Tuesday, December 19, 2006

ஹேப்பி பர்த்டே டியர் ஆஞ்சேனேயா!
டிசம்பர் 20 - மார்கழி மாதம் - மூல நக்ஷத்திரம் வாயு குமாரன், அஞ்சனா மைந்தன், ஷ்ரிராம தூதன், அடக்கமே வடிவானவன், சொல்லின் செல்வன், கூப்பிட்ட குரலுக்கு மனோ வேகத்தில் ஓடி வருபவன், என் நெஞ்சில் என்றும் குடி கொண்டு இருக்கும் ஆஞ்சேனேய ஸ்வாமி அவதரித்த திரு நாள்.

இவரை பற்றி எழுத இந்த ஒரு பதிவு போதாது! தன்னடக்கம் என்றால் அது ஆஞ்சேனேயர் தான்!

அயோத்தி மா நகரம் திருவிழா கோலம் பூண்டு இருந்தது. ஆம்! 14 வருடங்கள் கழித்து அவர்கள் உள்ளம் கவர் ரகு வம்சத்தில் உதித்த ஷ்ரிராமன் மரவுரி களைந்து ராஜாராமனாக வெண் பட்டுடை அணிந்து, நெற்றியில் சூரிய திலகம் இட்டு, மார்பில் முத்து மாலைகள் அசைய, பரந்து விரிந்த தோளில் சிவப்பு நிற அங்கவஸ்தரம் புரள, ஒரு கையில் கோதண்ட வில்லும், மறு கையில் ஒர் அம்புமாக சீதா தேவி இடப்புறம் அமர சிம்மாசனத்தில் அமர்ந்து வசிஷ்டர் தலமையில் வேத மந்த்ரங்கள் முழங்க பஞ்ச வாத்தியங்கள் முழங்க, ரகுகுலத்தின் நவரத்ன கீரீடத்தை தன் திருமுடியில் சூட்டிக் கொள்ளும் திருநாள்.


ஒரு புறம் உருவிய வாளுடன் லக்ஷ்மணனும் சத்ருகனனும் மெய்காப்பாளர்களாக நிற்க, மறு புறம் கூப்பிய கைகளுடன் பரதன், விபீஷணன், சுக்ரீவன், அங்கதன், ஜாம்பவான் ஆகியோர் நிற்க, எல்லார் கண்ணும் தேடுகிறதே யாரை..? எங்கே ஷ்ரிராமனின் தாசன் அனுமான்..?

இதோ,ஷ்ரிராமனின் திருவடிகளில் கண்ணீர் மள்க கூப்பிய கரங்களுடன், மண்டியிட்டு "இந்த காண கிடைக்காத காட்சியை காண தானே பிரபு, இந்த அடியவன் காத்திருந்தேன்! என்று என் தலைவன் பவ்யமாக அமர்ந்து இருக்கிறான்.

சூரிய பகவானிடம் 4 வேதங்களையும் கற்க அவருடன் சரிசமமாக பயணம் செய்து குருகுலம் பயின்ற அந்த தீக்கொழுந்தா இவன்..?

விஸ்வரூபம் எடுத்து கடலை சர்வ சாதாரணமாக தாண்டிய அந்த உருவமா இது..?

ராவணன் முன்னால் கம்பீரமாக வாலினால் சிம்மாசனம் போட்டு அமர்ந்த அந்த அனுமனா?

இலங்கைக்கு தீ வைத்து விட்டு சற்றும் தளர்வடையாமல் பறந்து வந்து, "கண்டேன் கற்பின் கொழுந்தை!" என சொன்ன அந்த சொல்லின் செல்வனா இவன்..?

பட்டாபிஷேகம் முடிந்ததும், அவரவர்க்கு பரிசுகளை வாரி வழங்கிய ஷ்ரிராமனை பார்த்து சீதா தேவி, ஸ்வாமி! அனுமனை மறந்து விட்டீர்களே?என்று கேட்க, ராமனும் இல்லை ப்ரியே! அவனுக்கு குடுக்க என்னிடம் ஒன்றுமே இல்லையே! என்று தான் யோஜனை, இருந்தாலும் நமது கல்யாணத்தில் அணிந்த முத்து மாலையை அளிப்போம்! என்று அனுமனுக்கு அளிக்கிறார்.

