Tuesday, February 09, 2010

கலைமகள்

பொதுவா சில பத்திரிகைகள் பெயரை கேட்டாலே நமக்குள் ஒரு மரியாதை உருவாகுவதை தவிர்க்க இயலாது. கல்கி, கலைமகள் போன்ற சஞ்சிகைகள் தனகென்று ஒரு தரம், வாசகர் வட்டம் வைத்துள்ளது. பத்திரிகை தர்மத்தை ஒரு போதும் விட்டு குடுக்காமல், சீப்பான மார்கெட்டிங்க் டெக்னிக் எதுவும் பண்ண தெரியாமல் காமராஜர் காலத்து காங்கிரஸ் போல இன்னமும் கம்பீரமாக வெளிவந்து கொண்டிருக்கிறது என சொன்னால் அது மிகையல்ல.

ஒரிரு முறை பள்ளி பருவத்தில் கலைமகள் வாசித்து அதன் தரத்துக்கு தாக்கு பிடிக்க முடியாமல் விழி பிதுங்கியதுண்டு. நிறைய தமிழ்சொற்கள், மொழி ஆளுமை எல்லாம் வசப்பட(இன்னும் இல்லை) நல்ல பயிற்சி களமாக திகழ்கிறது.

கலைமகளில் இணைய ஜர்னலிஸ்ட்டுகளான( நாமே சொல்லிக்க வேண்டியது தான்) நம்மை பத்தி, நமது பதிவுலகத்தை பத்தி ஒரு கட்டுரை எழுத போறோம். சுருக்கமாக ஒரு குறிப்பு எழுதி, சின்னதா ஒரு போட்டோவும் அனுப்பவும்னு மெயில் வந்ததும் நான் செய்தது:


1) நம்மை வெச்சு யாரும் காமெடி கீமடி பண்றாங்களோ?னு முதலில் இமெயில் முகவரியை செக் செய்து கொண்டேன்.


2) போட்டோ எடுக்க பி.சி ஸ்ரீராம் ப்ரீயா இருக்காரா?னு கேட்டு பாத்தேன். பிசியாம். சரி விடுங்க, அவருக்கு யோகம் அவ்ளோ தான்.


பத்திரிகையில் போட்டோ எல்லாம் வரப்போகுது, எப்படி போஸ் குடுக்கலாம்? ஒரு பேனாவை மூக்கினுள் விட்ட படியே (ஆழ்ந்து யோசிக்கறாங்களாம்) ஒரு ஷாட் எடுக்கலாமா? இல்லாட்டி செல்போன் பேசியபடி ஒரு ஷாட் எடுக்கலாமா? அல்லது தலைக்கு பின்னாடி ஒரு ஜீரோ வாட் பல்ப் மட்டும் எரிய விட்டு, விட்டத்தை பாத்தபடி ஒரு போஸ் குடுக்கலாமா?னு ஒரே யோசனை.

முகத்துக்கு ஒரு ப்ளீச் செய்து போட்டோ எடுத்தால் நன்றாக இருக்கும்னு ஆபிசில் உள்ள பெங்காலி யோசனை சொன்னது. "பேஷியல் செய்து கொண்டால் ஒரு மஜாஜ் ப்ரீ" - புதுசா ஒரு மலபார் பியூட்டி பார்லர் நம்ம ஏரியாவுல கடை தொறந்ருக்கான். கடையும் கண்ணுக்கு குளிர்ச்சியா, நல்லா காத்தோட்டமா இருக்கு. நான் ஒரு நடை போயிட்டு வரேன்னு நைச்சியமாய் நான் சொன்னதையெல்லாம் மேலிடம் காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை. கேரளா என்றவுடன் பார்ட்டி உஷார் ஆகி விட்டது.


