சன் டிவியும் விஜய் டிவியும் தமிழனின் வரவேற்பறையில் நுழையாத என்பதுகளில் தூர்தர்ஷன்காரர்கள் டில்லியிலிருந்து, போனா போகட்டும் என அவ்வப்போது தமிழ் நிகழ்ச்சிகளையும் நடத்தி கொள்ள அனுமதித்து இருந்த காலம்.
உடனே வாசகர்கள் கிரேன் ஷாட், காமிரா ஆங்கிள் எல்லாம் யோசித்து பார்க்க வேண்டாம்.
திங்கள் கிழமைன்னா எல்லா மொழி பாடல்களும் வரும் தமிழ்மணம் போன்ற சித்ரஹார், செவ்வாய்னா ஒரு ரூம் செட்டுக்குள்ளேயே மொத்த கதையையும் நகர்த்தும் குடும்ப நாடகம், புதனும் வியாழனும் சில மொக்கை பேட்டிகள், வெள்ளி கிழமைன்னா ஒளியும் ஒலியும், சனி கிழமைன்னா ஸ்லீவ்லஸ் ஸ்வட்டர் போட்ட ராஜேஷ் கண்ணாவும், பன் கொண்டை போட்ட ஷர்மிளா டாகூரும் தள்ளி தள்ளி நின்னு டூயட் பாடும் ஹிந்தி படம், ஞாயிறுன்னா காலையில் ரங்கோலி, பின் ராமாயணம், சாயந்திரம் மனாளனே மங்கையின் பாக்கியம் என்ற புத்தம் புதிய திரைபடம் என மக்களை மெய்மறக்க வைத்து இருந்தது தூர்தர்ஷன்.
இதுல வியாழ கிழமைன்னு நினைக்கிறேன், ஒரு வார நிகழ்ச்சிகளை சில வாசக கண்மணிகள், விமர்சனம் என்ற பெயரில் டெம்ளேட் கடிதங்கள் போடுவார்கள். அந்த நிகழ்ச்சிக்கு பேர் எதிரொலி. காமடி நிகழ்ச்சி இல்லாத குறையை இந்த நிகழ்ச்சி போக்கி கொண்டிருந்தது என சொல்லலாம்.
அந்த நிகழ்ச்சிக்குன்னே பாலசந்தர் ப்ரேம் போட்ட கண்ணாடி அணிந்த ஒருத்தர் தான் பதில் சொல்ல வருவார். நியூஸ் படிக்க செலக்ட் செய்யாமல், இந்த எதிரொலிக்கு கடிதம் படிக்க ஒரு அம்மணியை அனுப்பி இருப்பார்கள். ஏன்னா அப்ப ஷோபனா ரவியின் புடவை டிஸைனுக்கு தான் மவுசு.
பெரும்பாலும் எதிரொலிக்கு வரும் கடிதங்கள் எல்லாம் ஜிங்ஜக்காக தான் இருக்கும்.
உதாரணமாக, போன வாரம் செவ்வாய் இரவு 7 மணிக்கு வயலும் வாழ்வும் நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அந்த நிகழ்ச்சியில் இயற்கை உரம் பற்றி எடுத்துரைத்த நபர் சட்டை கூட போட நேரமில்லாமல் உள்பனியனோடு வந்திருந்தது நெஞ்சை நெகிழ செய்தது! என்று விழுப்புரத்திலிருந்து வீராச்சாமி என்ற நேயர் எழுதியுள்ளார்!னு அந்தம்மா ஒரு பிட்டை போடுவாங்க.
உடனே நம்மாளு ஒரு தெய்வீக சிரிப்பொன்றை உதிர்த்துவிட்டு, அடுத்த தடவை அவரை சட்டை போட்டு பேட்டி குடுக்க செய்கிறேன் அப்படின்னு சமாளிப்பார்.
ஏன் செவ்வாய்கிழமை நாடகங்களை ஒரே ரூமில் எடுக்கறீங்க?னு ஜாம்பஜார்லேருந்து ஜக்கு என்ற வாசகர் கேட்டு இருக்கார்.
