Friday, March 20, 2009

குழலும் யாழும் இனிதா?

திருவள்ளுவருக்கும் வாசுகி அம்மாவுக்கும் குழந்தை இருந்ததா? அவரும் என்னை மாதிரி இரவு எட்டு மணிக்கு செர்லாக் ஊட்டி, பாட்டு பாடி தூங்க வைத்து, பின் இரவு பதினோரு மணிக்கு ஹக்கீஸ் டயப்பர் மாத்தி இருப்பாரான்னு எல்லாம் எனக்கு தெரியாது. ஆனா மனுஷன் ஒன்னேமுக்கால் அடிகளில் மழலைசொற்கள் பத்தி சோக்கா சொல்லி இருக்காருய்யா!

அதுவும் குழந்தைகள் ஒரு அர்த்தமும் இல்லாமல் தன் போக்குக்கு ஒலிகளை எழுப்பும்போது அதை நம் போக்குக்கு அடடா, என் குழந்தை என்னமா பேசறான்! என பூரிக்கும் தருணங்கள் இருக்கே! அங்க தான்யா நிக்கறாரு வள்ளுவர்.

பொதுவாக ஏழு மாதத்திலிருந்து குழந்தைகளுக்கு பேச்சு வருமாமே! நாம என்னத்த கண்டோம்?

முதலில் தா தா தா என ஒலிக்க தொடங்கி நாம அதை தாத்தா என பொருட்கொண்டு பெருமிதப்படுகிறோம். தாத்தாவை தொடர்ந்து அத்தை வலம் வர தொடங்குவார். அம்மா அப்பா எல்லாம் வர சிறிது காலம் பிடிக்கும் போல.

உனக்கு ஒரு தங்கை இருந்திருந்தா குழந்தை அழகா சித்த்தீனு கூப்பிடும், நானும்

"மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது!
மனசுகுள்ள பஞ்ச வர்ண கிளி பறக்குது!ன்னு பாட்டு பாடி இருப்பேன்னு தங்கமணியிடம் வாயை குடுத்து நன்றாக வாங்கி கட்டிகொண்டேன்.

எனக்கு நாலு பெரியப்பா கிடைத்த மாதிரி என் ஜுனியருக்கு ஒரு பெரியப்பாவும் இல்லை, அத்தையும் இல்லை, ஒரே ஒரு சித்தப்பா தான். அதே போல ஜுனியருக்கு மாமாவும் இல்லை, பெரியம்மாவும் கிடையாது, சித்தியும் இல்லை. இது தான் இன்றைய நிலை.

இல்லாத உறவு முறைகளை எப்படி அறிமுகப்படுத்துவது? என்ற குழப்பத்துக்கு இடம் கொடுக்காமல் பதிவுலகில் தான் எத்தனை அத்தைகள், சித்தப்புக்கள், தாய்மாமன்கள்.

ஹிஹி, பாட்டிகளுக்கும் பஞ்சமில்லை. :))

ஆக இனிமே ஷைலஜா அத்தை உனக்கு செயின் தருவாங்க, ராமலெட்சுமி அத்தையும், முத்துலெட்சுமி அத்தை வளையல் தருவாங்கன்னு ஜுனியருக்கு சொல்லிட வேண்டியது தான். சாப்பிட படுத்தினால் இருக்கவே இருக்காரு நம்ம தாய்மாமன் கைப்புள்ள. அவரு பதிவை தொறந்து அவர் படத்தை காட்டியே சாதம் ஊட்டிறலாம். ஜுனியர் இன்னும் பயந்து போய் அழுதா என்ன பண்றதுன்னு தெரியல. :)

இந்த நேரத்தில் டக்குனு தோணிய ஹைக்கூ(அத நாங்க சொல்லனும்)

வெப்காம் பார்த்து
அழுகை நிறுத்தும் குழந்தை.
சிரித்தபடியே அழும்
ஆன்சைட் அப்பா.

இதை ஹைக்கூன்னு ஒழுங்கா ஒத்துகுங்க.இல்லாட்டி நீங்க ஒத்துக்கற வரைக்கும் ஹைக்கூ எழுதறதா உத்தேசம்.

57 comments:

Raghav said...

ஆண்டவா இன்னைக்கு நான் மீ த ஃபர்ஸ்ட்டா இருந்தா அம்பிக்கு கேசரி வாங்கித் தர்றேன் :)

Raghav said...

