Tuesday, March 03, 2009

நாகேஷும் சில நகைச்சுவை பதிவர்களும்

பல சரித்திர நாயகர்களுக்கு உலக/தமிழ் சினிமா வடிவம் கொடுக்க தொடங்கியதில் நம்மில் பலருக்கு அந்த கேரக்டரில் நடித்த நடிகர்கள் தான் மனசில் நிற்கிறார்கள். கர்ணன், ராஜ ராஜ சோழன் என நினைத்தால் சிவாஜி, கிருஷ்ண பரமாத்மாவென்றால் என்.டி.ஆர், போலிஸ் கமிஷ்னர் என்றால் விஜயகாந்த், அபிராமி தியேட்டர் வாசலில் பிளாக்கில் டிக்கெட் விற்பவர் என்றால் டாக்டர் விஜய் என இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

பொதுவாக கதாநாயகனாக நடிக்க தோற்றப் பொலிவு, உடற்கட்டு என தகுதிகள் இருந்த காலத்தில் அனைத்து விதிகளையும் கட்டுடைத்து அடுத்த வீட்டு பையன் போன்ற தோற்றத்தில் இருந்த நாகேஷ் அவர்கள் இன்றைய தனுஷ் வகையறாக்களுக்கு ஒரு முன்மாதிரியாக திகழ்ந்தார். ஆனா அவரு பஞ்ச் டயலாக் பேசி பசுபதியை எல்லாம் தூக்கி வீசலை என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.

பொதுவாக நகைச்சுவையை சில கூறுகளாக பிரிக்கலாம்:

1)பிறரை தாழ்த்திப் பேசி, பகடி பண்ணுதல் - டேய் கருவா சட்டி தலையா! அடப் பாவிகளா! உங்கள எல்லாம்....வகைகள்.

2)தன்னைத் தாழ்த்தி கொள்ளுதல் - என்னை ரெம்ப நல்லவன்ன்ன்னு சொல்லிட்டான்டா!

3)உடல் அசைவுகளால் நகைச்சுவை காட்டுதல் - சார்லி சாப்ளின் மேனரிசம்.

இன்றைய நகைச்சுவை நடிகர்கள் இதில் ஏதேனும் ஒரு பிரிவில் தான் இருப்பார்கள். ஆனால் நாகேஷ் காமெடியில் இதையெல்லாம் மீறி ஒருவிதமான வார்த்தைகளில் விவரிக்க முடியாத நளினம், மனித நேயம் இருக்கும். அதனால் தானோ என்னவோ இதுவரை அவரின் கலையுல வாரிசாக யாரும் கண்டறியப்பட வில்லை. சின்ன நாகேஷ்!னு யாரேனும் டைட்டில் கார்டில் போட்டுக்கறாங்களா? தெரிந்தால் எனக்கும் சொல்லுங்கள்.


படம் - நன்றி பிளாகேஸ்வரி

பொதுவாக நடிகன் என்ற வட்டத்தை தாண்டி திரைப்படத்தின் பாத்திரமாக வடிவம் பெற்று, அது மக்கள் மனதிலும் நீங்கா இடம் பேற்றவர்கள் மிகச் சிலரே. திருவிளையாடல் தருமி, எதிர் நீச்சல் மாது, சர்வர் சுந்தரம் என கதாபாத்திரங்களின் பேரை கேட்டாலே டக்குனு அந்த படங்களின் காட்சிகள், சில வசனங்கள், பாடல்கள், நாகேஷின் வசன உச்சரிப்புக்கள் எல்லாம் உங்கள் நினைவில் வந்து போகிறதா? இது தான் அந்த கலைஞனின் மாபெரும் வெற்றி என்பேன்.

இன்றைய தினத்தில் வின்னர் படத்தின் கைப்புள்ள, 23ம் புலிகேசி, கிரி படத்தில் வீரபாகு என வடிவேலுவுக்கும் விரல் விட்டு எண்ணக் கூடிய, மக்கள் எளிதில் நினைவில் வைத்துக் கொள்ள கூடிய பாத்திரங்கள் அமைந்தன.

இவ்வளவு தனித் திறமை பெற்று இருந்தும் ஒரு கலைஞனுக்கு கிடைக்க வேண்டிய கவுரவம், விருதுகள் எதுவும் நாகேஷுக்கு கிடைக்காமல் போனது மிகவும் துரதிஷ்ட வசமானது. அரசாங்கம் முடிந்தால் நாகேஷ் பெயரில் ஒரு விருது ஆரம்பித்து அடுத்த தலைமுறைக்கு இந்த மேதையை பற்றி தெரியபடுத்தி தம் தவறை துடைத்துக் கொள்ளட்டும்.

