சென்னை மத்திய புகைவண்டி நிலையத்தில்(சென்ட்ரல் ஸ்டேஷன்னு சொல்ல வந்தேன்) சிட்டு குருவி லேகியம் தவிர எல்லா கடைகளும் வந்து விட்டது. ஆனாலும் நிலையத்தின் தூய்மை என்னவோ இன்னும் விஜய் படங்கள் போல அதே நிலைமையில் தான் இருக்கு. சட்ட வட்டமாக நடுவில் உட்கார்ந்து கொண்டு தலைக்கு நாலு சப்பாத்தியும் சப்ஜியையும் குடும்பத்துக்கே பறிமாறி கொண்டிருந்தாள் ஒரு பரதேவதை.
ஸ்டேஷனில் இருக்கும் டிவிக்களில் அண்ணாச்சி கடையில் குளிர் அடிக்குது!னு யாரோ ஒரு நடிகை வாங்கிய காசுக்கு அள்ளி விட்டு கொண்டிருந்தார். (அந்த நடிகையின் பெயரை முடிந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும், சும்மா ஒரு பொது அறிவுக்கு தான். )
சென்னையில் அடிக்கும் வெய்யிலுக்கு அப்பளம் காய போட்டால் எண்ணெய் செலவின்றி பொரிந்து விடும் போலிருக்கு. 9.30க்கு தான் ரயில். எனக்கு கொஞ்சம் எப்பவுமே எச்சரிக்கை உணர்வு அதிகம். ஆனாலும் ஒரு மணி நேரத்துக்கு முன்னாடியே வந்து தேவுடு காப்பது எல்லாம் எனக்கே டூ மச்சாக இருந்தது. ஏற்கனவே பிளாட்பாரத்தில் வண்டி நின்று கொண்டிருந்தாலும், எனக்கு வண்டிக்குள்ளே போக இஷ்டமில்லை. சும்மாவே நம் மக்களுக்கு பேசறத்துக்கு காசு கொடுக்கனும். அதிலும், அறிமுகம் இல்லாதவர்களிடம், அது சன் பீஸ்ட் பிஸ்கோத்து விக்கும் சூர்யாவா இருந்தா கூட பேச்சு வெச்சுக்காதீங்கனு மைக்கில் அறிவித்து இருந்தபடியால், சுமாராக சூர்யா போல் இருக்கும் என்னை (சரி, இதுக்கே துப்பினா எப்படி?) சந்தேகமாகவே பார்க்கும் வாய்ப்புக்கள் இருக்கறபடியால், எதுக்கு வம்பு?னு சரியாக 15 நிமிடத்துக்கு முன்னாடி தான் வண்டியில் ஏறினேன்.
ரயிலில் தனியாக, அதுவும் என்னை போன்ற ஏமாந்த சோனகிரிகள் பயணித்தால் எப்படி தான் கூட இருப்பவர்களுக்கு தெரியுமோ?
"எச்சூஸ்மி! நாங்க பேமிலியா வந்ருக்கோம். என் மச்சினி மட்டும் 10ம் நம்பர் சீட். கொஞ்சம் மாத்திக்க முடியுமா?னு சொல்லி அந்த சீட்டை தள்ளி விட்டு விடுவார்கள். அங்க போனா உச்சா வாடை புரட்டி எடுக்கும். கூட பயணிக்கும் சதாவை பார்க்காமல் டாய்லைட்டை பார்த்து டிடிஆர்ர்ர்ர்ர்!னு தொண்டை கிழிய கத்றத்துக்கு நான் என்ன அன்னியன் படத்து அம்பியா என்ன?
நல்ல வேளை இந்த தடவை அந்த மாதிரி ஒன்னும் நடக்கலைனு நான் பெறுமூச்சு விடுமுன் தொப்பி போட்ட ஒரு தடியன் (மிடில் பர்த்தாம்)மெதுவாக தொண்டையை கனைத்தான். நானும் என் பிரண்டும் சேர்ந்து வந்துருக்கோம். அதனால....
