Friday, April 17, 2009

மனம் கவரும் விளம்பரங்கள்

part-1 part-2

சராசரியாக ஒரு நாளைக்கு முப்பது முதல் நாப்பது நிமிடங்கள் டிவி பார்ப்பவராக நீங்கள் இருந்தால் இந்த பதிவுக்கும் உங்களுக்கும் நிறைய தொடர்பு உண்டு. சமீப காலமாக உலா வரும் சில விளம்பரங்களை (சரி, அதில் வரும் மாடல்களை) உன்னிப்பாக கவனித்தது உண்டா?

ஒரு அம்மணி வழியில் கார் ரிப்பேர் ஆனதால் நடந்தே வந்ததாக தன் ரங்குவுடம் கூற, அந்த ரங்கு நிலைமை புரியாமல், காரை பூட்டிட்டு வந்தியா? எங்க பார்க் பண்ணிட்டு வந்தாய்? போன்ற சில்லி கேள்விகள் கேக்கிறார். காராய்யா இப்ப முக்யம்? என்பது போல அந்த அம்மணி ஒரு முறை முறைத்து விட்டு, கடனே என்று ஒரு ப்ரூ காப்பியை கலக்கி அந்தாள் கைல குடுக்க, நம்மாளு ஒரு வாய் குடித்து விட்டு ஞானம் வந்து அம்மணி காலை அமுக்குகிறார். அரை கண்ணால் இதை ரசித்த அந்த அம்மணி தன் இன்னொரு காலையும் நீட்டுகிறார்.

நல்லா இருங்கடே!
காபி அருந்துவது உடல் நலத்துக்கு கேடுன்னு டாக்டர்கள் சொன்னா கேக்றாங்களா? :)

காபில தான் இப்படி ஆப்புன்னா தேனீர்லயும் அதே கதை தான்.

அவசரக் குடுக்கையா ஒரு மலர் கொத்தும் ஒரு ஜோடி ஜிமிக்கியையும்(டிசைன் சூப்பர்)கைல வைத்துக் கொண்டு ஹேப்பி பர்த்டே சுஜி!னு ஒரு ரங்கு வழிய, யோவ்! பொறந்த நாளு அடுத்த மாசம்யா!ன்னு அந்தம்மா கடுப்பாறாங்க.

லூசுப் பய! யாராவது பொண்டாட்டி பிறந்த நாளை மறப்பாங்களா? அப்படியே மறந்தா என்ன நடக்கும்னு ஒரு நிமிஷம் நெனச்சுப் பாக்க வேணாம்.

அந்தம்மா கொஞ்சம் சாது போல. நல்லா யோசிச்சு அந்தாளுக்கு ஒரு மாசம் வல்லாரை கலந்த தேனீர் குடுக்கறாங்க. அப்புறம் என்ன, ரிசல்ட் பிரமாதமா வருது. அம்மணி கிட்ட எத்தனை டிசைன்ல எத்தனை கலர்ல புடவை இருக்குன்னு எல்லாம் நம்மாளு மைன்டுல வெச்சுக்கறாரு.

இன்னொரு விளம்பரம்:

சீக்கிரமே வீட்டுக்கு வந்த ஒரு ரங்கு பொறுப்பு சிகாமணியா மனைவிக்கு டின்னர் தயார் பண்ணி விட்டு "டின்னர் இஸ் வெய்டிங்க்"னு அம்மணிக்கு போன் போடுகிறார். வேலை அதிகம், வர லேட்டாகும்!னு பதில் வர, அப்படியே எல்லாத்தையும் பிரிஜ்ஜுல வெச்சு மூடி விட்டு "டின்னர் இஸ் ஸ்டில் வெய்டிங்க்"னு சந்தோஷப்படுகிறார். அந்த பிரிஜ் அவ்ளோ ப்ரெஷ்ஷா வெச்சு இருக்குமாம்.