கடவுளை சிரிக்க வைக்க நாகேஷ் சில காலம் விண்ணுலகம் சென்றுள்ளார். கடவுளை வயிறு குலுங்க சிரிக்க வைத்த பிறகு மீண்டும் இந்த மண்ணுலகிற்க்கு விரும்பி வருவார் என விஜய் டிவியில் மனம் நெகிழ்ந்து பிண்னனி பாடகர் P.B.ஸ்ரீனிவாஸ் சொன்னது சத்தியமான உண்மை என்பேன்.

இப்ப அபி அப்பாவ பாருங்க, ஆசையா, முத்து முத்தான கையெழுத்துல அபி ஒரு கவிதை எழுதி தந்தா, அதை தொறந்து பாக்க கூட நேரமில்லாம, துபாய்க்கு வந்து பாத்திட்டு, உடன்பிறப்புக்கு ஒரு கடிதம் ரேஞ்சுக்கு, இவரும் அருமை மகள் எழுதிய கவிதைனு ஒரு தொலை நோக்கு பார்வையுடன், ஒரக்கண்ணில் கண்ணீர் துளியுடன் பதிவா போடறாரு. நேர்லயே அபியை பாராட்ட முடியலையேன்னு அவருக்கு எவ்ளோ பீலிங்க்ஸா இருந்திருக்கும்?

இன்று பதிவுலகையும் பாருங்கள், எத்தனை பேர் எவ்ளோ கஷ்டங்களுக்கு இடையில்,அலுவலக பணிக்கிடையில், வீட்டு வேலைகளுக்குகிடையில், காய்கறி நறுக்கி கொண்டும், பாத்திரம் தேய்த்துக் கொண்டும், டயப்பர் மாத்திக் கொண்டும்,பூரிக்கட்டை அச்சத்துடனும், நகைச்சுவையாக பதிவிடுகிறார்கள் என எண்ணிப் பாருங்கள். இத்தகைய நகைச்சுவை பதிவர்களை ஆதரித்து அங்கீகாரம் தாருங்கள்.

பி.கு: இந்த மேதைக்கு நினைவஞ்சலி கூட என்னால் இவ்ளோ தாமதமாகத் தான் போட முடியுது என நினைத்து மிகவும் வெட்கப்படுகிறேன்.

21 comments:

கீதா சாம்பசிவம் said...

//நாகேஷ் காமெடியில் இதையெல்லாம் மீறி ஒருவிதமான வார்த்தைகளில் விவரிக்க முடியாத நளினம், மனித நேயம் இருக்கும். அதனால் தானோ என்னவோ இதுவரை அவரின் கலையுல வாரிசாக யாரும் கண்டறியப்பட வில்லை//

mmmmmநினைச்சாலே வருத்தமாத் தான் இருக்கு. சோதனையா அந்தச் சமயம் பார்த்துப் பதிவு கூடப் போட முடியாமல் ஊருக்குப் போயிருந்தேன். நாகேஷ் நகைச்சுவையில் மட்டுமா சிறப்பு?? காதலிக்க நேரமில்லை படத்திலே கதை சொல்ற பாங்கும், சோப்பு, சீப்பு, கண்ணாடியில் கதாநாயகன், முத்துக்குளிக்க வாரீஹளானு பாடி(ஹிஹி, பின்னணிக் குரல் தான்) நடிச்சு, அசர வைச்சது, எதை விடறது? எதைச் சொல்றது? கொஞ்சம் இல்லை வருத்தம்!

கீதா சாம்பசிவம் said...

ஹை, மீ த ஃபர்ஷ்டு??? ஆஹா, எனக்கே பொற்காசுகள்!

சோகம்னு சொல்லிட்டு, இதிலும் நக்கல் அடிச்சிருக்கும் உங்களை அகில உலக நாகேஷ் ரசிக மன்றத் தலைவி என்ற முறையில் வன்மையாய் கண்டிக்கிறேன். சிஷ்யகேடிங்க எல்லாம் ஃபாலோ அப் கொடுங்கப்பா!

ராமலக்ஷ்மி said...

’எதிர் நீச்சல்’ படத்தை எத்தனை தடவைப் பார்த்திருப்பேன் என்பதற்குக் கணக்கே கிடையாது. அதில் நகைச்சுவை, குணச்சித்திரம், நடனம் எல்லாவற்றிலும் வெளுத்து வாங்கியிருப்பார் நாகேஷ்.

