Wednesday, March 18, 2009

யூத் விகடனில் அம்பி

"உங்களுக்கு பத்திரிகையில எழுதறத்துக்கு எல்லாம் ஆர்வம் இல்லையா?"னு ஷைலஜா அக்கா மையமாய் கேட்டவுடன் எனக்கே சிரிப்பை அடக்க முடியலை.

அதுகெல்லாம் நமக்கு அறிவு பத்தாதுனு எனக்கே தெரியும். இருந்தாலும் ஆசை யாரை விட்டது? நான் எழுதினதுல ஏதாவது தேறுமா?னு பாத்து சொல்றேன் அப்படினு பாலிஷ்ஷா சொல்லிட்டு வந்தாச்சு.

யூத் விகடனில் நிரந்தரமாய் திண்ணை கட்டி ஆட்சி செய்து வரும் ராமலட்சுமி அக்காவிடமிருந்து தீடிர்னு இன்று காலை ஒரு மெயில். 'விட்' அப்படினு புதுசா ஒரு பக்கம் யூத் விகடன்ல ஆரம்பிச்சு இருக்காங்க. உங்க பதிவை அனுப்புற வழிய பாருங்க அப்படினு அன்பு கட்டளை.

யாருக்கு அனுப்பனும்? எப்படி அனுப்பனும்? மெயில் ஐடி என்ன?னு நான் குடைஞ்ச குடைசலில் பாவம் வெறுத்து போயி அவங்களே பழத்தை உறிச்சு குடுத்துட்டாங்க. (ஏன்டா இந்த பயலுக்கு சொன்னோம்?னு அவங்களுக்கு ஆயிருக்கும்). அப்புறம் அவங்க சொன்ன ஒரு பதிவை கொஞ்சம் டிங்கரிங்க் பண்ணி ஒரு வழிய அனுப்பியாச்சு. இவன் பதிவு வரலைன்னா என் தலைய போட்டு உருட்டுவானேன்னு ராம லட்சுமி அக்கா தன் குல தெய்வத்துக்கு நேர்ந்துகிட்டதா உறுதி செய்யப்படாத தகவல் வந்தது.

சக்தி விகடனை உருவாக்கறதுல மொட்டை பாஸா செயல்பட்ட ஷைலஜா அக்காவிடமும் மேற்படி விஷயத்தை சொல்லிட்டு நான் பாட்டுக்கு அலுவலக பிசில(சரி, இதுக்கே துப்பினா எப்படி?) இதை மறந்தே போயிட்டேன்.

சாயந்தரமா ராமலட்சுமி அக்காவிடமிருந்து "யப்பா! யூத் விகடன்ல வந்துடிச்சுபா!"னு மறுபடி மெயில். அவங்க வேண்டிகிட்ட குல தெய்வம் அவங்களை கைவிடலை.ஏற்கனவே இங்க எழுதின பதிவு தான். இதோ இந்த சுட்டில போயி பாத்து உங்க மேலான கருத்துக்களை மறக்காம அள்ளி தெளியுங்க. :)

எனக்கும் ரொம்ப சந்தோஷம் தான், ஆனா ஒரு சின்ன குறை. என் படைப்பை சுட்டி விகடன்ல பதிப்பாங்கன்னு நெனச்சேன், இப்படி யூத் விகடன்ல போட்டுடாங்களே பா! :)

30 comments:

கீதா சாம்பசிவம் said...

//ஆனா ஒரு சின்ன குறை. என் படைப்பை சுட்டி விகடன்ல பதிப்பாங்கன்னு நெனச்சேன், இப்படி யூத் விகடன்ல போட்டுடாங்களே பா! :)//

நியாயமாப் பார்த்தா தாத்தா விகடனிலே வந்திருக்கணும், போகிறது, வாழ்த்துகள். எப்போ ட்ரீட்??? எனக்குப் பிடிச்ச ஐடமா இருக்கணும்!

கீதா சாம்பசிவம் said...

ஹை, மீ த ஃபர்ஷ்டு??? அதுக்கு என்ன தரப் போறீங்க? :P

vinoth gowtham said...

வாழ்த்துக்கள்

Sridhar Narayanan said...

உங்களுக்கு வாழ்த்து தெரிவிக்கிறதை விட உங்க பதிவை வெளியிட்ட யூத் விகடனுக்கு வாழ்த்துகளை தெரிவிச்சிக்கிறேன். :-))

ஷைலஜா said...

இவன் பதிவு வரலைன்னா என் தலைய போட்டு உருட்டுவானேன்னு ராம லட்சுமி அக்கா தன் குல தெய்வத்துக்கு நேர்ந்துகிட்டதா உறுதி செய்யப்படாத தகவல் வந்தது.

