Part-1 ; Part-2 ; Part -3 ; Part-4
ஒரு தேசிய வங்கிக்கு உள்ளே செல்லவே நம்மில் பலருக்கு ஒரு வித தயக்கம் இருந்திருக்கும். உள்ள போனா ஒருவரும் கண்டுகொள்ள மாட்டார்கள். வங்கிக்குள் நுழையறதுக்கே ஒரு ஆள் சிபாரிசு வேண்டும். டிமாண்ட் டிராப்டோ, ஒரு செலானோ நிரப்புவதற்குள் யப்பா! இந்த ஆபிஸர்கள் படுத்தர பாடு இருக்கே! இதெல்லாம் ஒரு பத்து வருடங்களுக்கு முன்னால். இப்போ நிலைமை ரொம்பவே தேவலை.
எல்லாம் காம்படீஷன் பாஸ்! காம்படீஷன்!
ஆனாலும் தேசிய வங்கிகளை விட தனியார் வங்கிகள் தனித்து நிற்பது வாடிக்கையாளர் சேவை என்ற விஷயத்தில் தான்!னு அவங்களே சொல்லிக்கறாங்க.
வாடிக்கையாளர் சேவையை மையமாக வைத்து மூன்று விதமான விளம்பரங்கள் இப்போது வந்து கொண்டிருக்கிறது.
ஒரு அப்பாவி வாடிக்கையாளர் கஸ்டமர் ரிலேஷன் ஆபிஸராக இருக்கும் ஒரு பெண்மணியிடம் மிகவும் தயக்கமுடன் ஒரு அக்கவுண்ட் ஆரம்பிக்கனும்!னு சொல்கிறார். உடனே அதற்கான விண்ணப்பம் வருகிறது. (தேசிய வங்கிகளில் இந்த விண்ணப்பம் வாங்கவே ஒரு ஆள் சிபாரிசு வேணும்). அவர் அதை பூர்த்தி செய்து குடுக்க உடனே அந்த அம்மணி ஒரு அப்ரன்டீசை கூப்பிட்டு அவன் காதில் "ஒரு மாக்கான் சிக்கிட்டான், அமுக்கி போட்ருவோம்!னு சொல்கிறார்.
ஐந்து வினாடியில் அந்த அப்ரண்டீஸ், ஒரு தட்டில் குலாப்ஜாமூன் தலையில் ஒத்தை மெழுகுவர்த்தியுடன் வந்து ஹேப்பி பர்த்டே! என பாடுகிறார். எனக்கு ஒரு சந்தேகம், மெழுகு சூட்டில் குலாப் ஜாமூன் உருகிடாதோ..? இதே ஒரு பிளேட் கேசரின்னா பிரச்சனை இல்லை. சும்மா, ஒரு ஐடியாவுக்கு சொன்னேன், அவ்ளோ தான்.
அந்த கஸ்டமர் திருதிருவென முழிக்கிறார். "யோவ்! நீ தான்யா இன்னிக்கு உன் பர்த்டே!னு எழுதி இருக்க, ஒழுங்கா குலாப் ஜாமூனை சாப்பிடு!" என அந்த அம்மணி அன்பாக மிரட்டுகிறார். "நல்லா ஸ்வீட்டா இருக்கா?" என அந்த அப்ரண்டீஸ் தன் பங்குக்கு விசாரிக்கிறது.
"கஸ்டமர் சேவையில் சின்ன சின்ன விஷயங்களில் கூட கவனமா இருப்போம்!" என்ற பீத்தலுடன் அந்த விளம்பரம் முடிகிறது.
