Thursday, June 18, 2009

பேரம்

காலை பத்து மணி:

மிஸ்டர் ரவி, நாங்க 'கெக்ரான் மொக்ரான்' கம்பெனியின் இருந்து பேசறோம். போன வாரம் உங்க கூட நடந்த டிஸ்கஷன்ல நாங்க ரொம்ப இம்ரஸ் ஆயிட்டோம். உங்கள செலக்ட் பண்றதுன்னு முடிவும் பண்ணிட்டோம். ஆனா நீங்க கேக்கற சம்பளம் தான் ரொம்ப ஜாஸ்தின்னு எங்க ஹெட் பீல் பண்றார். கொஞ்சம் மறுபரிசீலனை பண்ண முடியுமா?

ரொம்ப தாங்க்ஸ் சார், ஆனா சம்பளம் நான் சொன்னது தான், ஏன்னா இப்ப என் டெக்னாலஜிக்கும், என் அனுபவத்துக்கும் நல்ல டிமாண்ட் இருக்கு. உங்க ஹெட்கிட்ட பேசிட்டு மதியத்துகுள்ள சொல்லுங்க, எனக்கு இன்னொரு ஆஃபரும் கைல இருக்கு!

ரவி போனை தூண்டித்து விட்டு மனைவியை பார்த்து, பத்து நிமிஷத்துல மறுபடி கால் பண்ணுவாங்க பாரு! என கண் சிமிட்டினான்.

சொல்லி வெச்ச மாதிரி மறுபடி கால், பேரம் ரவிக்கு சாதகமாய் படிந்தது.

நைட் டின்னருக்கு லீ மெரிடியன் போகலாமா திவ்யா?

வேணாங்க, டெலிவரி டைம், எப்போ வேணாலும் வலி வரலாம்.

ஆமா, நீ சொல்றதும் கரக்ட்டு தான்.

*************************************************************************

நன்பகல் ஒரு மணி

டாக்டர்! நார்மல் டெலிவரி ஆயிடும் இல்ல?

மிஸ்டர் ரவி, நானும் அப்படி தான் நெனச்சேன், செக் பண்ணதுல பேபி பொசிஷன் மாறி இருக்கு. சிசேரியன் பண்ணித்தான் எடுக்க முடியும். கொஞ்சம் கிரிட்டிகல் கேஸ், அதனால் சிட்டில 'கைனோ எக்ஸ்பர்ட்' சாந்தா தாயுமானவனை வரவழைக்கலாம்னு பீல் பண்றோம். அவங்க பீஸ் கொஞ்சம் ஹெவி தான். நீங்க என்ன சொல்றீங்க?

நோ பிராப்ளம் டாக்டர், ப்ளீஸ் டூ இட்.

ஓகே! இந்க பார்ம்ஸை பில் பண்ணிட்டு அம்பதாயிரம் முதல்ல டெபாசிட்டா கட்டிடுங்க, மீதி டெலிவரிக்கு அப்புறமா சொல்றோம்.

ரிசப்ஷன் நோக்கி ஓடிய ரவியை பார்த்தபடியே டாக்டர், "நர்ஸ், ஆப்ரேஷன் தியேட்டர் ரெடி பண்ணுங்க!"

சாந்தா மேடத்துக்கும் போன் பண்ணிடவா டாக்டர்?

வேணாம், இது நார்மல் கேஸ் தான், இருந்தாலும் சிசேரியன் பண்ணிடுவோம், நானே மேனேஜ் பண்ணிடுவேன்! என்ன புரிஞ்சதா?
புரிஞ்சது டாக்டர்.
***************************************************************************
மாலை ஐந்து மணி

மணி, என் கார்ல என்ன ப்ராப்ளம்னு கொஞ்சம் பாருப்பா! அடிக்கடி மக்கர் பண்ணுது.

அடடே வாங்க டாக்டர், போன வாரம் தானே ஹாரன் பிராப்ளம்னு வந்தீங்க? இந்த கார் வாங்கி எவ்ளோ வருஷம் இருக்கும் டாக்டர்?

