பெங்களூரில் இருந்து மதுரைக்கு செல்லும் ஒன்னே ஒன்னு! கண்ணே கண்ணு டிரெயினில் லல்லு பிரசாத் யாதவுக்கு மட்டுமே டிக்கட் கிடைக்கும் போலிருக்கு. ஒரு மாதம் முன் கூட்டியே ஆன்லைனில் டிக்கட் நிலவரம் பார்த்தால் வெய்டிங்க் லிஸ்ட் என பல்லிளிக்கிறது.
மதுரை - தென் தமிழகத்தின் தலை நகரம். இரவு பன்னிரெண்டு மணிக்கு கூட சுடசுட இட்லியும், தொட்டுக்க மூனு வகை சட்னிகளும், போதாகுறைக்கு தளதளவென கொதிக்கும் சாம்பாரும் தந்து, நல்லா பிணைஞ்சுச் சாப்டுங்கண்ணே! காசில்லாட்டி நாளைக்கு தாங்க!என பாசத்தை போதிக்கும் உறங்கா நகரம். தென் மாவட்ட மக்களுக்கு ஏதெனும் கேஸ், வாய்தான்னாலும் மதுரை தான். வெட்டு குத்து கேசில் ஆஸ்பத்திரி என்றாலும் மதுரை தான்.
இங்கு பல விஷயங்கள் பேசி தீர்க்கபடுகின்றன, சில விஷயங்கள் தீர்க்கப்பட்டு பேசப்படுகின்றன.
இங்குள்ள மக்களுக்கு வாக்கும்,கையும் ரொம்பவே சுத்தம். மதுரை மல்லி, ஜில் ஜில் ஜிகர் தண்டா, முருகன் இட்லி கடை, தமிழ் மாதங்களின் பெயர்களில் வீதிகள் என தனக்கே உரிய சிறப்புடன் திகழ்வது மதுரை தான்.
மதுரை மீனாட்சி அம்மனை தம் வீட்டுப் பெண்ணாகவே பாவிக்கின்றனர். நீ பண்றது கொஞ்சம் கூட நல்லாயில்ல, உன் மனசுல என்ன தான் நினச்சுட்டு இருக்க?ன்னு மீனாட்சி கோவிலில் என் அருகில் இருந்த ஒரு அம்மா மிக இயல்பாக அம்மன் சன்னதியை பாத்து கேக்க எனக்கு அது ஒன்றும் வியப்பாக இல்லை.
ஏப்ரல் எட்டாம் தேதி கும்பாபிஷேகத்துக்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது மீனாட்சி கோவில். இப்போதெல்லாம் டூரிஸ்ட் கூட்டம் ரொம்பவே அதிகம். கோவிலை சுற்றி இருக்கும் வீதிகளை சிமெண்ட் தளம் அமைத்து வாகனங்கள் நுழையாதவாறு செய்து விட்டனர். உருப்படியான விஷயம். அப்படியே பொற்றாமரைக் குளத்தையும் தூர் வாரினால் நல்லா இருக்கும்.
மதுரையிலும் மெல்ல மெல்ல அப்பார்ட்மெண்ட் கலாச்சாரம் அடி எடுத்து வைத்து இருக்கிறது. இன்னும் டைடல் பார்க் வேற வரப் போகுதாம். வரிசையாக மால்கள், நாப்பது ரூபாய்க்கு ஒரு பாக்கெட் பாப்கார்ன், ஐநாக்ஸ் எல்லாம் வந்து விடும். மீனாட்சி தான் காப்பாத்தனும்.
எதிரியை ஓட ஒட விரட்டியவரே! தென் மண்டல தளபதியே! நாளைய நாடாளுமன்றமே! ( நல்ல வேளை, ஜனாதிபதி மாளிகையை விட்டு வெச்சாங்க), எதிரிகளுக்கு பட்டை நாமம் சாத்தியவரே! எதிர்கால சிம்மாசனமே! - இதெல்லாம் அஞ்சா நெஞ்சரை போற்றி ஒட்டப்பட்ட போஸ்டர்கள் தான். சும்மாவா? சங்கம் வெச்சு தமிழ் வளர்த்த மதுரையாச்சே!
