Monday, March 20, 2006

கேசரி - அமிர்தம்

எப்பொ, எப்டினு சொல்ல தெரியலை! இந்த கேசரி மீது எனக்கு எப்படி இவ்வளவு காதல், (மோகம்னு கூட சொல்லலாம்)வந்தது?

ஒரு வேளை எங்க அம்மா கை பக்குவமா?
கேசரியின் ஆரஞ்சு கலரா?

"தெரியலை பா!" தெரியலைனு நாயகன் கமல் மாதிரி டயலாக் தான் வருது!

மொத்த குடும்பத்துக்கும்(4 பேரு) செஞ்சு வெச்ச கேசரிய, ஒத்த ஆளா உக்காந்து முழுங்கிட்டு, "என்னமா! இன்னிக்கி, என் பங்கு கொஞ்சம் கம்மியா வச்சுட்ட போலிருக்கு?னு சொன்ன என்னை பார்த்து அழுவதா, சிரிப்பதா?னு தெரியாமல் எங்க அம்மா திணற, அது வரை பொறுமை காத்து, பேசி தீர்க்கலாம்னு இருந்த என் உடன்பிறப்பு, டாய்!னு பாஞ்சு, சும்மா கேசரிய சட்டியில பொரட்டி,பொரட்டி எடுக்கற மாதிரி பொரட்டி எடுத்துட்டான்.

"கேசரி ரொம்ப நன்னா இருக்கு!" ஆனா பொண்ண பிடிக்கல!னு நான் சொல்லிட்டா, இது எல்லாம் ஒரு பொழப்பானு? மொத்த குடும்பத்துக்கும் தர்ம அடி விழலாம்னு பயந்து தானோ என்னவோ, எங்க அம்மா எனக்கு பொண்ணு பார்க்க பயப்படுகிறார்.

நம்ப ஆபிஸ் கேண்டீன்ல north Indian ஆலு பரோட்டா, south Indian இட்லி வடைனு பல வகை இருந்தாலும், என் சாய்ஸ் எப்பவுமே + combination கேசரி தான். ஒரு கட்டத்துல, என்னை பாத்ததுமே, கேசரினு பில்லு போட்டு குடுக்கற அளவுக்கு நிலமை போயி விட்டது.

இது கூட பரவாயில்லை!

மீதி சில்லறை வாங்க மறந்த என்னை, Hello! கேசரி! இந்தாங்க, மிச்ச சில்லறைனு ரொம்ப அவமானபடுத்திடான் அந்த கடங்காரன்! !(அதுவும், பல பிகர்கள் முன்னாடி!)

நான் என்ன சீத்தாராம் கேசரி பேரனா?

இனியும் அவமானம் பொறுக்க முடியாது!னு முடிவு செய்து, 1 வாரம் கேசரி வேண்டாம்னு பிலிம் காட்டினேன்.

"குற்றம் என்ன கண்டாய்? என் கொற்றவனே!"
கேசரியின் சுவையிலா?, அதன் மணத்திலா?னு அழுது புலம்பியபடி, என்னிடம் வந்து விட்டார் தலைமை சமையல்காரர்.

உடம்புக்கு முடியலை, Oil சேர்க்க கூடாதுனு Docter சொல்லிட்டார்னு நான் விட்ட ரீலை எல்லாம் அவர் நம்பவில்லை. தினமும், கேசரிக்கு கொசுறு கேட்கும் அல்பமாச்சே நான்!

பின், "மீண்டும் JKP!"னு சிந்து பைரவி சிவகுமார் மாதிரி, 4 இட்லி, 1 plate கேசரி!னு ஆர்டர் குடுத்த என்னை, "வாடி, வா! நீ வருவெனு எனக்கு தெரியும்டி!"னு நக்கல் பார்வை பார்த்தான் அந்த தடியன்!

இப்படியாக, என் கேசரி மோகம், நாளொரு மேனியும், பொழுதொரு Plate கேசரியுமா போயிண்டுருக்கு!

கேசரி, கேசரி, cheee! சரி, சரி, நேக்கு கேசரி சாப்பிட நேரம் ஆகிறது! அடுத்த post la சந்திப்போமா?

8 comments:

kannan said...

Hello Kesari aka Ambi,
itha padicha udaney ennakum kesari sappinum poola irukku...

neighbour said...

Sms or call பண்ணும் முதல் 5 நபர்களுக்கு, அம்பியே நேரில் வந்து, உங்கள் கிச்சனில் தனது கைபக்குவத்தில் கேசரி கிண்டி உங்களுடன் சாப்பிட்டு விட்டு போவார்.

Neenga vandhu sapaititu poona engalaku enna minchumm..

unga veedu, ponnu veedu , canteenu ingellam saapita kesari paathathunu ippo poati vachu 5 perra select panni avaunga veetulaiyum poi kesari saapidanumaa.. nalla polapu yaa idhu...

Gopalan Ramasubbu said...

இந்த போஸ்ட படிச்சிட்டு நான் பாட்டுக்கு சிரிக்க office la எல்லாரும் ஒரு மாதிரியா பார்த்தாங்க, நான் கேசரிய வெள்ளகாரனுக்கு என்னனு explain பன்னுவேன்?ஆமா அம்பி ,கேசரிக்கு english la என்ன பேர்?
I have decide not to read u r blog while i'm in the office;) haha just kidding.Good post.

shree said...

kesariya vakkanaiya kottindutu, ponnu pudikkalanu alwa kodukkaradhu thappuda ambi! thirutthiko.

Anonymous said...

Kesari again becomes our family fav isn't? :)

ambi said...

@kannan, romba easy preptn. ennapa Aleye romba naala kanoom?
@neigh, he hee, ambi podhu vazhkaiyila ethellam jagajam paa!
@Gops, danks! u honoured me by ur comments. sweet sooji (kesari - eng transtn, courtasy ambi he hee)
@veda, vaama vaa! nee oruthi thaan baaki yenna nakkal adikka!
@shree, yekka, naan summa oru pechuku sonnen! ponnu pakavee vare mattenu solli erukken enga amma kitta.
@ammu, hostella? romba nallathaa pochu! moththam evloo tickettu irukku? he hee :)
@dubukku, u too like kesariyaa? same blood!

KC! said...

aama, london-ku vandhu kindi tharuveengala???

Subhashri said...

hmm..ennoda collegue onnu ipdi dhaan rice pudding favorite aa irundhudhu..naange yaaranum lunch vaanga ponumna ..rice pudding is by default..he wont even list it..