Thursday, February 26, 2009

தங்க நகை வாங்க போறீங்களா?

ஜூஸ் போட்டபின், மிச்சம் இருக்கும் எலுமிச்சம்பழ மூடிகளை தூர எறியாமல், நட்டு கழன்ற உங்க வீட்டு ரங்கமணி தலையில் தடவி வர, ரெண்டு வாரத்தில் நல்ல முன்னேற்றம் தெரியும்! என சமையல் குறிப்புகள்(?) வரும் மாதம் ஒரு முறை வரும் ஒரு பெண்கள் பத்திரிகையில், கார்டன் சில்க்ஸ் கட்டி போஸ் குடுத்து கொண்டிருந்த மாடலை எங்கோ பாத்ருக்கோமே? என ஆழ்ந்த யோசனையில் இருந்த நான் "கிளம்புங்க, ஷாப்பிங்க் போகனும் என தங்க்ஸின் குரல் கேட்டு மறுபேச்சு இல்லாமல் கிளம்பியாச்சு.

அங்க சுத்தி, இங்க சுத்தி, கடைசில தங்க்ஸின் நண்பி ஒருத்தர் சொன்னாரேன்னு ஒரு குறிபிட்ட வகை நகையை தேடி சென்னையில் அந்த பிரபலமான நகைக் கடைக்கு போனோம். அவங்க சமீபத்துல தான் வேளச்சேரியிலும் ஒரு கடைய தொறந்து கல்லா கட்டிட்டு இருக்காங்க, யாருன்னு கண்டுபிடிங்க பாப்போம். :)

நாங்க போன அன்னிக்கு தங்கம் கிராம் ஆயிரத்து நானூற்றி ஐம்பத்தி ஏழு ரூபாய். என்ன இப்பவே கண்ண கட்டுதா? ஆமா, எனக்கும் கட்டிடுச்சு. இருந்தாலும் என்ன தான் நடக்குது பாத்துடுவோம்னு கம்முனு இருந்தேன்.

எங்களை பாத்ததும் நாங்க என்னவோ கிலோ கணக்குல வாங்க போறோம்னு நினைச்சோ என்னவோ பலத்த வரவேற்பு. ஜில்லுனு பேஃன்டா எல்லாம் குடிக்கக் குடுத்தாங்க.
கடைசில நாங்க எதிர்பார்த்து போன நகை ரெண்டு கிராம்லயும் இருக்கு, நாலு கிராம்லயும் இருக்குனு தெரிஞ்சது. அந்தாளுக்கு சப்புனு போச்சு. இருந்தாலும் வந்தவரை லாபம், கொண்ட வரை மோகம்னு சளைக்காம எங்களுக்கு நகைய எடுத்து காட்டி கால்குலேட்டரை தட்டினார்.

நாலு கிராமுக்கு எவ்ளோ வரும்னு நீங்களே கணக்கு போட்டுகுங்க. செய்கூலி கிராமுக்கு ஐம்பது ரூவாயாம். அதுக்கப்புறம் தான் மேட்டரே. சேதாரம் பதினெட்டு சதவீதம் போட்டு இருக்கோம்னு சொன்னாரு.

அதாவது நாலு கிராம் நகைய செய்யும் போது பதினெட்டு சதவீதம் வேஸ்ட்டா போச்சாம். அதுக்கும் நாம தான் மொய் எழுதனும்னு சொல்லி ஒரு ரேட்டை போட்டு மொத்தம் ஏழாயிரத்து சொச்சம் வந்திச்சு. சுருக்கமா சொல்லனும்னா நாலு கிராம் நகைக்கு ஐந்தேமுக்கால் கிராம் ரேட் வருது.

மிச்சம் இருந்த பேஃன்டாவை முழுக்க குடிச்சு முடிச்சேன்.
வீட்ல பெரியவங்களை கேட்டு ஒரு முடிவுக்கு வரோம்னு சொல்லிட்டு அந்தாளு விட்ட லூக்கை பாத்தும், பாக்காம நைசா அங்கிருந்து எஸ்கேப் ஆயிட்டோம்.

சரி, எனக்கு ஒரு சந்தேகம். நகை செய்யும் போது சேதாரம் ஆகற பதினெட்டு சதவித தங்கத்துக்கும் நாம தானே துட்டு குடுக்கறோம்? அவங்க ஏன் அந்த சேதார தங்கத்தை அல்லது தங்கப் பொடியை ஒரு பொட்டலத்துல மடிச்சு நம்மகிட்ட தர மாட்டேங்கறாங்க? தராத ஒரு பொருளுக்கு நாம ஏன் துட்டு குடுத்துட்டு இருக்கோம்? இதை பத்தி நீ என்ன நினைக்கறன்னு தங்கஸ் கிட்ட ரொம்ப சீரியஸா கேட்டேன். அம்மணி வழக்கம் போல நமுட்டு சிரிப்புடன் ஒரு லூக் விட்டுட்டு பேசாம இருந்துட்டாங்க.

இதைப் பற்றி நீங்க என்ன நினைக்கறீங்க?

பி.கு: எனக்கு பேஃன்டா பிடிக்காது, மேங்கோ ஸ்லைஸ் தான் பிடிக்கும்னு அடுத்த தடவை போகும் போது அந்த கடைக்காரர் கிட்ட சொல்லனும். :)

53 comments:

மதுரையம்பதி said...

//இதைப் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க? //

அம்பியும், அவர் தங்கமணியும் நல்லா விண்டோ ஷாப்பிங் பண்ணியிருக்காங்கன்னு நினைக்கிறேன். :-)

மணிகண்டன் said...

me the first.

மணிகண்டன் said...

மேங்கோ ஸ்லைஸ்ல நாலு பேதி மாத்திரை கலந்து தருவாரு.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

இப்படித்தான் 4 கிராம் 1 சவரனுக்கெல்லாம் நகை வாங்கினா சேதாரமெல்லாம் போடுவாங்க. அதனால நான் எப்பவுமே 10 tola bar வாங்கிடறது :)

மங்களூர் சிவா said...

இதுவரை நகை வாங்கியதில்லை.

இந்த பதிவை தங்கமணி கண்ணில் படாமல் பர்ஸை காப்பாற்ற வேண்டும் அப்படின்னு நான் நினைக்கிறேன்.

திவா said...

இந்த விஷயத்த ரொம்ப நாளா எங்க வீட்டு பெண்மணிகள் கிட்டே கேட்டுகிட்டு இருக்கேன். ஒரு சின்ன துளி தங்கம் கூட வீண் போகாது. சாம்பல்லேந்து எடுத்துடுவாங்க.எல்லாருக்குமே சேதாரம் எல்லாம் டுபாக்கூர்ன்னு தெரியுது. இருந்தாலும் இப்படித்தான் வாங்குவோம் ங்கிறாங்க.

ஒரு தரம் கடைக்கு போனப்ப கடைக்காரரிடம் கேட்டேன்: ஏம்பா பேசாம இந்த நகை இந்த விலைன்னு சொல்லிடேன். ஏன் சேதாரம் அது இதுன்னு பொய் சொல்லணும்? ஆசாமி ஏற இறங்க பாத்துட்டு பெண்களுக்கு பேரம் பேசாம நகை வாங்கினா திருப்தி ஏற்படாதுன்னார்.

இதுல ஒரு தீர்வே கிடையாது. பேசாம பர்ஸை தங்க்ஸ்கிட்டே கொடுத்துட்டு மாங்கோ ஸ்லைஸ் ஐ ருசி பாருங்க!

புகழ் said...