அதோடு, சிரஞ்சீவி(எலேய் ஷ்யாம்! தெலுங்கு நடிகர் இல்லை) பட்டத்தையும் அளித்து, எங்கேல்லாம் ராம நாமம் சொல்லபடுகிறதோ அங்கெல்லாம் அனுமன் இருந்து அதை காது குளிர கேட்க்கும் வரத்தையும் அளிக்கிறார்.

இந்த பதிவையும் எனது தலைவன் அனுமன் கண்டிப்பாக படித்து பூரிப்பான்! ஹிஹி, கமெண்ட்டும் போடுவான். :)
அதனால் தான் ராமர் பட்டாபிஷேகத்தை பற்றி விரிவாக எழுதி உள்ளேன். ஹேப்பி பர்த்டே தல!

1) முதன் முதலாக Open heart surgery பண்ணி தனது நெஞ்சில் ராமரை காட்டியது எனது தங்க தலைவன் தான்!

2) முதன் முதலாக கூரியர் சர்வீஸை அறிமுகபடுத்தி ராமரின் கணையாழி, சீதையின் சூடாமணியை பத்ரமாக அவரவரிடம் சேர்த்தவன் என் தல தான்!3) முதன் முதலாக பறக்கும் ஆம்புலன்ஸை(சஞ்சீவி மலை) அறிமுகப்படுத்தியது நீங்க தானே தல!

4) முதன் முதலாக பாஸ்போர்ட், விசா இல்லாமல் இமிக்ரேஷனில் மாட்டிக்காமல் பயணம் செய்தது என்னுடைய தல தான்!

5) அவர் பிரம்மசரிய விரததில் இருந்தாலும், தனது வாலில் பொட்டு வைக்கும் பெண்களுக்கு(பிகர்களுக்கு!னு வாசிக்கப்படாது ஷ்யாம்!) திருமணம் நடத்தி வைக்கிற அவரது பெருந்தண்மை தான் என்னே!

இந்த நாள் வரை அனுமனை வழிபடாமல் எந்த காரியமும் செய்த்ததில்லை, அவரும் என்னை கைவிட்டதில்லை. இதோ இந்த வருடம், அவரது அருள் எனக்கு பரிபூரணமாக கிடைத்து உள்ளது! சென்னையில் மழை பெஞ்சு இருக்கா?னு பார்க்க போன நான் சனிகிழமை நங்க நல்லூர் ஆஞ்சேனேயர் கோவிலுக்கும் சென்று பிரார்த்தனை நிறைவேற்றி வந்தேன்!

45 நாட்கள் சுந்தர காண்டம் படித்தால் நமது நியாயமான விருப்பங்கள் கண்டிப்பாக நிறைவேறும்! என்று என் அம்மா சொல்லி இருக்கிறார்கள். இந்த சுந்தர காண்டத்தின் சிறப்பை பற்றி தனியாக ஒரு பதிவு போடலாம்! என்று ஆசை. அனுமார் கருணையினால் நடக்கும் என்று நம்புகிறேன்.

எத்தகைய உயர்ந்த பதவியில் இருந்தாலும், லட்சம் கோடி சம்பாதித்தாலும், தன்னடக்கத்தையும் பவ்யத்தையும் அந்த அனுமன் நமக்கும் தரட்டும்! என்று வேண்டிக் கொள்கிறேன். ஜெய் ஷ்ரிராம்! ஜெய் ஆஞ்சேனேயா!


பி.கு:    விரைவில் வெளிவருகிறது "ஆதலால் பிளாக் எழுதுவீர்" உலகமெங்கும்!

70 comments:

G3 said...

Naan dhaan 1st boniya? Aanjaneyarkku pirandhanaal vaazhthukkal.. :)

Ada.. neenga porandha adhey maasathula dhaan avarum porandhirukkaaru :)

G3 said...

Mudhan mudhal listu chooper :)

G3 said...

yappa.. innoru round padichaachu :)

//எத்தகைய உயர்ந்த பதவியில் இருந்தாலும், லட்சம் கோடி சம்பாதித்தாலும், தன்னடக்கத்தையும் பவ்யத்தையும் அந்த அனுமன் நமக்கும் தரட்டும்! //
Ippadi oru statement sollitu..
//விரைவில் வெளிவருகிறது "ஆதலால் பிளாக் எழுதுவீர்" உலகமெங்கும்//
Ippadi oru buildupa?? :P

வேதா said...

நான் எழுதலாம்னு இருந்தேன் முந்திக்கிட்டீங்க அதுவும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள் சொல்லி:)

Ms.Congeniality said...

