Monday, May 25, 2009

இந்த பிளாக்கர்கள் தொல்லை தாங்க முடியலப்பா!

நானே ஒரு பிளாக்கரா இருந்தும் இப்படி ஒரு தலைப்பு வைக்க எனக்கு எப்படி துணிச்சல் வந்தது? அதான் இங்க பாயிண்டே!

டெல்லியிலிருந்து விடுமுறைக்கு பெங்களூர் வந்திறங்கிய முத்துலெட்சுமி அக்காவை பாக்க அலைகடலென கூட்டமான கூட்டம். அக்காவும் சளைக்காம பத்து மணிக்கு இங்க போண்டா, பதினோரு மணிக்கு அங்க கேசரின்னு வளச்சு வளச்சு ஒரே மீட்டிங்க். நேத்து கப்பன் பார்க்குல கூட ஒரு மாபெரும் பொதுக் கூட்டம். எனக்கு நெறைய வேலை இருந்ததால அக்கா ஆற்றும் உரையை கேட்க முடியாத அபாக்கியசாலி ஆயிட்டேன்.

எதுக்கும் முன்னாடியே ஒரு வார்த்தை சொல்லிடுவோம், இல்லாட்டி அடிப்படை உறுபினர் பதவியை பறிச்சுடுவாங்கன்னு போன் போட்டாச்சு. எதிர்முனையில் ஒரு பெண்மணி குரல் கேட்டது.

முத்துலெட்சுமி அக்கா இருக்காங்களா?

நீங்க யாருன்னு தெரிஞ்சுக்கலாமா?

இங்க தான் குழப்பமே! நெஜப் பெயரை சொல்லவா? பிளாக்கர் பெயரை சொல்லவா? சரி ரெண்டையும் சொல்லுவோம்னு சொல்லியாச்சு.

என் நிக்-நேமை கேட்டு எதிமுனையில் கொல்லுனு ஒரு சிரிப்பு சத்தம், கஷ்டப்பட்டு அவங்க சிரிப்பை அடக்கி கொண்டு,

"முத்து காலையிலேயே கிளம்பி போயிட்டாங்க, இப்ப சாப்டற நேரத்துக்கு வந்துடுவாங்க (அதானே!, அதெல்லாம் அக்கா கில்லாடி ஆச்சே!). ஏதேனும் மெசேஜ் சொல்லனுமா?"

இன்னிக்கு கப்பன் பார்ர்குல ஒரு மீட்டிங்க், அது விஷயமா தான், சரி நான் மறுபடி போன் பண்றேன்னு சொல்லி போனை வெச்சாச்சு.

சமீபத்தில் இலவச கொத்தனார் சென்னைக்கு வந்திருந்தார். நல்லா தூங்கி எழுந்திருக்கும் சாயங்கால வேளையில் அவரு எனக்கு போன் பண்ணி இருந்தார். என் தம்பி தான் போனை எடுத்தது.

யப்பா அம்பி! நான் ___ பேசறேன்பா!ன்னு அவரு நிஜப் பெயரை சொல்லி இருக்காரு.

என் தம்பி தூக்க கலக்கத்துல நீங்க யாருன்னு எனக்கு தெரியலையே!ன்னு சொல்லிட்டான்.

நான் தான்பா 'கொத்தனார்' பேசறேன்! - இலவசமும் விடறதா இல்லை.

கொத்தனாரா? நாம வீடு எதுவும் கட்டலையே?ன்னு சொல்லிட்டே போனை என்கிட்ட தந்ததால மேட்டர் அதோடு போச்சு.

என் பெயருக்கே இவ்ளோ சிரிப்பு. இதையே இப்படி நெனச்சு பாக்றேன்:

நான் தான் பரிசல்காரன் பேசறேன்,
ஜாலி ஜம்பர் பேசறேன், குசும்பன் பேசறேன்,
வெட்டிபயல் பேசறேன், கைபுள்ள பேசறேன்,
கெக்கேபிக்குணி பேசறேன், வால் பையன் பேசறேன்,
பலூன் மாமா பேசறேன், ஈர வெங்காயம் பேசறேன்,
உடன்பிறப்பு பேசறேன்.....

இன்னும் வேடிக்கையா நிறைய பிளாக்கர் பெயர்கள் டக்குனு எனக்கு நினைவுக்கு வர மாட்டேங்குது. முடிஞ்சா நீங்க யோசிச்சு பாருங்க.