இந்த சேதாரம் செய்கூலிலாம் வளைகுடா நாடுகள்ல இல்ல.
ஸ்ட்ரெயிட்டா கிராம் இவ்வளவு, எத்தன கிராம் எடுக்கறீங்களோ, நீங்களே கணக்குப் போட்டு காசக்கொடுத்துட்டு வந்துர வேண்டியதுதான். இத்தனைக்கும் அப்படியும் இந்தியாவவிட வெல குறைவு தான்.

MayVee said...

sorry no experience

MayVee said...

"மதுரையம்பதி said...
//இதைப் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க? //

அம்பியும், அவர் தங்கமணியும் நல்லா விண்டோ ஷாப்பிங் பண்ணியிருக்காங்கன்னு நினைக்கிறேன். :-)"

periya repeat uu.......

ambi said...

மதுரையண்ணா, முதல் ஆளா வந்து இப்படி கல்லாய்ச்சுபுட்டீங்களே! :))

மணிகன்டன், U the second.
ஜஸ்ட் மிஸ்ஸு. :))

விட்டா நீங்களே ஐடியா குடுப்பீங்க போல. :p

ஷைலஜா said...

தங்கமான புருஷன்னு உங்கதங்கஸ் சொன்னாங்களோ இல்லையோ நான் சொல்றேன் அம்பி நீங்க தங்கக்கம்பிதான் !இப்படில்லாம் அழகா ஒரு சின்ன நகைவாங்கப்போறப்போ ஊன்றிகவனிக்கறீங்களே இந்த சமத்தெல்லாம் எங்க ரங்க்சுக்கு சுத்தமாய்வராது! மத்தபடி சேதாரவிஷயமெல்லாம் எல்லா நகைக்கடைக்காரங்களும் சொல்றதுதான் இதைவிட நாம நம்மோட கல்லுவச்ச நகையை போட்டு புதுசு வாங்கப்போனா அந்தக்கற்களை எடைல கழிச்சி தங்க எடைபோடுவாங்க, ஆனா அவங்களுதுன்னா அதை காத்துல விட்டுடுவாங்க..அப்படியே கண்டுட்டாலும் எறும்புஎடைதான் போடுவாங்க! என்ன பண்றது தாய்க்குத்தாலி செய்தாலும் தங்கம் திருடிப்பார் பொற்கொல்லர்னு பழையமொழி உண்டே!

Asalamsmt said...

வளைகுடா நாட்டில் செய்கூலி இல்லை என்று //இந்த சேதாரம் செய்கூலிலாம் வளைகுடா நாடுகள்ல இல்ல.
ஸ்ட்ரெயிட்டா கிராம் இவ்வளவு, எத்தன கிராம் எடுக்கறீங்களோ, நீங்களே கணக்குப் போட்டு காசக்கொடுத்துட்டு வந்துர வேண்டியதுதான். இத்தனைக்கும் அப்படியும் இந்தியாவவிட வெல குறைவு தான்.//

என்று புகழ் சொல்லி இருக்கிறார்.ஆனால் ஒருவேளை சவூதியில் அப்படி இருக்கலாம். நான் இருக்கும் பெஹ்ரேனில் செய்கூலி தனி தான். கோல்டு ரேட்+ செய்கூலி தனியாக தான் போடுகிறார்கள் அன்பரே.

அன்புடன்
அசலம்

Anonymous said...

enga ,enga side sad story yaarum ketka mattengla??neenga solra ella pointum correct.aanalum thangam vangamayaum irukka mudiyarthulla,thangam vela erradhum nikkala!!!ippadiyae pochunna vilai kuraiyumnnu edhirparthu emmara vendiyadhu dhaan.avanavan gold bondaa vaagi paisa paakaran.sari rengamani kitta pudhu elumichaiyudan thaan ketta ponnagai edukkyu,punnagai podhunnu reel udararu.2.thangam vilai erumnnu munjakrathai mutthanniya thalaipada adichikittalum manushan kadhula vangarthe illa.3.appadiye ponalum ungala madhiri seikooli sedharamnnu solli kannamoochi katti emmathidararu.ippadiye chichi idha pazham pulikkum naangalum veetuku vandhidrom.4.theriyama oru finance manushana kattikittu kannakku solliye kuzhapararu.5.perula mattum thangamani!!!neengalavathu samatha juice saapidareenga!!!en veetu samalippu sigarathukku solliye tharavenam!!!!!thangamani wake up.idhu rengamanikallin kootu sadhi!!!!pudhu elumichaiyai juice puzhinchu kudichirkkalam.grrrrr.....
nivi.

ramachandranusha(உஷா) said...

பி.கு: எனக்கு பேஃன்டா பிடிக்காது, மேங்கோ ஸ்லைஸ் தான் பிடிக்கும்னு அடுத்த தடவை போகும் போது அந்த கடைக்காரர் கிட்ட சொல்லனும். :)//

இதை பற்றி நான் என்ன நினைக்கிறேன் என்றால், என்னமா தாம்பத்திய ரகசியத்தை புட்டு புட்டு வைக்கிறே. ஆனா ம.சிவா மாதிரி புது
மாப்பிள்ளைங்களுக்குதான் புரியலை. ஏழாயிரத்து சொச்சம் எடுத்துக்கிட்டு விரைவில் அம்பி கடைக்குப் போக போறார்.

vinoth gowtham said...

//எனக்கு பேஃன்டா பிடிக்காது, மேங்கோ ஸ்லைஸ் தான் பிடிக்கும்னு அடுத்த தடவை போகும் போது அந்த கடைக்காரர் கிட்ட சொல்லனும்.//

அடுத்த தடவ சேதாரம் நகையுல மட்டும் இருக்காதுன்னு நினைக்கிறேன்.

இலவசக்கொத்தனார் said...

எனக்கும் ஃபேண்டா பிடிக்காது, ஸ்லைஸ்தான் பிடிக்கும் என்பதோடு நிறுத்திக் கொள்கிறேன்.

சரவணகுமரன் said...

பேஃன்டாவா? நான் கூட போண்டான்னு நினைச்சேன்...

சரவணகுமரன் said...

இந்த சந்தேகம் எனக்கும் வந்தது...

நான் நென்ச்சேன்... நீங்க சொல்ட்டீங்க... :-)

மணிகண்டன் said...

**
மணிகன்டன், U the second.
ஜஸ்ட் மிஸ்ஸு. :))
**
me saw the first commentu !! but being weak in makksu, me put "me the firstu "

ambi said...

சுந்தர், என்னது தோலாவிலா? சரி தான். ஒன்னும் சொல்றத்துக்கு இல்லை. :))

ம சிவா, இதுவரைக்கும் வாங்கலையா? தங்க்ஸ் ரெம்ப அப்பாவியா இருக்காங்களே? தப்பாச்சே! :p

திவாண்ணா, உங்களுக்கும் இந்த அனுபவம் இருக்கா? வெரிகுட். இப்ப தான் சந்தோசமா இருக்கு. அதே தான், இங்க பர்ஸ் இல்ல, கார்டு தான். :))

வாங்க புகழ், சவுதில இதெல்லாம் கிடையாதா? நல்ல தகவல். :))வருகைக்கு நன்னி.

ambi said...