இதே நீங்களா இருந்தா ஐபிஎல் மேட்சை பாத்துட்டு இருப்பீங்க, நான் வந்து தான் சமைச்சாகனும்!னு எங்க வீட்ல கமண்டு விழுந்தது. அந்த விளம்பர டைரக்டர் அட்ரஸ் தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்க. ஆட்டோ அனுப்பனும்.

காலத்துக்கு ஏற்ற மாதிரி விளம்பரங்களும் தம்மை புதுப்பித்துக் கொண்டால் தான் போட்டியை சமாளிக்க முடியும் என்பதை தெளிவாக உணர்ந்திருக்கிறார்கள் இன்றைய விளம்பர இயக்குனர்கள். ஏனெனில் மாற்றம் ஒன்று தானே மாற்றமில்லாதது! அவர்களுக்கு என் மனப்பூர்வமான பாராட்டுக்கள்.

32 comments:

கயல்விழி நடனம் said...

என்ன ஒரு நுண்ணரசியல்......

ambi said...

வாங்க கயல்,

//என்ன ஒரு நுண்ணரசியல்......//

என்ன சொல்றீங்களா?
விளம்பரங்களை சொல்றீங்களா? :))

Unknown said...

பதிவுன்னா... அம்மாஞ்சி பதிவுதான்..பேஷ்...பேஷ் ரொம்ப நன்னாருக்கு!

கயல்விழி நடனம் said...

விளம்பரங்கள விடுங்க...அந்த இயக்குனர்கள் கூட உங்க அளவுக்கு யோசிச்சி இருக்க மாட்டாங்கன்னு நினைக்கிறேன் :P

ராமலக்ஷ்மி said...

//காலத்துக்கு ஏற்ற மாதிரி//

ஆமாமாம், ரங்கு மட்டுமே வேலைக்குச் செல்வது ஒரு காலம். ஆக காலத்துக்கு ஏற்ற மாதிரி...

//மாற்றம் ஒன்று தானே மாற்றமில்லாதது!//

என்பதையும் புரிந்து கொண்டு தங்களை மாற்றிக் கொள்ளத் தயாராவதை உணர்ந்து...

//அவர்களுக்கு என் மனப்பூர்வமான பாராட்டுக்கள்.//

பாராட்டியதோடு நின்றிடாமல அந்த விளம்பரங்களை பரந்த மனதுடன் ஃபாலோ பண்ணப் போவதை அறிந்து...

நாங்களும் உங்களை மனப்பூர்வமாய் பாராட்டுகிறோம்:)!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஊருக்குப்போறமேன்னு சமையல் வகுப்பு கணவருக்கு ரெண்டு நாள் எடுத்தேன் . இன்னிக்கு கேக்கறான் பையன் .. இன்னிக்கு யார் செய்தா அப்பாவா அம்மாவா..ன்னு :))
காலம் மாறத்தான் செய்யுது.. :)

மேவி... said...

இந்த விளம்பரங்கள் அனைத்தும் புருஷன் சமுகத்தை அடிமைபடுவதற்க்காகவே உருவாக்க பட்டவை என்று நான் கூறி கொள்ளகிறேன்

G3 said...

Annae.. modha 2 ad kku neenga dhaan inspirationnu sonnangalae.. unmaiya ;))

பாலராஜன்கீதா said...

//அந்தம்மா கொஞ்சம் சாது போல. நல்லா யோசிச்சு அந்தாளுக்கு ஒரு மாசம் வல்லாரை கலந்த தேனீர் குடுக்கறாங்க.அப்புறம் என்ன, ரிசல்ட் பிரமாதமா வருது.//
தான் கலந்த தேனீரை அந்தம்மா குடிக்கமாட்டாங்களா ?
:-)

பாலராஜன்கீதா said...

//அப்படியே மறந்தா என்ன நடக்கும்னு ஒரு நிமிஷம் நெனச்சுப் பாக்க வேணாம்.//
என்ன நடந்ததுன்னு தெரியலையே. உடனே லைட் நிறுத்தப்பட்டு இருட்டாகிவிட்டதே.
:-)

manipayal said...

hallo ambi, nice to read your mail after a very long time. I am back to saudi(RIYADH) again after being in Chennai for 9 months

manipayal said...

in fact there is a famous saying - the best way to remember your wife's birthday is to forget it once.

