Wednesday, June 11, 2008

ஜுனியர் அம்பி

கங்கிராஜுலேஷன்ஸ்! நீங்க அப்பாவாயிட்டீங்க!னு கையை கழுவி கொண்டே, மூக்கு கண்ணாடியும், பன் கொண்டையும் போட்ட பெண் டாக்டர் வந்து மேலே சொன்ன வசனத்தை கேட்டு, "டாக்ட்ட்டர்ர்ர்ர், தேங்க் யூ! தேங்க் யூ! வெரி மச்!"னு நவ ரசத்தையும் முகத்தில் காட்டி, எப்படி சொல்லனும்?னு ஏகப்பட்ட சிவாஜி படங்கள் பார்த்து மனப்பாடம் பண்ணியதெல்லாம் போன வாரம் வேஸ்டா போச்சு.

ஜூன் மாதம் ஐந்தாம் தேதி காலை ஏழு மணிக்கு தங்கமணி, லேசா வலிக்குது, எதுக்கும் டாக்டர்கிட்ட போய் செக்கப் பண்ணிக்கவா?னு செல்பேசிய போது, சுந்தர காண்டம் அடுத்த ரவுண்டு படிக்க ஆரம்பிச்சுட்டியா? அதான் குழந்தையும் கடலை தாண்டற மாதிரி உதச்சு இருப்பான். போய்ட்டு வந்து போன் பண்ணு!னு கர்ம சிகாமணியா ஆபிஸ் போனது பெரிய தப்புனு பகல் பத்து மணிக்குதான் உரைத்தது.

12:32 க்கு நீங்க அப்பாவாகிட்டீங்க!னு செல்பேசியில் பன் கொண்டை போட்ட டாக்டர் ஒன்னும் சொல்லலை. என் மாமனார் தான் திருவாய் மலர்ந்தார். உடனே புடுங்கிய ஆணியெல்லாம் ஒப்படைத்து விட்டு, தெரிந்த பேருக்கு எல்லாம் கைக்கு வந்தபடி மெயிலனுப்பி விட்டு, டிராபிக்கில் சிக்கி, சென்னை பஸ்ஸை பிடித்தால் மணி மூணு. பெட்ரோல் சிக்கனம், தேவை இக்கனம்! என்பதை டிரைவர் தவறாக புரிந்து கொண்டு மணிக்கு முப்பது கிலோமீட்டர் வேகத்தில் ஒட்டு ஒட்டுனு ஒட்டி இரவு பன்னிரெண்டு மணிக்கு கத்திபாராவில் விடபட்ட நான், சுத்தி சுத்தி பாத்தும் ஆட்டோ தவிர ஏதும் இல்லை.

லிட்டருக்கு அஞ்சு ரூபா ஏறிடுச்சு சார்!னு சொல்லி என்னிடம் ஆட்டோ விலையை சொல்லிய அவரிடம், சிலிண்டருக்கு ஐம்பது ரூபா ஏறிடுச்சுண்ணே!னு பாவமாய் கேட்ட என்னை மனதுக்குள் @#$# என திட்டி கொண்டே ஏற்றி கொண்டார். விசிட்டர் நேரம் முடிந்து போய் மறு நாள் தான் தவபுதல்வனை பாக்க முடிந்தது.

எனக்கொரு மகன் பிறந்தான்! அவன் என்னை போலவே இருப்பான்!னு கையை வீசி பாடி காட்டினால், வேணாம்! குழந்தையை கெடுக்காதீங்கோ! அதாவது உருப்படியா வளரட்டும்! என பதில் வந்தது.

ம்ஹும், அடுத்த பிரசவத்துக்காவது கரக்ட் டைத்துக்கு வந்துடரேன் என்ன? சமாளிக்க பார்த்தேன்.
என்னது இன்னோன்னா? இனிமே பூரி கட்டை இல்லை, கர்லா கட்டை தான் என சொல்லாமல் சொல்லியது அந்த பார்வை. பேசாம நானும் எனது பிளாக் பெயரை இனி அம்பி அப்பா!ணு மாத்தி விடலாமா என தீவிரமாக யோசித்து வருகிறேன்.

