Friday, November 28, 2008

மும்பை - மாரல் ஆப் தி ஸ்டோரி

முதலாம் நூற்றாண்டு

கோவலனா கள்வன்? தவறான நீதி வழங்கிய நானே கள்வன்! நானே கள்வன்! - பாண்டியன் நெடுஞ்செழியன் தம் உயிரை விடுகிறான்.

மாரல்: அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்(எமனாகும்).

இருபதாம் நூற்றாண்டு - 1919 AD

ஜாலியன் வாலா பாக் படுகொலைக்கு முக்ய காரணகர்த்தாவாய் திகழ்ந்த ஜெனரல் டயர் சாகும் தருவாயில் சொன்னது, ""but I don’t want to get better. Some say I did right, while others say I did wrong. I only want to die... and know of my maker whether I did right or wrong" .


இருபதாம் நூற்றாண்டு - 1956


நிகழ்ந்த ரயில் விபத்துக்கு தார்மீக பொறுப்பேற்று லால் பகதூர் சாஸ்திரி தம் மத்திய ரயில்வே மந்திரி பதவியை நேரு மிகவும் வேண்டி கேட்டும் ராஜினாமா செய்தார்.

மாரல்: சில நேரங்களில் தன்னெஞ்சே தன்னைச் சுடும்.

இருபத்தி ஒன்னாம் நூற்றாண்டு - 2006 AD

மும்பை புற நகர் ரயிலில் வெடிகுண்டு வெடித்து 200 அப்பாவி பொது மக்கள் பலி.

2008 AD

பெங்களூர், ஐதராபாத், அஹமதாபாத், டெல்லி, புனே, மீண்டும் மும்பை ஆகிய இடங்களில் குண்டு வெடித்து மீண்டும் அப்பாவி மக்கள் பலி (இறந்தவர் எண்ணிக்கை தெரியல, மேலும் நான் கணக்குல வீக்கு)

சோனியா, மற்றும் பிரதமர் காயமடைந்தவர்களை நேரில் சென்று பார்த்து, "அச்சசோ அடி பட்டுச்சா? தெண்பாண்டி சீமையிலே! தேரோடும் வீதியிலே! மான் போல வந்தவனே! யாரடிச்சாரோ!" என பாடி விட்டு வந்தனர்.

சிவராஜ் பாட்டீல் நீல கலர் கோட்டா? கருப்பு கலர் கோட்டா?னு குழம்பி, அவர் மனைவி முடிவு சொல்லி, இறுதியாக கருப்பு கோட் அணிந்து "தீவிரவாதிகளை கண்டு இந்த அரசு பயப்படாது! இரும்பு கரம் கொண்டு அடக்க (ஒருவழியா) முடிவு எடுக்கலாமா?ன்னு காரிய கமிட்டி கூடி விவாதித்து, முடிவு எடுத்துகிட்டே இருப்போம்" என நாசமா போன CNN, நாறிட்டு இருக்கும் NDடிவிக்கு பேட்டி குடுத்தார்.

மாரல்: இடுக்கண் வருங்கால் நகுக! :(

டேய்! உங்களுக்கு வெக்கமே கிடையாதா டா? ஆசை வெக்கமறியாதோ? வேணாம், நெல்லை தமிழ்ல ஏதாவது திட்டிட போறேன்.

39 comments:

கபீஷ் said...

Shame on Indian Govt!!

கோவி.கண்ணன் said...

//வேணாம், நெல்லை தமிழ்ல ஏதாவது திட்டிட போறேன்.//

அம்பி(யே) டென்சன் ஆவறதைப் பார்த்தால் நிகழ்வின் கொடுமை நல்லா புரியுது.

:(

ம் என்னத்தச் சொல்ல, அடுத்த தேர்தலுக்கு வாக்கு கேட்க அந்த புகைப்படங்களோடு வருவார்கள் அரசியல்வாதிகள். எல்லாத்திலும் லாபம் தானோ ?

ராமலக்ஷ்மி said...

அம்பி, கபீர் அன்பன் அவர்களின் பதிவில் இன்று நான் இட்ட கமென்டையே இங்கு என் கருத்தாகப் பதிகிறேன்.

