Thursday, April 27, 2006

ஒரு சொல் கேளீர்...!



ஏப்ரல் 30 2006 - அக்க்ஷ்ய த்ரிதியை. சித்திரை மாதம் அமாவசைக்கு 3ம் நாள் தான் அக்க்ஷ்ய த்ரிதியை. மிகவும் சுபமான நாள்.

இதை பற்றி யஜுர் வேதத்தில் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நாளில் செய்யும் தானம், தர்மங்கள் 7 பிறவிக்கு தொடரும். ஸ்வர்ண தானம் மிக உயர்ந்தது. வெள்ளி, பசு, தயிர், பால், இதுவும் தானம் அளிக்கலாம்.

எல்லாம் சரி. ஆனால் இன்று, இதை வேறு மாதிரி மாற்றி விட்டனர் நமது மக்கள்.

இந்த நாளில் 1 கிராமாவது தங்கம் வாங்கி தமது பீரோவில் வைத்தால், அந்த வருடம் முழுக்க கூரையை பிச்சுண்டு கொட்டும்னு எவனோ விட்ட பீலாவை நம்பி, நம்ம மக்கள், பனகல் பார்கில் பைத்தியமா திரியரா.

இந்த ஒரே நாளில் மட்டும் 400 டன் தங்கம் விற்பனை ஆகும்னு கணக்கிடப்பட்டுள்ளது. இது குறைந்த பட்ச அளவு தான்னு புள்ளி விபரங்கள் சொல்கின்றன. தங்க காசுகளை பிளாட்பாரத்தில் போட்டு விற்றதை போன வருடம், நான் சென்னையில் இருந்த போது பார்திருக்கிறேன்.

பொதுவாக சித்திரையில் கல்யாணங்கள் குறைவாக நடக்கும். தங்கம் உபயோகம் கம்மியா இருக்கும். இதை ஈடு கட்ட, அக்க்ஷ்ய த்ரிதியையை உபயோகப்படுத்தி கொள்ள ஆரம்பித்து விட்டனர் நமது வியாபாரிகள்.

"கேட்கறவன் கேனையனா இருந்தா
கேப்பையில நெய் வடியுதுனு சொல்வானாம்!"


மக்களே! இந்த நாளில் உங்களை தானம், தர்மம் தான் செய்ய சொல்லி இருக்கு. உங்கள் பீரோவை நிரப்ப சொல்ல வில்லை.

ஏற்கனவே தங்கம் கிராம் 800 ரூபாய் ஆகி விட்டது. பாவம் பெண்ணை பெற்றவர்கள். தமிழ் நாட்டில் குறிப்பிட்ட சில வகுப்புகளில் பெண்ணுக்கு நகை போடுவது கிலோ கணக்கில் தான். இதில் 60:70 (60 பவுன், 70 ஆயிரம்) என ரேஷியோ எல்லாம் வேற. ஆந்திராவில் இன்னும் மோசம். 50 லட்சம், 60 லட்சம், 1 கோடி வரை பேரம் படியுமாம். என் ஆபிஸ் குல்டி தடியன் பீத்திக் கொண்டான்.

1) நல்ல விஷயங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். மூட நம்பிக்கை வேண்டாமே!

he hee, அஸின் எனக்கு கிடைப்பாள்னு நினைத்தா அது நம்பிக்கை. 10 தடவை கஜினி படம் பாத்தேன்! அதனால அஸின் எனக்கு தான் கிடைப்பானு நினைத்தா அது மூட நம்பிக்கை!

2) பெண்ணுக்கு தேவை புன்னகை, பொன்னகை இரண்டாம் பட்சமே!

3) குணத்தில் தங்கமாய் இருங்கள், உங்கள் நேரத்தை தங்கமாய் செலவு செய்யுங்கள்.

4) இந்த புனித நாளில், ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவியுங்கள். இதை விட பெரிய புண்ணியம் வேறு எதுவும் இல்லை.

5) இந்த நல்ல நாளில் உங்கள் தாய், தந்தையர் பெயரில், உங்கள் பள்ளியில், கல்வி அறக்கட்டளை தொடங்குங்கள்.

6) ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவி செய்யுங்கள். இது ஒரு மிக சிறந்த சனி பரிகாரம், தெரியுமா?