(பெரிய துரியோதனனும் கர்ணனும்) நானும், என் பிரண்டு கூட தான் வந்ருக்கேன்! அதனால... அதே பிட்டை அவனுக்கே போட்டதில் கடுப்பாகி போனான். ஆனால் இன்னொரு லோயர் பர்த்த்காரனை சரி கட்டி இடத்தை பிடித்து விட்டான்.
இந்த பெங்களுர் டிரெயினில் பயணிப்பவர்களை மிக எளிதாக கண்டு கொள்ளலாம்.
ஆண்கள் எல்லோரும் டவுசர் பாண்டிகளாக இருப்பார்கள். தோளில் ஏதேனும் கேக்ரான்-மோக்ரான் சாப்ட்வேர் கம்பனி ப்ரீயா குடுத்த பை இருக்கும். இடது கையில் கண்டிப்பாக ஒரு பிஸ்லரி பாட்டில் இருக்கும், வலது கையில் காமிரா மொபைல் (யாருக்கு தான் பேசுவார்களோ?). ஏதேனும் ஒரு காதில் கடுக்கன், ஈயம் பித்தளையில் தேள் டாலர் போட்ட செயின் கண்டிப்பாக இருக்கும்.
அம்மணிகளை பத்தி சொல்ல வேண்டியதில்லை. சென்னையில் மீரா சீயக்காய் போட்டு வளர்த்த கூந்தலை, பெங்களுரில் கழுதை வால் மாதிரி வெட்டி இருப்பார்கள் என்பதோடு நிறுத்தி கொள்கிறேன். முக்யமா எல்லோரும் இ-டிக்கட் தான் வைத்து இருப்பார்கள்.
ரயில் புறப்பட்டு பத்து நிமிடத்தில் பரிசோதகர் நீல நீற கோட்(இந்த வெய்யிலில் எப்படி சார்?) அணிந்து வந்தார். ஒழுங்கா இ-டிக்கட்டுக்கு ஐடி கார்டு எடுத்து வைங்க!னு கறாராக சொல்லி விட்டார். அதோடு நிற்கவில்லை, இந்த சீட் எக்ஸ்சேஞ்ச் மேளா நடத்திய தொப்பிகாரனை ஒழுங்கா அவன் சீட்டுக்கே போக சொல்லிவிட, கம்பார்ட்மெண்ட் முழுக்க பலபேர் குறுக்கேயும் நெடுக்கேயும் போக ஆரம்பித்து விட்டனர். எல்லோரும் இடம் மாத்தி இருக்காங்க போலிருக்கு.
வாலு போச்சு! கத்தி வந்தது டும்! டும்! டும்! போல தனக்குரிய சீட்டுக்கு ஜீன்ஸும், டிஷர்ட்டும் அணிந்த பெண் வந்து சேர்ந்தாள். ஒட்டு கேட்கும் பழக்கம் எல்லாம் எனகில்லை, காத்து வாக்கில் டிடிஆரிடம் சொன்ன போது விழுந்தது, பெயர் கூட ஏதோ பூஜாவாம்.
சரி, இந்த டிடிஆர் செஞ்சது கரக்ட்டா? அதாவது கராறாக ரூல்ஸ் ராமானுஜமாக இருந்ததை சொல்றேன். மக்களுக்காக தான் ரூல்ஸ்!னு நினைக்கறீங்களா? இல்ல ரூல்ஸுக்காக தான் மக்கள்!னு நினைக்கறீங்களா? வளர்ச்சியடைந்த நாடுகளில் எல்லாம் மக்கள் சட்டத்தை மிகவும் மதிக்கிறார்கள், பொது இடத்தில் குப்பை போடாமல் இருப்பது, துப்புவது போன்றவை. சட்டங்கள் கடுமையாக்கப்பட்டால் மக்கள் நம்மூரிலும் சட்டத்தை மதிப்பார்களா? இதை பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க?