இது ஒரு நல்ல கேள்வி. இப்ப குடும்ப விஷயங்கள்னா அது நாலு சுவத்துகுள்ள தான் இருக்கனும் என்பதை தான் அந்த நாடகத்தின் இயக்குனர் சிம்பாலிக்கா சொல்லி இருக்கார்.
ஜாம்பஜார்ல தக்காளி ரொம்ப சீப்பா கிடைக்குமாமே! தக்காளி தொக்கு போட்டா இட்லிக்கும், தயிர் சாததுக்கும் செம காம்பினேஷன் மிஸ்டர் ஜக்கு! அப்படினு ஒரே போடா போடுவார் நம்மாளு.
இப்ப இந்த நிகழ்ச்சியை பார்த்து கொண்டிருக்கும் ஜக்கு, கேள்வியை விட்டுவிட்டு தக்காளி வாங்கி தொக்கு போட ஆரம்பிச்சுடுவார்.
டிஸ்கி: தமிழ்மணத்துல சில கேள்வி பதிவுகளை படித்து விட்டு பின் அதுக்கு பதில்களையும், பதிலுக்கு பதிலையும், பதிவா படிக்கும் போது இந்த எதிரொலி நிகழ்ச்சி எனக்கு நியாபகத்துக்கு வரவில்லைன்னு சொல்லிக்கறேன். :))
36 comments:
செட்டுக்குள்ளேயே மொத்த கதையையும் நகர்த்தும் குடும்ப நாடகம், புதனும் வியாழனும் சில மொக்கை பேட்டிகள், வெள்ளி கிழமைன்னா ஒளியும் ஒலியும், சனி கிழமைன்னா ஸ்லீவ்லஸ் ஸ்வட்டர் போட்ட ராஜேஷ் கண்ணாவும், பன் கொண்டை போட்ட ஷர்மிளா டாகூரும் தள்ளி தள்ளி நின்னு டூயட் பாடும் ஹிந்தி படம், ஞாயிறுன்னா காலையில் ரங்கோலி, பின் ராமாயணம், சாயந்திரம் மனாளனே மங்கையின் பாக்கியம் என்ற புத்தம் புதிய திரைபடம் என மக்களை மெய்மறக்க வைத்து இருந்தது தூர்தர்ஷன்.//
ஆஹா, இது அல்லவோ கொசுவத்தி.மறக்க முடியாத நினைவுகளைக் கிளறி விட்டீர்களே:)
அம்பி எப்படி இப்படி கதை செய்ய முடிகிறது!!!!
இப்பத்தானே என் கேள்விபதில் பதிலுக்கு கேள்வியில் வந்து கும்பிடு போட்டுட்டு போனீங்க..இப்படி கேள்விபதிலையெல்லாம் கிண்டலடிச்சா எப்படி .. உங்கள யாரும் கேக்கலயா.. ந.நா.கே.நா.பி கேட்டிருந்தா இப்படி பதிவு போடுவீங்களா.? :))
//பதிவா படிக்கும் போது இந்த எதிரொலி நிகழ்ச்சி எனக்கு நியாபகத்துக்கு வரவில்லைன்னு சொல்லிக்கறேன்//
வச்சான்யா குண்டு... :-)
ஹா ஹா ஹா. ஒருத்தர் கிட்டத்தட்ட பா.சிதம்பரம் மாதிரி இருப்பாரே, அவர் பேரு சம்பத். இன்னொருத்தர் 'அதென்னன்னா'னே ஆரம்பிச்சு எல்லாக் கேள்விக்கும் சோப்ளாங்கி பதிலா சொல்லுவாரே, அவர் பேரு நல்லதம்பி. அந்த டைம்ல எல்லாம் நான் இதக் கூட விடாம பார்ப்பேன். எல்லா பள்ளிக்கூடத்திலும் ஆண்டு விழா, ஆசிரியர் தின விழானு எல்லாத்திலயும் இதக் கிண்டல் பண்ணி கண்டிப்பா ஒரு நிகழ்ச்சி இருக்கும். ஹ்ம்ம் அது ஒரு அழகிய நிலாக் காலம்.