//இத்தகைய நகைச்சுவை பதிவர்களை ஆதரித்து அங்கீகாரம் தாருங்கள்.//

கண்டிப்பா கண்டிப்பா! கவலையே படாதீர்கள்:)!

மதுரையம்பதி said...

நல்ல பதிவு அம்பி. தகவல் வந்த உடன் சென்ஷி ஒரு பதிவு போட்டிருந்தார்...

கவிநயா said...

நகைச்சுவையை நல்லா அலசி, நாகேஷ் அவர்களின் பெருமையை நறுக்குன்னு சொல்லியிருக்கீங்க. எங்க ஆதரவு உங்களுக்கு என்றும் உண்டு :)

mgnithi said...

தல அட்டெண்டன்ஸ் தல ... எனக்கு நாகேஷோட தில்லானா மோகனாம்பாள் கேரக்டர் ரொம்ப பிடிக்கும் . அந்த படத்துல அது ஒரு ரொம்ப முக்கியமான கேரக்டர்.அதுல அவ்ளோ பிரமாதமா நடிச்சு இருப்பார்

கோவி.கண்ணன் said...

//அபிராமி தியேட்டர் வாசலில் பிளாக்கில் டிக்கெட் விற்பவர் என்றால் டாக்டர் விஜய் என இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகும்.//

ஒரு கொல விழப்போவுது ! எதுக்கும் ஆட்டோ சத்தம் கேட்குதான்னு காதை வச்சி கேட்டுக் கொண்டே இருங்க.
:)))

வழைப்பழ ஊசி நகைச்சுவை. கலக்கல் அம்பி.

//பொதுவாக நடிகன் என்ற வட்டத்தை தாண்டி திரைப்படத்தின் பாத்திரமாக வடிவம் பெற்று, அது மக்கள் மனதிலும் நீங்கா இடம் பேற்றவர்கள் மிகச் சிலரே. திருவிளையாடல் தருமி, எதிர் நீச்சல் மாது, சர்வர் சுந்தரம் என கதாபாத்திரங்களின் பேரை கேட்டாலே டக்குனு அந்த படங்களின் காட்சிகள், சில வசனங்கள், //

ஒளவை சண்முகி ஜோசப் கலக்கல்.

அபி அப்பா said...

நாகேஷ் என்னும் மகா கலைஞன் நினைவஞ்சலியில் என் இனைப்புமா? விவேக்குக்கு "பத்மஸ்ரீ" கொடுத்த மாதிரி இருக்கு எனக்கு!

யார் மனதும் புண்படாமல் நகைச்சுவையே சிறந்தது.

நான் கூட இப்படி ஏடாகூடமா நகைச்சுவைன்னு பேரிலே ஏதேட்தோ உளருவேன்!

ஒரு முறை காலேஜ் பஸ்ஸில் போன போது ஒரு பால்காரர் பஸ்ஸில் அடி பட்டு செத்து போயிட்டார். அவர் பால் கேனில் இருந்த பால் முழுக்க அவர் மேலே!

அப்ப பஸ்ஸில் இருந்து எட்டி பார்த்த நான் சொன்னேன் "எல்லாருக்கும் இன்னிக்கு செத்தா நாளைக்கு பால், ஆனா இவர் பால்காரர் இல்லியா அதான் இன்னிக்கே பால்"

அப்பபுது புது அர்த்தங்கள் வந்த புதுசு!

கெக்கேபிக்கேன்ன்னி பெண் பசங்க சிரிப்பு. அதிலே எனக்கு ஒரு பெருமை.

ஆனா அப்ப என் நண்பன் என்னை கன்னத்தில் அடித்தது அந்த நிமிடத்தில் இருந்து அப்படி செய்வதை விட்டுட்டேன்.

கிண்டல் பண்ணினா என்னை மட்டுமே கிண்டல் பண்ணிப்பது. அந்த விதத்தில் நாகேஷ் அய்யா அவர்களின் வாரிசு நிச்சயமா வடிவேல் தான்!

நல்ல பதிவு அம்பி!!!

வல்லிசிம்ஹன் said...

சுமதி என் சுந்தரி,
உத்தரவின்றி உள்ளேவா,ஊட்டி வரை உறவு , நீர்க்குமிழில ஆடி அடங்கும் வாழ்க்கையடா பாட்டு....

ambi said...

