Wednesday, January 16, 2008

எழுதியதில் பிடித்தது

அன்புடன் வல்லி அம்மா ஒரு கொக்கியில் என்னை மாட்டிவிட்டு விட்டார்கள். ஏற்கனவே ரசிகனின் டேக் பாக்கி. ஆனால் நாம் எழுதுவதில் முக்கால்வாசி மொக்கை வகை தான் என்பதால் தனியா நாம வேற ஒரு டேக் எழுதனுமா?னு ஒரு யோசனை. அதனால கோச்சுகாதீங்க ரசிகன்.

அடியேன் எழுதியதில் பிடித்தது எது?னு ஒன்று! இரண்டு!னு வரிசைபடுத்தி, கீதா பாட்டி மாதிரி, மன்னிக்கவும், அவ்வையார் மாதிரி நமக்கு நாமே திட்டப்படி ஒரு விளம்பரம் தேங்க்!னு சுட்டி(லிங்க்) குடுக்கனும்.

ஆஹா! கைல கிடைச்ச லட்டு போல அருமையான வாய்ப்பு. விட்ருவோமா என்ன? இதோ:

1) சென்னையில் நான் வேலை பாத்த போது நடந்த ஆபிஸ் பார்ட்டி தான் நான் மிகவும் ரசித்து எழுதியது.
(பார்ட்டி என்றால் எல்லோரும் சந்திக்கும் நிகழ்ச்சி! என பொருள் கொள்ளவும்.)

2a) இதே மாதிரி நாங்கள் கலந்து கொண்ட ஒரு இசை போட்டி பற்றிய பதிவுக்கு தான் இரண்டாம் இடம்.
2b) தங்கமணியை பொண்ணு பாக்க போன நிகழ்வுகள் பற்றிய பதிவும் இரண்டாம் இடத்தை பிடிக்கிறது. (ஹிஹி, மூணாம் இடம் குடுத்தா என்ன நடக்கும்?னு எங்களுக்கு தெரியாது?)

3) தீபாவளிக்கு(பாவனா நடிச்ச படம் இல்லை) பஸ் டிக்கட் எடுத்த நிகழ்வு பத்திய பதிவு மூணாம் இடத்தை பிடிக்கிறது.

ஆன்மீக பதிவுகள், என்ன தான் நான் கஷ்டப்பட்டு எழுதினாலும், "எல்லா புகழும் தம்பி கனேசனுக்கே!" என எதிர் கட்சிகள் முழங்குகிறார்கள்.
சரி, பரவாயில்லை, கந்த சஷ்டி விழாவின் போது நான் ரொம்ப ரசித்து, உருகி எழுதியது என் மனதுக்கு நிறைவை தந்த பதிவு.

நான் டேக் செய்ய விரும்பும் நபர்கள்:

1) கண்ணபிரான் ரவி சங்கர் அண்ணா: ஆன்மீகத்தில் பட்டய கிளப்பும் பதிவர்.

2) கைபுள்ளை: காமடி, பயண குறிப்புகள், குவிஜுனு ஒரு நடமாடும் தகவல் சுரங்கம். இட்டிலி நல்லா சாப்ட்டா வந்ருக்கா தல? :)

22 comments:

Anonymous said...

2a) இதே மாதிரி நாங்கள் கலந்து கொண்ட ஒரு இசை போட்டி பற்றிய பதிவுக்கு தான் இரண்டாம் இடம்.
2b) தங்கமணியை பொண்ணு பாக்க போன நிகழ்வுகள் பற்றிய பதிவும் இரண்டாம் இடத்தை பிடிக்கிறது. (ஹிஹி, மூணாம் இடம் குடுத்தா என்ன நடக்கும்?னு எங்களுக்கு தெரியாது?)

3) தீபாவளிக்கு(பாவனா நடிச்ச படம் இல்லை) பஸ் டிக்கட் எடுத்த நிகழ்வு பத்திய பதிவு மூணாம் இடத்தை பிடிக்கிறது.


Aha - Mokkai padhivua irundhalum, evvalavu porupa nyabgam vechu irukeenga ambi.....

neenga solla solla , manasila - andha naal nyabagam varudhae - Neena sonna padhivugal elam inimaiyanavai...

Hmmm...
appo epadi adhu ellam mokkai padhuva agum??? Ellam GEMS... (Kindal pannalai ambi. Nijama solren.)

With Love,
Usha Sankar.

Dreamzz said...

//தங்கமணியை பொண்ணு பாக்க போன நிகழ்வுகள் பற்றிய பதிவும் இரண்டாம் இடத்தை பிடிக்கிறது//
ROFL!

Dreamzz said...

நான் தான் 2nd! ஹேய்ய்ய்ய்ய்!

Dreamzz said...

சூப்பரு :)

Dreamzz said...

வர்ட்டா!

