Thursday, January 21, 2010

விளம்பரங்கள்

Part-1 ; Part-2 ; Part -3

அதிகாலை ஆறு மணிக்கு(பெங்களூர் வாசிகளுக்கு மட்டும்) ஜெயா டிவியில் மார்கழி மஹா உத்சவம் ஒளிபரப்பினார்கள். கட்டளைதாரர்கள்(அதாம்பா ஸ்பான்சர்) ஆரெம்கேவி. போட்டிக்கு போத்தீஸ்காரகள் ஏழு மணிக்கு(இதுவும் அதிகாலை தான்) விஜய் டிவியில் சங்கீத சங்கமம்னு ஒரு இசை நிகழ்ச்சிக்கு மண்டகபடி நடத்தினார்கள். இந்த பதிவு இசை நிகழ்ச்சிகளை பற்றி அல்ல.

போத்தீஸ் விளம்பரங்கள் நம்மை ஒரு நிமிடம் நின்னு கவனிக்க வைக்கும். ஏதோ சாமுத்ரிகா பட்டுக்கு மீரா ஜாஸ்மின் வந்ததால் மட்டும் நான் சிபாரிசு செய்கிறேன் என நினைத்து விட வேண்டாம்.

இப்போ ஒரு விளம்பரம் காட்டுகிறார்கள்.

ஒரு கல்யாண வீடு, மணப்பெண்ணின் தங்கை(அதாவது மச்சினி) எல்லோர் கவனத்தையும் தன் பக்கம் திருப்பி, ஆளுக்கு எவ்ளோ புடவை? என்ன புடவை?னு புரோட்டா கடை மாஸ்டர் மாதிரி கணக்கெடுக்கிறார். மனப்பெண்ணுக்கு தான் முதல் சாய்ஸ். அந்த பெண் ரொம்பவே வெக்கப்பட்டுக் கொண்டு சாமுத்ரிகா என அகவுகிறது. (குயில் கூவும், மயில் அகவும் - ஒன்னாங்கிளாஸ்ல சொல்லி தந்தாங்க).

வாஸ்தவம் தானே? என அந்த பெண்ணின் சித்தி வழிமொழிகிறார். சித்தியே கல்யாணப் பெண் போல லட்சணமா இருக்கா! மூக்குல சானியா மிர்சா மாதிரி அந்த வளையம் டாப் டக்கர்னு நான் நேரம் காலம் தெரியாமல் உளறி வைக்க... சரி விடுங்க. நான் ஒரு உண்மையான கலாரசிகன் என என்னிக்கு மேலிடம் நம்பி இருக்கு? (யாரந்த கலா? போன்ற பின்னூட்டங்கள் நிராகரிக்கப்படும்.)

அத்தைகள் எல்லோருக்கும் பரம்பரா பட்டு என ஒரு அத்தை தன் பங்குக்கு பிட்டு போடுகிறார். ஸ்க்ரீன்ல ஒரு அத்தைய மட்டும் தான் காட்டினாங்க. இல்ல, லாஜிக் இடிக்குதுன்னு சொல்ல வந்தேன். அவ்ளோ தான்.
இப்பதான் மணப்பெண்ணின் அப்பாவை காட்டுகிறார்கள். அவர் வழக்கம் போல ரொம்பவே சாதுவா அவர் தங்கமணியை பாக்கறார். ஒன்னும் கவலப்பாடாதீங்க! என்பது போல அந்த அம்மா ஒரு காருண்ய புன்னகை சிந்துகிறார்.

இப்ப மறுபடி அதே வளையம் மாட்டிய சித்தி. எல்லா சித்திகளுக்கும் வஸ்த்ரகலா என ரொம்பவே பாந்தமாக சொல்கிறார். பாருங்க இப்பவும் ஒரு சித்தியை தான் காட்டுகிறார்கள்.
இதை கேட்டு ரொம்பவே ஆடிப் போகிறார் நம்ம ரங்கமணி. வெறும் நாலாயிரத்திலிருந்தே இருக்கு, ஒன்னும் கவலப்படாதீங்க!னு மறுபடி ஆறுதல் மொழி வருகிறது. இங்க இருக்கும் நுண்ணரசியலை புரிந்து கொள்ளனும். விலை எல்லாம் நாலாயிரத்தில் ஆரம்பம் தான், அதுவே முடிவு இல்லை.

