Wednesday, July 02, 2008

புலம் பெயர்ந்த NRI


சென்னைக்கும் பெங்களூருக்கும் நான் சீசன் டிக்கட் எடுத்து வைத்திருப்பதால் தான் லாலுவால் துண்டு விழாமல் ரயில்வே பட்ஜெட் போட முடிகிறது என இப்பதிவை ஆரம்பித்தால் இதுவும் பட்டர்பிளை எபக்ட் தான் என பின்னூட்டம் விழற வாய்ப்புக்கள் பிரகாசமாக இருக்கிறபடியால் நேரே மேட்டருக்கு வருகிறேன். (மேட்டர் என்றால் விஷயம் என இங்கு பொருள் கொள்ளவும், என்ன செய்ய? தமிழ்மண நிலமை அப்படி)

உலக தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாக திரைக்கே வராத ஏதோ ஒரு படம் ஓடிகொண்டிருக்கும் ஒரு இனிய மாலை வேளையில் தங்கமணியின் அப்பாவழி பாட்டியோட தம்பி பையன் டெக்சாஸிலிருந்து தம்பதி சமேதராக எங்களுக்கு காட்சி குடுக்க விழைகிறார் என தொலைபேசி செய்தி கேட்டு, நான் அவருக்கு என்ன முறை?னு யோசிக்கும்முன்னரே எங்கள் தெருவுக்கு எப்படி வரனும் என்று மறுபடி போன் கால்.

இந்த இடத்தில் தங்க்ஸின் ஏரியா பத்தி ஒரு சிறுகுறிப்பு. ஆட்டோ பிடிக்கவே ஆட்டோல தான் போகனும். மதுரை மீனாட்சி கோவிலில் கூட தெற்கு கோபுரம் வழியா நுழைஞ்சு, வடக்கு கோபுரம் வழியா வெளிய வந்து சிம்மக்கல் பஸ் ஸ்டாப்புக்கு வந்து சேர்ந்து விடலாம். ஆனால் இந்த ஏரியாவில் எந்த தெருவில் நுழைஞ்சு எந்த பக்கம் வந்தாலும் மறுபடி அதே தெருவுக்கு வந்து விடுவோம். ஒரு பிரபல பதிவர் கூட இதே ஏரியா தான்! என்ற க்ளூவுடன் இந்த இடத்தில் நிறுத்தி கொள்கிறேன்.(இதுக்கே இருக்கு எனக்கு மண்டகபடி).

ஒரு வழியாக அந்த குடும்பம் எங்கள் தெரு முக்கு வரைக்கும் வந்து விட்டது. நேர வர வேண்டியது தானே? மறுபடி ஏதோ குழப்பம் ஆகி, சத்யமா முடியலை!னு மறுபடி ஒரு போன். சரின்னு என் மாமனாரே எதிர் கொண்டு அழைத்து வந்து சேர்ந்தார்.


சரி பாவம்!னு ஆளுக்கு ஒரு சொம்பு தண்ணி காட்டினோம். அவங்க வீட்டு அம்மணி உடனே இது பாயில்டு வாட்டரா?னு புருவத்தை நெளித்தார்.
அக்குவா கார்டு வாட்டர்னு பதில் வந்த பிறகும் பல்ராம் நாயுடு பைனாக்குலரில் பாப்பது போல ஒரு லுக் விட்டுவிட்டு குடித்தார். பரஸ்பர ஷேம உபயஷேமம் எல்லாம் விசாரித்து கொண்டோம்.

அந்த டெக்சாஸ் பார்ட்டி என்ன பேசினாலும் தமிழிலும், பின் அதையே ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்து மேஜர் சுந்தர் ராஜன் பேசுவது போல பேசினார்.

"நைஸ் மீட்டிங்க் யூ! உங்கள பாத்ததுல எனக்கு ரொம்ப சந்தோஷம். "

"எங்க வேலை பாக்கறீங்க? வேர் ஆர் யூ வேர்க்கிங்க்?"

என்னடா நம்மள வெச்சு காமடி கீமடி எதுவும் பண்றாங்களா?னு எனக்கு முதலில் சின்ன டவுட்டு. சரி இவங்க வழியிலேயே போவோம்!னு நானும் மே.சு.ரா பாஷையில் ஆரம்பித்து விட்டேன்.

