Thursday, January 07, 2010

என்னது? இயக்குனர் ஷங்கரும் வலைபதிவரா?

முதல்ல எனக்கும் ஆச்சர்யமா தான் இருந்தது. எந்திரன் படத்தை பத்தி விரிவாக ரசிகர்களுடன் விவரிக்க வலைதள்ம் ஒரு நல்ல மீடியம் என அவரும் ஜோதியில் ஐக்கியமாகி விட்டாராம். ஏற்கனவே அமிதாப், அமீர்கான் எல்லாரும் சொந்த வலைதளம் இருக்கு. இப்பதான் ஷாரூக் டிவிட்டர்ல அக்கவுண்ட் (உபயம் கரண் ஜோ(க்)கர்)தொடங்கி இருக்கார். மத்திய அமைச்சர் சஸி தரூர் டிவிட்டர்ல அடிக்கற கூத்தை பத்தி நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை. டிவிட்டரின் கைபுள்ள இவரு தான்.

இவ்ளோ ஏன், நம்மூர் எஸ்.வி.சேகர், துணை முதலமைச்சர் ஸ்டாலின், 'ஸ்பெக்ட்ரம் புகழ்' ராசா இவங்களுக்கும் வலைதளம் இருக்கு. (ஏடாகூடமா கமண்ட் போட்டா ஆட்டோ அனுப்புவீங்களா சார்?).

ஷங்கரின் வலைதளம் சில துளிகள்:


தளத்தை அவர் மனதுக்கு பிடித்த கருப்பு கலரில் வடிவமைத்து இருக்கிறார்கள். (கருப்பு தான் ஷங்கருக்கு புடிச்ச கலரு).

எந்திரன் படபிடிப்பு தொன்னுறு சதவீதம் முடிந்து விட்டதாம். (தயவு செய்து சன் டிவியில் ட்ரைலராவது ஓட்டுங்க, வேட்டைகாரன் ட்ரைலர்(ரே) தாங்க முடியல)

இப்போதைக்கு ஆங்கிலத்தில் தான் வலை பதிகிறார். (என்னா சார்?)

இன்னும் தமிழ்மணம், தமிழிஷ் பட்டையெல்லாம் நிறுவவில்லை. ( நிறுவி பாருங்க, அப்புறம் தெரியும் சங்கதி)

துரத்தி துரத்தி பாலோயர்கள் எல்லாம் பிடிக்கவில்லை. அட! ஹிட் கவுண்டர் கூட போடலை.

முதல் பதிவுக்கு 439 கமண்ட் விழுந்து உள்ளது. அதில் பத்து தான் அவரது.

எல்லா கமண்டுக்கும் தனிதனியா பதில் போட்டு கமண்ட் எண்ணிக்கையை கூட்ட தெரியவில்லை.

அஜீத்தை வைத்து ஏன் நீங்கள் படம் பண்ண வில்லை? என உரிமையோடு ஒருவர் கேட்டு உள்ளார். (ஏய்! அது.)

நம்ம பதிவர்கள் சிலரும் அங்க போய் தங்கள் கைவரிசையை காட்டி இருக்கிறார்கள். (அதானே! எவ்வளவோ பண்ணிட்டோம், இத பண்ண மாட்டோமா?).

எல்லா கேள்விகளுக்கும் பதிலளிக்கவில்லை. சூசகமான, நேர்த்தியான கேள்விகளுக்கு மட்டும் நம் பெயரை சொல்லியே பதிலளிக்கிறார். (யதேச்சதிகாரத்தின் உச்சதில் இருந்து பூர்ஷ்வாத்தனமாக பதிலளிக்கும் டைரக்டர் ஷங்கருக்கு பத்து கேள்விகள்.... எதிர்வினை ஆத்த ஒரு தலைப்பு ரெடி).


ஐஸ் குட்டிக்கு கேசரி பிடிக்குமா?னு நான் கூட ஒரு கேள்வி தயார் பண்ணிட்டு தங்கமணி அப்ரூவலுக்காக அனுப்பி உள்ளேன். அனுமதி கிடைத்தால் ஷங்கருக்கு அனுப்புவதாக உத்தேசம். எனக்கு நம்பிக்கை உள்ளது.

