Sunday, January 06, 2008

சுந்தர காண்டம்

ராமாயணத்தில் ராமனின் சிறப்பை சொல்ல பல பகுதிகளாக(காண்டங்களாக) பிரித்த கம்பர், சுந்தர காண்டம் என ஒரு பகுதிக்கு பெயரிட்டுள்ளார். இந்த பகுதியில் மட்டும் முழுக்க முழுக்க அனுமனின் சிறப்பை நமக்கு விளக்குகிறது. சுந்தர காண்டம் படித்தால் முழு ராமயணமே படித்த மாதிரி. ஏனேனில் சீதையை அசோக வனத்தில் பார்க்கும் அனுமன், ராமனின் பிறப்பு, வளர்ப்பு என அத்தனையும் பாட்டாக பாடி விடுகிறார். மேலும் துயரம் கொள்ளும் சீதையை தேற்றும் விதமாக, "ராவண வதம் நடந்து, நீங்கள் இருவரும் சந்தோஷமாக அயோத்தி சென்று ராஜ்ய பரிபாலனம் செய்வீர்கள்!" என முழு ராமாயணத்தையும் சொல்லி விடுகிறார்.
சுந்தரன் என்றால் அழகன் என பொருள்படும். உருவத்தால் மட்டுமல்ல, குணத்தால், நல்ல மனதால், இனிமையான வார்த்தைகளால் எவர் ஒருவர் பிரகாசிகின்றாரோ அவரே சுந்தரன். தமது இனிமையான, புத்திசாலித்தனமான பேச்சால், துயரத்தில் வாடும் ராமனையும், சீதையையும் தேற்றும் அனுமன் சுந்தரன் தானே!
என்ன தான் ராமன் தெய்வ அம்சமென்றாலும், மனித ஜென்மம் எடுத்ததால், மனைவியை பிரிந்த துயரால் பலவாறு புலம்ப, அப்போழுது அனுமனே தக்க வார்த்தைகள் பேசி தேற்றுகிறான்.
அதே போல வரங்கள் பல வாங்கி இருந்தாலும், ஈஸ்வர பட்டமே பெற்று இருந்தாலும், பிறர் மனை நோக்கும் ஈனச் செயலை ராவணன் செய்துவிடுகிறான். இலங்கைக்கு செல்லும் அனுமன் கடைசி முயற்சியாக ராவணனுக்கு நல்ல புத்தி சொல்கிறார்.
ஆக, பிறப்பால் குரங்காக அவதாரம் எடுத்தாலும், மனிதனாய் பிறந்த ராமனுக்கும், வல்லமை படைத்த அரக்க குலத்தில் பிறந்த ராவணனக்கும் புத்தி சொல்லும் உயரிய நிலைக்கு அனுமன் உயர்கிறார்.
சுருங்க சொல்லி பொருள் விளங்க வைப்பதில் அனுமனுக்கு இணையே இல்லை.
"கண்டேன் கற்பின் கனலை" என்ற ஒற்றை வரியில் தான் எத்தனை பொருள்?
1) எந்த காரியத்துக்கு நான் சென்றேனோ அது ராமன் அருளால் வெற்றி என சூசகமாக, அடக்கமாக சொல்கிறார் அனுமன்.
2) சீதை உயிரோடு இருக்கிறாள், மேலும் சீரிய கற்போடு இருக்கிறாள் என மிக அழகாக தெரிவிக்கிறார் அனுமன்.

இவ்வளவு சிறப்புகள் பெற்றிருந்த போதும், அதை பற்றி துளியும் கர்வம் கொள்ளாமல், "தன்னடக்கமே உன் பெயர் அனுமனா?" என வியக்கும் வண்ணம், ராம பட்டாபிஷேகத்தின் போது, ராமனின் காலடியில் பவ்யமாக அமர்ந்திருந்து, இந்த பூவுலகில் எங்கெல்லாம் ராம நாமம் ஜெபிக்கபடுகிறதோ அங்கெல்லாம் வந்து சேவை சாதிக்கும் அந்த அனுமன் அவதரித்த திருநாள் மார்கழி மாதம் அமாவாசை திதியும் மூல நட்சத்திரமும் கூடிய நன்னாள் வரும் செவ்வாய்கிழமை(8th ஜனவரி) வருகிறது. இந்த நன்னாளில் சின்ன திருவடி என போற்றப்படும் அஞ்சனா மைந்தன், வாயு குமாரன், வானரவீரன், ராமதூதன், பக்தர்களின் குரலுக்கு ஓடி வருபவன் எல்லா வளங்களையும், என்றும் மாறா தன்னடக்கத்தையும் நமக்கு தரட்டும்.


சென்ற வருட பதிவு இங்கே!

19 comments:

Dreamzz said...

ஜெய் ஆஞ்சிநேயா!

Dreamzz said...

நல்ல விளக்கம் :)

வேதா said...

ஹனுமத் ஜெயந்திக்கு முந்திக்கிட்டு பதிவு போட்டுட்டீங்க :)எல்லா புகழும் அனுமனுக்கே ;D ஹிஹி போன வருட பதிவு தான் சூப்பர் :)

mgnithi said...

nalla ezhutirukeenga ambi.. Nanganallur anjaneyar thaan namma friend... avarai meet panrathu thaan konjam rare..

Anonymous said...

JAI BAJRANG BALI,JAI SITA RAM.
romba nalla post.
nivi.

ரசிகன் said...