ஒரு பிளாக்கர் வீட்டை சேர்ந்தவங்க இப்படி போன் கால் அட்டெண்ட் பண்ணினா எப்படி மண்டை காஞ்சு போவாங்கன்னு நெனச்சு பாத்தாலே சிரிப்பா வருதில்ல? :))

41 comments:

ரமேஷ் வைத்யா said...

:-)))

G3 said...

secondu :)

ராமலக்ஷ்மி said...

thirdu:)))!

G3 said...

அவ்வ்வ்வ்வ்வ்... நானும் ப்ளாக் மக்களுக்கு ஃபோன் பண்றப்போ என் நிஜ பேர சொன்னா எல்லாரும் பேந்த பேந்த முழிக்கறாங்க.. அவங்களுக்கு பதிலா வேற யாராவது போன் எடுத்துட்டா ஜி3னு சொன்னா இப்படி எல்லாமா பேரு வைப்பாங்கனு அசிங்கப்படுத்தறாங்க :((((

ராமலக்ஷ்மி said...

நான் முன்னே இருந்த அப்பார்மெண்டில் [க்ரவுண்ட் ஃப்ளோர் என்பதால்] என் ஃப்ளாட் நம்பர் G4 :))!

மேவி... said...

இந்த மாதிரி தொல்லை வேண்டாம்ன்னு தான் என் orginal பெயரிலையே பதிவு போடுறேன்......

ஏனென்றால் எனக்கு என் சுயமே பிடித்து இருக்கிறது.... ஒரு போலியான அடையாளம் எனக்கு தேவை இல்லை .....

இதை இன்னொரு மாதிரியும் சொல்லலாம்..... வேறு ஒரு பெயரை பற்றி யோசிக்க எனக்கு தெரியல ...

கலையரசன் said...

பதிவர்கள் செய்யிற விளம்பர ஸ்டன்டுகளை "டார்" ஆக்குவிங்கன்னு தலைப்பை பார்த்து ஏமாந்துடேன். கடைசில பார்த்தா கிச்சு கிச்சு பன்றீங்க!

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

ஒரு முறை பதிவர் பைத்தியக்காரனிடம் பேசிக் கொண்டிருந்தபோது, 'சரி பைத்தியக்காரன்' எனச் சொல்லி ஃபோனை டிஸ்கனெக்ட் செய்வதைப் பார்த்த என் மனைவி 'ஏங்க, இப்படி மரியாதையில்லாம பேசறீங்க'எனக் கேட்டார்!

ஆகாய நதி said...

:)))))))))

சகாதேவன் said...

முதலில் வானா மூனா என்று என் பெயரை சுருக்கி வைக்கலாமா என்று நினைத்தேன். என்னை வேறே மாதிரி கூப்பிட்டுவிடுவாங்களேன்னு, நான் ஐந்து சகோதரர்களில் கடைக்குட்டி என்பதால் சகாதேவன் ஆனேன்.

சென்ஷி said...

முத்துக்காவின் பேரையும் புகழையும் வெறும் சாப்பாடு மேட்டரை வைத்து மறைத்து கலாய்க்க முயலும் அம்பியை கடுமையாய் எச்சரிக்கிறோம்.. :)

சென்ஷி
அன்புத்தம்பிகள் பேரவை
ஷார்ஜா

சென்ஷி said...

//ஒரு பிளாக்கர் வீட்டை சேர்ந்தவங்க இப்படி போன் கால் அட்டெண்ட் பண்ணினா எப்படி மண்டை காஞ்சு போவாங்கன்னு நெனச்சு பாத்தாலே சிரிப்பா வருதில்ல? :))//

குடும்பத்தார் மண்டை காய்வாங்கன்னு நம்பிக்கை இல்லை. சிம்பிளா ராங் நம்பர்ன்னு கட் பண்ணிடுவாங்க. நாமதான் மண்டை காயணும் :(((

Kavinaya said...

:)))

Tech Shankar said...

எனக்கு ஆக்சிடண்ட் ஆகி ஆஸ்பத்திரியில் இருக்கும்போது வால்பையனும், கார்த்திக்கும் - எங்க வீட்டுக்கு போன் செஞ்சு - தமிழ்நெஞ்சத்துக்கு என்னாச்சுன்னு கேட்டிருக்காங்க.