அடுத்த பதிவர் மீட்டுக்கு காந்தி சிலைக்கு கீழே சாருவை அழைத்தது போலவே ஷங்கரையும் அழைக்கலாம். யாரு கண்டா? ரஜினியும் அவர் கூட வரலாம். :)

இவ்ளோ சொல்லிட்டு அவர் வலை தள் முகவரி சொல்லலைனா எப்படி? இந்தாங்க

அங்க போய் அம்பி தான் உங்க வீட்டு அட்ரஸ் குடுத்தான்னு கமண்டு போடுபவர்களுக்கு எந்திரன் படத்தில் ஐஸ் குட்டிக்கு முறை மாமன் ரோல் கிடைக்குமாம். :)

16 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

எனக்கு புதிய தகவல் ..நன்றீ..இவ்வ்ளோபேரு கமெண்ட் போடுவாங்கன்னு தெரியாம முதல்ல பதில் சொல்ல ஆரம்பிச்சிருப்பாரா இருக்கும்.. வர்ர வேகத்துக்கு இனி பதில் போட்டா என்னத்துக்காரது ..

ராமலக்ஷ்மி said...

தளத்தைப் பார்க்கவில்லை என்றாலும் ஏற்கனவே கேள்விபட்டேன். அங்கேயும் உங்கள் முதல் கேள்வி கேசரிதானா:))?

புதுகைத் தென்றல் said...

unga wifeku message solla solli aal anuparen irunga.

aisuku muraimaman rolea??

கடைக்குட்டி said...

அந்த லிங்க் மூணு நாளா உபயோகத்தில் இல்லைங்க..

நான் ஞாயித்துக் கிழமை முதலே கமெண்ட் போட் ஆரம்பிச்சுட்டேன்.. :-)

இப்போ server not found..

cyber cheating said...

HI,

Through this blog we avoid cyber cheaters.
http://cyberfraudidentifier.blogspot.com/

thank you

Anonymous said...

லேபிள் ரொம்ப பீலிங்க்ஸாகீது அம்பி :)

sriram said...

யார் யார் பதிவு எழுதறாங்கன்னு கண்டு பிடிச்சி பதிவுகள் போட்டா நான் கூட வாரத்துக்கு ஒரு பதிவு போடுவேன்...
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Porkodi (பொற்கொடி) said...

:)) ice kuttiku kesari pidikkadham.. ennaiye kettu solla solitanga unga thangu! ;)

அறிவன்#11802717200764379909 said...

{சன் டிவியில் ட்ரைலராவது ஓட்டுங்க, வேட்டைகாரன் ட்ரைலர்(ரே) தாங்க முடியல) }

அது எப்படி அவ்வளவு சீக்கிரம் விட்டுறுவோம்..மக்கா மரியாதயா படத்த பாத்துட்டு வந்துருங்க...

My days(Gops) said...

/முதல்ல எனக்கும் ஆச்சர்யமா தான் இருந்தது.//

ippa naan inga vandhadhu ungalukku exclamatory sentence ah irukumey"?

My days(Gops) said...

evalavu irundha enna sir,

modhal boni'ku pulidhorai and kesari kidaikumah?

My days(Gops) said...

ice kutty'ku kut(ty)chi ice thaan pudikumaam..

My days(Gops) said...

13 escape :)

Anonymous said...

Hi, looking for [url=http://netsuite-consulting.blogspot.com]Netsuite Services[/url] here!

ambi said...

வாங்க முத்தக்கா. சரியா பாயிண்டை புடிச்சீங்க. :))

ரா.ல, உங்களுக்கு தெரியாத தகவலா? :)

புதுகை அக்கா, இப்படியெல்லம் மிரட்டாதீங்க என்னை. :))

க-குட்டி, ஆமா, ஆனா இப்ப சரியா இருக்கு. :)

சின்ன அம்மணி, ஹிஹி. :)

ஸ்ரீராம், குத்துங்க எஜமான், குத்துங்க. :)

வாங்க பொற்கேடி, சண்டை எல்லாம் முடிஞ்சு சக்கரபொங்கல் சாப்டீங்களா? :p

அறிவன் சார், ஆமா, ரொம்பவே டார்சரா இருக்கு. :(

யப்பா கோப்ஸ், நீயெல்லாம் இங்க வந்து எவ்ளோ நாளாச்சு. ரெம்ப சந்தோஷம். :))

Anonymous said...

\\அங்க போய் அம்பி தான் உங்க வீட்டு அட்ரஸ் குடுத்தான்னு கமண்டு போடுபவர்களுக்கு எந்திரன் படத்தில் ஐஸ் குட்டிக்கு முறை மாமன் ரோல் கிடைக்குமாம். :)\\

appadi parthaa sivasu maamaa l a ram annaakku thaan antha chance kitaikkum:-))