//"கண்டேன் கற்பின் கனலை" என்ற ஒற்றை வரியில் தான் எத்தனை பொருள்?
1) எந்த காரியத்துக்கு நான் சென்றேனோ அது ராமன் அருளால் வெற்றி என சூசகமாக, அடக்கமாக சொல்கிறார் அனுமன்.
2) சீதை உயிரோடு இருக்கிறாள், மேலும் சீரிய கற்போடு இருக்கிறாள் என மிக அழகாக தெரிவிக்கிறார் அனுமன்.//

வியக்கிறேன் கம்பனின் கவித்திறனை.. பின்னே கட்டுத்தறியும் கவிப்பாடுமல்லவா கம்பன் வீட்டில்..:)
விளக்கங்களும் அருமை..

கீதா சாம்பசிவம் said...

இப்போத் தான் கணேசன் ஆபீச்சுக்கே வந்தாச்சே, அதான் ஊருக்கு முன்னாலேயே ஆஞ்சநேயர் பதிவும் வந்துடுச்சா?

எங்கப்பா கணேசா, உனக்கு ஆனாலும் இவ்வளவு "தியாக" :P மனப்பான்மை வேண்டாம். அது சரி, ராமாயண பரதனோ, லட்சுமணனோ உனக்கு ஈடாவாரா???? :P

தி. ரா. ச.(T.R.C.) said...

ஜெயராம் ஸ்ரீராம்.

ஆயிரம் பரதரும் கணேசனுக்கு ஈடாவாரோ/

தி. ரா. ச.(T.R.C.) said...

ராம பட்டாபிஷேகம் படம் நம்ம பதிவில் போட்டாச்சு உனக்காக அம்பி
வந்து பாரு.

Kittu said...

hi ambi
good one. hanuman jayanthi ku apt post.

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

அம்பி,இது என்ன உங்க ப்ளாக்ல சம்பந்தமே இல்லாத பதிவு.புரியலையே.

sury said...

திராச எனும் பதிவில் த‌ங்கள் முகவரி கண்டேன்.
தீராதவற்றையெலாம் தீர்த்து வைக்கும்
அனுமன் தரிசனம் பெற்றேன்.
ந‌ன்றி.
தாங்க‌ள் சொல்லிய‌ ச‌ம்பு ந‌ட‌ன‌ம்
( ந‌டேச‌ அஷ்ட‌க‌ம்) என்றும் சொல்வார்க‌ள்
முடி ந்த‌ வ‌ரை சொல்ல‌ முய‌ற்சித்திருக்கிறேன்.
வ‌ர‌வும்
http://pureaanmeekam.blogspot.com
இவ‌ண்
சுப்பு ர‌த்தின‌ம்
த‌ஞ்சை.

வல்லிசிம்ஹன் said...

அம்பி,
இப்போதுதான் பார்த்தேன்.

வேளுக்குடி கேட்டுக் கொண்டே இதையும் படித்தேன்.

அனுமன் மாதிரி வருமா. அவர் பற்றி சிலாக்கியப் படுத்தி எழுதுவதற்கும் வாக்கு வன்மை வேணும். அது இங்கு பார்த்தது சந்தோஷமா இருக்கு.

வல்லிசிம்ஹன் said...

அம்பி, உங்களை டேக் செய்து பதிவிட்டு இருக்கிறேன்.
எழுதி கௌரவிக்கணும்:))
http://naachiyaar.blogspot.com/2008/01/blog-post_13.html
சரியா?

sury said...

அம்பி சாரின் வருகைக்கு எங்களது நன்றி
நடேச அஷ்டகம் என்று சொல்லப்படும்
சம்பு நடனம் எனது வலைப்பதிவில்
http://movieraghas.blogspot.com
ல் போடப்பட்டிருக்கிறது. தவறுதலாக ஆன்மீகம் வலைப்பதிவு
என எழுதிவிட்டேன். வந்ததிற்கு பாபாவின் அருளைப் பெற்று
இருப்பீர்கள்.
கணேஷ், குமரேஷ் ஆகிய இரு வயலின் வித்வான்களும்
பஞ்ச ராகங்களில், பஞ்ச அக்ஷரமான நம சிவாயத்தை
சொல்லிடும் வகையில் சம்பு நடனத்தினை தம் வயலின்
இசையில் அற்புதமாக வாசித்திருக்கிறார்கள்.
அதை என்னால் முடிந்த வரையில் 4 ஸ்டான்சாஸ் மட்டும்
வாசகத்தினைப் பாடியிருக்கிறேன் என்று சொல்ல முடியாது.
வாசித்திருக்கிறேன்.
சம்பு நடனத்தை ப் பார்த்துவிட்டு, எங்கள் வீடு
http://menakasury.blogspot.com
வந்து பொங்கல் சாப்பிட்டுவிட்டு
சென்றால், எங்களுக்கு மகிழ்வாக இருக்கும்.
மேனகா சுப்புரத்தினம்.
சுப்புரத்தினம்.

My days(Gops) said...

ஜெய் ஆஞ்சிநேயா

Karthik B.S. said...

sundhara... :D

மங்களூர் சிவா said...

nice post!

Jai Anjeneyaa

奇堡比 said...

新女性徵信
外遇調查站
鴻海徵信
亞洲徵信
非凡徵信社
鳳凰徵信社
中華新女性徵信社
全國新女性徵信社
全省女人徵信有限公司
私家偵探超優網
女人感情會館-婚姻感情挽回徵信
女子偵探徵信網
女子國際徵信
外遇抓姦偵探社
女子徵信社
女人國際徵信
女子徵信社
台中縣徵信商業同業公會
成功科技器材
女人國際徵信社
女人國際徵信
三立徵信社-外遇
女人國際徵信
女人國際徵信
大同女人徵信聯盟
晚晴徵信