ஏற்கனவே இந்த பதிவின் மூலம் உங்களுக்கு நன்கு அறிமுகமான ஜம்புலிங்கம், வெள்ளிகிழமையும் அதுவுமா அவருக்கு ஏற்பட்ட சில சந்தேகங்களை எனக்கு தனிமடலில் கேட்டுள்ளார். எனக்கும் பதிவிட ஒரு விஷயம் (நல்லா பாருங்கண்ணா! மேட்டர்னு எழுதலை!) கிடைத்தது.
மெயில் எல்லாம் சரிபடாதுன்னு சாட்டுல வர சொன்னேன்.
அம்பி, நானும் ஒரு வலைப்பூ தொடங்கறத்துக்கு முன்னால சில சந்தேகங்கள் இருக்கு.
வெரிகுட், கேளுங்க ஜம்பு.
என் அனுபவத்தையெல்லாம் கூட பதிவா போடலாம் தானே?
யூ மீன் சுற்றுலா, வேலை சம்பந்தமாவா?
ஆமா! அதே தான்!
(நல்ல வேளை, நான் வேற நினைச்சேன்) ஓ! தாராளமா பதிவிடுங்க. என்ன எழுதினாலும், நீங்க ஒரு இணைய ஜர்னலிஸ்ட், அத மனசுல வெச்சுட்டு எழுதுங்க.
என்னாது இணைய ஜர்னலிஸ்ட்டா?
இத பாருங்க ஜம்பு, முதல்ல உங்கள நீங்க நம்பனும், அப்ப தான் மத்தவங்க நம்புவாங்க. சரியா? உங்களுக்கு பிடிச்ச நடிகர் யாரு?
ஜிம் கேரி.
நல்லதா போச்சு! ஜிம் கேரியின் மறுபக்கம்னு ஒரு பதிவ போட்ரலாம். மக்கள் விரும்பினா ஜிம் கேரியின் இடது பக்கம், வலது பக்கம்னு ஒரு சீரிஸ் கூட எழுதலாம்.
அட சூப்பர் ஐடியா அம்பி! இந்த சூடான இடுகைன்னா என்ன அம்பி?
அதுவா? உங்க பதிவை எத்தனை பேரு கமண்டு போடாம படிச்சுட்டு போனாங்கனு காட்டறது தான் சூடான இடுகை. இதுல வரனும்னா நீங்க ரூம் போட்டு யோசிச்சு பதிவுக்கு தலைப்பு வைக்கனும்.
அப்படியா?
ஆமா! இப்போ நீங்க சமையல் குறிப்புகளை பத்தி எழுத போறிங்கன்னு வெச்சுபோம். என்ன தலைப்பு வைப்பீங்க?
வேற என்ன, ஜம்புஸ் கிச்சன் கார்னர்!
அதான் இல்லை, சட்டிக் கதைகள் அப்படின்னு தலைப்பு வைக்கனும். நீங்க சட்டியே இல்லாம மைரோவேவ்ல கூட சமைக்கலாம். கடைசில இதே பதார்தத்தை சட்டியிலும், அதாவது வானலியிலும் சமைக்கலாம்!னு யதார்த்தமா ஒரு டிஸ்கி போட்ருங்க. இதான் டெக்குனிக்கு. புரிஞ்சதா?
இப்போ புரியுது.
வெரிகுட். உங்க இஷ்ட தெய்வம் யாரு? சிவனா? விஷ்ணுவா? இல்ல முருகனா?
ஐயப்பன்.
தப்பிச்சீங்க. ஐயப்பன் எல்லாருக்கும் வேண்டியபட்டவர் தான். சாமியே சரணம்!னு ஒரு பக்தி வலைபூ பெயரை துண்டு போட்டு வெச்சுகுங்க. பின்னாடி உதவும்.
ஓகே அம்பி, வேற ஏதாவது சந்தேகம்னா மறுபடி கேக்கறேன்!னு சொல்லிட்டு ஜம்பு எஸ்கேப் ஆயிட்டார். உங்களுக்கும் ஏதாவது யோசனை தோணிச்சுனா சொல்லுங்களேன், பாவம் ஜம்புவுக்கு உதவியா இருக்கும்.
