Friday, May 09, 2008

சென்ஷி அண்ணணுக்கு ஒரு கடிதம்(09/05/2008)

//இது சும்மா இட்லிக்கு மாவு ஆட்டிக்கொடுத்துட்டு சாப்டப்புறம் பாத்திரம் கழுவி வைக்குற வேலை இல்ல.. பின்னூட்டம்.//

இட்லிக்கு மாவட்டறதுன்னா சும்மா இல்ல, முந்தின நாளே சரியா எட்டு மணி நேரத்துக்கு முன்னாடி அரிசிய ஊற போட்டனும், 1 மணி நேரத்துக்கு முன்னாடி உளுந்த ஊற போடனும். அதுவும் கருப்பு உளுந்தா இருந்தா களையற வேலை வேற எக்ஸ்ட்ரா.


அப்புறம் இஷ்ட தெய்வத்தை கும்பிட்டு(அட இட்லி பஞ்சு போல வரனும் இல்ல) கிரைண்டரை முதல்ல லேசா கழுவி, மெதுவா ஓட விட்டு கொஞ்சம் கொஞ்சமா அரிசிய முதல்ல போடனும். உளுந்த போட்டா மாவு காலி. மொத்தமா அரிசிய அரைக்க போட்டா கிரைண்டர் சண்டித்தனம் பண்ணி நின்னுடுமாக்கும். நான் சொல்றது சாய்வு வகை கிரைண்டர். குழவி கல்லு கிரைண்டர்னா எடுத்து அலம்பி வைக்கறதுக்குள்ள தாவு தீர்ந்துடும். பத்து நிமிஷத்துக்கு ஒரு முறை கொஞ்சம் கொஞ்சமா தண்ணி விடனும். நைசா வரனுமில்ல.

நாப்பதஞ்சு நிமிஷம் அரச்ச பிறகு அரிசிய வழிச்சு எடுக்கனும்.


அப்புறம் உளுந்து. ஓவரா தண்ணி காட்டினா நாள் முழுக்க நீங்க உளுந்து மட்டும் தான் அரச்சுட்டு இருக்கனும். சன் மீயூசிக்குல ஹேமா சிம்ஹாவை பாத்து மெய் மறந்து, தண்ணி விட மறந்தீங்கன்னா கிரைண்டரில் இருந்து உளுந்து உருண்டை எடுக்கலாம்.

இத எல்லாத்தையும் விட மெயின் மேட்டர், நீங்க மாவாட்டும் சுபயோக சுப நேரத்தில் மின்சாரம் இருக்கனும். நடுவுல புடுங்கிகிச்சுனா மின்சாரம் வர வரைக்கும் தேவுடு காக்கனும். டிவியும் பாக்க முடியாது. ரீப்பீட்ட்ட்யேயும் போட முடியாது.


அப்புறம் தான் மெயின் மேட்டர்:
சரியான விகிதத்துல உப்பு போடனும். எல்லாம் முடிஞ்சு உடனே தூக்கி பிரிஜ்ஜுல வெச்சுடகூடாது. அரை நாள் வெளியே வெச்சா மாவு பொங்கி பாத்ரம் நுனி வரை வரும். அதனால் கொஞ்சம் பெரிய பாத்ரத்துல தான் மாவை சேமிச்சு வைக்கனும். இல்லாட்டி வீட்டை மறுபடி சுத்தம் பண்ற வேலை வேற.

அடுத்த நாள் இட்லி வார்க்கும் படலம் ஆரம்பமாகுது.

இட்லி அடுக்குகளில் லேசா நல்லேண்ணைய தடவிட்டு, ஒரு கரண்டி மாவை விட்டு, கேஸ் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து விட்டு இப்ப நீங்க டிவி பாக்கலாம். அவசரபட்டு முன்னாடியே இட்லி அடுக்கை தொறந்தா அரிசி மாவு களி தான் கிடைக்கும், இட்லி கிடைக்காது.