அப்புடின்னு வேண்டிக்கலாம்னு பார்த்தேன்.. ஆனா வேண்டிக்க மாட்டேன்.. ஏன்னா.. நான் தான் பர்ஸ்ட்.. :)

முத்துலெட்சுமி-கயல்விழி said...

:) ரசிச்சு வாழ்ந்துட்டிருக்கீங்க போல..
வளையலா...பெங்களூர் வர திட்டத்தை ஒத்திவச்சிடவா.. தங்கம் விக்கற விலையில் ரொம்ப யோசனையா இருக்கே.. :))

Raghav said...

//எனக்கு நாலு பெரியப்பா கிடைத்த மாதிரி என் ஜுனியருக்கு ஒரு பெரியப்பாவும் இல்லை, //

நாங்க பெரிய குடும்பம்.. எங்க அப்பாவோட கூடப் பிறந்தவங்க 16 பேர்.. :)
3 பெரியப்பா, 6 சித்தப்பா, 6 அத்தைகள்.. அதுக்கப்புறம் அத்திம்பேர்கள், அத்தான்கள்னு ஒரு பெரிய கும்பலே இருக்கோம்..

மோனி said...

ஏன் ராகவ் ?
அப்படீன்னா அம்பிக்கு கேசரிக்கு பதிலா அல்வா வா ?
ஹை ஜாலீ ...
ஒரே தமாசா இருக்கு .

சந்தனமுல்லை said...

//ராமலெட்சுமி அத்தையும், முத்துலெட்சுமி அத்தை வளையல் தருவாங்கன்னு ஜுனியருக்கு சொல்லிட வேண்டியது தான்//

ஆகா..நல்ல நுண்ணரசியல்!! இதுக்கு முத்துலெட்சுமி அத்தை ஒப்புக்குவாங்களா?!! :-)

மோனி said...

ராகவ்
நீங்க கும்பலா இல்லை
கிராமமா இருக்கீங்க

ராமலக்ஷ்மி said...

//பதிவுலகில் தான் எத்தனை அத்தைகள், சித்தப்புக்கள், தாய்மாமன்கள்.//

ஆகான்னு மனசு நெகிழ்ந்து மேலே வாசிச்சா வச்சிருக்காருய்யா அம்பி நல்ல ஆப்பு:))!

முத்துலெட்சுமி-கயல்விழி said...

//வளையலா...பெங்களூர் வர திட்டத்தை ஒத்திவச்சிடவா.. தங்கம் விக்கற விலையில் ரொம்ப யோசனையா இருக்கே.. :))//

திட்டத்தை ஒத்தியெல்லாம் வைக்காதீங்க. பொன் வைக்கிற இடத்திலே பூ வச்சு வாழ்த்தினா ஜூனியர் கோவிச்சுக்கவா போகிறார்:))?

முத்துலெட்சுமி-கயல்விழி said...

ராமலக்ஷ்மி டிக்கெட்லாம் எடுத்தாச்சு .. ஒத்திவைப்பல்லாம் இல்லை.. குட்டிபொண்ணுன்னாலும் தங்கவளையலுக்கு பதில் ப்ளாஸ்டிக் வளையல் வாங்கிட்டு வரலாம்.. வளையலுக்கு பதிலா டாய் வாட்ச் வாங்கித்தந்துடவா..ஜூனியருக்கு.. :))

முத்துலெட்சுமி-கயல்விழி said...

முல்லை என்னப்பா இது .. நுண்ணரசியலில் என்னை மட்டும் கேட்டிருக்கீங்க.. சரி ராமலக்ஷ்மி எவ்வளவு பவுன்ல போடறாங்க கேட்டீங்களா நீங்க..?

கே.ரவிஷங்கர் said...

அம்பி,

//இதை ஹைக்கூன்னு ஒழுங்கா ஒத்துகுங்க.இல்லாட்டி நீங்க ஒத்துக்கற வரைக்கும் ஹைக்கூ எழுதறதா உத்தேசம்.//

நானும் எழுதிட்டேன்.
என்னோட லேட்டஸ்ட் ஹைக்கூ பாத்தேளா அம்பி.

ராமலக்ஷ்மி said...