"இப்ப உங்களுக்கு லீவா? ஆர் யூ இன் ஹாலிடே?"
"யெஸ்! ஆமா".

ஆஹா! அவனா நீயி? சரி, ஒரு வழி பண்ணிடறேன்னு தொடர்ந்து போட்டு தாக்க, சிரிப்பை அடக்க முடியாமல் தங்கமணி உள் அறைக்கு ஓடி விட்டார்.
அப்படி இருந்தும் அந்த டெக்சாஸ் அம்மணி விடாமல் என் தங்க்ஸ் பின்னாடியே போய் அமெரிக்கா தல புராணம் பாட ஆரம்பித்து விட்டார். தல புராணம் என்றால் அஜித் வாழ்க்கை வரலாறு இல்லைனு இங்க சொல்லிக்க கடமை பட்டுள்ளேன்.

அங்க வீட்டுகுழாயை திறந்தா பாலும் தேனுமா வரும். இந்தியன் ஸ்டோர்ஸ்ல எல்லாம் கிடைக்கும்னு அம்மணியின் பில்டப் ஓவரா போகவே, தங்கமணியை காப்பாற்ற, "கேசரி பவுடர் கிடைக்குமா அங்கே?னு நானும் கேட்டு விட்டேன்.

அவரின் மூத்த பெண் பரத நாட்டியம் கற்று வருவதாய் டெக்சாஸ் அம்மணி அபிநயம் பிடித்து காண்பிக்க, தில்லானா வந்தாச்சா? இல்ல பதங்களா?னு நானும் அபிநயத்துலேயே கேட்டு விட்டேன். அடுத்த வருடம் அரங்கேற்றமாம்.

மறக்காம போட்டோ எடுத்து அனுப்புங்க!னு என் தங்கமணியும் அபிநயம் புடிக்க, என்னடா இது? ரெண்டாயிரம், மூவாயிரம்! மாமா பிஸ்கோத்து! ரேஞ்சுக்கு நிலைமை மாறுதேனு எனக்கு சிரிப்பு ஒரு பக்கம், கவலை ஒரு பக்கம் வந்துடிச்சி.

கண்டிப்பா ஈமெயிலில் அனுப்புறோம்!னு தட்டச்சு சைகை செய்தபடியே டெக்சாஸ் பார்ட்டி விடை பெற்றது.

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும். இந்தியாவுல இருக்கற எங்களுக்கு தமிழ் தெரியாதுனு அவங்க நெனச்சாங்களா, இல்ல அவங்களுக்கு தமிழ் மறந்து போச்சா?

பி.கு: கடைசியில் ஈமெயில் முகவரி அவங்களும் வாங்கிக்கவே இல்லை, நாங்களும் குடுக்கலை.

45 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இந்த ஊருல நிறைய மாமிகள் இப்படித்தான் பேசறாங்க.. ஆங்கிலத்தில் சொல்லிட்டு தமிழில்.. இல்லாட்டி தமிழில் சொல்லிட்டு ஆங்கிலத்தில்..

தங்கமணி ரசித்து சிரிக்க உள்ள போயிருப்பாங்க.. சிரிக்கவிடாம அங்கயும் துரத்திக்கிட்டு உள்ள போயிட்டாங்களா அவ்ங்க..
சிரிக்க வைச்சு அடிக்கடி புண்ணியம் சேத்துக்கறீங்க...

Sumathi. said...

ஹாய் டாம்,

எல்லாம் சரி, இந்த பதிவ எப்போதும் போல தங்கமணி கிட்ட படித்து காட்டிட்டு தானே பப்ளிஷ் பண்ணினீங்க? இல்லைனா இருக்கு உங்களுக்கு....

rapp said...

