அலுவலகத்தில் நம்ம தோஸ்து ஒருத்தர் பிசினஸ் ட்ரிப்பா சிங்கப்பூர் போயிட்டு வந்தார். அங்க சிலப்பல ஐட்டங்கள் எல்லாம் இந்தியாவை விட சல்லிசா இருக்குன்னு ஏற்கனவே தெரிஞ்சுகிட்ட அவரின் தோஸ்த்துக்கள் நைலான் ஜட்டி முதல் அகாய் டிவி வரைக்கும் ஒரு மளிகை கடை லிஸ்ட் போட்டு குடுத்து விட்ருந்தாங்களாம். நம்மாளும் உங்களுக்கு செய்யாம யாருக்கு செய்ய போறேன்?ன்னு எல்லாத்துக்கும் மண்டைய ஆட்டிட்டு ஷாப்பிங்க பண்ணிட்டு கர்ம வீரரா பெங்களூர் விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தார்.
சிங்கப்பூர் விதிகள்படி இருபத்து அஞ்சாயிரம் ரூபாய்க்கு அதிகமான பொருளை அங்கிருந்து கொண்டு வந்தா சுங்க வரி கட்டனுமாமே! கஸ்டம்ஸ்காரங்க இவரு பொட்டிய ஒப்பன் பண்ணி
ஜட்டி - பத்து
பாடி ஸ்ப்ரே - எட்டு
செண்ட் பாட்டில் - பத்து
ஜானி வாக்கர் - நாலு பாட்டில்,
அகாய் டிவி - ஒன்னுன்னு லிஸ்ட்டை படிச்சிட்டு எல்லாத்தையும் ஒக்கே பண்ணிட்டு, டிவிய மட்டும் கப்புனு புடிச்சிட்டாங்களாம். இந்திய ரேட்படி அந்த எல்சிடி டிவியின் விலை முப்பத்தி ரெண்டாயிரம். அதனால் சைடுல ஒரு அஞ்சாயிரத்தை தள்ளிட்டு போயிட்டே இருன்னு அந்த ஆபிசர் பல்ல காட்டி இருக்காரு.
நம்மாளு சரியான ரூல்ஸ் ராமானுஜம்.
சிங்கப்பூர் ரேட்படி பாத்தா இருப்பத்தி ரெண்டாயிரம் தான் வருது. நான் எதுக்குயா உனக்கு மொய் எழுதனும்?னு சவுண்டு விட்ருக்காரு. சரி, இந்தாளு கிட்ட நம்ம ஜம்பம் பலிக்காதுன்னு உணர்ந்த ஆபிசர் ரேட்டை குறைச்சு ரெண்டாயிரத்துக்கு இறங்கி வந்து, சம்மர் ஆஃபர் குடுத்து பாத்ருக்காரு. அப்படியும் நம்மாளு மசியல. கடைசில ஆயிரம் ரூபாய்க்கு மேட்டர் சுமூகமா முடிஞ்சதாம்.
இல்ல, தெரியாம தான் கேக்கறேன், தாசில்தார், போக்குவரத்து துறை ஆபிசர்களை எல்லாம் நாலாயிரம் வாங்கினாங்க, மூவாயிரம் வாங்கினாங்கன்னு கைது செஞ்சு அவரு கர்ச்சீப்பால் முகத்தை மூடிக்கினு போறதை சன் டிவில காட்றாங்களே, இந்த சுங்கத் துறை ஆட்கள் இப்படி புகுந்து விளையாடறாங்களே, இவங்க மட்டும் என்ன உசத்தி? ஒரு ஆளை கூட டச் பண்ணினதா ஒரு நியுஸும் வர மாட்டேங்குது? எப்படி?
இந்த அளவு தான் கொண்டு வரலாம், இவ்ளோ தான் இதுக்கு சுங்க வரின்னு ஒரு வெளிப்படையான அறிவிப்புகள் எதுவுமே கண்ணுல காட்ட மாட்டேங்கறாங்களே? ஏன்?