Arunkumar said...

annathe HAPPY PONGAL

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//2b) தங்கமணியை பொண்ணு பாக்க போன நிகழ்வுகள் பற்றிய பதிவும் இரண்டாம் இடத்தை பிடிக்கிறது. (ஹிஹி, மூணாம் இடம் குடுத்தா என்ன நடக்கும்?னு எங்களுக்கு தெரியாது?)//

இரண்டாம் இடம் கொடுத்ததுக்கே, உமக்கு இடி-ஆப்பம் தயாராகிக்கிட்டு இருக்கு! :-)
அதுவும் அதில் கூட a இல்லை, b கொடுத்திருக்கீங்க! அடுத்த பதிவு left hand writing தாண்டீ உனக்கு! :-)

//1) கண்ணபிரான் ரவி சங்கர் அண்ணா: ஆன்மீகத்தில் பட்டய கிளப்பும் பதிவர்.//

யோவ்! நான் என்ன பிரியாணி கடையா நடத்தறேன்? பட்டை, லவங்கம், கசகசா கெளப்பறேன்னு இப்படிப் போட்டுத் தாக்குறீங்க!

சரி சீக்கிரம் டேக்குறேன்!
ஏற்கனவே ஷைலஜா, சீனா சார்-னு அவங்க டேக்கே இன்னும் பாக்கி இருக்கு!
கோச்சிக்காதீங்க சார்/ஷைல்ஸ்!
ஒரே கல்லுல மூனு மாங்காய் அடிச்சி ஆடிடறேன்! :-)

ambi said...

//Ellam GEMS... (Kindal pannalai ambi. Nijama solren.)
//
@usha shankar, ஜெம்ஸா? எது இந்த கலர் கலரா இனிப்பா குழந்தைங்க சாப்டுமே அத தானே சொல்றீங்க? :)))

என்னை வெச்சு காமடி கீமடி எதும் பண்ணலையே மேடம்..? :p

@dreamz, மிக்க நன்னி தினேஷ்! :)

//ரெண்டாவது இடம் கொடுத்ததுக்கே நியாயமா பார்க்க போனா மண்டகப்படி கிடைக்கனுமே//

@veda, பத்த வெச்சியே வேதா!
நீங்கள் மனம் விட்டு சிரித்தது பற்றி மிக்க மகிழ்ச்சி! :))

@arun, என்னப்பா அருண், கரக்ட்டா மாட்டு பொங்கல் முடிஞ்சதுக்கபுறம் பொங்கல் வாழ்த்து சொல்ற எனக்கு. ரொம்ப தான் குசும்பு! :)))

//அதுவும் அதில் கூட a இல்லை, b கொடுத்திருக்கீங்க! //
@KRS, எப்படி எல்லாம் கோர்த்து விடறீங்க பா! :)

//ஒரே கல்லுல மூனு மாங்காய் அடிச்சி ஆடிடறேன்//

மூனு என்ன முப்பது மாங்கா கூட நீங்க அடிப்பீங்க. :))

வல்லிசிம்ஹன் said...

மீண்டும் உங்க பதிவுகளைப் படிக்க சந்தர்ப்பம் கிடைச்சது அம்பி. தான்க் யூ.
அதுவும் தங்க மணியைப் பெண் பார்க்கப் போனது அற்புதம்.:)

நன்றிப்பா.

Geetha Sambasivam said...

//ஆன்மீக பதிவுகள், என்ன தான் நான் கஷ்டப்பட்டு எழுதினாலும், "எல்லா புகழும் தம்பி கனேசனுக்கே!" என எதிர் கட்சிகள் முழங்குகிறார்கள்.//

உண்மை வெளியில் வந்தது!

//அடுத்த பதிவு left hand writing தாண்டீ உனக்கு! :-)//

ரிப்பீஈஈஈஈஈட்ட்ட்ட்ட்டேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ
அப்பாடா, மனசு குளிர்ச்சியா இருக்கு! :P

ரசிகன் said...

இப்படி ஒட்டுமொத்தமா ஏமாத்தினாலும்,உங்க மலரும் நினைவுகளை சொல்லி சிரிக்க வைச்சதால (லிங்கெல்லாம் படிச்சிட்டோம்ல்ல..:)ஓகே..
எல்லாமே சூப்பரு.. குடுத்து வைச்சவங்க் நீங்க..(யாருக்கிட்டன்னெல்லாம் கேக்கப்டாது..:)))))
வாழ்த்துக்கள் அம்பியண்ணா...

கைப்புள்ள said...

//இட்டிலி நல்லா சாப்ட்டா வந்ருக்கா தல? :)//

அடி வாங்கி அடி வாங்கி ஒடம்பு தான் இட்லி இட்லியா வீங்கியிருக்கு...திருநெல்வேலி குசும்பைக் காட்டறேன்னுட்டு குஷ்பு இட்லியா...காஞ்சிபுரம் இட்லியான்னு கேக்கப்பிடாது...டென்சன் ஆகிடுவேன்.

