Monday, May 26, 2008

சரம் தெரியுமா சரம்?

சரம் என்றவுடன் உங்களுக்கு மல்லிகை சரம் நினைவுக்கு வந்தால் நீங்கள் நம் குசும்பன் போல சமீபத்தில் (அந்த சமீபம் இல்ல) திருமணம் ஆனவராக இருக்கலாம்.

சர வெடி நினைவுக்கு வந்தால் நீங்கள் கைப்புள்ளை, என்னை போல சமீபத்தில்(இப்பவும் அந்த சமீபம் இல்ல) தலை தீபாவளி கொண்டாடியவராக இருக்கலாம்.

சரம் என்றவுடன் சூடி கொடுத்த சுடர் கொடி நினைவுக்கு வந்தால் அடிக்கடி நம் 'பாசுரபுயல்' கேஆரெஸ் பதிவுகளுக்கு சென்று வந்தவராக இருக்கலாம்.


சரம் என்றவுடன் லலிதாம்பிகையின் புருவங்கள் தானே! என்று தோன்றினால் சாக்த சிரோண்மணி மதுரையம்பதி அவர்களின் பதிவில் தடுக்கி விழுந்தவராக இருக்கலாம்.

சரம் என்றவுடன் பச்சை கிளி முத்துச் சரம் என நீங்கள் பாடினால் நீங்கள் எம்ஜிஆர் ரசிகர். கரக்ட்டா? இல்ல, டக்குனு ஜோதிகா முகம் நினைவுக்கு வந்தால் பிறர் மனை நோக்கா பேராண்மையாளர் நீங்க தான். ஹிஹி.


இதை எல்லாம் மீறி அட வலை சரம்னு சொல்ல வேண்டியது தானே?னு நீங்க முணுமுணுத்தால் கைய குடுங்க. அதே தான்! இந்த வாரம் என்னை வலை சரத்துக்கு ஆசிரியரா இருக்க சொல்லிருக்காங்க. பாவம், அவங்க போதாத நேரம்!
ஏற்கனவே பல ஜாம்பவான்கள் (கரடினு எல்லாம் ஒன்னும் திட்டலப்பா) முத்திரை பதித்த இடம் அது. என்னை போன்ற தேங்காய் மூடி பாகவதர்களுக்கும் ப்ரைம் டைமில் நாரத கான சபாவில் தெரியாத்தனமா நேரம் ஒதிக்கிட்டாங்களோ?னு எனக்கே ஒரு சந்தேகம் இருக்கு.

ஆகவே ஒரு வாரம் அங்க தான், தினம் ஒரு பதிவு போடலாம்னு எண்ணம். எல்லோரும் வந்து வழக்கம் போல அட்சதை போட வேணும்னு கேட்டுக்கறேன்.

10 comments:

rapp said...

அண்ணே,
இந்த வாரம் முழுக்க அப்ப பிசியா இருப்பீங்களா? நடுவுல இங்க ஒரு பதிவ போட்டீங்கன்னா நல்லா இருக்கும். சூப்பரா செய்வீங்கன்னு நெனைக்கிறேன்.

ambi said...

//நடுவுல இங்க ஒரு பதிவ போட்டீங்கன்னா நல்லா இருக்கும். //

@rapp, ஆஹா, இப்படியெல்லாம் ஒரு மிரட்டலா? கஷ்டம் தான், முயற்சிக்கறேன்.

gils said...

saram enrathum..rasam ninaivuku vanthal..sameebathil g3 kuda maanatuku poi gummirukalam...

itha miss paniteley vambi :D

ஷைலஜா said...

என்னவோ ஏதோன்னு அவ சரமா வந்தா வலைச்சரத்துக்கு இங்க அறிவிப்பா?:) அம்பி தொடுக்கும் சரமெல்லாம் மணக்கத்தானே போறது, கைவண்ணம் அங்கே காட்டுங்க அன்புத்தம்பி அம்பி!

Dreamzz said...

சரமுல சரம் சரமா பதிவு போட்டு கலக்குங்க!!!

ராமலக்ஷ்மி said...

'சரம் என்றவுடன்' எனக்கு எது நினைவுக்கு வரும்..?? ஹி..ஹி.. பச்சைக்கிளி அல்ல,'முத்துச்சரம்' மட்டும்தான். ஒரு ஆச்சரியம் என்னன்னா பல சரங்களைப் பற்றி நேற்றுப் பதிவிட்ட உங்களை இன்று முத்துச் 'சரம்' இழுத்து விட்டதே! நல்ல சகுனம்தான். வலைச் சரத்துக்கு வாத்தியாரா போறீங்க! சாதிக்க வாழ்த்துக்கள்!

மெளலி (மதுரையம்பதி) said...

// சாக்த சிரோண்மணி//

இதெல்லாம் கொஞ்சம் ஓவராத்தெரியல்லையா அம்பி... :)
எல்லாம் என்னப்பன் கணேசன் செய்யும் வேலை...வச்சுக்கறேன்.. :)

Anonymous said...

வாழ்த்துக்கள்..அழகான அறிமுகம்:)

பரிசல்காரன் said...

வாழ்த்துக்கள் அம்பி! சோதனையக் கூட இவ்ளோ ஜாலியா சொல்ற உங்க திறமை எனக்கு ரொம்ப பிடிச்சுது! வலைச்சரத்துல மீட் பண்றேன்!

திவாண்ணா said...

சரத்துல சரடு விட்டுட்டு இன்னுமா திரும்பலை?
:-))