Tuesday, May 13, 2008

இந்த நாள் உன் காலண்டர்ல குறிச்சு வெச்சுக்கோ!

பதினாலு மே 2007

அக்னி நட்சத்திர வெய்யிலையும் பொருட்படுத்தாது வந்திருந்த கூட்டம் குளிரூட்டபட்டு இருந்த அந்த மண்டபத்தில் பிதுங்கியது. ஒன்பதரைக்கு முகூர்த்தம் ஆரம்பம் என்பதால் காலையில் இட்லி, மசால் தோசை, நெய் வழுக்கிய கேசரியை சுகமாய் உள்ளே தள்ளி விட்டு சாவகாசமாய் வம்படித்து கொண்டிருந்தனர் பல மாமாக்கள்.

மண மேடையில் ஒன்னுமே சாப்பிடாம உட்கார்ந்து இருக்கும் மாப்ளையையும், பெண்ணையும் மிலிட்டரி டிரில் வாங்கி கொண்டிருந்தனர் இரு வீட்டு புரோகிதர்களும். நெக்லஸ் புதுசா? செவப்பு கல் வெச்ச தோடு போட்டு இருந்தா உனக்கு இன்னும் எடுப்பா இருந்திருக்கும்! ஆம்படையான்ட சொல்லி இந்த தீவாளிக்கு வாங்கிக்கோ! என யாரோ ஒரு அப்பாவி ரங்குவுக்கு ஆப்படித்து கொண்டிருந்தார் ஒரு மாமி.

டிரவுசரை அவுத்து கொண்டு "டாடி! அலம்பி விட வா! என திருவாய் மலர்ந்து அவசரமாய் ஓடிய தன் மூணு வயது தவபுதல்வனை பின் தொடர்ந்து ஓடி கொண்டிருந்தார் இன்னொரு அப்பாவி ரங்கு. வாங்கிய காசுக்கு வஞ்சனையில்லாமல் "வள்ளி கணவன் பெயரை வழிப்போக்கன் சொன்னானடி!"னு அட்ரஸ் விசாரித்து கொண்டிருந்தார் நாதஸ்வர வித்துவான்.

பாச மலர் சாவித்திரியின் தோழிகள் ரேஞ்சுக்கு ஐந்து நிமிஷத்துக்கு ஒரு முறை கலகலவென சிரித்து, தம் டிஜிட்டல் காமிராவில் தம் தோழியை பதிந்து கொண்டிருந்தனர் மணபெண்ணின் தோழிகள். உன்னை பாத்து ஒன்னும் சிரிக்கலை, நீ வேஸ்ட்டா அசடு வழியாதே!னு மாப்ளையின் தம்பி தன் பங்குக்கு கடுப்பேத்தி கொண்டிருந்தான்.

இதோ அந்த தருணம் வந்து விட்டது. அண்ணாமலையில் ரஜினி சரத்பாபுவை பாத்து சொல்வாரே!

ஆபிஸ்ல வேலை இல்லாத போதும் நைட் பத்து மணி, பதினோரு மணி வரை வெட்டியா(அய்ய, வெட்டி பாலாஜி உங்கள இல்ல) சீட்ட தேய்ச்சுட்டு ஒவ்வோரு மொக்கை பதிவா போய், பின்னீட்டீங்க அண்ணே! கலக்கிடீங்க அக்கா! அங்க தான் நீங்க நிக்கறீங்க போங்க! ரீப்பீட்டேய்ய்!னு பின்னூட்டம் போட்டுட்டு வர உன்னை,

ஆபிஸ் கேண்டீன், ஓட்டல்னு வெந்ததையும் வேகாததையும் சாப்பிட்டு காலம் தள்ற உன்னை,

பக்கத்து சீட்டு ரசகுல்லா கிட்ட பெங்காலி, எதிர் சீட்டு பஞ்சாபி கிட்ட ஹிந்தி,அடுத்த சீட்டு திருச்சூர் குத்து விளக்குகிட்ட மலையாளம்னு சம்சரிச்சுட்டு இருக்கற உன்னை

ஒரு பொறுப்புமிக்க ரங்குவாக, இட்லிக்கு மாவு பதம் தெரிந்த ஒரு ரங்குவாக, பூரிகட்டையின் நீளம், பருமன், அகலம் தெரிந்த ஒரு ரங்குவாக மாத்தி காட்டறேன்!

இந்த நாள் உன் காலண்டர்ல குறிச்சு வெச்சுக்கோ!