இந்த நேரத்தில் கடமையே கண்ணான ஒரு அத்திம்பேர் பரம்பராலாம் கையை தூக்குங்கோ!னு பைனல் டச் தர, தலையை எண்ணிப் பாத்தா ஒரு வஸ்த்ரகலா அதிகமா இருக்கு. அது வேற யாருமில்ல மணப் பெண்ணின் பாட்டி. நல்லா விசாரிச்சு பாத்தா அந்த பாட்டியின் பெயர் திருமதி.கீதா சாம்பசிவம் என்று இருக்கும். :)

இதான் எங்க பட்டு பட்டியல்! என லிஸ்ட்டை அந்த பெண் தந்தவுடன் நமது ரங்கமணி வேறு வழியில்லாமல் "போத்தீசுக்கு போகலாமா?"னு அப்பாவியாய் கேட்கிறார். இதோடு விளம்பரம் முடிகிறது. சுமார் இருபது நொடி வருதுன்னு நினைக்கிறேன்.

சரி கொஞ்சம் டெக்னிக்கலா பேசலாம்.

மேலே சொன்ன விளம்பர படம் முழுக்க முழுக்க ஸ்க்ரிப்டை நம்பியே எடுக்கப்பட்டுள்ளது. பிண்னனி இசை இல்லை, ஜிங்கிள்ஸ் இல்லை, எந்த ஒரு கிராபிக்ஸும் இல்லை, பெரிய்ய ஸ்டார் வேல்யூ இல்லை(என எண்ணுகிறேன்). கடையின் பெயர் கூட கடைசியில் தான் வருது. மிக கவனமாக, நேர்த்தியான, ஷார்ப்பான வசனங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட பொருத்தமான மாடல்கள். ஒரு கல்யாணத்துக்கு ஒரு வாரம் முந்தைய சூழலை அதிக பொருட்செலவில்லாமல் ஏதோ நம்ம வீட்டில் நடக்கற மாதிரி பார்வையாளரை முதலில் தயார் படுத்தி திரையில் காட்டின நேர்த்தி.

ப்ரேம்-பை-ப்ரேமாக கவனமாக எடுத்துள்ளனர். ஏற்கனவே சாமுத்ரிகா, வஸ்ரகலா, பரம்பரா பட்டுக்கள் மக்களிடம் ரீச் ஆகியுள்ளதால் அந்த வகை பட்டுக்களை திரையில் கூட காட்ட தேவையில்லை என்ற இயக்குனரின் தைரியத்தை பாராட்டுகிறேன். ஸ்க்ரிப்ட் எழுதிய காப்பி எடிட்டருக்கும் முழு விளம்பர குழுவினருக்கும், நடித்தவர்களுக்கும்(அதானே!) என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

கோ-ஆப்டெக்ஸுக்கு என்னை ஒரு விளம்பர படம் எடுக்க சொன்னால், இந்த விளம்பரத்தின் முடிவில் இருந்து ஆரம்பித்து, போத்தீசுக்கு போனது போக மிச்சத்துல கோ-ஆப்டெக்ஸுக்கு போய் நமக்கெல்லாம் நாலு முழ துண்டு எடுக்கலாம்!னு அந்த ரங்க்மணியை பேச வைத்து ஷாட்டை ஓகே பண்ணி இருப்பேன்.

33 comments:

Sangkavi said...

விளம்பரத்துக்கே விளம்பரம் போட்டு இருக்கறீங்க....

Anonymous said...

sreedevi textiles advsmntum romba alaga irukkum. Pothys yeppothum roomba richaagathaaney eduppanga??

Unnoda Thambi

PPattian : புபட்டியன் said...

கலக்கல் அம்பி.. அடக்க முடியாம சிரிப்பு வருது.. அந்த சானியா மிர்ஸா சித்தி "Obviously" என தொரை இன்கிலீசெல்லாம் பேசும்..

எனக்கும் அந்த விளம்பரம் ரொம்ப பிடிச்சிருந்தது.. அந்த குழுவுக்கு பாராட்டுகள் (நடிச்சவங்களுக்கும் சேத்துதான்!!!)

ராமலக்ஷ்மி said...

முந்தைய பதிவுக்கு இத்தனை நாள் லேட்டா நீங்க பதில் போடுகையிலேயே தெரிந்து விட்டது அடுத்த பதிவு வரப் போகுதென:)! அட்டகாசமாய் வந்து விட்டதே கோஆப்டெக்ஸ் விளம்பர ட்ரெயிலரோடு:))!

போத்தீஸின் அந்த விளம்பரத்தைப் பார்க்கையில், ஹி எனக்கும் வல்லிம்மா, கீதா மேடம் மற்றும் உங்கள் நினைவு வந்தது.

உண்மைதான் நல்ல விளம்பரம் அது.

அறிவன்#11802717200764379909 said...