இந்த விளம்பரத்துக்கு தேசிய வங்கிகள் ஏதும் எதிர் விளைவு நிகழ்த்தினால் எப்படி இருக்கும்? என எனக்கு பாத்ரூமில் தோன்றியது. ஆமா, பல பேருக்கு அங்க தான் ஞானோதயம் பிறந்து ஐடியா மணிகளாக திகழ்கிறார்கள். கட்டின துண்டுடன் (யு)ரேகா! என கத்தியபடி கிரேக்க விஞ்ஞானி அரிக்கமெடிஸ் ஓடலாம், அதுக்காக நான் ஓட முடியுமா..? அதான் இங்க பதிகிறேன்.
சரியாக ஒரு மாதம் கழித்து அதே கஸ்டமருக்கு அதே வங்கியிடம் இருந்து ஸ்டேட்மண்ட் வருகிறது. ஒரு மாதம் முன்னாடி நீ அமுக்கிய குலாப் ஜாமூக்கு ரூபாய் நூறை உன் அக்கவுண்டில் இருந்து கழித்து விட்டோம். புரிந்துணர்வுடன் கூடிய உன் ஒத்துழைப்புக்கு மிகவும் நன்றி! என அந்த லெட்டரை வாசித்தவுடன் நம்மாளு மயக்கம் போட்டு விழுகிறார். அப்படியே அந்த காட்சியை ப்ரிஸ் பண்ணி பேக்ரவுண்டில் ஒரு வாய்ஸ் ஒலிக்கிறது.
"எங்கள் வங்கியில் இந்த மாதிரி மறைமுக வரி என்ற பெயரில் மொள்ள மாரித்தனம் எல்லாம் கிடையாது. நாங்கள் ஒரு திறந்த புத்தகம்!"
அதே வங்கிக்கு இன்னொரு விளம்பரம். ஒரு பாட்டி (கீதா பாட்டி மாதிரி ) அந்த வங்கி கிளைக்கு சென்று தான் எழுதி வரும் கண்ணன் வருவான்! கண்ணை குத்துவான்! தொடர் பதிவு பத்தி நீ என்ன நினைக்கிறாய்? அதுல என் எழுத்து நடை எப்படி..? பின்னூட்டமா வந்து குவிகிறதே! என மொக்கை போடுகிறார். உங்களை கஸ்டமராக அடைந்த பாவத்துக்கு எனக்கு இதுவும் வேணும்! இன்னமும் வேணும்!னு அந்த மேனேஜர் (அனன்யா மஹாதேவன் மாதிரி ) மனசுகுள் புலம்பினாலும் "அடடா! உங்களை மாதிரி வருமா? உங்க லெவல் என்ன? நடை என்ன? வயசென்ன..? என்று சகித்துக் கொள்வது போல காண்பிக்கிறார்கள்.
அந்த விளம்பரத்தில் வர மாதிரி எல்லாம் எந்த தனியார் வங்கி கிளையிலும் போய் மொக்கை போட முடியாது. பொதுவாக ரிலேஷன்ஷிப் மானேஜராக நல்ல வாட்டசாட்டமா அசோக் பில்லர் மாதிரி இருக்கும் ஒரு குஜராத்தி பெண்ணையோ, மார்வாடியையோ தான் அந்த சீட்டில் உக்காத்தி இருப்பார்கள். (எம்.ஜி ரோடு கிளை டாப் டக்கர். காலை எட்டு மணிக்கே கூட்டம் அம்முது).
அந்த பிகரிடம் பேச டோக்கனெல்லாம் கூட தருவார்கள். மிகச் சரியாக பத்து நிமிடம், பத்தே நிமிடம் தான் நம் பேச்சை கேக்கும். அப்புறம் அதன் பேச்சை அதுவே கேக்காது. நமக்கு பேக்ரவுண்டில் வீணை, புல்புல்தாரா, சாக்ஸ்போன் சவுண்டெல்லாம் ஒரே டிராக்கில் கேக்கும். அதுக்கப்புறம் நாம குணா கமல் மாதிரி கையில் லட்டு வாங்கிண்டு கிளம்பிட வேண்டியது தான். ஏன்னா அடுத்த ஆள்
"ஒரு லட்டே
லட்டு தருகிறதே!