மதுரைக்கு போகும் போது பஸ்ஸில் போக்கிரி படம் போட்டார்கள். ஏதோ அசினுக்காக படத்தை பாத்தாச்சு. திரும்பி வரும் போது கன்டக்டருக்கு என்ன தோணியதோ டபக்குனு வில்லு பட டிவிடியை போட்டு விட்டார். என்ட்ரி சாங்குல ராமன் கிட்ட வில்லை கேட்டேன், பீமன் கிட்ட கதய கேட்டேன்னு வரிசையா இளைய தளபதி அடுக்கிக் கொண்டே போக, டக்குனு ஒரு பெரியவர், ஏம்பா! இனிமே டைரக்டர் கிட்ட கதைய கேளுப்பா முதல்ல!னு சத்தமா சொல்ல பஸ் முழுக்க சிரிப்பொலி. மதுரைகாரங்க நக்கல் நையாண்டி, குசும்புக்கு ரொம்பவே பெயர் பெற்றவர்கள் என சொல்வது உண்மை தானே?
46 comments:
//பெங்களூரில் இருந்து மதுரைக்கு செல்லும் ஒன்னே ஒன்னு! //
அந்த கண்ணே கண்ணை திருநெல்வேலி [தூத்துக்குடி போகுது] வரை டைரக்ட் ட்ரெயினா விடக் கூடாதான்னு லல்லு தி க்ரேட்டுக்கு ஒரு விண்ணப்பம் அனுப்பணும்னு ரொம்ப நாளா நினைச்சுட்டிருக்கேன்:)! அதுக்குள்ள வெற்றிகரமா ப்ராஃபிட் காமிச்சு பிரமிக்க வைக்கிறவர் ஆட்சி காலம் முடிஞ்சிடும் போலிருக்கு:(!
ஊர் வம்பு சுறுசுறு மொறுமொறு:))!
//ம்பா! இனிமே டைரக்டர் கிட்ட கதைய கேளுப்பா முதல்ல!//
Simply Super! கலக்கரேள் அம்பி..
ராமலட்சுமி, அந்த ஒரே ட்ரெயின் தான் மதுரை வழியா நெல்லை டச் பண்ணாம மணியாச்சி வழியா தூத்துகுடிக்கு போகுதாக்கும்.
மணியாச்சியில் இருந்து ஒரு பாசஞ்சர் வண்டி உங்களை பிக்கப் பண்ண ரெடியா இருக்கும். :))
நன்றி அருண். :)
//நன்றி அருண். :)//
நிறைய எழுதுங்கோ அம்பி.
//மணியாச்சியில் இருந்து ஒரு பாசஞ்சர் வண்டி உங்களை பிக்கப் பண்ண ரெடியா இருக்கும். :))//
தெரியும் அம்பி, அந்த பாடாவதி பாசஞ்சரில் போக முடியாமல்தான் கோவில்பட்டியில் [முன்னர் மதுரையில்] இறங்கி எப்பவும் காரில் பயணம், திருநெல்வேலிக்கு. திருநெல்வேலியை விட தூத்துக்குடி தொழில் நகரமென்பதால் அடிச்சுக்கிட்டு ஜாக்பாட்டை என்பது வேறு காதில புகைதான்:)!
//பெங்களூரில் இருந்து மதுரைக்கு செல்லும் ஒன்னே ஒன்னு! //
எங்க ஊருக்கு அந்த train காலையில 4.30க்கு போகும். அரை தூக்கத்துல எழுந்து போகணும் :(
இப்ப எல்லாம், 2-3 மாசத்துக்கு முன்னாடியே ரிசர்வேசன் ஃபுல் ஆயிடுது. அதனால, பெங்களுர்ல இருந்து கார் தான் best choice.
//நிறைய எழுதுங்கோ அம்பி.
//
@arun, ஆசை தான். வாரம் ஒரு பதிவுன்னு டார்கட் வெச்சிருந்தேன். இப்ப அதுவே ரொம்ப கடினமா இருக்கு. :(
//கோவில்பட்டியில் [முன்னர் மதுரையில்] இறங்கி எப்பவும் காரில் பயணம், //
!ரா-ல, அத விட தெரிஞ்ச கார்/டிரைவரா இருந்தா மணியாச்சிக்கு வர சொல்லலாமே? கி.மீ குறையும். பணமும் தான். :))
//எங்க ஊருக்கு அந்த train காலையில 4.30க்கு போகும். //
@arun, அப்ப உங்க ஊர் திண்டுக்கல்லா? :))
அம்பி, தொடரும் போட மறந்துட்டீயா? பாதியில நிக்கிற பீலிங்
@உஷாஜி, கரக்ட்டா பாயிண்டை புடுச்சீங்க, எழுதின எனக்கும் அதே பீலிங்க் தான். எனக்கு என்டிங்க் ட்ரபிள் போலிருக்கு. :))
நான் மதுரையை சுற்றி பார்த்ததில்லை ......