//நாட்டுக்கு துணிவான ஒரு தலைமை இல்லாது போனதுதான் பெரிய குறை. இதைச் செய்தால் இவர் ஓட்டு அடுத்த தேர்தலில் கிடைக்காது..இப்படி செய்தால் இவர் ஆதரவு இப்போதே வாபஸ் பெறப்பட்டு ஆட்சி கவிழ்ந்து விடும் என்பது போன்ற பயங்களிலேயே ஒவ்வொரு தலைமைகளும் ஒவ்வொரு காலக் கட்டத்திலும் தடுமாறி நிற்பதுதான் இத்தனைக்கும் ஆணிவேர்.

அன்று இந்திரா காந்தி கொண்டு வந்த எமர்ஜன்ஸி போல துணிந்து செயல் பட வேண்டும் அரசு. நிறைகுறைகள் இருக்கலாம் அதில். ஆனால் இப்போதைய தேவை தீவிரவாதத்தை எப்பாடு பட்டாவது களைவதே. அதற்கு ஒட்டு மொத்த நாடும் ஒத்துழைக்க வேண்டும்.//

ambi said...

@kabish, correctly said.

//அம்பி(யே) டென்சன் ஆவறதைப் பார்த்தால் நிகழ்வின் கொடுமை நல்லா புரியுது.
//

பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு தானே!

@கோவி அண்ணா, ஆமா, சரியா சொன்னீங்க. இதையே சாக்கா வெச்சு எதிர்கட்சிகள் (வேற யாரு? பிஜேபி தான்) ஓட்டு அறுவடை செஞ்சிடுவாங்க. :(

ambi said...

@ரா.லக்ஷ்மி அக்கா, அதே! அதே!

அந்த தலைமை யாரு? என்பது தான் மில்லியன் டாலர் கொஸ்டின். :(

இந்த ஒரு நாள் பிரதமர் திட்டம் எல்லாம் வந்தா நல்லா இருக்குமுல்ல. :)

Vidhya Chandrasekaran said...

சிவராஜ் பாட்டீலைப் பற்றி தவறாகக் பேசாதீர்கள் அம்பி அண்ணா.
The most efficient home minister i've ever seen. வன்மையாகக் கண்டிக்கிறேன்னு (சொல் மாறாதவர்???!!) அவரு ஒவ்வொரு முறை மீடியாவில் பேசும்போது அவர் கடமை உண்ர்ச்சியைக் கண்டு சிலிர்த்துக்கொண்டேன்.

Blogeswari said...

ரொம்ப Depressing-ஆ இருக்கு

Geetha Sambasivam said...

சோனியா, மற்றும் பிரதமர் காயமடைந்தவர்களை நேரில் சென்று பார்த்து, "அச்சசோ அடி பட்டுச்சா? தெண்பாண்டி சீமையிலே! தேரோடும் வீதியிலே! மான் போல வந்தவனே! யாரடிச்சாரோ!" என பாடி விட்டு வந்தனர்.

என்ன இது?? கமெண்ட் பொட்டியே மாறிப் போச்சே??
இங்கேயும் வந்து பி.எம். அதைத் தான் சொல்லப் போறார். நேத்திக்குச் சொல்லவும் சொல்லியாச்சு! :((((( கடவுள் தான் இந்த நாட்டைக் காப்பாத்தணும்.

PM said...

"சிவராஜ் பாட்டீல் நீல கலர் கோட்டா? கருப்பு கலர் கோட்டா?னு குழம்பி, அவர் மனைவி முடிவு சொல்லி, இறுதியாக கருப்பு கோட் அணிந்து "தீவிரவாதிகளை கண்டு இந்த அரசு பயப்படாது! இரும்பு கரம் கொண்டு அடக்க (ஒருவழியா) முடிவு எடுக்கலாமா?ன்னு காரிய கமிட்டி கூடி விவாதித்து, முடிவு எடுத்துகிட்டே இருப்போம்" என நாசமா போன CNN, நாறிட்டு இருக்கும் NDடிவிக்கு பேட்டி குடுத்தார்"

More than these politicians, i hate these news channels....
They do more damage to the ongoing operations, by being INFORMATIVE to the terrorists.

A quote from BBC:

0703 According to NDTV, the army has advised all news channels not to show live pictures of the Taj Mahal Palace and Oberoi Trident hotels, where commandos are conducting "clearing" operations. It says the army has also asked journalists not to give out any specific details of the operation at Nariman House.