{... ஏதோ சாமுத்ரிகா பட்டுக்கு மீரா ஜாஸ்மின் வந்ததால் மட்டும் நான் சிபாரிசு செய்கிறேன் என நினைத்து விட வேண்டாம்.}

நம்புறோம்,நம்புறோம் !

மற்றபடி நல்ல அவதானிப்பு..விளம்பரம் பத்தி நோ கமெண்ட்...ஏன்னா,சிங்கைல பாக்க முடியாதுல்ல!

Anonymous said...

advertisement vidunga,kkaasa panama.....pengalluuur sorry bangalluruvil,endha javulikadaiyin vaadikkaiyalar neenga???pattupudavai vanguvathil,cardai theipathai thavira,ungalin pangallippu enna?ungal nija meerajasmine adhhanga unga thangsukku pongalukku cooptex pattu pudavaiyavathu eduthu kodutheengla????mukkiyamana kelvi,pattupudavaikku matchingaaga nagai vanga eppo shopping enru mudivu sengittengla??idhellam shopping panra varikkum junior ambi babysitting samathhaga seivvergala????

ps ippadi mukkiyama kelviellam ennoda anbu rengamaniya paarthu romba naala ketkanumnnu aasai!!!
advertisement udunga....idhellam (enga ketruvennu dhhan) manushan laptopillirundhum cnbc18llrdhum thalaiya edhutha dhhane...
ippadikku
appavi thangamani nivi.

gils said...

ending chaancela :D :Dtypical vambi mama post

sriram said...

கலக்கல் அம்பி, நீங்க வடிவேலுக்கு Sequence எழுதலாம்..

//மீரா ஜாஸ்மின் வந்ததால் மட்டும் நான் சிபாரிசு செய்கிறேன் என நினைத்து விட வேண்டாம்.//

நினைக்கவே இல்லைன்னு நம்பவும்

//அதாவது மச்சினி// - என்ன ஒரு ஜெனரல் நாலெட்ஜ்

//குயில் கூவும், மயில் அகவும் - ஒன்னாங்கிளாஸ்ல சொல்லி தந்தாங்க// இதெல்லாம் ஞாபகம் இருக்குமே, எங்க சொல்லுங்க பாப்போம்- sin Q / Cos Q = ?, sin 90 = ? (இது மயில்/ குயில் மேட்டர் சொல்லி தந்ததுக்கு 10 வருஷம் கழித்து சொல்லித் தந்தது)

முக்கியமான கேள்வி : யாரந்த கலா? எனக்கு intro கொடுப்பீங்களா?

//ஒரு அத்தைய மட்டும் தான் காட்டினாங்க. // யோவ் மனுஷா- அத்தையைக் கூட் விட்டு வைக்க மாட்டீறா?

//விலை எல்லாம் நாலாயிரத்தில் ஆரம்பம் தான், அதுவே முடிவு இல்லை.// - டேமேஜ் ரொம்ப பலமோ.. உங்க வயத்தெரிச்சல கொட்டிக்கிறா மாதிரி ஒண்ணு சொல்லவா - என் தங்கமணிக்கு பட்டுப்புடவை, தங்க வைர நகைகளில் ஆர்வமே கிடையாது..

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Porkodi (பொற்கொடி) said...

adade bosston inga thaan irukingla.. naan kooda enavo edho nu bayandhutu irundhen..

Porkodi (பொற்கொடி) said...

ambi post piragu vandhu padikka padum :)

Anonymous said...

Is is available in you tube?

ambi said...

ஆமா சங்கவி. போஸ்டர் கலாச்சாரம் என்ன புதுசா நமக்கு. :))

வாங்க தம்பி, ரெம்ப வெட்டியா இருக்கீண்க்க போலிருக்கே. :p

ஆமா புபட்டியன், அந்த சித்தி கலக்கி இருக்காங்க. நீண்க்கள் ரசித்ததில்(விளம்பரத சொன்னேன்) எனக்கு ரெம்ப மகிழ்ச்சி. :))

வாங்க பதக்க வீராங்கனை ரா.ல, எனக்கும் அதே எண்ணம் தான், அதுவும் அந்த பாட்டி கேரக்டர் இருக்கே! ஹிஹி, நீங்களும் நம்ம கட்சி என உறுதிபடுத்தியமைக்கு ஸ்பெஷல் நன்றி. :)
கீதா மேடம் மாயவரம் சுற்றுபயணம் போயிருக்காங்க. :))

மிக்க நன்றி அறிவன் சார். அவதானிப்புனா என்னா? எல்லாரும் சொல்றாங்க, ஹிஹி எங்கயாச்சும் நாமளும் எடுத்து விடலாம்னு தான் கேக்கறேன். :))

ambi said...