மேவீ, என்னது இன்னும் அனுபவம் இல்லையா? வேலன்டைன்ஸ் டே எல்லாம் வந்து போச்சே! நீங்க சொன்னதை நம்பிட்டேன். :))

ஷைலக்கா, கல்லு விஷயத்தை சரியா சொல்லிட்டீங்க. நினைவு படுத்தியதுக்கு பெரிய நன்னி. இந்த செய்கூலி, சேதாரம் எல்லாம் அப்பா சொல்லி குடுத்தது. இப்ப உதவுது. புதிய பழமொழி, இப்ப தான் கேள்விபடறேன். நன்றி ஹை. :))

ambi said...

வாங்க அசலம், பெஹ்ரைன்ல செய்கூலி உண்டா? அடடா புதிய தகவல். உங்க ஊர்ல தங்கம் மாத்து ரொம்ப நல்லா இருக்கும்னு கேள்விபட்ருக்கேன்.முதல் வருகைக்கு மிக்க நன்றி. :)

வாக்ன்க நிவியக்கா, பொங்கி எழுந்து இப்படி பாயிண்ட் பாயிண்டா கேட்டா பாவம் உங்க ரங்கு என்ன பண்ணுவார்? பைனான்ஸ் மக்கள் இதுல ரொம்ப கறாரா இருப்பாங்க இல்ல? தங்கம் மேல ஏன் தான் இப்படி ஒரு ஈடுபாடோ இந்த பெண்களுக்கு. :))

உஷாஜி, கரக்ட்டா பி.குல பாயிண்டை புடிச்சிடீங்க. ஆனா ரெண்டாம் தடவையும் கூல் ட்ரிங்க்ஸ் குடிச்சிட்டு நாங்க கம்பிய நீட்டிருவோம். :))

ராமலக்ஷ்மி said...

//அவங்க ஏன் அந்த சேதார தங்கத்தை அல்லது தங்கப் பொடியை ஒரு பொட்டலத்துல மடிச்சு நம்மகிட்ட தர மாட்டேங்கறாங்க?//

சர்ர்ர்ரியான கேள்வி![தான்..., ஆனால் கேட்கப் போனா ஃபேன்டா இல்ல தண்ணி கூட தரமாட்டாங்களே:))!]

அபி அப்பா said...

அம்பி! நகை எல்லாம் அடுத்து! இந்த பதிவ என் வீட்டுல பார்க்காம இருக்க எதுனா வழி இருக்கா?

rapp said...

me the 25th:):):)

rapp said...

//சமையல் குறிப்புகள்(?) வரும் மாதம் ஒரு முறை வரும் ஒரு பெண்கள் பத்திரிகையில், கார்டன் சில்க்ஸ் கட்டி போஸ் குடுத்து கொண்டிருந்த மாடலை எங்கோ பாத்ருக்கோமே? என ஆழ்ந்த யோசனையில் இருந்த நான்//இதுவே அந்தப் பத்திரிகை ஆங்கிலத்துல இருந்தாக்கா கஞாசான்னு கேட்டிருப்பேன்:):):)
ஊப்ஸ் ஆனா, அதுல புடவை விளம்பரம்லாம் வராதுல்ல:):):)

rapp said...

//நாலு கிராமுக்கு எவ்ளோ வரும்னு நீங்களே கணக்கு போட்டுகுங்க. செய்கூலி கிராமுக்கு ஐம்பது ரூவாயாம். அதுக்கப்புறம் தான் மேட்டரே. சேதாரம் பதினெட்டு சதவீதம் போட்டு இருக்கோம்னு சொன்னாரு.

அதாவது நாலு கிராம் நகைய செய்யும் போது பதினெட்டு சதவீதம் வேஸ்ட்டா போச்சாம். அதுக்கும் நாம தான் மொய் எழுதனும்னு சொல்லி ஒரு ரேட்டை போட்டு மொத்தம் ஏழாயிரத்து சொச்சம் வந்திச்சு. சுருக்கமா சொல்லனும்னா நாலு கிராம் நகைக்கு ஐந்தேமுக்கால் கிராம் ரேட் வருது.//
இந்த மாதிரி தேவையில்லாத கணக்கெல்லாம் காது கொடுத்து கேட்டு, அந்த கடைக்காரரும் கெத்தா, வேணும்னே ஏதாச்சும் ஒரு கணக்காவது நம்மள போட வெக்கிறேன் பேர்விழின்னு பவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ஆக்கறதாலதான் நான் தங்க நகை வாங்கறதயே விட்டுட்டேன். இப்போல்லாம் யாராவது பரிசா கொடுத்தா மட்டும் பெரிய மனசு பண்ணி ஏத்துக்கறது:):):)

அறிவன்#11802717200764379909 said...

அம்பி,
இதில் ஒன்றும் பெரிய ரகசியம் இல்லை.

இதில் சம்பந்தப்படுவர்கள் இரண்டு தரப்பினர்.கடைக்காரர்,இன்னொருவர் ஆச்சாரி.
ஆசாரியிடம் நகை செய்யத் தங்கம் கொடுக்கும் போது,2கி நகை 20 செய்யச் சொன்னால்,ஆசாரி கடைக்காரரிடம் கேட்கும் தங்கம் 40 கி அல்ல,65 கி.
நகை செய்த எடை கழித்து மீதம் கொடுக்கும் தங்கத்தில்தான் தன் வேலையைக் காண்பிப்பார் ஆசாரி.

அந்த இழப்பை ஈடுகட்டும் விதமாகவே செய்யப்பட்ட நகைகளில் சேதாரம் வசூலிப்பார்கள் கடைக்காரர்கள்.

இது ஒரு வட்டம்.நுணுகி ஆராய்ந்தால் கடை வைப்பவர் கோடிக்கணக்கில் முதலீட்டில் அடையும் லாபத்தில் பாதிக்கு மேல் ஆசாரி வேலையை மட்டும் கற்று வைத்துக் கொண்டு சம்பாதிப்பார்.

எல்லாம் விடிவது உபயோகிப்பாளர் தலையில்தான் !

ஒன்று மட்டும் உறுதி.நம்பிக்கையான கடையில்,சேதாரம் கொடுத்து செய்யப்படும் நகைதான் ஓரளவு நல்ல தரத்தில் இருக்கும்.

ஜீவன் said...

"தங்க நகை வாங்க போறீங்களா?"

இதே தலைப்பில் என் பதிவு! படியுங்கள்!!
http://pirathipalippu.blogspot.com/2009/02/blog-post_9248.html

ஜீவன் said...

அறிவன்#11802717200764379909


///ஆராய்ந்தால் கடை வைப்பவர் கோடிக்கணக்கில் முதலீட்டில் அடையும் லாபத்தில் பாதிக்கு மேல் ஆசாரி வேலையை மட்டும் கற்று வைத்துக் கொண்டு சம்பாதிப்பார்.////

அறிவன் தங்கள் பெயரை போலவே மிகுந்த அறிவுடன் கருத்து தெரிவித்து இருக்கின்றீர்கள்!!

//கொடுக்கும் தங்கத்தில்தான் தன் வேலையைக் காண்பிப்பார் ஆசாரி.//

என்ன அறிவு!! மெய் சிலிர்கிறது!! நன்றி!

http://pirathipalippu.blogspot.com/2009/02/blog-post_9248.html

முடிந்தால் இதை படித்து பாருங்கள்!!

ஜீவன் said...
This comment has been removed by the author.
MayVee said...

"ambi said...
மேவீ, என்னது இன்னும் அனுபவம் இல்லையா? வேலன்டைன்ஸ் டே எல்லாம் வந்து போச்சே! நீங்க சொன்னதை நம்பிட்டேன். :))"

இல்லைங்க...
அப்ப அசின் துபாய் ல ஷூட்டிங் ல இருந்தாங்க...
ஆதனால் கொண்டாட முடியல .........
நயன் தாரா .... த்ரிஷா கூட ஊரில் இல்லை....
ஹி ஹி ஹி

(அவங்க ஜெர்மனி ல MS படிக்கிறாங்க...)