ஆஹா ரெண்டே நாள்ல இன்னொரு புதுப் பதிவா? நம்பவே முடியல அண்ணே!//மேட்டர் என்றால் விஷயம் என இங்கு பொருள் கொள்ளவும்//
நானும் ஒரு நிமிஷம் மேட்டர்ன உடனே நீங்களும் கோதாவில் குதிச்சிட்டீங்கன்னு நினைச்சேன்.
//ஒரு பிரபல பதிவர் கூட இதே ஏரியா தான்!//
யாரு, கைப்புள்ள சாரா?இல்லை அண்ணியே ஒரு ப்லாகர்னு அப்படி சொல்றீங்களா?
//அந்த டெக்சாஸ் பார்ட்டி என்ன பேசினாலும் தமிழிலும், பின் அதையே ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்து மேஜர் சுந்தர் ராஜன் பேசுவது போல பேசினார்//
சேம் ப்ளட். நானெல்லாம் இந்தக் கொடுமைய பள்ளிக்கூட காலத்திலேருந்தே பட்டிருக்கேன், என் கசின்சால. அவங்க இன்னும் மாறல. என் ப்ளாக் தமிழ்ல இருக்கறதால அவங்களால படிக்க முடியலையாம்.
//அங்க வீட்டுகுழாயை திறந்தா பாலும் தேனுமா வரும். இந்தியன் ஸ்டோர்ஸ்ல எல்லாம் கிடைக்கும்னு//
அப்படியே புட்டு புட்டு வெச்சிருக்கீங்க.
//தங்கமணியை காப்பாற்ற, "கேசரி பவுடர் கிடைக்குமா அங்கே?னு நானும் கேட்டு விட்டேன்//
சூப்பர். நானும் அப்போல்லாம் ஜாலியா அவங்கள கலாச இப்படி பல பல்புக் கேள்விக்கணைகள தொடுத்து, அவங்கள நிலைகுலைய வெச்சிருக்கேன்.
//கடைசியில் ஈமெயில் முகவரி அவங்களும் வாங்கிக்கவே இல்லை, நாங்களும் குடுக்கலை//
இத இத இதத்தான் எதிர்பார்த்தேன்.

இலவசக்கொத்தனார் said...

இப்போ என்னாங்கறீங்க? வாட் ஆர் யூ ட்ரையிங் டு சே?

வல்லிசிம்ஹன் said...

haiyo ஹையோ.
நானும் அப்படிப்பேசறேனா அம்பி??
இருக்காது. நான் மூணு நாலு மாசம் தானே போறேன். வியாதி பிடிக்காது.:)
பிடிச்சாலும் மருந்து மாதிரி உங்க பதிவைப் படிச்சுடறேன்:)))))))
ஒரு மணி நேரத்துக்கா இந்தப் பாடு படுத்தினாங்க!!!அவங்க ரெண்டு நாள் தங்கியிருந்தா ஜூனியர் பாடு என்னா ஆகியிருக்கும்:)

வல்லிசிம்ஹன் said...

ஆட்டோ பிடிக்கவே ஆட்டோல தான் போகனும்//

:)ம்ஹ்ஹூம் சிரிச்சி மாளலை.

ராமலக்ஷ்மி said...

நான் கூட 'என்ன வளம் இல்லை நம் திருநாட்டில்' கட்சி! சரி போறது போறாங்க அது அவரவர் சொந்த விருப்பம் போனாப் போகுதுன்னு விட்டா...வேணும். நல்லாத்தான் வாரியிருக்கீங்க:))!

ILA (a) இளா said...

is it? அப்படியா? ஆர் யூ ஓகே நவ்? இப்போ நீங்க பரவாயில்லையா?

Kavinaya said...

//ஆட்டோ பிடிக்கவே ஆட்டோல தான் போகனும்.//

//பல்ராம் நாயுடு பைனாக்குலரில் பாப்பது போல ஒரு லுக் விட்டுவிட்டு//

:))

உங்களுக்கு பதிவு போட மேட்டர் குடுத்தாரே, அதுக்கு நன்றி சொல்லணும்ல? :))

Ms Congeniality said...

FYI..
neenga sollra adhe area la sq ft 3500/- ku pordhu(flat vaangarapo)

idhe area la oru software firm(quite well known) has been started

idhe area lendhu bus freq is very good and train facility also exists within very less distance

neengale 7.20ku train lendhu errangina 8.30 kulla veetuku varardhu illayaa??

edhuku indha build up?

rapp said...

//neenga sollra adhe area la sq ft 3500/- ku pordhu(flat vaangarapo)
idhe area la oru software firm(quite well known) has been started
idhe area lendhu bus freq is very good and train facility also exists within very less distance
neengale 7.20ku train lendhu errangina 8.30 kulla veetuku varardhu illayaa??
edhuku indha build up?//
ஆஹா சூப்பர், அண்ணி பொங்கி எழுந்துட்டாங்க. இப்படி புள்ளிவிவரத்தோட உங்க குட்டை உடச்சிட்டாங்களே, இதுக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க அண்ணே?