இப்ப சொல்லுங்க, கஷ்டப்பட்டு மேட்டர் சேகரிச்சு டாமேஜர் இல்லாத நேரமா பதிவ தட்டி, பின்னூட்டத்துக்கு தேவுடு காத்து கிடந்தா, நீங்க சாவகாசமா வந்து வெறும் ரீப்பிட்டேய்ய்ய்ய் (இதுக்கு தமிழாக்கம் எல்லாம் மிக அருமையா மிஸ்டர் புதசெவி குடுத்து இருக்காரே, பாக்கலையா?) மட்டும் போட்டுட்டு போவீங்களாக்கும்? எந்த ஊர் நியாயம்ண்ணே? :))

டிஸ்கி#1: இந்த பதிவின் உட்பொருள், வெளிபொருள் எல்லாம் கேட்டு குடைய கூடாது.
டிஸ்கி#2: இதுக்கும் மேல ஏதாவது சந்தேகம்னா கைபுள்ளையை தொடர்பு கொள்ளவும். :))

31 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அதானே மாவாட்டறதுன்னா சும்மாவா..இந்த தில்லியில் திடீர்ன்னு அதுவும் குளிர்காலத்துல மாவு பொங்கவே பொங்காது அப்ப பார்த்து இன்னைக்கு இட்லி செய்து தரசொல்லேன் அம்மாவைன்னு என் பொண்ணோட க்ளாஸ் ல சொல்லுவாங்களாம்.. ரெண்டு நாள் வெயிலில் வேற வைக்கனும்..அதெல்லாம் ரொட்டி சுடறா மாதிரி சாதாரண வேலை இல்லன்னு சொல்லி அனுப்பிடுவேன்.. :)

அபி அப்பா said...

என்ன கொடுமை அம்பி! வேற ஒண்ணும் இல்லை, பெனாத்தலார் உப்புமா கிண்டின நேரம் அப்படி! அவர் உப்புமா கிண்ட அதுக்கு ஜீனி தொட்டுக்க வைக்கிறேன்ன்னு கொத்ஸ் ஜீனிவைக்க அதிலே போய் நீங்க கொஞ்சம் இட்லிபொடி வச்சா நல்லா இருக்குமேன்னு பின்னூட்டத்திலே வைக்க,நீங்க வச்ச தீ டெல்லி வரை பரவி முத்துலெஷ்மி "நானும் உள்ளேன் அய்யா" பதிவு போட, சின்ஷியின் இட்லி பொடிக்கு உப்புமாவை விட இட்லிதான் நல்லதுன்னு நீங்க மாவாட்ட சென்ஷி இதுக்கு பதிலா கூடவே பொங்கல் இருந்தா நல்லா இருக்குமேன்னு கிண்ட போறான்!

சும்மா இருப்பானா கோபி, மாசம் ஒரு பதிவுன்னு விரதம் இருப்பவன் பிச்சுகிட்டு கிளம்பி அதுக்கு சாம்பார் வைக்க, எலக்கிய வியாதி தம்பி எகிறி கிளம்ப அதை அடக்க அண்ணாச்சி வந்து ஆணீயம் பேச அதுக்கு ஜஸீலா தன் லெஷ்மி குரூப்போட வந்து ரகளை பண்ண கடேசியா உப்புமா தலைவர் வந்து பதில் உப்புமா போடும் வரை தமிழ் மணம் சூடா இருக்கும்!!! நடத்துங்க:-))

MyFriend said...

அண்ணே,, மாவு ஆட்டுறது மாவை ஆட்டுறது எல்லாம் ஜுஜுபி (ஜிலேபி அல்ல)..

பின்னூட்டம் போடுறது.. கும்மியட்ப்பது அதைவிட ஜீஜீபி.. என்ன சொல்றீங்க..

நம்மெல்லாம் சேர்ந்து விளையாடாததா? ;-)

Anonymous said...

\\முந்தின நாளே சரியா எட்டு மணி நேரத்துக்கு முன்னாடி அரிசிய ஊற போட்டனும்\\
இது எந்த ஊர்ல நடக்குது, எங்களுக்கெல்லாம் நாலு மணி நேரம் ஊறினாலே போதும்னு இல்ல பெரியவங்க சொல்லிக்குடுத்துருக்காங்க

ஆயில்யன் said...

குறிப்பா எதையும் ரீப்பிட்ட முடியாத மாதிரி எல்லாரோட கமெண்ட்டும் இட்லி ஆக இருப்பதால்

எல்லாத்துக்கும் ஒரு பெரிய ரீப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்
:))))

இராம்/Raam said...