ஹோச்டேல் யில் இருந்த போது மதுரை பசங்க ரொம்பவும் ஊர் பாசத்தை காட்டுவாங்க.....
அவங்க சொன்னதையும் நீங்க சொன்னதையும் பார்க்கும் போது மதுரை யை பார்க்க ஆவலாய் இருக்கிறது
//@arun, அப்ப உங்க ஊர் திண்டுக்கல்லா? :))//
இல்லங்க. கொடுமுடி தெரியுமா?
//மதுரை பசங்க ரொம்பவும் ஊர் பாசத்தை காட்டுவாங்க.....
//
@Mayvee, ஆமா, ரொம்பவே. கண்டிப்பா ஒரு தரம் பாருங்க. ஆனா ஏப்ரல், மே, ஜூன் தாண்டி போங்க. வெயில் கொளுத்திடும். :))
//கொடுமுடி தெரியுமா?
//
@arun, கேள்விபட்ருக்கேன். ஆனா பாத்ததில்லை, நாம என்னிக்கு ட்ரெயின்ல அதுவும் அந்த நேரத்துல முழிச்சு இருக்கோம்? :))
மலை சார்ந்த இடமோ?
மண் மணம் மாறா மதுரை அப்படின்னு பெயர் வைத்து எழுதியிருக்கலாம்.
\\மதுரை - தென் தமிழகத்தின் தலை நகரம். இரவு பன்னிரெண்டு மணிக்கு கூட சுடசுட இட்லியும், தொட்டுக்க மூனு வகை சட்னிகளும், போதாகுறைக்கு தளதளவென கொதிக்கும் சாம்பாரும் தந்து, நல்லா பிணைஞ்சுச் சாப்டுங்கண்ணே! \\
விடிய விடிய கிடைக்கும் :-)
\\ஏப்ரல் எட்டாம் தேதி கும்பாபிஷேகத்துக்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது மீனாட்சி கோவில்.\\
மீண்டும் கும்பாபிஷேகமா? இப்பத்தானே 94/95’இல் கும்பாபிஷேகம் நடந்தது.
அம்பி, சித்திரைத் திருவிழா பற்றி ஒரு போஸ்ட் போடுங்க :-)
//
மலை சார்ந்த இடமோ?//
=)) No Chance!
காவிரி ஆத்தங்கரையில இருக்குங்க அம்பி. உங்களுக்கு எப்படி தாமிரபரணியோ அதே போல எனக்கு காவிரி.
கி.மீ குறைந்தாலும் அந்த ரோடில் எந்தக் காரில் சென்றாலும் மு.வ வந்திடும்.[அதாங்க, முதுகுவலி:)].
அம்மா வீட்டிலிருந்துதான் வண்டி வரும். கோவில்பட்டி டு திலி ரோடு இப்போது நன்றாக விஸ்தகரித்திருக்கிறார்கள்.
மதுரை பத்தி படிக்கும்போது மணமணக்குது :) நன்றி அம்பி.
போக்கிரி, வில்லு லோட நிறுத்திகிட்டீங்க..
நல்லவேளை மதுர படத்தை போடல, தொடல :)))
பயணக்கட்டுரை? பேஷ் பேஷ்!
வாங்க விஜய்,
ஆமா, 12 வருஷத்துக்கு ஒரு தரம் எல்லா கோவிலுக்கும் குடமுழுக்கு பண்ணனும் என்பது ஆகம விதி.
ஆனா குட முழுக்கு பண்றது நாம தலையில தண்ணி விட்டுகற மாதிரியோ, கூகிள்காரன் ஓசில குடுக்கற பிளாகுல பதிவு எழுதற மாதிரியோ ரொம்ப ஈசி இல்ல. :))
முதலில் டப்பு வேணும், எடுத்து கூட்டி செய்ய ஆள், அமைப்பு ஒற்றுமை வேணும்.
சரியான முகூர்த்தம் அமையனும். அதுக்கே ப்ரச்னம் வெச்சு பாப்பாங்க.