27 comments:
//ஜம்பு எஸ்கேப் ஆயிட்டார். உங்களுக்கும் ஏதாவது யோசனை தோணிச்சுனா சொல்லுங்களேன், பாவம் ஜம்புவுக்கு உதவியா இருக்கும்.//
அவரே விட்டாப் போதும்டா சாமி(யே சரணம்)னு எஸ்கேப் ஆயிட்டார். நாங்க யோசனை சொன்னாலும் நீங்க பார்ட்-III போட உங்களை எட்டிப் பார்ப்பாருங்கறீங்க:)))?
வலைபூ.. குசும்பூ :) ரசித்தேன் :))
//(நல்ல வேளை, நான் வேற நினைச்சேன்) ஓ! தாராளமா பதிவிடுங்க. என்ன எழுதினாலும், நீங்க ஒரு இணைய ஜர்னலிஸ்ட், அத மனசுல வெச்சுட்டு எழுதுங்க.
//
நாம காமெடி பண்றதுக்குன்னே சில பேர் வந்து மாட்றாங்க இல்லீங்கலாண்ணா?
அடிச்சு ஆடுங்க. :)) வழக்கம் போல ஸூப்பர்
LOL...nee oru mudivoda thaan irukka rasaa nadathu :-)
ஹை, எனக்கு ஒரு போட்டிப் பதிவரா, அண்ணே, நீங்க அநியாயத்துக்கு எக்கச்சக்க ப்லாகர்கள உருவாக்கறீங்க:):):) சைதை தமிழரசி நாமம் வாழ்க
அம்பி,
புதுசா வரவங்க எங்க நமக்குப் போட்டியா வந்துடுவாங்களோன்னு இப்படி தப்பா அட்வைஸ் குடுத்து அலையவிடறது எல்லாம் நல்லா இல்லை சொல்லிட்டேன்.
//என் அனுபவத்தையெல்லாம் கூட பதிவா போடலாம் தானே?
யூ மீன் சுற்றுலா, வேலை சம்பந்தமாவா?
ஆமா! அதே தான்!
(நல்ல வேளை, நான் வேற நினைச்சேன்) //
இன்றைய ட்ரெண்ட் படி நீங்க நினைச்சதுதானே போடணும்?
//ஜிம் கேரியின் மறுபக்கம்னு ஒரு பதிவ போட்ரலாம். //
நீர் மட்டும் பாவனா ஷ்ரேயான்னு ஜொள்ளி கூட்டம் சேர்ப்பீரு. அவரு என்னமோ ஜிம் கேரின்னு எழுதணுமா? பேரைப் பார்த்தாலே நாய்க்கு வைக்கிற பேர் மாதிரி இருக்கு. ஒரு கம்பைத் தூக்கிப் போட்டு Jim, fetch அப்படின்னு விளையாடுவாங்க. நீர் மட்டும் நல்ல பொறுப்பான ரங்கமணி மாதிரி பலசரக்கு கடையில் தங்கமணி லிஸ்ட் போட்டுக் குடுத்ததை சொதப்பாம வாங்கிக்கிட்டு ஜிம் கேரி அப்படின்னு அதை தூக்கச் சொல்லுவீரு. இப்படி இந்த அப்பாவி ஜம்புவை வெச்சு ஒரு தொடர் எழுதத்தானே அப்படி எல்லாம் தூண்டி விடறீரு?
//சட்டிக் கதைகள் அப்படின்னு தலைப்பு வைக்கனும். நீங்க சட்டியே இல்லாம மைரோவேவ்ல கூட சமைக்கலாம்.//
சட்டி இல்லாமல் சமைப்பதற்கு சட்டிக் கதைகள் என்ற பெயரை தரச் சொல்லும் கொடுமைக்கு என்ன சொல்ல. சட்டி இல்லா சங்கடமான நேரத்தில்.... அப்படின்னு தலைப்பு வெச்சா உம்ம கூட்டமெல்லாம் அங்க போயிடும் என்ற பயம்தானே.
//ஐயப்பன் எல்லாருக்கும் வேண்டியபட்டவர் தான்//
ஏன்யா ஏன்யா இப்படி? ஒரு அப்பாவியை மாட்டி விடறோமேன்னு ஒரு சின்ன வருத்தம் கூட இல்லையா? இன்னிக்கு வாத்தியார் ஜோசியம் சொல்லித்தர கிளம்பினாக்கூட சுப்பிரமணிய சுவாமி மாதிரி லிஸ்ட் போட்டு கேள்வி கேட்கறாங்க. இவரை சாமி பத்தி எழுதச் சொல்லி நம்ம பகூத் அறிவு (எழுத்துப் பிழை எல்லாம் இல்லை, இது இந்தி!) பார்ட்டிங்க எல்லாம் இவரை நார் நாரா கிழிக்க இல்ல ஏற்பாடு நடக்கிற மாதிரி இருக்கு.
//ஜம்பு எஸ்கேப் ஆயிட்டார். //
கொஞ்சம் விஷயம் தெரிஞ்ச ஆள்தான் போல. அவரை மெயில் ஐடி குடுங்க நான் பேசிக்கிறேன்.
டிஸ்கி: பதிவுக்கு மேட்டர் இல்லாமல் இப்படி ஜம்புவை வைத்து தொடர் போடும் அம்பியைக் கண்டு பொறாமையில்தான் ஜம்புவை ஹைஜாக் செய்து நானும் பதிவு போடத்தான் இப்படி எல்லாம் செய்கிறேன் எனப் பேசுபவர்கள் பேசுவது உண்மை இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
:)) தொடரும்ன்னு போட்டது மகிழ்ச்சி .. ஜம்புவுக்கு குடுக்கும் மொத்த அறிவுரைகளையும் தொகுத்து புதுப்ளாக்கர்ஸ்க்கு அதனதன் லிங்க்குகளுடன் ஒரு கையேடு போட்டு பட்டறைகளில் விநியோகம் செய்ய சொல்லலாம்..
உங்களைத்தான் தேடிக்கொண்டிருந்தேன்..ஐயா.!, என் தளத்தின் ஹிட் கவுண்டரைப் பார்த்தா பரிதாபப்படுவீங்க! இந்த பதிவின் பல பாகங்களையும் ஐடியாக்களையும் எதிர்நோக்கும் அபலை...
:)))
அடுத்த தடவை உங்க கையில மாட்டாம எஸ்கேப்ப் ஆகறது எப்படின்னு சொல்லிக்கொடுங்க. பின்ன அவருக்கு கொடுத்த ஐடியாவ நீங்க பதிவா போட்டா பாவம் அவரு என்ன செய்வாரு :))
//என் அனுபவத்தையெல்லாம் கூட பதிவா போடலாம் தானே?//
போடலாமே. 'டயப்பர் கதைகள்' :-))
'சட்டிக் கதைகள்' கூட நல்லாத்தான் இருக்கு. திண்ணைல உக்காந்து சட்டிக்கு கலாய பூசறீங்களோ என்னமோ? அதான் 'கலாய்த்தல் திணை'ன்னு வகைபடுத்தியிருக்கீங்க போல :-))
சூப்பரு...:))
நான் ஐடியாவ சொன்னேன்...;)
அம்பி உனக்கு வேணாம் குசும்பு,
கவுஜாயினி "ராப்"பு ஒரு சுயம்பு.
"சட்டி" யில வக்கிறது கொழம்பு. :P
தாமிரா,
//உங்களைத்தான் தேடிக்கொண்டிருந்தேன்..ஐயா.!, என் தளத்தின் ஹிட் கவுண்டரைப் பார்த்தா பரிதாபப்படுவீங்க! இந்த பதிவின் பல பாகங்களையும் ஐடியாக்களையும் எதிர்நோக்கும் அபலை...//
நல்ல ஆளுக்கிட்டதான் வந்து மாட்டி இருக்கீங்க. அம்பியின் அடுத்த பதிவு இவரை வச்சிதான் போல இருக்கெ.. :P
Sridhar,
////என் அனுபவத்தையெல்லாம் கூட பதிவா போடலாம் தானே?//
போடலாமே. 'டயப்பர் கதைகள்' :-))//
செம ஷாட்..:-)))))
ஹலோ அம்பி,
//சட்டிக் கதைகள் அப்படின்னு தலைப்பு வைக்கனும்.//
இது சூப்பர். ஆனா அடுத்தது என்ன "டயாப்பர் கதைகள்" ஆ?
இல்லையெ இதில ஏதோவொண்ணு மிஸ்ஸிங்:0)
அடுத்த பதிவில் பார்க்கலாம்,வருதான்னு.
ஜம்புவுக்குத் தம்பி இல்லையான்னு கேட்டு இருக்கணும் அம்பி நீங்க:)
அடுத்த க்ளூ கொடுத்திருக்கலாம்னு.