//அம்பி எப்படி இப்படி கதை செய்ய முடிகிறது//
@valli madam, கதையா, எல்லாம் உங்க கிட்ட கத்துகிட்டது தான் வல்லி மேடம். :))
//இப்படி கேள்விபதிலையெல்லாம் கிண்டலடிச்சா எப்படி .. //
@முத்தக்கா, எல்லா கேள்வி பதிலையும் நான் கலாய்க்கலை.அதுவும் உங்களை நான் கலாய்ப்பேனா?
சில!னு சொல்லி இருக்கேனே. :p
//உங்கள யாரும் கேக்கலயா..//
கேட்டாலும் பதில் சொல்றதா இல்லை. :p
//ந.நா.கே.நா.பி கேட்டிருந்தா இப்படி பதிவு போடுவீங்களா.? :))//
ந.நா.கே.நா.ப தானே? பி எப்படி..? புதசெவி. :))
//வச்சான்யா குண்டு//
@syam, பத்த வெச்சியே பரட்டை. :p
@raap,
நன்றி ராப், கரக்ட்டா சொன்னீங்க. நான் பாத்து ரசிச்சது நல்லதம்பி அவர்களை தான். :))
:))
//டிஸ்கி: தமிழ்மணத்துல சில கேள்வி பதிவுகளை படித்து விட்டு பின் அதுக்கு பதில்களையும், பதிலுக்கு பதிலையும், பதிவா படிக்கும் போது இந்த எதிரொலி நிகழ்ச்சி எனக்கு நியாபகத்துக்கு வரவில்லைன்னு சொல்லிக்கறேன். :))
//
என்ன கொடுமைங்க இது... நான் கூட இதையேத்தான் நெனைச்சேன். அம்பிய யாரும் கூப்புடுமா விட்டுட்டாங்களேன்னு இப்ப யோசிக்குறேன் :))
பிடுங்கறமாதிரிக்கு பி தானே வரும்..
@ ராப் நாங்களும் எதிரொலி வயலும் வாழ்வும் கூட பாத்துட்டு இருந்தோம்.அதுவும் பக்கத்துவீட்டு டிவியில்.. :)
பழைய நிகழ்ச்சிகளுக்கான வர்ணனை சூப்பர் அம்பி!
எதிரொலியின் ஜிங்ஜக் கேள்விகளையும் தூர்தர்ஷனார் தரும் ஜக்ஜிங் பதில்களையும் கலாய்த்து மகிழ்ந்திருக்கிறோம் அந்தக் காலத்தில்.
கடைசியில் நீங்க வச்சது பெர்ர்ரீய குண்டுதான்:)))!
//எதிரொலியின் ஜிங்ஜக் கேள்விகளையும் தூர்தர்ஷனார் தரும் ஜக்ஜிங் பதில்களையும் கலாய்த்து மகிழ்ந்திருக்கிறோம் அந்தக் காலத்தில்.//
உண்மைதான். நாங்களும் பள்ளியில் இதை மேடையேற்றி மகிழ்ந்த காலம் உண்டு.
எதிரொலியை நான் விருப்பமாக பார்த்த காரணம் அதில் அந்த வார திரைப்படத்தை பற்றி சொல்வார்கள். கடைசியில் அல்லது நடுவிலேயே சொல்வார்கள் என எதிர்பார்த்து அமர்ந்திருப்போம். அதுவும் திரு.நல்லதம்பி முன்னால் ஏதாவது ரெண்டு பேப்பர் தெரியற மாதிரி இருந்தா போதும். கண்டிப்பா படத்தை சொல்வாருன்னு நினைச்சுக்கிட்டு பெட் வச்சு பார்த்த காலம் மனக்கண் முன் வருகிறது. நிறைய நேரம் சொல்லாம போயிடுவாரு. அன்னிக்கு அவரு பேர சொல்லித்தான் நம்ம பிரண்ட்ஸ் கூட்டத்துல அர்ச்சனை, ஆராதனை, அபிசேகம்லாம் நடக்கும். :))
//@ ராப் நாங்களும் எதிரொலி வயலும் வாழ்வும் கூட பாத்துட்டு இருந்தோம்.அதுவும் பக்கத்துவீட்டு டிவியில்.. :)//
நான் எதிர்வீட்டு டிவியில :))
//ராமலக்ஷ்மி said...
பழைய நிகழ்ச்சிகளுக்கான வர்ணனை சூப்பர் அம்பி!