சக்தி விகடனை உருவாக்கறதுல மொட்டை பாஸா செயல்பட்ட ஷைலஜா அக்காவிடமும் மேற்படி விஷயத்தை <<<<<<<<<<<<<<<<<<<<<


அம்பி டச்
இதான்!!!

ம்ம்ம்,,,,,,கலக்குங்க!ஆசிகள்!வாழ்த்துகள்!பாராட்டுக்கள்!

ராமலக்ஷ்மி said...

உங்கள் எத்தனைப் பதிவுகளுக்கு மனம் விட்டு சிரித்திருக்கிறோம்? இப்போ பதிவுலகம் தாண்டி, யாம் பெற்ற இன்பத்தை இவ்வையகத்து தமிழரெல்லாம் பெற வேண்டாமா ?

'விட்' பிரிவின் திண்ணையில் நிரந்தர இடம் பிடிக்க வாழ்த்துக்கள் அம்பி:)!

ராமலக்ஷ்மி said...

//என் படைப்பை சுட்டி விகடன்ல பதிப்பாங்கன்னு நெனச்சேன், இப்படி யூத் விகடன்ல போட்டுடாங்களே பா!//

சுட்டி விகடன்..? சரிதான் இன்னும் உங்க ப்ரொஃபைல் படத்தை விட்டு வெளிய வருவேனாங்கிறீங்களே:)! அதான் இப்போ யூத் விகடன்-ல வந்தாச்சே. அடுத்த படைப்புடன் யூத் படமும் வரட்டும்:)!

.:: மை ஃபிரண்ட் ::. said...

வாழ்த்துக்கள். :-)

Anonymous said...

vazthukkal ambi,indhamadhiri niraya neenga (ella languagella ezhidanalum,naanga padippom) ezhudhanum.thodarkadhaye ezhudinalum naanga padikkirom. chinna sandhegam....chinna ambi ellam irukkum bothu youthnnu sonna appuram juniour ambi kochukka poran."mudhu perum ezuthaalar ambi avargale"nnu sonnal evaalovu naalla irukku.by the way,treat engannu sonna nalla irukkum.le meridian,trident,taj edhunnalum okay.kudumbathhoda varrom,pasakkara ambi..illa..
nivi.

நாகை சிவா said...

EKI :)

வாழ்த்துக்கள் !

முத்துலெட்சுமி-கயல்விழி said...

நிவி ரொம்ப ஃபாஸ்டா இருக்காங்க.. சூப்பர்.. நாங்களும் குடும்பத்தோட வாரோம்.. பெங்களுருல எந்த ஃபைவ்ஸ்டார் நல்லதுன்னு பாத்து வைங்க..

முதுபெரும் எழுத்தாளர் அம்பியுடன் ஒரு சந்திப்புன்னு பதிவெழுதனும்.. :)

அபி அப்பா said...

ஆஹா வாழ்த்துக்கள் அம்பி!மிக்க சந்தோஷம். அப்படியே விட் விகடல்ல உங்க பக்கத்துல நமக்கும் ஒரு துண்டு போட்டு வையுங்க. வரேன்!:-))

Kathir said...

வாழ்த்துக்கள்...

கவிநயா said...

வாழ்த்துகள், விகடன், ராமலக்ஷ்மி, ஷையக்கா, அம்பி - இந்த வரிசைல :)

CVR said...

வாழ்த்துக்கள்!
செம காமெடி போஸ்ட் அது!

அங்கிட்டு கூட நம்ம கும்பல்தான் கமெண்ட் போட்டுகிட்டு இருக்காங்க போல :)

திவா said...

:-))
வாழ்த்துக்கள் அம்பி!

MayVee said...

வாழ்த்துக்கள் அம்பி ......
நீங்க அம்பி இல்ல நீங்க தங்க கம்பி

Anonymous said...

வாழ்த்துக்கள்

கைப்புள்ள said...

வாழ்த்துகள் அம்பி.

sindhusubash said...

வாழ்த்துக்கள்!!!!!!!!

Vijay said...

ஆஹா!!!! அம்பீஈஈஈஈ.... வாழ்த்துக்கள்... வாழ்த்துக்கள்.... வாழ்த்துக்கள்... என்னாடா இத்தினி வாழ்த்துன்னு பாக்கறியா? ஹா...ஹா. ஹா.... அதே பதிவா...சோ.... என் அதே பின்னூட்டம். உங்களை மாதிரி அடிக்கடி நல்லா எழுத வந்தா பரவாயில்ல...எப்போவாச்சும் ஒரு தடவதானே எனக்கு எல்லாம் ஒர்க் அவுட் ஆகுது. அதான் பின்னூட்ட கயமைதனத்த பண்ணிட்டேன். ஏதோ பாட்டு பாடி(பதிவு எழுதி) பேரு வாங்கும் உங்களை மாதிரி புலவர்கள்(பதிவர்கள்) மத்தில பின்னூட்டம் இட்டு... (சரி..சரி...சந்து முக்கு திரும்பிட்டா கல் அடிக்கிறத நிறுத்திடனும்...ஆமா...). நன்னி..நன்னி.. நன்னி..

ambi said...