அடடா!ன்னு ஆயில்யன் மாதிரி கவிஜ வாசிச்சுண்டு லட்டு வாங்க வரிசையில் இருப்பான். :)
சரி, டிராக் மாறி விட்டது. இவ்வளவும் எதுக்கு சொல்றேன்னா இப்பல்லாம் தனியார் வங்கிகள் கடைந்த மோரில் வெண்ணெய் எடுத்து விடுகிறார்கள். அதனால நாம் தான் உசாரா இருக்கனும். பத்து நிமிடம் அங்கே லட்டு வாங்கினாலும் ஒழுங்கா தேசிய வங்கியில் யாரையாவது பிடிச்சு ஒரு அக்கவுண்ட் துவங்கி வெச்சுக்கனும். இல்லாட்டி உன் குத்தமா? என் குத்தமா?னு பாடிட்டு போயிடுவாங்க.
43 comments:
// தேசிய வங்கியில் யாரையாவது பிடிச்சு ஒரு அக்கவுண்ட் துவங்கி வெச்சுக்கனும். இல்லாட்டி உன் குத்தமா? என் குத்தமா?னு பாடிட்டு போயிடுவாங்க.
//
சரிதான்.
தானைத்தலைவி கீதா மாமியை தாறுமாறாக நக்கலடித்த அம்பியை வன்மையாகக்கண்டிக்கிறேன்ன்னு எல்லாம் என்னால கருத்து போட முடியாது. சர்தாம்பா..
தேசியவங்கிகளை விட பெட்டரா பர்ஃபாம் பண்றது தனியார் வங்கிகள்தான் ஆனாலும் ஒரு பயம் உள்மன்ச்சுக்குள்ள ஒளிஞ்சிருக்கு எப்ப மூடுவானோன்னு? :)
நோஓஓஓஓஓஓஓஓஓஓ குஜ்ஜு ஃபிகர்ஸ்கெல்லாம் கவிஜ ஃபீல் பண்ணமாட்டான் இந்த ஆயில்யன்! [எண்ட தேசத்து ஆளுங்களை போஸ்டிங்கல உக்கார வைக்க சொல்லுங்க அந்த பேங்க்ல] :))))))))))))
//புரிந்துணர்வுடன் கூடிய உன் ஒத்துழைப்புக்கு மிகவும் நன்றி! ///
இப்படி ஒரு வரி வந்தா அது கண்டிப்பா "ஆப்பு"ன்னு புரியும்..
//அதே வங்கிக்கு இன்னொரு விளம்பரம். ஒரு பாட்டி (கீதா பாட்டி மாதிரி ) அந்த வங்கி கிளைக்கு சென்று தான் எழுதி வரும் கண்ணன் வருவான்! கண்ணை குத்துவான்! தொடர் பதிவு பத்தி நீ என்ன நினைக்கிறாய்? அதுல என் எழுத்து நடை எப்படி..? பின்னூட்டமா வந்து குவிகிறதே! என மொக்கை போடுகிறார்.//
நறநறநறநறநற அம்பி அங்கிள், என்னைக் கிண்டலடித்த உங்களை வன்மையாகக் கண்டிப்பதோடு, கீழே அநன்யா அக்காவையும் கிண்டலடித்திருப்பதை பெரிய மனதோடு வரவேற்கிறேன்.