Anonymous said...

idhu paravaillaiye, bangalorela body shop kadaikulla poi, naanum en friendum thamizhla pesinavudane ennamo asigatha pathapla moonchiya vechukkaranga .. sari thamizhkku thaan indha gadhi polannu kanndathla pesina adukkum adhe parvaithaan, then we became major sundararajan's sisters and the tension eased there.. kodumainga

Paavai

Vijay said...

What a pity!!!!!! என்ன.... கொடும..... சார் இது!!!!!!!

CVR said...

Typical Ambi piece!!
really loved it!! :-)

Vijay said...

//ரெண்டாயிரம், மூவாயிரம்! மாமா பிஸ்கோத்து! ரேஞ்சுக்கு நிலைமை மாறுதேனு//
Explain with examples.படம் வரைந்து பாகங்களை குறிங்க பாப்போம். :P

சின்னப் பையன் said...

First class post!!! முதல் தர பதிவு!!

Syam said...

ROTFL...வி.வி.சி. :-)

Syam said...

//ஹாய் டாம்,

எல்லாம் சரி, இந்த பதிவ எப்போதும் போல தங்கமணி கிட்ட படித்து காட்டிட்டு தானே பப்ளிஷ் பண்ணினீங்க? இல்லைனா இருக்கு உங்களுக்கு....//

யக்கா அடிச்சு அடிச்சு அம்மணி டயர்டு ஆகி போய்டாங்கலாம்....
:-)

ஜோசப் பால்ராஜ் said...

அட நீங்க வேற, வெளிநாட்டுல இருக்க எல்லாருமே இது மாதிரி பேசுனாதான் மதிக்கிறாய்ங்க. நான் ஊருக்கு போய் முடிந்தளவு ஆங்கிலம் கலக்காத தமிழ்ல பேசுனா, இவன் உண்மையிலயே சிங்கப்பூர்ல இருக்கான, இல்ல இங்க எங்கயாவது சுத்திகிட்டு இருக்கானனு கேட்ட ஆளு எல்லாம் இருக்கு.
ஆனா இந்த அமெரிக்கா ஆளுங்க விடுற லொள்ளு இருக்கே.... தாங்கவே முடியல.

Anonymous said...

thangamani kelvikku enna pathil?
major sundarrajan madhiri pesiparthen,ayyayo thangamudiyala.romba kashtam.eppadi neenga rendu mani neram ottineenga?
nivi

ambi said...

@முத்தக்கா, அங்கயும் அப்படி தானா? சரி தான் பீட்டர் பார்டிகள் எங்கும் வியாபித்து உள்ளனர் போலும். :)


//இந்த பதிவ எப்போதும் போல தங்கமணி கிட்ட படித்து காட்டிட்டு தானே பப்ளிஷ் பண்ணினீங்க?//

@சுமதியக்கா, பத்த வெச்சியே பரட்டை. :))

பாதி தான் சொன்னேன். மீதிக்கு தான் வந்து சாமியாடிருக்காங்க பாருங்க. :p

//நானும் ஒரு நிமிஷம் மேட்டர்ன உடனே நீங்களும் கோதாவில் குதிச்சிட்டீங்கன்னு நினைச்சேன்.
//

@ராப், தெரியுமே, உன்னை சொல்லி குற்றமில்லை, என்னை சொல்லி குற்றமில்லை. :))

//யாரு, கைப்புள்ள சாரா?இல்லை அண்ணியே ஒரு ப்லாகர்னு அப்படி சொல்றீங்களா?
//

இல்லை, கைப்பு பெங்களூரில் தான் இருக்கார். நான் சொல்வது சென்னை.

இன்னோரு க்ளூ - இந்த பதிவில் அவரின் பாதி பெயர் ஒளிந்துள்ளது. :p

//இப்போ என்னாங்கறீங்க? வாட் ஆர் யூ ட்ரையிங் டு சே?
//

நீங்களுமா இலவச கொத்தனார்? யூ டூ ப்ரீ பில்டர்? :))

(கொத்தனாருக்கு இங்க்லீசுல என்னப்பா?)

ambi said...