வாங்க நிவி,
1) டெல்லில ரெம்ப குளிராமே?
2) பிளைட் எல்லாம் கேன்சல் ஆயிடுச்சாமே?
3) தக்காளி சீப்பா கிடைக்குதா? ஜாம் அல்லது தொக்கு போட்டு வெச்சுகுங்க.
:))


நீங்க என்ன தான் லாயர் மாதிரி மடக்கி மடக்கி கேள்வி கேட்டாலும் நாங்க இப்படி தான் பொதிகை எதிரொலி மாதிரி மழுப்புவோம். :))உங்க ரங்குவுக்கு என் நல்வாழ்த்துக்கள். மார்சுல இருந்து ஐபில் வேற வருது. :p

ambi said...

வாங்க கில்ஸ், என் பதிவுக்கு எப்படி நியாபகமா வந்தீங்க? :p

வாங்க பாஸ்டன், நீங்க என்ன எங்க கணக்கு வாத்யார் மாதிரி அடிக்கடி பெஞ்ச் மேல நிக்க வைக்கறீங்க?

1)sin Q /cos Q = tan Q
2)sin 90 = 1

இதுகெல்லாம் பதில் தெரிய என் தங்கமணியிடம் நான் ஒன்னும் பிட் அடிக்கவில்லைனு இப்பவே சொல்லிக்கறேன்.

//யாரந்த கலா? எனக்கு intro கொடுப்பீங்களா?
//

மானாட மயிலாட - கலா மாஸ்டர். Intro குடுக்கவா? :))

//என் தங்கமணிக்கு பட்டுப்புடவை, தங்க வைர நகைகளில் ஆர்வமே கிடையாது..
//

இங்கயும் அதே தான். இது "ஊருக்கு நல்லது சொல்வேன்!" ரக பதிவு. :))

மெதுவா வாங்க பொற்கேடி. ஆபிஸ்ல வேலை எல்லாம் செய்றீங்கன்னு சொல்ல வரிங்க இல்லையா? நம்பறோம். :p

சின்ன அம்மணி, தெரியல, புண்ணியவான்கள் யாராவது லிங்க் குடுங்க பா. :))

sriram said...

ஊருக்கு நல்லது சொல்லும் உத்தமர் வாழ்க வாழ்க..

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்..

Porkodi (பொற்கொடி) said...

indha ad youtubela irukka? link kudukkavum!

i like this ad so far.. :)

ama enna thidirnu mariyadhai ellam kuduthu pesaringa?! ambi maama what happened?! any recent poori kattai effect?

PS: yaru andha kala? :P

Porkodi (பொற்கொடி) said...

//யாரந்த கலா? எனக்கு intro கொடுப்பீங்களா?//

Bosston, enna inum Bahamasla than irukingla? romba dhairiyama pesaringle? ;-)

sriram said...

கேடி , எனக்கென்ன பயம், நான் ஆம்பிளையாக்கும்..
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

My days(Gops) said...

jeans pant, tshirt tradition ku maariana pothys eppadi ad edupaanga? andha dream horse'ah thatti vidunga boss :)

Anonymous said...

//indha ad youtubela irukka? link kudukkavum// yamma kodi! correctaana linkuu iruntha kodungamma!! yenga uurla intha add paakkamudiyaathu.....:(

Ambi's Thambi

Jayashree said...

"" மனப்பெண் "" அகவுறதா?!! அகவும் அகவும். அகப்பை வராம இருந்தா சரி.
வஸ்த்ர கலா Rs 4000மா!! அது என்னதுப்பா அத்தனைக்கு ?? ஓ!! swim tog ஆ!! இருக்குமாயிருக்கும்...
மூக்குல ரிங் போட்ட சித்தியா!! எதப்பா அது?? வளையம் போட்ட swiss cow!!??
என்னது !! எப்படி, எப்படி கோஆப்டெக்ஸ் க்கு போய் மிச்சத்துல துண்டா!? கௌபீனமே வராதுங்காணும்:((
அது மட்டும் லேசுபட்டதா விலையில்?? :))தான் டைரக்ட் பண்ணற கற்பனை!! பாவம் ரங்கமணி. ஓசிக்கு நடிக்க யார் வருவா பின்ன? " பி. கோ. ஆ !! பழைய இந்தியா இல்லை அம்பி தம்பி. சோறு போடும் இடமே சொர்கம்னு வந்துட்டேனப்பா:((

Porkodi (பொற்கொடி) said...

Ambi's thambi,

enga.. all I find is seetha sathyaraj ads! ambi, vengayam uritha pin, oru murai video eduthu upload seiyavum.. :)

LK said...

