Friday, June 13, 2008

அம்பியின் பார்வையில் தசாவதாரம்

ரொம்ப நாளா, இல்ல இல்ல ரொம்ப மாசமா பாக்கனும்! பாக்கனும்னு தணியாத ஆவலுடன் இருந்தது வீண் போகலை. ஏற்கனவே மனதில் பலத்த எதிர்பார்ப்பு. அதுலயும் அடிக்கடி நம்ம பாசுர புயலின் மாதவி பந்தலில் ஒதுங்கி, சுப்ரபாதம் எல்லாம் கேட்டு, கொதிக்கிற கேசரியில் நெய்யை விட்ட மாதிரி ஆசை பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்து விட்டது.

சரி, வளவளனு பேசாம படத்துக்கு போகலாம். கதை என்னவோ குழந்தையிலிருந்தே கேட்டு வளர்ந்த கதை தான். கெட்டது செய்தா, உம்மாச்சி ஏதாவது ஒரு ரூபத்தில் வந்து நம் கண்ணை குத்துவார். ஆனா அதை படமாக்கிய விதம், அதான் திரைகதைனு சொல்லிக்கறாங்களே அங்க தான் நிக்கறார் டைரக்டர்.

மாயாஜால கதைகள், காட்சிகள்னா எனக்கு உசுரு. மாயா பஜார் படத்துல ரங்காராவ் வாயில லபக்குனு லட்டு போறதையே கண் கொட்டாம பாத்தவனாக்கும். விட்லாச்சாரியார்னு ஒருத்தர் (நம்ம கீதா பாட்டிக்கு சம காலத்தவர் தான்) இதுல கிங்க்னு கேள்வி. தந்திர காட்சிகள்னா கூப்டுடா விட்டலை!னு சொன்ன காலம் போய் நம்ம ஆட்களே சும்மா பின்னி பெடலெடுத்து இருக்காங்க. அதுலயும், அந்த கடலுக்கடியில் தண்ணிக்கு உள்ளே விஷ்ணு வர ஷாட் இருக்கே! அடடா! ரொம்ப ப்ரமாதம்.

படத்தின் கதை யுகங்கள் கடந்து சென்றாலும் திரைகதையில ஏகப்பட்ட நெளிவு சுளிவுகள் இருந்தாலும் ஒன்னு கூட சிக்கல் இல்லாம இருந்து இருக்கு. குறிப்பிட்டு சொல்லனும்னா, ஒரே காட்சியில் இரண்டு அவதாரங்கள் சந்தித்து கொள்கின்றன. ஆனாலும் நாம எப்படி ஜாங்கிரி வேற, ஜிலேபி வேறனு தெளிவா இருக்கோமோ, அதே மாதிரி, இவர் வேற, அவர் வேற!னு எந்த வித குழப்பங்களும் ஏற்படவில்லை.

கதையில் பல திடிக்கிடும் திருப்பங்கள் சுவையா இருக்கு. உயிருக்கே மிரட்டல் வருகிற நிலையில் கூட அவர் வாயிலிருந்து "ஓம் நமோ நாராயணாய!" என ஆரம்பிக்கற போது நம்மை சீட் நுனிக்கே வர செய்கிறது. படத்தில் ஆக்ரோஷமான சண்டை காட்சிகள் மெய் சிலிர்க்க வைத்து, கன்னத்தில் போட்டு கொள்ள வைக்கின்றன. அதிலும் தூணை பிளந்து கொண்டு கர்ஜித்து வருகிற காட்சி இருக்கே! கிளாசிக்.

கேமிரா எடுத்தவர் கைக்கு தங்கத் தோடா செஞ்சு போடலாம், தப்பேயில்லை. மேக்கப்மேன் சில இடங்களில் சொதப்பி விட்டாரோனு தோணுது. ஆனாலும் இந்த ராமருக்கும், கிருஷ்ணருக்கும் இப்படி அனியாயத்துக்கு பெயிண்டை வேஸ்ட் பண்ணி இருக்க வேண்டாம். அந்த செலவில் பாமாவுக்கும், சீதைக்கும் கொஞ்சம் டச்சப் செய்து இருக்கலாம். ஹிரண்யகசிபுவுக்கு வேறு நல்ல விக் குடுத்து இருக்கலாம். பழைய விக் போல, பேன் வேற இருந்து இருக்கும் போல. தலையை சொறிய முடியாத எரிச்சலோடு வசனங்களை பேசுகிறார்.

பாட்டெல்லாம் ரொம்பவே இனிமையா இருக்கு தான்.அதுக்காக உச்சா போறத்துக்கு கூட இடைவேளை விடாம, இந்த பிரகலாதன் ரொம்பவே பாடி இருக்க வேணாம். எழுந்து போனால் கதையின் கன்டினியுட்டி போயிடுமேனு அடக்கிண்டே இருக்க வேண்டியதா போச்சு.

சரி, நீங்க பல்ல கடிக்கறது எனக்கே கேக்கறது, இதோட நிறுத்திக்கறேன். பின்ன என்னங்க, நான் இல்லாம நீங்க மட்டும் தசாவதாரம் ரீலீஸ் அன்னிக்கு என்னைய விட்டுட்டு பாத்தா, ஜுனியர் போன உச்சாவை/கக்காவை உங்க வெள்ளை சட்டையால் தொடைப்பேன்னு மிரட்டல் விடுத்து இருக்காங்க தங்கமணி. அந்த கடுப்புல எழுதின பதிவு இது.

50 comments:

Anonymous said...

///அடக்கிண்டே இருக்க ///

அடக்கிண்டே எப்படி இருந்தேல்??? ரொம்ப விசித்திரமால்லா இருக்கு...

இலவசக்கொத்தனார் said...

அந்த மிரட்டலுக்கு எல்லாம் பயப்படாதே. அது எப்படியும் நடக்க போகும் ஒன்று என்ற ஞானம் இருந்தால் இந்த பயம் வராது!! :)

ராமலக்ஷ்மி said...

அப்போ அம்பியின் பார்வையில் படத்துக்கு எத்தனை பொற்காசு(மார்க்)?

மங்களூர் சிவா said...

/
கேமிரா எடுத்தவர் கைக்கு தங்கத் தோடா செஞ்சு போடலாம், தப்பேயில்லை.
/

கைக்கு தோடா???
ஏதும் உள்குத்தா ???

எப்பிடி இருந்தாலும் 7 மணி ஷோ டிக்கட் வாங்கியாச்சு. பாத்துதான் ஆகணும்.

mgnithi said...

//அந்த மிரட்டலுக்கு எல்லாம் பயப்படாதே. //

repeatttu...

கண்மணி said...

தங்கமணி மிரட்டல் ஞாபகம் வந்ததும் விமர்சனம் பாதியில் நின்னுப் போச்சே மொத்த அவதாரமும் சொல்லலையே

ச்சின்னப் பையன் said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..

rapp said...

என்னண்ணே, இன்னைக்கு தான் ஊருக்கு போறேன்னீங்களே, ஓஹோ இன்னைக்கு எல்லாரும் இதப்பத்தித்தான் கும்மி அடிப்பாங்கன்னு நேத்தைக்கே ரெடி பண்ணிட்டீங்கள?//ஆனாலும் இந்த ராமருக்கும், கிருஷ்ணருக்கும் இப்படி அனியாயத்துக்கு பெயிண்டை வேஸ்ட் பண்ணி இருக்க வேண்டாம். அந்த செலவில் பாமாவுக்கும், சீதைக்கும் கொஞ்சம் டச்சப் செய்து இருக்கலாம். ஹிரண்யகசிபுவுக்கு வேறு நல்ல விக் குடுத்து இருக்கலாம். பழைய விக் போல, பேன் வேற இருந்து இருக்கும் போல. தலையை சொறிய முடியாத எரிச்சலோடு வசனங்களை பேசுகிறார்//
சூப்பர்.

வல்லிசிம்ஹன் said...

அம்பி, அதீதக் குசும்பு. உண்மையா நம்பிட்டேன்.
இன்னோரு பதிவு தசாவதாரத்துக்குன்னு.

அதானே பார்த்தேன் நாங்க மாட்டுப் பாப்பாவைப் பார்த்துப்போம், நீங்க மாட்டு சினிமாவுக்குப் போவீங்களோ:)

நரசிம்ஹம்னு சொல்லும்போது கூட புரியலை. அவ்வளவு நம்பிக்கை அம்பி மேல:)

சினிமா நிருபர் said...

தசாவதாரம் படத்தில் கமல்ஹாசனின் 10 கேரக்டர்கள் பற்றிய விரிவான அலசல் கட்டுரை http://nirubar.blogspot.com வலைப்பூவில் வெளியிட்டுள்ளோம். அதையும் வந்து ஒரு எட்டு படிச்சுட்டு போங்களேன் வாசகர்களே...!