இன்னும் ம்ம்ம்ம்ம்,ஓகே வெயிட்டிங்:))
அது சரி, இந்தப் பதிவு சென்னையிலிருந்தா? பங்களூரா??? ரொம்பவே ஓய்வா இருக்கிறாப்போல் இருக்கு! பதிவு மேலே பதிவா வரதைப் பார்த்தா, இல்லைனா கணேசா, யப்பா, இது உன் வேலையா????????
blogger ulagathin thanigarilla thalaivan,kolgai nerigalai vakuthhu,blogger makaalai vazhinadathum eedilla innaya margadarsi(chit fund sollala) engal madhipirkku pathiramana(no vessels)vazhikatti ambi avargale!!!
neengal kodu podungal nangal rodu podukirom.
ippadikku blog ulagilnuzhaya thudikum oru appavi.jambu lingam.
indha poster banglore matrum chennayil adithal poruma gurve???
nivi.
யோவ்.. எப்படியா இப்படியெல்லாம் யோசிக்கறீங்க?
நானும் டெய்லி விட்டத்தைப் பார்த்து உட்கார்றேன்.. இந்த மாதிரி கலக்கல் யோசனையெல்லாம் வரமாட்டிங்குதே..
//நாங்க யோசனை சொன்னாலும் நீங்க பார்ட்-III போட உங்களை எட்டிப் பார்ப்பாருங்கறீங்க//
@ராலட்சுமி, ஹிஹி, சரியா புரிஞ்சுகிட்டீங்க.
நன்னி கவிநயா :)
//நாம காமெடி பண்றதுக்குன்னே சில பேர் வந்து மாட்றாங்க இல்லீங்கலாண்ணா?
//
@ஜீவ்ஸ், நல்லா கோர்த்து விடற பா! :)
ஹிஹி, என்ன ஷ்யாம் நீ என்ன சொல்ற?னு எனக்கு தெரியலையே! :p
//அண்ணே, நீங்க அநியாயத்துக்கு எக்கச்சக்க ப்லாகர்கள உருவாக்கறீங்க//
@rapp, எல்லாம் ஒரு பொது சேவை தான்! :)
//இன்றைய ட்ரெண்ட் படி நீங்க நினைச்சதுதானே போடணும்?
//
கொத்ஸ், இவ்ளோ குசும்பு ஆகாது. :p
//இப்படி இந்த அப்பாவி ஜம்புவை வெச்சு ஒரு தொடர் எழுதத்தானே அப்படி எல்லாம் தூண்டி விடறீரு?
//
அதே அதே!
//சட்டி இல்லா சங்கடமான நேரத்தில்.... அப்படின்னு தலைப்பு வெச்சா //
ROTFL :)))பாவம் ஜம்பு! தாங்க மாட்டாறாரு.
//இன்னிக்கு வாத்தியார் ஜோசியம் சொல்லித்தர கிளம்பினாக்கூட சுப்பிரமணிய சுவாமி மாதிரி லிஸ்ட் போட்டு கேள்வி கேட்கறாங்க.//
அப்போ கேள்வி கேக்கறவங்க எல்லாம் சு.சுவாமின்னு சொல்ல வறிங்களா? :))
//அவரை மெயில் ஐடி குடுங்க நான் பேசிக்கிறேன்.
//
அந்த தப்பை மட்டும் நான் செய்யவே மாட்டேன். :)
//ஜம்புவுக்கு குடுக்கும் மொத்த அறிவுரைகளையும் தொகுத்து புதுப்ளாக்கர்ஸ்க்கு அதனதன் லிங்க்குகளுடன் ஒரு கையேடு போட்டு பட்டறைகளில் //
முத்தக்கா, எனக்கு பொது மாத்து வாங்கி தரதுல இவ்ளோ ஆசையா? :p
//இந்த பதிவின் பல பாகங்களையும் ஐடியாக்களையும் எதிர்நோக்கும் அபலை...//
தாமிரா, ஆகா, அடுத்த ஜம்பு நீங்க தானா? :)))
//அடுத்த தடவை உங்க கையில மாட்டாம எஸ்கேப்ப் ஆகறது எப்படின்னு சொல்லிக்கொடுங்க.//
சென்ஷி, இது அவருக்கு மட்டுமல்ல, பாருங்க, தாமிராவுக்கும் உபயோகமா இருக்குல்ல. :))
//போடலாமே. 'டயப்பர் கதைகள்'//
@sridhar, நான் தமிழ்ல சொன்னேன், நீங்க இங்க்லீசுல சொல்லி இருக்கீங்க.
பூவை பூன்னும் சொல்லலாம், புய்ப்பம் அல்லது புஷ்பம்ன்னும் சொல்லலாம். :))
//நான் ஐடியாவ சொன்னேன்//
@தமிழன், நன்றி ஹை. :)
@விஜய், நீ புல் பார்முல இருக்கன்னு எனக்கு நல்லா தெரியும்பா, அதுக்காக இப்படி கவுஜ எல்லாம் நோ! நோ! ப்ளீஸ். :))
//இது சூப்பர். ஆனா அடுத்தது என்ன "டயாப்பர் கதைகள்" ஆ?
//
@sumathi, YES :)
//ஜம்புவுக்குத் தம்பி இல்லையான்னு கேட்டு இருக்கணும் அம்பி நீங்க:)
//
@வல்லி மேடம், அட, நல்ல ஐடியாவா இருக்கே! :))
//indha poster banglore matrum chennayil adithal poruma gurve???
//
நிவி, ஏன்? அப்புறம் ஜம்பு மறுபடி நம்ப கைல சிக்கவே மாட்டார். :))
//நானும் டெய்லி விட்டத்தைப் பார்த்து உட்கார்றேன்.. இந்த மாதிரி கலக்கல் யோசனையெல்லாம் வரமாட்டிங்குதே..
//
@பரிசல், விட்டத்தை பாத்தா? தமிழ்மணம் பாருங்கப்பூ! நிறையா வரும். :p
/சட்டிக் கதைகள் அப்படின்னு தலைப்பு வைக்கனும். நீங்க சட்டியே இல்லாம மைரோவேவ்ல கூட சமைக்கலாம். கடைசில இதே பதார்தத்தை சட்டியிலும், அதாவது வானலியிலும் சமைக்கலாம்!னு யதார்த்தமா ஒரு டிஸ்கி போட்ருங்க. இதான் டெக்குனிக்கு. புரிஞ்சதா?
//
:P
// பாட்டுக்கு ரொம்ப நன்றி மீனாட்சியம்மா (பாட்டிக்கு இது பெட்டர் இல்லையா?) :ப்//
அம்மான்னு கூப்பிடறாகளே வந்து பாத்துகினு போவோம்னு
வந்தா, இங்கே வலை பேரு அம்மாஞ்சின்னு இருக்குது.
எங்க ஊரு பக்கமெல்லாம் அம்மாஞ்சின்னு சொன்னா
உம்மணா மூஞ்சி மாதிரி யாருட்டயமே பேசாம ஒரு பக்கம் மூலையிலே
உட்கார்ந்திருப்பவகளைத் தானே சொல்லுவாக !
ஆனா,
இங்கே இந்த வலைப் பதிவு கல கல கல கலன்னு லே சலங்கை ஒலி சத்தம் கேட்குது.
நாலு சுவையும் சாப்பிடணும்
நகைச்சுவையா பேசணும் அப்படின்னு சொல்லுவாக எங்க கிராமத்திலே.
நல்லாவே கீது உங்க பதிவு.
மகராசனா இரு.
ஒரு தரம் எங்க ஊரு புள்ளயார் கோவிலுக்கு வந்து
புள்ளையாரப்பா அப்படின்னு வேண்டிகினு ஒரு நூத்தி எட்டு தேங்காய் உடை.
இல்ல தலைல குட்டிக்க .
ஒரு தேங்காய்க்கு ஒரு லட்சம்னு ஒரு கோடி பேரு உங்க பதிவுக்கு வந்து கூடிடுவாங்க.
மீனாட்சி பாட்டி.
தஞ்சை.
http://ceebrospark.blogspot.com
http://vazhvuneri.blogspot.com
/
வேற என்ன, ஜம்புஸ் கிச்சன் கார்னர்!
அதான் இல்லை, சட்டிக் கதைகள் அப்படின்னு தலைப்பு வைக்கனும். நீங்க சட்டியே இல்லாம மைரோவேவ்ல கூட சமைக்கலாம். கடைசில இதே பதார்தத்தை சட்டியிலும், அதாவது வானலியிலும் சமைக்கலாம்!னு யதார்த்தமா ஒரு டிஸ்கி போட்ருங்க. இதான் டெக்குனிக்கு. புரிஞ்சதா?
/
awwwwwwwwww
/
சட்டி இல்லா சங்கடமான நேரத்தில்.... அப்படின்னு தலைப்பு வெச்சா உம்ம கூட்டமெல்லாம் அங்க போயிடும் என்ற பயம்தானே.
/
ROTFL
:))))))))))))))
Post a Comment