வீட்டில் இருக்கிறவங்க சாரி ராங்க் நம்பர் அப்படின்னுட்டாங்க

கார்த்திக்கும், வாலும் ரொம்ப வெறுப்பாய்ட்டாங்க.

இந்த இன்சிடண்டுக்குப் பிறகுதான் தமிழ்நெஞ்சம்னா யாருன்னு வீட்டில் இருப்பவங்களுக்குத் தெரிய வந்தது.

ஒரே ஜாலிப் பதிவு. நல்லா எழுதி கீரிங்க வாத்யாரே

வெட்டிப்பயல் said...

// சென்ஷி said...
//ஒரு பிளாக்கர் வீட்டை சேர்ந்தவங்க இப்படி போன் கால் அட்டெண்ட் பண்ணினா எப்படி மண்டை காஞ்சு போவாங்கன்னு நெனச்சு பாத்தாலே சிரிப்பா வருதில்ல? :))//

குடும்பத்தார் மண்டை காய்வாங்கன்னு நம்பிக்கை இல்லை. சிம்பிளா ராங் நம்பர்ன்னு கட் பண்ணிடுவாங்க. நாமதான் மண்டை காயணும் :(((//

ரொம்ப கரெக்ட்.. சென்ஷி வீட்டுக்கு ஒரு தடவை நான் ஃபோன் பண்ணி அப்படித்தான் ஆச்சு :)

தினேஷ் said...

அம்மாஞ்சி அப்ப இனி உங்க பேர தெளிவா எல்லோருக்கும் தெரியும் படி எங்கயாவது கிறுக்கி வையுங்க...

வெட்டிப்பயல் said...

நான் புதுசா ஃபோன் பண்ணும் போது என் பேரையே சொல்ல மாட்டேன். உங்களோட விசிறி அப்படினு ஆரம்பிச்சி, எப்படி எழுதறீங்க? எங்களுக்கும் சொல்லி கொடுங்க, எப்படி இப்படி எல்லாம் யோசிக்கறீங்க. சான்சே இல்லைங்கனு எல்லாம் சொல்லி தான் பேச ஆரம்பிப்பேன். ஒரு அஞ்சி நிமிஷம் பேசிட்டு, நானும் ப்ளாகர் தான். ரொம்ப எழுதறதில்லை. வெட்டிப்பயல்ங்ற பேர்ல எழுதிட்டு இருந்தேனு சொல்லிடுவேன் :)

Anonymous said...

இப்ப‌டிதான் ந‌ம்ப‌ வாலு என்க்கு போன் செய்து நான் அருன் பேசுர‌ன்ங்க‌ என்றார், நானும் யாருன்க்க் அருண் அப்ப‌டினு கேட்ட‌தற்கு நான் தாங்க‌ வால் பைய‌ன் என்றார்.

நான் ஸ்பீக்க‌ர் போனில் இருந்ததால் அனைவ‌ரும் என்மேல் க‌வ‌ன‌த்தை திருப்பின‌ர்...அப்ப‌ர‌ம் ஒரே ஓட்ட‌ல்/கின்ட‌ல்க‌ள்தான் வேறு யாரு என்க்குதான்...

அய்யாவிற்கு வால் இருக்குனு/ வால் வைத்த‌ பைய‌ன் ஸ்னேகித‌ம்/ ம‌ற்றும் ப‌ல‌....


பீம்பாய்‍‍ ‍ ஈரோடு

ஆயில்யன் said...

முத்துக்காவின் பேரையும் புகழையும் வெறும் சாப்பாடு மேட்டரை வைத்து மறைத்து கலாய்க்க முயலும் அம்பியை மிக கடுமையாய் எச்சரிக்கிறோம்.. :)

ஆயில்யன்
அன்புத்தம்பிகள் பேரவை
தோஹா- கத்தார்

கிரி said...

நல்லவேளை எனக்கு அந்த பிரச்சனை இல்லை.. :-)))))

சென்ஷி said...

//வெட்டிப்பயல் said...