Ramya Ramani said...

\\G3 said...

Annae.. modha 2 ad kku neenga dhaan inspirationnu sonnangalae.. unmaiya ;))\\

I second this.. unmaya anna :P

ambi said...

வாங்க ரவிஷங்கர், ரொம்ப அனுபவிச்சு பதிவை படிச்சு இருக்கீங்க போல. :p

நான் யோசிக்கவே இல்லை கயல். நடக்கறதை(அதாவது விளம்பரத்தில்) தான் சொன்னேன். :))

@ரா.ல, இதை படிச்சு பாத்தா வாழ்த்து மாதிரி தெரியலையே! :))

பாருங்க முத்தக்கா, உங்க வீட்டு ரங்கு அவ்ளோ ஸ்பீடா உங்க கைப் பக்குவத்தில் வித்யாசம தெரியாமே சமைக்க கத்துகிட்டாரு. அதை பாராட்டி ஒரு தனிப் பதிவு போடுங்க பாப்போம். :))

@மேவீ சொன்னதை அப்படியே வழி மொழிய நான் ஆசைப்பட்டாலும் உள்மனசு எச்சரிப்பதால் மீ தி கப்சிப். :p

@ஜி3 அக்கா, பத்த வெச்சியே ஜி3.

வாங்க பாலராஜன்கீதா, பின்னூட்டத்தை பாத்தா பாலராஜன் போட்ட மாதிரி தான் இருக்கு. :))

1)நியாபக மறதி அந்தாளுக்கு தானே!

2)சில விஷயங்களை பார்வையாளர் முடிவுக்கு விட்டுடனும்னு இயக்குனருக்கு தெரிஞ்சு இருக்கு.

வேற என்ன நடந்து இருக்கும்? அன்னிக்கி நைட் முழுக்க தெளிய வெச்சு தெளிய வெச்சு அர்ச்சனை கிடச்சு இருக்கும். :))

ambi said...

@மணி(பயல்) அடடே 9 மாசமா சென்னைல தான் இருந்தீங்களா? போன் நம்பர் எல்லாம் குடுத்தீங்க, சரி கிளம்பி போயிருப்பீங்கன்னு போன் பண்ண மிஸ் பண்ணிட்டேன். வெரி சாரி.
ஆமா, அத் ஒரு நல்ல பழமொழி. யாரோ அனுபவிச்சு சொல்லி இருக்காங்க. :))


ரம்யா, வாம்மா மின்னல், கரக்ட்டா இந்த பதிவுக்கு அசரிரீ மதிரி வந்துடுவியே? :p

ஆளவந்தான் said...

//
லூசுப் பய! யாராவது பொண்டாட்டி பிறந்த நாளை மறப்பாங்களா? அப்படியே மறந்தா என்ன நடக்கும்னு ஒரு நிமிஷம் நெனச்சுப் பாக்க வேணாம்.
//
Best way to remember your wife's birthday is , forget it once :))))

Swamy Srinivasan aka Kittu Mama said...

hello ambi, eppadi irukkeenga? :)
nalamaa?

kittu mama

வல்லிசிம்ஹன் said...

இதெல்லாம் இவர் பாராட்டுவாரம். அதை நாம நம்பணுமா. இதோ தங்கம்மணிக்குப் போன் போடறேன்.
ஆன அம்பி விளம்பரங்களுக்கே விளம்பரம் கொடுக்க உங்களுக்குத் தான் ஐடியா கிடைக்கும்.

அந்த ஐ லவ் யூ, டீ விளம்பரம் கூட நல்லா இருக்கும்:)

Sasirekha Ramachandran said...

kalakkal!!!

ambi said...

வருகைக்கு மிக்க நன்றி ஆளவந்தான்.