தமிழன்... said...

அட இன்னொரு தசாவதாரம் பதிவு....

தமிழன்... said...

மங்களூர் சிவா சொன்னது...

///கேமிரா எடுத்தவர் கைக்கு தங்கத் தோடா செஞ்சு போடலாம், தப்பேயில்லை.
///

கைக்கு தோடா???
ஏதும் உள்குத்தா ???

எப்பிடி இருந்தாலும் 7 மணி ஷோ டிக்கட் வாங்கியாச்சு. பாத்துதான் ஆகணும்///

சிவாண்ணே பதிவு படிச்சு பாத்திருக்காரு...

Dreamzz said...

nalaiku parka poren. parthutu vandhu padikiren :D

Ramya Ramani said...

adapavame :(( dont worry junior ambikku grand opening kamal movie oda start pannidungo ambi anna :))

மங்களூர் சிவா said...

படம் முதல் 15 நிமிடங்கள் சூப்பர்.

மங்களூர் சிவா said...

பெருமாள் பெருமாள்னு அக்ரஹாரத்து அசின் மாமி கூடவே வந்திருவான்னா சயிண்டிஸ்ட் கோவிந்தராஜன்கூடவும் அந்த அமெரிக்க வில்லன் பேரு என்ன ப்ளட்சரோ என்னமோ அவன்கூட சண்டை போட்டு நானே கடத்திகிட்டு வந்திருக்கலாம்.

:)))

மங்களூர் சிவா said...

பெருமாள் பெருமாள்-னு ராமாயணம் பாடறப்பல்லாம் மகராசி மல்லிகா செராவத் இவளை (அசினை) போட்டுத்தள்ளாம போய் சேந்துட்டாளேன்னு எரிச்சலோ எரிச்சல்
:((

மங்களூர் சிவா said...

சந்தான பாரதியோட நல்ல வாய்ப்பை !?!? (எல்லாம் படம் பாத்து தெரிஞ்சிக்கங்கப்பா) ஒரு ட்ராமா கும்பல் வந்து கெடுத்து சின்னாபின்னமாக்கீடுது.

நம்ம எல்லாருக்கும் ஒரே சோகமா போயிடுது

:)))))))))

மங்களூர் சிவா said...

நல்லா க்ராபிக்ஸ் பண்ணி இருக்காங்க, கஷ்டப்பட்டிருக்காங்க.

டெக்னாலஜி இருப்பதாலேயே குறைகளை எல்லாம் விட்டு படம் ஆஹா ஓஹோ சூப்பர் என சொல்லிவிடமுடியாது
:((

மண்வெட்டியான் said...

தலை,

உண்மையிலேயே நீங்க தசாவதாரம் பார்த்திட்டு தான் விமர்ச்சனம் எழுதீநீங்களா ?

தசாவதாரம் பாக்க போன என்ன செருப்பால அடிக்கணும்

தலைவா, நம்மளும் ஒரு விமர்ச்சனம் எழுதி இருக்கோம்ல ...

நேரம் இருந்தா வந்தா பாருங்க ..

http://manvettiyan.blogspot.com/2008/06/2.html

gils said...

rotfl....vambi over kusumbaia umakku :))

திவா said...

:-)))))))))))))))

கீதா சாம்பசிவம் said...

அம்பி, மாயாபஜார் பார்த்தீங்களா??? அப்போ நீங்க தாத்தாவுக்கும் தாத்தானு சொல்லுங்க, விட்டலாச்சார்யா காலமா நானு???க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இருங்க, பையன் என் கையிலே, ஒரு கை இல்லை இரண்டு கையும் பார்க்கிறேன் அவனைத் துணைக்கு வச்சுண்டு!!! :P

SanJai said...

//சரி, நீங்க பல்ல கடிக்கறது எனக்கே கேக்கறது, இதோட நிறுத்திக்கறேன்.//
நல்லவேளை அம்பி அண்ணா.. நிறுத்திட்டிங்க.. இல்லைனா எத்தனை ஆட்டோ வந்திருக்கும்னு எனக்கே தெரியாது.. :D

//
இலவசக்கொத்தனார் said...

அந்த மிரட்டலுக்கு எல்லாம் பயப்படாதே. அது எப்படியும் நடக்க போகும் ஒன்று என்ற ஞானம் இருந்தால் இந்த பயம் வராது!! :)//
கன்னாபின்னாவென்று ரிப்பீட்டேய்ய்ய்ய்.. :))

பரிசல்காரன் said...

நாங்கதான் கிடச்சமா?

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//உம்மாச்சி ஏதாவது ஒரு ரூபத்தில் வந்து நம் கண்ணை குத்துவார்//

ஜாக்கெட் போட்ட அசின் ரூபத்திலா?
ஜாக்கெட் போடாத அசின் ரூபத்திலா??
:-))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//உங்க வெள்ளை சட்டையால் தொடைப்பேன்னு மிரட்டல் விடுத்து இருக்காங்க தங்கமணி//

கைக்கு தங்கத் தோடா செஞ்சு போடலாம், தப்பேயில்லை
:-)))))

முகுந்தன் said...

கிளம்பிட்டாங்கய்யா......
கிளம்பிட்டாங்கய்யா......

Vijay said...

தமிழ் வலைப் பதிவுலக

சான்றோர்களுக்கும்,
பெரியோர்களுக்கும்,
அறிஞர்களுக்கும்,
சகோதரர்களுக்கும்,
சகோதரிகளுக்கும்,
நண்பர்களுக்கும்,
தோழர்களுக்கு,
தோழியர்களுக்கும்

என் பணிவு கல்ந்த வணக்கங்கள்.

புகைப்பேழையில் படம் பிடித்த புகைப்டங்களை பதிந்து வந்த என்னை செய்தியுடன் பதிவு செய்ய அறிவுறுத்திய

டோண்டு ராகவன் ஐயா அவர்களுக்கு என் முதல் நன்றி.

எனது அன்பு அழைப்பை ஏற்று
வருகை புரிந்து
வாழ்த்துரை வழங்கியும்,
மேம்படுத்த ஆலோசனகள் தந்தும்
பேருதவி புரிந்திட்ட

அன்புகளுமிய அன்பர்கள்

திருநெல்வேலி கார்த்திக்
அதிஷா
VSK
dondu(#11168674346665545885)
லக்கிலுக்
ajay
துளசி கோபால்
உண்மைத் தமிழன்(15270788164745573644
VIKNESHWARAN
சின்ன அம்மிணி
VIKNESHWARAN
ஜமாலன்
உறையூர்காரன்
மதுரையம்பதி
கிரி
ambi
ஜீவி
வடுவூர் குமார்
செந்தில்
SP.VR. SUBBIAH
தமிழரசன்
cheena (சீனா)
சிறில் அலெக்ஸ்
வால்பையன்
வெட்டிப்பயல்
பினாத்தல் சுரேஷ்
இலவசக்கொத்தனார்
அகரம்.அமுதா
குசும்பன்
கயல்விழி முத்துலெட்சுமி
சென்ஷி
தருமி
தமிழன்
செந்தில்
மனதின் ஓசை
கானா பிரபா
Kailashi
மாதங்கி
முகவை மைந்தன்

அனைவருக்கும்
நெஞ்சுநிறை
நன்றிகள்
கோடான கோடி

என்றும் உங்கள்
விஜய்
கோவை.

http://pugaippezhai.blogspot.com

மு.கார்த்திகேயன் said...

அம்பி, எப்படி இருக்கீங்க? ரொம்ப நாள் கழிச்சு இந்த பக்கம் வருகிறேன்.. வீட்டில் நெட் வந்துவிட்டது.. இனி அடிக்கடி சந்திக்கலாம்

பரிசல்காரன் said...

ஐயையோ.. இந்த விஜய் இங்கயும் வந்திருக்காப்ல.. நான் கிளம்பறேன்..

அது சரி.. என்னாச்சு அடுத்த மொக்கை?

கயல்விழி முத்துலெட்சுமி said...

\\பரிசல்காரன் said...
ஐயையோ.. இந்த விஜய் இங்கயும் வந்திருக்காப்ல.. நான் கிளம்பறேன்..

அது சரி.. என்னாச்சு அடுத்த மொக்கை?//

:)))) ayyoo ayyoo

அம்பி நான் கூட கொஞ்ச நேரம் தசா புதுசோன்னு நினைச்சேன்.. இந்த ப்டம் எங்க வீட்டுல சிடியாவே எப்போவோ இருக்கே..

ambi said...