அக்னியை சாட்சியாக வைத்து, பொன் தாலியை மணபெண்ணின் கழுத்தில் கட்டியவுடன் அந்த பெண், இந்த அப்பாவி பையனை பார்த்த பார்வையின் விளைவே இந்த பதிவு. காலம் யாருக்காகவும் நிற்பதில்லை.

மே 15 இன்று தமது திருமண நாளை கொண்டாடும் பிளாகேஸ்வரி அக்காவுக்கு இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்.

39 comments:

.:: மை ஃபிரண்ட் ::. said...

ஹாஹாஹா..

வாழ்த்துக்கள் அண்ணா & அண்ணி. :-)

SanJai said...

வாழ்த்துக்கள் அம்பி அண்ணா.. அண்ணிக்கும் வாழ்த்து சொன்னேனு சொல்லுங்க...

.. எங்கே என் தம்பி .. குட்டி அம்பி?... :P

கைப்புள்ள said...

//ஒரு பொறுப்புமிக்க ரங்குவாக, இட்லிக்கு மாவு பதம் தெரிந்த ஒரு ரங்குவாக, பூரிகட்டையின் நீளம், பருமன், அகலம் தெரிந்த ஒரு ரங்குவாக மாத்தி காட்டறேன்!

இந்த நாள் உன் காலண்டர்ல குறிச்சு வெச்சுக்கோ!//

:)))))) சூப்பர்.
வாழ்த்துகள் அம்பி.

வல்லிசிம்ஹன் said...

திருமண நாள் நல் வாழ்த்துகள் அம்பி.
ரங்குவூம் தங்குவும்

ஒரு சிங்கக் குட்டியைப் பெற்று சீரும் சிறப்புமாக வாழ்த்துகள். மெனி ஹாப்பி ரிடர்ன்ஸ் ஆஃப் தெ டே:)

கப்பி பய said...

வாழ்த்துக்கள்! :)

நிஜமா நல்லவன் said...

வாழ்த்துகள் அம்பி.

ச்சின்னப் பையன் said...

வாழ்த்துக்கள்...:-)

Ramya Ramani said...

திருமணநாள் நல்வாழ்த்துக்கள் அம்பி அண்ணா& மண்ணி!

SathyaPriyan said...

My best wishes.

nathas said...

திருமணநாள் வாழ்த்துக்கள் !!!

சென்ஷி said...

இனிய முதலாமாண்டு திருமண வாழ்த்துக்கள் அண்ணா & அண்ணி :))

ஆயில்யன். said...

//இனிய முதலாமாண்டு திருமண வாழ்த்துக்கள் அண்ணா & அண்ணி :))//

வாழ்த்துக்கள் :)

Anonymous said...

வாழ்த்துக்கள். Many happy returns of the day.

Ramya

பாலராஜன்கீதா said...

//
http://mscongenialityforall.blogspot.com/2007/04/beautiful.html

3. My Rangamani-Best thing that has ever happened to me :) :
I see a duplicate version of my father in him sometimes which makes me feel all the more luckier. Though I speak out angrily sometimes in haste and at times a bit stubborn, he remains calm until I cool down and then makes me realize my mistake. When he had come to receive me, my parents, him and I had gone for shopping. He had also come to my place. He had mingled so well with my parents without any hesitation and never felt uncomfortable at any point of time. SKM akka keeps saying that some guys would understand what a girl needs only if explicitly told but some will understand with just a hint.Ambi is of the second type and you are so lucky to have him is what she says. I can feel it too. //

அம்பிக்கு இதைவிட நல்ல கேசரி கிடைக்குமா ?
:-)
இருவருக்கும் இனிய திருமண நன்னாள் வாழ்த்துகள்.

கோபிநாத் said...

இனிய முதலாமாண்டு திருமண வாழ்த்துக்கள் அண்ணா & அண்ணி :))

வெட்டிப்பயல் said...

வாழ்த்துகள்...

கீதா சாம்பசிவம் said...

//ஒரு பொறுப்புமிக்க ரங்குவாக, இட்லிக்கு மாவு பதம் தெரிந்த ஒரு ரங்குவாக, பூரிகட்டையின் நீளம், பருமன், அகலம் தெரிந்த ஒரு ரங்குவாக மாத்தி காட்டறேன்!//

பொறுப்பில்லாத ரங்குனு இருக்கணும்
இட்லி மாவுக்கு பதம் பார்க்கிறது தம்பினு இருக்கணும்
பூரிக்கட்டை ஓகே, ஒத்துக்க வேண்டியதே!