மின்னலென போஸ்டர் அடித்து ஒட்டிய தாய்மாமன் கைப்பு அங்கிளுக்கு ஜுனியர் அம்பி ரெம்ப தேங்க்ஸ் சொல்ல சொன்னான்.

பி.கு: பிளாக்கர் இலவசம் ஆஸ்பிடல் பில்லை செட்டில் செய்வார் என நம்புகிறேன். பிரசவத்துக்கு இலவசம்னு சொன்னாங்களே! அது இது தானே? :)

53 comments:

கைப்புள்ள said...

மறுபடியும் வாழ்த்துகள்.

//மின்னலென போஸ்டர் அடித்து ஒட்டிய தாய்மாமன் கைப்பு அங்கிளுக்கு ஜுனியர் அம்பி ரெம்ப தேங்க்ஸ் சொல்ல சொன்னான்.

பி.கு: பிளாக்கர் இலவசம் ஆஸ்பிடல் பில்லை செட்டில் செய்வார் என நம்புகிறேன். பிரசவத்துக்கு இலவசம்னு சொன்னாங்களே! அது இது தானே? :)//

இது ரெண்டையும் ரொம்ப ரசிச்சேன்.
:)

mgnithi said...

வாழ்த்துகள் அம்பி & திருமதி அம்பி.

உங்கள் குழந்தை எல்லா நலமும் பெற்று வாழ வாழ்த்துகள்.

rapp said...

சூப்பரண்ணே, அடுத்த குழந்தைக்கு இப்பவே பிட்டு போட்டுட்டீங்களா? எனக்கு நீங்க மெயில் அனுப்பினப்போ கிட்டதட்ட இதே மாதிரி ஒரு சிவாஜி சீனைத்தான் என் மனசு கற்பனை பண்ணுச்சி. உங்களுக்கும் அப்டிதானா.

பரிசல்காரன் said...

வாழ்த்துக்கள் அம்பி! பையனை சீக்கிரம் பிளாக் ஆரம்பிக்க சொல்லுங்க! (எப்படியும் மூணு, நாலு நாள்ல டிஸ்சார்ஜ் பண்ணிடுவாங்க.. அப்புறம் கூட ஆரம்பிக்கலாம்.. கும்மி அடிக்க நாங்க தயாரா இருப்போம்!))

mgnithi said...

//லிட்டருக்கு அஞ்சு ரூபா ஏறிடுச்சு சார்!னு சொல்லி என்னிடம் ஆட்டோ விலையை சொல்லிய அவரிடம், சிலிண்டருக்கு ஐம்பது ரூபா ஏறிடுச்சுண்ணே!னு //

இது தான் லொள்ளு. :-)

ACE !! said...

vazthukkal Mr. & Mrs. ambi.. :)

பரிசல்காரன் said...

யோசித்துப் பாருங்கள் அம்பி.. உங்களை எனக்கு தெரியாது.. என்னை உங்களுக்கு தெரியாது.. ஆனாலும் உங்களுக்கு வாரிசு பிறந்த செய்திக்கு எனக்குள்ளும் எதோ ஒரு மாதிரி சந்தோஷ உணர்வு வருகிறதே.. இதுதான் நட்பா? இதற்கு வழி செய்த இந்த பிளாக்கிற்கு நாம் என்ன கைம்மாறு செய்யப் போகிறோம்?

என்னால் முடிந்தது இன்றைக்கு எந்த மொக்கை பதிவும் போடாமல் இருப்பதுதான்!
(என் மனசாட்சி: ஏண்டா நாயே.. உனக்கு இந்த சீரியஸ் பின்னூட்ட வேலையெல்லாம் தேவையா?)

geethasmbsvm6 said...

//யோசித்துப் பாருங்கள் அம்பி.. உங்களை எனக்கு தெரியாது.. என்னை உங்களுக்கு தெரியாது.. ஆனாலும் உங்களுக்கு வாரிசு பிறந்த செய்திக்கு எனக்குள்ளும் எதோ ஒரு மாதிரி சந்தோஷ உணர்வு வருகிறதே.. இதுதான் நட்பா? இதற்கு வழி செய்த இந்த பிளாக்கிற்கு நாம் என்ன கைம்மாறு செய்யப் போகிறோம்? //
parisalkaran, ripeeeettaaaaaaaaaayyyyyyeeeeeeeeeeee

தமிழ் said...