வாங்க கீதா மேடம், உங்க காலத்துல வெளி வந்த பல நல்ல படங்களை வரிசையா சொன்னதுக்கு ரெம்ப நன்றி. நக்கலா? அப்ப்டி ஒன்னும் அடிக்கலையே. :))

வாங்க ரா ல, உண்மை, இப்பவும் அந்த படம் வந்தா ரிமோட்டை கீழே வெச்சுடுவோம் எங்க வீட்ல. அதானே! ரா ல இருக்க பயமேன்? :))

ஆமா மதுரை அண்ணா, செய்தி கேட்டவுடன் சென்ஷியை தான் என் மனம் நினைத்தது. :(

பாராட்டுக்கு நன்னி கவிநயா அக்கா, எல்லா புகழும் நாகேஷுக்கே! :))

வாங்க புது மாப்ளை MGnithi, உங்க பிசி ஷெட்யுலுல என் பிளாக் பக்கம் வந்ததுக்கு முதல்ல நன்னி ஹை. :))

தில்லானா படக்துல ரொம்ப அசால்ட்டா வில்லன் ரோல் பண்ணி இருப்பார். பதிவு பெரிசாயிடுமேன்னு எழுதலை.

ச்சின்னப் பையன் said...

////அபிராமி தியேட்டர் வாசலில் பிளாக்கில் டிக்கெட் விற்பவர் என்றால் டாக்டர் விஜய் என இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகும்.//
//

:-))))))))))))))))

Anonymous said...

oru nalla nagaichuvai nadigarakkana munnudharanam nagesh!!avarin padangalai ethanai dhadavai vaithalum alukkamal parkalam andha alavukku kkalangal kadandhum innum makkal manadhil nirpavar.oru muzhumaiyana nagaichuvai virpannar.andha timing fantabulous..sollikonde pogalam.en solgiren enral oru sila nagaichuvai katchigalai thavira ippozudhuvarum padangalil, matravai ellam allupu thatugiradhu.ennai poruthavarai kalathal azhiya kalainzhgarai izhaandhu vittom.oru varthai pesamal dead bodyaaga nadithal kooda nagaichuvai kodukka mudiyum enru unarthiyavar(magalir mattum).andha pathirathil kooda mugathil oru orathil smile olindhirukkum that too without moving a muscle.great performance.may his soul rest in peace.
pin kurippu:-
sari ,neengal kaiyum narukki samayalum pramadhamaga seiveeragal thaane!!!!
nivi.

ambi said...

வாங்க கோவி அண்ணா, நீங்க சொன்ன மாதிரி ஆட்டோ சத்தம் கேக்குதா?ன்னு பாக்கறேன். :))

அவ்வை சண்முகில நல்லா பண்ணிருப்பாரு நாகேஷ்.

அபி அப்பா, ஆமா, நீங்க சொன்ன அந்த வசனம் ரொம்ப பேமஸ், உங்களை அடிச்சது குரங்கு ராதா தானே? :))
வடிவேலு கொஞ்சம் பக்கத்துல வரார்.

என்ன வல்லிமா, குவிஸ் மாதிரி டக்கு டக்குனு பதில் சொல்லீட்டீங்க, பதிவை படிக்கலையா? :))

வருகைக்கு நன்னி சின்ன பையன். :)

ஆமா நிவிக்கா, அவரு ஒரு லிஜன்ட், மகளீர் மட்டும்ல அருமையா பண்ணி இருப்பாரு. காய் நறுக்குவது மட்டும் தான் நாம எக்ஸ்பர்ட். :))

Vijay said...

//எவ்ளோ கஷ்டங்களுக்கு இடையில்,அலுவலக பணிக்கிடையில், வீட்டு வேலைகளுக்குகிடையில், காய்கறி நறுக்கி கொண்டும், பாத்திரம் தேய்த்துக் கொண்டும், டயப்பர் மாத்திக் கொண்டும்,பூரிக்கட்டை அச்சத்துடனும், நகைச்சுவையாக பதிவிடுகிறார்கள் என எண்ணிப் பாருங்கள்.//

அம்பீ, துடைப்ப கட்டைய மறந்துட்டியேபா. அது செரி, வீரத்தை காட்றீங்க போல. பாத்து பாத்து….

விஜய் said...