கீதா மேடம், ட்ரீட்டா? நீங்க தரப் போற மொய் பணத்துல தான் வைக்கறதா உத்தேசம்.

வாழ்த்துக்கு மிக்க நன்றி!

வினோத்,
மை பிரண்ட்,
நாகை சிவா,
கதிர்,
கவிநயா அக்கா,
திவாண்ணா,
மேவீ,
பிரதாப்
சிந்துசுபாஷ்.

@ஸ்ரீதர், என்ன வெச்சு காமடி கீமடி எதுவும் பண்ணலையே? :p

தங்கள் வாழ்த்தால் தன்யனானேன் ஷைலஜா & ரா ல அக்காஸ்.

அடுத்த படைப்பு கண்டிப்பா போட்டோவுடன் தான்.

கீதா சாம்பசிவம் said...

//கீதா மேடம், ட்ரீட்டா? நீங்க தரப் போற மொய் பணத்துல தான் வைக்கறதா உத்தேசம்.//

ஹிஹிஹி, மொய் தான் பத்துத் தரம் எழுதிட்டேனே அம்பி, நேத்திக்குத் தான் கைப்ஸ் கணக்கையும் முடிச்சேன், வந்து பாருங்களேன்!இங்கே

ambi said...

நிவி, ஏதேது பக்கத்து வீட்டுக்காரங்களையும் சேர்த்து கூட்டிட்டு வந்துடுவீங்க போல. :p

முதுபெரும் எழுத்தாளரா? எனக்கு இப்பவே கண்ண கட்டிடுச்சு. :))

முத்தக்கா, வாங்க, கரக்ட்டா பில் வரும் போது நான் கை கழுவ போயிடுவேன் பரவாயில்லையா? :p

வாங்க சங்கீத பூஷணம் அபி அப்பா, :))
மாப்ள பெஞ்சு காலியா இருக்கு.

மிக்க நன்னி cஇவீஆர், ஆமா நம்ம பாசக்கார மக்கள்ஸ் தான் அங்கயும்.

யப்பா விஜய், என் பதிவை விட உன் பின்னூட்டத்தை தான் நெறைய பேரு படிக்கறாங்கன்னு விகடன் மெயில் அனுப்பி இருக்காங்க பா!

மாதேவி said...

வாழ்த்துக்கள்.

ambi said...

நன்றி மாதேவி

Vijay said...

பொய் சொல்லிக்கிட்டு திரியரானுவங்க அம்பீ, போக்கத்த பயலுவ... நீங்க நம்பாதீக அதேல்லாம்.. ஹாகாங்...பதிவ யாரூஊ பட்ச்சா? வெறும் பின்னூட்டத மட்டுங் படிச்சுட்டூ.. அதுக் எங்க கமெண்டு போடறதுன்னூ ஒரெ ”க்கூ”(க்யூ)வாம்பா. ”எச் எம் எச்”சு வந்துருக்கே, காணலியா?

தி. ரா. ச.(T.R.C.) said...

chutti vikatanilil vanthirukka veentum etho pona povathunnu.

Karthikeyan Ganesan said...

"அமெரிக்காவில் இருக்கும் வங்கிகளுக்கு பாங்கிங் சாப்ட்வேர் எழுத தெரிந்த நம்மால், சமீபத்தில் இங்கு ஒரு வங்கி தேர்வை கணினிமயமாக்க முடியலை என எண்ணும் போது சிலபல தெலுங்கு பட டைட்டில்கள் எல்லாம் வாய்க்கு வருகிறது. "

>>>>>>>>>>>>>>>>>>>>>

அம்பி அண்ணா, கடைசி வரி
காமெடி + பன்ச் = அம்பி டச்

மதுரை லந்தை-விட நல்லா இருக்கு.....

Mighty Maverick said...

லாஜிகல் ரீசனிங்கிலேயும் உன்னோட பெண் தோழிகளையும் அந்த கேசரியையும்விடலையா??? இதுக்கு தான் அல்வா மாவட்டத்தின் அப்பளா ஊரின்மக்களுக்கெல்லாம் வங்கிகள் கடுக்காய் கொடுத்து கொண்டிருக்கின்றனவோ???