மற்ற டிவிகளை ஒப்பிடும் போது விஜய் டிவியில் பல உருப்படியான, சிந்திக்க வைக்கும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறார்கள். அனேகமாக வாரத்தில் ஒரு நாலு நாட்கள் யாராவது சோபாவில் உட்கார்ந்து கொண்டு பேசுகிறார்கள். இதை மாதிரி டாக் ஷோ நடத்த ரொம்பவே தில்லு வேணும்.
- முதலில் சரியான நிகழ்ச்சி நடத்துனர்(Anchor) வேணும்.
- மக்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில் நிகழ்ச்சியை வடிவமைக்க தெரியனும்.
- மூணாவது, நல்ல ஸ்டூடியோ தளம் அமையனும். ஒரு சில டிவிகள் வாய்கால் ஓரங்களில் எல்லாம் பேட்டி எடுக்கிறார்கள். பேக்ரவுண்டில் ஒருத்தர் சொம்பை தூக்கி கொண்டு நமக்கு தரிசனம் தருகிறார்.
இல்லாட்டி பொதிகையில் ஒரு காலத்தில் வந்த செவ்வாய் கிழமை நாடகம் மாதிரி ஆகி விடும். :)
நெல்லை கண்ணனை குழு தலைவராக கொண்டு "தமிழ் எங்கள் பேச்சு!" என ஒரு நிகழ்ச்சி தினமும் இரவு பத்து மணிக்கு நடந்து வருகிறது. பல்வேறு கட்டங்களாக தமிழகத்தின் தமிழ் ஆர்வலர்களை வடிகட்டி இப்போ நிகழ்ச்சி களை கட்ட தொடங்கி விட்டது. வெகு காலத்துக்கு பிறகு இனிய தமிழை அதுவும் தனியார் டிவியில் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. நெல்லை கண்ணன் அவர்களின் ஆழ்ந்த தமிழறிவு, தங்குதடையற்ற தமிழ் பேச்சு, திருகுறளாகட்டும், அக/புற நானூறு, சிலப்பதிகாரம், என வெள்ளம் போல பாய்ந்து வருகிறது.
திரு.கண்ணன் நாவில் பாரதியும், பாவேந்தரும் ரவுண்டு கட்டி வருகிறார்கள். போட்டியில் பங்கு பெறுபவர்களும் சளைத்தவர்களாக தெரியவில்லை. கவிதை சுற்று, எதுகை மோனை சுற்று என தெள்ளமுதாய் தமிழ் பிரவாகமெடுத்து வருகிறது. ஐந்து நிமிடங்களுக்கு மேல் இப்போதெல்லாம் எந்தவொரு நிகழ்ச்சியையும் பாக்க முடியாத நிலையில், இது போன்ற நிகழ்ச்சிகள் அத்தி பூத்தாற் போல வருவது மனதுக்கு இதமாக உள்ளது.
பல புதிய தமிழ் சொற்களின் அறிமுகம் கிடைத்தது. அவர்கள் முன் இலக்கியமோ, பின் இலக்கியமோ என்னை மாதிரி பட்ஜட் பத்மநாபனுக்கும் புரியும்படி பேசினார்கள்! எனபது இங்கு குறிப்பிடத்தக்க விஷயம். அதுவும் தமிழ்மணத்துக்கு ஒவ்வாத சொற்கள் அறவே இல்லாமல் பின்னிலக்கியமும் பேசபடுகிறது. ஒரு வேளை *** தான் பின்னிலக்கியமோ? என்ற எனது மாயை விலகியது. நிகழ்ச்சியை வெகு சுவாரசியமாக சின்ன சின்ன தகவல்களுடன் நெல்லை கண்ணன் கொண்டு செல்லும் அழகே அழகு. நிறை குடம் என்றும் தளும்புவதில்லை.
விஜய் டிவியின் கிரியேட்டிவ் டீமுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். நேரம் இருந்தால் நீங்களும் கண்டு களியுங்கள்.
37 comments:
ஆஹா... நான்தான் பர்ஸ்ட்டா?