//தானைத்தலைவி கீதா மாமியை தாறுமாறாக நக்கலடித்த அம்பியை வன்மையாகக்கண்டிக்கிறேன்ன்னு எல்லாம் என்னால கருத்து போட முடியாது. சர்தாம்பா..//
அநன்யா அக்கா, வச்சுக்கிறேன் உங்களை! நறநறநறநற
/புரிந்துணர்வுடன் கூடிய உன் ஒத்துழைப்புக்கு மிகவும் நன்றி!/
இந்த வரிகளை எங்கயோ அடிக்கடி படிச்ச மாதிரி இருக்கே. யாருக்குங்க உள்குத்து :) :)
அந்த எம்.ஜி ரோடு பிகரை பத்தி தங்கமணிக்கு தெரியுமா??? தம்பி தகடு... தகடு...(சத்யராஜ் ஸ்டைல்ல உன் பேரை படிச்சா நல்லா இருக்குடா தக்குடு...) உங்க அண்ணிகிட்ட போட்டு கொடுக்க நல்ல விஷயம் எடுத்து கொடுத்திருக்கேன்... அதனால ஒரு ப்ளேட் கேசரி பார்சல்...
nowadays it is very easy to open account in a nationalised bank. reg private banks we should understand onething..nothing is got free of cost..so extra cordial behaviour we receive is only at our cost
//சரியாக ஒரு மாதம் கழித்து அதே கஸ்டமருக்கு அதே வங்கியிடம் இருந்து ஸ்டேட்மண்ட் வருகிறது. ஒரு மாதம் முன்னாடி நீ அமுக்கிய குலாப் ஜாமூக்கு ரூபாய் நூறை உன் அக்கவுண்டில் இருந்து கழித்து விட்டோம். புரிந்துணர்வுடன் கூடிய உன் ஒத்துழைப்புக்கு மிகவும் நன்றி!//
ஹா ஹா ஹா
// அப்புறம் அதன் பேச்சை அதுவே கேக்காது.//
விஜய் ஃபேனா இருக்குமோ?
இந்த இடுகையின் மூலம் நீங்க தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு சொல்ல வரும் கருத்து என்ன அம்பி??
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
தனியார் வங்கியில் பணம் போடுவது தப்பில்லை. ஆனால் அவங்க கஸ்டமர் சர்வீஸை மட்டுமே நம்பி பணம்போடுவது முட்டாள்த்தனம். சாலரி அக்கவுணடை தனியார் வங்கியில் வைத்துக்கொண்டு சேமிப்பு அக்கவுண்டை அரசு வ்ங்கியில் வச்சுக்கலாம்.
ஆனாலும் ஒரு ஐ.சி.ஐ.சி.ஐ விளம்பரத்தை இப்படி விமர்சித்திருக்க வேண்டாம் :)
//சாலரி அக்கவுணடை தனியார் வங்கியில் வைத்துக்கொண்டு சேமிப்பு அக்கவுண்டை அரசு வ்ங்கியில் வச்சுக்கலாம். //
எங்க ஆபிஸ்ல தலைகீழ் .சாலரி கணக்கு அரசு வங்கி
ஆமா அம்பி, இதுக்கு முந்தி வந்த விளம்பரம் பத்தி ஒண்ணுமே சொல்லையே? ஒரு பாட்டி வந்து ராத்திரி ஆகிற வரைக்கும் பேசிகிட்டே இருப்பாங்களே!ஓ சரி சரி. இள வயசு பொண்ணு வந்தாதானே எழுதுவீங்க? :-))
பதிவெல்லாம் வழக்கம் போல சூப்பருதான். ஆனா... உங்க ‘கிளப்’ மெம்பர்கள் நிறய பேரு பின்னூட்டம் பக்கமே வரலையே.
அம்பி பதிவான்னு டவுட்டா இருக்கு. சீக்கிரம் தனி மெயில் போட்டு உங்க Fansஐ கூப்பிட்டு கும்மியடிக்க சொல்லுங்க :))
//உங்க ‘கிளப்’ மெம்பர்கள் நிறய பேரு பின்னூட்டம் பக்கமே வரலையே.//
ஸ்ரீதர், எங்களுது “கழகம்”, அதப்போயி ரொம்ப சின்ன லெவல்ல க்ளப்புனு சொல்லிட்டீங்க??
இன்னிக்கு நானும் அநன்யாவும் மட்டும்தான் வெட்டியா இருந்தோம், மத்த கழகக் கண்மணிகள் எல்லாம் நாளைக்கு வருவாங்க பாருங்க..
