Thursday, May 04, 2006

இன்ப, துன்பம்!

பொன்னுக்கெல்லாம் அரசியாம் பொன்னரசி அருமை தோழி, பாசமுடன் நம்மை இழுத்து விட்டதனால்,(அது வேற கொக்கி, எனக்கு அதுக்கு என்ன எழுதனு தெரியலை, அட்ஜஸ்ட் பண்ணிக்க மா! பொன்னரசி) தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு இன்னொரு பதிவு.

1) எப்படா லீவு கிடைக்கும்னு தீபாவளி, பொங்கல்னு ஒரு மாதத்துக்கு முன்னாடியே காலண்டரை பார்த்து, பார்த்து, அடிச்சு பிடிச்சு ரயில்வே கவுண்டரில்(ஜாதி பெயர் இல்லீங்கோ)வரிசையில நின்னு, ரொம்ப வள்ளல் மாதிரி பக்கத்து ஜிகிடிக்கு பேனா எல்லாம் குடுத்து, ஏரியா, ஈமெயில், எல்லாம் நைஸா விசாரிச்சு டிக்கட் புக் பண்ணுவது இன்பம்.

இவ்ளோ கஷ்டப்பட்டு, வரிசையில நின்னு, நம்ம முறை வரும் போது மட்டும், டிக்கட் குடுக்கற தடியன், ஈனு பக்கத்து சீட் ஆன்டியோட கடலை போடறத பாக்கறது துன்பம்.

2) 4 நாளு லீவுல வீட்டுல ராஜ மரியாதை நடக்கும். 4 மாதம் மட்டுமே துவைக்காத ஜீன்ஸ், மற்றும் பிற துணிகள் எல்லாம் அம்மாவே தோய்ச்சு தருவா. சரவண பவன் ஓட்டல் மெனு மாதிரி வித விதமா ஐட்டங்கள் வந்துன்டே இருக்கும். "என்னடா! முதுமலை காட்டுல யானைக்கு கேம்ப் நடக்குற மாதிரி நம்ம வீட்டு அம்மா உனக்கு சமைச்சு போடறா போலிருக்கு"னு என் பாசக்கார தம்பி நக்கல் விடுவானே! அடடா அது இன்பம்!

2a) குளிக்க போறேன்னு சொல்லிட்டு, எங்கள் வற்றாத ஜீவ நதியாம் தாமிரபரணியில், குறைந்தது 3 மணி நேரம்(எருமை மாடு போல), நண்பர்களுடன் ஆட்டம் போட்டுவிட்டு, கேப்டன் மாதிரி கண்கள் சிவக்க, கையோடு கொண்டு போன தக்காளி சாதம், தயிர் சாதம், எல்லாம் ஒரு பிடி பிடித்து விட்டு வீட்டுக்கு வருவது இன்பம்.

2b) தாத்தா பாட்டி வீட்டுக்கு போய், சைக்கிள் எடுத்துண்டு, மதுரைய சுத்து, சுத்துனு சுத்தி, உள்ளூர் பாசக்கார நண்பர்களை நலம் விசாரிச்சு, "ஊருக்குள்ள ஜிகிடிகள் எல்லாம் சவுக்கியமா"னு ரவுசு விடறது இன்பம்.

4 நாளு லீவு 4 நிமிஷம் மாதிரி கரைஞ்சு போயி, மறுபடி பொட்டிய தூக்கும் போது ஒரு பீலிங் வருமே! அது துன்பம்.


3)நல்ல கொளுத்தற வெயில்ல, நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாட போய், "டாய்! எங்க சிங்கம் களம் எறங்குது டா! இப்போ போடுங்க டா பவுலிங்கு"!னு நம்மை கைப்புள்ள மாதிரி ஏத்தி விட்டு ஓப்பனிங் பேட்ஸ்மேனா களம் எறக்கிடுவாங்க. நாமளும், குஷியா சேவாக் மாதிரி பேட்ட சும்மா சுத்து சுத்துனு சுத்தி 3 ஓவர் 30 ரன் குவிச்சுருவோம்.

கடுப்பாகி போன எதிர் கட்சிக்காரன், நாகாஸ்திரம் மாதிரி பந்த நம்ம நெஞ்சுக்கு குறி வெச்சு, ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் மாதிரி வந்து எறிஞ்சுடுவான். நாம ரொம்ப விவரமா தப்பிக்கறதா நினைச்சு வாலறுந்த குரங்கு மாதிரி குதிப்போம். பந்து நம்ம வலது முட்டிய நச்சுனு பதம் பார்க்கும். "சாய்ச்சுபுட்டான்யா"!னு 4 நாள் நடக்க முடியாம கஷ்டப்படுவோமே! அது இன்பமான துன்பம்.