எதிரொலியின் ஜிங்ஜக் கேள்விகளையும் தூர்தர்ஷனார் தரும் ஜக்ஜிங் பதில்களையும் கலாய்த்து மகிழ்ந்திருக்கிறோம் அந்தக் காலத்தில்.
கடைசியில் நீங்க வச்சது பெர்ர்ரீய குண்டுதான்:)))!
//
அப்ப அடுத்தது யாராச்சும் ராமலக்ஷ்மி அம்மாவையும் கூப்பிடணும்னு கேட்டுக்கறேன் :)
eஎதிரொலி முடிஞ்சதும் முன்னோட்டம் வருமா,இல்லை ஞாயித்துக்கிழமை வருமா அம்பி. மறந்து போச்சு.
//மனாளனே மங்கையின் பாக்கியம் என்ற புத்தம் புதிய திரைபடம் என மக்களை //
தேவுடா:)
//டிஸ்கி: தமிழ்மணத்துல சில கேள்வி பதிவுகளை படித்து விட்டு பின் அதுக்கு பதில்களையும், பதிலுக்கு பதிலையும், பதிவா படிக்கும் போது இந்த எதிரொலி நிகழ்ச்சி எனக்கு நியாபகத்துக்கு வரவில்லைன்னு சொல்லிக்கறேன். :))
//
அண்ணே வாராவாரம் கேள்வி-பதில் கோஷ்டிகள விட்டுடேங்களே.. மதுர மேல மாசி வீதில நின்னுக்கிட்டு புஷ்கிட்ட கேள்வி கேக்கர மாதிரி.. தாங்கமுடியலடா சாமி..
வயலும் வாழ்வு நிகழ்ச்சியை வேறு வழியில்லாமல் பாத்துட்டு...ஆஹா! நாம்பளும் வரிஞ்சு கட்டிட்டு வயலிலே நாத்து நடப் போலாமே!!!என்று விவசாயம் பத்திய விபரங்கள் அதிகம்
தெரிந்து கொள்ளவைத்தது. சொந்தமா டீவி வாங்கும் வரை அடுத்தவீட்டில் போய்ப் பார்ப்பதை குழந்தைகளைக் கூட அனுமதித்தது இல்லைன்னு சொல்லீக்கீறேன். அம்பி!!வெள்ளிக்கிழமையும் ஞாயத்துக்கிழமையும் மாலையில் ஊரே
வெறிச்சோடியிருப்பதைப் பத்தி சொல்லலையே!!!!
சென்ஷி said...//அப்ப அடுத்தது யாராச்சும் ராமலக்ஷ்மி அம்மாவையும் கூப்பிடணும்னு கேட்டுக்கறேன் :)//
கும்பிட்டுக் கேட்டுக்கறேன். யாரும் கூப்பிட்டுராதீங்கோ...:((!
//ராமலக்ஷ்மி said...
சென்ஷி said...//அப்ப அடுத்தது யாராச்சும் ராமலக்ஷ்மி அம்மாவையும் கூப்பிடணும்னு கேட்டுக்கறேன் :)//
கும்பிட்டுக் கேட்டுக்கறேன். யாரும் கூப்பிட்டுராதீங்கோ...:((!
//
கும்புடுறது எப்படி அம்பி மாதிரியா... :)
//டிஸ்கி: தமிழ்மணத்துல சில கேள்வி பதிவுகளை படித்து விட்டு பின் அதுக்கு பதில்களையும், பதிலுக்கு பதிலையும், பதிவா படிக்கும் போது இந்த எதிரொலி நிகழ்ச்சி எனக்கு நியாபகத்துக்கு வரவில்லைன்னு சொல்லிக்கறேன். :))
//
டிஸ்கின்னாலே "எங்கப்பா குதிருக்குள்ள இல்ல"தான் நினைவு வருது :)
சென்ஷி said..//கும்புடுறது எப்படி அம்பி மாதிரியா... :)//
ஹி ஹி எப்படி கரெக்டா கண்டு பிடிச்சீங்க? கும்பிடற மாதிரி கும்பிட்டுவிட்டு //கேட்டாலும் பதில் சொல்றதா இல்லை//ன்னு கூலா சொல்லிட்டு //:p// இப்படிப் போட்டா ஆச்சு:)))!