Romba azhagaana arumayaana padhivu:-)
Anjaneyar a pathi kekarthuku padikardhuku enaku romba pudikum :-)

மு.கார்த்திகேயன் said...
This comment has been removed by a blog administrator.
மு.கார்த்திகேயன் said...

ஆஞ்சநேயரை பற்றி அழகான ஒரு பதிவு அம்பி..
அதிலும் எல்லா நவீன வசிகளையும் முதலில் செய்தது அவர் தான்னு ஒரு புது கண்ணோட்டத்துல பாயின்ட் பாயின்டா சொல்லி கலக்கிட்டப்பா..

உனக்கு என்னா கோபம் நாட்டாமை மேல.. சைட்ல அவருக்கு வேற ஆப்பு வைக்கிற..

ஆமா பாஞ்சாப் கிடச்சது அனுமான் அருளாலா..அம்பி

அனுமானரை பற்றி அவரோட கிராமத்து புராணங்கள் பற்றி சொல்ல நீறைய விஷயங்கள் உண்டு அம்பி..


"ஹேப்பி பர்த்டே டியர் ஆஞ்சேனேயா!"

Priya said...

ஓ! நீங்க ஆஞ்சநேய பக்தரா? ஹ்ம்ம்ம்..

//) முதன் முதலாக Open heart surgery பண்ணி தனது நெஞ்சில் ராமரை காட்டியது எனது தங்க தலைவன் தான்!

2) முதன் முதலாக கூரியர் சர்வீஸை அறிமுகபடுத்தி ராமரின் கணையாழி, சீதையின் சூடாமணியை பத்ரமாக அவரவரிடம் சேர்த்தவன் என் தல தான்!

3) முதன் முதலாக பறக்கும் ஆம்புலன்ஸை(சஞ்சீவி மலை) அறிமுகப்படுத்தியது நீங்க தானே தல!

4) முதன் முதலாக பாஸ்போர்ட், விசா இல்லாமல் இமிக்ரேஷனில் மாட்டிக்காமல் பயணம் செய்தது என்னுடைய தல தான்!

5) அவர் பிரம்மசரிய விரததில் இருந்தாலும், தனது வாலில் பொட்டு வைக்கும் பெண்களுக்கு(பிகர்களுக்கு!னு வாசிக்கப்படாது ஷ்யாம்!) திருமணம் நடத்தி வைக்கிற அவரது பெருந்தண்மை தான் என்னே!//

LOL.. அவர் பெருமைகளை காமெடி கலந்து அருமையா சொல்லியிருக்கிங்க உங்க ஸ்டைல்ல..
(இங்கயும் நாட்டாமையை வாரணுமா? ROFTL @ that)

நல்ல போஸ்ட். எனக்கு நாளைக்கு ஆஞ்டநேயர் ஜெயந்தினு தெரியாது. தெரியப் படுத்தினதுக்கும், இந்த நல்ல போஸ்ட்டுக்கும் நன்றி அம்பி.

Sandai-Kozhi said...

//) முதன் முதலாக Open heart surgery... முதன் முதலாக கூரியர் சர்வீஸை .... முதன் முதலாக பறக்கும் ஆம்புலன்ஸை.... முதன் முதலாக பாஸ்போர்ட், விசா இல்லாமல் இமிக்ரேஷனில் மாட்டிக்காமல் பயணம் செய்தது என்னுடைய தல தான்! //
yup,he is the best!
ivaraiyum vittu vaikalaiya neenga kalayikiradhai.ungal Thalaivarukku Happy birthday.

--SKM

தி. ரா. ச.(T.R.C.) said...

அம்பி அமர்களமான பதிவு.சே குரியர் சர்வீஸ்,மொபைல் ஆஸ்பிடல்,ஒபன் ஹார்ட் சர்ஜரி இதுக்கெல்லாம் காபிரைட் வெச்சுக்காம போனது தப்பு.சுந்தரகாண்டத்தைப் பற்றி நல்ல பதிவு படிக்கனுமா இந்த சைடுக்கு போhttp://mscongenialityforall.blogspot.com/2006/07/sundara-gaandam.html

ambi said...