ம்ம், இந்தியா ஒரு ஜனநாயக நாடுன்னு நினைக்கறச்ச எனக்கு சில சமயம் சிரிப்பு வருவதுண்டு. உங்களுக்கு எப்படி? இதே மாதிரி கஸ்டம்ஸ்ல எக்குதப்பா மாட்டின அனுபவம் உண்டா? கூச்சப்படாம கொஞ்சம் சொல்லுங்களேன் பாப்போம்.
பி.கு: நைலான் ஐட்டங்கள் எனக்கு அல்ர்ஜி, எனவே நான் அவனில்லை. :)
44 comments:
சுங்க துறை அதிகாரிகள்னா அப்படி தான் தல.
அவங்க எந்த விதிமுறைகள் படி இயங்குறாங்க அப்படின்னு அவங்களுகே தெரியாது.
//இதே மாதிரி கஸ்டம்ஸ்ல எக்குதப்பா மாட்டின அனுபவம் உண்டா? கூச்சப்படாம கொஞ்சம் சொல்லுங்களேன் பாப்போம்.//
வெளிநாட்டிலே இருந்து எதுவும் வாங்கிட்டே வரக் கூடாது. அப்போ கஸ்டம்ஸிலே ஏன் மாட்டிக்கிறோம்? ஜாலியாக் கையை வீசிட்டு க்ரீன் சானலிலே வெளியே வரலாம்! எங்க அனுபவம் அது தான். நாங்க சுதேசி பிரியர்கள்.
விதேசிப்பொருட்களைப் பயன்படுத்த மாட்டோம்.
சாக்லேட்டும் தான்!
//இந்த அளவு தான் கொண்டு வரலாம், இவ்ளோ தான் இதுக்கு சுங்க வரின்னு ஒரு வெளிப்படையான அறிவிப்புகள் எதுவுமே கண்ணுல காட்ட மாட்டேங்கறாங்களே? ஏன்?
//
நல்ல கேள்விங்கோ....
//இந்த அளவு தான் கொண்டு வரலாம், இவ்ளோ தான் இதுக்கு சுங்க வரின்னு ஒரு வெளிப்படையான அறிவிப்புகள் எதுவுமே கண்ணுல காட்ட மாட்டேங்கறாங்களே? ஏன்?
//
நல்ல கேள்விங்கோ....
இந்திய அரசந்கத்தில் சேருவது வரை தமிழன்...பிறகு இந்தியன்....
இந்தியன் என்பது புனித காலை....யாரை வேன்டுமானாலும் முட்டலாம்
சுங்கத் துறையிலுள்ளவர்களும் மாட்டிக் கொண்டு செய்தி வந்திருக்கின்றன; தொடர்ந்து வரவும் செய்கின்றன.
எவ்வளவு சுங்க வரி, எவ்வளவு exemption என்பதற்கெல்லாம் தெளிவாக notifications இருக்கின்றன.
நான் இந்தத் துறையில் (customs clearance) இருந்தாலும் personal baggage clearanceல் அனுபவமில்லை :) Commercial Cargoes clearance requirement - சென்னையிலோ அல்லது பெங்களூரிலோ - இருந்தால் என்னைத் தொடர்பு கொள்ளலாம் :)
கிழம் அடிக்கடி சொல்லும்...
உயிர் தமிழுக்கு உடல் மண்னுக்கு....
எனக்கு தெரிந்து மயிரைக்கூட கொடுத்து பார்த்ததில்லை
//இந்திய ரேட்படி அந்த எல்சிடி டிவியின் விலை முப்பத்தி ரெண்டாயிரம். அதனால் சைடுல ஒரு அஞ்சாயிரத்தை தள்ளிட்டு போயிட்டே இருன்னு அந்த ஆபிசர் பல்ல காட்டி இருக்காரு.//
முதலில் மாட்டியிருக்கேன் சொல்லிட்டு துவங்கலாம்:(
சுங்க இலாகா (கஸ்டம்ஸ்) ஒரு மாபியா குழு மாதிரி.ஸ்கேன் செய்பவர் கண் சிமிட்டலில் நின்று கொண்டிருப்பவர் பெட்டியை தனியாக இறக்குன்னு சொல்லி ஜட்டி,பிரான்னு கலச்செடுத்து ஒரு வழி செஞ்சுட்டு அடைப்பானில் சொல்லிய விசயத்துக்கு வந்து விடுவார்.பயணக் களைப்பு,ஆளை விட்டா போதுமடா சாமின்னு தப்பிக்க நினைச்சா அடுத்து பேரம் ஸ்டார்ட்.பேரம் சரிப்பட்டு வந்தா ஸ்கேன் பண்றவன்,நிற்கிறவன் இரண்டு பேரும் காசு வாங்க மாட்டானுங்க.அதுக்குன்னு ஒரு போலிஸ் தொப்பிக்காரன் இருப்பான்.அவன் ஒரு சின்ன அறைக்கு கொண்டு போய் காசு வாங்கிட்டு அவன் சிக்னல் கொடுத்தா மட்டுமே பெட்டி வெளியே போகும்.