டிஸ்கி#1: கடைசி பாரா தான் மாரல் ஆப் தி பதிவு. :)
டிஸ்கி#2: அப்புறம் பூஜா பற்றிய பிற தகவல்களை அடுத்த பதிவுல சொல்லுவியா அம்பி?னு பின்னூட்டம் எல்லாம் போட கூடாது. :))
35 comments:
ullen ayya,
superappu, annae neenga eppavavadhu students tour pora compartmentla irundhirukeengala(neenga studenta illadappo), appo generala indha TTR ellam pasanga sidethaan support pannuvaanga, avanga enna attuzhiyam pannalum
/டிஸ்கி#2: அப்புறம் பூஜா பற்றிய பிற தகவல்களை அடுத்த பதிவுல சொல்லுவியா அம்பி?னு பின்னூட்டம் எல்லாம் போட கூடாது. :))//
நான் வேணா மெயில் அனுப்பி கேட்கவா! மாரல் ஆப் த பதிவு பூஜானு இருக்கும்போது நீங்க பாரானு சொல்றது நியாயமா?
Pooja'va kettadha sollunga thala.. pulla eppidi irukko ;-)
//அப்புறம் பூஜா பற்றிய பிற தகவல்களை அடுத்த பதிவுல சொல்லுவியா அம்பி?னு பின்னூட்டம் எல்லாம் போட கூடாது. :))//
சரி. பின்னூட்டத்திலேயே சொல்லிடு!
//கடைசி பாரா தான் மாரல் ஆப் தி பதிவு. :)//
பாரா ஒருத்தர்தானே. அது என்ன சோழ மன்னர் மாதிரி முதலாம் பாரா, கடைசிப் பாரா?
அடுத்து இன்னும் ஒரு பாரா வந்தா அவர்தானே கடைசி பாரா ஆவாரு. அப்போ இப்போ சொன்ன கடைசி பாரா என்ன ஆவாரு?
அப்போ மாரல் ஆப் திஸ் பதிவு கடைசி பாரான்னே இருக்குமா அல்லது கடைசிக்கு முந்தின பாரா அப்படின்னு மாறுமா?
பாராவும் உங்களோட வந்தாரா? அவர் என்ன சொன்னார்? அவர் சொன்னதைக் கூடச் சொல்லி அது மாரல் எனச் சொல்லாமல் பாராவையே மாரல் எனச் சொல்வது உங்களுக்கு கிழக்குப் பதிப்பகத்தில் காண்ட்டிராக்ட் ஏதேனும் கிடைத்ததாலா? அல்லது வேற எதாவது நெளியுதா?
அப்பாடா, டிஸ்கி போட்டியோ நானும் பின்னூட்டம் எல்லாம் போட முடிஞ்சுதோ. பதிவைப் படிச்சியான்னு சின்னப்பிள்ளைத்தனமா கேட்கக்கூடாது. சொல்லிட்டேன்.
மாரல் ஆஃப் தி பூஜா என்னான்னு சீக்கிரம் சொல்லுங்க. டிடிஆச் பத்தி எல்லாம் தெரிஞ்சு என்னவாகப் போவுது??
//காத்து வாக்கில் டிடிஆரிடம் சொன்ன போது விழுந்தது, பெயர் கூட ஏதோ பூஜாவாம்//
இப்போல்லாம் டிடிஆர் பேர், ஊர், வயசெல்லாமா கேக்கறார்.. இதிலென்னமோ வில்லங்கம் இருக்கு.....:-))))))))))
அம்பி அடுத்த தடவை வரும்போது பூரி கட்டையுடன் வந்து விடு/ தங்கமணிக்கு சென்னை கட்டை ஏற்கனவே உடைந்து விட்டதாம்
அம்பி புரியலையே:)
பூஜா, பாரா சரி.கொத்தனார் வேற வந்து ரொம்ப கொத்திட்டுப் போயிருக்கிறார்,.
சிரிச்சு முடியலை. இது என்னபதிவு மொக்கை,டிஸ்கி, பின்னூட்டக் க,
மாரல் சொல்லும்.... இவ்வளவு ஆப்ஷன் இருக்கு. என்னன்னு சொல்லுங்க.
பூஜா சாப்பிட்டுட்டு வந்தாரா. :)
நாங்க கூடத்தான் காவேரில பங்களூருக்குப் போனோம்.
எங்களுக்கு ஒண்ணுமே இண்டரஸ்டிங்கா நடக்கலியே. என்ன கொடுமை.
//இலவசக்கொத்தனார் said…
//அப்புறம் பூஜா பற்றிய பிற தகவல்களை அடுத்த பதிவுல சொல்லுவியா அம்பி?னு பின்னூட்டம் எல்லாம் போட கூடாது. :))//
சரி. பின்னூட்டத்திலேயே சொல்லிடு!
///
ரீப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்:))
அம்பி! டிஸ்கி போட்டா கொத்தனார் வந்து பின்னூட்டம் இடுவாரா. இது கூட ஒரு தலைப்பா வச்சுக்கலாம்.:)
oorula illatha podhu asathalla rendu pathivu potrukeenga sir,first,many many happy returns of your wedding day,appuram mrs ambikku advance wishes.
pooja pooja bhatt madhiri irundhangala??? poojavum p poorikattayum p ennna porutham!!!!!!!!!!.appuram sattangal kadumaiyanal sattathai madhiyadhavargalum madhipargal.appuram idhu nammudaya veedu madhiri nammudaya naadunnu oru feeling irukkanum
nivi.
மாரல் புரிஞ்சுருச்சு:-)))))
எப்பவும் பக்தியா இருக்கணும் பூஜான்னு. அதானே அம்பி?
முதல்முறை படித்தேன் உங்கள் வலைப்பூவை. ரசித்தேன்.
//ஒரு மணி நேரத்துக்கு முன்னாடியே வந்து தேவுடு காப்பது எல்லாம் எனக்கே டூ மச்சாக இருந்தது//
சென்னை டிராஃபிக்கை நம்பமுடியாது இல்லையா??
//ரயிலில் தனியாக, அதுவும் என்னை போன்ற ஏமாந்த சோனகிரிகள் பயணித்தால் எப்படி தான் கூட இருப்பவர்களுக்கு தெரியுமோ?
"எச்சூஸ்மி! நாங்க பேமிலியா வந்ருக்கோம்.//
ஆமாங்க. இதே மாதிரி நானும் நிறையதடவை மாட்டியிருக்கிறேன்.
//பெரிய துரியோதனனும் கர்ணனும்) நானும், என் பிரண்டு கூட தான் வந்ருக்கேன்! அதனால... அதே பிட்டை அவனுக்கே போட்டதில் கடுப்பாகி போனான்.//
நல்ல காமெடி..
ம்ம்.. பூஜா வ பத்தி நான் எதுவும் கேட்க்கலப்பா..
அம்பி!
மைசூர்காவேரி எக்ஸ்ப்ரஸ்ல இத்தனை லுக் விட்ருக்கீங்களா?:) என்னவோபோங்க அம்பிதம்பி கண்ஸை வைச்சி அண்ணா சமத்துன்னு நினச்சா பூஜாங்கறீங்க:):)
சும்மா சொல்லக்கூடாது நல்ல அப்சர்வேஷன் தான்! இயல்பா எழுதறீங்க..ரொம்ப ரசிச்சேன்..அந்த பூஜா மேட்டர்லாம் எனக்கு தேவை இல்லப்பா....:):)
//அப்புறம் பூஜா பற்றிய பிற தகவல்களை அடுத்த பதிவுல சொல்லுவியா அம்பி?னு பின்னூட்டம் எல்லாம் போட கூடாது. :))//
அதானே, பதிவின் ஹைலைட்டே அதானே????:P
//அப்பாடா, டிஸ்கி போட்டியோ நானும் பின்னூட்டம் எல்லாம் போட முடிஞ்சுதோ. பதிவைப் படிச்சியான்னு சின்னப்பிள்ளைத்தனமா கேட்கக்கூடாது. சொல்லிட்டேன்.//
இப்படி எல்லாம் டிஸ்கி போட்டால் தான் இ.கொ. வருவாரு, அம்பி, நல்ல வேலை தான், வல்லி சொல்றாப்பலே நாங்களும் தான் ஷதாப்தி, பிருந்தாவன், காவேரி, கர்நாடகானு எல்லா வண்டியிலேயும் போனோம், போறோம், உங்க கண்ணிலே மட்டும் இதெல்லாம் தான் படுதே??? திராச சார் சொல்றாப்பலே பூரிக்கட்டை பழசாயிடுச்சோ??????