@g3, danQ! no me kaarthigai maasam, avaru maarghazi maasam! :p

//Ippadi oru buildupa?? //
he hee, coz athula vara pora matter apdi! :p

//நான் எழுதலாம்னு இருந்தேன் முந்திக்கிட்டீங்க //
@veda, ohh is it..? U also write. we will read! :)

//Anjaneyar a pathi kekarthuku padikardhuku enaku romba pudikum //
@Ms.C, I know that. anjeneyar pathi ezhutharavangala..? :p

//என்னா கோபம் நாட்டாமை மேல.. //
@karthik, he hee, priya post poi paaru theriyum! :p

//ஆமா பஞ்சாப் கிடச்சது அனுமான் அருளாலா..அம்பி//
yow! summa iruyaa, sidela gummi adichuttu pogatha. :p

//அவரோட கிராமத்து புராணங்கள் பற்றி சொல்ல நீறைய விஷயங்கள் உண்டு அம்பி//
y don't U write karthi, instead of writing alot of cinima matters. :)


//அவர் பெருமைகளை காமெடி கலந்து அருமையா சொல்லியிருக்கிங்க உங்க ஸ்டைல்ல..
//
@priya, danQ danQ!

//இங்கயும் நாட்டாமையை வாரணுமா? ROFTL @ that)//
இங்கே தானே வார முடியும்! அவரு வீட்டு அட்ரஸ் மட்டும் தெரிஞ்சா அவர் வீட்டு தங்கமணி கிட்ட போட்டு குடுத்ருவோம் இல்ல! :)

//எனக்கு நாளைக்கு ஆஞ்டநேயர் ஜெயந்தினு தெரியாது. தெரியப் படுத்தினதுக்கும், இந்த நல்ல போஸ்ட்டுக்கும் நன்றி அம்பி.
//
U r most Welcome Priya. :)

//ivaraiyum vittu vaikalaiya neenga kalayikiradhai.//
@SKM, he hee, avaru kochukka maataru! :) danQ akka.

//இதுக்கெல்லாம் காபிரைட் வெச்சுக்காம போனது தப்பு.//
@TRC, he hee, இனிமே உஷாரா இருங்க.

//சுந்தரகாண்டத்தைப் பற்றி நல்ல பதிவு படிக்கனுமா இந்த சைடுக்கு போhttp://mscongenialityforall.blogspot.com/2006/07/sundara-gaandam.html //
ஆனாலும் இவ்ளோ குசும்பு ஆகாது உங்களுக்கு! :p

மு.கார்த்திகேயன் said...

//y don't U write karthi, instead of writing alot of cinima matters.//

மச்சான், நீ சொல்லிக்கேக்கலைனா போற போக்குல உன் அக்கா கிட்ட பத்தவச்சிடுவேல.. அது தான்.. அனுமாருக்கு ஒரு சல்யூட் வச்சு ஒரு பதிவை போட்டாச்சு..

எனக்கே தெரியுது.. நிறைய சினிமா மேட்டெருங்க தான் எழுதுறேன்னு.. ஆனா வேலை நிறையா இருந்து நேரம் குறைவா இருக்கப்ப அதுதானேப்ப கை கொடுக்குது..

Anonymous said...

yaaru... indha ABT courier service la malaiya thookittu varuvaare... avara pathi dhana ezhudhi irukkinga? :P
unga bothaikku avuru oorugaaya... lol. :-D Just kidding.. ;-)
-Viji

Gopalan Ramasubbu said...

//சென்னையில் மழை பெஞ்சு இருக்கா?னு பார்க்க போன நான் //

போன இடத்துல வடை ,போன்டா, பஜ்ஜி சொஜ்ஜி எல்லாம் கெடச்சுருக்குமே :D

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//ஒரு புறம் உருவிய வாளுடன் லக்ஷ்மணனும் சத்ருகனனும் மெய்காப்பாளர்களாக நிற்க, மறு புறம் கூப்பிய கைகளுடன் பரதன், விபீஷணன், சுக்ரீவன், அங்கதன், ஜாம்பவான் ஆகியோர் நிற்க//

இதோ கம்பராமாயணக் காட்சி!

அரியணை அனுமன் தாங்க,
அங்கதன் உடைவாள் ஏந்த,
பரதன் வெண்குடை கவிக்க,
இருவரும் கவரி பற்ற,

விரகடல் உலகம் ஏத்தும்
வெண்ணெய் நல்சடையன் வண்மை
மரபுளோன் கொடுக்க வாங்கி,
வசிட்டனே புனைந்தான் மௌலி

கலகலப்பாக அனுமன் புகழ் பாடியிருக்கீங்க அம்பி! வாழ்த்துக்கள் முதலில் ஐயன் அனுமனுக்கு, பின்னர் உங்களுக்கு!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//இந்த பதிவையும் எனது தலைவன் அனுமன் கண்டிப்பாக படித்து பூரிப்பான்! ஹிஹி, கமெண்ட்டும் போடுவான். :)//