முத்துலெட்சுமி,
அட இது கூட நல்ல ஐடியாவா இருக்கே. நான் நெஜ வாட்சே வாங்கிக் கொடுத்திடறேன்:)!

சந்தனமுல்லை said...

//சரி ராமலக்ஷ்மி எவ்வளவு பவுன்ல போடறாங்க கேட்டீங்களா நீங்க..?//

ஹிஹி..//ராமலெட்சுமி அத்தையும், முத்துலெட்சுமி அத்தை வளையல் தருவாங்கன்னு//நீங்கதான் சொல்லனும்.. அவங்க தரப்போறதே உங்க வளையல் தானே!!

முத்துலெட்சுமி-கயல்விழி said...

ஹைக்கூவான்னு தெரியாது ஆனா அந்த கவிதை நல்லாருக்கு..அம்பி

ராமலக்ஷ்மி said...

முத்துலெட்சுமி-கயல்விழி said...

// முல்லை என்னப்பா இது .. நுண்ணரசியலில் என்னை மட்டும் கேட்டிருக்கீங்க.. சரி ராமலக்ஷ்மி எவ்வளவு பவுன்ல போடறாங்க கேட்டீங்களா நீங்க..?//

போட்டிருக்கலாம்தான், அம்பி மட்டும் இப்படி ஒரு பதிவு போடமலிருந்திருந்தால்:)):
//தங்க நகை வாங்க போறீங்களா?//

முத்துலெட்சுமி-கயல்விழி said...

முல்லை .. எங்கயோ போயிட்டீங்க போங்க.. :))

ராமலக்ஷ்மி said...
This comment has been removed by the author.
ஜ்யோவ்ராம் சுந்தர் said...

ஹைகூன்னு ஒத்துக்க மாட்டேன் (ஆனா அதுக்குன்னு நிறைய எழுதிடாதீங்க!).

நல்ல வரிகள்தான் :)

நேத்து ரவிஷங்கரோட ஹைகூ பதிவுல நடந்த ரணகளத்தைப் பாத்த பிறகுமா ஹைகூ ஆசை :)

ராமலக்ஷ்மி said...

ஹிஹி. என் ப்ளாக்கில் போட வேண்டிய கமெண்ட் தவறுதலாய் இங்கு போட்டுட்டேன். வேறெதும் ப்ராமிஸ் பண்ணலை முத்துலெட்சுமி.

ராமலக்ஷ்மி said...
This comment has been removed by the author.
மங்களூர் சிவா said...

/
இல்லாத உறவு முறைகளை எப்படி அறிமுகப்படுத்துவது? என்ற குழப்பத்துக்கு இடம் கொடுக்காமல் பதிவுலகில் தான் எத்தனை அத்தைகள், சித்தப்புக்கள், தாய்மாமன்கள்.

ஹிஹி, பாட்டிகளுக்கும் பஞ்சமில்லை. :))
/

:)))))))))))))))))

கைப்புள்ள said...

//அதுவும் குழந்தைகள் ஒரு அர்த்தமும் இல்லாமல் தன் போக்குக்கு ஒலிகளை எழுப்பும்போது அதை நம் போக்குக்கு அடடா, என் குழந்தை என்னமா பேசறான்! என பூரிக்கும் தருணங்கள் இருக்கே!//

சூப்பரா சொன்னீங்க. அருமை.

//மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது!
மனசுகுள்ள பஞ்ச வர்ண கிளி பறக்குது!ன்னு பாட்டு பாடி இருப்பேன்னு தங்கமணியிடம் வாயை குடுத்து நன்றாக வாங்கி கட்டிகொண்டேன்.//

வேண்டியது தான் :)


//அவரு பதிவை தொறந்து அவர் படத்தை காட்டியே சாதம் ஊட்டிறலாம். ஜுனியர் இன்னும் பயந்து போய் அழுதா என்ன பண்றதுன்னு தெரியல. :)
//
ஐ ஆம் வெரி வெரி பேபி ஃப்ரெண்ட்லி...அதல்லாம் அழமாட்டாரு ஜூனியரு.
:) தாய்மாமனுக்கு எதுகை மோனையா தங்கச்சங்கிலின்னு சொல்லலை. அது வரைக்கும் உங்களைப் பாராட்டலாம். பவுனு விக்கிற வெலைக்கு....ஸ்ஸ்ஸ்ஸ்

Raghav said...