வாழ்த்துக்கள் அம்பி

அபி அப்பா said...

வாழ்த்துக்கள் அம்பிஅப்பா, அம்பிஅம்மா!!!

இப்படிக்கு
அபிஅப்பா& அபிஅம்மா மற்றும் ரெட்டை வால் ரெங்குடுகள்!

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

அம்பி,அம்மணி அம்பி,குட்டி அம்பி..அ(எ)ல்லா அம்பிக்கும் வாழ்த்துப்பா...

வல்லிசிம்ஹன் said...

வாழ்த்துகள் ஜூனியரோட அப்பா. பையன் சொன்னானாமே,ஏம்பா இவ்வளவு லேட்டுனு:)
உங்கள் குடும்பம் சீரும் சிறப்புமாக இருக்க வாழ்த்துகள்.

Sumathi. said...

ஹாய் சீனியர் அம்பி,

மறுபடியும் வாழ்த்துகள்.


//யோசித்துப் பாருங்கள் அம்பி.. உங்களை எனக்கு தெரியாது.. என்னை உங்களுக்கு தெரியாது.. ஆனாலும் உங்களுக்கு வாரிசு பிறந்த செய்திக்கு எனக்குள்ளும் எதோ ஒரு மாதிரி சந்தோஷ உணர்வு வருகிறதே.. இதுதான் நட்பா? இதற்கு வழி செய்த இந்த பிளாக்கிற்கு நாம் என்ன கைம்மாறு செய்யப் போகிறோம்? //

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

MyFriend said...

அம்பி அப்பா அம்பி அப்பா அம்பி அப்பா...

சீக்கிரம் உங்க்க ப்ளாக் பேரை மாத்துங்கோ. :-))))

வாழ்த்துக்கள் சீஈனிய & ஜூனியர் அம்பி & அண்ணி. :-)))

ஆயில்யன் said...

வாழ்த்துக்கள் அம்பி

இப்படிக்கு,
அபிஅப்பா& அபிஅம்மா மற்றும் ரெட்டை வால் ரெங்குடுகளின் ஊருக்காரபுள்ள!

ஆயில்யன்! :))))

இராம்/Raam said...

//மின்னலென போஸ்டர் அடித்து ஒட்டிய தாய்மாமன் கைப்பு அங்கிளுக்கு ஜுனியர் அம்பி ரெம்ப தேங்க்ஸ் சொல்ல சொன்னான்.

பி.கு: பிளாக்கர் இலவசம் ஆஸ்பிடல் பில்லை செட்டில் செய்வார் என நம்புகிறேன். பிரசவத்துக்கு இலவசம்னு சொன்னாங்களே! அது இது தானே? :)//

இது ரெண்டையும் ரொம்ப ரசிச்சேன்.
:)//

நானும்... நானும்... :)

Prasanna Parameswaran said...

vaazthukkal ambi, UNGALODA kuzhandaiyum ungala maadhiriye blog ezhudhavaanaga! :)

சதங்கா (Sathanga) said...

வாழ்த்துக்கள் அம்பி !!!

அம்பி அப்பானு எப்படி ப்லாக் பேரு மாத்துவீங்க. 'ஜூனியர் அம்பி அப்பா' தானே சரி :)))

PPattian said...

வாழ்த்துகள்..

//அதான் குழந்தையும் கடலை தாண்டற மாதிரி உதச்சு இருப்பான்//

முன்னாலேயே தெரியுமா??

மெளலி (மதுரையம்பதி) said...

வாழ்த்துகள் அம்பி & திருமதி அம்பி.

ஆமாம், அதென்ன கைல வந்தவங்களுக்கு மெயில் அனுப்புனீங்களா?.. அப்போ போன்ல "எங்கள் தங்கம்" கணேசன் சொன்னது?... :))

Adiya said...

எங்கள் மனமார்ந்த வாத்துக்கள்
Mr & Mrs அம்பி
Plant our sweet hugs & kisses to Jr. Ambi too.

சின்னப் பையன் said...

வாழ்த்துகள்...

கிரி said...

வாழ்த்துக்கள் அம்பிக்கும் ஜூனியர் அம்பிக்கும் :-)

Dreamzz said...

Wow! Congrats!!!!! :)

மங்களூர் சிவா said...

வாழ்த்துக்கள் அம்பி

/
பி.கு: பிளாக்கர் இலவசம் ஆஸ்பிடல் பில்லை செட்டில் செய்வார் என நம்புகிறேன். பிரசவத்துக்கு இலவசம்னு சொன்னாங்களே! அது இது தானே?
/

இது ஜூப்பரு


ப்ளாக் பேரு "அம்பி அப்பா " அட இதுவும் நல்லாத்தான் இருக்கு.

இலவசக்கொத்தனார் said...

அம்பி,

உனக்கு, உன் அப்பா அம்மாவிற்கு என் வாழ்த்துகள்.

உங்க அப்பா எல்லா இடத்திலேயும் போய் வழிவதை நீ இந்நேரம் அறிந்திருப்பாய்.

தயவு செய்து ரெண்டு உதை குடுத்து இனிமேலாவது அடங்கி உட்கார வழி செய்.

பி.கு. : அந்த கொண்டை போட்ட டாக்டரம்மா பக்கத்தில் ஒரு ட்ரே நிறையா மருந்து வைத்துக் கொண்டு நின்று கொண்டிருந்ததுதான் நான். அங்க எல்லா வித உதவிகளையும் செய்ய். பிரசவத்திற்கு இலவசம். பில் கட்டறது எல்லாம் அம்பியப்பா.

பினாத்தல் சுரேஷ் said...

வாழ்த்துக்கள் அம்பி..

பையனுக்கு எப்ப ப்ளாக் திறந்து கொடுக்கப்போறீங்க? இன்னும் 1 வீக்லே எதிர்பார்க்கலாமா?

ஷைலஜா said...

கங்கிராட்ஸ்! அன்னிக்கே உங்க(என்) தங்க தம்பிகன்ஸ் எனக்கு போன்ல சொல்லியாச்சு..நானும் நீங்க ஸ்வீட்டோட நேர்லவந்து சொல்வீங்கன்னு எதிர்பார்க்கிறேன் அம்பி...பதிலுக்கு கேசரி நிச்சயம்!

M.Rishan Shareef said...

வாழ்த்துக்கள் அம்பி... :)
அப்பாவாகிட்டீங்களா?
குட்டி அம்பிக்கு என்ன பேரு?
வலைப்பதிவர்களுக்கு எப்ப,என்ன ட்ரீட் தரப்போறீங்க? :P

ராமலக்ஷ்மி said...

//கர்ம சிகாமணியா ஆபிஸ் போனது பெரிய தப்புனு பகல் பத்து மணிக்குதான் உரைத்தது.//

ஜூனியர் அம்பி, கர்ம சிகாமணியான உன் அப்பா பகல் பத்து மணிக்கு அப்படி உரைத்த பின்னும் என் 'ஜானி ஜானி நோ பப்பா'வுக்கு சரியாக பகல் 11.27க்கு அசட்டுத்தனமாய் ஒரு கேள்வி கேட்டு பின்னூட்டம் போட்டிருந்தார்.(நீ பிறந்த செய்தி அறிந்ததும்தான் அது அவசரத்தில் கேட்டதெனப் புரிந்து நான் நெகிழ்ந்தது தனிக் கதை.) பார்த்தாய் நீ,'அம்பி அம்பி கம் பப்பா' எனப் பிறந்து விட்டாய். எல்லோரையும் சிரிக்கச் சிரிக்க வைத்துச் சிறையிலிடும் உன் பப்பா, உன் வாழ்விலே என்றும் சிரிப்பு நிலைக்குமாறு பார்த்துக் கொள்ள மறுபடி என் வாழ்த்துக்கள்!

கோபிநாத் said...

வாழ்த்துக்கள் அம்பிண்ணே ;))

சீமாச்சு.. said...

அம்பி, வாழ்த்துக்கள்..
உங்கள் குழந்தை எல்லா நலமும் பெற்று வாழ இறைவனை வேண்டுகிறேன்..

அம்பி என்ற் பெயரில் எழுதும் படியால்.. படிப்பதற்கு ஒரு சுவாரசியமான பதிவு http://www.bosey.co.in/2005/05/ambi-mama-is-leading-brahmin-relative.html

அன்புடன்,
சீமாச்சு..

தி. ரா. ச.(T.R.C.) said...

@ அம்பி வாழ்த்துக்கள். பையைன் கையிலுள்ள விரலைத் திறந்தால் அதில் கேசரி இருந்ததாமே? என்ன ஆச்சர்யம்!

Anonymous said...

congratulations and celebrations!!!!!!!!!puthu appa ammavirku and my best wishes to chinna krishnanukku!!!enna per vaikaporeenga?
nivi.

மெட்ராஸ்காரன் (Madrasi) said...

Ambi Anna,

Congrats!My best wishes to Junior Ambi.Intha situationlium ungalala mattum than ippidi oru detailed blog poda mudiyum (brimming with humor). Now that you have become a proud father can we start addressing you as Ambi Uncle?

Anonymous said...

vambi maama :) vazhthukkal :)) pullayaandanuku name select panitela..enna per vaikaratha plan?

~gils

Anonymous said...

vaazthukkal...
ambi pappa settaiyai ungal nakkal stlye il ethirparkiren..

Arunkumar said...

Congratulations Ambi and Mrs.Ambi

Ippo dhaan unalukku naanum mu.ka-vum call panni marriage-ku wish panna maathiri irukku.. time fasta pogudha illa neenga fasta ? ;-)

Junior Ambi enna panraaru? ella nurse kittayum kannalaye kadalai podraara ? ;)

photo eduthu anuppunga ambi maama :) hmm nurse-a illa , Juniora :)

Jokes apart, romba happyaana news... Congrats to you both !!!

yaarume idha sollirka maatanga... sollala... aana naan solren...

Belated Happy B'day to Jr.Ambi :)

how is it...?

துளசி கோபால் said...

அம்பி,
ரெட்டை வாழ்த்து(க்)கள்.

பெண்களுக்கு ஒரு 'சில விசயங்களில்' ஞாபக மறதி ஜாஸ்தி:-)

Anonymous said...

Congrats Sir.

Ramya

Gopalan Ramasubbu said...

Congratulation Guru ve

ambi said...

கைப்பு, எம்ஜினிதி, ராப் வாழ்த்திய அனைவருக்கும் நன்றி :)


@ பரிசல்காரன், சரியா சொன்னீங்க. கூடிய வரை அவியல் கிண்டாம பாத்துக்குவோம். என்ன சரி தானே? :p

ஏஸ், கீதா மேடம், திகழ்மிளிர், அபி அப்பா, அறிவன், வல்லி சிம்ஹன் மேடம், சுமதி, மை பிரண்ட் அத்தை, ஆயில்யன், இராம், இந்தியன் ஏஞ்சல், சுட்டி காட்டிய சதங்கா எல்லோருக்கும் ரொம்ப நன்னி. :))

@புபட்டியன், இல்ல, தெரியாது, சும்மா ஒரு பேச்சுக்கு எழுதினேன். :)

மதுரை அண்ணா, ஆதியா, ச்சின்ன பையன், கிரி, ட்ரீம்ஸ், மங்களூர் சிவா எல்லோருக்கும் நன்னி. :))

ambi said...

ஜுனியரை தூண்டி விடும் கொத்ஸ்,

என்னது, பன் கொண்டை டாக்டர் பக்கத்துல இருந்தது நீங்களா?

*ahem, அந்த மல்லு நர்ஸுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்? :p

//பையனுக்கு எப்ப ப்ளாக் திறந்து கொடுக்கப்போறீங்க? இன்னும் 1 வீக்லே எதிர்பார்க்கலாமா?
//

@சுரேஷ், லாரல் வந்தா பின்னாடியே ஹார்டியும் வரீங்களே அது எப்படிபா? :))


நான் எழுதறதுக்கே ஆயிரம் பெர்மிஷன் வாங்க வேண்டி இருக்கு. :)

//நேர்லவந்து சொல்வீங்கன்னு எதிர்பார்க்கிறேன் அம்பி...பதிலுக்கு கேசரி நிச்சயம்!
//

@shylaja, சொல்லீட்டீங்க இல்ல, இதோ வந்துட்டே இருக்கேன். :p

//குட்டி அம்பிக்கு என்ன பேரு?
வலைப்பதிவர்களுக்கு எப்ப,என்ன ட்ரீட் தரப்போறீங்க?//

@rishaan, இன்னும் முடிவாகலை. சொல்றேன். என்ன வேணும்? :p

ambi said...

//'அம்பி அம்பி கம் பப்பா' எனப் பிறந்து விட்டாய். எல்லோரையும் சிரிக்கச் சிரிக்க வைத்துச் சிறையிலிடும் உன் பப்பா//

இன்னும் கவிதை எபக்ட்டுல இருந்து வெளிவரவே இல்லையா? நன்னி.

அத்தை சீர் செய்ய வந்து கொண்டே இருக்கிறார்கள் ராம லக்ஷ்மி என்பதையும் ஜுனியர் அறிவான். :p

நன்னி கோபி,

@சீமாச்சு, சுட்டிக்கு நன்னி, நான் ஏற்கனவே படித்து இருக்கிறேன்.

@தி.ரா.ச. இதோ கிண்டிக்கு வந்துண்டே இருக்கோம். ரெடியா இருங்க. :p

நன்னி நிவி, இன்னும் முடிவாகலை. ஞாயிறன்று தெரியும்.

@மெட்ராஸ் காரர், என்னது அங்கிளா? வேணாம் அழுதுடுவேன்

@gils, பெயர் முடிவாகலை, நன்னி கில்ஸ்,

ஆமா அருண், காலம் ரொம்ப வேகமா ஓடுது. போட்டோ தானே அனுப்பறேன், நர்ஸ் போட்டோ இல்ல, ஜுனியர் போட்டோ தான். சூப்பர். :))

ambi said...

//பெண்களுக்கு ஒரு 'சில விசயங்களில்' ஞாபக மறதி ஜாஸ்தி//

@tulasi teacher, அப்படியா? அந்த நம்பிக்கையில் தான்....சரி, சரி.. :))

Thanks Ramya and Gopalan ramsubbu :))

பரத் said...

பரத்வாழ்த்துக்கள் Mr. & Mrs. ambi

Ramya Ramani said...

வாழ்த்துகள் :)))))!

ஆடுமாடு said...

(பிரசுரிக்க அல்ல)
அம்பிji மெயில் பண்ணுங்க.

egjira@gmail.com.

Deekshanya said...

Dubaila irunthu athai deekshanyavin valthukkal kutty ambi-ku!

புதுகை.அப்துல்லா said...

வாழ்த்துக்கள் அம்பி! அடுத்தமுறையாவது சீக்கிரம் செல்லவும் வாழ்த்துக்கள்!

நானானி said...

அப்பாவான அசட்டு அம்மாஞ்சிக்கு
என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!உங்கள் பதிவுக்கு இப்பொதான் வாறேன்.
பரிசல்காரன் சொன்னதே நானும் வழிமொழிகிறேன். //உங்களுக்கு என்னைத்தெரியாது, எனக்கு உங்களைத்தெரியாது.....//சரியான வரிகள்!!!
உங்களுக்கு லேபர் ரூமுக்கு வெளியே
முன்னும் பின்னும் நடக்கும் வாய்ப்பு
கிடைக்கவில்லை. அடுத்தமுறை...சீக்கிரமே கிடைக்கவும் வாழ்த்துகிறேன். புதுப் பெற்றோர்க்கு என் வாழ்த்துக்களும் குட்டி அம்பிக்கு என் ஆசிகளும். ஆமா...குட்டிக்கு 'என்ன பேரு வைக்கலாம் எப்படி அழைக்கலாம்'
அதையும் சொல்லுங்கள்.

Swamy Srinivasan aka Kittu Mama said...

Congratsss Ambi !
enna peru baby kku ?

inime thangamani, kutti ambi rendu perkkum sethu samaikanuma neenga :)

Anonymous said...

vaazhthukkal vaathyaare..... romba naalaikku apram varen :-)

ammani-kkum vaazhthu sollidunga :-)