ஏய்.. மொதல்ல பதிவப் படிக்க விடுங்கப்பா..
அது தினமுமா வருது? இல்லையே?
தமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சி ஞாயிறு காலை ஒன்பது மணிக்கு ஒளிபரப்பாகிறது. அதன் மறு ஒளிபரப்பு திங்கள் இரவு 10 மணிக்கு வருகிறது.
ஒவ்வொரு சுற்றுக்கும் நெல்லை கண்ணனுடன் ஒவ்வொரு தமிழறிஞர்கள் நடுவர்களாகப் பங்குபெறுகிறார்கள். அந்த வகையில் நெல்லை கண்ணனுடன் அறிவுமதி, நடிகர் சிவகுமார், நாஞ்சில் சம்பத், சுப.வீரபாண்டியன் (சன் டி.வி. வீரபாண்டியன் அல்ல!) என்ற வகையிலே இப்போது கவிஞர் விவேகாவும், சிநேகனும் நடுவர்களாக தமிழ்க்கடலுடன் அமர்ந்திருக்கிறார்கள். (யார் பேராவது விட்டுப் போச்சா?)
இந்த நிகழ்ச்சியின் விளம்பரம் வந்த நாள் தொட்டு தவறாமல் பார்த்து வருகிறேன்!
நல்ல பதிவு! வாழ்த்துக்கள்!
வாங்க பரிசல், நீங்க தான் முத போணி.
//அது தினமுமா வருது? இல்லையே?
//
விஜய் டிவிகாரங்க மறு மறு ஒளிபரப்பராங்களா, அதான் கொஞ்சம் குழப்பமாயிட்டேன். :)
அந்த நிகழ்ச்சிய வெச்சு பதிவு போட ஏதாவது மேட்டர் (விஷயம்) கிடைச்சதா பரிசல்? :p
உங்கள் தலைப்புக்கு ஏற்ற மாதிரி ஒரு பாடல் உள்ளது
பாடல் : அமுதே தமிழே அழகிய மொழியே எனது உயிரெ
படம் : கோவில் புறா
நன்றி
மீன்துள்ளி செந்தில்
நல்ல பதிவு.
இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதி இருக்கலாம்...
நீங்கள் சொல்வதில் முழு உடன்பாடு!
மயிலாடுதுறை சிவா...
எனக்கும் விஜய் டிவிதான் நல்லாருக்குன்னு படுது நிகழ்ச்சிகளை வச்சுதான் சொல்றேன்...
///ஒரு வேளை *** தான் பின்னிலக்கியமோ? என்ற எனது மாயை விலகியது///
:))
நல்லாருங்க...!
///நல்ல பதிவு! வாழ்த்துக்கள்!///
ரிப்பீட்டு..!
அம்பி,
தலைப்பு வைக்கிறதுல அடுத்த பெனாத்தல் ஆயிட்டிய்யா நீ. :-)
நானும் நிகழ்ச்சியைப் பார்த்திருக்கேன். நெல்லை ஜெபமணி நிறைய விஷயங்கள் பேசுவார். தளும்பலைன்னு சொல்ல மாட்டேன். முன்னாடி இரண்டு நடுவர் இருக்கும்போது இவர்தான் அதிகம் பேசுவார். ஆனால் இரசிக்கும்படியாகவே இருக்கும்.
அடடே நான் பாத்ததே இல்லியே..இனிக்கி முதல்ல செக் பண்றேன்..தகவலுக்கு நன்றி :))
நான் இப்போ கொஞ்சம் நாளாகத் தான் பாக்கறேண்ணே, நெஜமாவே ரொம்ப நல்லாருக்கும் :):):)
நான் பாத்ததேயில்லீங்க... யூட்யூப்லே கிடைக்குதான்னு பாக்கறேன்...
அடப்பாவிகளா.. இந்த நிகழ்ச்சியப் பாக்காத ஆளுகளும் இருக்காங்களா??
இத வெச்சு ஒரு பதிவத் தட்டீர வேண்டியதுதான்!!