இதுல ஒரு கொடுமை என்னன்னா மேலதிகாரியாகப் பணி புரியும் பெண்ணிடம் புகார் செய்தும் பார்த்து கொடுத்துட்டுப் போப்பா அறிவுரை.
(விட்ட டாலரை நினச்சு இப்ப எனக்கு அழுகையா வருது)
//ஜாலியாக் கையை வீசிட்டு க்ரீன் சானலிலே வெளியே வரலாம்! எங்க அனுபவம் அது தான். //
நாங்களும் க்ரீன் சேனல்காரங்கதான்.
(ஒரு வேளை மூஞ்சில எழுதி ஒட்டியிருக்குதோ எவ்வளவு அடிச்சாலும் தேறுவான்னு:)
//நம்மாளு சரியான ரூல்ஸ் ராமானுஜம்.//
நம்மாளு ஒருத்தரும் ரூல்ஸ் ராமானுஜம் பேசியிருக்காரு.ரேட் டபுளாயிடுச்சு:(
//நாங்களும் க்ரீன் சேனல்காரங்கதான்.
(ஒரு வேளை மூஞ்சில எழுதி ஒட்டியிருக்குதோ எவ்வளவு அடிச்சாலும் தேறுவான்னு:)//
எதுவும் கொண்டு வந்துட்டு அதை டிக்ளேர் செய்யலைனா மாட்டிக்கத் தான் மாட்டிக்கணும், அதான் எதுவுமே கொண்டு வரக் கூடாது. அப்புறம் எப்படி மூஞ்சில எழுதி ஒட்டி இருக்கும்?
ஆனால் இதே யு.எஸ்.ஸில் கஸ்டம்ஸில் பிரிச்சுத் தான் பார்ப்பாங்க. நாம விளக்கம் கொடுக்கணும். பொருட்களின் பயன்பாட்டைப் பத்தி.
போனமுறை நாங்க போனப்போ ஷிகாகோவில் கஸ்டம்ஸில் நாங்க கொண்டு போன பொருட்களைச் சோதனை செய்யலை. இத்தனைக்கும் முருங்கைக் காய், மாங்காய் னு தான் கொண்டு போனோம். ஒண்ணும் சொல்லலை. அதே பாகேஜ் மெம்பிஸில் போய் இறங்கியதும், முருங்கையாவது, மாங்காயாவது? எதுவும் இல்லை! மற்ற பொருட்களைத் தலைகீழாப் புரட்டிப் போட்டுப் பெட்டிப் பூட்டை உடைச்சுச் சோதனை பண்ணிட்டு, ஒரு அறிவிப்புக் கடிதம் கொடுத்திருந்தாங்க. பெட்டியில் இந்தப் பொருட்கள் இருந்தது, ஏதும் காணலைனால் எங்களைத் தொடர்பு கொள்ளுங்க, விலை உயர்ந்த பொருள் என்றால் நஷ்ட ஈடு கொடுப்போம்னு.