ஆத்தி... கல்யாணத்துக்கு அப்புறம் இம்புட்டு வேலை பார்க்கனுமா???? :(

KC! said...

parvalliye, nalla velai seyyara pola iruke..good good ;) Aana adhukkaga ippadi oru stepwise procedure record note madhiri ezhudi engalai mokkai podanuma?? :P

Syam said...

//ஆத்தி... கல்யாணத்துக்கு அப்புறம் இம்புட்டு வேலை பார்க்கனுமா???? :(//

same blood....:-)

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

<==
இராம்/Raam said...
ஆத்தி... கல்யாணத்துக்கு அப்புறம் இம்புட்டு வேலை பார்க்கனுமா???? :(

==>
சே சே? கடையில மாவு வாங்கிக்கலாமே =)))) கல்யாணத்துக்கெல்லாம் பயப்படப்படாது.

Swamy Srinivasan aka Kittu Mama said...

ada ada. evalavu superaa ezhudhi irukeenga. experienced personaladhan ippadi ezhudha mudiyum. Ms.C ungala indha koduma padutharaangala.:)

"Itli ellam oru matteraa " appadinu nenachutrukara husbandskellam indha post oru paadam. (kittu mamava sollalaingo :))

-K.mami

Anonymous said...

அடுத்த நாள் இட்லி வார்க்கும் படலம் ஆரம்பமாகுது.


ivalavu kashtapattu maavu aati iti senjaa, inikku enna dinner " ayye itli ya :( appadinu mugam sulicha. embuttu kobam varum. hmm enna ambi anna neengale sollunga. !!!

சென்ஷி said...

உங்களுக்கான என் பதில் மடல் இங்கு

http://senshe-kathalan.blogspot.com/2008/05/blog-post.html

:)

Ramya Ramani said...

ஒ! உங்க வீட்ல மாவு ஆட்டும் போது அப்ப அப்ப எட்டி பார்த்தே இந்த லெவல்-கு போஸ்ட் போடரீங்களே, நீங்களே மாவு ஆட்டினா எப்படி போஸ்ட் போடுவீங்க??

வல்லிசிம்ஹன் said...

அம்பி எட்டு மணி நேரமா. அதாவது தூங்கறதுக்கு முன்னால ஊறவச்சுட்டு, எழுந்ததும் அரைக்கணுமா. அப்புறமா ஆபீஇஸ்லேருந்து வந்து இட்டிலி சுடணுமா. நல்ல ஐடியாதான். ஆபீஸுக்குப் போகாதவங்க எப்படி இட்லி செய்யணும்??
அதையும் எழுதவும்;)

Anonymous said...

அண்ணா, கலக்கிட்ட போ! 7 மாசமா நான் பண்ணின்டு இருப்பதை அழகா மானேஜர் மாதிரி நீ பண்ணிய மாதிரி எழுதிட்டியே!!!!!!!!...:) பாவம் வல்லியம்மாவும் நம்பிவிட்டார்கள்.

By,
தம்பி

இலவசக்கொத்தனார் said...

அடப்பாவிகளா, நான் மேட்டர் இல்லாம ஒரு மொக்கை போட்டா அதை ஒரு தொடராவே ஆக்கிட்டீங்களே!! நல்லா இருங்கடே!!

அப்புறம் நல்ல டீட்டெய்ல்டா எழுதி இருக்கே. அதன் மூலம் உனது முந்திய பதிவு ஒண்ணுக்கு நான் போட்ட பின்னூட்டத்தை உண்மை என நிரூபிச்சுட்ட. :))

நிஜமா நல்லவன் said...

////அபி அப்பா said...
என்ன கொடுமை அம்பி! வேற ஒண்ணும் இல்லை, பெனாத்தலார் உப்புமா கிண்டின நேரம் அப்படி! அவர் உப்புமா கிண்ட அதுக்கு ஜீனி தொட்டுக்க வைக்கிறேன்ன்னு கொத்ஸ் ஜீனிவைக்க அதிலே போய் நீங்க கொஞ்சம் இட்லிபொடி வச்சா நல்லா இருக்குமேன்னு பின்னூட்டத்திலே வைக்க,நீங்க வச்ச தீ டெல்லி வரை பரவி முத்துலெஷ்மி "நானும் உள்ளேன் அய்யா" பதிவு போட, சின்ஷியின் இட்லி பொடிக்கு உப்புமாவை விட இட்லிதான் நல்லதுன்னு நீங்க மாவாட்ட சென்ஷி இதுக்கு பதிலா கூடவே பொங்கல் இருந்தா நல்லா இருக்குமேன்னு கிண்ட போறான்!