//மோனி said…
ராகவ்
நீங்க கும்பலா இல்லை
கிராமமா இருக்கீங்க //

கண்ணு வைக்காதிங்க :).. பெரியவங்கள்ல பாதி பேர் இப்போ கிடையாது போய் சேர்ந்தாச்சு

Vijay said...

சித்தி வேணுமாடா கண்ணு.
ஜுனியரிடம் அம்பி.
”அம்மா...கத்தி எங்க வச்ச...”

இது கூட ஹைகூஊஊ தான்.:P

அமர பாரதி said...

//இதை ஹைக்கூன்னு ஒழுங்கா ஒத்துகுங்க.இல்லாட்டி நீங்க ஒத்துக்கற வரைக்கும் ஹைக்கூ எழுதறதா உத்தேசம்// ஒத்துக்கிட்டோம். ஒத்துக்கிட்டோம். கண்டபடி கடுமையாக ஒத்துக்கிட்டோம்.

கீதா சாம்பசிவம் said...

//:) தாய்மாமனுக்கு எதுகை மோனையா தங்கச்சங்கிலின்னு சொல்லலை. அது வரைக்கும் உங்களைப் பாராட்டலாம். பவுனு விக்கிற வெலைக்கு....ஸ்ஸ்ஸ்ஸ்//

நேத்தித் தானே பத்துத் தரம் மொய் எழுதினேன். கொடுத்தால் என்ன தங்கச் சங்கிலி?? வாங்கிக் கொடுங்க! :)))))

அம்பி, அத்தைங்க செய்யறதிலே பாதிப் பங்கு அர்ச்சனாவுக்கும் கொடுத்துடுங்க! :))))))))

திவா said...

//இதை ஹைக்கூன்னு ஒழுங்கா ஒத்துகுங்க.இல்லாட்டி நீங்க ஒத்துக்கற வரைக்கும் ஹைக்கூ எழுதறதா உத்தேசம்.//

இந்த ஹைக்கூ கிடக்கட்டும் அம்பி; சம்பளத்திலே ஹைக்கூ இந்த வருஷம் இல்லை போல இருக்கு! அத பத்தி கவலை படுங்க! :-))

இலவசக்கொத்தனார் said...

//ஆனா மனுஷன் ஒன்னேமுக்கால் அடிகளில் //

உன்னைத்தான் அடிக்கப் போறேன். அது ஒண்ணேகாலும் இல்லை ஒண்ணே முக்காலும் இல்லை

குறள்பா இரண்டு அடிகள்தான். என்ன முதலடியில் நான்கு சீர்களும் இரண்டாவது அடியில் மூன்று சீர்களும் உண்டு.

http://wikipasanga.blogspot.com/2007/01/1.html

http://wikipasanga.blogspot.com/2007/01/2.html

இலவசக்கொத்தனார் said...

கவுஜ எழுதினா (ஹைக்கூன்னு ஒத்துக்க மாட்டோமில்ல) முதலில் டிஸ்கி போடும். என்னை மாதிரி அலர்ஜி பார்ட்டிங்க மூக்கை மூடிக்கிட்டு அப்பால போவோமில்ல!! ஹச்சூ! ஹச்சூ!

நாகை சிவா said...

ஹைக்கூ சூப்பர்....

(மயில்சாமி ஜிப்பா சூப்பர் னு சொன்ன மாதிரி படிக்கனும் என்னா?)

கெக்கே பிக்குணி said...

அம்பி, எங்கியோ போயிட்டீங்க. அதுவும், 'சிரித்தபடியே அழும்'னது எங்களைத் தானே? ஆஹா, இது ஹைகூ மட்டும் இல்லப்பா, ஹைடெக்கு. எப்படிப்பா எங்க எல்லார் நிலையும் படம்பிடித்து காட்ட முடிந்தது?

பதிவர்கள் எல்லாருமா சேர்ந்து மோதிரமா போட்டுடலாம் - அது தான் பிள்ளைக்குழந்தைக்கு நல்லா இருக்கும். அதுவும் காலம் கெட்டுக் கிடக்கு, தங்கம் போட்டு ரிஸ்க் எடுக்க வேண்டாம். எவர்சில்வர்ல கூட கிடைக்குதே? (நான் தஞ்சாவூர்க்காரி:-).

கெக்கே பிக்குணி said...