சென்னை கஸ்டம்ஸில் நாம் கொண்டு போகும் பெட்டியில் விலை உயர்ந்த துணிகள் இருப்பது ஸ்கானில் தெரிஞ்சால் பெட்டி உங்களுக்குக் கிடைக்காது. இதுவும் எங்க சொந்த அனுபவம். கிட்டத் தட்ட 1-50 லட்சம் பெறுமான பொருட்களோடு கூடிய பெட்டி, பட்டுப் புடவைகள் மட்டுமே 8 அல்லது 10 இருக்கும். போயித்து, போயே போச்சு, இட்ஸ் கான்! கிடைச்ச நஷ்ட ஈடு 25,000 ரூ மட்டுமே.
மும்பை கஸ்டம்ஸில் மாட்டியிருக்கிறேன்..2 laptop கொண்டு வந்தப்ப;
அதுல 1 clientடோட laptop, என்னோடது இல்ல - அடுத்த தடவை போறப்ப அவங்ககிட்டயே திரும்பக்குடுத்திடுவேன்னு சொன்னாலும் கேட்கமாட்டேன்னுட்டாங்க.
2ல மதிப்பு குறைவானதோட விலையை வச்சு கணக்க்குப்பாத்து, 4000 ரூபாய் அபராதம் குடுன்னாங்க.அதுவரைக்கும் நியாயமான officersன்னு நினைச்சேன்
கொஞ்சம் பேரம் பேசினப்ப, இதுக்கு பில் வேணான்னு சொன்னா 50% தள்ளுபடின்னு ’offer'குடுத்தாங்க.அப்புறம்தான் தெரிஞ்சது, bagஐ scan பண்றவர்,பில் போடறவர்ன்னு அங்க எல்லாருமே கூட்டுக்களவாணிகளாத்தான் இருந்தாங்க....
ஒவ்வொரு தடவையும் இந்த கொடுமைய அனுபவிக்கிறது தான் .எனக்கு திருவனத்தபுரம் airport கடைசியாக போகும் போது என் கையில் நகைகள் இருந்தது .என்னை தவிர எல்லாத்தையும் ச்கான்னில் போட்டான்
நீ அவட போய்க்கோ (மலையாளம்) என்று ஒரு பொம்பளைட்ட அனுப்பினான் .
அவ என்னிடம் எந்தா நின்னடுத்து சொர்ணம் உண்டா ?
அது ஒன்றும் இல்லை
அவ:;; இல்ல bag ஐ திரக்கு என்று சரியாக நகை இருந்த bag ஐ திறந்தாள் .நீ சொர்ணம் இல்ல என்று பரஞ்சு இது எங்கனையானு .
நான் இது தங்கம் இல்ல கவரிங்கானு .
அவ :அதே
நான் : சொர்ணம் விக்கின வில்லையில் வாங்க்கான் பற்றும் .அவ:நீ ஓரப்பிச்ச பறையினது (நான் என்ன இவள்ல்ட்ட சம்மந்தமா பேசுறேன் ஓரப்பிக்க )
நான் நீ நோக்கிகோ எந்தா என்று
நான் கொண்டு போனது கவரிங் நகைகள் கல் வைத்து சற்று விலை அதிகம் தங்கத்தை விட அதிகமாக வெட்டும் .
ஐர்போர்டில் மணி இரவு 2 .நான் எல்லா வற்றையும் எடுத்து கடை போல் அவள் முனால் வைத்து விட்டேன் .என் தரப்பில் உண்மை இருந்ததால் விட்டுட்டுடா .ஐர்போர்டில் கொஞ்ச அநியாமா நடக்குது .
அவர்கள் கேட்பதைக் கொடுத்துத்தான் ஆகவேண்டும்.
இல்லாவிட்டால்..!
"விமான நிலையத்தில் சிங்கப்பூரில் இருந்து வந்த வாலிபர் பிடிபட்டார் !. "
என்று கொட்டை எழுத்தில் பேப்பரில் நியூஸ் வந்து நாறிவிடும்.
தேவையா இது?
//எதுவும் கொண்டு வந்துட்டு அதை டிக்ளேர் செய்யலைனா மாட்டிக்கத் தான் மாட்டிக்கணும், அதான் எதுவுமே கொண்டு வரக் கூடாது. அப்புறம் எப்படி மூஞ்சில எழுதி ஒட்டி இருக்கும்?//
நான் கொண்டு சென்றது ஒரே ஒரு புதிய சோனி விடியோ கேமிரா.அதையும் திரும்ப கொண்டு செல்கிறேன் என்றேன்.