அறிவன்#11802717200764379909 said...

\\அறிவன் தங்கள் பெயரை போலவே மிகுந்த அறிவுடன் கருத்து தெரிவித்து இருக்கின்றீர்கள்!!\\

ஆம்.சந்தேகமில்லாமல்!

\\//கொடுக்கும் தங்கத்தில்தான் தன் வேலையைக் காண்பிப்பார் ஆசாரி.//

என்ன அறிவு!! மெய் சிலிர்கிறது!! நன்றி!\\

ஏன் மெய் சிலிர்க்க வேண்டும்?
ஆம் அல்லது இல்லை என்று சொல்லி அதற்கான தரவுகளைத் தரலாமே?

\\http://pirathipalippu.blogspot.com/2009/02/blog-post_9248.html

முடிந்தால் இதை படித்து பாருங்கள்!!\\

படித்தேன்.
91.6 தரத்தில்தான் நகைகள் செய்ய ஆசாரியிடம் தங்கம் கொடுக்கப்படுகிறது.செய்யும் நகையைப் பொறுத்து சிறிதளவு தங்கம் சேதமாகலாம்.ஆனால் எல்லா நகைகளிலும் அவ்வளவு சேதம் ஆவதில்லை.காட்டாக கை வெட்டு கிளாஸ் கட்டிங் செயினில் என்ன சேதாரம் ஆகும்? ஆனால் அதற்கும் 4-5% சேதாரம் கொடுத்துத்தான் செய்ய வேண்டியிருக்கிறது.(16 கி செயின் செய்ய ஆசாரி 700 மிலி வசூலிக்கிறார்,அதுவும் கட்டைகளாகச் செய்து இணைக்கும் வேலைதான்..அதில் பற்ற வைக்கவோ,அல்லது நுணுக்கமாக ராவுவதற்கோ தேவையிருக்கிறதா? அதில் எங்கு 700 மிலி சேதாரம் வருகிறது? ) இல்லாமல் ஆசாரி செய்கிறாரா?

செய்பவருக்கு 4% கொடுக்கும் கடைக்காரர் 8% ஆவது வாடிக்கையாளரிடம் வசூல் செய்வது தவிர்க்க இயலாதது.

நகை செய்த்து போக ஆசாரியால் மீதம் திருப்பப்படும் தங்கம் ஒரிஜினலாக நகை செய்யக் கொடுக்கப் படும் தங்கத்தின் தரத்திலேயே இருக்கும் என்று நெஞ்சார உறுதியாக சொல்வீர்களா?

எனக்கும் 50 வருடத்திற்கும் மேலான நகை விற்பனை அறிவு இருக்கிறது!நான் சொன்ன விதயங்கள் எல்லாம் அந்த அடிப்படையில் சொன்ன உண்மைகள்தான் !
பொதுமனிதர்களிடம் வேண்டுமானால் நீங்கள் என்ன விதமான வாதங்களை வேண்டுமானாலும் வைக்கலாம்,தொழில் பற்றிய அறிவு நிரம்பிய என்னிடம் அல்ல!

கைப்புள்ள said...

//மேங்கோ ஸ்லைஸ்ல நாலு பேதி மாத்திரை கலந்து தருவாரு.//

ROTFL :)))

//இந்த சேதாரம் செய்கூலிலாம் வளைகுடா நாடுகள்ல இல்ல.
ஸ்ட்ரெயிட்டா கிராம் இவ்வளவு, எத்தன கிராம் எடுக்கறீங்களோ, நீங்களே கணக்குப் போட்டு காசக்கொடுத்துட்டு வந்துர வேண்டியதுதான். இத்தனைக்கும் அப்படியும் இந்தியாவவிட வெல குறைவு தான்.//

அம்பி! புகழ் நல்ல ஐடியா குடுத்துருக்காரு. அடுத்த வாட்டி நகை வாங்கனும்னா துபாய் போயிடுங்க.
:)

ambi said...

வினோத், அடுத்த தடவையா? நாங்க போனாத் தானே? :p

கொத்ஸ், ஹிஹி, எல்லாம் அனுபவம் பேசுது போல. சீனியர்னா சீனியர் தான். ஆக நீங்களும் வெறும் ஜூசை குடிச்சிட்டு வந்ருவீங்களா? :))

சரவண குமரன், என்னது போண்டாவா? பதிவர் மாநாடுனு நினைக்காம இருந்தீங்களே. உங்களுக்கும் இதே டவுட் தானா? வெரிகுட். :))

மணி கன்டன், நீங்களும் மேத்ஸ்ல வீக்கா? ஹிஹி, நானும் தான். :))

ambi said...

@ரா ல, இதுக்கு தான் என்னை மாதிரி ஜுஸ் எல்லாம் குடிச்சிட்டு கேள்வி கேக்கனும்னு சொல்றது. நீங்களும் இங்க பெங்களூர்ல ட்ரை மாடி ப்ளீஸ். :))

என்ன அபி அப்பா, துபாய்ல இருக்கீங்க, புகழ் வேற சேதாரம் இல்லை, செய்கூலி இல்லைன்னு சொல்றாரு. அபி அம்மா ரெம்ப அப்பாவி போலிருக்கே. :))

வாங்க ராப், நீங்களும் கணக்குல வீக்கா? பரிசா? இது கூட நல்ல ஐடியாவா இருக்கே? எனக்கு பரிசு தர எப்போ இந்தியா வரீங்கன்னு சொன்னா வசதியா இருக்கும். :))

அறிவன் சார், ஐம்பது வருஷம் அனுபவமா நகை துறைல? வியப்பா இருக்கு. முடிஞ்சா உங்க அனுபவங்களை ஒரு தொடரா போடுங்களேன்.

ambi said...

வாங்க ஜீவன், உங்க பதிவை இப்பத் தான் படிச்சேன். எங்க ஊர்லயும் (நெல்லை) வாய்க்கால்களில் ஒரு க்ரூப் தங்கத்தை தேடுவாங்க.

சரி நேர விஷயத்துக்கு வருவோம்:

எந்த துறையை எடுத்து கொண்டாலும் அதில் நிறை குறைகள் கண்டிப்பா இருக்கும். இது ஐ.டி துறையினார், மருத்துவராகட்டும் எல்லாருக்கும் பொருந்தும்.

நீங்க நேர்மையாளரா இருப்பதால் எல்லாரும் உண்மையா இருப்பாங்கன்னு உங்களால் முதல்ல சொல்ல முடியுமா?

என் கேள்வி ரொம்ப சிம்பிள்:

ரேஷன்ல சர்க்கரை வாங்கும் போது எடை குறைந்தா சண்டைக்கு போறோம். (எவ்ளோ படத்துல பாத்த்ருக்கோம்).

ரேஷன் ஆள் கீழே சிந்தறத்துக்கு எல்லாம் நாம காசு குடுக்க முடியுமா?

ஆனா இங்க இல்லாத தங்கத்தின் எடைக்கு எக்ஸ்ட்ரா காசு குடுக்கறோமே? ஏன்? என்பது தான் என் கேள்வி.

இதுவும் ஒரு பழம் இந்தா இருக்கு. இன்னோன்னு தான் இதுவும்னு சொல்ற மாதிரி இல்ல இருக்கு. :))

ரைட்டு, ஷைலஜா அக்கா மறுபடி வருவாங்களான்னு எனக்கு தெரியாது, அதனால உங்க கேள்விக்கு நானே பதில் சொல்றேன்.