ஹிஹி
அவன் அகண்ட ராம நாம பாராயணத்தில் இருப்பதால், அடியேனை அதற்கென்றே அனுப்பினான்! :-)

Anonymous said...

hey ambi, i've been reading ur blogs for a long time. but have never posted comments. aanjaneyar is one of my fav gods too. oru kuty suggestion sollalaame nu daan comments side ku vanden. pin kurippu (flash news) shud have been from right side to left side appo dan easy aa padika mudiyum.. next time remember that.
(sun tv flash news neenga paathade illa nu prove panrelaa ? naanga namba maatom ) .

---
bye
sree..

Dubukku said...

சாமீ எனக்கு ஒரு சந்தேகம்....என்னாடா பையனுக்கு ஆஞ்சனேயர் மேல ஒரே லவ்ஸ்ன்னு

அப்புறம் கமெண்ட் பார்த்தவுடனே எல்லாம் க்ளியர் ஆகிடிச்சு :)

Adiya said...

சிரிக்கவைது சிந்திக வைத்துஇருகிக

very valid statements and grt8 work.

ஆஞ்சேனேயா!( ada ajith illa pa ) bless u.. :)

ramya said...

appy aanjaneyar jayanthi..

Arunkumar said...

ஆஞ்சநேயர பத்தி சூப்பரா எழுதியிருக்கீங்க... வாழ்த்துக்கள் முதலில் :)

//
முதன் முதலாக பாஸ்போர்ட், விசா இல்லாமல் இமிக்ரேஷனில் மாட்டிக்காமல் பயணம் செய்தது என்னுடைய தல தான்!
//

LOL :)

//
"ஆதலால் பிளாக் எழுதுவீர்"
//
browser ரெடி, பதிவு எப்போ?
எவ்வளவு விரைவில் ?

Sandai-Kozhi said...

@TRC Sir:
//சுந்தரகாண்டத்தைப் பற்றி நல்ல பதிவு படிக்கனுமா இந்த சைடுக்கு போhttp://mscongenialityforall.blogspot.com/2006/07/sundara-gaandam.html //

மிக்க நன்றி.நீங்கதான் அம்பிக்கு சரியா ஆப்பு வைக்கிறவர்.வாழ்க!வாழ்க!--SKM

ambi said...

//மச்சான், நீ சொல்லிக்கேக்கலைனா போற போக்குல உன் அக்கா கிட்ட பத்தவச்சிடுவேல.. அது தான்.. //

@karthi, antha bayam irukattum! :)

//indha ABT courier service la malaiya thookittu varuvaare//
@viji, venaam, office thedi vanthu naalu saathu saathuven! :p

//unga bothaikku avuru oorugaaya//
cha! total damagu! :p kandukaatha, freya vudu! :)

//வடை ,போன்டா, பஜ்ஜி சொஜ்ஜி எல்லாம் கெடச்சுருக்குமே //
@gops, yeeh, yeeh, ellam kidachathu! :)

//அரியணை அனுமன் தாங்க,
அங்கதன் உடைவாள் ஏந்த,
பரதன் வெண்குடை கவிக்க,
இருவரும் கவரி பற்ற,

விரகடல் உலகம் ஏத்தும்
வெண்ணெய் நல்சடையன் வண்மை
மரபுளோன்
கொடுக்க வாங்கி,
வசிட்டனே புனைந்தான் மௌலி
//
@ravi, நன்றி, எனக்கு பேச்சே வரலை, இந்த பாட்டு பாதி தான் எனக்கு தெரியும், அதான் போடலை! அனுமன் கை விடவே மாட்டான், இல்லாடி நீங்க வந்து எனக்கு உதவி பண்ணி இருக்கீங்களே!

100 பாட்டுக்கு ஒரு முறை தன்னை ஆதரித்த சடையப்ப வள்ளலை சைடு கேப்புல புகழ்ந்து இருக்கார் பாருங்க! அங்கே தான் நிக்கறார் கம்பர்! :)

//அவன் அகண்ட ராம நாம பாராயணத்தில் இருப்பதால், அடியேனை அதற்கென்றே அனுப்பினான்!//
ஆஹா! சைக்கிள் கேப்புல சாண்ட்ரோ ஓட்டிடிங்களே தலைவா! :)

@sree, danQ! danQ! me too thought of something looke odd in the scrolling lines. thans, now i corrected.
ithukku thaan padichavanga kooda pazhaganum!nu solrathu! :)

//அப்புறம் கமெண்ட் பார்த்தவுடனே எல்லாம் க்ளியர் ஆகிடிச்சு //

@dubukku, எதுனாலும் பேசி தீத்துக்கலாம், சபைல இப்படி மானத்தை(?) வாங்க வேண்டாம்! :p


@adiya, danQ for the first visit. same to U!