பின் ஒரு முடிவுக்கு வந்து எந்த போட்டோவை தங்கமணிக்கு முதன்முதலில் அனுப்பினேனோ அதே போட்டோவையே கொஞ்சம் டச்சப் பண்ணி அனுப்பி வைத்தேன். (இங்குள்ள படம் பிடிஎப் கோப்பிலிருந்து எடுத்தது, எனவே படத்தின் குவாலிட்டி கம்மியா தான் இருக்கும், ஆகவே யாரும் நமுட்டு சிரிப்பு சிரிக்க வேண்டாம்.)வகுப்பறை ஆசான் சுப்பையா வாத்தியார், துளசி டீச்சர், ரிஷான் ஷெரீப் போன்ற பெரிய பெரிய்ய ப்ரைம் டைம் ஜாம்பவான் வித்வான்களுக்கு இடையில் கமர்ஷியல் ப்ரேக் போல என் பதிவு பற்றியும், என் உள்ளங்கவர் கேசரி பற்றியும் கட்டுரை வந்துள்ளது. முழு கட்டுரையையும் வாசிக்க சொந்த காசிலோ, ஓசியிலோ இந்த மாத கலைமகள் வாங்கி படியுங்கள்.


அடுத்த மாத இதழில் இன்னும் பெரிய பெரிய்ய ஆட்கள் பத்தி எல்லாம் வரப் போகுது. அந்த சஞ்சிகை ஆசிரியருக்கு என் மனமார்ந்த நன்றிகள். இந்த கட்டுரை தொடர்பாக பாராட்டு கடிதம் ஏதும் தப்பித் தவ்றி வந்தால் உங்களுக்கும் தெரிவிக்கிறேன்.

41 comments:

துளசி கோபால் said...

//தங்கமணிக்கு அனுப்பிய படம்.....//

ஆஹா...இது வேறயா!!!!!!!!!!

நானும், நான் கொயந்தையா இருந்த படத்தைத் தேடினேன்....ஆப்டலை.....

ஷைலூவுக்கு நம் பதிவர்கள் சார்பில் என் நன்றிகள்.

ராமலக்ஷ்மி said...

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்!

ஒரு ஃபோட்டோ அனுப்ப எவ்ளோ... சிந்தித்திருக்கிறீர்கள்:)?

//தங்கமணிக்கு அனுப்பிய படம்.....//

ராசியான படம்தான்:))!

ஷைலஜா said...

//

பின் ஒரு முடிவுக்கு வந்து எந்த போட்டோவை தங்கமணிக்கு முதன்முதலில் அனுப்பினேனோ அதே போட்டோவையே கொஞ்சம் டச்சப் பண்ணி அனுப்பி வைத்தேன். (இங்குள்ள படம் பிடிஎப் கோப்பிலிருந்து எடுத்தது, எனவே படத்தின் குவாலிட்டி கம்மியா தான் இருக்கும், ஆகவே யாரும் நமுட்டு சிரிப்பு சிரிக்க வேண்டாம்//////

<>>>>>>>>>>>>>>


பெருசாவே சிரிச்சிட்டேன்! ஆனா உண்மைல அம்பி ,போட்டோல நீஙக் சுமார்தான் நேர்லயே பரவால்ல!:)


//முழு கட்டுரையையும் வாசிக்க சொந்த காசிலோ, ஓசியிலோ இந்த மாத கலைமகள் வாங்கி படியுங்கள். //

நீங்க முதல்ல வாங்கினீங்களா இல்லையா?:)

தக்குடுபாண்டி said...

//நீங்க முதல்ல வாங்கினீங்களா இல்லையா?:)//

shylaja akka,
நிச்சயமா அம்பி கைகாசு கொடுத்து பத்திரிக்கை எல்லாம் வாங்க மாட்டான். // ஆசான், துட்டு விசயத்துல கொஞ்சம் கறாரு//...:)

அநன்யா மஹாதேவன் said...

அம்பி,
கங்கிராட்ஸ் - கலைமகள் மூலமா உலகப்புகழ் ஈட்டிட்டேள்..
உங்க ப்ளாக் ரெகுலரா படிக்கறேன்.

