Thursday, February 18, 2010

My Name is Ambi

சரியாக நான்கு வருடங்களுக்கு முன்பு இதே நாளில் ஒரு அதிசயம் நிகழ்ந்தது. அன்று உலகில் வழக்கத்துக்கு மாறாக பல செயல்கள் நடந்தது. தொடு வானில் விடிவெள்ளிக்கு நிகராக இன்னொரு நட்சத்திரம் ஒளிர்வதை கண்டு ஜெருசலேம் நகரத்து மக்கள் ஒன்று கூடி அதிசயித்தனர். அட்லாண்டிக் பெருக்கடலில் வழக்கத்துக்கு மாறாக பெரும் அலைகள் எழுந்ததை அமெரிக்க மீனவர்கள் இன்றளவும் நினைவு கூர்கின்றனர். நியூயார்க் டைம்ஸ் ஸ்கொயர் சதுக்கத்தில் பெரும் திரளான மக்கள் கூடி விவாதித்தன்ர். லன்டன் நகரத்து வீதிகளிலும் இதே நிலை தான்.

ரஷ்யா, அமெரிக்கா, சைனா, சப்பான், பிரான்ஸ் போன்ற வல்லரசு நாடுகள் தம்முள் இருக்கும் ஈகோவை மறந்து உடனே இந்த நிகழ்வை ஐ நா சபையில் கூடி விவாதித்தன. பிபிசி நிருபர்களுக்கு அன்று இருபத்தி நாலு மணி நேரங்கள் போதவில்லை. உலகெங்கிலும் இந்த நிகழ்வை பற்றிய செய்திகள் வந்து குவிந்த வண்ணம் இருந்தன.

மாசி மாதமென்றாலும் திடீரென கரும்மேகங்கள் சூழ்ந்து மழை வருஷித்தது. ஏதேனும் அதிசயம் நிகழ இருக்கிறதா? என கேரளாவில் பல பணிக்கர்கள் ப்ரச்னம் வைத்து பார்த்தனர். பெரும் தந்தங்களை உடைய ஆண் யானைகள் பெருங் குரலில் பிளிறின.

சரி, அப்படி என்ன நிகழ்ந்தது..?

அதற்கு முன்னால் இந்த சுட்டியை பார்த்து விடுங்கள். பக்கத்தில் மறக்காமல் வேர்க்கடலை பாக்கெட் வைத்துக் கொள்ளவும், (இந்த பக்கத்தில் உள்ள வீடியோ லோட் ஆக நேரமாகும், அதுவரைக்கும் கடலையை...)

சுட்டி அனுப்பிய தானைத் தலைவி ராப்புக்கு மிகவும் நன்றி.
ஹிஹி, நான் பிளாக் ஆரம்பித்து இன்றோடு நான்கு வருடங்கள் ஆகி விட்டது. அது தான் அந்த நிகழ்வு. :)

உங்கள் தற்போதைய மன நிலையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. நாலு வரியில் இதை சொல்லி, கமண்டு போட்டவர்களுக்கும், கமண்டு போடாமல் முக்காடு போட்டு படிப்பவர்களுக்கும் நன்றினு சொன்னா சப்புனு இருக்காது? அதான் இவ்ளோ பில்டப்.

இதே சோலியை தான் கரண் ஜோக்கரும்(எ-பிழை இல்லை), ஷாருக் கானும் செய்திருக்கிறார்கள். போதா குறைக்கு சிவசேனையின் பால் தாக்ரே கையில் பசை வாளியுடன் மும்பை நகர வீதி சுவர்களில் போஸ்டர் ஒட்டாத குறையா இந்த படத்துக்கு அரும்பணியாற்றி இருக்கிறார். அன்னாருக்கு எங்கள் மனமார்ந்த நன்றினு படம் ஆரம்பிக்கும் போது ஒரு ஸ்லைடு காண்பித்து இருக்கலாம். மற்றபடி இந்த படத்தை விமர்சனம் செய்து உங்கள் நேரத்தை வீணடிக்க விரும்ப வில்லை.

இந்த நாலு வருடங்களில் நீங்கள் காட்டிய ஆதரவுக்கு மிகவும் நன்றி.

35 comments:

தக்குடுபாண்டி said...

இதெல்லாம் ஒரு பொழப்பு!.......:) (நாராயணா! இந்தப் பய தொல்லை தாங்க முடியலப்பா!)

துளசி கோபால் said...

நாலு, நாப்பதாக இனிய வாழ்த்து(க்)கள்.

Anonymous said...

வாழ்த்துக்கள்

Ms.Congeniality said...

//நாலு, நாப்பதாக இனிய வாழ்த்து(க்)கள்.//

ditto :-))

சென்ஷி said...

வாழ்த்துக்கள் அம்பி

மெனக்கெட்டு said...

கேசரியோடு ஒரு Treat போட்டுற வேண்டியது தானே?

திவா said...

இதான் நாலும் தெரிஞ்ச மனுஷன் என்கிறதா?

வாழ்த்துக்கள்!

டம்பி மேவீ said...

valthukkal

(mudiyala)

கீதா சாம்பசிவம் said...

சரி, சரி, வாழ்த்துகிறேன், நானும், மனசிலே என்னமோ தக்குடு சொல்லறது தான் நிக்குது! :P ஹிஹிஹி,ப்ளாக் ஆரம்பிச்சு எனக்கும் நாலு வருஷம் ஆச்சு!

ராமலக்ஷ்மி said...

//சரியாக நான்கு வருடங்களுக்கு முன்பு இதே நாளில் ஒரு அதிசயம் நிகழ்ந்தது.//

முதல் வரியிலேயே புரிந்து விட்டது:))! ஆனாலும் நல்லாவே ரசிக்க முடிந்தது.

வாழ்த்துக்கள்!

கீதா சாம்பசிவம் said...

தொடர

gils said...

//இதெல்லாம் ஒரு பொழப்பு!.......:) (நாராயணா! இந்தப் பய தொல்லை தாங்க முடியலப்பா//

ithu thaan overuuuu thakkudu :D

அநன்யா மஹாதேவன் said...

அம்பி இவ்ளோ கொணஷ்டை பண்ணும்போதே தெரிஞ்சுடுத்து இத மாதிரி ஏதோ ஒண்ணுக்கு தான் அடி போடறீங்கன்னு. 4வது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் அண்ணன் அம்பிக்கு வாழ்த்துக்கள்!

Porkodi (பொற்கொடி) said...

vazhthukkal ambi!

Porkodi (பொற்கொடி) said...

ada pavame.. ungaluku mnik pidikaliya.. hmmm!

ஸ்ரீதர் நாராயணன் said...

//இந்த நாலு வருடங்களில் நீங்கள் காட்டிய ஆதரவுக்கு மிகவும் நன்றி//

:)) காட்டாட்டினாலும் விட்டுடவா போறீங்க? எதுக்கும் இந்த நன்றியை வாங்கி பாக்கெட்ல வச்சிக்கிறேன்.

தொடர்ந்து கலக்கவும். நாலு, நாப்பதாக, நானூறாக... இன்னும் என்னவோ சொல்லுவாங்களே... அந்த மாதிரி நானும் வாழ்த்திக்கறேன் சார்.

sriram said...

எங்கேருந்து இந்த மாதிரி ஐடியாவெல்லாம் பிடிக்கிறீங்க??
கலக்கல் போங்க, எனக்கும் இந்த அவார்ட் கெடச்சிருக்கு, வீடியோ பாக்கறீங்க்களா?

4க்கு வாழ்த்துக்கள், இன்னும் ரொம்ப நாளைக்கு எங்கள சிரிக்க வைங்க

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

ஆயில்யன் said...

வாழ்த்துக்கள் பாஸ் :)))))

ஆயில்யன் said...

//தக்குடுபாண்டி said...

இதெல்லாம் ஒரு பொழப்பு!.......:) (நாராயணா! இந்தப் பய தொல்லை தாங்க முடியலப்பா!)//


பாஸ் ம் சொல்லுங்க தக்குடுவ தட்டி வைச்சிடலாம்! :)))

My days(Gops) said...

idhelaam overu solliputten....

build up chancey illai...

ippadiku

My Name is Gops.

G3 said...

//Blogger கீதா சாம்பசிவம் said…

சரி, சரி, வாழ்த்துகிறேன், நானும், மனசிலே என்னமோ தக்குடு சொல்லறது தான் நிக்குது! :P//

Repeatae :)))))))))

LK said...

@ambi
congrats

intha nadrilam inga venam olunga treat kodu illati un tangskitta ethavathu vatthi vachiruven

கீதா சாம்பசிவம் said...

ஆஹா, எல்கே, காது குளிரக் குளிரக் கண் குளிரக் குளிர எழுதும் நீவிர் வாழ்க! வளர்க!

ஜி3 அக்கா, தாங்கீஸ்ஸ்ஸ்ஸ் ரிப்பீட்டேஏஏஏஏக்கு! இப்படி ஒரு ஆதரவு கிட்ட என்ன தவம் செய்தேன்?? :P

Vidhoosh said...

:)) comedyo comedi. ipdithaan eppayumaa... video parapparappai koottuthungo..:))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்த்துக்கள்..:)

Anonymous said...

வாழ்த்துக்கள் அம்பி

Anonymous said...

vazhtukkal ambi, naalu anndu sadhanaiyai kondadum vagaiyil ambi avargal idhai kondadi virundhukku azhaikkirar.

idam:edho oru five star hotelil.seven star hotel enralum paravailllai.
time:ungal matrum thangamaniyin sambalam vandha time.
ps:edho ungal sarpil ungal visirigallukku azhaippu vittuten.
neenga enna vennanna solla poreenga..
nivi.

தி. ரா. ச.(T.R.C.) said...
This comment has been removed by the author.
தி. ரா. ச.(T.R.C.) said...
This comment has been removed by the author.
தி. ரா. ச.(T.R.C.) said...

வாழ்த்துக்கள் அம்பி. இப்போதெல்லாம் பதிவே காணோமே! ஓ மறந்து போயிட்டேனே தம்பி ஊருக்கு போயச்சு இல்லே! தம்பிக்கு தோஹா போனப்பறம் குளிர் விட்டுப் போச்சு.

மதுரையம்பதி said...

வாழ்த்துக்கள் அம்பி காரு!!! :)

Mighty Maverick said...

Read in "My name is Billa"...

My Name is Ambi
நீட்டிடுவேன் கம்பி
நானும் பாக்காத பிகர் இல்ல
அடிக்காத கூத்து இல்ல
எங்கு போனாலும் விட மாட்டேன்
யார்கிட்டேயும் மாட்டிக்கவும் மாட்டேன்...

ஆனா தங்கமணிகிட்ட மட்டும் மாட்டிக்கிட்டாரு... :P

ambi said...

தக்குடு, சத்ருவுக்கு சாதம் போட்டு வளத்தது நானாக தான் இருக்கும். :)

டீச்சர், பெரியவங்க சொன்னா பெருமாள் சொன்ன மாதிரி. தன்யனானேன் மாதாஜி. :))

நன்றி நான் ரசித்த..(வித்யாசமான பெயர்). ;)

மிஸஸ் சி, தங்கள் பொன்னான நேரத்தில் இந்த எளியவன் வீட்டுக்கு வந்ததுக்கு என்ன பாக்யம் செய்தேனோ? கும்டுக்கறேன் எஜமான். :p

நன்றி சென்ஷி. :)

என்ன பத்தி தெரிஞ்சுமா இப்படி சொல்றீங்க மெனக்கெட்டு..? :p

ஹிஹி, ரசித்தேன் திவாண்ணா, நன்றி. :)

நன்றி மேவீ, (என்னாலயும் தான்) :)

கீதா பாட்டி, நன்றி ஹை. 4 வருஷம் ஆச்சா? நீங்க எங்க, அடியேன் எங்க..? :p

ரா ல, கரக்ட்டு, அந்த லைனை பின்னாடி சேத்து இருக்கனும். நன்றி ஹை. :)

வாங்க கஜா கா தோஸ்த் கில்ஸ். :p

அனன்யா யக்கா, நீங்க ரெம்ப ஷார்ப்புனு எனக்கு தெரியாம போச்சு. ரெம்ப நன்றிங்க. :)

வாங்க பொற்கொடி (சரியா பேசறேனா?) MNIK கொஞ்சம் அதிகமா கிண்டிட்டாங்களோன்னு தோணுது. :)

ambi said...

வாங்க ஸ்ரீதர் அண்ணாச்சி, வாரனும்னு முடிவு பண்ணியாச்சு. நடத்துங்க. உங்க அன்புக்கு ரொம்ப நன்றிங்க. :))

வாங்க பாஸ்டன் அண்ணாச்சி, எல்லாம் அதுவா வரது தாங்க. எல்லாம் உங்க ஆசிர்வாதம். :)

நன்றி ஆயில்யன், என்னது தட்ட போறியா..? நல்லா யோசிச்சு தான் சொல்றீயா..? அவுக தனி ஆளு இல்லடே! பெரிய்ய ஆபிசரு. :))

சச்சின் கோப்ஸ், ரெம்ப நன்றி கோப்ஸ். 200க்கு ட்ரீட் கிடையாதா? :p

நன்றி ஜி3 அக்கா. :)

வாங்க எல்கே, கண்டிப்பா குடுத்ருவோம். :)

வீதூஷ், நன்றிங்க. ஆமா அந்த வீடியோ ஒரு வரலாற்று சான்றுங்க. :))

நன்றீங்க முத்தக்கா, சின அம்மணிக்கா, மதுரை அண்ணா. :)

வாங்க நிவி, நீங்க சொன்ன மாதிரியே எங்க வேணா ட்ரீட் வெச்சுக்கலாம். பில்லு மட்டும் உங்க அட்ரஸுக்கு அனுபிடலாம். சரியா? உங்க அன்புக்கு ரெம்ப நன்றிங்க. :))

வாங்கோ TRC சார், ஆமா, இப்போ எல்லாம் வேலை பொறுப்புகள் அதிகமாயிடுச்சு.

வாங்க மைட்டி மேவரிக். உங்க பாட்டை ரசித்தேன். உங்களுக்கு கூட KC - ஒரு பட்டப்பெயர் இருக்கறதா கேள்வி. :))

வித்தியாசமான கடவுள் said...

வாங்க மைட்டி மேவரிக். உங்க பாட்டை ரசித்தேன். உங்களுக்கு கூட KC - ஒரு பட்டப்பெயர் இருக்கறதா கேள்வி. :))

ஹிஹிஹி... இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா...