Wednesday, May 07, 2008

ஐபிஎல் கிரிக்கெட்

இந்த ஐபிஎல் கிரிக்கெட் வந்தாலும் வந்தது, ஆபிஸ்ல ஒரே கும்பமேளாவா இருக்கு. அதுவும் பெங்களூரில் பல மாநில மக்கள் ஒன்றாக(?) ஒரே கம்பனியில் வேலை பார்க்கும் நிலையில், அவனவனுக்கு தம் சொந்த ஊர் பாசம் பீறிட்டு(பீர் இட்டுனு வாசிக்கபடாது) கிளம்புகிறது.

இப்ப எங்க ஆபிஸ்லயே பாருங்களேன்:

1) ரசகுல்லா டீம் (ஆமா பெங்காலி ரசகுல்லாஸ் தான்)
2) சப்பாத்தி டீம் (எல்லா வட இந்திய மா நிலங்களும் அடக்கம்)
3) வடா பாவ் டீம் (மாராத்தி டீம்)
4) கொல்டி டீம்
5) கப்பகெழங்கு டீம் (என்டா ஆயில்ய சேட்டா! முழிக்கினது?)
6) காவிரி டீம் (அவங்களே தான்)
7) சாம்பார் இட்லி டீம் (இட்லி வடை இல்லப்பா! நாமே தான்)
8) பஞ்சாப் குதிரைகள் டீம் (எல்லா குதிரகளுமே கிட்டதட்ட ஆறு அடி எழுபது கிலோவுங்கோ)

இதுல ஒருத்தருக்கு ஒருத்தர் அனுசரணையா, ஆதரவா (பிராஜக்ட்டுல தான்) இருந்து வந்த நிலையில் இந்த ஐபிஎல் மொத்தமா ஆப்படித்து விட்டது.

ஏய்! ரூவாய வாங்கிட்டு என்னடா உங்க ஆளு விளையாடவே வர மாட்டேங்கறாரு?னு கப்பகிழங்கு மும்பையை கேட்க,

உங்க ஆளு குமட்டுலயே குத்தினான் பாரு பஞ்சாப்! பேச வந்துட்டாங்க இவங்க!னு பதிலுக்கு தாக்க,

ஆனாலும் ஒரு குத்துக்கு மூணு கோடி! டூ மச்! சர்தாஜிகளால தான் முடியும்!னு கொல்டி குதிரைய வம்புக்கு இழுக்க,

வேணாம்டா உனக்கு! பஞ்சாப் அடி வாங்கனும்னு ஆசையா?னு கொல்டி அட்வைஸ் பண்ணினான்.
(ஏற்கனவே எசகுபிசகா வாங்கி இருப்பான் போல!)

நாலு மேட்ச் வரிசையா ஜெயிச்சதை பாத்து ஏமாந்து போய், "கும்தலக்கடி கும்மாவா? இட்லி சாம்பார்னா சும்மாவா?"னு நாம கடுப்பேத்தியது, இப்ப வரவன் போறவன் எல்லாம் அவ்ளோ தானா?னு துக்கம் விசாரித்து விட்டு போகிறான்.

ஆனா ஒரு விஷயத்துல எல்லோரும் ஒத்துமையா இருக்காங்க.

ஐபிஎல்லுல டிராவிட் தலைமையில் டெஸ்ட் மேட்ச் உங்களால் மட்டும் தான்டா ஆட முடியும்!னு காவிரிகாரங்களை ஓட்டு ஓட்டுனு ஓட்டி தள்றாங்க. அதே சமயம், விஜய் மல்லையாவின் தாராள குணத்தை பாராட்டாத ஆட்களே கிடையாது.

பின்ன, இவ்ளோ காசு செலவழிச்சு வெளிநாட்டுல இருந்து இல்ல கரகாட்ட செட்டை வரவழைச்சு இருக்கார்.

அடடா! என்ன ஆட்டம்! என்ன சுறுசுறுப்பு! :)

12 comments:

mgnithi said...

மீ த பர்ஷ்டு

mgnithi said...

//பின்ன, இவ்ளோ காசு செலவழிச்சு வெளிநாட்டுல இருந்து இல்ல கரகாட்ட செட்டை வரவழைச்சு இருக்கார்.//

செட் சூப்பர் செட்டுங்கனா ;-)

//அடடா! என்ன ஆட்டம்! என்ன சுறுசுறுப்பு! :)//

நீங்க ஐபிஎல் பத்தி தானே சொன்னீங்க?

Anonymous said...

Nice Post !
You should use a Tamil social bookmarking widget like PrachaarThis to let your users easily bookmark your blog posts.

திவா said...

ஆட்டங்க திடீர்ன்னு பவுலர்கள் பக்கம் போயிடுச்சு போல இருக்கு!