அப்படியும் கொடுத்துட்டுப் போப்பா சொன்னால் நிச்சயம் மூஞ்சிதான்:)
ஏதாவது கொண்டு வந்தாதானே..
ஆளைவிடு.
நாங்க இது வரை எதற்கும் மாட்டிக்கவில்லை.
என் பட்டு புடவைன்னு பார்த்தால் ரெண்டு எண்ணத்துக்கு மேல எடுத்துக் கொள்வதில்லை.
அம்பி யாருப்பா அவரு??????????????????????????????
//இந்த அளவு தான் கொண்டு வரலாம், இவ்ளோ தான் இதுக்கு சுங்க வரின்னு ஒரு வெளிப்படையான அறிவிப்புகள் எதுவுமே கண்ணுல காட்ட மாட்டேங்கறாங்களே? ஏன்?//
அவங்க உங்க கண்ல காட்டலைன்னா என்ன, உங்களுக்கு தேவைன்னா நீங்க தேட வேண்டியது தானே ?
இந்தாங்கப்பு - எல்லாமே இந்த லிங்க்ல இருக்கு. கூகுல்ல கண்டுபிடிச்சேன் - தேடறதுக்கு ஒரு நொடி கூட ஆகல.
Click me
நம்மாளுங்க ஒரு செயல செய்றதுக்கு முன்னாலே, அதப்பத்தி ஒரு வெவரம் கூட தெரிஞ்சிக்காம எல்லாம் முடிஞ்ச பொறவு (அவங்களுக்கு சாதகமா வராத பட்சத்தில்) பொலம்புறதே வேலையா போச்சு. படிச்சவங்களே இப்படி இருக்கிறப்போ படிக்கதவங்கள பத்தி சொல்லவேவேணாம்.
அட இது பரவாயில்லைங்க. ஒரு மாதம் முன்னாடி ஊருக்குப் போன என் மனைவி செக்-இன் பேகேஜில் இரண்டு டிஜிடல் போட்டோ கீசெயின் வச்சிருந்தாங்க. பெட்டியை பூட்டக் கூடாதாமே. அதனால நாங்க பூட்டாம இந்த கீசெயினையும் அதோட யுஎஸ்பி கேபிளையும் பெட்டிக்குள்ள மூலையில போட்டு வச்சிருந்தோம். சென்னை போய் இறங்கினா பெட்டி வருது. பெட்டிக்குள்ள இருக்கிற டிஜிடல் ஐட்டம் எதுவும் காணோம். அப்படியே லவுட்டிட்டாங்க.
யாரைப் போய் கேக்குறது? அதனால மக்கள்ஸ்... பெரிய எலட்ரானிக் ஐட்டம் கொண்டுட்டு வர்றதுன்னா செக்-இன்ல போடாதீங்க. போட்டாலும் பெட்டிக்கு பூட்டுப் போட்டுடுங்க மறக்காம. பூட்டுப் போட்டாலும் பெட்டி உருப்படியா வந்து சேந்துரும்னு ‘அதீத’ நம்பிக்கை வைக்காதீங்க. பெட்டியை உடைச்சிக் கூட பாத்திருவாங்களாம் பல சமயம்.
நான் டிவி கொண்டு வரும் போது 5500 கட்டிட்டு தான் எடுத்துட்டு வந்தேன். ஆனா பில் போட்டு கொடுத்தாங்க......
Check it out here
//பெட்டியை பூட்டக் கூடாதாமே. //
you can lock with TSA approved locks
check this
பல தடவை வந்து போயிட்டோம். திறந்து பார்த்த அனுபவம் உண்டே தவிர நீங்க சொன்னது போல் ஏதும் இல்லை.
இது போன்று பொருட்கள் வாங்கி வரும் போது முறையாக அறிவித்து வந்தால் பிரச்சனை ஏதும் வராது என்பது என் எண்ணம் (இது வரை)
நான் இது வரை சென்னை(4), சார்ஜா, துபாய் (2), சூடான் (2) இரண்டு மடிக்கணினி வுடன் சென்று இருக்கிறேன். நிறுத்தியது கூட இல்லை.
லண்டனில் இருந்து சென்ற நண்பரிடம்
சென்னை விமான நிலையத்தில் ,சொந்த பாவிப்புக்காக, அவர் கொண்டு சென்ற வீடியோ கமெராவை ,கொண்டு செல்ல முடியாதென பறித்து வைத்து ,பின் அவரிடம் 20 ஸ்ரேர்லிங் பவுண் பெற்றுக் கொண்டே கொடுத்ததாக கூறினார்.
கைக்குழந்தையுடன் அதிகாலையில் இறங்கிய அந்தக் குடும்பத்தை ஒரு மணி நேரத்துக்கு மேல் ,காசு பறிக்க
அலைக்கழித்துள்ளார்கள்.
ஏன் மாட்டாம...
சமீபத்தில் 1985லே (வெளிநாடு போன பிறகு முதல் வருகை இந்தியாவுக்கு) பம்பாயில் வந்து இறங்கினோம். பெட்டியில் 39 புடவைகள். அலார்ம் க்ளாக், வாட்ச், டின்னர் செட் இப்படி..... கேட்டதெல்லாம் வாரிக்கிட்டு வந்துருந்தோம். (உறவுகளிடமிருந்து எதுக்கும் பணம் பெயரலைன்றது வேற விஷயம்)
15 ஆயிரத்துலே பேரம் ஆரம்பிச்சு...... கடைசியில் 5 ஆயிரம் கட்டுனோம்.
இதுலே இன்னொரு வயித்தெரிச்சல் என்னென்னா.... சிங்கப்பூரில் ஓவர் வெயிட்டுன்னு (பெட்டிங்கதான்ன்னு சொன்னா நம்புங்கப்பா)அதுக்கே 230 சிங்கை டாலர் தீட்டிட்டான்.
அதுக்கப்புறம்............... யார் என்ன கேட்டாலும்(நீங்க வாங்கியாங்க பணம் கொடுத்துடறேன் இன்ன பிற) வலப்புறம் டு இடப்புறம் தலையை ஆட்டுறதுதான்.
//போட்டாலும் பெட்டிக்கு பூட்டுப் போட்டுடுங்க மறக்காம. பூட்டுப் போட்டாலும் பெட்டி உருப்படியா வந்து சேந்துரும்னு ‘அதீத’ நம்பிக்கை வைக்காதீங்க. பெட்டியை உடைச்சிக் கூட பாத்திருவாங்களாம் பல சமயம். //
மத்த நாடுகள் பத்தித் தெரியலை, ஆனால் யு.எஸ்ஸில் பெரும்பாலும் பூட்டுப் போட்டாலும் உடைச்சே பார்த்துட்டுத் தான் தராங்க. இது சொந்த அனுபவம்! இந்தியாவிலே நாம டிக்ளரேஷன் கரெக்டா கொடுத்துட்டா ஒண்ணும் சொல்றதில்லை. ஆனால் முக்கியமாய் எலக்ட்ரானிக் பொருட்கள் இருக்கக் கூடாது, வாங்கி வந்தால் விலை, பில் எல்லாம் பத்திரமா வச்சுக்கணும். நாங்க வால் மார்ட்டிலே வாங்கின யோகர்ட் டப்பாவோட பில்லைக் கூட பத்திரமா வச்சுக் காட்டிடுவோம். :P
i paid 800rs ( instead of 2 litres , i brought 3 litres JW redlabel)
மத்தவுங்க கதையக் கேட்டா வியப்பா இருக்கு.
ஒவ்வொரு முறையும் கொண்டு வரும் பெட்டிகளில் டிசிடல் பொருட்களை பிரித்து வைத்து பூட்டி விடுவேன். எதுவும் மாட்டாது. சென்ற முறை கைப்பெட்டி கணம் நிறையன்னு சொல்லி விமானத்தில் ஏறுவதற்கு முன் வாங்கி வைத்துக் கொண்டார்கள். பூட்டாம விட்டுட்டேன். உள்ள ரெண்டு நிழற்படக் கருவி, ஒரு நோக்கியா ( N78) இருந்தது.