@one among U, danks! :)

//browser ரெடி, பதிவு எப்போ?
எவ்வளவு விரைவில் ?//
@arun, wait, ready aayittu irukku! :)

@SKM, kummi adichaachaa? santhoshama? thripthiyaa? :)

ramya said...

ungala poi kuzhandhainu unga frend SKM solirukanga...neengale sollunga ippadi kalangathala poi pesina enna panradhu..

silenta enakku mattum sollunga yarandha ambiku aetha mami..

Anonymous said...

Ok, here is a more useful comment:
(Its unlikely that you'll get bad dreams now. ;-) But still...)
Hanuman slogam thats supposed to prevent bad dreams-
"Ramaskandham hanumantham Vainatheyam Vrukodharam
Shayane ya smaren nithyam dhuswapnam thasya nashyathi".
Enjoy!
-Viji

dubukudisciple said...

அம்பி!!
பதிவு எல்லாம் நல்லா தான் இருக்கு!! ஆனா உள்குத்து எதுவும் இல்லயே??.....

//Dubukku said...
சாமீ எனக்கு ஒரு சந்தேகம்....என்னாடா பையனுக்கு ஆஞ்சனேயர் மேல ஒரே லவ்ஸ்ன்னு

அப்புறம் கமெண்ட் பார்த்தவுடனே எல்லாம் க்ளியர் ஆகிடிச்சு :)
////

என்ன குருவே!!!
ஏதாவது புதுசா பதிவு போடுவீங்கனு பார்த்தா எல்லா ப்ளாக்லயும் பின்னுட்டம் போட்டுட்டு இருக்கீங்க!!
என்ன எல்லாருக்கும் ஞாபக படுத்தரீங்களா??? நீங்க இருக்கீங்கனு??

கீதா சாம்பசிவம் said...

சுந்தர காண்டம் படிக்க 45 நாள் வேணாம். 9 நாளே போதும். அப்புறம் உலகின் முதல் கண் தானம் செய்தவர் "கண்ணப்ப நாயனார்". முதல் டெஸ்ட் ட்யூப் பேபி "அகத்தியர்"
மஹா பாரத்தத்திலும் இந்த மாதிரி நிறைய உலகின் முதல் இருக்கு. ஒரு பட்டியலே வச்சிருக்கேன். இதிலே எழுதினால் பதிவு மாதிரி ஆயிடும்.

பொற்கொடி said...

hello enna nan menakettu bday wish pannaduku cake varala, aduthu aapu kidaichaduku cake varala, udambu epdi irukku... manni please take note of this arajagam!!

பொற்கொடி said...

apram chi chi annachi oru doubt :)

oor ulagathula yarume pannikadada panra madri itana scene podringle enna idu? nanum pakren ellar bloglayum kummi adika solli utharavu vandurku. enna idellam chinna pulla thanama? jonia jelvaragavan galyanathuku guda ivlo bublijidy tarla yaarum :)) epdiyo thangachi pera kaapathunga podum.

Ponnarasi Kothandaraman said...

Hahaha...5 points were 2 good.. ;)
HANUMAN must b really hapy 2 c :)

Syam said...

என்ன ஒரு டெக்குனாலஜி அந்த காலத்துலயே பண்ணி இருக்கார்... :-)

Syam said...

//பிகர்களுக்கு!னு வாசிக்கப்படாது ஷ்யாம்!) //

உன்னோட குசும்புக்கு ஒரு அளவே இல்லயா...சரி உனக்கும் ஆப்பு வைக்க ஒருத்தி சீக்கிரம் வரதுக்கும் உன் தல கிட்ட நானும் வேண்டிக்கறேன் :-)

Sandai-Kozhi said...

@syam:
//சரி உனக்கும் ஆப்பு வைக்க ஒருத்தி சீக்கிரம் வரதுக்கும் உன் தல கிட்ட நானும் வேண்டிக்கறேன் :-)//
vandhachu.unga vendudhal palichachu.adhukku thanks sollathan indha post.Theriyadha.--SKM

ambi said...

