Wednesday, July 09, 2008

வங்கி தேர்வு - நடந்தது என்ன?

நீங்கள் எப்போதாவது இந்த வங்கி தேர்வுகள் ஏதேனும் எழுதியதுண்டா? ஆம்! எனில் மேற்கொண்டு படியுங்கள். இல்லையெனில் என்னவென்று தெரிந்து கொள்ள மேற்கொண்டு படியுங்கள்.(அவ்ளோ லேசுல விட்ற மாட்டோம் இல்ல).
80-90களில் வங்கியில் வேலை செய்வது என்பது பலருக்கு ஒரு லட்சிய கனவாகவே இருந்தது. பிஎஸ்ஆர்பி(BSRB) என்ற வார்த்தை மந்திரம் போல உச்சரிக்கப்பட்ட காலம் அது. அந்த போட்டி தேர்வுக்கு ஏதோ அலங்க நல்லூர் ஜல்லிகட்டுக்கு காளையை தயார் செய்வது போல சிலர் பத்தாவதில் இருந்தே தம் மக்களை தயார் செய்தவர்களும் உண்டு.

கணக்கில் ஆழ்ந்த அறிவு, நுண்ணிய லாஜிக்கல் அறிவு, ஊறுகாய் போல கொஞ்சம் ஆங்கில அறிவு இருந்தால் ஞான பழம் எனக்குத் தான்!னு சொல்லி விடலாம். கணக்குனா சும்மா எட்டில் ஐந்து போனால் மிச்சம் எவ்வளவு? ரகம் இல்லை.
நான் குறிப்பிட்ட எட்டு, ஐந்து என்பதை வெறும் நம்பர்கள் என நினைவில் கொள்க.

1) சென்னையிலிருந்தும், மதுரையிலிருந்தும் இரண்டு வேறு ரயில்கள் மணிக்கு முறையே 50, 40 கிமீ வேகத்தில் வந்தால் அவை இரண்டும் எங்கு சந்தித்து கொள்ளும்? - இது ஒரு வகை.

2) ரமா, ஸ்வேதா, ரம்யா, அக்ஷிதா, ஷாலினி ஆகிய ஐந்து பேரும் வட்டமாக உக்காந்து கேசரி சாப்பிட்டால், ரமாவுக்கு பக்கத்தில் ரம்யா இல்லை, ஷாலினிக்கு பக்கத்தில் ஸ்வேதா தான் இருக்கா, அக்ஷிதாவுக்கு கேசரி பிடிக்காது, அப்போ அம்பி யாரு பக்கத்துல உக்காந்து இருப்பான்? - இது லாஜிக்கல் ரீஸனிங்கில் ஒரு வகை.

3) ரூம் போட்டு யோசித்து ஐந்தாண்டு திட்டத்தை நேரு தீட்டியதால் இந்தியாவுக்கு விளைந்த நன்மைகளை பத்தி ஒரே பீட்டரா எடுத்து விடு - இது ஆங்கில அறிவை சோதிக்க ஒரு வழிமுறை.

இதற்கென ப்ரத்யேக வகுப்புகள் எல்லாம் அனல் பறக்கும் பயிற்சிகள் அளித்து வந்தன. கேள்விக்கான விடைகள் ஏ/பி/சி/டி தான் (டிபிசிடி இல்லை). எங்க ஊரில் இவ்வகை வகுப்பு ஒன்று ரொம்பவே பிரசித்தம். நெல்லை மாவட்டத்திலேயே எங்க ஊரில் உள்ள அந்த குறிப்பிட்ட வகுப்பில் பயிற்சி எடுக்கவென்றே பலர் தங்கி படித்த காலங்களும் உண்டு. உங்க ஆட்கள் கொஸ்டின் பேப்பரை லவட்டி விடுவீர்களோ? என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை. எல்லாம் திட்டமிட்ட பயிற்சிகள் தான்.