//நானும் அப்படிப்பேசறேனா அம்பி??
//

@வல்லி மேடம், ஹிஹி, உங்க மருமகளிடம் கேட்டு பாருங்க. :p

//ஒரு மணி நேரத்துக்கா இந்தப் பாடு படுத்தினாங்க!!!//

ஆமா, ரொம்பவே பொசுக்கிட்டாங்க. :p

//போனாப் போகுதுன்னு விட்டா...வேணும். நல்லாத்தான் வாரியிருக்கீங்க//

@ராமலக்ஷ்மி, உங்களுக்கு ஏதும் இந்த மாதிரி அனுபவம்..? :))

//is it? அப்படியா? ஆர் யூ ஓகே நவ்? இப்போ நீங்க பரவாயில்லையா?

//

@இளா, யெஸ், ஆமா, ஐம் ஓகே நவ், இப்போ பரவாயில்லை. :p

//உங்களுக்கு பதிவு போட மேட்டர் குடுத்தாரே, அதுக்கு நன்றி சொல்லணும்ல?//

சரியா சொன்னீங்க கவிநயா மேடம். :))

ambi said...

@ms.congeniality, முதல்ல ஒரு கும்புடு போட்டுகறேன் எஜமான். :)


//neenga sollra adhe area la sq ft 3500/- ku pordhu(flat vaangarapo)

idhe area la oru software firm(quite well known) has been started
//

அடியேன் நம்பி சே! அம்பி திணற கூடாதுன்னு பதிலும் நீங்களே குடுத்து இருக்கீங்க, என்னே உங்கள் தயாள குணம். :))

//idhe area lendhu bus freq is very good and train facility also exists within very less distance
//

உண்மை தான்.ஒத்துக்கறேன். :)

//neengale 7.20ku train lendhu errangina 8.30 kulla veetuku varardhu illayaa?? //

இதுவும் உண்மை தான்.ஒத்துக்கறேன். நான் சொல்ல வந்தது ஏரியா ரொம்ப இடியாப்பம் மாதிரி சிக்கல் பிடிச்சது. சுலபமா கண்டுபிடிக்க முடியலைன்னு சொல்ல வந்தேன்.

இப்ப என்ன, இந்த ஏரியா தான் சென்னையின் இதயம் போன்றதுனு ஒரு பதிவு போடனுமா, போட்டுடலாம். எதுனாலும் பேசி தீர்த்துக்கலாம்.
(இங்க அம்பி அம்பினு ஒரு மானஸ்த்தன் இருந்தானே எங்கப்பா அவன்?) :))

ambi said...

//அண்ணி பொங்கி எழுந்துட்டாங்க. இப்படி புள்ளிவிவரத்தோட உங்க குட்டை உடச்சிட்டாங்களே, இதுக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க அண்ணே?
//

@ராப், என்னமா கொளுத்தி போடற மா. :p

உன் புருசனுக்கு 30 நாளில் தமிழ் கத்துகொடுத்து உன் பிளாகை படிக்க வைக்க யாராவது முன் வந்தா அவங்களுக்கு கோடி புண்யம் கிட்டும். :))

//then we became major sundararajan's sisters and the tension eased there.. kodumainga
//

@paavai, ROTFL. thanks for dropping here :)

@cvr, நன்னி ஹை. என்ன ஒரே பீட்டரா இருக்கு? சென்னைல இருக்கீங்களோ? :p

//Explain with examples.படம் வரைந்து பாகங்களை குறிங்க பாப்போம்.//

@vijay, இது பின்னிலக்கியம். நீங்களே யூகிச்சுக்கனும். :p

//First class post!!! முதல் தர பதிவு!!
//

@chinna paiyan, அவ்வ்வ்வ் போட மறந்துட்டீங்களே! :p

//யக்கா அடிச்சு அடிச்சு அம்மணி டயர்டு ஆகி போய்டாங்கலாம்....
//

@ஷ்யாம், சொந்த அனுபவம் பேசுதோ? :p

//இவன் உண்மையிலயே சிங்கப்பூர்ல இருக்கான, இல்ல இங்க எங்கயாவது சுத்திகிட்டு இருக்கானனு கேட்ட ஆளு எல்லாம் இருக்கு.
//

உண்மை தான் ஜோசப்.

//ஆனா இந்த அமெரிக்கா ஆளுங்க விடுற லொள்ளு இருக்கே.... தாங்கவே முடியல.
//

ஹிஹி, கொத்தனார் கவனிக்கவும். :))

ambi said...

//thangamani kelvikku enna pathil?
major sundarrajan madhiri pesiparthen,ayyayo thangamudiyala//

@நிவி, பதில் சொல்லி இருக்கேன் பாருங்க.

இந்த மே.சு.ரா விளையாட்டு ரெம்ப ஜாலியா இருக்கும். :))

Sridhar Narayanan said...

NRI - விளக்கம் சூப்பர். டோண்டு சார் இன்னமும் பாக்கல போல :-))

எசமானுக்கு ஒரு ஈ-கலப்பை வாங்கிக் கொடுத்து தமிழ்லேயே எழுதச் சொல்லுங்களேன். கீதா மேடத்துக்கும் நல்லா பொழுது போகும் :-))

பாலசந்தர் படத்தில வீட்டுக்குள்ள கரும்பலைகையில எழுதி தகவல்களை பகிர்ந்துப்பாங்க. நீங்க ரெண்டு பேரும் ப்ளாக்ல சண்டை போடறீங்கப் போல. :-)

Vijay said...

//(இங்க அம்பி அம்பினு ஒரு மானஸ்த்தன் இருந்தானே எங்கப்பா அவன்?) :))//

இது நாங்க போட வேண்டிய கமெண்ட்டு. நீங்களே போட்டுகிட்டதால ரிப்பீட்ட்ட்ட்டேய்...

gils said...

vambi maama..cha..வம்பி மாமா..அனதர் அசத்தல் பதிவு (எப்பா சாமி...postnu அடிக்க முடியல...s தமிழ்ல எப்படி அடிக்கறது)...
//FYI..
neenga sollra adhe area la sq ft 3500/- ku pordhu(flat vaangarapo)

idhe area la oru software firm(quite well known) has been started
//
intha antha area antha areau panjathanthiram dvayani kanaka solrele athu entha area??

//flat vangarapo//
mr.vambi..litea oru bitta potrukanga paathelo :D

//இங்க அம்பி அம்பினு ஒரு மானஸ்த்தன் இருந்தானே எங்கப்பா அவன்?) //
elathiyum nengalay ketuputa naanga ennatha commentarathu :) irunthalum..semma samalifications of india :d

gils said...

intha major sundarajan goshtis paravala..silathulam..pulam peyarnthalaum thamizha marakalainu...pathu varusam kazhichi vanthu..thenkulambi vendaam..panikoozhu kondaanu tamizh pechu engal moochu kanakka pesi manda kaaya vekaranga :( vacha kudimi edutha mottai

Geetha Sambasivam said...

innum mamnar vitile than deravaa??? pavam unga mamanar! :P

Geetha Sambasivam said...

//ஹாய் டாம்,.//

hihihihihi, sirppai adakka mudiyalai, tankeeeeees Sumathi, You are going to be my next U.Pi.Sa.
Advance Congratulations!!!

Geetha Sambasivam said...

//எசமானுக்கு ஒரு ஈ-கலப்பை வாங்கிக் கொடுத்து தமிழ்லேயே எழுதச் சொல்லுங்களேன். கீதா மேடத்துக்கும் நல்லா பொழுது போகும் :-))//

grrrrrrrrrr enna ithu?? intha Geetha Madam vere yaro thane?? Nan Aval illai thane??
Sridhar Narayanan, ungalai romba nallavar, vallavarnu ninaichu emanthutenoooooooo????????????

Syam said...

//கீதா சாம்பசிவம் said…

ஹாய் டாம்,.

hihihihihi, sirppai adakka mudiyalai, tankeeeeees Sumathi, You are going to be my next U.Pi.Sa.
Advance Congratulations!!!//

who is your current U.Pi.Sa?

Vijay said...

கில்ஸ், போஸ்ட்....."ஸ்" க்கு கேபிடல் S போடவும்.

Ramya Ramani said...

ஜூப்பரு...நல்ல ரிப்ளை எல்லாம் மேலிடத்துல இருந்து வந்திருக்கு போல :P..சில இடங்கள் சென்னையில் குழப்பமானவை தான்:( NRI - பத்தின விஷயமெல்லாம் நல்ல காமெடி ரசித்து படித்தேன் :)

ரசிகன் said...