7) உங்கள் குழந்தையை, "தங்கமே!னு கொஞ்சுங்கள். (மனைவி, பெண் தோழிகளையும், தில்லு இருந்தா ஜிகிடிகளையும் தான்)

உலகையே வென்ற அலெக்ஸாண்டர், தான் இறக்கும் போது சொன்னது இது, "எனது இறுதி ஊர்வலத்தில், எனது உள்ளங்கைகளை விரித்து வையுங்கள். இந்த உலகுக்கு தெரியட்டும், உலகை வென்ற நான், எதையும் எடுத்து செல்ல வில்லையென்று!"

எவ்வளவு சத்யமான வார்த்தைகள்!

At the end of the game, both the Pawn and the king goes to the same box.

மொத்ததில், அக்க்ஷ்ய த்ரிதியை லலிதா, GRT, பிரின்ஸ் ஜுவல்லரி காராளுக்கு தான் நல்லது!

ஊதற சங்க ஊதி விட்டேன்.

பின்குறிப்பு: இது ஒரு அவசர பதிவு. உடுப்பி பயணம் அடுத்த போஸ்ட்டில். இதே படத்தை எனது முந்தய பதிவில் போட்டுள்ளேன்.

படத்தில் இருப்பது பாகிஸ்தான் பேட்ஸ்மேன் ஈஜாஸ் அகமது பையனும், ஊரை அடித்து உலையில் போட்ட தாவூத்தின் புதல்வியும் தான்.(இவ்ளோ பாரம் சுமக்கறதே, கர்ணம் மல்லேஸ்வரி பொண்ணுனு நினைத்தேளோ?)

21 comments:

HARISH said...

KAVALAI VENDAM ASIN NICHAYAMA UNGALUKU ILLAI."எனது இறுதி ஊர்வலத்தில், எனது உள்ளங்கைகளை விரித்து வையுங்கள். இந்த உலகுக்கு தெரியட்டும், உலகை வென்ற நான், எதையும் எடுத்து செல்ல வில்லையென்று!"
YEAH! ITA RIGHT. AFTERALL WE CANNOT TAKE ALL THE THINGS WE GET.
NAAMA PIRAKUM POODU IRUKUM UYIR KUDA ILLAMA PORAM.

Ponnarasi Kothandaraman said...

Hi,
Tht was a nice post... "Kekravan kenaiyana iruntha...." was 2 gud. Enjoyed reading. And u r tagged... Pls check out my blog.. Hope u write the tag!

Blogeswari said...

நான் அந்த போட்டோவ பாத்ததும் நீங்களும் ஒங்க Bride-உம் ன்னு நெனச்சேன் ;-)

kuttichuvaru said...

appappo intha maathiri samooga manappaanmai post podreenga!! ippdi ellam try panni Asin-a impress pannalaam-nnu kanavu kaanaatheenga... Asin already bracketed!!

shree said...

yennada ambi.. srinkeri poittu vandhadhalendhu oru madhirya agitta? illa rajkumar galattala kalladi pattu apdi ipdi agittiya? anyways, eagerly awaiting udipi fotos. krishna pappa is my fav. god :-) BTW good post

Gopalan Ramasubbu said...

AMBi,athu ஈஜாஸ் அகமது paiyan illa,Javed Mianded paiyan. parthu eluthungo Ibrahim bomb vechuda poran;).inga irukara Andhra boysoda torture thangathu, ippo Aussie golty market rate, With job 3 crores ,without job 2 crores.Mamanar kita panam vangi inga oru vedu vanguvanuga. muttal pasanga. and yeah ppl are crazy over அக்க்ஷ்ய த்ரிதியை.Good post.:)

Gnana Kirukan said...

"he hee, அஸின் எனக்கு கிடைப்பாள்னு நினைத்தா அது நம்பிக்கை. 10 தடவை கஜினி படம் பாத்தேன்! அதனால அஸின் எனக்கு தான் கிடைப்பானு நினைத்தா அது மூட நம்பிக்கை!"

Ambi - ean en kathaliyai patri ungal blogil eluthurikal! Aval en kadali! Asin tamil cinema-vil nulaivatharku munave avalai athmarthama kadhalika arambithuvituen (Gharshana endra padam moolam)..Goddessasin endra egroups-ai arambichavanai naan thaan! :P - 250 msgs potu irupen..Asin kuda chat panni iruken ;)..So neengal kanavu kanatheergal :P lol..She is mine ;)
Btw - do u want her contact no? I have it ;)..