தாய் தந்தையின் அறுபதாம் கல்யாணத்துக்கு பிள்ளைகள் தான் தாலி செய்வாங்க எங்கூர்ல. உங்க ஊர்ல எப்படியோ? :))

தமிழ்ல இருக்கும் சில பழமொழிகளை அப்படியே அர்த்தம் எடுத்துக்க கூடாது/முடியாது. :))

உங்கள் வருகைக்கும், சுட்டிக்கும் நன்றி.

ஜீவன் said...

///அறிவன்#11802717200764379909 said///////நகை செய்த்து போக ஆசாரியால் மீதம் திருப்பப்படும் தங்கம் ஒரிஜினலாக நகை செய்யக் கொடுக்கப் படும் தங்கத்தின் தரத்திலேயே இருக்கும் என்று நெஞ்சார உறுதியாக சொல்வீர்களா?///

எனக்கும் 50 வருடத்திற்கும் மேலான நகை விற்பனை அறிவு இருக்கிறது!நான் சொன்ன விதயங்கள் எல்லாம் அந்த அடிப்படையில் சொன்ன உண்மைகள்தான் !
பொதுமனிதர்களிடம் வேண்டுமானால் நீங்கள் என்ன விதமான வாதங்களை வேண்டுமானாலும் வைக்கலாம்,தொழில் பற்றிய அறிவு நிரம்பிய என்னிடம் அல்ல!///


பொது மனிதர்களிடம் வாதம் செய்வதை விட உங்களை போன்ற தொழில் அறிவு இருப்பவர்களிடம் வாதம் செய்வதே எனக்கு சுலபமாக இருக்கும்!

தற்போது நகை தொழில் செய்பவர்களிடம் இருந்து செய்து வாங்க படும் நகைகள்
டெஸ்டிங் செய்யப்பட்டுதான் வாங்க படுகிறது என்பது உங்களுக்கு தெரிந்து இருக்கும்.
அதேபோல அவர்களிடம் இருந்து திரும்ப வாங்க படும் தங்கத்தை சோதிக்க முடியாதா?

அதோடு பெரிய அளவில், பெரும்பான்மையில் என்ன நடக்கிறது என்பதை பொறுத்துதான் கருத்து சொல்ல வேண்டும்.

சென்னை,கோவை போன்ற நகரங்களில் அதிக அளவு நகை உற்பத்தி ஆகிறது.
நீங்கள் எந்த இடத்தை சேர்ந்தவர் என தெரியவில்லை.சில இடங்களில் நடக்கும்
விசயங்களை கொண்டு முழுமையான தீர்வினையும் சொல்லி விட முடியாத

இந்தியாவில் திருடர்கள் இருக்கலாம்! அதனால், இந்தியாவை திருடர்கள் நாடு என்று
சொல்ல முடியுமா?

ஒட்டு மொத்தமாக நகை தொழில் செய்பவர்கள் எல்லாரும் தவறானவர்கள் என்ற வகையில் உங்கள் கருத்து உள்ளது அதை கவனித்து பாருங்கள்!!

ஜீவன் said...

//Blogger ambi said...///

///தாய் தந்தையின் அறுபதாம் கல்யாணத்துக்கு பிள்ளைகள் தான் தாலி செய்வாங்க எங்கூர்ல. உங்க ஊர்ல எப்படியோ? :))///

வாதத்திற்கு உங்கள் பதில் ரசிக்கும் படி இருக்கலாம்.அல்லது நான் சொன்ன பதிலுக்கு
என்னை மடக்குவதாகவும் வைத்துக்கொள்ளலாம். எதுவாகினும்!!

உலகம் முழுவதும் பார்க்கபடுகின்ற ஒரு ஊடகத்தில் ''பொற்கொல்லர் திருடுவார்''
என்ற வார்த்தை நியாயமா????


///தமிழ்ல இருக்கும் சில பழமொழிகளை அப்படியே அர்த்தம் எடுத்துக்க கூடாது/முடியாது. :))///

உண்மை!!! இதை பழமொழி சொன்னவர்கள் உணர வேண்டும்.

ஜீவன் said...

/////91.6 தரத்தில்தான் நகைகள் செய்ய ஆசாரியிடம் தங்கம் கொடுக்கப்படுகிறது.செய்யும் நகையைப் பொறுத்து சிறிதளவு தங்கம் சேதமாகலாம்.ஆனால் எல்லா நகைகளிலும் அவ்வளவு சேதம் ஆவதில்லை.காட்டாக கை வெட்டு கிளாஸ் கட்டிங் செயினில் என்ன சேதாரம் ஆகும்? ஆனால் அதற்கும் 4-5% சேதாரம் கொடுத்துத்தான் செய்ய வேண்டியிருக்கிறது.(16 கி செயின் செய்ய ஆசாரி 700 மிலி வசூலிக்கிறார்,அதுவும் கட்டைகளாகச் செய்து இணைக்கும் வேலைதான்..அதில் பற்ற வைக்கவோ,அல்லது நுணுக்கமாக ராவுவதற்கோ தேவையிருக்கிறதா? அதில் எங்கு 700 மிலி சேதாரம் வருகிறது? ) இல்லாமல் ஆசாரி செய்கிறாரா?////

நன்றி! நன்றி!! நன்றி!!!

தங்களின் இந்த கேள்விக்கு மிக்க நன்றி!!
16 கிராம் செயின் செய்ய ஆசாரிக்கு 700 மிலி சேதம் கொடுக்க படுகிறது.
(நீங்கள் எந்த இடத்தில் இருப்பவர் என தெரியவில்லை.பெரிய நகரங்களில்
அப்படி வழங்க படுவது இல்லை) சரி உங்கள் வாதப்படியே வைத்து கொள்வோம்
700 மிலி ஆசாரிக்கு கொடுக்கும் கடைக்காரர்கள் வாடிக்கையாளரிடம் எவ்வளவு
வாங்குகிறார்கள் ஆசாரிக்கு கொடுப்பது 4.5%. ஆனால் மக்களிடம் வாங்குவது 18%. இது சரியா? தொழில் அறிவு நிரம்பிய நீங்கள் இதற்க்கு என்ன சொல்ல போகிறீர்கள்?

700 ஆசாரிக்கு கொடுக்கும் கடைக்காரர்கள் வாடிக்கையாளரிடம் வாங்குவது
கிட்ட தட்ட 3 கிராம்.இது நியாயமா ?
50 வருட தொழில் அனுபவம்! ஆனால் நீங்கள் நகை தொழில் செய்பவர் இல்லை என்பது தெரிகிறது! அப்படியானால் நீங்கள் கடை அதிபரா ? நீங்களும் மக்களிடம்
அப்படிதான் வாங்குகிறீர்களா?

சென்னையில் வருடம் தோறும் நகை வியாபாரிகளுக்கான கண்காட்சி
நடைபெறும் அதில் எப்படிப்பட்ட தொழில் நுட்பங்களுடைய நகை இருந்தாலும் 4-8%
கூலியில் கிடைக்கும் எல்லாம் 91.6 kdm என ஹால் மார்க் சான்றிதழுடன் கிடைக்கும். தேவை பட்டால் வாங்கி செல்லுங்கள்.

(உங்களை காயப்படுத்த வேண்டும் என எந்த நோக்கத்திலும் நான் எழுதவில்லை.
எதாவது சில வார்த்தைகள் உங்களை காய படுத்தி இருந்தால்
வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்)

அறிவன்#11802717200764379909 said...