“ஒரு பேனாவை மூக்கினுள் விட்ட படியே (ஆழ்ந்து யோசிக்கறாங்களாம்) ஒரு ஷாட் எடுக்கலாமா? இல்லாட்டி செல்போன் பேசியபடி ஒரு ஷாட் எடுக்கலாமா? அல்லது தலைக்கு பின்னாடி ஒரு ஜீரோ வாட் பல்ப் மட்டும் எரிய விட்டு, விட்டத்தை பாத்தபடி ஒரு போஸ் குடுக்கலாமா?னு ஒரே யோசனை.”
எப்படி இப்படி எல்லாம்? சூப்பர். சிரிச்சு சிரிச்சு வயித்த வலிக்கறது.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

கலைமகளுக்கு இந்த அளவுக்குப் பாராட்டான்னு யோசிச்சுகிட்டே படிச்சேன். தெளிந்தேன் :)

வாழ்த்துகள் அம்பி. ஃபோட்டோவுல அழகா இருக்கீங்க.

கீதா சாம்பசிவம் said...

அம்பி, போட்டோவிலேயும் சகிக்கலை, நேரில் அதைவிட மோசம், போகட்டும்,
கலைமகளில் ஒரு கடிதம் வந்தாலே ஓசியிலே பத்திரிகை வருமே! உங்களுக்கு வரலை???? நீங்களாவது, காசு கொடுத்துப் படிக்கிறதாவது??? :P:P:P:P:P

Buddha said...

Well all these things lead to one single Question..Why don't u do it in a large scale .. Part time..??

Start Writing a Novel-Fiction /Humour Genere Might suit ur Style

or try to Become a Part time Journalist..become a member of Press club and take some initiative to write in Local Daily's..

It wont be just a hobby but a Money spinner too..:-)
congrats anyway...

கீதா சாம்பசிவம் said...

or try to Become a Part time Journalist..become a member of Press club and take some initiative to write in Local Daily's..//

hihihiiihihihihihihihihihihihihiihihihi

Porkodi (பொற்கொடி) said...

//பெருசாவே சிரிச்சிட்டேன்! ஆனா உண்மைல அம்பி ,போட்டோல நீஙக் சுமார்தான் நேர்லயே பரவால்ல!:) //

vachangle oru aappu shyla akka.. :D nerla kooda parva illa thaanam! khi khi khi..!


congrats ambi, unga star value image ellam eritte pogudhe marketla..? :P

G3 said...

Kalakkarel pongo :))) Gangaaro relation :)) Adhaanpa vaazhthukku englipishla solvaangalae... adhaan.. adhae dhaan :))))

////பெருசாவே சிரிச்சிட்டேன்! ஆனா உண்மைல அம்பி ,போட்டோல நீஙக் சுமார்தான் நேர்லயே பரவால்ல!:) //

vachangle oru aappu shyla akka.. :D nerla kooda parva illa thaanam! khi khi khi..!//

ROTFL :))

Unga kesari pathiva pottadhukku badhil 63 pathivu pottadhin palannu oru post pottirundheengalae.. adhae pottirundha innum palar blog ulathukku pudhu varava nozhanjiruppaanga :D

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஓ.. படம் அனுப்பினதுக்கு பின் இப்படி எல்லாம் விசயம் இருக்கா.. :)
வாழ்த்துக்கள்..

uthira said...

congrats ambi ...........

Dubukku said...

வாழ்த்துக்கள் அம்பி சார்...கலக்குறீங்க !!!
மேன் மேலும் வளர வாழ்த்துகள் !!!

மதுரையம்பதி said...

வாழ்த்துக்கள் அம்பி சார்.

அண்ணாமலையான் said...

வாழ்த்துக்கள்.. சீக்ரம் times ல வாங்க...