சித்திரை திருவிழாவா? பாத்து பல வருஷமாகுது. கற்பனை கலந்து எழுதினா மதுரை மக்கள்ஸ் பின்னிடுவாங்க. :))
கண்டிப்பா ஒரு தரம் ட்ரை பண்றேன்.
@அருண், காவிரிக்கரையா, சூப்பர். :)
@ரா ல, ஆமா உண்மை தான். மு.வ வந்துடும். கோ-பட்டி டு திலி ரோடு இப்ப தங்க நாற்கர சாலையாயிடுச்சே! டி.ஆர் பாலு கைங்கர்யம்.
கைங்கர்யம்ன்னு நான் ரோடு போட்டதைத் தான் சொன்னேன். :))
வாங்க கவிநயா அக்கா, நீங்க வருவீங்கன்னு எனக்கு தெரியும். :)
@புலி, வேணாம், நான் இதுக்கே பயந்து போயி இருக்கேன். :)
ரொம்ப நன்னி திவாண்ணா. :))
enga urai pathi ninga ezuthi nanga padikkauma?? ellam neram. Ajith Letter! :P:P:P:P:P:P:P
innum padikkalai, vanthu padikkiren. :P
கீதா மேடம், உங்களை யாரு அதுகுள்ள ஊர்லேருந்து வரச் சொன்னது? மூக்குல வேர்த்து வந்தாச்சா? :))
அம்பி எங்க ஊரைப் பற்றி நல்லபடி எழுதினதால் பிழைத்தீர்கள்...இல்லைன்னா பெங்களூர்லயும் ஆட்டோ/கார் எல்லாம் அனுப்பியிருப்போம். :-)
மதுரை மாநகரப் பெண்கள் மீனாக்ஷியிடம் பேசுவதை பார்க்க நீங்க மதுரைக்குப் போகணுமுன்னு இல்லை, பி.டி.எம் லேஅவுட் வந்தால் என் அம்மா பேசுவதைப் பார்க்கலாம்... :-)
//நல்லபடி எழுதினதால் பிழைத்தீர்கள்...இல்லைன்னா பெங்களூர்லயும் ஆட்டோ/கார் எல்லாம் அனுப்பியிருப்போம்//
@M'pathi, ஊர் பேரை சொன்னதும் எப்படி இருந்த நீங்க இப்படி ஆயிட்டீங்க? :))
அப்படியா? அவசியம் வந்து பாக்கறேன். ஆமா, மீனாக்ஷின்னு நீங்க மன்னிய தானே குறிப்பிடறீங்க? :p
ஒரே ஒரு தரம் மதுரைக்கு போய் இருக்கேன், இப்ப உங்க பதிவை படிச்சவுடன் திரும்ப போகணும் போல தோணுதே :)
தாரணி ப்ரியா,
ரொம்ப நன்றி.சித்திரை திருவிழாவுக்கு போயிட்டு வாங்க.
மௌலி, பாவம் அம்பி! ஏசி காரா பாத்து அனுப்புங்க!
//ஏசி காரா பாத்து அனுப்புங்க!//
திவண்ணா, என்ன ஒரு வில்லத்தனம்? :))
//ஆமா, மீனாக்ஷின்னு நீங்க மன்னிய தானே குறிப்பிடறீங்க? :p//
தப்பு அம்பி, இன்னும் சில தடவை நீங்க என் வீட்டுக்கு வரணுமுன்னு தோணுது. :-)
வீணா விஜய் ரசிகர்களை பகைச்சுக்கிறீங்க.. நல்லா இல்லே
@மதுரை அண்ணா, லேசுல ஒத்துக்க மாட்டீங்களே! :))
@இளா, நீங்க சொல்றதும் சரி தான். இருந்தாலும் ஒரு மனுசன் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு தானே? :))
//காசில்லாட்டி நாளைக்கு தாங்க!என பாசத்தை போதிக்கும் உறங்கா நகரம்.//
//வெட்டு குத்து கேசில் ஆஸ்பத்திரி என்றாலும் மதுரை தான்.//
ரெண்டுத்துக்கும் சம்பந்தம் வந்துடாதே:):):) நெஜமாவே காசில்லாட்டி விட்டிருவாங்களா?
//நீ பண்றது கொஞ்சம் கூட நல்லாயில்ல, உன் மனசுல என்ன தான் நினச்சுட்டு இருக்க?ன்னு மீனாட்சி கோவிலில் என் அருகில் இருந்த ஒரு அம்மா மிக இயல்பாக அம்மன் சன்னதியை பாத்து கேக்க எனக்கு அது ஒன்றும் வியப்பாக இல்லை.//
அண்ணே, அது அம்மனைப் பாத்துதான் கேட்டாங்களா:):):) உறுதியா தெரியுமா:):):)
Thanks for the post about Madurai Ambi.