அது ஆச்சு, மூனு வருஷம்.

ஒரு நல்ல பார்ட்டி கைவசம் இருக்கு, ஒன்னேமுக்காலுக்கு ஆரம்பிச்சு ஒன்னரைக்காவது முடிச்சிடலாம். உங்களுக்கு ஒகேன்னா சொல்லுங்க, நாளைக்கே முடிச்சிடலாம்.

ம்ம்ம், சரி முடிச்சுடு, எத்தனை நாளைக்கு இப்படி ரிப்பேர் பண்ணிட்டு இருக்கறது?

ஒகே டாக்டர், நீங்க கிளம்புங்க, நாளை காலை பணத்தோட நான் உங்க வீட்டுக்கு வரேன்.

"டேய் சங்கர், டாக்டரை நம்ம வண்டில கொண்டு போய் அவங்க வீட்ல விட்டுட்டு வா".

டாக்டரை வழியனுப்பிவிட்டு, தன் கைபேசியை உயிர்பித்தான் மணி.

ஹலோ! ராஜு சார், செம கன்டீஷன்ல ஒரு வண்டி வந்ருக்கு. ரெண்டேமுக்கால் சொல்றாங்க. எப்டியும் பேசி ரெண்டேகாலுக்கு முடிச்சிடலாம். இன்னொரு பார்ட்டி வேற ரெண்டரை தர ரெடியா இருக்காங்க. நீங்க நமக்கு நல்லா பழக்கம். என்ன சொல்றீங்க?

பேரம் மணிக்கு சாதகமாய் படிந்தது.

****************************************************************************
இரவு எட்டு மணி

ஐயா, உங்களை நம்பி தான் வந்ருக்கேன், நீங்க தான் அம்மாகிட்ட சொல்லி என் புள்ளைக்கு அவங்க ஸ்கூலுல எடம் வாங்கி தரனும்.

இதோ பாரு மணி! என் கம்பனி வேற, அம்மா ஸ்கூல் நிர்வாகம் வேற. இருந்தாலும் நீ தான் எங்க வண்டி எல்லாத்துக்கும் மெக்கானிக். அதனால் தான் உனக்கு மட்டும் ஐம்பதாயிரம்னு சொல்றாங்க. மத்தவங்களுக்கு ஒரு லட்சம். தெரியுமா? சரி விடு, இப்பெல்லாம் கார்பரேஷன் ஸ்கூல்ல கூட நல்லா சொல்லி தராங்களாமே! பேசாம அங்க சேர்த்து விட்டுடு. என்ன பத்மா, நான் சொல்றது சரி தானே?

இல்லீங்கய்யா. நம்ம அம்மா ஸ்கூல் தான் டாப்!னு எல்லாரும் சொல்றாங்க. நான் நாளை மதியம் பணத்தோட வந்திடறேன்.

போயிட்டு வரேம்மா! மணி விடை பெற்றான்.

என்ன சரி தானே பத்மா, ஏதோ நம்மால முடிஞ்ச கல்வி சேவை! என கண் சிமிட்டினார் அந்த 'கெக்ரான் மொக்ரான்' கம்பெனியின் ஹெட்.

************************************************************************
இது 'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது.

27 comments:

ambi said...

காலை நேர அலுவலக பயணத்தின் போது ஒரு அலைபேசி உரையாடலை (ஒட்டு) கேட்டதில் உருவான கதை இது. :))

Anonymous said...

பட்டர்பிளை எபெக்ட் மாதிரி இல்ல இருக்கு. :)நல்லா இருக்கு

rapp said...

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.......................32கேள்வி தொடரிலிருந்து தப்பிப்பதற்காக தலைமறைவாக இருந்த அம்பி அண்ணனுக்கு கடும் கண்டனங்களை பதிஞ்சிக்கிறேன்:):):)

rapp said...

ha ha ha super:):):)

// பட்டர்பிளை எபெக்ட் மாதிரி இல்ல இருக்கு. //

:):):)

G3 said...