Ambi - neengal en pennai kurai koorukirikal...Aankal kuda thaan nagai anikirargal..Namma Adhi kesavan anna-vai eduthu kolungal..Namadum Prince Jewellery pol irupaar..Prince Jewellery endrathum ean Sinthu nyabagathu vanthu vitaal..Avalyum kathalithen..U must have seen her..Prince jewellery ad-il veenai vasithu red color saree-il amsama varuvaal..Minsara Kanavilum nadithar..Ethiraj college-il thaan padithar ;)

Gopalan Ramasubuvin - comments-ai (Ibrahim dawood bomb poduvathu) paathu gubeer endru sirithu viten :)) lol

Gnana Kirukan said...

Namadum enbathey - nadamadum endru thiruthi kollavum :P

Gnana Kirukan said...

Maranthu vitaen - ennaku ithanai naala Ibrahim dawood-ku ivalvu alagana paen irupaalnu theriyamal poi vitathu :(..

Gnana Kirukan said...

Ambi - ippothu thaan enaku nyabagam vanthathu - Asin number - kuduka mudiyathu - sorry - ean endral aval ean kadali :))

ambi said...

@nayagan, Yes U r rite..
@ponnarasi, danks, yeeh, will write on ur tag. (vera vazhi..!)
@veda, seri, seri, romba peel paanathinga, Everything is for some time.

@blogeswari, seriyana Loleswari ya irunpeenga polirukke! :)

@kutti, danks, adadaa, intha asin rasigar tholai thaanga mudiyalai paa!

@shree, S, U r correct. sringeri poyittu vanthathu lendhu oru rangeaa thaan irukkenu team la ellarum solraa. Aanaalum romba thaan nakkalungaluku!

@gops, ohh, danks for the correction shishyaa. slip of the mind. will re-edit the post.

@arjuna, U too Brutus? Ayiram peru ennai kathalikkalam, Aana, unga veetukku thaan naan varuvennu Asin azhuthu, adam pidichu enga veetuku vanthu velaku ethitu ponnapaa. see the prev post. :)

Ohh, antha prince jewlry jigidi name sinthu vaa? he hee, i too like that Ad (read as that model).

KC! said...

adhavadhu kanna, dhanam concept is correct, veetla iruka guys ellam ladies-ku swarnadhanam panra..avlodhan! idhuku ivalo feel panra?

Marutham said...

Hi ,
Have replied to your comment.Sorry a little late! You got a nice blog too...And ASIN'kaga inga oru Adi dhadiye nadukkum pola :P
Nice Post! Have u seen the funny ad for gold.."A girl say GM gold is 700 rs and her echo goes like this " ...750 rs " Thangathin vilai avlo vegama yerudhaam :)Edhu enga ernaaalum namma Ammaniogal Pocket'la ottai podama vida mataanga :)) PAVAM PASANGA!!

smiley said...

All that glitters is not gold :)

Harish said...

தலைவா ....T.நகர்ல கூட்டம் பார்க்கனுமே....uhumm....no chance...

gayathri said...

an excellent post..
i reely enjoyed the asin's part..

Viji said...

Ambi- "அஸின் எனக்கு கிடைப்பாள்னு நினைத்தா அது நம்பிக்கை"- இதுவே ஒரு மூட நம்பிக்கை தான்! LOL :))
Matha padi, I agree with your views...
Good post.

Arjuna- hmm, interesting... I got reminded of this :-D

ambi said...

@usha, U too brutus? no wonder, gals r always gals.

@marutham, danks, i'ven't seen that ad yet..

@smiley, :)

@harish, correct pa, namma makkala thirthave mudiyaaathu.

@gayathri, he hee, danks..

@viji, thoda! neraya villans irupaanga polirukku. arjunaku konjam nalla buthi sollungoo! :)

Gnana Kirukan said...

Arjuna - Salutes Viji for her incredible memory!! :D - I myself forgot about that post of mine - lol!!

Butterflies said...

Hey this akshaya thrithi is abig time buff yaar created by the jewellery shops....

கைப்புள்ள said...

//படத்தில் இருப்பது பாகிஸ்தான் பேட்ஸ்மேன் ஈஜாஸ் அகமது பையனும், ஊரை அடித்து உலையில் போட்ட தாவூத்தின் புதல்வியும் தான்.(இவ்ளோ பாரம் சுமக்கறதே, கர்ணம் மல்லேஸ்வரி பொண்ணுனு நினைத்தேளோ?)//

எனக்கு குருவாயூர் கோயில் Elephas maximus தான் ஞாபகத்துக்கு வந்துச்சு. ஜாக்கிரதையா இருந்துக்குங்க அம்பி...இப்படி பட்ட சமூக சீர்திருத்தம் எல்லாம் செஞ்சு பிரின்ஸ்,ஜி ஆர் டி வயித்துல அடிக்கிறீங்க...