Blogeswari said...

Anniversary wishes to both of you!
Maruvaadaya, nalikku enakku wish pannu ambi!

Sridhar Narayanan said...

அம்பி,

திருமண நாள் வாழ்த்துகள். கலக்கலா எழுதியிருக்கீங்க.

//வாங்கிய காசுக்கு வஞ்சனையில்லாமல் "வள்ளி கணவன் பெயரை வழிப்போக்கன் சொன்னானடி!"னு அட்ரஸ் விசாரித்து கொண்டிருந்தார் நாதஸ்வர வித்துவான்.
//

எப்படி இதெல்லாம்... :-)


உங்க மனைவியின் blog பார்த்தேன். அவங்க ரொம்பவே சீரியஸ் ரைட்டர் போல. உங்க ப்ளாக் எல்லாம படிக்க மாட்டாங்கன்னு தோணுது :-)

Radha Sriram said...

வாழ்த்துக்கள் அம்பி.:)

அறிவன்#11802717200764379909 said...

வாழ்த்துக்கள் அம்பி.


////////உங்க மனைவியின் blog பார்த்தேன். அவங்க ரொம்பவே சீரியஸ் ரைட்டர் போல. உங்க ப்ளாக் எல்லாம படிக்க மாட்டாங்கன்னு தோணுது ///////

ஆங்கிலத்தில எழுதறதனால அப்படில்லாம் தப்புக் கணக்கு போடப்படாது ஆமா...

அம்பி,தங்குவை தமிழில் எழுதச் சொல்லுங்க கலக்குவாங்க.....

mgnithi said...

வாழ்த்துக்கள் அம்பி & Ms.C

CVR said...

Wow!!
1 yr aacha adhukkulla!!

All the very very best!!! :-)

Gopalan Ramasubbu said...

திருமணநாள் நல்வாழ்த்துகள் குருவே!

//ஒரு பொறுப்புமிக்க ரங்குவாக, இட்லிக்கு மாவு பதம் தெரிந்த ஒரு ரங்குவாக, பூரிகட்டையின் நீளம், பருமன், அகலம் தெரிந்த ஒரு ரங்குவாக மாத்தி காட்டறேன்!//

வாஷிங்மெஷின் செய்யும் வேலையை( ரிப்பேர் ஆகும் போதுதான் குரு) தானே செய்யும் ரங்குவாக, சமைத்த பாத்திரத்தை பளபளவென மின்னலடிக்கும் வெண்மையானதாக மாற்றத் தெரிந்த ரங்குவாக எல்லாம் மிஸ் ஆகுதே..மிஸஸ்கிட்ட சொல்னுமோ? ;)

indianangel said...

1 year mudinjadhu romba vegam dhaan. just ippadhan unga kalyanam aana maadhiri enakku gnyabagam. Appy aniversary ambi, im coming back here after a long time, hope all u guys are good!

Arunkumar said...

thala
oru varusham aagipocha adhukkulla?

manamaarndha vaazthukkal thala and thirumathi.thala :)

post as usual AMBI touch :P

//
காலம் யாருக்காகவும் நிற்பதில்லை.
//
unma annathe unma............

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

=))))

ரசிகன் said...

//ஆபிஸ்ல வேலை இல்லாத போதும் நைட் பத்து மணி, பதினோரு மணி வரை வெட்டியா(அய்ய, வெட்டி பாலாஜி உங்கள இல்ல) சீட்ட தேய்ச்சுட்டு ஒவ்வோரு மொக்கை பதிவா போய், பின்னீட்டீங்க அண்ணே! கலக்கிடீங்க அக்கா! அங்க தான் நீங்க நிக்கறீங்க போங்க! ரீப்பீட்டேய்ய்!னு பின்னூட்டம் போட்டுட்டு வர உன்னை,//

ஹா..ஹா.. அம்பியண்ணா.. பின்னிட்டிங்க.. கலக்கிட்டிங்க,,அங்கதான் நீங்க நிக்கறிங்க போங்க.. ரிப்பீட்டேய்ய்ய்...

ரசிகன் said...

இனிய நல்வாழ்த்துக்கள் அண்ணா & அண்ணி:)

ரசிகன் said...

அம்பியண்ணா கொஞ்சம் லேட்டாகிருச்சு.. வர்ரதுக்கு இருந்தாலும் வாழ்த்துக்களுக்கு நேரம் காலம் எதுக்கு:)

ரசிகன் said...

// வல்லிசிம்ஹன் said...