கிட்டு மாமா, நீங்க, ஷ்ரேயா குட்டி எப்படி இருக்கீங்க? :))

வல்லிம்மா, நீங்க போன் பண்ணமலேயே இந்த பதிவுக்கு ஏகப்பட்ட ஆப்பு இங்க. :))

டீ விளம்பரமா? எது?

முதல் வருகைக்கு மிக்க நன்றி சசிரேகா மேடம்.

விக்னேஷ்வரி said...

இதுல எதுவுமே உண்மைல நடக்கப் போறதில்லை. டிவியிலாவது பார்த்து ரசிங்க அம்பி.

ambi said...

//டிவியிலாவது பார்த்து ரசிங்க அம்பி//

@ விக்னேஷ்வரி

என்ன ஒரு நுண்ணரசியல்! :)))

Swamy Srinivasan aka Kittu Mama said...

naangal sowkiyam dhaan..anga eppadi? innum super'aa kalakkareenga ponga...ensoy

kittu mama

Swamy Srinivasan aka Kittu Mama said...

ippellaam orae mejic la erangittaen..oru thani video page'ae irukku..mudinja anga oru ettu podungka :)

I think I already mentioned this to you before..but paatheengalaannu therila..

link is
http://www.youtube.com/prohomestudio

kittu mama

Swamy Srinivasan aka Kittu Mama said...

sari vandhadhukku roundaa oru 25...

enna panradhu, pazakka dhosham

kittu mama

Anonymous said...

naane ipl kandula irukken.neenga sonna madhiri vilambarangala (kaala pidichu vudura maadhiri)paarthu dhhan manasa thethikkanum,
mattha padhi ipl vandhadula ore oru advantage dhhan.rengamani ipl jorulla pavakkaya ,podalangayannu theriyama saapidararu.ipl vechikittu naan thhaan dinner is waiting ,dinner is still waiting...polambitrukken.ennodu rengamani konjam usharu...mathaadhila ellam nyabagam varudho illayo,saree,bill amount mattum correct nyabagam varum.ladies evvalvu waste pannrangannu commentum varum.ambi,andha ads maadhiri appavi rengamaniyya en rengamani epppo maruvaro???btw andha ads lla vara madhiri neenga follow pannreengala???
nivi.

ambi said...

மீஜிக்ல நீங்க புலி ஆச்சே கிட்டு மாமா, ஆபிஸ்ல ஒரே வேலை, யூ டியுபு எல்லாம் தடை. லீவுல கண்டிப்பா உங்க வீட்டு பக்கம் வரேன், தப்பா எடுத்துக்காதீங்க. :))

வாங்க நிவி, ஐபிஎல் வந்து என்ன புண்யம், எல்லாம் நடு ராத்திரி வரை நடப்பாதால் எங்க வீட்ல தடா. :)

உங்க ரங்கு ரொம்ப வெவரமானவரு போல. வெரி குட். :))

வெளம்பரம் எல்லாம் பாத்து ரசிக்கலாம், வீட்ல அதை எல்லாம் பாஃலோ பண்ண முடியுமா? நல்லா கிளப்பி விடறீங்க நீங்க. :p

raj said...

hi ambi,

unga blog pramatham.

nallaave ezhuthareenga...

keep up the work...

ambi said...

Thanks for your elite comments Raj. :))

busyblogger said...

Awesome post..i smiled watching these ads..wondering what would have been my reaction 10 yrs ago...i would have thought these things really happen...HUH !!!!

Karthikeyan Ganesan said...

ippa en oora vechu kooda chick shampoo-ku lift-la nadakur oru scene vanthirukku anna....

Naan Maurai-ya vida maataaen...!!

MyFriend said...

//இதே நீங்களா இருந்தா ஐபிஎல் மேட்சை பாத்துட்டு இருப்பீங்க, நான் வந்து தான் சமைச்சாகனும்!னு எங்க வீட்ல கமண்டு விழுந்தது. அந்த விளம்பர டைரக்டர் அட்ரஸ் தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்க. ஆட்டோ அனுப்பனும்.//

:-)))))))))))))