4) செமஸ்டர் முழுக்க படிக்காம, கரெக்ட்டா எக்ஸாமுக்கு முந்தின ராத்திரி, முட்டு முட்டுனு முட்டிட்டு, டாஸ் எல்லாம் போட்டு பாத்து, இந்த கொஸ்டீன் தான் கேப்பான்னு நாம எதோ பெரிய யாகவா முனிவர் மாதிரி குறி பார்த்து, எக்ஸாம் ரூமுக்கு நுழையறத்துக்கு முன்னாடி குல தெய்வத்தில் இருந்து, முக்கு சந்து முனீஸ்வரன் வரை வேண்டிக்கிட்டு, கொஸ்டின் பேப்பர திறக்கற நேரம் இருக்கே! அது தான்யா இன்பமான துன்பம்!

5) நம்மை பழி வாங்கனும்னே கஷ்டமான (படிக்காதனு வாசிக்கவும்) கொஸ்டின் வந்து சேரும். நாமளும், முடிஞ்ச மட்டும் டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் பாதி, ஆப்ரேஷனல் ரிஸர்ச் பாதி, சொந்த கதை, சோக கதை மீதினு பக்கத்த நிரப்புவோம். இந்த டெக்னிக் கூட தெரியாம நம்ம பாசக்கார பயலுங்க, ரொம்ப தாராளமா நம்ம பேப்பர நைஸா வாங்கி காப்பி அடிப்பானுங்க.
கடைசியில நம்ம பேப்பரையும் சேர்த்து அவன் பேப்பரோட கட்டிடுவாங்க கூமுட்டை பசங்க. திரும்பி நம்ம பேப்பர மீட்கற த்ரில் இருக்கே, யப்பா! அது தான் இன்பமான துன்பம்.

6) ப்ராஜக்ட் பன்றோம்னு சென்னை வந்துட்டு, ஒட்டல் சாப்பாடு எல்லாம் நல்லா இல்லைனு, நாமளே சமைச்சா என்ன?னு 4 தடிப்பசங்களோட(என்னையும் சேர்த்து தான்) கூட்டணி போட்டு, வெங்கல் கடையில யானை புகுந்த மாதிரி, கிச்சனை ஒரு போர்களமாக்கி, ஒரு வழியா ஏதோ ஒரு வஸ்து சட்டியில வரும்.

ஆகா! ப்ரமாதம்!னு நாங்களே ஒருத்தர் முதுகுல ஒருத்தர் தட்டி குடுத்துப்போம். ஆனா, சமைச்ச பாத்ரம் அலம்பனும்னு சொன்னா 3 பேரும் சுனாமி வந்த மாதிரி ஓடிடுவாங்க. ஏன்டா சமைச்சோம், சாப்டோம்னு பாத்ரம் கழுவற அந்த நேரத்துல ஒரு பீலிங்க் வருமே, அது தான் இன்பமான துன்பம்.

சரி,விருப்பமுள்ளவர்கள் (வெட்டியா இருப்பவர்கள்னு படிக்கவும்) இதே டாபிக்ல எழுதுங்கோ.

பின்குறிப்பு: விளம்பர துறையில் ஆர்வமுள்ளவர்கள், நமது அக்கா
blogeswari (he hee, இவங்க L.R. ஈஸ்வரிக்கு ஒன்னு விட்ட ஓற்படி பொண்ணு) தனது பிளாகில் சும்மா கலக்கு கலக்குனு கலக்கிட்டு வராங்க. நிறைய தகவல் தெரியுது. Already, she has posted 5 posts in this area. போய் பாருங்க. உங்களுக்கும் பிடிக்கும், அக்கா பிளாகேஸ்வரிக்கு நான் கியாரண்டி.

பின்-பின்குறிப்பு: Next post - an Ambi style review on Mistress of Spices - Aish kutti.

26 comments:

kuttichuvaru said...

vazhakkam pola pinnitteenga ambi!! antha exam-kku munnaadi nite-out enna oru kalaachaaram!! athu appdiye thodaranum!!

Dubukku said...

blogeswari - very nice blog. thanks for the link.

BLOGESWARI said...

Kalakkareenga ambi :)

Thanks ambi and dubukku. that was sweet.

Arjuna_Speaks said...

"நாம ரொம்ப விவரமா தப்பிக்கறதா நினைச்சு வாலறுந்த குரங்கு மாதிரி குதிப்போம். பந்து நம்ம வலது முட்டிய நச்சுனு பதம் பார்க்கும். "

Ambi - neengal kuthikum pothu panthu ungal valathu mutiyil "mattum" thaan patathanu santhosha paduvathilum inbam! :P lol (Ambi enna purinchutha?? :P ROTFL)

Gopalan Ramasubbu said...

Arjuna sonna mathire, valathu kaal la thaana patuchu,thalaiku vanththa helmet oda pochunu solli santhosa patugonga Ambi;)

Bala.G said...

Good one ambi

ambi said...

@kutti, danks. i think all students r alike.. he hee..

@dubukku, yeeh, it's a nice blog. U r welcome, i know that U r intrested in Advertising industry.

@blogeswari, danks. he hee, unga blogukku naan advertise panniten. incentive ellam tharuvelaa?

@arjuna, purinjathu, purinjathu. edakoodama patrunthaa, yeppaaa!

@gops, naanum athe thaan nenaichen. :)

@bala.G, danks.

Viji said...

Ambi- nan onga post'a ozhunga padichuttu dhan comment ezhudharen. thaangal eppadiyo, theriadhu... :P
nalla irukku! can relate to most parts, except the cricket playing bit... nan veladi irukken, aana pon kozhandhai (nan dhan Ambi) aache nu en udan pirappugal, medhuva dhan pandhu uruttuva... illenna avaala, melidam padham paathuduva... :-D

கீதா சாம்பசிவம் said...

அம்பி, இதில் நான் விட்டது நிறைய. என் அம்மா செய்யும் புடலங்காய் பஜ்ஜி, தட்டாம்பயறுச் சுண்டல்(சின்ன வெங்காயம் போட்டு), அதே சின்ன வெங்காயம் போட்டுப் புளி உப்புமா இது எல்லாம் என் favourite. especially mother's make.இன்னும் ஆக்ரா கோட்டை மஹாராஜா ஹோட்டலின் பட்டர் பராட்டாவும், ஆலு மட்டரும் இன்னும் எத்தனையோ இருக்கிறது. போனால் போகிரது என்று ரொம்பக் கொஞ்சமாக எழுதி இருக்கிறேன். காசில்லாமல் நீங்க ஆட்டியதை நான் பார்த்து விட்டேன்.ஒருத்தரிடமும் சொல்லவில்லை.

கீதா சாம்பசிவம் said...

அது சரி, அம்பி, தாமிரவருணிக்கரையிலே மதுரை எப்போ வந்தது? பூகோளம் வீக் சப்ஜக்டா?

Shuba said...

Hey....gud sense of humour....too gud...well done....

Usha said...

eppolerndhu ambi nee PRO-va maarina? sollave illa?

shree said...

so sweet ambi. rombo supera yeludhirukka. keep it up.
so ne madhura karanaa?? vijayakanthkku pavam oru vote kuranchi poidume, yenna indha monday oorkku vandhuduvaya???
semester exam pathi yeludhi irukkiye - namma nandoo voda bit ideas yellam pathu vachikko.. use agum.
about reserving tickets - yeah u r right. nanum 'kodumai' ushavum adichi pudichi andha queuela aikkiyamagai pakkathu seat payyana pathu jollya tamil-la nakkaladichom. all of a sudden avan yengala pathu tamila pesa, nanga valiya.. wow nice days.
apram bangalore traffic jamkku nan pala dhadavai runningla dhan railway station poirukken. foot board payanam kathukka vachadhu bangalore.
pathram kaluvara madhri kodumai onnume illa - idha dhan nan pulambi irukken, porukkalayae namma pasangalukku.
adey, ne nejammave nalla thambiya irundha, pasamulla thambiya irundha, chamathu payyana irundha, indha aishwarya pathi yeludhadhe. I HATE HER just bcoz my husband literally FALLS for her. grrrrrrrrrrrrrrrrrrrrrr. (kuttiyam la kutti)

gayathri said...

ticket bookin - aunty - kadalai - exam aniku munadi naal padipu - ista deivam - quetion paper -> nanum neraya anubava patueruken :((

ambi said...

@viji, danks, sari, sari, manatha vaangaathe!
panthaa uruti vilayandaa athu nalungu maa kozhanthai! (mrrge la vilayaada poriye kozhandhai!) LOL :)

@geetha sambasivam, mom's place is kallidai - t'veli. Mom's mom place is mdu.. got it..?

@shubha, danks alot.
@usha, thoda, nee mattum unga annavukku PRO va irukallaam.

@shree, enna commentuku pathila oru postee potuteenga! (generally veda thaan ipdi peel pannuva!)
ushavum, neeyum sema vaalu polirukku!
he, hee, Aish kutti posta unga hubbya padikka sollungaa.

@gayathri, same blood nu sollunga..

வேதா said...

hi, intha postuku etho nalla comment podalam nenachen, nee ennadana en manatha vangita. inimey un postuku comment poda naan yosikanum.

Ponnarasi Kothandaraman said...

Yenna ithu??? Naa yenna boss is this my tag ????
But it was a gud read! I enjoyed reading. Especially muneesawara and yagava munivar..Hm...Punch ;)

Ponnarasi Kothandaraman said...

Yenna ithu??? Boss is this my tag ????
But it was a gud read! I enjoyed reading. Especially muneesawara and yagava munivar..Hm...Punch ;)

PS: Hehehe.. thappa ayduchu last comment :)

Marutham said...

:)) AMBI- Total confusion! Enna aachu.Enn pera matheeteenga....Enn Peyar Marutham . Ganbagam varudha...Gnabagam varudha? :P ana enn link'la correct'a Tag post paniruken potrukeenga :)) Adada...Enna kuzhapam :)) POOR YOU! Pavamba.. En TAG avlo dhooram Manda kozhappudha :P Sorry Dude!

shree said...

@veda - vidadheenga veda. yevlo thimir indha ambikku

@ambi - udhappaen. ne pannradhu pathadhunnu yen husbanda vera iluthu vidarayaa?? po inime un bloga padikkave matten naan

ambi said...

@veda, aanathu Aayi pochu, oru comment potrukalam illa?

@ponnarasi, he hee, small confusion. eschuse me..

@marutham, he hee, unnaiyaa gyabagam irukku thayi.

@shree, avasarapattu entha mudivum pannitaatheenga yekka. pesi thethukalaam.

Ram said...

Sooper...Onnu solla vittuteengale...Namma yeluthina masala paper aa paathu yeluthinavan pass aavan..namakku oothikkume...:))

கைப்புள்ள said...

கலக்கல் அம்பி. அம்பியே இப்படின்னா ராம்ப்வாக் ரெமோ எப்படி இருப்பாரு? எப்ப ரெமோ வெளியே வந்து டூயட் பாடுவாரு சது குட்டியோட?(உங்க பாணி தான்...ஹி...ஹி)

Delhi_tamilan said...

neega maduraila padicheegala, nanum madurai dhan.... adhan pechula madurai manam veesudhaenu parthen...!

Mighty Maverick said...

இதுல அம்பி சொன்ன பொய்கள்...

ஜீன்சை துவைக்க கல்லிடை எடுத்துகிட்டு போனதில்லை... ஏன்னா தாமிரபரணியில கழிவு (சுற்று சூழலுக்கு கேடு) கலக்க கூடாதுன்னு ஊருக்குள்ள ஒரு சட்டம் உண்டு...

மதுரையை சுத்து சுத்துன்னு சுத்திட்டு... பச்ச பொய். ஊருக்குள்ள நாலு இடம் மட்டும் தான் தெரியும்... அதை தாண்டி போனதில்லை... அது ஏன்னா அந்த நாலு ஜிகிடிகள் இருக்கிற இடம் மட்டும் போயிட்டு வந்தா எப்படி வேற இடம் தெரியும்...

இது வரை படிச்சு எழுதினதை விட படிச்சிட்டு வந்தவங்ககிட்ட கதை கேட்டு எழுதினது தான் அதிகம்.

நல்ல வேளை ராமகிருஷ்ணன் இந்த கண்றாவியை எல்லாம் படிக்கலை... படிச்சிருந்தா மானிட்டருக்குள்ள கை விட்டு மொத்த மொக்கையையும் கிழிச்சுருப்பான்... சாப்ட்வேர் இன்ஜினியரிங் பேப்பர் அன்னிக்கு ராமகிருஷ்ணன் அழுத அழுகையை யாரும் அழுதுருக்க மாட்டாங்க... நம்ம அம்பி மெயின் சீட்டை வாங்கி அப்படியே நகல் எடுக்குற ரகம்னு யாருக்கும் இங்கே தெரியாது...

அப்புறம், அம்பி சமையலறைக்குள் வர்றது பாத்திரம் கழுவுறதுக்காகவும் தண்ணி குடிக்கிறதுக்காகவும் தான்... இதுல சமையல் செஞ்சேன்னு பீலா வேற...

இப்படி போட்டு கொடுத்து அம்பியை துன்பத்தில் மாட்டி விடுவது மாதிரி இன்பம் வேறேது... எங்கேயும் காமெடி பீஸ் நம்ம அம்பி தான்... :P

奇堡比 said...

新女性徵信
外遇調查站
鴻海徵信
亞洲徵信
非凡徵信社
鳳凰徵信社
中華新女性徵信社
全國新女性徵信社
全省女人徵信有限公司
私家偵探超優網
女人感情會館-婚姻感情挽回徵信
女子偵探徵信網
女子國際徵信
外遇抓姦偵探社
女子徵信社
女人國際徵信
女子徵信社
台中縣徵信商業同業公會
成功科技器材
女人國際徵信社
女人國際徵信
三立徵信社-外遇
女人國際徵信
女人國際徵信
大同女人徵信聯盟
晚晴徵信