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
அதே வங்கிக்கு இன்னொரு விளம்பரம். ஒரு பாட்டி (கீதா பாட்டி மாதிரி ) அந்த வங்கி கிளைக்கு சென்று தான் எழுதி வரும் கண்ணன் வருவான்! கண்ணை குத்துவான்! தொடர் பதிவு பத்தி நீ என்ன நினைக்கிறாய்? அதுல என் எழுத்து நடை எப்படி..? பின்னூட்டமா வந்து குவிகிறதே! என மொக்கை போடுகிறார்.
Neenga How " Dyslipidaemic ":)) (athaavathhu konjam mariyaathaiyaa yaarukkum theriyaama"yakkum":))
Ennamoppa!! namba oor mathiri application form create panna yaarukkum varaathu. Entha mahaanubavar kandu pidichchathoa!! angavasthram maathiri!! "appa voada appa paeru ?" - " seetharaman " nu ivalukku naama account aarambikka aen theriyanumoa? kadingappa kadi..chemakkadi jambulingangal!!
//sriram said...
இந்த இடுகையின் மூலம் நீங்க தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு சொல்ல வரும் கருத்து என்ன அம்பி??//
இனிமே எல்லா பேங்க்லயும் குலாப் ஜாமுன்க்கு பதில் கேசரி தான் குடுக்கணும். இது தான் மெசேஜ்
//sriram said...
ஸ்ரீதர், எங்களுது “கழகம்”, அதப்போயி ரொம்ப சின்ன லெவல்ல க்ளப்புனு சொல்லிட்டீங்க??
இன்னிக்கு நானும் அநன்யாவும் மட்டும்தான் வெட்டியா இருந்தோம், மத்த கழகக் கண்மணிகள் எல்லாம் நாளைக்கு வருவாங்க பாருங்க..//
கழக கண்மணி இதோ ஆஜர் தலைவரே.... அதானே எத்தன அழகா கழகம்னு வெச்சு இருக்கோம்... கிளப் கிளிப்புனு....என்ன இது?
//(எம்.ஜி ரோடு கிளை டாப் டக்கர். காலை எட்டு மணிக்கே கூட்டம் அம்முது)//
நீங்க முந்தின நாளே துண்டு எல்லாம் போட்டு வெக்கறேள்ன்னு கேள்வி பட்டேன்... அப்படியா.. விசயம் தங்கமணிக்கு தெரியுமா? இல்லேனா சொல்லுங்கோ இப்போவே ஒரு இன்ஸ்டன்ட் டெலிக்ராம் போட்டுடறேன்...அத விட நமக்கு வேற என்ன முக்கியமான வேலை (நாராயண... நாராயண...)
உங்களை முதலில் வேலையிலிருந்து தூக்கணும்.. தூக்கிட்டு ஒரு விளம்பர டிசைக்னர் வேலை கொடுக்கலாம் போல இருக்கே. :-) இன்னா சம்பளம் எதிர்ப்பார்க்குறீங்க பாஸ்? :-)
/
//(எம்.ஜி ரோடு கிளை டாப் டக்கர். காலை எட்டு மணிக்கே கூட்டம் அம்முது)//
நீங்க முந்தின நாளே துண்டு எல்லாம் போட்டு வெக்கறேள்ன்னு கேள்வி பட்டேன்...
/
ROTFL
:)
Ambi thangak kambi. enga Geethaavaich summaa vidavum.
neettikku Ananya kuttiyaip paarththen.
mahaa samththu. aayilyanu, appadiye, innum thakkuduvaiththaan contact pannalai.
