உங்கள் கம்பனி தனியாக இமெயில் ஐடி குடுத்து இருக்கிறதா? அப்படினா இந்த பதிவுக்கும் உங்களுக்கும் நெருங்கிய சம்பந்தம் உள்ளது. அதுக்காக மற்றவர்களுக்கு தொடர்பில்லைணு அர்த்தம் கொள்ள கூடாது.
அடிச்சு பிடிச்சு டிராபிக்ல சிக்கி ஒரு வழியா ஆபிஸ் போய், கணினி பொட்டியை தொறந்தவுடன் நாம், சரி, நான் செய்யும் முதல் வேலை என்ன? அவுட்லுக்கை தொறந்து என்ன மெயில் வந்ருக்குனு பாக்கறது தானே?
என்னதான் யாஹூ, ஜிமெயில்னு இருந்தாலும், கம்பெனி ஐடியில வர ஈமெயிலை படிக்கற சுகமே அலாதி.
காலையில், ஒரு கரடி கையில ரோஜா பூவை வைத்து கொண்டு குட் மார்னிங்க் சொல்லும் மெயிலாகட்டும், மதியம் புவா முடிந்ததும் ஒரு அரை மயக்கத்தில் நாம் என்ன தட்டுகிறோம்?னு நமக்கும் தெரியாம, கணினிக்கும் தெரியாத அந்த பேரானந்த நிலையை அடையும் போது என்ன தூக்கமா?னு வரும் மெயிலாகட்டும், சாயந்தரம் டீ குடித்த சூடு தணிவதற்குள் ஐஸ் குட்டி முழுகாம இருக்காளாம்!னு என்டி.டிவி கர்ம சிரத்தையாக அளித்த ரிப்போர்டை காப்பி பேஷ்ட் பண்ணி நமக்கு வரும் மெயிலாகட்டும் அடடா! நாம் பிறந்த பயனை அடைந்தே விடுவோம்.
வெள்ளிகிழமையானா போதும் "ஏ மானிடா திங்ககிழமை உலகம் இருக்குமோ இருக்காதோ, அதனால அடுத்து வரும் இரண்டு நாட்களில் வாழ்க்கையை முழுதும் வாழ்ந்து விடு!" என கருத்து கந்தசாமிகள் வீக் எண்ட் ஸ்பெஷல் மெயில் அனுப்புவதை தன் தலையாய கடமையாக கொண்டுள்ளனர்.
இது போதாதுனு பல பேர் ஊர்ல இருக்கற மொக்கை சைட்டுல அதாவது வெப் சைட்டுல எல்லாம் போயி எனக்கும் கம்பெனி ஐடி இருக்கு! எனக்கும் கம்பெனி ஐடி இருக்கு!னு போஸ்டர் அடிச்சு ஓட்டாத குறையா ரிஜிஸ்டர் பண்ணிட்டு வந்து விடுவர்.
அப்புறம் என்ன? இந்தா பிடினு அவனும் தினமும் "விருச்சிக ராசி நேயர்களே! இன்று உங்கள் பதிவுக்கு கமண்ட் போடாம கமுக்கமா படிச்சுட்டு போற கூட்டம் தான் அதிகம்! கவனமா இருக்கனும்"னு ஒத்த ரூவா பொட்டு வெச்ச ஓம் உலக நாதன் ரேஞ்சுக்கு தின, வார, மாத பலன் எல்லாம் அழகாய் அனுப்பி வைப்பான்.
ஏதாவது ஒரு ஏடாகூட வெப்சைட்காரனுக்கு நம்ம ஐடி தெரிந்து விட்டால் போதும், டாலருக்கு நாலு நயாகரா வாங்கிக்கோ! வயாக்ரா வாங்கிக்கோ!னு மெயில் அள்ளி விடுவான்.
நம்ம பாசக்கார மக்கள் மட்டும் என்ன சும்மாவா? தியேட்டருக்கு போனா பக்கத்து சீட்ல யாரு இருக்கா?னு பாக்காம உன் சீட்டுல ஊசி இருக்கா?னு பாரு. இப்படி தான் ஐதராபாத்துல ஐதர் அலி உக்காந்த சீட்டுல எயிட்ஸ் பரப்புற ஊசி இருந்ததாம்! இந்த மெயிலை ஐந்து பேருக்கு அனுப்பினா ஐஸ் குட்டி கனவுல வருவா! பத்து பேருக்கு அனுப்பினா பத்ம ப்ரியா வருவா! 15 பேருக்கு அனுப்பினா...னு பீதியை கிளப்பி விடுவர்.
சாப்பிட்ட பின், உடனே ஜில்லுனு தண்ணி குடிச்சா கான்சர் வரும், பழங்களை உணவு உண்ட பின் எடுத்து கொண்டால் கக்கா வரும்!னு இந்த லிஸ்ட் நீண்டு கொண்டே போகும்.
ஆபிஸில் இந்த யாஹூ, ஜிமெயில் எல்லாம் தடா செய்யப்பட்ட திக்கற்றவர்களுக்கு அவுட்லுக்கே துணை! சதா சர்வ காலமும் ஜிமெயிலிலேயே மோன நிலையில் தவம் கிடக்கும் ஒரு க்ரூப்புக்கு(இப்போ உங்களுக்கு ஜி3 அக்கா, ரசிகன் எல்லாம் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பில்லை) தப்பி தவறி சவுக்கியமா?னு மெயில் அனுப்பினா நம்ம ஐடிக்கு சும்மா வளைச்சு வளைச்சு கும்மி அடித்து விடுவார்கள்.
ஒரு கட்டத்தில் நமக்கு வரும் மெயிலுக்கு, நமது ஆபிஸில் பொழுது போகாமல் பிளாக் படித்து கொண்டிருக்கும் நாகை சிவா போன்ற நெட்வர்க் அட்மின்களே பதில் போடும் அளவுக்கு நம் இன்பாக்ஸ் எகிறி விடும்.
இந்த களேபரத்தில், "சாயந்தரம் வரும் போது அரைகிலோ தக்காளி, மற்றும் எலுமிச்சம்பழம் வாங்கி வரவும்! வழக்கம் போல, கறிவேப்பிலைக்கு தனியாக காசு குடுத்து ஏமாற வேண்டாம்"னு பின்குறிப்பு போட்டு தங்கமணியிடமிருந்து வந்திருக்கும் அதிமுக்யமான மெயிலை காண தவறிவிட்டால், சாலமன் பாப்பையா சொன்ன மாதிரி, இந்த நாள் இனிய நாளாகி விடும்.
இரண்டு வருடங்களுக்கு ஒருதரம், ஒரு கம்பெனி விட்டு இன்னொரு கம்பெனி தாவும் என்னை போன்ற வானரங்களுக்கு, அட்ரஸ்புக்கில் இருக்கும் ஈமெயில் ஐடிகளை சிந்தாமல் சிதறாமல் கொண்டு போவதே பெரிய வேலை.
புது கம்பெனியில் பிளாக் எல்லாம் பிலாக் ஆகாமல் இருக்கனும்!
நம்ம கணினியில் சீன, ஜப்பான் மொழி எல்லாம் வராமல் தமிழ் எழுத்துக்கள் தெரியனும், நாம் உட்காரும் சீட் டேமேஜர் சீட்டுக்கு முதுகுபக்கமா இருக்கனும், அப்ப தான் நம்ம வழக்கமான தமிழ்தொண்டை(ஹிஹி) தங்குதடையில்லாமல் செய்ய முடியும்! போன்ற நியாயமான கவலைகள் எல்லாம் தலைவிரித்தாடும்.
74 comments:
மீ தி ஃபர்ஸ்ட்டூ.. :-)
இந்த மாதிரி எழுதி பல நாள் ஆகுதுண்ணே நீங்க.. :-)
யாருமில்லையா?
ஆனால், இங்கே கும்மிக்கு ஸ்டார்ட் மியூசிக் பண்ணலாம்ன்னு நெனச்சேனே?
சரி.. தனியா ஆடுவோம். ;-)
//அவுட்லுக் //
அவுட்லுக் or out "look"?
//அதுக்காக மற்றவர்களுக்கு தொடர்பில்லைணு அர்த்தம் கொள்ள கூடாது.
//
அதாவது எல்லாரும் படிக்க.. ன்னு சொல்றீங்க..
அப்போ சாஇட்ல "U" பேட்ஜ் போடணுமே?? ;-)
//காலையில், ஒரு கரடி கையில ரோஜா பூவை வைத்து கொண்டு குட் மார்னிங்க் சொல்லும் மெயிலாகட்டும்,//
நீங்க G3-யைதான் சொல்றீங்கன்னு நான் வெளியே சொல்ல மாட்டேன் அண்ணா. :-))
// மதியம் புவா முடிந்ததும் ஒரு அரை மயக்கத்தில் நாம் என்ன தட்டுகிறோம்?//
மதிய தூக்கம் ஆபிஸ்லதானா?
//வெள்ளிகிழமையானா போதும் "ஏ மானிடா திங்ககிழமை உலகம் இருக்குமோ இருக்காதோ, அதனால அடுத்து வரும் இரண்டு நாட்களில் வாழ்க்கையை முழுதும் வாழ்ந்து விடு!" என கருத்து கந்தசாமிகள் வீக் எண்ட் ஸ்பெஷல் மெயில் அனுப்புவதை தன் தலையாய கடமையாக கொண்டுள்ளனர்//
இது ராஜி அக்காவைத்தான் சொல்றீங்களோன்னு தப்பா.. இல்ல கரேக்ட்டா கண்டுபிடிச்சுட்டேன்.. :-P
///இது போதாதுனு பல பேர் ஊர்ல இருக்கற மொக்கை சைட்டுல அதாவது வெப் சைட்டுல எல்லாம் போயி எனக்கும் கம்பெனி ஐடி இருக்கு//
ஓஹ்.. அதூ நீங்கதானா?
//இந்தா பிடினு அவனும் தினமும் "விருச்சிக ராசி நேயர்களே! இன்று உங்கள் பதிவுக்கு கமண்ட் போடாம கமுக்கமா படிச்சுட்டு போற கூட்டம் தான் அதிகம்! கவனமா இருக்கனும்"னு ஒத்த ரூவா பொட்டு வெச்ச ஓம் உலக நாதன் ரேஞ்சுக்கு தின, வார, மாத பலன் எல்லாம் அழகாய் அனுப்பி வைப்பான்.
//
விவிசி.. :-))))))))))))))))
/ஏதாவது ஒரு ஏடாகூட வெப்சைட்காரனுக்கு நம்ம ