டர் விடாறாருன்னு கேள்விப்பட்டேன்// - இதென்ன வம்பா போச்சு? எங்க எப்போ எப்பிடி??

ambi said...

@geetha, neenga koodava ennai nambalai? btw, enga annan dubukku nallavar, vallavar, naalum therinjavar..(veetula potu kuduthuraatheengoo anna)
u'd gone to the places like subramaniya, manglore.

@dubukku, danks anna, he hee,see my comments to geetha sambasivam..

Butterflies said...

Hey nice narration...i have also been to UDIPI temple nice temple...So u enjoyed the tour?

shree said...

first few paras are like news reel. 'ivar koorugirar'nu SVe Shekar joke madhri irukku.
'bakthi post yenbadhal veru comparison illai' - adappavi, thirundhave mattiya nee
adada, yen pattu krishnara pathi padikkarache, nejamma udambellam silirthukkaradhu. yenakku isckon krishnarukke kannla jalam vandhudum, idhu chance illa. am yet to visit this punidha place to see my unni krishna.
manga, adhu malai moorthy kanna illa, marai moorthy kanna. yeah the more vetpu manus we have, the more u will sing this song. yengathu kulandhaingallam indha pattu ketta dhan thoonugme. ofcourse nan padina thoongindrukkaradhum bayandhu yelundhudum, he he he.
hmm.. yennamo therila yenakku krishnar is always a baby. never can i imagine as a grown up. nan yeppavume krishna pappava varayaradhulaye iruppen. but inni varaila mugam first timela alaga vandhadhe kedayadhu!! ((SIGH))