உங்களுக்கு தெரிந்த ஒரு ஐந்து ஐ.டி கம்பனிகளில் ஒன்னுல தான் என் தங்ஸும் ஒரு பொறுப்பான போஸ்டுல இருக்காங்க. பொதுவா என் ஆபிஸ், வேலை விஷயத்துல தங்கமணி அதிகம் மூக்கை நுழைக்கறதில்லை. நமகெதுக்கு வம்பு?னு நானும் தங்க்ஸ் ஆபிஸ் வேலைகளை பத்தி அதிகம் கேட்டுக்க மாட்டேன். தீடிர்னு ஒரு நாள், அவங்க டாமேஜர் ஐதராபாத்லேருந்து போனை போட்டு, ஒரு பய சிக்கி இருக்கான், அவனை டெக்னிகல் இன்டர்வியூ பண்ணி எனக்கு ரிப்போட் அனுப்பிடு!னு சொல்லிட்டாரு.
அம்மணி முத முதலா இப்ப தான் இன்டர்வியூ எடுக்கற அனுபவம். சும்மா தானே(வெட்டியா தானேனும் வாசிக்கலாம்)இருக்காரு ரங்கு!னு என்னை கூப்ட்டு ஏதாவது டிப்ஸ் குடுங்களேன்னு ரெம்ப்ப பவ்யமா கேட்டாங்க.
நமக்கு இது போதாதா?
உள்ளுகுள்ள ரெம்ப சந்தோஷபட்டாலும், வெளிகாட்டாம, இதெல்லாம் உன் ஆபிஸ் சமாசாரம். என்ன தான் இருந்தாலும் நான் ஒரு மூனாம் மனுஷன். நீயே பாத்துக்கோ!னு பந்தாவா சொல்லிட்டேன்.
தங்க்ஸும், இதெல்லாம் கதைக்காவாதுனு முடிவு பண்ணி, சரி, நீங்க போய் நாளைக்கு சமைக்க வேண்டிய காய்கறி என்ன?னு பாத்து கட் பண்ணி வைங்க, அப்படியே வாஷிங்க்மெஷின்ல இருக்கற துணிய காய போட்ருங்க, இடைபட்ட கேப்புல தூங்கற ஜுனியர் எழுந்தா கொஞ்ச நேரம் தூளி ஆட்டுங்க, இல்லாட்டி அவனை தூக்கி வெச்சு ஏதாவது கதை சொல்லுங்க, மறக்காம டயப்பர் மாத்திடுங்க!னு வரிசையா அடுக்கிட்டே போக, எனக்கு அப்பவே கண்ண கட்டிடுச்சி.
சரி, நீ இவ்ளோ கேக்கற, ஹெல்ப் பண்ணாம இருக்க முடியல, போன் போட்டு நீ அந்த கேன்டிடேட் கிட்ட இன்டர்வியூ ஷெட்யூல் பண்ணி கன்பார்ம் பண்ணு. பேசிட்டே இரு. டெக்னிக்கலா ஸ்ட்ராங்கானு பாரு. நானும் கூட இருக்கேன்னு சொல்லி சமாளிசாச்சு.
ஆள் பெயர், ஊர் எல்லாம் என்னனு பாத்தா விஜயவாடாவுலிருந்து ஒரு பக்கா கொல்டி பையன். டக்குனு பல்ராம் நாயுடு இங்க்லீஷ் நினைவுக்கு வர எனக்கும் ஒரு ஆர்வம் தொத்திகிச்சு.
நாலு ரிங்க் போய், நம்மாளு போனை எடுத்து
ஹலோ! எவரண்டி?
நாங்க கெக்ரான் மோக்ரான் கம்பனில இருந்து பேசறோம், நாளைக்கு நைட்டு எட்டு மணிக்கு உங்க கூட டெக்னிக்கல் டிஸ்கசன் பண்ண போறோம், ரெடியா இருங்க என்ன?
ஐந்து செகண்டுக்கு எதிர்முனையிலிருந்து பேச்சே வரலை,
மேடம், நீங்க சொன்னதை எனக்கு மெயிலா அனுப்புங்க ப்ளீஸ், அப்ப தான் நான் நம்புவேன். ஏற்கனவே என் பிரண்டு ஒருத்தன் மைக்ரோசாப்டுல இருந்து பேசறோம்!னு சொல்லி ஒரு மணி நேரம் என்னை கலாய்ச்சுட்டான். அவ்வ்வ்வ்வ், தப்பா எடுத்துகாதீங்க ப்ளீஸ். (குசும்பன் வேலையா இது?)
பாவம் ரொம்ப அடி வாங்கி இருக்கான் போல!னு நினைச்சுகிட்டு, சரி! உடனே உங்க மெயில் பொட்டியை பாத்துட்டு எனக்கு பதில் அனுப்புங்க!னு சொல்லி தங்க்ஸ் போனை கட் பண்ணிட்டு டக்குனு ஒரு மெயில் தட்டி விட்டாங்க.