ஜீவன்,
டெஸ்டிங் மிஷினின் விலை எவ்வளவு?(எனக்குத் தெரிந்து சுமார் 80 லட்சம் மூன்றாண்டுகளுக்கு முன்,இப்போது எவ்வளவு என்று தெரியவில்லை!)

தமிழகத்தின் அவ்வளவு நகைக்கடைகளிலும் அதை நிறுவ முடியமா?

முடியாதவர்களுக்கு செய்த நகைகளின் தரத்தை சோதிக்க வேறு என்ன வழி?

செய்து முடித்து வரும் நகைகளில் ஒரு பீசை உருக்கி தரத்தைப் பரிசோதிக்கலாம்.

ஒவ்வொரு வகை நகைகளிலும் ஒரு பீசை உருக்கி தர சோதனை செய்து கொண்டிருந்தால் அதில் அடையும் சேதார,கூலி,தங்க இழப்பை ஆசாரி ஈடுகட்டுவாரா?

அதன் மூலம் அதிகபட்சம் ஆசாரி ஏமாற்றுகிறார் என்பதை அறிந்து கொள்ளலாம்,அவ்வளவுதான்..

ஆனால் ஒரே ஒரு முறை தரமற்ற நகையை வாடிக்கையாளருக்கு விற்கும் கடைக்காரர் அந்த வாடிக்கையாளர் மூலம் 100 வாடிக்கையாளர்களை இழப்பார..எனவே எப்போதும் firing line ல் இருப்பவர்கள் கடைக்காரர்கள்தான்..எனவேதான் ஆசாரி அதிகம் சேதம் கேட்டாலும்,தரத்தில் கை வைக்காதே என்ற கண்டிப்புடன் தொழிலில் இருக்க வேண்டியிருக்கிறது,மீதம் திருப்பும் தங்கத்தின் தரத்தில் ஆசாரி கை வைத்தாலும் !!!

மேலும் நல்ல வகையில் நகையை செயது கடைக்கு கொடுக்க வேண்டும் என்பதில் ஆசாரிக்கு இருக்கும் அழுத்தத்தை விட,நல்ல நகையை வாடிக்கையாளருக்குக் கொடுக்க வேண்டும் என்ற கடைக்காரருக்கு இருக்கும் அழுத்தம் அதிகம்.
இந்த சூழலில் எவர் அதிகம் தவறு செய்வார்???????


மற்றபடி,எங்காவது ஒரு ஆசாரிதான் அப்படி தவறாக இருக்கிறார் என்ற உங்கள் கூற்றில் ஒரே ஒரு மாறுதால்தான் செய்ய விருப்பம்.

எங்காவது ஒரு ஆசாரிதான் சரியாக இருக்கிறார் !!!!

அறிவன்#11802717200764379909 said...

16 கிராம் செயினுக்கு வாடிக்கையாளரிடம் 3.000 கிராம் சேதம் என்று சொன்னால் வாடிக்கையாளரே கடைக்காரரின் முகத்தில் அடிப்பார.

நாங்கள் வாங்குவது 1.200 லிருந்து 1.500 க்குள்.(கவனியுங்கள் அந்த 800 மிலி லாபம் கடைக்காரர் தங்கம் வாங்கி விற்கச் செய்த முதலீட்டில் இருந்து கடைக்கு செய்யும் ஏசி செலவு வரை பார்த்து அடையும் லாபம்.

ஆசாரி டெக்னிகலாகப் பங்களிப்பது ஒன்றுதான்.ஆனால் அதிலும் நிறைய முறை தவறுகிறார்கள் என்பதால்தான் இவ்வளவு எழுத வேண்டியிருந்தது.)

அதற்கும் அதிகமாகச் சொன்னால் வாடிக்கையாளர்,அம்பி எடுத்துக் காட்டியதைப் போல அப்பாவிடம் கேட்டுக் கொண்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு ஜூஸைக் குடித்து விட்டு அடுத்த கடையில் போய் வாங்கிக்கொண்டு போய்விடுவார் !!!
Ambi-just on fun indenting !)

ஜீவன் said...

அய்யா! அறிவன் அவர்களே!
நீங்க எங்க இருக்கீங்க?
டெஸ்டிங் மிசின் என்பது லட்சமா ?
அதும் உருக்கி டெஸ்டிங் போடனுமா ?
நான் என்ன சொல்ல?

டெஸ்டிங் மெசின் இப்போ ஐந்து லட்சதுதுக்கும்
கீழே வந்து விட்டது! எந்த நகையையும் உருக்கி
போட அவசியமில்லை! அப்படியே சோதிக்கலாம்!
அப்படி சோதிக்க வெறும் இருபத்து ஐந்து ரூபாய்தான்
கட்டணம்!

ஒரு தனி மனிதன் தன் நகையை சோதிக்க முடியும்!
வெறும் இருபத்தைந்து ரூபாய் செலவில்!!///நாங்கள் வாங்குவது 1.200 லிருந்து 1.500 க்குள்.(கவனியுங்கள் அந்த 800 மிலி லாபம் கடைக்காரர் தங்கம் வாங்கி விற்கச் செய்த முதலீட்டில் இருந்து கடைக்கு செய்யும் ஏசி செலவு வரை பார்த்து அடையும் லாபம்.///


சரி பதிவில் சதவீதம்18% கொடுத்து வாங்கப்பட்டது தன் இங்கே விசயமே?
அது சரியா?தவறா ? அதான் மேட்டர்.
நீங்கள் வாங்குவதோ,அல்லது நான் செய்வதோ இங்கே விஷயம் இல்லை.

அதே சமயம்4-5%
நகை செய்பவர்களுக்கு கொடுக்க படுகிறது என ஒரு நகை வியாபாரத்தில் இருக்கும் நீங்கள் சொல்லி இருப்பதற்கு நன்றி!
மேலும் நீங்கள் கொடுத்த தங்கத்தை வாங்கிய ஆசாரி தரம் குறைந்த தங்கத்தை
திரும்ப கொடுத்தால்,அது சட்ட மீறல் இல்லையா?இப்போது கிராமங்களில் கூட
அப்படி செய்ய முடியாது. உங்களிடம் அப்படி செய்தால் ஆதாரத்துடன் நடவடிக்கை
எடுங்கள். தொடர்ச்சியாக ஆசாரி எங்களை ஏமாற்றுகிறார் என சொல்லி கொண்டு
அவர் மேல் நடவடிக்கை எடுக்காமல் இருந்தால்? சொல்பவர்கள் மீதும் எதோ தவறு இருக்க கூடும்.

அறிவன்#11802717200764379909 said...

\\நீங்க எங்க இருக்கீங்க?
டெஸ்டிங் மிசின் என்பது லட்சமா ?
அதும் உருக்கி டெஸ்டிங் போடனுமா ?
நான் என்ன சொல்ல?\\

ஐயா,நீங்க ரொம்பக் குழம்பி இருக்கீங்கன்னு நினைக்கிறேன்.

நான் சொன்னது டெஸ்ட் செய்வதற்கான இரண்டு வழிகள் பத்தி,ஒன்று மிஷின்.இரண்டாவது மிஷின் இல்லாத பட்சத்தில் உருக்கி மச்சம் என்று சொல்லும் தரப் பரிசோதனை.
மிஷினில் உருக்கிப் பார்க்க வேண்டும் என்று எங்ஙணயும் சொல்லலீங்கண்ணா..கன்பியூஸ் ஆகாதிங்க...