:)))))))))
rapp said...
//ஹா ஹா ஹா. ஒருத்தர் கிட்டத்தட்ட பா.சிதம்பரம் மாதிரி இருப்பாரே, அவர் பேரு சம்பத். இன்னொருத்தர் 'அதென்னன்னா'னே ஆரம்பிச்சு எல்லாக் கேள்விக்கும் சோப்ளாங்கி பதிலா சொல்லுவாரே, அவர் பேரு நல்லதம்பி. அந்த டைம்ல எல்லாம் நான் இதக் கூட விடாம பார்ப்பேன். எல்லா பள்ளிக்கூடத்திலும் ஆண்டு விழா, ஆசிரியர் தின விழானு எல்லாத்திலயும் இதக் கிண்டல் பண்ணி கண்டிப்பா ஒரு நிகழ்ச்சி இருக்கும். ஹ்ம்ம் அது ஒரு அழகிய நிலாக் காலம்.//
பிற்காலத்தில் இச்சேவையைத் தொடர்ந்தவர் யூ.எம்.கண்ணன். டைட்டில் போடும் போது புல்லாங்குழலும் மயிலிறகும் வேற போடுவாங்க.. :-))))
vambi maama..antha ethiroli uncle per UM kannan.. :d "enna kodumai saar ithu" ku munnadi..most phamous dialoguena athu "Ithu oru nalla Kelvi..adutha kelvi?" ..ethavathu kushtamana kelviyaa teacher keta intha dialoguea use panni ess aaga try panni...mudugula scaleala halfboil..full boil..ellam vangirukomla :d
அம்பி,
லைட்டா கொளுத்திப்போட்டு நெறய கொசுவத்தி சுத்த வச்சிட்டீங்க. படிக்கும்போது என்னாடா அம்பி ரேன்ஞ்ல இல்லியோன்னு நினச்சேன். கடசிலதான் தெரிஞ்சிது குண்டு டிஸ்கில இருக்குன்னு..அதுல பாருங்க சம்மந்த பட்டவங்க இது வரைக்கும் கப் சிப். வருவாங்க..வருவாங்க...இருக்கு உங்களுக்கு மண்டகபடி....ம்.....
செரி, என் பங்குக்கு கொசுவத்தி....:P
//பிற்காலத்தில் இச்சேவையைத் தொடர்ந்தவர் யூ.எம்.கண்ணன். டைட்டில் போடும் போது புல்லாங்குழலும் மயிலிறகும் வேற போடுவாங்க.. :-))))//
எதிரொலில ஒரு கேள்வி..."அய்யா, போனா வாரம் அந்த நாடகத்துல தையல் மிஷின் உபயோகிக்கிற பெண்மணி தைக்கும்போது வீல்(அதாங்க மெஷின் கீழ சுத்துமே) பின்பக்கம் சுத்துதே? இயக்குனர் கவனிக்கவில்லையா?
கண்ணன் சார் பதில் "ஹா....ஹா....ஹ....நல்ல கேள்வி.....அடுத்த கேள்விக்கி போவோமா?" (எல்லா காலத்துலயும் அம்பிங்க இருக்கதான்பா செய்யராங்க) :P
அட யாருப்பா இந்த அனானி...'சேம் பிட்சா இருக்கே..அதும் நான் பின்னூட்டம் போடும்போதே....ம்...ம்..."ஜிங்க்ஸ்" நாந்தான் பர்ஸ்ட் சொன்னேன்...நவுந்தா பத்து அடி......
நல்ல பதிவு, மிக நல்ல பதிவு, இன்னும் படிக்கலை, படிச்சுட்டு வரேன், இப்போ பின்னூட்டம் மட்டும் போட்டுக்கறேன். :P :P
அம்பி .....அண்மைலசென்னை டிடில எதிரொலி
நானும் பார்த்தேன் கேட்டேன்...
இப்போல்லாம் நல்லா மாறி இருக்கே?