எல்கே, உங்களுக்கு "வடை கவ்விய பாண்டியன்"னு ஒரு டைட்டில் குடுக்கலாம்னு இருக்கேன். :))
அனன்யா, நீண்க்களும் நம்ம கட்சி என உறுதிபடுத்தியமைக்கு மிக்க நன்றி ஹை. :))
ஆயிலு, பெர்பாஃமன்ஸ்னு நீ எதை சொல்ற..? :p
உன்ட தேசத்து ஆளுகளும் இருக்காங்க டே! :))
சரியா அவதானித்து இருக்கீங்க இர்ஷாத். :)
கீதா பாட்டி, பாத்து ரெம்ப கடிக்காதீங்க. பல் செட்... :p
சுந்தர், ஆமா, நானும் எங்கோ படிச்சு இருக்கேன். எங்க?னு தான் நியாபகம் வர மாட்டேங்குது. :)))
வி.கடவுள், வாடா நல்லவனே, உனக்கும் அந்த பேங்குல அக்கவுண்ட் இருக்குல்ல..? :p
@sudha, I completely agree with your points madam. :))
வாங்க சரவண குமரன், எப்படி இருக்கீங்க..? :)
பாஸ்டன் நாட்டாமை, கருத்து எல்லாம் கடைசி வரில இருக்குங்க. :)
விஜய், அதே பாலிசி தான் இங்கயும். ஐ.சி.ஐ.சி மேலே ரெம்ப பாசமா இருக்கீங்க, வாட் இஸ் தி மேட்டர்..? :))
எல்கே, உங்க கம்பேனி ரெம்ப உசார் போல. :p
திவாண்ணா, பாதி பதிவு தான் படிச்சீண்க்களா..? அந்த பாட்டி கதையும் சொல்லி இருக்கேன் பாருங்கோ. :)
ஸ்ரீதர் அண்ணாச்சி, பயங்கர கும்மாங்குத்தா இருக்கே..? ஊர் போய் சேர்ந்தாச்சா..? :)
நாட்டாமை, உங்க சின்சியாரிட்டிய நெனச்சு கண்கள் பனித்தன, கிட்னி கனத்தது. :))
வாங்க, ஜே, ஆமா அந்த விண்ணப்பத்தை பூர்த்தி பண்ரதுக்கே ஒரு ஆளை நியமிக்கனும். எங்க வீட்ல தங்க்ஸ் தான் பொறுமையா அதெல்லாம் பிஃல் பண்றது.
:))
வாங்க 'யூத்' புவனா, உங்க டீலீங் எனக்கு பிடிச்சு இருக்கு. துண்டெல்லாம் போட்டு வெச்சா என் கழுத்துல துண்டை போட்டு எழுப்பாங்க வீட்ல. :p
மை பிரஃண்ட், வாம்மா மின்னல், உடுக்க உடை, இருக்க இடம், மூணு வேளை கேசரி, சே! உணவு அவ்ளோ தான் நம்ம எதிர்பார்ப்புன்னு சொல்ல ஆசை தான். இருந்தாலும்... :))
ம சிவா, ரெம்ப நல்லவர் நீங்க. :)
வாங்கோ வல்லிமா, துபாய் திக்விஜயமா..? நடக்கட்டும், நடக்கட்டும். :)
ஹிஹிஹி... நமக்கும் குஜ்ஜு ஜிகிடிகளுக்கும் ஆகுறதில்ல... அதனால மராத்தி ஜிகிடிகளே நம்மளை கூப்புடட்டும்னு இன்னும் மும்பைல தான் அக்கௌன்ட் மெயின்டெயின் பண்ணிக்கிட்டு இருக்கேன்...