நான் புதுசா ஃபோன் பண்ணும் போது என் பேரையே சொல்ல மாட்டேன். உங்களோட விசிறி அப்படினு ஆரம்பிச்சி, எப்படி எழுதறீங்க? எங்களுக்கும் சொல்லி கொடுங்க, எப்படி இப்படி எல்லாம் யோசிக்கறீங்க. சான்சே இல்லைங்கனு எல்லாம் சொல்லி தான் பேச ஆரம்பிப்பேன். ஒரு அஞ்சி நிமிஷம் பேசிட்டு, நானும் ப்ளாகர் தான். ரொம்ப எழுதறதில்லை. வெட்டிப்பயல்ங்ற பேர்ல எழுதிட்டு இருந்தேனு சொல்லிடுவேன் :)//

ரொம்ப கரெக்ட்.. நான் முதன்முதல்ல வெட்டிப்பயலுக்கு போன் செஞ்சப்ப இப்படித்தான் பேசிட்டு இருந்தேன் :))

மெனக்கெட்டு said...

//
நான் தான் பரிசல்காரன் பேசறேன்,
ஜாலி ஜம்பர் பேசறேன், குசும்பன் பேசறேன்,
வெட்டிபயல் பேசறேன், கைபுள்ள பேசறேன்,
கெக்கேபிக்குணி பேசறேன், வால் பையன் பேசறேன்,
பலூன் மாமா பேசறேன், ஈர வெங்காயம் பேசறேன்,
உடன்பிறப்பு பேசறேன்.....

இன்னும் வேடிக்கையா நிறைய பிளாக்கர் பெயர்கள் டக்குனு எனக்கு நினைவுக்கு வர மாட்டேங்குது. முடிஞ்சா நீங்க யோசிச்சு பாருங்க.
//

ஹலோ 'மெனக்கெட்டு' பேசறேன். எப்படி இருக்கீங்க?

மெனக்கெட்டு said...

சில பதிவர் பெயர்கள்

அசடு www.asadu.blogspot.com/ ஆடுமாடு
இணைய குசும்பன்
இம்சை
இம்சை அரசி
உருப்படாதது
உளரல்கள்
கப்பி பய
கிருக்கன்ஸ்
கும்மாளம்
தெரியல!
நடைவண்டி
பிச்சைப்பாத்திரம்
பினத்தல்கள்
யளனகபக
யோசிங்க

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்லவேளை அவங்க முத்துலெட்சுமின்னு யாருமில்லன்னு போனை வைச்சிடலயே..அதுவே பெரிய விசயம்.. அவங்களுக்கெல்லாம் நான் கயல் தான்.. :)

உங்க பேரை சொல்லும்போது சிரிச்சிக்கிட்டே தான் சொன்னாங்க.. :)))

பட்டாம்பூச்சி said...

:))

வெட்டிப்பயல் said...

//ரொம்ப கரெக்ட்.. நான் முதன்முதல்ல வெட்டிப்பயலுக்கு போன் செஞ்சப்ப இப்படித்தான் பேசிட்டு இருந்தேன் :))//

Neeyavathu perai sonnapa.. Mohan Doss oru mani nerama per sollama pesi vechitaru... Vechathuku apparam thaan naan number paarthen. Blore number. Apparam kuthu mathipa Mohan Dossnu guessla phone panni pesinen :)

Anonymous said...

indha vambukkaga dhan nan Viji nnu sondha peraye use panniten... aanalum endha naai enna Viji nnu koopududhu. cha! :P
-Viji

ambi said...

வாங்க ரமேஷ் வைத்யா.

ஏதோ பிஎசெல்வி ராக்கெட் பெயர் மாதிரி இருக்கே. ஆமா, ஜி3னா என்ன?னு ஒருத்தர் என்கிட்ட தனி மெயிலுல கேட்டார். :))


ரா ல, நான் தான் ஜி3 பேசறேன்னு உங்களுக்கு ஜி3 அக்கா போன் பண்ணா செம காமடியா இருக்கும். :p

@மேவீ, போலியும் இல்ல, போண்டாவும் இல்ல, புனைப் பெயர்ன்னு இதை சொல்லனும். பாருங்க, சுஜாதா, கல்கி போன்ற பெரிய ஆளுகளே புனைபெயருல தான் எழுதி இருக்காங்க. :))

@கலையரசன், அதெல்லாம் அவ்ளோ அவசரப்பட்டு டரியல் ஆக்க முடியுமா? நானும் ஒரு பிளாக்கர் தானே! வருகைக்கு நன்றி கலை. :))

@சுந்தர், உங்க மனைவி கிட்ட செம ஆப்பு வாங்கிட்டு இப்படி லைட்டா சொன்னா எப்படி? :p
பகிர்வுக்கு நன்றி.