(ஹிஹி..நான் கொஞ்சநாளா அதுல அடிக்கடி வரேங்கறதுக்காக சொல்லல:)))
விமர்சனம் எழுதினவங்களில் ஒருத்தரை நேர்ல நிலையத்துக்கே அழைச்சி சிறப்பிக்கிறாங்க.தெரியுமா?
ஒருநாள் நீங்களே போகப்போறீங்க அப்போ இருக்கு உங்க ஒலிக்கு எங்க எதிரொலி!!!!
அம்பி சூப்பரா கொசுவத்தியை ஏற்றியிருக்கீங்க....அதை மிஞ்சுவது டிஸ்கி....ஸ்ரீதர்-கே.ஆர்.எஸ்-கொத்ஸ் எங்கிருந்தாலும் உடனே வரவும். :)
pazhaya kalathukke kootikondu poneenga.appa ethiroli kooda vudaama pathirukken ninecha achiryama irukku.ippa the best of programmes kooda parka porumayillama channel change seigiren.samalippu sigaramnna andha dark framekaarara than sollanum.oliyum oliyum allathu
padavathipadam innum sila nodigalalil thodarum enkira screena kooda vidama ukkandhu parthrukken.how about you?
nivi.
அம்பிஜி,
பக்கத்து வீட்டு டி.வியில 50 பைசா கொடுத்து இதையெல்லாம் பார்த்தது தொலைச்சிருக்கோம்.
//இதுல வியாழ கிழமைன்னு நினைக்கிறேன்//
ஆமா, வியாழக்கிழமைதான். இரவு 9 மணின்னு நினைக்கிறேன்.
//நான் கூட இதையேத்தான் நெனைச்சேன். //
@senshi, ஏத? எதிரொலியவா? இல்ல இந்த கேள்வி பதில்களையா? :p
//அம்பிய யாரும் கூப்புடுமா விட்டுட்டாங்களேன்னு இப்ப யோசிக்குறேன்//
யாரும் கூப்பிட கூடாதேனு நான் கடவுளை வேண்டிட்டு இருந்தேன். :))
//பிடுங்கறமாதிரிக்கு பி தானே வரும்..
//
முத்தக்கா, சரி தான். நான் வேற நினைச்சேன்.நாங்களும் பக்கத்து வீட்ல தான் பார்த்தோம். :))
//எதிரொலியின் ஜிங்ஜக் கேள்விகளையும் தூர்தர்ஷனார் தரும் ஜக்ஜிங் பதில்களையும் கலாய்த்து மகிழ்ந்திருக்கிறோம் அந்தக் காலத்தில்.
//
ராமலக்ஷ்மி, அட நீங்களுமா? சூப்பர். :))
//எதிரொலியை நான் விருப்பமாக பார்த்த காரணம் அதில் அந்த வார திரைப்படத்தை பற்றி சொல்வார்கள். கடைசியில் அல்லது நடுவிலேயே சொல்வார்கள்//
@senshi, Same blood here. ஆனா மனுசன் அழுத்தக்காரர். சில சமயம் சொல்லவே மாட்டார். :p
//ஞாயித்துக்கிழமை வருமா //
@valli madam, ஞாயிறு தான் வரும் முன்னோட்டம்.
//அண்ணே வாராவாரம் கேள்வி-பதில் கோஷ்டிகள விட்டுடேங்களே.. //
@பரத், ஒரு முடிவோட தான் இருக்க போலிருக்கே. :p
//அடுத்தவீட்டில் போய்ப் பார்ப்பதை குழந்தைகளைக் கூட அனுமதித்தது இல்லைன்னு சொல்லீக்கீறேன். அம்பி//
@நானானி, அட, நீங்க இவ்ளோ ஸ்ட்ரிக்ட்டா? ஆமா, ஞாயிறு காலைல ஊரே வெறிச்சோடி இருக்கும்.
நாட்ல சிலர் அடங்கவே மாட்டேங்கறாப்பா.. :))
//டிஸ்கின்னாலே "எங்கப்பா குதிருக்குள்ள இல்ல"தான் நினைவு வருது//
@கவிநயா, தமிழ்மணம் ரொம்ப பாக்கறீங்க. :))
@parisil, :))))
//டைட்டில் போடும் போது புல்லாங்குழலும் மயிலிறகும் வேற போடுவாங்க//
@நிலா காலம், இது தான் அல்டிமேட் காமடி. :))
@கில்ஸ், அந்த டீச்சருக்கு என் வாழ்த்துக்கள்.