திருமண நாள் நல் வாழ்த்துகள் அம்பி.
ரங்குவூம் தங்குவும்

ஒரு சிங்கக் குட்டியைப் பெற்று சீரும் சிறப்புமாக வாழ்த்துகள். மெனி ஹாப்பி ரிடர்ன்ஸ் ஆஃப் தெ டே:)//

ரிப்பீட்டேய்ய்ய்ய்....

ரசிகன் said...

//Blogger பாலராஜன்கீதா said...

//
http://mscongenialityforall.blogspot.com/2007/04/beautiful.html

3. My Rangamani-Best thing that has ever happened to me :) :
I see a duplicate version of my father in him sometimes which makes me feel all the more luckier. Though I speak out angrily sometimes in haste and at times a bit stubborn, he remains calm until I cool down and then makes me realize my mistake. When he had come to receive me, my parents, him and I had gone for shopping. He had also come to my place. He had mingled so well with my parents without any hesitation and never felt uncomfortable at any point of time. SKM akka keeps saying that some guys would understand what a girl needs only if explicitly told but some will understand with just a hint.Ambi is of the second type and you are so lucky to have him is what she says. I can feel it too. //

அம்பிக்கு இதைவிட நல்ல கேசரி கிடைக்குமா ?
:-)
இருவருக்கும் இனிய திருமண நன்னாள் வாழ்த்துகள்.//

இதுக்கு டிரிபிள் ரிப்பீட்டேய் போட்டுக்கிறேன்:))

கார்த்திகேயன் . கருணாநிதி said...

bloger யுனியன்ல join பண்ணனுமுன்னு நினைச்சா
பரிட்சை எல்லாம் வேப்பிங்களா ?

அன்புடன்
கார்த்திக்

cheena (சீனா) said...

அன்பின் அம்பி

இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள்

எல்லா நலனும் பெற்று பெரு வாழ்வு வாழ வாழ்த்துகள்

மறுபாதியிடம் அன்பினை, வாழ்த்தினைத் தெரிவிக்கவும்

அன்புடன் சீனா

ambi said...

@all, வாழ்த்து தெரிவித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மிக்க நன்றி ஹை!

ambi said...

//அம்பிக்கு இதைவிட நல்ல கேசரி கிடைக்குமா ?
//

@பாலராஜன் கீதா, பீல் பண்ண வெச்சுடீங்க போங்க. :))

//உங்க மனைவியின் blog பார்த்தேன். அவங்க ரொம்பவே சீரியஸ் ரைட்டர் போல. உங்க ப்ளாக் எல்லாம படிக்க மாட்டாங்கன்னு தோணுது //

@sridhar, ஹிஹி, Opposite poles attract each other. :))

//ஆங்கிலத்தில எழுதறதனால அப்படில்லாம் தப்புக் கணக்கு போடப்படாது ஆமா...

அம்பி,தங்குவை தமிழில் எழுதச் சொல்லுங்க கலக்குவாங்க.....//

அறிவன், அதானே! கண்டிப்பா சொல்றேன். :))

//பாத்திரத்தை பளபளவென மின்னலடிக்கும் வெண்மையானதாக மாற்றத் தெரிந்த ரங்குவாக எல்லாம் மிஸ் ஆகுதே..//

@Gsubbu, அடடா! என் கடமையை உணர்த்திய கோப்ஸ்க்கு மிக்க நன்னி. :p

ambi said...

//bloger யுனியன்ல join பண்ணனுமுன்னு நினைச்சா
பரிட்சை எல்லாம் வேப்பிங்களா ?
//

@karthik, இதுவரைக்கும் இல்லை, இனிமே வைக்கலாம்னு இருக்கோம். :)

Anonymous said...

unnai unnainu list podrachay..nejamavay rajini pesiruntha epdi irunthirukumnu yosichi sirichikiten :) top class

gils

奇堡比 said...

新女性徵信
外遇調查站
鴻海徵信
亞洲徵信
非凡徵信社
鳳凰徵信社
中華新女性徵信社
全國新女性徵信社
全省女人徵信有限公司
私家偵探超優網
女人感情會館-婚姻感情挽回徵信
女子偵探徵信網
女子國際徵信
外遇抓姦偵探社
女子徵信社
女人國際徵信
女子徵信社
台中縣徵信商業同業公會
成功科技器材
女人國際徵信社
女人國際徵信
三立徵信社-外遇
女人國際徵信
女人國際徵信
大同女人徵信聯盟
晚晴徵信