// சின்ன அம்மிணி said...

பட்டர்பிளை எபெக்ட் மாதிரி இல்ல இருக்கு. :)//

Repeatae :))))

Aaga.. kelambina lockerukkae panam return poyirucha ;)))

Geetha Sambasivam said...

athukkullee 5 comments???? eppadi?? ezuthumpoothu pakkathileye irunthanga???

கைப்புள்ள said...

செம கதை. ஒன்னோட ஒன்னு பின்னிஞ் பிணைஞ்சு பெடலெடுத்துருக்கு :)

32 போஸ்ட் எப்போ போடப் போறீங்க?

(ஏதோ நம்மால முடிஞ்சது? :)) )

Unknown said...

அருமையான கதை.

இன்றைய வாழ்க்கையை அருமையா பிரதிபலிக்கிறது.

வாழ்த்துகள்

Anonymous said...

really nice one.

சென்ஷி said...

வாழ்க்கை ஒரு வட்டம்டா-ன்னு இளைய தளபதி விஜய் பேசினத கதையா மாத்திட்டீங்க.. கலக்கல் :))

Blogeswari said...

Super-a ezhudi irukka Ambi [ottukekkara pazhakkam pogaliya innum?]

கபிலன் said...

நல்லா இருக்குங்க அம்மாஞ்சி!

sriram said...

ரவியை தவிர மற்றவர்கள் செய்தது ஏமாற்று வேலை / ஊழல் (school seat க்கு காசு வாங்குவது ஊழல் என்னை பொறுத்த வரை). ரவி செய்தது பேரம், that was a straight forward negotiation. எனக்கு நீங்கள் அனைவரையுமே ஒரே தட்டில் வைத்து போல் தெரிந்தது. அப்படி இருந்தால் அது தவறு என்பது என் கருத்து.
என்றும் அன்புடன்
ஸ்ரீராம் Boston USA

WA said...

Kadhai sooper o sooper

குறை ஒன்றும் இல்லை !!! said...

நல்லா இருக்குண்ணே ஆனா ஒரு சின்ன கேள்வி.. இப்போ நம்ம இருக்கிற நிலையில சம்பளத்த டிமாண்ட் செய்ய முடியுமா?

Anonymous said...

ambi,kadhai unmai nilayai pradhipalikirathu.all the best.
nivi.

uthira said...

vazhakam pola kalakiteenga ambi. china vayasula appa amma solli kudupanga yarayum ematha kudathu, aduthavanga kasuku asai pada kudathunu apadi aduthavanoda 10 kasuku asa patina namma kitendhu doublea selvahumnu solluvanga

ana ipo ithu than vazhkai murai nu ahi pochu ana periyavanga sona padi onu nadakuthu kasu varathum theriyala poharthum theriyala

Anonymous said...

நல்லா இருக்கு.

மெளலி (மதுரையம்பதி) said...

நல்லாயிருக்குங்க!...பல நேரங்களில் நாம் செய்வது ஒரு சுழற்சியா இது போல நடந்துக்கிட்டுத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

Anonymous said...

ksflkfdlkds'ffkjfkjdsf';dsf';f'fflkfldskdslkfdsfdsfkf'kf'fds'f;dsf';f;dsjfd's;fs;fjfjdsf;f;kdsf;dsfskfjds';ffs;kf;fs;f;f;flfjfjfdfkf;f'dskfjfdsffdsf;fds;f;fjdsfj;fdskfds;fs;dfs;fs;fff

Karthikeyan Ganesan said...

Nalla irkku thalaiva...
yaaraavathu ithai paarthu, thirunthina sarithaann....

Thanks,
Karthikeyan Ganesan
(kuttikarthi)

வல்லிசிம்ஹன் said...