@கொத்ஸ், நீங்க சொன்னா சரி தான் சீனியர்! :)

@ ராம லட்சுமி, மார்க் போடற அளவுக்கு நான் இன்னும் வளரலை. :)

@ம-சிவா, பதிவ தெளிவா படிச்சுட்டு பின்னூட்டம் போடறீங்க போல. :p

@mgnithi, :)

//விமர்சனம் பாதியில் நின்னுப் போச்சே மொத்த அவதாரமும் சொல்லலையே//

ஆமா கண்மனி டீச்சர், கரக்ட்டா சொல்லீடீங்க. :)

@chinna payan, :)))

@rapp, இல்ல ராப், சுட சுட ரெடி பண்ணீயது.

//நரசிம்ஹம்னு சொல்லும்போது கூட புரியலை.//

@வல்லி மேடம், உங்க வீட்டு சிங்கத்தை நினைச்சு மெய் மறந்து போயிருப்பீங்க. :)))

ambi said...

//அதையும் வந்து ஒரு எட்டு படிச்சுட்டு போங்களேன் வாசகர்களே//

@cinima nirubar, படிச்சாச்சு. :)

//சிவாண்ணே பதிவு படிச்சு பாத்திருக்காரு...//

ஆமா தமிழன். அதான் எனக்கும் ஆச்சரியமா இருக்கு. :p


//nalaiku parka poren. parthutu vandhu padikiren //

@dreamz, :)

//dont worry junior ambikku grand opening kamal movie oda start pannidungo ambi anna //

@ramya-ramani, சரி தான். ரெண்டு மணி நேரம் கூட சும்மா இருக்க மாட்டேங்கறான் உன் மருமான். :))

//தசாவதாரம் பாக்க போன என்ன செருப்பால அடிக்கணும் //

@ம-வெட்டியான், அவசரபடாதீங்க, நிறைய பேர் ரெடியா இருக்காங்க. :))

//vambi over kusumbaia umakku //

@gils, aama amma :)

@thiva anna, :))))

//ஒரு கை இல்லை இரண்டு கையும் பார்க்கிறேன் அவனைத் துணைக்கு வச்சுண்டு//

@geetha paati, இது வேறையா? :p

//இல்லைனா எத்தனை ஆட்டோ வந்திருக்கும்னு எனக்கே தெரியாது//

அமைதி சஞ்சய் ராமசாமி, அமைதி. :))

//நாங்கதான் கிடச்சமா?

//

@parial, எனக்கு உங்கள விட்டா யாரு இருக்கா? :p

//ஜாக்கெட் போட்ட அசின் ரூபத்திலா?
ஜாக்கெட் போடாத அசின் ரூபத்திலா??
//

@KRS, இரண்டுமே இல்ல, மல்லிகா ரூபத்துல. :p

@mugunthan, :))

//அனைவருக்கும்
நெஞ்சுநிறை
நன்றிகள்
கோடான கோடி
//

@vijay, எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும். நீங்க ஏதேனும் கட்சிக்கு வட்ட செயலாளரா? இல்ல சூரியன் எப்.எம்ல பிறந்த நாள் வாழ்த்து சொல்பவரா? :)))

//வீட்டில் நெட் வந்துவிட்டது.. இனி அடிக்கடி சந்திக்கலாம்
//

@karthik, நானும் அப்படி தான் நினைச்சேன், அப்ப வீட்டு வேலைகளை யாரு செய்யறதாம்?னு கேள்வி வரும் பாரு கார்த்தி. :))

//ஐயையோ.. இந்த விஜய் இங்கயும் வந்திருக்காப்ல.. நான் கிளம்பறேன்..
//

@parisal, :-)))))

//அது சரி.. என்னாச்சு அடுத்த மொக்கை?
//

In progress. :p

//இந்த ப்டம் எங்க வீட்டுல சிடியாவே எப்போவோ இருக்கே..
//

முத்தக்கா, ஹிஹி, நாங்க இப்ப தான் பர்த்தோம்.

rksistu said...

hi ..
Do you still use free service like blogspot.com or wordpress.com but
they have less control and less features.
shift to next generation blog service which provide free websites for
your blog at free of cost.
get fully controllable (yourname.com)and more features like
forums,wiki,CMS and email services for your blog and many more free
services.
hundreds reported 300% increase in the blog traffic and revenue
join next generation blogging services at www.hyperwebenable.com
regards
www.hyperwebenable.com

Sadhaka said...

hello sir, eppadi irukeenga, good review... m yet to see it though.. btw one suggestion romba naal achu, why cant you think of changing your blog look (template), there are many good options that has come along with blogger template, you can try it out..