முதலிலேயே சொன்னேன்,மிஷினின் விலை மூன்றாண்டுகளுக்கு முன்னர் உள்ள நிலவரம் என்று.
இப்போது 5 லட்சமாக இருந்தாலும் எல்லா கடைக்காரருக்கும் அது கட்டுபடியாகுமா?

///நாங்கள் வாங்குவது 1.200 லிருந்து 1.500 க்குள்.(கவனியுங்கள் அந்த 800 மிலி லாபம் கடைக்காரர் தங்கம் வாங்கி விற்கச் செய்த முதலீட்டில் இருந்து கடைக்கு செய்யும் ஏசி செலவு வரை பார்த்து அடையும் லாபம்.///\\மேலும் நீங்கள் கொடுத்த தங்கத்தை வாங்கிய ஆசாரி தரம் குறைந்த தங்கத்தை
திரும்ப கொடுத்தால்,அது சட்ட மீறல் இல்லையா?இப்போது கிராமங்களில் கூட
அப்படி செய்ய முடியாது. உங்களிடம் அப்படி செய்தால் ஆதாரத்துடன் நடவடிக்கை
எடுங்கள்.\\

என்னங்க இப்படி ஜோக் அடிக்கிறீங்க?
கடைக்காரங்க ஆசாரியை நியமிச்சு வேலை செய்து வாங்குகிறார்கள்.அவங்களுக்குள்ள லீகல் காண்ட்ராகட் எல்லாம் யாரும் போட்றது இல்லைங்க,நடைமுறையில்..
அவங்க கொஞ்சம் தங்கம் அடிக்கிறாங்கங்குறது கடைக்காரங்களுக்கும் தெரியும்.ரொம்ப அடிக்காமப் பாத்துக்கணும்.அவ்வளவுதான் விஷயம்.

அவங்க மேல போலீஸ்ல கம்ப்ளெயிண்ட கொடுக்கச் சொல்றீங்களா,இல்லை கோர்ட்ல கேஸ் போடச் சொல்றீங்களா?

அதெல்லாம் வேலியில போற ஓணானை பிடிச்சு வேட்டிக்குள்ள விட்டுக்குற காரியம் இல்லைங்களா?

கடைக்காரனுக்கு வேற வேல வெட்டி இல்லைங்களா?

நாளைக்கும் அதே ஆசாரிதானே திரும்ப கடைக்கு நகை செஞ்சு குடுக்கனும் ?????

ambi said...

யப்பா மேவீ, த்ரிஷா ஜெர்மனில படிக்கறாஙக(?)னு பெரிய பெரிய தகவல் எல்லாம் தந்து இருக்கீங்க. எல்லாம் சரி, நயன் தாராவை எல்லாம் இழுக்காதீங்க, நான் அளுதுடுவேன். :))

@கைப்பு, நீங்க சொன்னா ஒக்கே தல, டிக்கட்டுக்கு காசை சங்கத்துல வாங்கிக்கட்டுமா?

உங்களுக்கும் எத்தனை கிலோ வேணும்னு சொன்னா அபப்டியே அள்ளிகிட்டு வந்து அண்ணி கிட்ட குடுத்து காசை வாங்கிக்க எனக்கு வசதியா இருக்கும். :))

ஜீவன் said...

மெசின் இல்லாத பட்சத்துலஅப்படின்னு நீங்க எங்கயும் சொல்லல
அதோட ,கடைக்கு கடை டெஸ்டிங் மெசின் வாங்கி வைக்கணும்னும் நான் சொல்லல
டெஸ்டிங் பண்ண இருபத்தி ஐஞ்சு ரூவா போதும் அதான் சொன்னேன்.

கொழம்பி இருக்குறது யாரு ? நானா நீங்களா?


///என்னங்க இப்படி ஜோக் அடிக்கிறீங்க?//

ஆசாரிகிட்ட தங்கம் கொடுப்பாங்களாம் ஆசாரி குறைஞ்ச தரத்துல நகை செய்ஞ்சு கொடுப்பாராம் ஆனா இவங்க நடவடிக்கை எடுக்காம அவங்ககிட்டயே தொடர்ந்து
வேலை கொடுப்பாங்களாம்.

இதாங்க ஜோக்!!!

ஆசாரி தரம் கொறைச்சு செய்ஞ்சா உங்களுக்கு பாதிக்கும் அப்படி இருந்தும்
ஏன் அவர்கிட்டயே கொடுக்கணும் ?கடைகாரர் தரமான தங்கத்தை கொடுத்து
ஆசாரி தரம் கொறைச்சு செஞ்சா பார்த்துகிட்டு எந்த நியாயமான கடைகாரரும் சும்மா இருக்க மாட்டார் !!

ambi said...

@ஜீவன், உங்களை மடக்கனும்னு எல்லாம் எனக்கு எண்ணம் இல்லை.

அரியும் சிவனும் ஒன்னு, அறியாதவன் வாயில மண்ணு!னு ஒரு பழமொழி இருக்கு.

இத கேட்டு எங்களுக்கு ரெண்டு பேரையும் தெரியாது! அப்ப எங்க வாயில மண்ணா?னு ஒரு கிறிஸ்து அல்லது முஸ்லீம் கோவப்பட முடியுமா?

இல்ல இந்த பழமொழிய எப்படி நீங்க இணையத்துல போட்டீங்க?னு தான் கோவப்பட முடியுமா?

மேலும் அந்த பழமொழியை இயற்றியது கண்டிப்பா ஷைலஜா அக்கா இல்லைனு மட்டும் எனக்கு நல்லாத் தெரியும். :))


மற்றபடி உங்களுக்கும் அறிவன் சாருக்கும் நடக்கும் உரையாடல் ரொம்ப சுவாரசியமா இருக்கு. அடிச்சி ஆடுங்க. :))

புலவர்களுக்குள் சர்ச்சை இருக்கலாம், சச்சரவு இருக்கக் கூடாது. :))

என் பதிவுக்கு வரும் எல்லாரும் சந்தோஷமாக வந்து செல்ல வேண்டும் எனபது தான் என் ஒரே எண்ணம். (டேக் லைனை பாருங்க அண்ணே)

So please stay cool dear Jeevan. :))

ambi said...

@அறிவன் சார், நீங்க சொல்றத்துக்கு எல்லாம் கோச்சுக்க மாட்டேன்.

எவ்வளவோ பாத்துட்டோம், இதுக்கெல்லாம் அசருவோமா? :))

அறிவன்#11802717200764379909 said...

என்னங்க ஜீவன்,
இதுக்கும் மேல எப்படி விளக்குவது என்று தெரியவில்லை.

இப்போ இன்னொரு சீனரியோ சொல்றேன் பாருங்க..

ஒரு கட்டட இன்ஜினியர் அல்லது காண்ட்ராகடர் இருக்கறாருன்னு வச்சுக்குவோம்.அவர் வேலை\தொழில் கட்டடங்களைக் கட்டித் தரேன்னு ஒப்பந்தம் எடுத்து நல்ல விதமா கட்டிக் கொடுக்குறது.

அவர்கிட்ட கொத்தனார்கள் நிறையப் பேரு இருப்பாங்க..ஆனா நிரந்தரமா அவர்கிட்ட மாச சம்பளம் வாங்கிகிட்டு இருக்க மாட்டாங்க.ஒரு கட்டடம் கட்ட ஒப்பந்தம் கிடைத்த உடன் ஆளுங்களை கூட்டி காண்ட்ராகடர் வேலையை ஆரம்பிப்பார்;கட்டறது என்னவோ கொத்தனார்தான்,ஆனால் பணம் கொடுக்கறவங்களுக்குப் பதில் சொல்லும் பொறுப்பு,ஒப்பந்தத்தில இருக்கிற காண்ட்ராகடர்.எண்ட் ரிசல்ட்ல வீடு சரியா வர்லைன்னா,காண்டராக்டர் சரியில்லை,அவர்கிட்ட ஒப்பந்தம் கொடுக்காதீங்க,அப்படின்னுதான் பப்ளிக் சொல்லுவாங்க.