ரொம்ப நல்ல முயற்சி அம்பி. வினை தினை கதை இவ்வளவு சீக்கிரம்
நடக்கும் என்று யாரும் நினைக்க மாட்டார்கல். பிரமாதமாக அமைந்திருக்கிறது,. வாழ்த்துகள்.

ambi said...

வாங்க சின்ன அம்மணி, பட்டர்பிஃளை எபக்ட் மாதிரியா? அட ஆமாம், நீங்க சொன்ன பிறகு தான் எனக்கு தெரியுது. :))

ராப், 32 கேள்விகளுக்கு பதில் குடுக்கறேன், ஹிஹி, கொஞ்சம் டைம் குடுங்க மேடம். :)

வாங்க ஜி3, பொட்டிகுள்ள போனாலும் மறுபடி பணம் வெளிய வந்துரும். :))

கீதா Mஏடம், இல்ல, அவங்க தான் என் பதிவையே பப்ளிஷ் செய்வாங்க. :p

நன்னி கைப்புள்ள, இப்ப கை எப்படி இருக்கு? சந்தடி சாக்குல கொளுத்தி போட்டாச்சா? :)

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்னி என் பக்கம். நாங்களும் ஒரே கொழப்பத்துல தான் இருக்கோம். :))

நன்றி அனானி (பெயரை போடுங்க அண்ணே/அக்கா).

சென்ஷி, சைலன்ஸ், அவரை ஏன் இழுக்கறீங்க, பாவம் அவரு, விட்ருங்க. :)

நன்றி பிளாக் அக்கா, ஒட்டு கேக்கற பழக்கம் எல்லாம் அவ்ளோ சீக்ரமா போகாது. :p

ambi said...

மிக்க நன்றி கபிலன்.

@பாஸ்டன் ஸ்ரீராம், ரொம்ப நுணுக்கமா சொல்லி இருக்கீங்க.

ரவி செய்தது ஏமாத்து வேலை இல்லைனாலும், சரியான செயல்னு சொல்ல முடியாதே! சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமா பயன்படுத்திகிறாரு.

மேலும் இதுல யாரு செய்தது சரி, தவறு என்ற முடிவுக்கு நான் வர விரும்பலை. வாழ்க்கை இப்படி தான் நதி ஓட்டம் போல இருக்கும்னு காட்டி இருக்கேன். முடிவு வாசிக்கறவங்க கிட்டயே விட்டுட்டேன். (இந்த விளக்கம் எனக்கே கொஞ்சம் ஒவரா தெரியுது, கண்டுக்காதீங்க)

ambi said...

நன்றீ WA. :)

குறையொன்றும் இல்லை, நன்றி, சரியா பாயிண்டை புடுச்சீங்க. இந்த கதை எழுதி பத்ரமா டிராப்ட்டுல போட்டு வெச்சிருந்த போது, மார்கெட் நல்லா இருந்தது. என்ன கொடுமை சரவணன்? :))

தகவலுக்கு நன்றி தமிழினி.

பாராட்டுக்கு நன்றி நிவி. :)

அடடா! நீங்க இவ்ளோ நல்லவங்களா உத்ரா? (சும்மா லுலுவாயிக்கு). :p

ஆமா, நானும் பாட்டி கிட்ட நீதிக் கதைகள் கேட்டு தான் வளந்தேன். :))

நன்றீ ஷீரடி சதன். :)

மதுரை அண்ணா, அதே! அதே! சபாபதே! :)

நன்றி கார்த்திகேயன், தலைவா எல்லாம் வேணாமே! ஆமா யாரு அந்த 'குட்டி'கார்த்தி? :))

பாராட்டுக்கு ரொம்ப நன்றி வல்லிம்மா. :)

rapp said...

அதெல்லாம் கெடயாது, நீங்க நைசா வேற எதுக்காச்சும் போய்டுவீங்க. இந்த போஸ்ட் போட்டுட்டு அடுத்த போஸ்டுக்கு போங்க:):):)

மங்களூர் சிவா said...

ஓ இதுக்கு பேருதான் பண சுளற்'ச்சீ'யா??