இவ்வகை தேர்வு மையங்கள் பெரும்பாலும் பெரு நகரத்தில் உள்ள கல்லூரிகளாக தான் இருக்கும். பையங்கள் எல்லாம் ஏதோ ஜாலி டூர் போவது போல போவார்கள். பெண்கள் தேர்வு எழுத கிளம்பினால், உஜாலா சொட்டு நீலம் போட்டு வெளுத்த வேட்டியும், முழங்கை வரை மடித்து விட்ட வெள்ளை சட்டையுடன் அப்பாவோ, தம்பியோ (வெட்டியாக இருக்கும் பட்சத்தில்) முந்தைய நாளே மஞ்சபையுடன் கூடவே கிளம்பி விடுவார்கள்.
முப்பிடாத்தி அம்மன் கோவில் குங்குமம், அதற்கு மேல் திருனீறு, பின் ஒரு சாந்து பொட்டு, அதற்க்கு மேல் வீட்டின் பெரியவர்கள் யாரேனும் இட்டு விட்ட வெற்றி திலகம் சகிதமாக தேர்வு மையத்துக்கு ஒரு ஸ்பெஷல் எபக்டோடு வருவார்கள்.

வாம்மா மின்னல்! இது எத்தனையாவது படையெடுப்பு?னு ஏதேனும் ஒரு பையன் சவுண்டு விட்டா, பதிலுக்கு வெள்ளை வேட்டி விடும் சவுண்டுக்கு ஏரியாவே அதகளபடும். தப்பிச்சோம்! பிழைச்சோம்!னு அந்த பையன் எக்ஸாம் எழுதாமலேயே எஸ்ஸாகி விடுவான்.

சும்மா ஆசைக்கு ஒரு தரம் நானும் தேர்வுக்கு போய் நட்ராஜ் பென்சிலால் கொஸ்டின் பேப்பரில் ஷேடு அடித்து விட்டு வந்தேன். நல்ல வேளை தேர்வாகவில்லை, பேங்குல உக்காந்து பிளாக் எல்லாம் எழுத/படிக்க முடியுமோ?

இனிமே இவ்வகை தேர்வுகளுக்கு ஹால் டிக்கட்டுடன் பணம் கட்டிய ரசீது, ரசீது தந்த காஷியரின் பெயர், முகவரி, அவருக்கு எத்தனை குழந்தைகள்? போன்ற விபரங்களும் தெரிந்து கொண்டு போகனும் போலிருக்கு. அமெரிக்காவில் இருக்கும் வங்கிகளுக்கு பாங்கிங் சாப்ட்வேர் எழுத தெரிந்த நம்மால், நிஜமான சமீபத்தில் (போன வாரம் தான்) இங்கு ஒரு வங்கி தேர்வை கணினிமயமாக்க முடியலை என எண்ணும் போது சிலபல தெலுங்கு பட டைடில்கள் எல்லாம் வாய்க்கு வருகிறது.

36 comments:

mgnithi said...

muthala attendance..

mgnithi said...
This comment has been removed by the author.
mgnithi said...

//1) சென்னையிலிருந்தும், மதுரையிலிருந்தும் இரண்டு வேறு ரயில்கள் மணிக்கு முறையே 50, 40 கிமீ வேகத்தில் வந்தால் அவை இரண்டும் எங்கு சந்தித்து கொள்ளும்? - இது ஒரு வகை.//

டிராக் மாத்துறவர் தூங்குற ஊருல தான். :-)

கயல்விழி முத்துலெட்சுமி said...

என் தோழிகள் எல்லாம் மாஞ்சு மாஞ்சு எழுதினதப்பார்த்து நானும் ஒரு தடவ எழுதினேன்.. போன உடனே உள்ள இருந்தவங்கல்ள சிலரை பேட்டி எடுத்தேன்.. ஒரு பையன் இந்த வருசம் தான் எனக்கு கடைசி எல்லாவருசமும் எழுதி பாஸாகலை இந்த தடவையாவதுன்னு சொன்னது ஆச்சரியமா இருந்தது..

நான் வழக்கம்போல முதல் ஆளாக ஹாலை விட்டு வெளியே வந்தேன்.. போர் அடித்ததும்..

mgnithi said...

//2) ரமா, ஸ்வேதா, ரம்யா, அக்ஷிதா, ஷாலினி ஆகிய ஐந்து பேரும் வட்டமாக உக்காந்து கேசரி சாப்பிட்டால், ரமாவுக்கு பக்கத்தில் ரம்யா இல்லை, ஷாலினிக்கு பக்கத்தில் ஸ்வேதா தான் இருக்கா, அக்ஷிதாவுக்கு கேசரி பிடிக்காது, அப்போ அம்பி யாரு பக்கத்துல உக்காந்து இருப்பான்? - இது லாஜிக்கல் ரீஸனிங்கில் ஒரு வகை.//

கேள்வியே தப்பு. அம்பி இருந்தா கேசரி காலி ஆயிருக்கும்.
ஆமா, இவங்க எல்லாம் யாரு? தங்கமணிக்கு தெரிஞ்சவங்களா ? :-)

mgnithi said...

//இங்கு ஒரு வங்கி தேர்வை கணினிமயமாக்க முடியலை என எண்ணும் போது சிலபல தெலுங்கு பட டைடில்கள் எல்லாம் வாய்க்கு வருகிறது.//

நியாயமான கோபம்.

VIKNESHWARAN said...

:)

பத்மகிஷோர் said...

Wonderful write up !!

Syam said...

//mgnithi said...
கேள்வியே தப்பு. அம்பி இருந்தா கேசரி காலி ஆயிருக்கும்.
ஆமா, இவங்க எல்லாம் யாரு? தங்கமணிக்கு தெரிஞ்சவங்களா ? :-)
//

அப்படி இல்ல இவுங்க கூட உக்காந்து கேசரி சாப்பிட்டது தங்கமணிக்கு தெரிஞ்சா என்ன ஆகும் :-)

இலவசக்கொத்தனார் said...

//அப்போ அம்பி யாரு பக்கத்துல உக்காந்து இருப்பான்? - இது லாஜிக்கல் ரீஸனிங்கில் ஒரு வகை.
//

தங்கமணி பக்கத்தில்தான்.

rapp said...

ரமா, ஸ்வேதா, ரம்யா, அக்ஷிதா, ஷாலினி இவங்கல்லாம் யாருங்கண்ணே? ஹா ஹா ஹா இதை நீங்க ட்ரை பண்ணீங்களா? இதே மாதிரி எங்க ஸ்கூல்ல ஒரு சீசன் இருந்தது, என்னமோ ரயில்வே பரீட்சை. அதுல பாஸ் பண்ணா அவங்க, அதுக்குன்னே இருக்கிற சில ஸ்கூல்ல, ரயில்வே சம்பந்தமா ஏதோ படிப்பாங்க, அப்புறம் ரயில்வேலயே வேலைக் கிடைச்சிடும். நான் பத்தாங்கிலாசு வந்தப்போ ஐடி மக்களுக்கு அமரிக்கால வேலை கிடைச்சதால, இதுக்கு சுத்தமா மௌஸு போகிடுச்சி. எங்க கசின்ஸ் காலத்தில ஒரு எல்.ஐ.சி பரீட்சை இது மாதிரி இருந்தது, அதுல பாஸாயிட்டா இதே மாதிரி அவங்க கோர்ஸ் இருக்கும் ஸ்கூல்ல படிச்சி எல்.ஐ.சி இல வேலைக்கு போகலாம். நான் பார்த்த அலப்பறை நெறைய இந்த பரீட்சைக்கெல்லாம் தான்

Sumathi. said...

ஹாய் அம்பி,

//ரமா, ஸ்வேதா, ரம்யா, அக்ஷிதா, ஷாலினி அப்போ அம்பி யாரு பக்கத்துல உக்காந்து இருப்பான்? //

இன்னுமும் இந்த ஆசையெல்லாம் நிறுத்தலையா?

//அப்படி இல்ல இவுங்க கூட உக்காந்து கேசரி சாப்பிட்டது தங்கமணிக்கு தெரிஞ்சா என்ன ஆகும் :-)// நாட்டாம என்ன இது,
இவங்ககூட இருக்கும் போது அவரல்லாம் பக்கத்துல வரத் தான் விடுவாங்களா? தங்கமணிக்கு அவர பத்தி தெரியாதா?

Anonymous said...