//silenta enakku mattum sollunga yarandha ambiku aetha mami..
//
@one among U, ha haa, aasai dhosai, aplam vadai! :p

//Its unlikely that you'll get bad dreams now. ;-) But still..//

@viji, me getting bad dreams(?) nowadays. hope this slogam will help me. :p thanx for the slogam. *ahem* entha sitelenthu sutta? :p

//ஒரு பட்டியலே வச்சிருக்கேன். இதிலே எழுதினால் பதிவு மாதிரி ஆயிடும்.
//
@geetha madam, ezhutha ivloo irunthaalum, mokkai postu thaan podarenga! :p

//jonia jelvaragavan galyanathuku guda ivlo bublijidy tarla yaarum :)) epdiyo thangachi pera kaapathunga podum.//
@porkodi, thoda! rangamaniku olunga samayal senju namba kudumba manatha(?) kaapathra vazhiya paaru! :p

@ponnarasi, danQ ! danQ! new company(bulb company) join panniaacha? :p

//உனக்கும் ஆப்பு வைக்க ஒருத்தி சீக்கிரம் வரதுக்கும் உன் தல கிட்ட நானும் வேண்டிக்கறேன் //
@syam, see SKM comment below. :p
//vandhachu.unga vendudhal palichachu//
@SKM, enna aatam jaasthiya irukku? unga husband email id pls. :p

மண்டு said...

ada makka...idu romba over

மண்டு said...

ada makka...idu romba over

ranjhith said...

அருமையாக எழுதுகிறீர்! வாழ்த்துக்கள்.

raz said...

oh! neeinga antha mathiri ambi-o! seri! remo irukkangala?

Harish said...

Annatha...chk this
http://mandupaiyan.blogspot.com/
my tamil blog :)
Ungal aadaravu karam neetuveer :-)

Anonymous said...

//*ahem* entha sitelenthu sutta? :p//- unga buthi vere eppdi pogum? ;-) idhu yen paati solli kuduthadhu. :P
-Viji

Anonymous said...

adutha post podardhu.... :P ethana naal wait panradhu naanga? ;)
-Viji

Sandai-Kozhi said...

//@SKM, enna aatam jaasthiya irukku? unga husband email id pls. :p //
unga kootani serndha aadithanae aaganum.email id ya,
Rangamani@Thangamani.com nu theiryadha.--SKM

Sandai-Kozhi said...

I wish you a year full of celeberations ,smiles,Love and Happiness Ambi.Happy New Year.
Don't worry ,will cook kathirikkai for you.No jangiri this time.Be Cheerful.--SKM

Dreamzz said...

//இந்த பதிவையும் எனது தலைவன் அனுமன் கண்டிப்பாக படித்து பூரிப்பான்! ஹிஹி, கமெண்ட்டும் போடுவான். :)//

உன் பக்தி சிரத்தையை பாராட்டி நம்மள உங்க Blog அ படித்து இனி regular-அ comment போட சொல்லி விட்டார் நம்ம Birthday Boy! ;)

அப்படியே புது மாப்பிள்ளை ஆக போபவர்க்கு என்னோட வாழ்த்துக்கள்!

Bharani said...

Ambi anna...Wishing You a Vey Happy & Prosperous New Year :)

And belated birthday wishes...kannalam aga pogudhaame...special congrats...invitation anupa marandhudateemgo :)

Syam said...

Wish You a Wonderful New Year!!!

adutha varusam onnum panna mudiyaathu...athunaala indha new year celebration nalla panniko :-)

shree said...

kadha kalakshebam ketta effectngo!

மு.கார்த்திகேயன் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே

இந்த வருடத்தில் கிடைத்த உங்கள் நட்பு எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. பரந்து விரிந்த இந்த உலகத்தில் நம்மை சேர்த்து வைத்த இந்த பிளாக்கருக்கு நன்றி.

இந்த புதிய வருடத்தில் ஆண்டவனிடன் நீங்கள் வேண்டும் யாவும் கிடைக்கப்பெற்று, நல்ல ஆரோக்கியத்துடன் நீங்களும் உங்களும் குடும்பத்தினரும் எல்லா வித இன்பங்களும் கிடைக்கப் பெற்று வாழ வாழ்த்துக்கள். தாங்கள் பணிபுரியும் அலுவலகத்தில் மேலும் மேன்மை அடைந்து சிறக்க வாழ்த்துக்கள்

மு.கார்த்திகேயன் said...