Kathiravan Manoharan said...

REAL SHAME for INDIA & INDIANS!!!

-Kathiravan
http://kathyravan.blogspot.com

Vijay said...

அம்பி,

இந்தியாவின் எதிர்காலத்தை நெனச்சா ரொம்ப கவலையா இருக்கு. ஆட்டம் ஓவரா ஆய்டுச்சி. நிறைய களை எடுக்கணும். களை எடுக்கறேன் பேர்வழின்னு பயிரை புடிங்கிற கூடாது...ஆக மொத்ததுல மாற்றம் தேவை. இப்பிடியே ஒட்டு அரசியல் நடத்திட்டு இருந்தா சீக்கிரம் நாடு அதள பாதாளத்துக்கு போயிடும்.


வருத்தங்களுடன்!!!

ambi said...

@வித்யா,
தங்கச்சிக்கா, ஒரு நிமிஷம் நீங்க சிவராஜ் பாட்டீலை சப்போர்ட் பண்றீங்களோன்னு கொதிச்சு போயிட்டேன். ஆமா, அவரு மானஸ்தன். :))


@blogeswari, மும்பைல இருக்கற உங்களுக்கு எவ்ளோ வலி இருக்கும்னு கொஞ்சமாவது உணர முடியுது! :((

//இங்கேயும் வந்து பி.எம். அதைத் தான் சொல்லப் போறார். //

@geetha madam, நிசாவுக்கு எல்லாம் அவரு (அதுவும் அம்பதூர்க்கு) எல்லாம் வரவே மாட்டாரு. :))

ஏதேனும் இளிச்சவாய் மேலிட பார்வையாளர் வந்துட்டு அறிக்கை குடுப்பாரு. :(

ambi said...

//i hate these news channels....
They do more damage to the ongoing operations, by being INFORMATIVE to the terrorists.
//

@chennai girl , i agree with U.

@kathiravan

A small correction:

SHAME ON INDIAN POLITICIANS.

ambi said...

//களை எடுக்கறேன் பேர்வழின்னு பயிரை புடிங்கிற கூடாது...//

@vijay, பயிரை எல்லாம் எப்பவோ புடுங்கியாச்சு விஜய். இப்போ விளை நிலத்துல பிளாட் போட முடியுமா?ன்னு பாக்கறாங்க. :((

//ஆக மொத்ததுல மாற்றம் தேவை. //

என்ன ஒபாமா மாதிரி பேசறீங்க? :)

Anonymous said...

nenju kodhikudhadi indha nilai ketta manidharai ninaithu vittalnnu thonudhu.we dont need politicians,cynics and leaders now,lets stand by our army and nsg fellows and atleast give them moral support.thanner vitto valarthom survesha ippaiyirai...karuga thiruvulamo...
nivi.

shree said...

right post at right time. fire still going in mumbai. its high time to wake up and do something

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

//டேய்! உங்களுக்கு வெக்கமே கிடையாதா டா? ஆசை வெக்கமறியாதோ?//

வழி மொழிகிறேன் !

Sanjai Gandhi said...

:))

gils said...

elo...kutham solrathu remmmmbaa eejee...badil solipaathaa thaan oi antha imsai theriyum...patiluku vakaalathu vangala..stl..pota podakudathu..poata bjpku support aaidum..terroristlaam adaki oduka power kudutha aalum katchi opp.party..so avanga munnuku vanthiruvanunga..ipdi ela vidhathulayum kaiya katti poatutu oru manushana velaya parru sonna..entha thaan panuvar. namma oorla parunga..normala irukarapo oru dogum angitu poirukathu..sudran..gundu podranna elam poi nikkum...irukara naalu police lattiya vachikitu sanda poda sonna velaikaaguma. neria maara vendiathu iruku..oruthara kutham solli no use

gils said...

!!! vidhyanu per irunthalay oray mari than yosipangalao?? :D

Anonymous said...

read this post,this is the most irresponsible way a person can write.......managing a country is not a joke,......dont joke like this......

http://idlyvadai.blogspot.com/2008/11/blog-post_27.html

Unknown said...