விவேக் மாதிரி டபுள் மீனிங்க் வசனம் பேசும் நடிகர்களுக்கெல்லாம் பத்மஸ்ரீ விருது கிடைக்கும் போது, நாகேஷ் மாதிரியான ஆட்களை கண்டுகொள்ளாதது, வேதனை அளிக்கிறது. பத்மஸ்ரீ கொடுக்காததனால், ஒன்றும் அவர் குறைந்து போய்விடப்போவதில்லை, ஆனாலும் ரொம்ப வருஷமாக தமிழ் சினிமாவில் இருந்தவருக்கு இந்த ஒரு அங்கீகாரத்தைக் கூட இந்த மாநில அரசு வழங்கவில்லை என்று நினைக்கும் போது கோபம் வருகிறது. இந்த வருடத்து தாதா சாஹெப் பால்கே விருதாவது மறைந்த பிறகு கொடுப்பார்களா? சந்தேகம் தான்.

ambi said...

@vijay, யப்பா, இப்படி பாயிண்ட் பிடிச்சு குடுத்தா நான் என்ன பண்ணுவேன்? :))

@விஜய், பால்கே அவார்டா? அதெல்லாம் சப்பாத்தி தேச காரங்களுக்கு தான். தப்பிதவறி நமக்கு எப்பவாவது கிடைக்கும். :))

மெனக்கெட்டு said...

1959 ம் ஆண்டுமுதல் 2009 வரை.
ஐம்பது ஆண்டுகள் சாதனை!

மறக்கமுடியாத சில படங்கள் :

காதலிக்க நேரமில்லை
சர்வர் சுந்தரம்
திருவிளையாடல் படத்தில் தருமி என்ற கதாபாத்திரம்,
தில்லானா மோகனாம்பாள் படத்தில் வைத்தி என்ற பாத்திரம்
நீ‌ர்‌க்கு‌மி‌ழி
தேன்கிண்ணம்,
நவக்கிரகம்,
எதிர் நீச்சல்,
அனுபவி ராஜா அனுபவி
கமலஹாசன் தயாரித்த அபூர்வ சகோதரர்கள் படத்தில் கொடும் வில்லனாகவும் அவர் தோன்றினார்.
மைக்கேல் மதன காமராஜன்,
மகளிர் மட்டும்,
அவ்வை சண்முகி,
பஞ்சதந்திரம்

நாகேஷ் நடித்த கடைசிப் படம் தசாவதாரம் ஆகும்,

சிலபடங்கள் எத்தனை முறை பார்த்தாலும், மீண்டும் மீண்டும் பார்க்கத்தூண்டுபவை.

ambi said...

@மெனெகெட்டு, ரொம்ப அருமையா அவரோட கிளாசிக் படங்களை லிஸ்ட் பண்ணிட்டீங்க. நவகிரகம் இப்ப தான் கேள்விப்படறேன்.

மெனெகெட்டு வந்ததுக்கு ரொம்ப நன்றி சார். :))

கீதா சாம்பசிவம் said...

சரியாப் போச்சு போங்க, நவகிரஹம் படத்திலே,

நவகிரஹம், நாங்க நவகிரஹம் பாட்டு ரொம்ப பிரசித்தி ஆச்சே?? என்ன எதிர்நீச்சல் வந்த உடனே வந்ததா? அதிகம் ஓடலை. வத்சலாவா அதிலே நடிச்சது லட்சுமினு நினைக்கிறேன்.

rapp said...

சூப்பர். நெறைய பேருக்கு என்னா அர்த்தத்துல கொடுக்க மாட்டேங்குறாங்கன்னே புரியல. இளையராஜா சார் சொல்றாப்படி தகுதியானவர்கள் இல்லாதப்போ விருதுக்கு மட்டும் எப்டி மவுசு வரும்? கொடுக்காம சேர்த்து வெச்சு என்ன செய்யப் போறாங்க?


ஹய்யா நான் நாகேஷ் அவர்களை பாத்து பேசிருக்கேனே:):):) ஆட்டோகிராப் கூட வெச்சிருக்கேனே:):):)


நாகேஷ் சாரோட வெர்சட்டைல் நண்பர்கள் வட்டமும் கூட அவரோட வளமான நகைச்சுவைக்கு கிடைத்த பரிசுன்னே சொல்லலாம். அதுவே கடைசி வரை அவரோட நகைச்சுவை உணர்வை மிக செழுமையாக வெச்சிருந்துச்சோன்னு தோனுது.

ambi said...

@rapp, நீங்க சொன்னது முழுக்க முழுக்க உண்மை தான் ராப். அவரௌடைய நட்பு வட்டம் பெரிசு. நேர்ல பாத்து இருக்கீங்களா? வெரி லக்கி. :))