unake overa therila...edho incident nadandhudhu polirukunu padicha ttr id card kettadhuku ivalo periya build up thevaiya????? grrr...
namma oor change aaradhuku innum 50 years agum, indha shorts ellam mattum west-lerndhu correct-a kathuppanunga, but not the discipline :)
ரயில் பயணம் செஞ்ச எல்லாருக்குமே பலவித அனுபவங்கள் கிடைக்கும்.. அதை சுவராஸ்யமாக எழுதுவது உங்களுக்கு கை வந்த கலையாக இருக்கிறது! ரயில் பயணம் என்கிற தலைப்பில் நான் என் வலைப்பூவில் எழுதியிருக்கிற கவிதை படித்தீர்களா? (தமிழ்நாடே அதைப் பற்றிதான் பேச்சு!-சரி.. சரி.. கோவிச்சுக்காதீங்க!)
பின் குறிப்பு: எல்லாரும் கேட்டு நான் மட்டும் கேக்கலைன்னா தப்பாயிடும்.. ஆமா. அந்த பூஜா (ஐயோ.. ஐயோ அடிக்கறாங்களே..)
=)))
ஒண்ணுத்துக்குமே பதில் சொல்லாம வாய்மூடி மௌனம் சாதிச்சா எப்படி??????
பதில்பதில்பதில்!!!
vambi..moral of the story..pooja paralaye vanthiruthungarathu elarukum theriyum..aprum ethuku pazhaiya tamizh cinemala title pera solanumgarathukaga last scenela dialogue vaikara matiri oru last para..pooja matternala veetla thangamani ayutha poojai seekrama celebrate panangalamay..kelvipaten :)
~gils
//கூட பயணிக்கும் சதாவை பார்க்காமல் டாய்லைட்டை பார்த்து டிடிஆர்ர்ர்ர்ர்!னு தொண்டை கிழிய கத்றத்துக்கு நான் என்ன அன்னியன் படத்து அம்பியா என்ன?
//
குட் கொஸ்டின்:))
//அப்புறம் பூஜா பற்றிய பிற தகவல்களை அடுத்த பதிவுல சொல்லுவியா அம்பி?னு பின்னூட்டம் எல்லாம் போட கூடாது. :))//
அதெல்லாம் வேணாம். இதைப்படிச்சுட்டு உங்களுக்கு அண்ணி என்ன பனிஷ்மெண்ட் குடுத்தாங்கன்னு சொன்னா போதும்:P
super brother! kalakkal post! romba nachnu irunthuchu!!!
My favs..
1)//சென்னையில் அடிக்கும் வெய்யிலுக்கு அப்பளம் காய போட்டால் எண்ணெய் செலவின்றி பொரிந்து விடும் போலிருக்கு// ஆமா ஆமா!!
2)அந்த சீட்டை தள்ளி விட்டு விடுவார்கள். அங்க போனா உச்சா வாடை புரட்டி எடுக்கும் :)
3)//ஒரு தடியன் (மிடில் பர்த்தாம்)// அது ஏன்னு தெரியல, எப்ப எனக்கு லோயர் பர்த் கிடைச்சாலும், அந்த மிடில் பர்த் பார்ட்டி கொஞ்சம் weightஆ தான் வர்றாய்ங்க! night பூரா எப்போ அது உடையுமோன்னு ஒரு பயத்தோடயே தூக்கத்த ஓட்ட வேண்டி இருக்கும்!
4)//ஆண்கள் எல்லோரும் டவுசர் பாண்டிகளாக இருப்பார்கள்.ஏதேனும் ஒரு காதில் கடுக்கன், ஈயம் பித்தளையில் தேள் டாலர் போட்ட செயின் கண்டிப்பாக இருக்கும்.// ஆமா கரெக்டு!! almost 80% அப்படித்தான்.
பெண்கள் பத்தி ஒரு முக்கியமான விஷயத்த விட்டுட்டீங்களே brother ..... bacheleesஆ (feminine gender for bachelor - spinsterனா அது ஏதோ transistor மாதிரில இருக்கு!!) இருந்தா, கைல ஒரு fone. Tower இருக்கிற வர யார்கிட்டயோ "ம்,ம்,ம்" னு பேசிக்கிட்டே... இருப்பாங்க!