இது ஒரு ஆங்கிள்.

காண்ட்ராக்டர்கிட்ட இருக்கிற தொழிலாளிகள் கிட்ட இருக்கிறவங்க ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி இருப்பாங்க.ஒருத்தர் சின்சியரா 8 மணி நேரம் வேலை செய்வார்..ஆனால் அவரால செங்கல் எடுத்து வைச்சு பெரிய ஏரியாவுக்கு சிமண்ட் அடிக்கும் பொத்தாம் பொதுவான வேலைகள்தான் சரியா வரும்.நல்ல குழைவுடன் கூடிய ஏதாவது ஒரு வேலையைக் கொடுத்தா அவர் சொதப்புவார்;இன்னொரு கொத்தனார் இருப்பாரு,நல்ல திறமைக்காரர்,குழைவுடன் கூடிய டிசைன்கள்ளாம் அற்புதமா வேலை செய்வார்;ஆனால் 8 மணி நேர வேலையில 16 தடவை வெளிய போவார்,தம் அடிக்கிறேன்னு இடையில கீழ இறங்குவார்;சள சளன்னு பேசி மற்ற வேலைக் காரங்க வேலை வேகத்தையும் கெடுப்பார்.

ஆனால் அவரை வைத்தும் வேலை வாங்கி ஆக வேண்டிய கட்டாயம் காண்டராக்டருக்கு இருக்கு.

ரொமப் மொறைச்சா அவர் கரண்டியைத் தூக்கிப் போட்டுட்டு போயிடுவார்,காண்ட்ராகடருக்கு வேலை நின்னுடும்.

கண்டிக்காமலேயே இருந்தாலும் வேலை நடக்காது.அதுக்காக கண்டிக்கனும்னா போலீஸ்ல ஏன் சொல்லலைன்னு கேட்கக்கூடாது.அப்படியே போனாலும் அவங்க காண்ட்ராகடரை 'நீ ஏன்யா அவனை வேலைக்கு கூப்பிட்ற' அப்படின்னுதான் கேட்பாங்க.

ஆக,அவரைத் தவிர்க்க முடியாது.அவரை வைத்து வேலையும் வாங்க வேண்டும்;அவர் ரொம்பவும் டிமிக்கி அடிக்காமப் பாத்துக்கவும் வேணும்.

நீ ஏன் கொத்தனார் வச்சு வேலை பாக்குற,ஏதாவது மிஷின் வச்சு பூச்சு வேலை அல்லது குழைவு வேலை பாக்க வேண்டியதுதானேன்னு கேக்கக்கூடாது.எல்லா எடத்துலயும் மிஷின் வச்சு வேலை பாக்க முடியாது.

அதிலயும் திறமையான காண்ட்ராக்டர்கள் மிஷின் வச்சுப் பாக்குற வேலையே மிஷினை வச்சும்,பெரிசாப் பூச்சு ஓட்டுற வேலையை அந்த முதல்ல சொன்ன கொத்தனாரை வச்சும்,குழைவுடன் கூடிய வேலையை இரண்டாவது கொத்தனாரை வச்சும் தான் செய்வாங்க,அடிக்கடி கண்காணிச்சு கண்டிப்பா பேசினாலும் !

அதைத்தான் நாங்களும் செய்து கொண்டு இருக்கிறோம்.

என்ன ஒரு பிரச்னைன்னா,பெரும்பாலான கொத்தனார்கள் இரண்டாவது வகை ஆட்களாத்தான் இருக்காங்க..

இனிமயும் பிரியலன்னு சொல்லாதீங்க,நான் அழுதிடுவேன்...

அறிவன்#11802717200764379909 said...

மற்றபடி பப்ளிக்குக்கு:

தங்கநகை உற்பத்தியில் பின்னூட்டங்களில் காணப்படும் இன்னும் இங்கு விவரிக்கப்படாத சிக்கல்கள் எல்லாம் இருக்கின்றன.

பொதுவான இரண்டு மதிப்பீடுகள் இருக்கின்றன,நல்ல,தரமான நகை வாங்க வேண்டுமெனில்:
1.கடை -நெடுநாட்கள் பலரிடம் நல்ல பெயர் வாங்கிய கடையாக இருக்க வேண்டியது அவசியம்.கூலி இல்லை,சேதாரம் இல்லை என்பதெல்லாம் பெரும்பாலும் கிம்மிக்காக இருக்க வாய்ப்பிருக்கிறது.தரமான கடைகளில் சேதாரம் போடத்தான் செய்வார்கள்;ஏனெனில் அவர்கள் சேதாரம் கொடுத்துத்தான்(தரத்தை உறுதி செய்வதற்காக) செய்வார்கள்.அதனுடன் கடைக்காரரின் லாபமும் சேதாரம் மூலமாகத்தான் வசூலிக்கப்படும்,இது ஒன்றும் ரகசியம் அல்ல.பொதுவான ஒரு அளவுகோல்-10 முதல் 12 % வரை சேதாரம் மாறுபடலாம்,நகையின் டிசைனைப் பொறுத்து.அதிகம் வளைவுகள்,குழைவுகள் உள்ள நகைகள்,கல் பதித்திருக்கும் நகைகள் ஆகியவற்றில் சேதம் அதிகம் விதிக்கப்படும்,அவற்றின் தயாரிப்பிலும் சேதம் அதிகம் செலுத்தப்படுவதால் !
2.எந்தக் கடையில் அவர்களிடம் வாங்கிய பழைய நகையையே அதிகம் கழிவு இல்லாமல் திரும்ப எடுத்துக் கொள்கிறார்களோ,அவர்கள் ஓரளவு தரமான,நியாயமான வணிகர்கள்.(அதிகபட்சம் அன்றைய சில்லரை விலையில் 10 % கழிப்பார்கள்...அதாவது அதிக பட்சம்!).பிற கடைகளில் வாங்கிய நகைகளை பெரும்பாலும் வாங்க மாட்டார்கள் அல்லது உருக்கித்தான் மதிப்பீடு செய்வார்கள்.

எல்லாவற்றிற்கும் மேல் தங்க நகை விற்பனையில் அரசின் வரி விதிப்பும் கொள்கைகளும் எவ்வளவு நியாயமான நீதிமானும் முழுமனத்துடன் ஒத்துக் கொண்டு கடைப்பிடிக்க முடியாதவை.இது போன்ற சூழலும் இந்த வணிகத்தின் மறைமுகத்தன்மையை அதிகம் ஊக்குவிக்கிறது....

வல்லிசிம்ஹன் said...

தங்கமணிக்குத் தங்கம் வாங்காம திரும்பிய அம்பிய என்ன சொல்றது:)

Madhusoodhanan said...

O C Fanta aditchitu vandhuteenga ..sabash fanta kudikardhukku idhu nalla idea :)

ambi said...

வல்லிம்மா, ஹிஹி, புத்திஷாலின்னு கூட சொல்லலாம். :))

@மது, ஆமாங்க, அடுத்த தடவை ஒசி ஸ்லைஸ் குடிக்க உத்தேசம். :))