சிக்கீட்டாய்ங்கள்ல??
இருக்கோமே இருக்கோமே.. பார்க்காத ஆட்கள்.. ஏன்னா எங்க கேபிள்காரர் அதெல்லாம் தரதில்ல தமிழர்க்ளுக்கு 4 சேனல் ன்னு கணக்கு வச்சிருக்காராம்.. சன் ராஜ் ஜெயா பொதிகை( இப்ப கொஞ்ச நாளா) வருது.
நல்ல நிகழ்ச்சி போலத் தெரிகின்றது. ஆனால் இங்கு பார்க்கும் வாய்ப்பு இல்லை,,,,.... :(
பாடலுக்கு மிக்க நன்றி மீன்துள்ளி செந்தில்!
முத்தக்கா, மை பிரண்ட் தேன் கிண்ணத்தில் இந்த பாடலுக்கு பிட்டு எழுதிடுவாங்க!னு நம்பறேன். :p
//இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதி இருக்கலாம்...
//
அதே தான் நானும் பீல் பண்ணினேன், இது கொஞ்சம் அவசரமா எழுதினது அதான். நன்றி சிவா.
//எனக்கும் விஜய் டிவிதான் நல்லாருக்குன்னு படுது //
@தமிழன், நாட்டாமை தீர்ப்பு சொல்லிடாரு பா! :))
//தலைப்பு வைக்கிறதுல அடுத்த பெனாத்தல் ஆயிட்டிய்யா நீ//
@sridhar, நல்ல வேளை, நானும் பெனாத்தலும் ஒரே ஆளா?னு கேக்காம வீட்டீங்களே! :))
அவரு எங்க, அடியேன் எங்க? என்ன வெச்சு காமடி கீமடி எதுவும் பண்ணலையே? :p
//முன்னாடி இரண்டு நடுவர் இருக்கும்போது இவர்தான் அதிகம் பேசுவார். ஆனால் இரசிக்கும்படியாகவே இருக்கும்.
//
ஆமா! அவங்க ரெண்டு பேரும் நல்ல பதிவு, கலக்கிட்டீங்க, பின்னிடீங்க! அவ்வ்வ்!னு டெம்ப்ளேட் கமண்டு போடுவாங்க. :p
ஆமா யாரு அந்த ஜெபமணி..? :))
//இனிக்கி முதல்ல செக் பண்றேன்..தகவலுக்கு நன்றி //
@ramya, பதிவு அதன் நோக்கத்தை பெற்றது. நன்னி கதாசிரியை ரம்யா அவர்களே! :p
//நெஜமாவே ரொம்ப நல்லாருக்கும்//
ஆமா ராப்! அதான் பதிவு போட்டேன். :)
//யூட்யூப்லே கிடைக்குதான்னு பாக்கறேன்...
//
ராப் சொன்ன லிங்குல போய் பாருங்க சிபையா. :p
//இத வெச்சு ஒரு பதிவத் தட்டீர வேண்டியதுதான்!!
//
@பரிசல், இத தன் உங்க கிட்ட எதிர்பார்த்தேன். :p
//சன் ராஜ் ஜெயா பொதிகை( இப்ப கொஞ்ச நாளா) வருது.
//
ராஜ்ஜை தூக்கிட்டு விஜய்க்கு மாறுங்க முத்தக்கா. :)
தமிழ்ப்ரியனுக்கு வந்த சோதனைய பாருங்க பா! :))
அம்பிக்கு உடம்பு சரியில்லையா என்ன? அம்பி ப்ளாகில சீரியஸ் போஸ்ட்டா?!
இல்லை போன போஸ்டுக்கு தங்கமணியின் "தாக்கமா"?
:-))
என்னதான் சொல்லு ஜோடி no 1, மஸ்தானா மஸ்தானா, மானாட மயிலாட மாதிரி அறிவுக்கு பூஸ்ட் குடுக்கும் நிகழ்ச்சிகள அடிச்சுக்க முடியாது :-)
//திவா said...