1. மக்கள் எப்படி, அரசியல்வாதிகள் அப்படி. (மக்கள்) சாதிப்படி ஓட்டு போடறதுன்னா, அ.வா. அடுத்த தேர்தல் வரைக்கும் அள்ளுவதை அள்ளிக்கொண்டிருப்பார்கள். இன்னும் பல காரணங்கள்... 21வயதிலிருந்து ஓர் ஓட்டு கூட போடாம வெளிநாட்டுல இருக்குற நான் இதைப் பத்திப் பேச லாயக்கில்லை:-(((

2. எனக்கு இந்திய இராணுவத்தின் மீது அளப்பரிய மரியாதை உண்டு. அவுங்களை காவு கொடுக்கறது பார்த்து மனசே ஆகலை - அழுதுட்டேன் நேற்றைக்கு. சாதாரண மக்களின் இழப்பும் சரி, மும்பையர்களின் (albeit alcohol-induced) இராணுவத்துக்குக் கொடுக்கும் ஆதரவும் சரி, மிகுந்த நெகிழ்ச்சி....:-( இட்லிவடை கட்வெட்டினதையும் பாத்தேன், ஆனால், இராணுவத்தில் இருக்கும் அரசியலும் நினைவில் வைச்சுக்கணும்...

3.என் பதிவில் நான் கேட்டது இதுதான்: கடல்வழித் தாக்குதல் இருக்கும்ன்னு உளவுத் துறைக்குத் தெரியாதா? இராணுவம் மாதிரி உளவுத் துறை மக்கள் தன்னிலை விளக்க நூல்கள் (எனக்குத் தெரிந்து) அவ்வளவாய் எழுதுவதில்லைன்னா? benefit of book-deals...

பரிசல்காரன் said...

:-(

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

:(

பாபு said...

நம் தலைவர்கள் நம்மைதான் பிரதிபலிக்கிறார்கள்
ஜாதி மதம் இனம் என்று பார்த்துதானே ஓட்டு போடுகிறோம்
இதில் நல்ல தலைவர்கள் எப்படி கிடைப்பார்கள்?
படித்தவர்கள் வாக்கு சாவடி பக்கம் போவதேயில்லை
"நான் ஓட்டு போட்டா மாறிடுமா?என்று ஒரு வாதத்தை முன் வைத்து வீட்டில் உட்கார்ந்து தொலைக்காட்சி பார்க்கிறோம்.பின் எப்படி சமூகம் சரியாகும்?

மெட்ராஸ்காரன் (Madrasi) said...

Ambi Anna,

Enakku kooda Romba kovaam vanthuchi...Appa irukkaratha kooda maranthuttu govt'a asingama thittiten...somehow we are not learning any lessons from such incidents. Despite the fact that Mumbai has been the target of terrorists so many times, I dont know why the govt is sleeping. They have done this as if they celebrated a deepavali in mamanaar house. Height of comedy, PM says "We will form stringent laws that will help us fight terror acts better..." (Ungalukku POTA repeal pannunathu nyabagam vantha naan poruppu illa :( )

நாகை சிவா said...

தலைவர்கள் செய்யும் தவறுக்கு மக்கள் தண்டனை அனுபவிக்கிறோம். இது தானே நம் இந்திய வரலாறு. இவர்கள் மட்டும் விதிவிலக்கா என்ன?

மங்களூர் சிவா said...

:((

Karthik said...

namba arasiyal katchi kullaye othruma illa.. eppada idhu madhiri nadakum aaalunkatchiya kora sollalam arpa laapathugaga maradhikiricha arasiyal vyaadhigal.. ennamoo ivanguga aatchila edhuvume nadakkada madhiri peasuvaanuga... inda arasu gandhiji kolkayoda iruku.. nee evalavu venumnaa adhi... naa pormaiya thann irupenu SINGH epppavume sogama singing.. meen kada keethurikeengala?? Varumunn kaapoom. vandapin kapoom?? namba arasu idula 2vaadu!!


Chennai la puyal, mazhi nu ungaluku theriyum.. 2naala current illa... net la videos la paarthu idha pathi detail ah eluduren

வல்லிசிம்ஹன் said...

மும்பை.
இம்மாரல்ஸ்னு போடலாம். ரகசியம். தெரியக் கூடாதுன்னு சொல்லிட்டே ரகசியத்தைப் பப்ளிக்காப் பேசினாங்க.