சென்னையில் அந்தப் பையில் மட்டும் சுண்ணாம்புக் கோலால் x குறித்திருந்தார்கள். அதையும் மற்ற பைகளால் மறைத்து விட்டு வெளிய வந்துட்டேன். பெரிய கெடுபிடி ஒண்ணும் இல்லை. உள்ளே இருந்த பொருட்கள் அப்படியே இருந்தன.
இத்தனைக்கும் அந்த தடவை நான் கொண்டு வந்தது நிறைய.ஒளிர்திரைப் பெட்டிகள் (LCD TV 32") இருந்தா மட்டும் 2000 பணம் கட்டச் சொல்வதாகக் கேள்வி.
முறைப்படி பணம் கட்டாம வருவதும் தப்புத் தான். இனிமேல் விலக்கப்பட்ட அளவுக்கு மேல கொண்டு வரக் கூடாதுன்னு உறுதி எடுத்துருக்கேன். பாக்கலாம்.
அட...
போன முறை என் மாமியார், சிங்கையிலிருந்து வந்த போது அவரிடம் 37" சான்யோ LCD டிவி அனுப்பி வைத்தேன்..(அவர்கள் உபயோகத்துக்கு தான்..) மாமனார் கஸ்டம்ஸ் வரிக்கு பயந்து வேண்டாம் என்றார்....மாமியார் தைரியமாக ..கொண்டு சென்றார்.. சென்னையில், கஸ்டம்ஸ் அதிகாரிகளிடம், ஒரு பாட்டு பாடி...(வயசானவ, மாபிள்ளை வாங்கி கொடுத்தது..உனக்கு குடுக்குற அளவுக்கு காசு இல்ல...பாத்து அனுப்பிடு...பத்து டாலர் தன் வெச்சிருக்கேன்ன்னு சொல்லி) ஒரு செலவு இல்லாமல் கொண்டு போய் விட்டார்....எல்லாம் நாம நடந்துக்கிற விதத்துல தான்...
ஒரு டிப்ஸ்: உங்க சூட்கேஸ் மேல சாக் பீசால் க்ஸ் குறி போடுவார்கள்...அதை துடைத்து விட்டால்..நீங்கள் எஸ்கேப் ஆகி விடலாம்...எப்படி துடைப்பது?? விமானத்தில் Wet Towel குடுப்பார்கள்....யு டி கொலோன் ல் நனைத்தது...அதை வைத்து அந்த குறியினை துடையுங்கள்....போதும்....பின்னர் கிரீன் சேனல் வழி தான்...
I paid Rs 1800 -duty for 32" LCD.No big deal becos I got a receipt.This will avoid future problems.
வடுவூர் சொல்வதே சரி, ரசீது வச்சிருக்கணும், வாங்கினதுக்கு.
நான் சொல்ல நினைச்சதை கீதா அக்கா பத்து தரம் சொல்லி இருக்காங்க. என்னத்த கமென்டறது?
:-))
அம்பி, இதிலே இருந்து என்ன தெரியுதுனா உங்களைத் தவிர பதிவர்கள் அனைவருமே வெளிநாட்டில் இருப்பவர்கள் அல்லது சென்றவர்கள். நீங்க எப்போப் போகப் போறீங்க? :)))))))))))
//சிங்கப்பூர் விதிகள்படி இருபத்து அஞ்சாயிரம் ரூபாய்க்கு அதிகமான பொருளை அங்கிருந்து கொண்டு வந்தா சுங்க வரி கட்டனுமாமே!//
சரியான அம்மாஞ்சியா இருக்கீங்க நீங்க. இது இந்திய விதிப்படி. சிங்கப்பூர் விதிப்படி இங்க ஏன் வரி வாங்கப் போறாங்க?