நானும் மல்லாக்க படுத்து அரை மணி யோசிச்சு பாத்துட்டேன் என்ன சொல்லலாம்னு.. ஒரு வழியா ஐடியா கிடைச்சுது "பதிவு கலக்கல் அம்பி!" :))
பப்ளி அவேர்னெஸ் எல்லாம் பண்ணறதை பாத்தா, அரிசியல்ல குதிச்சுருவீங்க போலருக்கு? சொல்லிட்டு செய்ங்க அம்பி, நானு பாஸ்டன் அ.த. எல்லாம் புதரகத்துலயே (ஆமா இப்போ புதரகம் புது பேரு என்ன?!) குப்பை கொட்டிக்குவோம். :)
//துண்டெல்லாம் போட்டு வெச்சா என் கழுத்துல துண்டை போட்டு எழுப்பாங்க வீட்ல.//
ஆஹா.. தங்கமன்னியிடம் இவ்ளோ பயம் இருக்கா, நான் ட்ரெயினிங் எடுக்கணும் அவங்க கிட்ட!
advt link kuduthirukalam. ena mathiri antha advt pakama irukaravangaluku vasathiya irunthirukum.
சரி, டிராக் மாறி விட்டது. இவ்வளவும் எதுக்கு சொல்றேன்னா இப்பல்லாம் தனியார் வங்கிகள் கடைந்த மோரில் வெண்ணெய் எடுத்து விடுகிறார்கள். அதனால நாம் தான் உசாரா இருக்கனும்
இப்போல்லாம் தனியார் வங்கிகளில் தண்ணியிலிருந்தே வெண்ணெய் எடுக்கிறாங்க தெரியுமா? Be careful!
பாட்சா படத்துல ஒரு வசனம் வரும்.
ஆனந்த்ராஜையும் அவரு ஆளுங்களையும் அடிச்சு புரட்டுன ரஜினி கிட்ட அவரோட போலீஸ்கார தம்பி சொல்லுவாரு,,,"நாடி நரம்பெல்லாம் கொலைவெறி இருக்கற ஒருத்தனால தான் இப்படி அடிக்க முடியும். உண்மையைச் சொல்லுங்க நீங்க யாரு?"
//அதே வங்கிக்கு இன்னொரு விளம்பரம். ஒரு பாட்டி (கீதா பாட்டி மாதிரி ) அந்த வங்கி கிளைக்கு சென்று தான் எழுதி வரும் கண்ணன் வருவான்! கண்ணை குத்துவான்! தொடர் பதிவு பத்தி நீ என்ன நினைக்கிறாய்? அதுல என் எழுத்து நடை எப்படி..? பின்னூட்டமா வந்து குவிகிறதே! என மொக்கை போடுகிறார். உங்களை கஸ்டமராக அடைந்த பாவத்துக்கு எனக்கு இதுவும் வேணும்! இன்னமும் வேணும்!னு அந்த மேனேஜர் (அனன்யா மஹாதேவன் மாதிரி ) மனசுகுள் புலம்பினாலும் "அடடா! உங்களை மாதிரி வருமா? உங்க லெவல் என்ன? நடை என்ன? வயசென்ன..? என்று சகித்துக் கொள்வது போல காண்பிக்கிறார்கள்.
அந்த விளம்பரத்தில் வர மாதிரி எல்லாம் எந்த தனியார் வங்கி கிளையிலும் போய் மொக்கை போட முடியாது. பொதுவாக ரிலேஷன்ஷிப் மானேஜராக நல்ல வாட்டசாட்டமா அசோக் பில்லர் மாதிரி இருக்கும் ஒரு குஜராத்தி பெண்ணையோ, மார்வாடியையோ தான் அந்த சீட்டில் உக்காத்தி இருப்பார்கள். (எம்.ஜி ரோடு கிளை டாப் டக்கர். காலை எட்டு மணிக்கே கூட்டம் அம்முது).//
இத படிச்சதும் பாட்சா பட வசனம் தான் ஞாபகம் வந்தது. நாடி நரம்பெல்லாம் நக்கல் ஆறா வழிஞ்சோடற ஒருத்தரால தான் இந்த மாதிரி போஸ்ட் எழுத முடியும். :)))))))))))))))))))
உண்மையைச் சொல்லுங்க நீங்க யாரு....?