சிரிப்புக்கு நன்றி ஆகாய நதி.

சகாதேவன், ஓஹோ அப்படியா? சரி வானா மூனான்னா என்ன? அத சொல்லுங்க முதல்ல. :))

@சென்ஷி, ஆஹா, முத்தக்காவின் தொண்டர் படைகள் வந்துட்டாங்க பா! ஆமா, ராங்க் நம்பர்ன்னு சொல்லி கட் பண்ணிடறாங்க. :)

வாங்க கவிநயா அக்கா.

அடடே தமிழ் நெஞ்சம், உங்க அனுபவம் செம காமெடியா இருக்கு. உங்க நெஜப் பெயர் என்ன?

இப்ப உடம்பு எப்படி இருக்கு? சுகமாயிடுச்சா?ன்னு கேட்டேன். தப்ப எடுத்துக்காதீங்க. :))

ambi said...

வாங்க வெட்டி, உங்க பெயர் எல்லாம் செம காமெடி இல்ல? :))

சூரியன், என்னை பிளாக் பெயர் வெச்சு கூப்டறது இல்ல, சிம்பிளா அம்பின்னு கூப்டறாங்க.

உங்க டெக்னிக் நல்லா இருக்கே பாலாஜி. ட்ரை பண்றேன். :p

பீம்பாய், வாலு உங்களை டேமேஜ் பண்ணிட்டாரு. பீம்பாய் பீம்பாய்! டயலாக் ரொம்ப பேமஸ் ஆச்சே!. :))

நன்றி தமிழர்ஸ்.

வாங்க ஆயில்யன். ரீப்பீட்டை இப்படி கூட சொல்லலாமா? :p

ஆமா கிரி. உங்களுக்கு ப்ரச்சனை இல்லை.

அடடா, வாங்க மெனக்கெட்டு. ஒரு பெரிய ஆராய்ச்சியே பண்ணிட்டீங்க, ரொம்பவே மெனக்கெட்டு இருக்கீங்க. நன்றி பல. :))

வாங்க முத்தக்கா, ஆமா சிரிச்சதுல எனக்கும் மகிழ்ச்சியே. :))

நன்றி பட்டாம்பூச்சி.

@விஜி, இப்பவும் அனானி தானா? உன் ஜிமெயில் ஐடி வெச்சு தான் நானும் என் தம்பியும் உன்னை கூப்டுவோம்.

திவாண்ணா said...

:-))

Karthikeyan Ganesan said...

jeeeber (super) anne...!! try to come to madurai ney..!!!

Blogeswari said...

Nalla post , Ambi!

Sridhar Narayanan said...

32 கேள்விகள் - தொடரில் பங்குபெற உங்களையும் அழைத்துள்ளேன். உங்கள் சிறப்பான பதில்களோடு உங்கள் நண்பர்களையும் பங்குகொள்ள செய்யவும். நன்றி!

Saminathan said...

நல்லா சொல்றாங்கய்யா டீடெய்லு...

uthira said...

post ezhuthi romba nal achu pola iruke ena ambi paiyan kuda romba busya???????

தமிழன்-கறுப்பி... said...

:))

தமிழன்-கறுப்பி... said...

இது ஒரு மண்டை காய்கிற விசயம்தான் :))

எம்.எம்.அப்துல்லா said...

எனக்கு பிரச்சனையில்லை. நான் எஸ்கேப்பு :)

pudugaithendral said...

நியாயம்தான். :)))

Blogeswari said...

Tagged!

http://blogeswari.blogspot.com/2009/06/blog-post.html

ambi said...

வருகைக்கும், தங்கள் கருத்துக்கும் மிக்க நன்றி திவாண்ணா, கார்த்திகேயன், பிளாகேஸ்வரி, ஸ்ரீதர், ஈர வெங்காயம், தமிழன், அப்துல்லா,மற்றும் புதுகை தென்றல். :))

@பிளாகேஸ்வரி,& ஸ்ரீதர், உங்க டேக் எழுத கொஞ்சம் டைம் குடுங்க. நல்லா பழி வாங்கறீங்க பா! :))