/) ரமா, ஸ்வேதா, ரம்யா, அக்ஷிதா, ஷாலினி ஆகிய ஐந்து பேரும் வட்டமாக உக்காந்து கேசரி சாப்பிட்டால், ரமாவுக்கு பக்கத்தில் ரம்யா இல்லை, ஷாலினிக்கு பக்கத்தில் ஸ்வேதா தான் இருக்கா, அக்ஷிதாவுக்கு கேசரி பிடிக்காது, அப்போ அம்பி யாரு பக்கத்துல உக்காந்து இருப்பான்? - இது லாஜிக்கல் ரீஸனிங்கில் ஒரு வகை./I love this.

Keep posting. Excellent sense of humor.

Ramya

Vijay said...

//கணக்குனா சும்மா எட்டில் ஐந்து போனால் மிச்சம் எவ்வளவு? ரகம் இல்லை.
நான் குறிப்பிட்ட எட்டு, ஐந்து என்பதை வெறும் நம்பர்கள் என நினைவில் கொள்க.//அம்பி, எட்டுல அஞ்சு போகலாம்...ஆனா ஐஞ்சில எட்டு போகாது..நான் கூட நம்பரைதான்பா சொன்னேன். :P

rapp said...

//கணக்குனா சும்மா எட்டில் ஐந்து போனால் மிச்சம் எவ்வளவு? ரகம் இல்லை.
நான் குறிப்பிட்ட எட்டு, ஐந்து என்பதை வெறும் நம்பர்கள் என நினைவில் கொள்க.//
அண்ணே இதுல என்னவோ உள்குத்து இருக்குப் போல, எனக்கு தயவு செய்து விளக்கிச் சொல்லுங்க

Anonymous said...

இந்த அலப்பறை தேர்வு எழுதி 94 ல இருந்து 99 வரை ஐந்து வருஷம் எல் ஐ சி ல குப்பை கொட்டி, இங்கயும் வந்து எட்டு வருஷமா வங்கியில அலப்பறை பண்ணிட்டுதான் இருக்கேன்.

Vijay said...

நம்ப கதைய கேளுங்க, இது மாதிரி ஒரு பே(ங்)க்கு எக்ஸாமுக்கு எங்க அப்பாவே என் கூடவே வந்து(செரி...செரி...இல்லன்னா டிமாண்டு ட்ராப்ட் வாங்க குடுத்த பணத்தை லவுட்டிருவமேன்னுதான்..ஒகே வா?) அப்பிளிக்கேஷன் எல்லாம் போட்டு, ஹால் டிக்கட்டு வந்த ஒடனே, ஒரு அரை அவரு அட்வைஸ்(செம தூக்கமுங்க!!!) எல்லாம் பண்ணி, போய்ட்டு வாடான்னு விட்டுட்டார்.

ஆச்சி...அந்த நாளும் வந்ததேன்னு...நானும் காலைல எழுந்திரிச்சி பாத்தா(ஒரு எட்டு மணிதான்ங்க இருக்கும்)...அப்பாவ வுட்லயே காணம்.அம்மா அலாரம் வேற இன்னிக்காடா பரிட்ச்ச? இப்பிடி தூங்கினா எப்பிடிரானு ஒரே தொண தொண..சரின்னு கவர எடுத்து பேண்டு பையில வுட்டுக்கிட்டு, சைக்கிள எடுத்துகினு வெளிய வந்தா, நம்ம செல்வா வூட்டுக்கிட்ட ("செல்வராஜ விநாயகர் திருக்கோயில்"னு போர்டுல எழுதி இருக்கும், நாங்க செல்லமா செல்வா, செல்வான்னுதான் கூப்பிடறது) நம்ம ஜமா(பிரண்ட்சுங்க) நிக்கிது. என்னாடா விசயம்னா "அலங்கார்" தியேட்டர்ல புது படமாம்.(ஹி..ஹி...காலைக்காட்சிங்க..:P) அவ்ளோஓஓதான்.....