ஆஹா, கீதாம்மா ஒரு ப்ளானோட தான் வந்துருக்காங்க! //அம்பி, அத்தைங்க செய்யறதிலே பாதிப் பங்கு அர்ச்சனாவுக்கும் கொடுத்துடுங்க! // அம்பி, நாத்தனார் சீரே கிடைக்கலைன்னு பதிவர்கள் சொன்னதாகக் கேள்விப் பட்டேனே, அப்படியா?

ஷைலஜா/ராமலக்ஷ்மி/முத்துலக்ஷ்மி, நாம அப்புறம் செட்டில் செஞ்சிக்கலாம்.

கீதா சாம்பசிவம் said...

@கெபி, நீங்களன்றோ உண்மைத் தொண்டர்??? வாழ்க! வளர்க!
அப்படியே கல்யாணத்துக்குக் கொடுக்கவேண்டிய ரிவர்சபிள் பட்டுப் புடவையும், தலை தீபாவளிக்குக் கொடுக்க வேண்டியது நகாசு, இந்த வருஷத்துக்கு பரம்பரா பட்டு, மூணும் வாங்கிக் கொடுத்துடுங்க, கொஞ்சம் எனக்காகவும் பேசினா என்ன?? :P:P:P

கெக்கே பிக்குணி said...

கீதாம்மா, அம்பி ஏதோ மெயில் தட்டறாரு, "பாட்டி புடவை வரிசையா"ன்னு. நீங்க அவரை கவனிங்க!

அப்புறம் கைப்புள்ள மாமா பிள்ளைத்தமிழ் இயற்றி, லூஸா அத்தான் நீ என்று அம்மங்காள் (மாமன் மகள்) அர்ச்சனா பாடி விடக் கூடும். எனவே, கைப்புள்ள மாமாவுக்கு கைநிறைய தங்க ப்ரேஸ்லெட்டு. (ஏதோ, நம்மாலானது).

கெக்கே பிக்குணி said...

//அங்க தான்யா நிக்கறாரு வள்ளுவர்.// கன்னியாகுமரில தான் நிக்கறாரு வள்ளுவர். மத்த இடம்/படத்திலிலெல்லாம் அமர்ந்தே இருக்கிறார்.

இப்படிக்கு, உட்கார்ந்தே இருப்போர் சங்கம்.

Anonymous said...

ambi,
chitti illannu neenga complain panna ,appuram sutthi sutthi adipaanga parava illaya???thangamani,have you stopped doing poori in your house????ambi asapadararu illa!!!ambi, haikku ezhudarthukku munnadi,haikkunnu idhudhannu solliderengale ,ungalukku evallovu nalla manusu.athai seerukku naanga ready bathil maaman seerukku neengal readyaa???khazanava,nathella,gopaldas zaveri,grt,saravanas gold palace,kalyans,pc jewellers ellame ambikku pudicha kadaigal thaane !!!! atthai oruu bracelet potta,maama oru necklace illa kanganam podamat tengla!!!!
nivi.

Anonymous said...

ambi,haikku nalla irundhudhu.en pennarasi chinna vayasil mazhalai pesiyadhai record seithirukkiren.ippa ketkumbothu andha ninaivugal inimai,inimai,inimai.its not one kuzhal but hundreds and hundreds played in unison.nijamave mazhalaikku eedu inai kidayathu.so enjoy this time.
nivi.

வல்லிசிம்ஹன் said...

பாப்பா பேச ஆரம்பிச்சா அப்பா ஹைக்கூ சொல்றதா:0)

பாட்டிக்கெல்லாம் அப்பா இன்னும் ஒண்ணும் செய்யலைடா ராஜா ஜூனியர்!!!!
கீதா உங்களுக்கும் புடவை வரலியா. அச்சச்சோ:)))

Anonymous said...

ஜூனியருக்கும் என்க்கும் தனி பாஷையே உண்டு, நம்ப பயபுள்ள கதை சூப்பரா கேட்பான்...:) அவனை பாக்கமாட்டோமா?னு ஆயிருச்சு....:( அவன் முதலில் சொன்ன வார்தை "எப்ப்ப்படிடி"....:)

அன்புடன்,
சித்தப்பு(தம்பி)

கீதா சாம்பசிவம் said...

// அவனை பாக்கமாட்டோமா?னு ஆயிருச்சு....:( //

??????????????????????????????????????????????????????????????????????