சும்மா இருப்பானா கோபி, மாசம் ஒரு பதிவுன்னு விரதம் இருப்பவன் பிச்சுகிட்டு கிளம்பி அதுக்கு சாம்பார் வைக்க, எலக்கிய வியாதி தம்பி எகிறி கிளம்ப அதை அடக்க அண்ணாச்சி வந்து ஆணீயம் பேச அதுக்கு ஜஸீலா தன் லெஷ்மி குரூப்போட வந்து ரகளை பண்ண கடேசியா உப்புமா தலைவர் வந்து பதில் உப்புமா போடும் வரை தமிழ் மணம் சூடா இருக்கும்!!! நடத்துங்க:-))///


இந்த கமெண்ட் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு( அப்பாடா ஏதோ ......ட்டே வாமே அத சொல்லாம தப்பிச்சிட்டேன்)

நிஜமா நல்லவன் said...

///இலவசக்கொத்தனார் said...
அடப்பாவிகளா, நான் மேட்டர் இல்லாம ஒரு மொக்கை போட்டா அதை ஒரு தொடராவே ஆக்கிட்டீங்களே!! நல்லா இருங்கடே!!///



ஏனுங்க எங்க பார்த்தாலும் உங்க பின்னூட்டம் ஒரே மாதிரி இருக்கே. எப்படிங்க?

நிஜமா நல்லவன் said...

///இலவசக்கொத்தனார் said...
அடப்பாவிகளா, நான் மேட்டர் இல்லாம ஒரு மொக்கை போட்டா அதை ஒரு தொடராவே ஆக்கிட்டீங்களே!! நல்லா இருங்கடே!!///



ஏனுங்க எங்க பார்த்தாலும் உங்க பின்னூட்டம் ஒரே மாதிரி இருக்கே. எப்படிங்க?

இலவசக்கொத்தனார் said...

ஏம்பா நிஜமாவே நீர் நல்லவர்தானா? எதுக்கு கேட்கறேன்னா, கட் பேஸ்ட் பண்ணும் போது அதே மாதிரி வராம வேற மாதிரியாய்யா வரும்?

ரெண்டு பேரும் அதையேதானே செஞ்சு இருக்காங்க. அதான் கட் பேஸ்ட் பண்ணிட்டேன்.

Anonymous said...

Arputham,Arputham. I loved it. Lucky Madam.

Ramya

Anonymous said...

hai!!!!!!idlikdhai nalla irukke.indha seimurai vilakathukku patent vangunga!!kannu pada poguthu!!!!!!!!!idha madhiri vada,sambar elltha pathiyum ezuthi "ambis special" book podunnga.bachelors,forced b"s pozhachukkalam.oru social service thaane boss!!!!!!!!!!!!!!!!!
nivi.

Geetha Sambasivam said...

ஹா,ஹா,ஹா, அம்பி எஞ்சாய்! ரொம்ப சந்தோஷமா இருக்கு! இட்லி உதிர்ந்தா உப்புமா கிண்டலாம், இ.கொ. கிட்டே சொல்லி வச்சுடுங்க, பெனாத்தலாரும் சேர்ந்துப்பார்! :P

Sridhar Narayanan said...

ஹ்ம்ம்.... இது கடித இலக்கணத்துல அடங்குமா? சமையல் குறிப்புன்னு சொல்லலாம்னு நினைக்கிறேன் :-)

நீங்க எதுக்கும் பெனாத்தலார்கிட்ட 'இல்லறவியல்' பத்தி ஒரு வாரம் ட்யூஷன் எடுத்துக்குங்க. ரொம்ப பரிதாபமா இருக்கு. :-((

திவாண்ணா said...

அம்பீஸ் கபே எங்க திறந்து இருக்கீங்க?

மெட்ராஸ்காரன் (Madrasi) said...