இவங்களே சொல்லிக் கொடுத்து அவங்க ஜாலியா ரூம் எடுத்து பாதாம் சாப்பிட்டுவிட்டு, பலி ஆடுகள் மாதிரி நுழைந்த கமாண்டோஸைக் கொன்னு இருக்காங்க.
இன்னும் இறுதி எண் வெளில வரலியே. தாஜ் இறந்தவங்களே 150னு இங்க சொன்னாங்க. அதாவது எல்லாவற்றைஇஉம் சுத்தம் செய்யும்போது கண்டெடுக்கப் பட்ட சடலங்கள்.

அரசாங்கம் இன்னும் 200 பேரு போயிட்டாஅங்கன்னுமட்டும் சொல்லும்.
டிவி சானல்கள்ள விதவிதமா உடை அணிந்து மும்பையப் பத்திப் பேசுவாங்க. அம்பி இதுக்கு மேல என சொல்லறதுன்னு தெரிய வில்லை. கோபம்தான் வரது.

ambi said...

நிவி, பாரதியின் கவிதைகள் இப்பவும் பொருந்துது இல்ல?

@ஸ்ரீ & பாஸ்கர், ஆமென்.

சஞ்சய், ஆமா, ஊரே கை கொட்டி சிரிக்குது.

இந்தா கில்ஸ், சென்னை போயிட்டோம்னு தைரியமா அறிக்கை வுடாதே! :)

ambi said...

@கெபி, நானும் மூனு தடவ முயற்சி செய்தும் ஓட்டு போட முடியல. நாலாம் தடவையும் ட்ரை பண்ண போறேன்.

உங்க கேள்விகள் எல்லாத்துக்கும் "நல்ல கேள்வி, அடுத்த கடிதம் படிங்கம்மா" பொதிகைல வர எதிரொலி பாணில தான் அரசியல்வாதிகள் பதில் சொல்வாங்க. :(

ambi said...

@பரிசல், & சுந்தர், :((

@பாபு, ஓட்டு போடுவது மட்டுமல்ல, சரியான ஆளுக்கு தான் ஓட்டு போடறோமா? என்பதும் ரெம்ப முக்யம்.

@மெட்ராஸ்காரன், அப்படியே வழிமொழிகிறேன் உங்கள் கருத்துக்களை.

@சிவா, உண்மை தான். ஆனா இன்னும் எத்தனை நாளைக்கு? :(

@கார்த்திக், வந்தபின்னும் காக்கலையே கார்த்தி? :(

பொறுமையின் சிகரம் வல்லி மேடம் உங்களுக்கே கோவம் வருதுன்னா பாருங்க பிரச்சனை எவ்ளோ சீரியஸ்னு? :(

rapp said...

நெறயப் பேர் தப்பிச்சுட்டானுங்களாமே, அவங்களை பிடிக்கிரதப் பத்தி இன்னும் எதுவுமே சொல்லலை:(:(:(

ambi said...

@ ராப், அதான் உள்துறை அமைச்சரை மாத்திட்டோம் இல்ல, இனிமே மக்கள் யாரும் கேள்வி கேக்க கூடாது. :))

Anonymous said...

Hotel Taj : icon of whose India ? Gnani Sankaran- Tamil writer, Chennai
Hotel Taj : icon of whose India ?

Gnani Sankaran- Tamil writer, Chennai.

Watching at least four English news channels surfing from one another
during the last 60 hours of terror strike made me feel a terror of
another kind. The terror of assaulting one's mind and sensitivity with
cameras, sound bites and non-stop blabbers. All these channels have
been trying to manufacture my consent for a big lie called - Hotel Taj
the icon of India.

Whose India, Whose Icon ?

It is a matter of great shame that these channels simply did not
bother about the other icon that faced the first attack from
terrorists - the Chatrapathi Shivaji Terminus (CST) railway station.
CST is the true icon of Mumbai. It is through this railway station
hundreds of Indians from Uttar Pradesh, Bihar, Rajasthan, West Bengal
and Tamilnadu have poured into Mumbai over the years, transforming
themselves into Mumbaikars and built the Mumbai of today along with
the Marathis and Kolis

But the channels would not recognise this. Nor would they recognise
the thirty odd dead bodies strewn all over the platform of CST. No
Barkha dutt went there to tell us who they were. But she was at Taj to
show us the damaged furniture and reception lobby braving the guards.
And the TV cameras did not go to the government run JJ hospital to
find out who those 26 unidentified bodies were. Instead they were
again invading the battered Taj to try in vain for a scoop shot of the
dead bodies of the page 3 celebrities.