அம்பிக்கு உடம்பு சரியில்லையா என்ன? அம்பி ப்ளாகில சீரியஸ் போஸ்ட்டா?!
இல்லை போன போஸ்டுக்கு தங்கமணியின் "தாக்கமா"?//
இப்படி போஸ்டர் அடிச்சு ஒட்டிடீங்களே :-)
//அம்பி ப்ளாகில சீரியஸ் போஸ்ட்டா?!
இல்லை போன போஸ்டுக்கு தங்கமணியின் "தாக்கமா"?
//
@திவாண்ணா, டொட்டல் டேமேஜ் யுவர் ஆனர். :)
@ஷ்யாம், அதானே! இப்ப ஜோடி நம்பர் ஒன் - சீசன் த்ரீ ஆரம்பிச்சாச்சே! :p
வாழ்த்துக்களா இல்லை வருத்தமா? எது தெரிவிக்கனும் அம்பி!
:-))
இந்த வீக் என்ட் சென்னை போக முடியாதுன்னு சொல்லுங்க. பாவம்! :-(
mmmmmஅம்பி ப்ளாகிலே உருப்படியான ஒரு பதிவு! ஆனால் மேலதிகத் தகவல்களுக்கு மக்கள் தொலைக்காட்சியும், பொதிகைத் தொலைக்காட்சியும் இதைவிடச் சிறப்பாகவே இது போன்ற நிகழ்ச்சிகளைத் தருகின்றார்கள். அதிலும் பொதிகையில் மிகவே அருமையாக இருக்கின்றது. தொடர்ந்து பார்த்தால் தான் புரியும்! எங்கே! நாம தான் யாருக்கு "ஆப்பு" வைக்கலாம்னு இருக்கோமே! :P :P :P
nijamave vijay tv paravayilla.naan oru naal parthapodhu silapadhikaratta sedhil sedhila sedukittu irundhanga.t.r.p evvalvu varumnnu parthen?konjam kashtam.namma jananga jodi no 2 mudincha kaiyoda jodi no 3 aduthu eppannu thaan parpanga.sirippu varutho illayo kalakka povathu yaarunnu thaan parpanga.enga makkal t.v varathillaya ungalukku?
nivi.
நானும் இந்நிகழ்ச்சியைப் பார்த்ததில்லை. நிச்சயம் பார்க்கிறேன்.
[அம்பி, கிழக்கும் மேற்குமாக ரயிலோடு ஓடி ஓடிக் களைத்திருந்தாலும் ஒரு நல்ல நிகழ்ச்சியை அறிமுகம் செய்ய ஓடி வந்து விட்டீர்கள். சரியா:)? நன்றி!]
Ambi, what about Makkal TV? I think compared to Karunanidhi, atleast Ramdoss has kept to his words by providing a channel that is devoid of cinema and "nuni nakkil pesum Tamizh". Some programmes in it are really good.
இங்கே நெறைய பேரு சொன்ன, மக்கள் டீவிக்கு நானும் வழி மொழிகிறேன்.
காரணம் 1. இங்க விஜய் டீவி வரலை.
காரணம் 2. நிஜமாவே மக்கள் டீவி தமிழ் விசயத்துல நல்லா பண்றாங்க.
//ஆமா யாரு அந்த ஜெபமணி..? :))//
கரெக்ஷன் யுவர் ஹானர்,
அது நெல்லை கண்ணன்தான். ஸ்லிப் ஆயிடுச்சு. மன்னிச்சுக்குங்க.
[லேட்டாய் மறுபடி ஒரு பி.கு:கி.போ.ரயில் என்றது போன பதிவில கூட்டாளிகளுக்காக ஓடியது. இப்போ சூர்யாவைப் பார்க்க கிழக்கும் மேற்குமாய் போய் வரும் காவேரி எக்ஸ்பிரஸ் அல்ல:)! மூன்று நாட்கள் குட்டிப் பாப்பாவுடனா, ந்ல்லது நல்லது:))!]
nannaa eludharadaa ambi! sila pala karanathala comment poda mudilanalum, regulara un post padichindu dhan irukken. congrats on becoming new dad! :)
எனக்கும் விஜய் டிவிதான் நல்லாயிருக்குன்னு ...........
நிகழ்ச்சிகளை வச்சுதான் சொல்றேன்...
தரமான நிகழ்ச்சிகள்
நீயா? நாணா ? அருமை
தி.விஜய்
http://pugaippezhai.blogspot.com/
@திவா, சென்னை போயிட்டு வந்தாச்சே!
@கீதா மேடம், அட உங்களுக்கு டிவி பாக்க கூட நேரம் இருக்கா?
@nivi, இங்க மக்கள் டிவி வரது இல்லை நிவி.
@ரா-லக்ஷ்மி, அதே அதே!
@ravi, சரியா சொன்னீங்க ரவி, அங்க மானாட மயிலாட எல்லாம் கிடையாது. எப்படி இருக்கீங்க? ரொம்ப நாளாச்சு இல்ல?
வருகைக்கு நன்னி விஜய்.
@sridhar narayanan, கரக்க்ஷன் அக்சப்டட். சீனியர் ஆனாலும் குற்றம் குற்றமே!
:))
@ரா-லக்ஷ்மி, மூனு நாள் போனதே தெரியலை.
@ஷ்ரி யக்கா, வாங்கக்கா வாங்க. எலேய்! அக்காவுக்கு ஒரு சேரை போடு, ரெண்டு ஜோடா உடைச்சு குடு. மருமவ பொண்ணு ஷ்ரிநிதி எப்படி இருக்கா?
@vijay, நீங்க சொன்னா அப்பீலே கிடையாது விஜய். :))
மக்கள் தொலைக்காட்சியில் தான் பார்த்திருக்கேன். அங்கே நடுவரே மிகவுமே மிரட்டுவார், நம்ம தாத்தாக்கள் மாதிரி. விஜய்யிலும் வந்திருக்கா.
நல்லா இருந்தது அம்பி நீங்க எழுதின விதம். நன்னிங்கோவ்.:0
//Ravi said...
Ambi, what about Makkal TV? I think compared to Karunanidhi, atleast Ramdoss has kept to his words by providing a channel that is devoid of cinema and "nuni nakkil pesum Tamizh". Some programmes in it are really good.//
மக்கள் தொலைக்காட்சிக்கு ஆங்கிலப் பின்னூட்டத்தில் ஒரு நன்றியா.. ஆஹா..!
(என்ன அம்பி, அடுத்த பதிவு எப்போ?)
பொதிகையில் காலை நிகழ்ச்சிகள் பார்க்கவும்
அருமையாய் இருக்கும்.. அப்ப அப்ப போடும் பட்டி மன்றம்..
வியாழன் காலை 8.30 நித்யானந்தரின் பேச்சு...
மக்கள் தொலைக்காட்சியிலும்
காலை ம.நன்னன் , பிரபஞ்சன் மற்றும் பல சிந்தனையாளர்கள்...
காலை 9 மணிக்கு பங்கு வர்த்தகம் மிகவும் பயன் உள்ளது.
(இத பார்த்து தான் சன் சண்டே காலையில் விகடன் டிவியுன் இணைந்து போடும் பகுதி.. ஆனா அது இந்த அளவுக்கு இல்ல..)
இது வரை எதற்கும் பார்க்காத அலை வரிசை ராஜ் டிவி தான்.. அதுல எதாச்சும் நிகழ்சிகள் இருந்த சொல்லுங்க
@வல்லி மேடம், அடடா, சென்னை போகும் போது மக்கள் டிவி பாக்கறேன்.
@பரிசல், கொஞ்சம் வேலை, சோம்பேறிதனம், விரைவில் அடுத்த பதிவு போடறேன். :)
@வாங்க தமிழ், முதல் வருகைக்கு நன்னி, நானும் ராஜ் டிவி பார்ப்பதில்லை, ஏன்னா இங்க தெரியாது. :))
சன்ல நாணயம் ஆயிரம் நல்லா இருக்கு. நானும் அப்பப்ப பாப்பேன்.
Post a Comment