அப்பறம் இங்க பின்னூட்டம் போட்டவங்கள்ல ஒருத்தவங்க டூட்டி கட்ட வேண்டிய பொருட்கள் இருந்தா பெட்டியில போடுற X குறிய அழிச்சுடுங்கன்னு சொல்லியிருந்தாங்க. முடிஞ்சா அந்த X தெரியாம மறைச்சு எடுத்துக்கிட்டுப் போக பாருங்க. அத விட்டுட்டு அழிக்க முயற்சி செய்யாதீங்க, ஏன்னா விமான நிலையத்துல எல்லா இடத்துலயும் இப்ப குளோஸ் சர்க்யூட் கேமரா இருக்கு, அதுல பார்த்துட்டான்னா சும்மா விடமாட்டான்.
இந்திய சுங்க விதிப்படி, 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் கொண்டு செல்லலாம். 2 லிட்டர் மதுபானம் 400 சிகரெட்டுகள் கொண்டு செல்லலாம். நகைகள் வாங்கிச் சென்றால் முடிந்தளவு நீங்கள் அணிந்து கொண்டு சென்றால் பிரச்சனையில்லை.
டிவி கொண்டு சென்றால் கட்டாயம் சுங்க வரி செலுத்தத்தான் வேண்டும்.
மற்றபடி முன்பு போல் இப்போதெல்லாம் சுங்க இலாகாவினர் கெடுபிடிகள் இல்லை.
To all the members the Customs Baggage Rules says any Indian coming to India can bring goods worth 25000 Idian Rupees, if their stay is more than three days in abroad. If their stay is less than three days they are eligible for 12000 Indian Rupees free allowance. Free allowance means the value of all the goods brought in baggage ( from Under wear to Chocklates) by a passenger which is in packed condition or new. If you have brought old machines which is costly then they value the goods after depreciation. If you are bringing valuable items bring receipt for all the goods. If you bring correct bill or invoice then you should not worry. You produce the bill and pay customs duty accordingly. If you want to save money then there will be a bargain. Why are you going for a bargain. You pay the Customs duty so that the govt. will earn some money. This is the fault of some of the passengers who do not want to pay customs duty. As far as laptop is concerned, only one lap top is allowed free. If you are carrying more than one laptop then you have to pay customs duty. Therefore, while departure you take an export certificate for the lap top you are carrying abroad in the departure counter so that you can bring one more lap top duty free while coming. Do not blame others. You bring goods within your limit of free allowance and you walk free.
”குருவி”யார் மாதிரி எதையும் கூடை கூடையா எடுத்துட்டு போகாததுனால நான் அவ்வளா மாட்டினதில்லை :)
நான் பலமுறை சிங்கப்பூர் சென்னை மார்கத்தில் சென்று வந்திருக்கிறேன். கஸ்டம்ஸால் எந்த தொந்தரவும் இல்லாமல். பிளைட்டில் கொடுக்கும் பேப்பரிலே போட்டு இருக்கிறார்கள்.கஸ்டம்ஸ் விப் சைட்டிலும் தெளிவாக போட்டு இருக்கிறர்கள்.அதுசரி சினிமா டிக்கெட் வாங்கும் போது 133% வரி வாங்கும்போது,வருமானத்தில் 33% சம்பளத்தில் பிடிக்கும் போது வராத வருத்தம் ஏன் கஸ்டம்ஸ வரி செலுத்தும்போது வரவேண்டும்?.
அப்படி எந்த வெளிநாட்டு பொருள் இங்கு கிடைக்கவில்லை எதற்காக கஷ்டப்பட்டு அங்கேயிருந்து கொண்டு வந்து சிரமப்படவேண்டும்
தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்ட அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மிக நன்னி.
தகவல்களும், லிங்குகளும் அளித்தவர்களுக்கு ஸ்பெசல் நன்றி.
தனிதனியா பதில் அளிக்க முடியலை, நேரமின்ன்மை தான் சாக்கா சொல்ல வேண்டி இருக்கு. மன்னிக்கவும்.
I think the officers are good at Blr comparing to Mumbai.They never gives you the things like Watches and perfumes and electronic items even if you bribe them,that too returning from African countries is horrible.And the checking officers threw the clothes out from my baggage and took all the gift items in a Bag,it was difficult to pack and return.
அடடா அவனா இவே
Post a Comment