மத்தியானம் மெதுவா சைக்கிள வூட்டு படி ஏத்துனா அப்பா திண்ணைல."அடடா வந்துடாரா? லஞ்சுல ரம்பம்தான்"னு நெனச்சிகிட்டு "சரி...பரிட்சய நல்லா எழுதுனதா சொல்றதா இல்ல ஒரு சேப்டிக்கி சுமாராத்தான் எழுதினதா சொல்லி வச்சிரலாமான்"னு ரோசன பண்ணிக்கிட்டே மெதுவா தலைய தூக்கினா..."ஆமா இப்ப இவுரு ஏன் இப்பிடி கோவமா லுக்கு வுடராருன்"னு ஒரு டவுட்டு. எதுக்கும் இருக்கட்டும்ன்னு முஞ்சிய கொஞ்சம் மண்ணு மாதிரி வச்சிகிட்டு (செரி..செரி...எப்பவும் போல முஞ்சிய வச்சிக்கிட்டு..இப்ப திருப்த்தியா?) கம்முன்னு உள்ள போனா...பின்னால அசரீரி...(அப்பாதான்) "ஏண்டா ரெண்டு மணிக்கி எக்ஸாமு, நீ என்னடான்னா ஊர சுத்திட்டு இப்பிடி வர, சீக்கிரம் சாப்டுட்டு கெள்ம்புடா. போறப்போ அப்டியே புது பென்சிலும் ரப்பரும் வாங்கிக்கோ(டேபிள் மேல பத்து ரூவா)" மெதுவா பேண்ட் பாக்கட்டுல கைய வுட்டு நுழைவு சீட்ட எடுத்து பார்த்தா "அட, ஆமா...மத்தியானம்தான் எக்ஸாமு, நல்லவேளை எதுவும் ஒளரி மாட்டிக்கலை, நாம காலைல இருந்த அவசரத்துல (ஹி....ஹி...) இதெல்லாங் யாரு கவனிச்சா? செல்வா நன்றிடா யப்பா"ன்னு சோத்த அள்ளி கொட்டிக்கிட்டு அவசரமா ஒடினேன்.

எங்கயா? அட நம்ப ரஜினிபடம்ங்க "மேட்னி ஷோ." ஆனா கூட்டத்த பார்த்தா டிக்கட்டு கெடைக்காதுண்ணு தோணுச்சி. கூட்டாளிங்க வேற யாரும் கூட இல்லியா?. சரி போய் தொலையுதுன்னு எக்ஸாம் போனா அங்க கேட்ட கேள்விக்கு எல்லாம் நம்ம மூளைய செலவு பண்ண (என்னா.? இருந்தாதானே செலவு பண்ணன்னு கேக்கறீங்களா... செரி ...செரி.....நாமளே நிழலுக்குதானே அங்கின ஓதுங்கி இருக்கோம்) தயாரா இல்ல. யோசிச்சேன். நமக்கு பொது அறிவு கம்மினாலும் சுய அறிவு அதிகம் ஆச்சுங்களே(அய்ய.....சிரிப்ப நிறுத்துங்கபா...அட....) சரி ...A,B,C,D..D,C,B,A ன்னு ட்ரை பண்ணா எல்லாம் தப்பா போக வாய்ப்பு இருக்கு. அதனால எல்லாத்துக்கும் "A" மட்டும் போட்டு வச்சா ஒரு இருவத்தி ஐஞ்சி பர்சென்ட்டாச்சும் வருங்களேன்னு (நாலு சாய்ஸ்ல ஒண்ண மட்டும் கன்டினுவஸா ப்பாலோ பண்ணா புள்ளிவிவர சான்ஸ்படி இருவதஞ்சி பர்சென்டு வருமில்லங்க?) லாஸ்டா உள்ள போயி பர்ஸ்ட்டா வெளிய வந்த ஆளு நானு...

டிஸ்கி: இந்த மேட்டர(அம்பி கவனிக்க மேட்டர்னா மேல எழுதின விஷயம், வேற ஒண்ணும் இல்ல :P)என் பதிவாவே போட்டு பதிவரங்கேற்றம் பண்ணிடலாமான்னுதான் நெனச்சேன். ஆனா பரிசில் சாரோட பதிவுல http://parisalkaaran.blogspot.com/2008/07/blog-post_05.html(சாரி, எனக்கு ஹைப்பர் லிங்க் குடுக்க தெரியல) என் பின்னூட்டம் நல்லா இருக்குன்னு தாமிரா ஏதோ சொல்ல போக பரிசில் என்னை சொறுவோ சொறுவுன்னு சொறுவிட்டாரு.