//நல்லா விசாரிச்சு பாத்தா அந்த பாட்டியின் பெயர் திருமதி.கீதா சாம்பசிவம் என்று இருக்கும். :)//

avanga padikalainu ninaikiren.. appuram enga veetu thangamanikum ithula interest illa . aana en kutti ponnnu irukara irupai partha avalku ithula interest jastiya irukomnu sandegam varuthu.. Ippave dress pannikita kannadila poi pakkara . 18 mnths aguthu ava poranthu

திவா said...

//கோ-ஆப்டெக்ஸுக்கு போய் நமக்கெல்லாம் நாலு முழ துண்டு எடுக்கலாம்!னு அந்த ரங்க்மணியை பேச வைத்து ஷாட்டை ஓகே பண்ணி இருப்பேன்.//
ஹிஹி! கர்சிப்பாவது தேறுமான்னு பாக்கணும். கர்சீப்பும் சீப் இல்லை!

N.D. NATARAJA DEEKSHIDHAR said...

அருமையான பதிவு.
www.natarajadeekshidhar.blogspot.com

கீதா சாம்பசிவம் said...

.// நல்லா விசாரிச்சு பாத்தா அந்த பாட்டியின் பெயர் திருமதி.கீதா சாம்பசிவம் என்று இருக்கும். :)//

அக்கிரமம், அநியாயம், அராஜகம், அம்பி நான் ஊரில் இல்லைனு நல்லாத் தெரிஞ்சு வச்சுட்டு இந்த வம்பா??? நல்லவேளையா நட்ராஜ் என்னை ஆண்ட்டினு கூப்பிட்டானோ? என் மானம் பிழைச்சதோ! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் மூணு வயசு கூட ஆகாத நட்ராஜே என்னை ஆண்ட்டினு கூப்பிட்டிருந்தால் நான் எவ்வளவு சின்னப் பொண்ணுனு பதிவுலகமே தெரிஞ்சிட்டிருக்கும்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

தக்குடுபாண்டி போட்டுக் கொடுத்தாரோ, பார்த்தேன் இதை, இல்லாட்டித் தெரிஞ்சிருக்காது/

தக்குடுபாண்டி, அடுத்த உ.பி.ச.வுக்கு மனுக் கொடுத்து வைங்க,நேரம் கிடைச்சா பரிசீலிக்கிறேன். :P

LK said...

//மூணு வயசு கூட ஆகாத நட்ராஜே என்னை ஆண்ட்டினு கூப்பிட்டிருந்தால் //

இததான் நீங்க பாக்கணும் ... வெறும் 3 வயசு அதான் ஆன்ட்டி இல்லாட்டி நீங்க பாட்டிதான் :D

தக்குடுபாண்டி said...

கீதா மேடம், நல்லா கவனிச்சீங்களா?? நட்டு பாட்டினுதான் கூப்டுருப்பான், வயசானதால உங்க காதுல ஆன்டினு விழுந்துருக்கும். சரி!!! போகட்டும் விடுனு நம்ப அபிஅப்பாவும் continue பண்ணியிருப்பார்.....:)

ambi said...

பொற்கேடி, மரியாதை எல்லாம் தானா வரது தான். :)

கரக்ட்டா வந்துட்டியே கோப்ஸ். :P

வாங்க ஜெயஸ்ரி, ஆமா விலவாசி எல்லாம் ரொம்பவே ஏறி போச்சு. சோறு போடற இடம் தான் சொர்க்கம். நூத்துல ஒரு வார்த்தை. :)

lks -கார்த்திக், பொண்ணூ இப்பவே கண்ணாடில அழகு பாக்கறாளா? சோ க்யூட். நீங்க பர்சை ரெடி பண்ணுங்க. :)

ambi said...

திவாண்ணா, அனுபவ சாலி நீங்க சொன்னா சரியா தான் இருக்கும். :p

மிக்க நன்றி திரு நடராஜ தீக்ஷிதர் அவர்களே. காளமேக புலவர் பத்தி ரொம்ப விரிவா எழுதியதுக்கு ஸ்பெஷல் நன்றி. :))

வித்தியாசமான கடவுள் said...

//1)sin Q /cos Q = tan Q
2)sin 90 = 1//

(ரத்தின) கணபதி பாப்பா மோரியா...

Senthil Durai T said...

உங்கள் பதிவு ரொம்ப நல்ல இருக்கு !தமிழ் விளம்பரங்கள்

www.tamiladvt.blogspot.com


த.செந்தில் துரை

Bhuvana Suresh said...

omg!!!am just siriching so loud after reading this.Sooper ambi neenga