In all probability, the unidentified bodies could be those of workers
from Bihar and Uttar Pradesh migrating to Mumbai, arriving by train at
CST without cell phones and pan cards to identify them. Even after 60
hours after the CST massacre, no channel has bothered to cover in
detail what transpired there.

The channels conveniently failed to acknowledge that the Aam Aadmis of
India surviving in Mumbai were not affected by Taj, Oberoi and Trident
closing down for a couple of weeks or months. What mattered to them
was the stoppage of BEST buses and suburban trains even for one hour.
But the channels were not covering that aspect of the terror attack.
Such information at best merited a scroll line, while the cameras have
to be dedicated for real time thriller unfolding at Taj or Nariman
bhavan.

The so called justification for the hype the channels built around
heritage site Taj falling down (CST is also a heritage site), is that
Hotel Taj is where the rich and the powerful of India and the globe
congregate. It is a symbol or icon of power of money and politics, not
India. It is the icon of the financiers and swindlers of India. The
Mumbai and India were built by the Aam Aadmis who passed through CST
and Taj was the oasis of peace and privacy for those who wielded power
over these mass of labouring classes. Leopold club and Taj were the
haunts of rich spoilt kids who would drive their vehicles over
sleeping Aam Aadmis on the pavement, the Mafiosi of Mumbai forever
financing the glitterati of Bollywood (and also the terrorists) ,
Political brokers and industrialists.

It is precisely because Taj is the icon of power and not people, that
the terrorists chose to strike.

The terrorists have understood after several efforts that the Aam
Aadmi will never break down even if you bomb her markets and trains.
He/she was resilient because that is the only way he/she can even
survive.

Resilience was another word that annoyed the pundits of news channels
and their patrons this time. What resilience, enough is enough, said
Pranoy Roy's channel on the left side of the channel spectrum. Same
sentiments were echoed by Arnab Goswami representing the right wing of
the broadcast media whose time is now. Can Rajdeep be far behind in
this game of one upmanship over TRPs ? They all attacked resilience
this time. They wanted firm action from the government in tackling
terror.

The same channels celebrated resilience when bombs went off in trains
and markets killing and maiming the Aam Aadmis. The resilience of the
ordinary worker suited the rich business class of Mumbai since work or
manufacture or film shooting did not stop. When it came to them, the
rich shamelessly exhibited their lack of nerves and refused to be
resilient themselves. They cry for government intervention now to
protect their private spas and swimming pools and bars and
restaurants, similar to the way in which Citibank, General Motors and
the ilk cry for government money when their coffers are emptied by
their own ideologies.

The terrorists have learnt that the ordinary Indian is unperturbed by
terror. For one whose daily existence itself is a terror of government
sponsored inflation and market sponsored exclusion, pain is something
he has learnt to live with. The rich of Mumbai and India Inc are
facing the pain for the first time and learning about it just as the
middle classes of India learnt about violation of human rights only
during emergency, a cool 28 years after independence.

And human rights were another favourite issue for the channels to whip
at times of terrorism.

Arnab Goswami in an animated voice wondered where were those
champions of human rights now, not to be seen applauding the brave and
selfless police officers who gave up their life in fighting terorism.
Well, the counter question would be where were you when such officers
were violating the human rights of Aam Aadmis. Has there ever been any
24 hour non stop coverage of violence against dalits and adivasis of
this country?

This definitely was not the time to manufacture consent for the extra
legal and third degree methods of interrogation of police and army but
Arnabs don't miss a single opportunity to serve their class masters,
this time the jingoistic patriotism came in handy to whitewash the
entire uniformed services.

The sacrifice of the commandos or the police officers who went down
dying at the hands of ruthless terrorists is no doubt heart rending
but in vain in a situation which needed not just bran but also brain.
Israel has a point when it says the operations were misplanned
resulting in the death of its nationals here.

Khakares and Salaskars would not be dead if they did not commit the
mistake of traveling by the same vehicle. It is a basic lesson in
management that the top brass should never t ravel together in crisis.
The terrorists, if only they had watched the channels, would have
laughed their hearts out when the Chief of the Marine commandos, an
elite force, masking his face so unprofessionally in a see-through
cloth, told the media that the commandos had no idea about the
structure of the Hotel Taj which they were trying to liberate. But the
terrorists knew the place thoroughly, he acknowledged.

Is it so difficult to obtain a ground plan of Hotel Taj and discuss
operation strategy thoroughly for at least one hour before entering?
This is something even an event manager would first ask for, if he had
to fix 25 audio systems and 50 CCtvs for a cultural event in a hotel.
Would not Ratan Tata have provided a plan of his ancestral hotel to
the commandos within one hour considering the mighty apparatus at his
and government's disposal? Are satelite pictures only available for
terrorists and not the government agencies ? In an operation known to
consume time, one more hour for preparation would have only improved
the efficiency of execution.

Sacrifices become doubly tragic in unprofessional circumstances. But
the Aam Aadmis always believe that terror-shooters do better planning
than terrorists. And the gullible media in a jingoistic mood would not
raise any question about any of these issues.

They after all have their favourite whipping boy - the politician the
eternal entertainer for the non-voting rich classes of India.

Arnabs and Rajdeeps would wax eloquent on Nanmohan Singh and Advani
visiting Mumbai separately and not together showing solidarity even at
this hour of national crisis. What a farce? Why can't these channels
pool together all their camera crew and reporters at this time of
national calamity and share the sound and visual bites which could
mean a wider and deeper coverage of events with such a huge human
resource to command? Why should Arnab and Rajdeep and Barkha keep
harping every five minutes that this piece of information was
exclusive to their channel, at the time of such a national crisis? Is
this the time to promote the channel? If that is valid, the politician
promoting his own political constituency is equally valid. And the
duty of the politican is to do politics, his politics. It is for the
people to evaluate that politics.

And terrorism is not above politics. It is politics by other means.

To come to grips with it and to eventually eliminate it, the practice
of politics by proper means needs constant fine tuning and
improvement. Decrying all politics and politicians, only helps
terrorists and dictators who are the two sides of the same coin. And
the rich and powerful always prefer terrorists and dictators to do
business with.

Those caught in this crossfire are always the Aam Aadmis whose deaths
are not even mourned - the taxi driver who lost the entire family at
CST firing, the numerous waiters and stewards who lost their lives
working in Taj for a monthly salary that would be one time bill for
their masters.

Postscript: In a fit of anger and depression, I sent a message to all
the channels, 30 hours through the coverage. After all they have been
constantly asking the viewers to message them for anything and
everything. My message read: I send this with lots of pain. All
channels, including yours, must apologise for not covering the victims
of CST massacre, the real mumbaikars and aam aadmis of India. Your
obsession with five star elite is disgusting. Learn from the print
media please. No channel bothered. Only srinivasan Jain replied: you
are right. We are trying to redress balance today. Well, nothing
happened till the time of writing this 66 hours after the terror
attack.

ambi said...

@anony, Thought provoking comment and all qstns raised by U can't be answered by any of so called channels.

But i disagree with your point in raising qstns against NSG's talent coz it's so tough to jump into action in a residential/commercial area where Aam janata's life is the first priority than restricting or killing the terrorists.

i would have appreciated if U posted this comment with your name rather than as anony. :)

gils said...

tho..elarum ketukita mari..chidambram annachi padaviku vanthirukaru..iniki assamla bomb blast..epdi..ivariyum thookiarlama padavilenthu..pudusa pattu vetti sokkavoda vanthu pose kudukaraarnu..warning message epovum than kedaikuthu. action edukarathuku ministera kurai sollarathu passing the buck thaan. ultimatea he is the one who is accountable. aana act pana porathu officials..avangala udaikanum. epovum vara hoax call thaannu dhum adika poidrangalla..avangala thaakanum first.

ambi said...

@Gils, why all are unhappy with sivraj patil was it's not the first time such incident happened. Also even a comman man knows that one should not attend a funeral with a partywear shirt. wheras he did on Delhi blasts.

It's minister only accountable for inefficient officers who owns the right to suspend or dismiss irresponsible officers as in the case of private firms.

IF somebody underperform, his/her PM has the full right to give them a pink slip. End of the Day the PM is going to face the clients not he/she. (in many cases) :))