//விஜய்.. கேட்டுட்டீங்க.. உங்களுக்கு ஒரு ஐடியா.. உங்க பின்னூடமெல்லாம் சூப்பரா இருக்கறதா ஒரு அப்பாவி சொல்லிட்டதால நீங்க போடற பின்னூட்டங்களையே copy / paste பண்ணி (பதிவு: பொன்மொழிகள்... பதிவர்: பரிசல்காரன்.. என் பின்னூட்டங்களும் அவர் பதில்களும் அப்படீன்னு..) போட்டு டெய்லி எங்கெங்க போய் என்னென்ன கழுத்தறுக்கறீங்களோ அத வெச்சே ஓட்டலாம்ல? எப்டீ?//

அதனால இது பின்னூட்டமாவே இருக்கட்டும். வேற சரக்கு கெடைக்கும்போது (கெடச்சாதானெங்கிறீங்களா?) பாத்துக்கலாம். அது வரை வணக்கம் கூறி விடை பெறுவது உங்கள் பின்னூட்ட பெருங்கோ விஜய், விஜய்...விஜய்.....

Sridhar Narayanan said...

பதிவும் சூப்பர்.

விஜயோட பின்னூட்டம் சூப்பரோ சூப்பர். :-)

ராமலக்ஷ்மி said...

//சும்மா ஆசைக்கு ஒரு தரம் நானும் தேர்வுக்கு போய் நட்ராஜ் பென்சிலால் கொஸ்டின் பேப்பரில் ஷேடு அடித்து விட்டு வந்தேன்.//

அதே!

கேள்வி ரெண்டுக்கு mgnithi, syam, sumathi, கேள்வியிலேயே இருக்கும் Ramya ஆகியோரின் பதிலுக்கு எனது மார்க் நூற்றுக்கு நூறு:))).

Vijay said...

நன்றி Sridhar, ஏதோ அம்பி புண்ணியம். அடிக்கடி கொசுவத்தி அய்டுது. உங்க பிளாக் பிரைவேட் போல. எனக்கு எல்லாம் இன்விடேஷன் கெடைக்குமா?

ambi said...

//ஆமா, இவங்க எல்லாம் யாரு? தங்கமணிக்கு தெரிஞ்சவங்களா ? //

வாங்க எம்ஜிநிதி, வந்த வேலை முடிஞ்சதா? :p

//ஒரு பையன் இந்த வருசம் தான் எனக்கு கடைசி எல்லாவருசமும் எழுதி பாஸாகலை//

சரியா சொன்னீங்க முத்தக்கா, சில பேர் என்னவோ இது தான் வாழ்க்கையே!னு நினைக்கறாங்க.

நன்றி விக்னேஸ்வரன், பத்மகிஷோர்.

//இவுங்க கூட உக்காந்து கேசரி சாப்பிட்டது தங்கமணிக்கு தெரிஞ்சா என்ன ஆகும் //

@syam,
எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது.
எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது.
எது நடக்க இருக்கிறதோ அது நன்றாகவே நடக்கும்.

ஒன்னுமில்ல சும்மா கீதை சொல்லி பார்த்தேன். :))

//தங்கமணி பக்கத்தில்தான்.
//

கொத்ஸ், சரியா சொன்னீங்க அண்ணாச்சி. :p

//ரமா, ஸ்வேதா, ரம்யா, அக்ஷிதா, ஷாலினி இவங்கல்லாம் யாருங்கண்ணே? ஹா ஹா ஹா இதை நீங்க ட்ரை பண்ணீங்களா? //

@rapp, இவங்கள்ளாம் என் கூட வேலை செய்யறவங்க பேரு இல்லவே இல்லை. இப்படி மொட்டையா கேக்காத மா! பப்ளிக் வாட்சிங்க். ஆமா, வங்கி தேர்வை தானே நீ கேக்கற? :)))

//இன்னுமும் இந்த ஆசையெல்லாம் நிறுத்தலையா?
//

@sumathi yekka, கொத்தனாரின் பதிலை படிக்கவும் :)

//Keep posting. Excellent sense of humor.
//

@ramya, thx, is it Ramya ramani..? :p

// எட்டுல அஞ்சு போகலாம்...ஆனா ஐஞ்சில எட்டு போகாது..நான் கூட நம்பரைதான்பா சொன்னேன்.//

@விஜய், போகுமே, பக்கத்துல கடன் வாங்கிக்கலாம். நானும் நம்பரை தான் சொன்னேன். :p

உங்க அனுபவம் ரொம்ப சுவையா இருக்கு. கலக்கறீங்க போங்க. ஆமா இப்போ எங்க வேலை செய்யறீங்க, பேங்குலயா? :p

//இதுல என்னவோ உள்குத்து இருக்குப் போல, எனக்கு தயவு செய்து விளக்கிச் சொல்லுங்க
//

@rapp, Contact Mr. Sridhar Narayanan - Official spokeperson of Dr.Kamal. :p

//94 ல இருந்து 99 வரை ஐந்து வருஷம் எல் ஐ சி ல குப்பை கொட்டி, இங்கயும் வந்து எட்டு வருஷமா வங்கியில அலப்பறை பண்ணிட்டுதான் இருக்கேன்.
//

@c-ammani, அடேங்கப்பா! நீங்க பெரிய்ய அம்மணி தான். :))

வாங்க Sridhar, ஆமா, விஜய் கலக்குறாரு. :)

//mgnithi, syam, sumathi, கேள்வியிலேயே இருக்கும் Ramya ஆகியோரின் பதிலுக்கு எனது மார்க் நூற்றுக்கு நூறு//

@ramalakshmi, பதிவு எழுதினது நானு, மார்க் அவங்களுக்கா? என்ன கொடுமை இது ஷ்யாம், எம்ஜிநிதி, சுமதி, ரம்யா..? :))

//உங்க பிளாக் பிரைவேட் போல. எனக்கு எல்லாம் இன்விடேஷன் கெடைக்குமா?
//

@vijay, நீங்க வேற,பல பேர் வெய்டிங்க் லிஸ்ட்டுல இருக்காங்க, அவரும் உங்களை மாதிரி பின்னூட்ட பெருங்கோவாக்கும். :p

Anonymous said...

enakku rendu sandhegam.1.shalini,swetha,akshita ,rama idhula ambikku yarra romba pidikkum?summa sollunga!!!mandagapadinnu aypochu,inime konjam vangina enna niraya vangina enna!!neenga veliyela sollamattenga enna neenga romba nallavaru thane!!!!2.ettula anju per than solli irukeenga,micham moonu enga?ettum anjum neenga sonna kesari kanakku thane ????nivi.

ambi said...

//ambikku yarra romba pidikkum?summa sollunga!!!//

@nivi, நிவி, இப்படியெல்லாம் வலையை விரிக்க கூடாது.

//ettula anju per than solli irukeenga,micham moonu enga?//

மீதி மூனு தானே, நான், என் தங்கஸ், & ஜுனியர் அம்பி. ஹிஹி.

இராம்/Raam said...

:))))


பதிவும், விஜய்'டோ பின்னூட்டமும் சூப்பரு...

அவரை மாதிரியே எனக்கும் அனுபவம் இருக்கு, சீக்கிரமா பதிவுக்கிற பேருல மொக்கை ஒன்ன போட்டுற வேண்டியதுதான்.... :))

ambi said...

//அவரை மாதிரியே எனக்கும் அனுபவம் இருக்கு, சீக்கிரமா பதிவுக்கிற பேருல மொக்கை ஒன்ன போட்டுற வேண்டியதுதான்//

அட ராயல் ராமண்ணா! உங்க கீ போர்ட்டுல :))) தவிர எழுத்துக்களும் இருக்கா? (சரி, கோச்சுகாதீக).

சீக்ரம் போடுங்க, படிக்க வந்துட்டே இருக்கோம். :p

Vijay said...

நன்றி ராம்,

அம்பீஈ......

எல்லாஆ.. புகழும் இறைவனுக்கே....
அம்பீஇ...தானே துணை நமக்கே.