Anonymous said...

congrats ambi,ungal nanmuyarchi thodarattum.

idhe madhiri ungal ezuthum,photovum niraya paperla vandhu ungal visirigal ungalai thurathha vendum.ada !!!!! oru anbula thaan!!!!!
btw, enakku oru special kesari parcel.
nivi.

Anonymous said...

//கலைமகள் வாசித்து அதன் தரத்துக்கு தாக்கு பிடிக்க முடியாமல் விழி பிதுங்கியதுண்டு.//

சோனியாவுக்கு ஐஸ்கிரீம் பிடிக்கும் :)-

My days(Gops) said...

aannathe sathyama naan pona padhivin thalaipai padichitu indha post ah padikala.. enna nambungaaaaaaaaaaaaaaaa

My days(Gops) said...

congrats annathe....

book la ellaaam vandhuteeenga, inimale aaachum poster paarkura palakathai vitrunga ok va?

i mean, film poster ah :)

LK said...

congrats

sriram said...
This comment has been removed by the author.
sriram said...

//பொதுவா சில பத்திரிகைகள் பெயரை கேட்டாலே நமக்குள் ஒரு மரியாதை உருவாகுவதை தவிர்க்க இயலாது. //

இனிமே அந்த மாதிரி சொல்ல முடியாதுன்னு நெனைக்கும் போது துக்கம் தொண்டய அடைக்குது..

//இணைய ஜர்னலிஸ்ட்டுகளான//
அண்ணனுக்கும் தம்பிக்கும் இது என்ன வெட்டி பந்தா வாரமா??

//"பேஷியல் செய்து கொண்டால் ஒரு மஜாஜ் ப்ரீ" // தனி மடலில் அட்ரஸ் அனுப்பவும் - சொம்மா ஒரு ஜெனரல் நாலெட்ஜுக்குத்தான்

//எந்த போட்டோவை தங்கமணிக்கு முதன்முதலில் அனுப்பினேனோ அதே போட்டோவையே கொஞ்சம் டச்சப் பண்ணி அனுப்பி வைத்தேன். //
ஏமாந்தவங்க லிஸ்ட்ல ஒண்ணு அதிகமா ஆயிடிச்சி..

வாழ்த்துக்கள் அம்பி... :):)

சொல்றதெல்லாம் சொல்லிட்டு கடேசில வாழ்த்துக்களுக்கு கொறச்சலில்ல - இப்படி சொல்லக்கூடாது சொல்லிப்புட்டேன்...

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Wed Feb 10, 09:14:00 PM

மோகன் குமார் said...

அம்பி.. கலக்கல். சரியான கட்டுரை தான் (கேசரி) வந்திருக்கு. வாழ்த்துக்கள்.

erodemapillai said...

டியர் அம்மாஞ்சி நேற்றைக்குதான் உங்க போஸ்ட் பத்தி மங்கியர் ( எழுத்து பிழை ) மலர்ல படிச்சேன் . சூப்பரா எழுதறிங்க , பட் நான் ரொம்ப புதுசு இந்த BLOGERKU . என் பேரு ஈரோடு கைப்புள்ள (எ) ஈரோடு மாப்பிள்ளை , முடிஞ்சா என் ப்ளாக் பக்கம் வந்து எட்டி பாக்கவும்.

இப்படிக்கு

ஈரோடு கைப்புள்ள (எ) ஈரோடு மாப்பிள்ளை

erodemapillai said...

நான் இந்த FIELD க்கு புதுசுதான் . பட் பேச நெரிய விஷயம் இருக்கு . அதனால எல்லரோக்கும் ஒரு சிம்பிள் வேண்டிகோள் , சும்மாவது என் ப்ளாக் பக்கம் வாங்க , இல்லேன்னா நான் உங்க ப்ளாக் பக்கம் வருவேன் . இது சும்மா பயமுர்தல் இல்லை சுத்தமான ப்ளாக் மெயில் தான் , என்ன பண்ணறது இப்படி பண்ணின தான் எல்லோரும் பாகாரங்க. SO DNOT மேக் ப்ளாக் மெயில் மீ.