Ambi Anna,

Maavatrathula unga experience nallave theriyuthu. Analum, special tips for maaligai poo idli missing. Ippadiye, Dosai suduvathu eppadi, Uthappathukkum dosaikkum aru vithyasamnu pathivu potinganna engala mathri aalungalukku usefull a irukkum.

Note: Chutney pathi pathuvula onnum kaname?

Arunkumar said...

//
ஆத்தி... கல்யாணத்துக்கு அப்புறம் இம்புட்டு வேலை பார்க்கனுமா???? :(
//

edhukku ratham... adhe ratham..

gils said...

inrilirunthu bengalooru maavaata seyalaalaraga vambi arivikapadugirar...ennama pheel panni ezhuthirukel...avvvvvvvvv

ambi said...

//அதானே மாவாட்டறதுன்னா சும்மாவா//

அப்படி சொல்லுங்க முத்தக்கா! :)

@அபி அப்பா விட்டா எல்லோருக்கும் நீங்களே மெயில் அனுப்புவீங்க போலிருக்கே. :p

//நம்மெல்லாம் சேர்ந்து விளையாடாததா? //

@my friend, அது ஒரு அழகிய நிலாக்காலம். :)

//எங்களுக்கெல்லாம் நாலு மணி நேரம் ஊறினாலே போதும்னு //

@CM, எட்டு மணி நேரம் ஊற வெச்சு அரைச்சு பாருங்க. அப்புறம் தெரியும் ரிஜல்ட். :))

@ayilyan, :)

//ஆத்தி... கல்யாணத்துக்கு அப்புறம் இம்புட்டு வேலை பார்க்கனுமா???? //

@raam, This is a tip of an Ice berg. :p

//nalla velai seyyara pola iruke//

usha, ellam un saabam thaan :))

ambi said...

@syam, y blood..? :p

//கடையில மாவு வாங்கிக்கலாமே //

@saamaniyan, எத்தன நாளைக்கு? :p

//Itli ellam oru matteraa " appadinu nenachutrukara husbandskellam indha post oru paadam//

@k-mami, சரியா சொன்னீங்க ஜிஸ்டர். :)

//appadinu mugam sulicha. embuttu kobam varum. hmm enna ambi anna neengale sollunga//

@anony sister, சும்மா பூரிகட்டைய எடுத்து ஒரு சுத்து சுத்தி காட்டுங்க ஜிஸ்டர். :))

@senshe, :)

//அப்ப அப்ப எட்டி பார்த்தே இந்த லெவல்-கு போஸ்ட் போடரீங்களே, //

@ramya, உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா? :))

//ஆபீஸுக்குப் போகாதவங்க எப்படி இட்லி செய்யணும்??
அதையும் எழுதவும் //

@valli simhan, உங்க வீட்டு சிங்கத்துக்கு விரிக்கற வலையா? :p

//அப்புறம் நல்ல டீட்டெய்ல்டா எழுதி இருக்கே.//

@கொத்ஸ், நீங்க தானே எங்களுக்கு குரு. :))

//இந்த கமெண்ட் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு//

நீங்க நிஜமாவே ரொம்ப நல்லவரு, வல்லவரு. :p

//Arputham,Arputham. I loved it. //

@ramya, danks alot. :)

ambi said...

//idha madhiri vada,sambar elltha pathiyum ezuthi "ambis special" book podunnga.//

@nivi, good idea. in future, will do it :))

//இட்லி உதிர்ந்தா உப்புமா கிண்டலாம்,//

@geetha madam, என்ன ஒரு தத்துவம். :))

//நீங்க எதுக்கும் பெனாத்தலார்கிட்ட 'இல்லறவியல்' பத்தி ஒரு வாரம் ட்யூஷன் எடுத்துக்குங்க//

@sridhar, சரி தான், முதலுக்கே மோசமாயிடும் சார். :p

//அம்பீஸ் கபே எங்க திறந்து இருக்கீங்க?
//

@diva sir, எங்க திறக்கலாம் நீங்களே சொல்லுங்க. :))


//engala mathri aalungalukku usefull a irukkum.
//
@madras, அது என்ன எங்கள மாதிரி ஆளுகளுக்கு? :p

@arun, என்ன அருண், ரெடியாயாச்சு போலிருக்கு? :p

@கில்ஸ், அடுத்து நீ தான் லைன இருக்க. ஞாபகம் இருகட்டும். :p