பஞ்சாப் கூட புது வருஷத்துக்கு எங்கேயும் போறதா பிளான் இருக்கா அம்பி

இந்த வருஷமாவது பூரி கட்டைல அடி வாங்காம இருந்தா சரிப்பா

Bharani said...

oru 50th comment-a potu vaipom :)

indianangel said...

belated birthday wishes ambi - sorry late in wishing you! Wishing you and your family members a wonderful new year with everlasting happiness and cherishing health!
-- Prasanna

G3 said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் :-)

Ponnarasi Kothandaraman said...

Ammmey...Bulbu company'a???
Innum illa..we had 2days workshop..Innum intha sem irukula.. :)

NNest post pls :)

Happy new year! :)

கீதா சாம்பசிவம் said...

மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள், அம்பி.

நாகை சிவா said...

வீரு, தாமதாமான பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

சமத்தா வாங்கிக்கிட்டு என்னை ஆசீர்வாதம் பண்ணவும்.

My days(Gops) said...

Thala,
Wishing you a "Happy New Year 2007"...

smiley said...

Wish you a Happy New Year :)

Sandai-Kozhi said...

HAPPY NEW YEAR AMBI.--SKM

gils said...

belated bday wishes to aanchu..list of first timers super..epdi ambi idelam..aduva varutha...murgar aanchunu kadavulakay birthday greeting podra ur styleukaaga...oru spl O podlama

Priya said...

உங்களுக்கும், தங்கமணிக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் அம்பி.

Marutham said...

Aha...Kanalamamey! :O
Sollavey illa..
anjaneyar poitaar- neenga unga update podunga....Enna poda poreenga- kalyana photo ??! :)
Wish you both a very very happy married life!! VAAZHGA PALLAANDU!!

Priya said...

ஆஞ்சனேயாவோட அடுத்த பர்த் டே வந்துடும் போல இருக்கு? வேர போஸ்ட் போட மாட்டேங்கறிங்க? ரொம்ப பிஸியோ ??

Sandai-Kozhi said...

yenna busy?guruDakshanai is your new post.Monday varum bodhu new post irukkanum.:)--SKM

Pavithra said...

Nice post !! I had been to Nanganallur on Hanumanth Jayanthi. I heard that only 2 gods have escaped the wrath of Saneeswarar, Ganesh & Hanuman. So, its beleived that people in the wrath of Saturn can escape a bit by praying to these 2 gods.

Wish you a very happy new year !!

Balaji S Rajan said...

Aiya,

I was born on Hanumanth Jayanthi day.... Just wanted to tell.... So need not put special post for me.... He...he... After reading your post, it gives a feeling like having seen Rama Narayanan picture.

[ 'b u s p a s s' ] said...

//
முதன் முதலாக பாஸ்போர்ட், விசா இல்லாமல் இமிக்ரேஷனில் மாட்டிக்காமல் பயணம் செய்தது என்னுடைய தல தான்!
//

hmm.. konjam idikuthu. when HE flew the first time, HE was questioned at the port of entry by demoness lankini. Though HE was on a valid purpose of travel (and qualified for visitor's visa), he was denied entry. Then HE had to destroy the whole immigration system of srilanka. so...

முதன் முதலாக பாஸ்போர்ட், விசா இல்லாமல் இமிக்ரேஷனில் மாட்டிகிட்டு இமிக்ரேஷனே இல்லாம செய்தது உங்க தல தான்!

:)

Aboorva said...

Sir,

u given a different identity to hanumanji is fine and thinkable, when ever i have time i am slowly reading all your articles

Jai hanuman ji

mohan said...

thala vanakkam

i have created a community in share market in named as accountstoday in orkut

Bye thala

mohan said...

thala vanakkam

i have created a community for bse share recommendations in orkut - accountstoday

奇堡比 said...

新女性徵信
外遇調查站
鴻海徵信
亞洲徵信
非凡徵信社
鳳凰徵信社
中華新女性徵信社
全國新女性徵信社
全省女人徵信有限公司
私家偵探超優網
女人感情會館-婚姻感情挽回徵信
女子偵探徵信網
女子國際徵信
外遇抓姦偵探社
女子徵信社
女人國際徵信
女子徵信社
台中縣徵信商業同業公會
成功科技器材
女人國際徵信社
女人國際徵信
三立徵信社-外遇
女人國際徵信
女人國際徵信
大同女人徵信聯盟
晚晴徵信