உங்க கம்பனில இன்டர்வியூ வரதெல்லாம் நான் செஞ்ச புண்யம், நளைக்கு ஏழு மணில இருந்தே நான் ரெட்டியா சே! ரெடியா இருக்கேன்.
மேடம், நீங்களும் தெலுகா? நாளைக்கு என்ன படிக்கனும்?னு கொஞ்சம் சொன்னா புண்யமா போகும்னு ரெண்டு நிமிஷத்துல ரிப்ளை வந்தது.
அடங்கொய்யால! பல்ராம் நாயுடு வேலைய இங்கயே காட்றியா? இருடி,உனக்கு நாளைக்கு இருக்கு தீவாளின்னு தங்க்ஸ் கடுப்பாயிட்டாங்க.
அடுத்த நாள் சொன்ன நேரத்துக்கு போனை போட்டு தங்க்ஸ் ஒரே டெக்னிகல் கேள்விகளா கேட்டு கொடஞ்செடுத்தாங்க. அந்த பையனும் ஓரளவு சரியான பதில்களா சொல்லிட்டான். நான் சைலண்டா எல்லாத்தையும் கேட்டுகிட்டு இருந்ததில் முக்யமான சில துளிகள்:
1) அந்ததந்த மாநில மக்களின் மொழி அக்ஸண்ட் அவங்க பேசர இங்க்லிபிசுல ஒலிக்கிறது.
ஆட்டோ, ஆபிஸ் எல்லாம் சேட்டன்களுக்கு(சேச்சிகளுக்கும் தான்) ஓட்டோ ஓபிஸ் ஆகிறது.
அனேகமாக எல்லா ஆங்கில வார்த்தைகளுக்கு பின்னும் தெலுங்குகாரர்கள் லு போட்டும், கன்னடர்கள் உ போட்டும் பேசுகிறார்கள்.
உதா: ஆரக்கல்லு, டேபிலு,டாக்குமெண்டு, கர்சர்ரு, கேபினு.
2) கொல்டிகள் ஐ.டி துறையில் எப்படியாவது ஒரு பெரிய்ய கம்பெனியில் நுழைந்து, அமெரிக்கா ஆன்சைட்டுக்கு போக வேண்டும்! என்பதை ஒரு தவமாகவே கருதுகிறார்கள். நன்றாக கவனிக்கவும்
எப்படியாவது! இங்கு பெரிய்ய கம்பெனி எனபதற்க்கு தகுந்த விளக்கம், அவங்க வட்டத்தில் அந்த கம்பெனி பெயர் சொன்னா தெரியனும்.
எ.கா: இன்போசிஸ், விப்ரோ, சத்யம், டிசிஎஸ்.
இதன் பின்புலம் என்னனு பாத்தா வெரி சிம்பிள்: எல்லாம் கல்யாணத்துக்கு வரும் வரதட்சணை தான். இன்போசிஸ், விப்ரோ, டிசிஎஸ்: இந்த கம்பெனியில் இருந்து, அதுவும் அமெரிக்காவில் வேலை என்றால் ஒரு கோடி முதல் ஒன்னரை கோடி வரை ரொக்கம், ஒரு சைட்டு(அதாவது இடம்பா) அல்லது அப்பர்ட்மெண்ட், காரு சே! கார் மற்றும் ஒரு மணப்பெண். :-)
இதுவே இந்தியாவில் வேலை என்றால் ஐம்பது முதல் எழுபத்து ஐந்து லட்சம் வரை ரொக்கம், பிற பொருட்கள் மற்றும் ஒரு மணப்பெண்.
நிற்க, மேலே சொன்னதெல்லாம் கொல்டிகள் மற்றும் கன்னடர்களுக்கு மட்டும் தான்.
தமிழ்நாட்டில், பையன் ரிட்டையர் ஆனா பென்ஷன் வருமா? வேலையில் இருக்கும் போது மண்டைய போட்டா நம்ம பொண்ணுக்கு இன்ஷுரன்ஸ் வருமா? என நோண்டி நொங்கெடுத்து தான் "என் கண்ணயே உங்க கிட்ட ஒப்படைக்கிறேன்"னு டயலாக் பேசுகிறார்கள்.
சரி டிராக் மாறி விட்டது.
ஓரளவுக்கு அந்த பையன் நல்லாவே பதில் சொல்ல, தங்க்ஸ் இன்டர்வியுவை முடித்து கொள்வதாக அறிவிக்க, அந்த பையன், "தெய்வமே! தெய்ய்ய்வமே! நன்றி சொல்வேன் தெய்வமே!"னு ஒரு ரெண்டு நிமிஷம் நா தழ தழக்க முடித்து கொண்டான்.
இப்ப விசாரிச்சதுல அந்த பையன் அடுத்த கட்டங்களையும் தாண்டி, நேர்காணலுக்கு சென்று கொண்டிருக்கிறான்னு தெரிஞ்சது. ம்ம்ம், யாரு பொண்ணை பெத்து வெச்ருகாங்களோ?