என்ன புரித

இப்படிக்கு

ஈரோடு கைப்புள்ள (எ) ஈரோடு மாப்பிள்ளை

Porkodi (பொற்கொடி) said...

சரி சரி.. இந்த கடுதாசை மன்னியிடம் காண்பிக்கவும்:

"டியர் மன்னி.. சூர்யா அப்பா நீங்க இவ்வளவு அடி குடுத்தும் கொஞ்சம் கூட மாறல.. அவரோட ப்ளாக் பத்தி வர்ற புஸ்தகம் கூட 'கலைமகள்' 'மங்கையர் மலர்'னு பொம்மனாட்டி சம்பந்தமாவே இருக்கு! நீங்க தான் என்னனு கொஞ்சம் கவனிக்கணும். நான் சொன்னேன்னு அண்ணா கிட்ட சொல்லிடாதீங்கோ! தக்குடு மேல பழியை போட்டுருங்கோ. இங்க அமெரிக்கால பூரி கட்டை மாதிரியே ஒரு புது கட்டை வந்துருக்கு. உங்களுக்கு வேணுமா சொல்லுங்கோ, வாங்கி அனுப்பறேன்.

இப்படிக்கு,
கொடிக்குட்டி."

sriram said...

கேடி..
நீயா நானா கோபி மாதிரி நல்லா எல்லா குடும்பத்திலயும் கும்மி அடிக்கிறீங்க, பேசமா அவரோடு சேர்ந்த்து டாக் ஷோ நடத்தலாம்..

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

திவா said...

அடப்பாவமே! கலை மகள் ஸ்டாண்டர்ட் இப்படி போயிடுச்சா? :P

மங்களூர் சிவா said...

very nice!

ambi said...

வாங்க டீச்சர், இப்பவும் நீங்க கொழந்தை தானே (மனதால) :))

ஆமா ரா.ல ரெம்பவே ராசியான படம், என் ஜிமெயில் போட்டோவும் இதுவே. :))

வாங்க ஷைலக்கா, ஒரு வழியா கல்லிடைல தான் கலைமகள் வாங்க முடிஞ்சது. :))

தக்குடு, சத்ருவுக்கு சாதம் போட்டு வளத்தவன் நானா தான் இருப்பேன் போலிருக்கு. :)

உங்கள் முதல் பின்னூட்ட வருகைக்கு நன்றி அனன்யா அக்கா. :)

வாஙக் சுந்தர், உங்க பாராட்டுக்கு மிக்க நன்றி. நேர்ல நீங்க பாத்தீங்கன்னா... சரி வேணாம் விடுங்க. :))

கீதா பாட்டி, பிளாக் படிக்கும்போது கண்ணாடி அணிந்து படிக்கவும். :p

ambi said...

புத்தா, முதலில் என் மேல வெச்சு இருக்கற எதிர்பார்ப்புக்கு ரெம்ப நன்றி. நீங்க சொல்ற லெவெலுக்கு போக எனக்கு இன்னும் அனுபவம் இல்லைனு நான் நினைக்கறேன். எதிர்காலத்தில் நடக்கலாம், இதை முதல் படியா எடுத்துக் கொள்கிறேன். இப்போ நேரமும் என்னிடம் இல்லை. (கொஞ்சம் சந்தேகத்துடன்), என்னய வெச்சு காமெடி கீமடி எதுவும் பண்லையே..? :))

கண்ணூல வெளக்கெண்ணய் விட்டுட்டு பாப்பியா கொடி..? ஏன்ன வேல்யூ ஏறி என்ன புண்யம்..? அதான் ஒருவாட்டி கல்யாணம் ஆயுடுச்சே! :p

ஜி3 அக்கா, நல்லா ஐடியா குடுகக்றிங்க. அது எனக்கு நானே வெச்சுக்கற ஆப்பு. :))