Anonymous said...

pazhaiya post paddikka padikka inimai.thangamani erkanave ungalukku 2(b).indha azhagula deepavalinna ungalukku bavana nyapagam vera varuda.usharu sollitten.
nivi.

மெளலி (மதுரையம்பதி) said...

ஒரு உள்ளேனய்யா மட்டும் போட்டுவிடுகிறேன்.

Story Teller said...

M Back... (Billavil namba thalai solgira madhiri idhai padikavum...)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

அம்பி அண்ணாவின் ஆணையைச் சிரமேற் கொண்டு, சிங்காரத் தமிழை மொண்டு, சிட்லபாக்கத்தில் நிண்டு...ச்சே இன்னிக்கி எகனை மொகனையே சரியா வரலை! ஏதோ ஒன்னு, வெளம்பரப் பதிவைப் போட்டாச்சுங்கோ!

//கைப்புள்ள said...
அடி வாங்கி அடி வாங்கி ஒடம்பு தான் இட்லி இட்லியா வீங்கியிருக்கு...திருநெல்வேலி குசும்பைக் காட்டறேன்னுட்டு குஷ்பு இட்லியா...காஞ்சிபுரம் இட்லியான்னு கேக்கப்பிடாது...டென்சன் ஆகிடுவேன்//

தல கைப்பு! நீங்க இட்லியை மட்டும் தான் விலக்கினீங்கன்னுட்டு அம்பி சட்னியைப் பத்தி கேக்க ஆரம்பிச்சிடுவாரு! சாக்கிரதையா இருந்துக்கோங்க! உடம்பு இட்லியா வீங்கி இருக்குன்னா சட்னியில தான் ஒத்தடம் கொடுக்கோணும்னு சொல்லப் போறாரு பாருங்க! :-)
எந்தச் சட்னின்னு முருகன் இட்லிக் கடையில் தான் கேக்கணும்!

கைப்புள்ள said...

//உடம்பு இட்லியா வீங்கி இருக்குன்னா சட்னியில தான் ஒத்தடம் கொடுக்கோணும்னு சொல்லப் போறாரு பாருங்க! :-)//

அடிச்ச அடியில கிட்னி சட்னி ஆகித் தான் கெடக்கு :( தனியா வேற சட்னி வேணுமா?

கைப்புள்ள said...

விளம்பரப் பதிவைப் போட்டாச்சுங்ணா

http://kaipullai.blogspot.com/2008/01/blog-post_24.html

ambi said...

@valli madam, ரொம்ப நாள் கழிச்சு என்னை பிளாஷ்பாக் செய்ய வைத்த உங்களுக்கு தான் நன்றி மேடம். :)

//அப்பாடா, மனசு குளிர்ச்சியா இருக்கு!//

@geetha paati, அதானே! பின்ன இருக்காதா? வீட்டுக்கு வீடு வாசப்படி. :))

//எல்லாமே சூப்பரு.. குடுத்து வைச்சவங்க் நீங்க..//

@rasigan, ஆமா! ஆமா! பாராட்டுக்கு மிக்க நன்னி :)

@kaipulla, உங்க கேள்விக்கு KRS அண்ணாச்சி பதில் சொல்லிருக்காரு பாருங்க, எல்லாம் அவர் சொந்த அனுபவம் பேசுது. :)

@nivi, வாங்க நிவி, வந்த வேலையை கச்சிதமா முடிச்சாசா? :))

ambi said...

@m'pathi, நானும் ஒரு அட்டனன்ஸ் போட்டுக்கறேன். :)

@delhi tamilan, வாங்க, வாங்க. எங்க நயன் தாரா? :p

//இன்னிக்கி எகனை மொகனையே சரியா வரலை! //

@KRS, உங்களுக்கேவா? :p

//உடம்பு இட்லியா வீங்கி இருக்குன்னா சட்னியில தான் ஒத்தடம் கொடுக்கோணும்னு சொல்லப் போறாரு பாருங்க!//

@KRS, முன் அனுபவம் பேசுது இல்லையா? :p

//அடிச்ச அடியில கிட்னி சட்னி ஆகித் தான் கெடக்கு//

@kaips, உங்களுக்குமா? :))

தி. ரா. ச.(T.R.C.) said...

என் ஓட்டு பார்ட்டிக்குத்தான்

Sanjai Gandhi said...

//(பார்ட்டி என்றால் எல்லோரும் சந்திக்கும் நிகழ்ச்சி! என பொருள் கொள்ளவும்.)//

நாங்க என்ன எல்லோரும் சந்திக்கும் ஃபிகர் என்றா சொன்னோம்? :P