இதுவே கல்யாணம் ஆன youngstersனா அப்பாடா, 2 நாள் அந்த ரங்கு தொல்லை இல்லாம இருக்கலாம்னு நிம்மதியா தூங்கற வழிய பார்ப்பாங்க! என்ன rightஆ?
5)//கத்தி வந்தது டும்! டும்! டும்! போல தனக்குரிய சீட்டுக்கு ஜீன்ஸும், டிஷர்ட்டும் அணிந்த பெண் வந்து சேர்ந்தாள். ஒட்டு கேட்கும் பழக்கம் எல்லாம் எனகில்லை, காத்து வாக்கில் டிடிஆரிடம் சொன்ன போது விழுந்தது, பெயர் கூட ஏதோ பூஜாவாம்.// என்னடா திருந்திட்டாரா brotherனு பார்த்தேன். Actually அந்த பூஜா பத்தி..அப்படின்னு நீங்க ஆரம்பிச்சா, அண்ணி follow up பண்ணிக்குவாங்கன்னு எங்களுக்கு எல்லாம் தெரியும்ல!!
-- அன்புத் தங்கை!
trainla poyae remba naal aachunga.. athuvum bangaloreku trainla poi... hmmmmmmmm.. antha naal nyaabagam nenjilae vanthathae nanbanae, nanbanae.. thanks for antha naal nyaabagamnga..
//ஆனாலும் நிலையத்தின் தூய்மை என்னவோ இன்னும் விஜய் படங்கள் போல அதே நிலைமையில் தான் இருக்கு.//
என்ன மேட்டர்னாலும் அதுல எப்படியாவது டாக்டர் விஜய இழுக்கலைன்னா உங்களுக்கு தூக்கம் வராதா;)
//ரயிலில் தனியாக, அதுவும் என்னை போன்ற ஏமாந்த சோனகிரிகள் பயணித்தால் எப்படி தான் கூட இருப்பவர்களுக்கு தெரியுமோ?//
நூத்துக்கு நூறு உண்மைங்க. கமல் சொல்வதை போல் நமக்கு இந்த 'முடியாது'(No) என்ற வார்த்தையை சொல்வது ரொம்ப கடினமாயிற்றே.
@Rapp, வருகைக்கு நன்றி ராப், தமிழ்ல பின்னூட்டம் போடுங்க பா! :))
//நான் வேணா மெயில் அனுப்பி கேட்கவா!//
@dreamz, அடடா என்ன ஒரு அக்கறை..? :p
@arun, ROTFL :)))
@கொத்ஸ், பாரா, பாரானு இப்படி பின்னி பெடல் எடுத்த என்ன செய்வேன் நான்?
பாருங்க, வல்லிம்மாவால சிரிப்பை அடக்க முடியலை. :))
//பதிவைப் படிச்சியான்னு சின்னப்பிள்ளைத்தனமா கேட்கக்கூடாது. //
அதானே! நாம என்னிக்கு படிச்ருக்கோம்? :p
//டிடிஆச் பத்தி எல்லாம் தெரிஞ்சு என்னவாகப் போவுது??
//
@ila, அதானே! :p
//இப்போல்லாம் டிடிஆர் பேர், ஊர், வயசெல்லாமா கேக்கறார்.. இதிலென்னமோ வில்லங்கம் இருக்கு//
@chinna payan, கரக்ட், யாஹூ மெசஞ்சர் ரேஞ்சுக்கு ஆயி போச்சு. :))
//தங்கமணிக்கு சென்னை கட்டை ஏற்கனவே உடைந்து விட்டதாம்
//
@TRC sir, நீங்க வேற ஏத்தி விடறீங்களா? :p
//இது என்னபதிவு மொக்கை,டிஸ்கி, பின்னூட்டக் க,
மாரல் சொல்லும்.... இவ்வளவு ஆப்ஷன் இருக்கு. என்னன்னு சொல்லுங்க.//
@valli madam, விட்டா நீங்களே எடுத்து குடுப்பீங்க போலிருக்கே? :p
//பூஜா சாப்பிட்டுட்டு வந்தாரா.//
ஓ! சாப்டாச்சாம். பானி பூரி. :))
//டிஸ்கி போட்டா கொத்தனார் வந்து பின்னூட்டம் இடுவாரா//
கரக்ட்டா பாயிண்டை புடுச்சீங்க. :))
@ayilyan, :)
//first,many many happy returns of your wedding day,appuram mrs ambikku advance wishes.