நன்றி முத்தக்கா, உத்ரா, மபதி அண்ணா. :)

டுபுக்கு, எல்லாம் உங்க ஆசீர்வாதம் அண்ணாத்தே. :)

அண்ணாமலையான், டைம்ஸ்லயா..? அவ்வ்வ்வ். :))

நிவி, துரத்த வேணுமா? ஏற்கனவே ஆட்டோ அனுப்ப அட்ரஸ் தேடிட்டு இருக்காங்க. பார்சல் தானே அனுப்பிடுவோம். :))

வாங்க அனானி, ஆமா, அந்த தலைப்பை பாத்து நானும் ஒரு நிமிஷம் சிரிச்சுட்டேன். :)

நீ ரெம்ப நல்லவன் கோப்ஸு. :p

பாராட்டுக்கு நன்றி எல்.கே, மோகன் குமார். :)

உங்க பின்னூட்டத்தை ரெம்பவே ரசித்தேன் பாஸ்டன் அண்ணாச்சி. :))

ஏரோடு மாப்ள, மங்கயர் மலரா..? இது புது தகவலா இருக்கே..? :)

டியர் கேடி (அப்படி தான் உங்க அண்ணா விளிக்க சொன்னார்),

அவரு படைப்புகள் பொம்மனாட்டி புஸ்தகத்துல வந்தாலும், அவருக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை. அதான் எனக்கு வாழ்கை பட்டாச்சே! அதனால பெரிதாக நான் அலட்டிக் கொள்ளவில்லை. மேலும் உங்க அண்ணன் வெறும் பேச்சு தான். தைரியம் பத்தாது. ப்ரீயா விடு. :))

ambi said...

ஆமா திவாண்ணா, அதான் எனக்கும் ரொம்ப ஆச்சர்யமா இருக்கு. நாளுக்கு நாள் மெருகேறிட்டே போகுது இல்ல..? :))

நன்றி ம சிவா. (அட இங்க பாருடா இவரு பின்னூட்டமெல்லாம் போடறாரு.) :)

Swami said...

Vazhthukkal ambi. ungal ezhuthukkal thanithanmaiyodum, suvarasiyam+nagaichuvaiuodum irukkirathu. neengalum pathivulaga Jambavanthan. enna,adikkadi ezuthuvathu illai.adhu onnuthan kurai. matrapadi kalakkalo kallakal blog.

ambi said...

Thanks for your kind words Swami. I will try to write at least one post per week. :)

அறிவன்#11802717200764379909 said...

{எனவே படத்தின் குவாலிட்டி கம்மியா தான் இருக்கும், ஆகவே யாரும் நமுட்டு சிரிப்பு சிரிக்க வேண்டாம்.) }

குவாலிட்டி நல்லா இருந்தா மட்டும் என்ன பெரிசா வித்தியாசம் இருக்கப் போகுது அம்பி..
எல்லாம் நமக்குத் தெரிந்ததுதானே..
:))

வாழ்த்துக்கள் !

கவிநயா said...

மனமார்ந்த வாழ்த்துகள் அம்பி!

Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

வித்தியாசமான கடவுள் said...

எதை எதையோ பத்தி பின்னூட்டம் இட்ட மக்கா... "அல்வா" என்கிற தலைப்பில்எழுதாமல் கேசரி என்ற தலைப்பில் எழுதியதை பத்தி பின்னூட்டம் இடமறந்திட்டீங்களே... அம்பிக்கு அல்வாசாப்பிடுறதை விட அல்வா கொடுக்கிறது பிடிக்கும்...

வித்தியாசமான கடவுள் said...

ஆனாலும் அம்பியோட மொக்கைகளை முதலில் வெளியிட்ட பெருமை எங்களையே சேரும் என்பதினை தாழ்மையுடன் தெரிவித்துக் கொல்கிறோம் (எழுத்து பிழை அல்ல)...