கண்ணன் வருவான் கொமட்டுல குத்துவான்னு கீதா மேடம் தொடர் எழுதிட்டிருக்க அதே ஆளா...ப்ளாக்கர் அவதாரம் எடுத்துருக்கறது? அப்படின்னா இனிமே "கண்ணன் வருவான் ப்ளாக் எழுதுவான்னு" தான் இனிமே தலைப்பு இருக்கனுமில்லே?
கேடி, சொல்றத பாத்தா பதிவு அவ்ளோ ஒன்னும் சுவாரசியமா இல்லைன்னு தோணுதே. பயம் இல்லை, அபிமானம். ஹிஹி. :)
உத்ரா, அடடா, நீங்க பாத்து இருப்பீங்கன்னு இல்ல நெனச்சேன். லிங் தேடறேன், நீங்களூம் தேடுங்க. :)
சுப்புலக்ஷ்மி, அதே தான் நானும் சொல்லி இருக்கேன். நீங்க ரெம்ப உசாரு போலிருக்கு. :))
அக்மார்க் கைப்புள்ள பின்னூட்டம். மிகவும் ரசித்தேன் கைப்ஸ். :))
அவசியமான பதிவே. மொத்தத்தில் உசாரா இருந்தா பொழச்சோம்.
//"ஒரு லட்டே
லட்டு தருகிறதே!
அடடா!ன்னு ஆயில்யன் மாதிரி கவிஜ வாசிச்சுண்டு லட்டு வாங்க வரிசையில் இருப்பான். :)//
:))!
வாவ்.. முதல் முறையாக படிக்கிறேன்... விழுந்து விழுந்து சிரிக்கிறேன் சார்.. தொடர்ந்து கலக்குங்க....
Sukumar Swaminathan
www.valaimanai.blogspot.com
ரா.ல, லேட்டா வந்தாலும் கரக்ட்டா மெயின் பாயிண்டை புடிச்சீங்க. :)
சுகுமார், முதல் வருகைக்கு மிக்க நன்றி, நீங்கள் சிரிப்பதில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி. :)
Appu, post ellam superunga....
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி சபரி நாதன். :)
இதே ஒரு பிளேட் கேசரின்னா பிரச்சனை இல்லை. சும்மா, ஒரு ஐடியாவுக்கு சொன்னேன், அவ்ளோ தான்.
>>>>>>>>>>>>>>>>>>>
நினச்சேன் கேசரியை எங்கே காணோம்னு?:)
//அதுக்கப்புறம் நாம குணா கமல் மாதிரி கையில் லட்டு வாங்கிண்டு கிளம்பிட வேண்டியது தான். ஏன்னா அடுத்த ஆள்
"ஒரு லட்டே
லட்டு தருகிறதே!
அடடா!ன்னு ஆயில்யன் மாதிரி கவிஜ வாசிச்சுண்டு லட்டு வாங்க வரிசையில் இருப்பான். :)
///
<>>>>>>>>>>>>
குறும்புத்திலகம்:):)
//அந்த சீட்டில் உக்காத்தி இருப்பார்கள். (எம்.ஜி ரோடு கிளை டாப் டக்கர். காலை எட்டு மணிக்கே கூட்டம் அம்முது).
.///
வரேன் வரேன் என் ஃப்ரண்டோட பொண்ணு அங்கதான் வேலை செய்றா அவகிட்டயே இதைப்படிச்சி சொல்றேன்!:):)
அன்பின் அம்பி
அருமை அருமை - நகைச்சுவையின் உசம் - தனியார் வங்கிகள் - அரசு வங்கிகள் - வித்தியாசம் இருக்கத்தான் செய்யும். ஆரஞ்சின் விலைக்கு ஆப்பிள் கிடைக்காது. அததற்குரிய காசு கொடுத்தால் தான் வேண்டுமென்கிற சேவை கிடைக்கும்.
நல்வாழ்த்துகள் அம்பி
நட்புடன் சீனா
Intresting.Keep it up
Very good.Keep it up
Post a Comment