கவிநயா said...

//ஆகான்னு மனசு நெகிழ்ந்து மேலே வாசிச்சா வச்சிருக்காருய்யா அம்பி நல்ல ஆப்பு:))!//

:)))

பதிவை விட பின்னூட்டமெல்லாம் சுவாரஸ்யமா இருந்தது :) மழலை இசைக்கும் குழலுக்கு வாழ்த்துகள் :)

ambi said...

வாங்க ராகவ், நீங்க தான் பஷ்ட்டு. என் கேசரியை வாங்கிக்க எங்க எப்ப வரனும்னு சொன்னா வசதியா இருக்கும்னு சொல்ல வந்தா இப்படி பல்டி அடிச்சுட்டீங்களே பா! :))

உங்க குடும்பம் ஒரு பல்கலைகழகம் போல. :))

வாங்க முத்தக்கா, இதெல்லாம் நீங்க அஞ்சலாமா? உங்களால கண்டிப்பா முடியும். :))

மோனி, முதல் வர்வுக்கு நன்னி, ஆனாலும் என்ன ஒரு வில்லத்தனம்? :p

வாங்க பப்பு அம்மா, உங்களையும் அடுத்த லிஸ்ட்டுல சேர்க்கலாம்னு எண்ணம். :))

ரா ல, பொன்னு வைக்கற இடத்துல பூவா? நல்லா பாயிண்ட் எடுத்து குடுக்கறீங்க பா! :))

Renga aka Dubukku said...
This comment has been removed by the author.
Dubukku said...

என் ஜுனியருக்கு ஒரு பெரியப்பாவும் இல்லை

- soooooppperr

Maddy said...

IMHO, I find that its "duty" of every father and not to crib about it..

Li. said...

// குழந்தைக்கு மட்டும்தான இல்லை? இன்றைய வாழ்வில் நமக்கும் தான் இல்லை... ௨௦ yrs back 'நாங்கெல்லாம் ஒன்ன இருந்தசே...' நு கௌண்ட மணி style - ல நா dialogue சொல்ல வேண்டி இருக்கு //

Anonymous said...

this is not direclty linked, but since it is about children and their speech, I am sending this link.
http://www.currybear.com/wordpress/?p=2316#comments

Paavai

shree said...

kavujai sooper

shree said...

hey.. unga previous padhipagam pathu nanum youth vikatanku try pannen, padhivu pannitanga. thanks! link - http://youthful.vikatan.com/youth/sristory26032009.asp

சென்ஷி said...

கலக்கல் அம்பி. :-)

சித்தப்பூ சென்ஷி ஷார்ஜாவுல இருக்காகன்னு சொல்லி வைங்க..

//வெப்காம் பார்த்து
அழுகை நிறுத்தும் குழந்தை.
சிரித்தபடியே அழும்
ஆன்சைட் அப்பா.//

ஒத்துக்குறோமய்யா. ஒத்துக்குறோம். இது ஹைக்கூவாவே இருக்கலாம் :-)

மெனக்கெட்டு said...

//
அதுவும் குழந்தைகள் ஒரு அர்த்தமும் இல்லாமல் தன் போக்குக்கு ஒலிகளை எழுப்பும்போது அதை நம் போக்குக்கு அடடா, என் குழந்தை என்னமா பேசறான்! என பூரிக்கும் தருணங்கள் இருக்கே!
//

இதையெல்லாம் ரெக்கார்ட் பண்ணி வையுங்கள். பிற்காலத்தில் கேட்கலாம். அவர்களுக்கும் போட்டுக்காட்டலாம். ஜாலியாக இருக்கும்.

ambi said...

முத்தக்கா டய் வாட்ச்சா? கர்ர்ர். நீங்க ஒரு முடிவோட தான் இருக்கீங்க போல. :))

ரவிஷங்கர், நீங்க ஹைக்கூவுக்கு விதிகள் எல்லாம் போட்டு கல்லக்றீங்க. நானும் ட்ரை பண்றேன், இதோ வருது, அதோ வருதுன்னு வந்துட்டே இருக்கு. நானும் விடறதா இல்லை. :))

வாங்க சுந்தர், நல்ல வரிகள்ன்னு சொன்னதாலே சும்மா இருக்கேன். இல்லாட்டி... :))

ம-சிவா, நீ தான்பா கரக்ட்டா பாயிண்டை புடிச்ச. :p

வாங்க கைப்பு, தாய் மாமன் தங்க சங்கிலின்னு ரைமிங்கா இருக்கு. ரொம்ப ஆசைப்படறீங்க போல. :))

அர்ச்சனா பாப்பா எப்படி இருக்காங்க?