//
@nivi, thanks alot nivi, also for the responsible comment. :))
//எப்பவும் பக்தியா இருக்கணும் பூஜான்னு. அதானே அம்பி?
//
@tulasi teacher, அதே தான்!னு சொல்ல நான் என்ன மடையனா? :p
//இதே மாதிரி நானும் நிறையதடவை மாட்டியிருக்கிறேன்.
//
@rubas, அடடா நீங்களுமா? முதல் வருகைக்கு மிக்க நன்னி. :))
//சும்மா சொல்லக்கூடாது நல்ல அப்சர்வேஷன் தான்! இயல்பா எழுதறீங்க..ரொம்ப ரசிச்சேன்..//
@shylaja, சூப்பர், அடுத்த தடவை ம.பா உண்டுல்லா? :p
//நாங்களும் தான் ஷதாப்தி, பிருந்தாவன், காவேரி, கர்நாடகானு எல்லா வண்டியிலேயும் போனோம், போறோம்//
@geetha madam, போகாத வண்டி தான் எது? :p
//namma oor change aaradhuku innum 50 years agum, //
@usha, உங்க அருள் வாக்குக்கு மிக்க நன்னி. :p
//ரயில் பயணம் என்கிற தலைப்பில் நான் என் வலைப்பூவில் எழுதியிருக்கிற கவிதை படித்தீர்களா? //
@parilkaaran. வெளம்பரம்ம்ம், நடக்கட்டும். :p
@valli madam, பதில் போட்டாச்சு. :p
@samanyan, :))
//pooja matternala veetla thangamani ayutha poojai seekrama celebrate panangalamay.//
@gils, இன்னும் இல்ல, இந்த வாரம் தான் அது. :p
//இதைப்படிச்சுட்டு உங்களுக்கு அண்ணி என்ன பனிஷ்மெண்ட் குடுத்தாங்கன்னு சொன்னா போதும்:P
//
@rasigan, என்ன ஒரு நல்ல எண்ணம். :p
//என்னடா திருந்திட்டாரா brotherனு பார்த்தேன்.//
@deeksh, யப்பா, பொங்கி எழுந்திட்டீங்க போல, துபாய் எப்படி இருக்கு? :))
//antha naal nyaabagam nenjilae vanthathae nanbanae, nanbanae.. thanks for antha naal nyaabagamnga..
//
@gud4, U r most welcome. :))
//கமல் சொல்வதை போல் நமக்கு இந்த 'முடியாது'(No) என்ற வார்த்தையை சொல்வது ரொம்ப கடினமாயிற்றே.
//
@sathiya, அப்படினு சொல்லி மனசை தேத்திக்க வேண்டியது தான். :))
பதிவை விட,(கோச்சுக்காதீங்க வேணா 'பதிவையும் விட'ன்னு வச்சுக்கலாம்) அத்தனை பின்னூட்டங்களையும் படித்துப் படித்து வயிறே புண்ணானது போலாயிற்று! ஐ ரியலி என்ஜாய்ட் ஆல் ஆஃ இட்!
உங்களை அம்பி என்பதா, அம்மான்சேய் என்பதா?
மைசூர்- காவேரி எக்ஸ்பிரஸ்-ல் என் பெண்ணை வழி அனுப்பப் பல முறை வந்திருக்கிறேனே ?
சூர்யாவைப் போல யாரையுமே பார்க்கலியே ?
அடடா இவ்ளோ நடந்திருக்கா இன்னைக்குதான் புது பதிவுல இருக்கிற லிங்க் பிடிச்சி இங்க வந்தேன்!!
ho... pooja pooja.... bangalore pooja pooja...
ammanchi unnai thedaran... engirukkai sollu nee....
ho.... pooja pooja....
[raagam : ho priya priya...]
Post a Comment