நானும் இப்படி சில டமிலர்களை பார்த்திருக்கேன். கலக்கலா எழுதியிருக்கிங்க அம்பியண்ணா:)

ரசிகன் said...

//ஒரு பிரபல பதிவர் கூட இதே ஏரியா தான்! என்ற க்ளூவுடன் இந்த இடத்தில் நிறுத்தி கொள்கிறேன்.(இதுக்கே இருக்கு எனக்கு மண்டகபடி).//

ஓ.. அந்த வீ.வீ.ஐ.பி யா?..

(மண்டகப்படி கொஞ்சம் ஸ்ராங்கா இருக்கட்டுமேன்னுதான்.ஹிஹி..:P)

Anonymous said...

//டோண்டு சார் இன்னமும் பாக்கல போல//

வாங்க Sridhar, அவர் ஏரியா இல்லை. நல்லாத்தான் கோர்த்து விடறீங்க நீங்க. :p

எசமான் ஒன்லி இங்க்லீஸ் & தங்லீஸ்ல தான் எழுதுவாங்களாம். :)

//நீங்க ரெண்டு பேரும் ப்ளாக்ல சண்டை போடறீங்கப் போல//

ஹிஹி, இங்க தானே ஆரம்பிச்சது.

@gils, தமிழ்ல பதிவு எல்லாம் போட்டு இருக்க போல. Inspired By... :p

@கீதா பாட்டி, என்ன ஒரே பீட்டரா இருக்கு? :p

//நல்ல ரிப்ளை எல்லாம் மேலிடத்துல இருந்து வந்திருக்கு போல //

@ramya, ஆமா! ஆமா! சாமியாடி இருக்காங்க. :))

@தம்பி ரசிகன், நீ நெனச்ச பதிவர் கிடையாதுப்பா. :))

திவாண்ணா said...

//எசமானுக்கு ஒரு ஈ-கலப்பை வாங்கிக் கொடுத்து தமிழ்லேயே எழுதச் சொல்லுங்களேன்.//

:-)))))))))))

Geetha Sambasivam said...

//who is your current U.Pi.Sa?//

ச்யாம், இது தெரியாம என்னத்தை ப்ளாக் யூனியனிலே இருந்துட்டுக் குப்பை கொட்டறீங்க?? வலை உலகுக்கே அறிந்த ரகசியம் ஆச்சே அது??? நீங்க தான் கண்டு பிடிச்சுக்குங்களேன்! :P

சென்ஷி said...

//இலவசக்கொத்தனார் said...
இப்போ என்னாங்கறீங்க? வாட் ஆர் யூ ட்ரையிங் டு சே?
//

:)))

மறுக்கா சொல்லிக்கறேன்...ரிப்பீட்டே..

சென்ஷி said...

//(மேட்டர் என்றால் விஷயம் என இங்கு பொருள் கொள்ளவும், என்ன செய்ய? தமிழ்மண நிலமை அப்படி)
//

ஹா.ஹா.ஹா........ கலக்கிட்டீங்க :)

நானானி said...

ஆஹா! நல்ல மேட்டர்தான், அம்பி!
கலக்கீட்டீங்க....இல்லல்ல...வாரீட்டீங்க!நம்மூரிலே மினரல் வாட்டர் பாட்டிலெல்லாம் வராத போது இம்மாதிரி அலம்பல் பார்ட்டிகள் கையோடு ஒரு லகேஜ், அங்குள்ள மினரல் பாட்டில் க்ரேட் க்ரெடாக கொண்டுவந்து, பாட்டிலும் கையுமாக அலையும் கொடுமையை என்ன சொல்ல. இங்குள்ள தண்ணீயைத்தான் குடித்து அரை ஆயுசிலே அங்கு போனீர்கள்?
சிரிப்புத்தான் வந்ததையா!!!

Arunkumar said...

ROTFL...
adhaavadhu, VVC that means vi.vi.sirichen :)

ambi uncle, america party super... texas veyil apdi !!
indha maathiri damilars kandippa irukkanga !!!

//
இதுவும் பட்டர்பிளை எபக்ட் தான் என பின்னூட்டம் விழற வாய்ப்புக்கள் பிரகாசமாக
//
LOL... andha butterfly-a thayavu senju vitrungappa...

Anonymous said...

ambi..
atheppadi ellar kaalaiyum ippadi varureenga???????.. unga golden ammavaiyum serthuthaan..