விஜய், என்னப்பா இப்படி ஊளை இட்டு என் மானத்தை வாங்கற? :))

அமர பாரதி, நீங்க ரொம்ப நல்லவருங்க. :)

கீதா மேடம், அத்தைங்க செய்யறது இருக்கட்டும், பாட்டீஸ் நீங்க என்ன செய்ய செய்ய போறீங்க? :p

ஆமா திவான்னா, அந்த சோகத்தை மறக்க தான் இப்படி எல்லாம். அவ்வ்வ்வ். :))

ambi said...

இதெல்லாம் வக்கனையா சொல்லுங்க. கொத்ஸ் ஒரு ஹைக்கூ எழுதி அதை நான் வாசிக்கனும். எங்க, எழுதுங்க பாப்போம். :))

நாகை சிவா, அது எந்த படத்துல வர டையலாக்?

வாங்க கெபி, உங்க ஜுனியர் இந்தியாவிலா இருக்காங்க? அடடா!
தஞ்சாவூர்காரின்னு ஒரு வார்த்தையே போதும், நான் எதுவும் கேட்டு இருக்க மாட்டேன். இப்படி நாத்தனார் சங்கம் அமச்சு டோட்டல் டேமேஜ் பண்ணி இருக்க வேணாம். :))

நிவி, நீங்க வேற எதுக்குங்க தனியா தூபம் போடறீங்க? எல்லாரும் சீர் சீர்ன்னு சீறறாங்க பா. நான் இனிமே தான் ஜுனியர் வாய்ஸை ரெக்கார்ட் செய்யனும். :)

வல்லிமா, ஹிஹி, நான் வாங்கி வந்த பட்டு புடவை கலர் உங்களுக்கு மேட்சா இருக்கு தானே? :p

கீதா மேடம், ரெண்டு மாசமா ஜுனியர் சென்னை வாசம்.சித்தப்பு என் ஜுனியரை பாக்க முடியலையேனு ரெம்ப பீல் பண்ணி இருக்கான், அவ்ளோ தான்.

வாங்க கவி நயாக்கா, உங்க அன்புக்கு ரெம்ப நன்னி.

வாங்க டுபுக்கு பெரியப்பா, கழுகு மாதிரி கரக்ட்டா பாயிண்டை புடிப்பீங்களே? :p

வருகைக்கு நன்றி Maddy

ரொமப் சரி Li

அருமையான லிங்க் பாவை, ரெம்ப நாள் ஆச்சு உங்க கமண்டு பாத்து. நலம் தானே? :)

ஸ்ரீ, கதை ரெம்ப நல்லா இருந்தது. கலக்கல்ஸ்.

வாங்க சென்ஷி, சென்ஷி சித்தப்பா சீக்ரம் ஒரு சித்திய அறிமுக படுத்த போறாருன்னு ஜுனியருக்கு சொல்லி வெச்ச்ருக்கேன். மேல் நடவடிக்கைய நீங்க எடுங்க. :p

இனிமே தான் ரெக்கார்டனும் மெனகெட்டு. அவசியம் செய்யறேன். :))

shree said...

thanks for the comments :)
hey susheela vaa.. andamma uyiroda irukkaradhu unakku pudikalaya?? nan L.R. easwari kooda illai :( but padanumnu rombooooooo asai. enna seyya, kuralum illa, nyanamum illa. anyways, thanks again

ராஜா said...

//அதுவும் குழந்தைகள் ஒரு அர்த்தமும் இல்லாமல் தன் போக்குக்கு ஒலிகளை எழுப்பும்போது அதை நம் போக்குக்கு அடடா, என் குழந்தை என்னமா பேசறான்! என பூரிக்கும் தருணங்கள் இருக்கே! அங்க தான்யா நிக்கறாரு வள்ளுவர்.//

well said

Karthikeyan Ganesan said...

Nice one. Haigoo, indha varusha hike mathiri illama

Nallavaey irunthuchu...

Anonymous said...

parf ad athuga:)