Anonymous said...

'ஆட்டங்க திடீர்ன்னு பவுலர்கள் பக்கம் போயிடுச்சு போல இருக்கு!'

அடிக்க தெரிச்சவனெலாம் வூட்டுக்கு போயிட்டானுகளே

My days(Gops) said...

//ஐபிஎல்லுல டிராவிட் தலைமையில் டெஸ்ட் மேட்ச் உங்களால் மட்டும் தான்டா ஆட முடியும்!னு//

ha ha ha only u possible :)

btw, brother innaiku chennai king jeichiduchi la :D

aanah edhuku dhoni ku man of the match koduthaaaanganu ungala naaaalaiku yaaarum vaaarama irundha sare :)

Ramya Ramani said...

அது எப்படி அண்ணா உங்க போஸ்ட் எல்லாதுலேயும் ஒரு ஜொள்ளு இழை ஒடரது? டுபுக்கு அண்ணா ஜொள்ளி திரிந்த காலம்னு ஒரு சீரீஸோட முடிச்சுட்டார் ! நீங்க அண்ணாவயே மிச்ஞிட்டேள்! நடத்துங்கோ! இந்த IPL Match எல்லாமே காசுக்கு வந்த கேடு தான்! 400 கோடி எல்லாம் செலவு பன்றது ரொம்ப ஜாஸ்தி

Anonymous said...

IPL juram ungalukuumaa?veetila imsai thangamudiyala!!!!!!!!!!!karagattam mattum solreenga,kathrina,preity ellam kanla padalaya???????????
nivi.

ambi said...

@mgnithi, அட ஆமா நிதி, நானும் ஐபிஎல்லை பத்தி மட்டுமே சொன்னேன். :p


//You should use a Tamil social bookmarking widget //

@roshini, done. Thanks for the suggesstion sister. :)

@diva sir, ஆட்டம் என்னவோ பிட்ச்சை பொறுத்து இருக்கோனு எனக்கு தோணுது.

//அடிக்க தெரிச்சவனெலாம் வூட்டுக்கு போயிட்டானுகளே
//

@anony, சரியா சொன்னீங்க அனானி, அடுத்த தடவ பேரையும் போடுங்க தலைவா. :))

@sachin gops, அதானே! தோனிக்கு எதுக்குப்பா மேன் ஆப் தி மேட்ச்? :))

//உங்க போஸ்ட் எல்லாதுலேயும் ஒரு ஜொள்ளு இழை ஒடரது? //

@ramya, அப்படியா? எனக்கு தெரியலையே? :p

//இந்த IPL Match எல்லாமே காசுக்கு வந்த கேடு தான்! 400 கோடி எல்லாம் செலவு பன்றது ரொம்ப ஜாஸ்தி
//

ம்ம், புத்திக்கு தெரியுது, மனசுக்கு தெரியலையே! :))

//karagattam mattum solreenga,kathrina,preity ellam kanla padalaya???????????//

@nivi, இதுக்கே வீட்ல செம மாத்து வாங்கிட்டு இருக்கேன். :))

கைப்புள்ள said...

//பின்ன, இவ்ளோ காசு செலவழிச்சு வெளிநாட்டுல இருந்து இல்ல கரகாட்ட செட்டை வரவழைச்சு இருக்கார்.

அடடா! என்ன ஆட்டம்! என்ன சுறுசுறுப்பு! :)//

ஹி...ஹி...

//ஐபிஎல்லுல டிராவிட் தலைமையில் டெஸ்ட் மேட்ச் உங்களால் மட்டும் தான்டா ஆட முடியும்!னு காவிரிகாரங்களை ஓட்டு ஓட்டுனு ஓட்டி தள்றாங்க//
அது என்னமோ வாஸ்தவம் தான்...சாரு ஷர்மாக்கு அப்புறம் ஆப்பு வைக்க அந்த டீம்ல ஆளைத் தேடறாங்களாம்.
:)

Karthikeyan Ganesan said...

I think you are afraiding about punjab sings..!! you didnt teased them like others !!!

Nice one !!!

奇堡比 said...

新女性徵信
外遇調查站
鴻海徵信
亞洲徵信
非凡徵信社
鳳凰徵信社
中華新女性徵信社
全國新女性徵信社
全省女人徵信有限公司
私家偵探超優網
女人感情會館-婚姻感情挽回徵信
女子偵探徵信網
女子國際徵信
外遇抓姦偵探社
女子徵信社
女人國際徵信
女子徵信社
台中縣徵信商業同業公會
成功科技器材
女人國際徵信社
女人國際徵信
三立徵信社-外遇
女人國際徵信
女人國際徵信
大同女人徵信聯盟
晚晴徵信