Anonymous said...

கொஞ்சம் விளக்கி சொல்லுமப்பா..
உங்களுக்கு குட்டி அம்பி கவனிக்கும் அவசரத்தில்.. விமர்சனமும் பாதியிலெ நிக்குதே..

Anonymous said...

Let's be. achat levitra I would like to talk to you, to me is what to tell on this question.

Anonymous said...

buy cialis through an online pharmacy
order cialis now
cheap cialis generic cialis order cialis
chear generic cialis us pharmacy
cialis online online get cialis cheapest
discount cialis prices
online cialis prescriptions
1buy cialis Buy Cialis Soft online in USA

Anonymous said...

http://marketerandgeek.com/forum/viewtopic.php?f=1&t=86303&p=125670
http://ihatefico.com/viewtopic.php?f=5&t=127727&p=170154
http://findbay.org/forum/viewtopic.php?f=3&t=64868&p=76457

Anonymous said...

明日/昨日 [url=http://japanese-garden.org]バイアグラ 服用[/url] バイアグラ 服用

Anonymous said...

Avelox with no prescription overnight shipping Buy Tablets Lasix Levonorgestrel Overnight Fed Ex No Prescription what is Levitra Plus Prezzo Keflex keflex for upper respiratory infection keflex to lower blood sugar online orderable buy Lexapro generic cialis pills levitra Avodart Pharmacy lexapo cause weight gain

Anonymous said...

Avelox CHEAPEST PRICE Discount Generic Prograf Where can i buy Provera online? get lipitor with out prescription boniva pay cod cheapest place to buy buy Lexapro online buy discount free prescription Flomax 90 caps x 0.4 mg experience male using provera order avelox online with cod Buying Without Prescription Levonorgestrel

Anonymous said...

Flagyl ER pharmacy store Ditropan By Cod Nextday Augmentin Buy Clomid on line order Tadalafil online by fedex Levitra Plus toronto generic mexico pharmacy provera Cheap Omnicef Without Prescription buy Avelox shipped cod Visa card buy Avodart

Anonymous said...

womans cephalexin Buy Clomid cephalexin france buy Flomax online kaufen dose of amoxil in children generic cephalexin online pharmacy purchase Amoxil in Belgium tadalafi cialis buy Amoxil Online Buy Cephalexin Without A Prescription

Anonymous said...

cheap Tadalafil prescriptions buy cheap generic flagyl online Cheap Flagyl ER uk cephalexin in the uk cialis 5mg cheap Buy Ditropan Online By Cod Order Cheapest Ditropan prices generic cialis pharmacy online Order Boniva florida medication diflucan

Anonymous said...

buy Flomax online bestellen buy cod cheapest without rx Diflucan DISCOUNT (Fluconazole) Maitland without prescription the effect of cialis on women buy Flomax online ampicillin and antibiotics mens health forum buy Flomax online why isn t diflucan working buy Flagyl ER Canada Cheapest Clomid Buy Now Us Avodart Fedex

Anonymous said...

boniva overnight delivery cheap tadalafil price comparison does generic cialis work Where to buy Ditropan cheap avodart avodart generic counterfeit cialis cephalexin patent buy sildenafil cephalexin cheap Tadalafil prescriptions Purchase Boniva medications without prescription

Anonymous said...

Cephalexin Next Day Delivery candida diflucan grispeg diflucan pronunciation Best Boniva medication buy buy alesse online prescription cheap Avelox over night yeast diflucan where to buy Avelox online Amoxil pills No Rx Ditropan

奇堡比 said...

新女性徵信
外遇調查站
鴻海徵信
亞洲徵信
非凡徵信社
鳳凰徵信社
中華新女性徵信社
全國新女性徵信社
全省女人徵信有限公司
私家偵探超優網
女人感情會館-婚姻感情挽回徵信
女子偵探徵信網
女子國際徵信
外遇抓姦偵探社
女子徵信社
女人國際徵信
女子徵信社
台中縣徵信商業同業公會
成功科技器材
女人國際徵信社
女人國際徵信
三立徵信社-外遇
女人國際徵信
女人國際徵信
大同女人徵信聯盟
晚晴徵信