//இன்னும் படிக்கலை, படிச்சுட்டு வரேன்,//
@geetha madam, :)))
//அதுல பாருங்க சம்மந்த பட்டவங்க இது வரைக்கும் கப் சிப். வருவாங்க..வருவாங்க...இருக்கு உங்களுக்கு மண்டகபடி//
@vijay, ஹிஹி, நான் பொதுவா தானே சொன்னேன், யாரையும் குறிப்பிட்டு சொல்லலையே. :p
//டிடில எதிரொலி
நானும் பார்த்தேன் கேட்டேன்...
இப்போல்லாம் நல்லா மாறி இருக்கே?
//
@shylaja, இப்போ பொதிகை தான் தி பெஸ்ட் அக்கா! (ஹிஹி, நீங்க எனக்கு சான்ஸ் வாங்கி தர போறீங்கன்னு ஒன்னும் சொல்லலை) :))
வேலுக்குடி அவர்களின் ப்ரசங்கம் தான் பஷ்ட்டா இருக்காமே.
//ஒருநாள் நீங்களே போகப்போறீங்க அப்போ இருக்கு உங்க ஒலிக்கு எங்க எதிரொலி!!!!
//
எல்லாம் உங்க ஆசிர்வாதம். விட்டா தக்காளி எடுத்து அடிக்க நீங்களே ஆள் செட்டப் பண்ணுவீங்க போலிருக்கே. :p
//ஸ்ரீதர்-கே.ஆர்.எஸ்-கொத்ஸ் எங்கிருந்தாலும் உடனே வரவும்//
@மதுரையம்பதி, அவங்க எல்லாம் சத்தம் போடாம வந்துட்டு போயிட்டாங்களே! :p
//oliyum oliyum allathu
padavathipadam innum sila nodigalalil thodarum enkira screena kooda vidama ukkandhu parthrukken//
@nivi, உண்மை தான் நிவி, அந்த ஸ்க்ரீனுக்கு ஒரு மியூஜிக் வேற போடுவாங்களே, யப்பா சாமி தாங்க முடியாது. :)))
@samanyan, =)))
//பக்கத்து வீட்டு டி.வியில 50 பைசா கொடுத்து இதையெல்லாம் பார்த்தது தொலைச்சிருக்கோம்.
//
ஆ-மா, என்னது 50 பைசாவா? இதேல்லாம் 50 மச். :))
//இரவு 9 மணின்னு நினைக்கிறேன்.
//
எழரை மணிக்குன்னு நினைக்கிறேன். ஏன்னா 9 மணிக்கு டெல்லி காரன் சீரியல் போட படக்குனு லிங்கை புடுங்கிருவான். :))
//நாட்ல சிலர் அடங்கவே மாட்டேங்கறாப்பா//
சஞ்சய் ராமசாமி, தோடா, இந்த டயலாக்கை யாரு சொல்றாங்க பாருங்க பா! :p
There was a certain naiveity to the bland approach of Ediroli or Vayalum Vazhvum which is missing these days. I loved those two ....
post super vambi...
//
(எல்லா காலத்துலயும் அம்பிங்க இருக்கதான்பா செய்யராங்க) :P
//
idhu TOPPU :)
அம்பி :- செவ்வாய்கிழமை தவிர அனைத்து நாட்களிலும் வயலும் வாழ்வும் வரும். செவ்வாய் மட்டும் ஒரு சிரிப்பு நாடகம் வரும்.
ஆனால் எதிரொலியில் இது போன்று பிழையோடு சொல்ல வாய்ப்பு அதிகம். அதை தவிர அடுத்த வார படம் என்ன என்பதை சில சமயம் சொல்லுவார்கள். அது தான் எதிரொலியின் சிறப்பு அம்சம்.
இப்பிடி எல்லாம் இருக்குங்கிற உலகமே தெரியாம வளந்துட்டேன் பயபுள்ளை. நான்லாம் டிவி பாக்கிறப்ப சன்டிவியின் தமிழ்மாலை வந்திடுச்சு
Post a Comment