If you want to collect some points about Chitrafestival means, just call me 0 99625 60938. I can help you.
Thanks,
Karthikeyan G
PS: Did you saw the Endhiran poster of Annan Alagiri?
@ராப், நம்பிக்கைக்கு உரியவங்கன்னா விட்ருவாங்க. தன்னை ஏமாத்றான்னு தெரிஞ்சா அருவாள் தான். :))
இதெல்லாம் டூ மச். நல்லா கெளப்பறாங்க பீதிய. சும்மா இரு தாயி. :))
கார்த்திக், உதவிக் கரம் நீட்டியதுக்கு ரெம்ப நன்னி. என் அம்மாவுக்கும் மதுரை தான். எந்திரனா? டூ மச்சா இருக்கே? எங்க ஒட்டிருந்தாங்க? :))
ஆப்பு அம்பி, மதுரை மக்கள் சார்பா உங்களை எச்சரிச்சு வைக்கிறேன், எப்படி இருந்த மெளலி எப்படி ஆயிட்டாருனு பார்த்தீங்க இல்லை?? ஜாக்கிரதை!
@கீதா பாட்டி, மெளலி அண்ணா என்னிக்குமே எங்க கட்சியாக்கும். எல்லாம் நம்ம டிரெயினிங்க். :))
நன்னி! என்ன ஒரு வில்லத் தனம்?? எல்லாரையும் நீங்க சொல்லுவீங்க, உங்களை நான் சொல்லறேன், என்ன ஒரு வில்லத் தனம் அம்பி??? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
//எதிரியை ஓட ஒட விரட்டியவரே! தென் மண்டல தளபதியே! நாளைய நாடாளுமன்றமே! ( நல்ல வேளை, ஜனாதிபதி மாளிகையை விட்டு வெச்சாங்க), எதிரிகளுக்கு பட்டை நாமம் சாத்தியவரே! எதிர்கால சிம்மாசனமே! - இதெல்லாம் அஞ்சா நெஞ்சரை போற்றி ஒட்டப்பட்ட போஸ்டர்கள் தான். சும்மாவா? சங்கம் வெச்சு தமிழ் வளர்த்த மதுரையாச்சே//
ரொம்ப நக்கல் சார் உங்களக்கு..
தில்லும் தான்..
Ambi,
Please visit the link http://picasaweb.google.com/kuttikarthi.007/MaduraiEvents?feat=email#5308238295254567746 for annan's photo. and write some blog about it.
disci: Veetuku auto vandhaal naan poruppu alla. :-))
யோவ் என்னய்யா கத அளக்கிற? மாட்டு தாவணி பஸ்ஸாண்டுல ஒரு கிலோ ஆரங்சு பழம் பத்து ரூபாங்க. பக்கதுல போனா ஒரு பழம் பத்து ரூபாயினு சொல்லி ஏமாத்துவானுக. சரியான ஏமாத்துக்காரனுக ஊரு. இவரு என்னடா ஓசி ல இட்லி சாப்பிடலாம். முதல மதுர போயிருக்கிறா?
அப்புறம் சங்கம் வைத்து தமிழ் வளர்க்கிறதுல்லாம் அதுக்கு தெரியுமா? தமிழ் தெரியாதவனுக்கு தான். நம்ம ஆளுவ தமிழ வெளிநாட்டுல சங்கம் வைத்து வளர்க்கிறானுவ. ஓரே ரவுடிபய ஊரு. ஆனா படத்துலயும் நிஜத்திலயும் மதுரை காரனுவ தற்பெருமை அடிச்சுகிட்டே இருப்பானுவ. ஆனா ரொம்ப மோசமா பயலுவ. தமிழ்நட்டிலே மோசமான் ஊரு மதுரை தான். சென்னைக்கு ஒரு கூவம் சாக்கடை.மதுரக்கு வைகை சாக்கடை.
யோவ் அம்மான்ச்சி மப்புல ஒன்னு பதிவு போடலையே. அவ்வள்வு பொய் அளந்துறுக்க...
pokkiri-ya asinukkaga partha villA nayantara-vukkaga parthuttu pogavendiyathu thanaEda ambi:-)
Post a Comment