ராமலக்ஷ்மி said...

//பதிவு எழுதினது நானு, மார்க் அவங்களுக்கா? என்ன கொடுமை//

வருகிறவர்களை எல்லாம் வாயகன்ற புன்னகையோடு அனுப்பி வைக்கிற உங்களுக்கு மார்க் வேற தனியா தரணுமா என்ன? பாருங்க எத்தனை ஸ்மைலி கொட்டிக் கிடக்கு.

கீதா சாம்பசிவம் said...

அது சரி, விஜய்க்கு எவ்வளவு வெட்டினீங்க? அதைச் சொல்லலையே? :P

Vijay said...

//அது சரி, விஜய்க்கு எவ்வளவு வெட்டினீங்க? அதைச் சொல்லலையே? :P//

நல்ல ரெகமண்டேஷனா இருக்கே!!!!! பாத்துக்கோ அம்பி, கூட்டி மேல போட்டு குடுத்துடுபா!!! கீதா மேடம்..எது கெடச்சாலும் உங்களுக்கு பாதி... :P

Vijay said...
This comment has been removed by the author.
மங்களூர் சிவா said...

//1) சென்னையிலிருந்தும், மதுரையிலிருந்தும் இரண்டு வேறு ரயில்கள் மணிக்கு முறையே 50, 40 கிமீ வேகத்தில் வந்தால் அவை இரண்டும் எங்கு சந்தித்து கொள்ளும்? - இது ஒரு வகை.//

டிராக் மாத்துறவர் தூங்குற ஊருல தான். :-)

மங்களூர் சிவா said...

//2) ரமா, ஸ்வேதா, ரம்யா, அக்ஷிதா, ஷாலினி ஆகிய ஐந்து பேரும் வட்டமாக உக்காந்து கேசரி சாப்பிட்டால், ரமாவுக்கு பக்கத்தில் ரம்யா இல்லை, ஷாலினிக்கு பக்கத்தில் ஸ்வேதா தான் இருக்கா, அக்ஷிதாவுக்கு கேசரி பிடிக்காது, அப்போ அம்பி யாரு பக்கத்துல உக்காந்து இருப்பான்? - இது லாஜிக்கல் ரீஸனிங்கில் ஒரு வகை.//

கேள்வியே தப்பு. அம்பி இருந்தா கேசரி காலி ஆயிருக்கும்.
ஆமா, இவங்க எல்லாம் யாரு? தங்கமணிக்கு தெரிஞ்சவங்களா ? :-)

மங்களூர் சிவா said...

//இங்கு ஒரு வங்கி தேர்வை கணினிமயமாக்க முடியலை என எண்ணும் போது சிலபல தெலுங்கு பட டைடில்கள் எல்லாம் வாய்க்கு வருகிறது.//

அதையும் பதிவில் சொல்லியிருக்கலாம்

:))

மங்களூர் சிவா said...

///
Vijay said...

//கணக்குனா சும்மா எட்டில் ஐந்து போனால் மிச்சம் எவ்வளவு? ரகம் இல்லை.
நான் குறிப்பிட்ட எட்டு, ஐந்து என்பதை வெறும் நம்பர்கள் என நினைவில் கொள்க.//அம்பி, எட்டுல அஞ்சு போகலாம்...ஆனா ஐஞ்சில எட்டு போகாது..நான் கூட நம்பரைதான்பா சொன்னேன். :P


///
:)
ROTFL

மங்களூர் சிவா said...

விஜய்'டோ பின்னூட்டமும் சூப்பரு...

奇堡比 said...

新女性徵信
外遇調查站
鴻海徵信
亞洲徵信
非凡徵信社
鳳凰徵信社
中華新女性徵信社
全國新女性徵信社
全省女人徵信有限公司
私家偵探超優網
女人感情會館-婚姻感情挽回徵信
女子偵探徵信網
女子國際徵信
外遇抓姦偵探社
女子徵信社
女人國際徵信
女子徵信社
台中縣徵信商業同業公會
成功科技器材
女人國際徵信社
女人國際徵信
三立徵信社-外遇
女人國際徵信
女人國際徵信
大同女人徵信聯盟
晚晴徵信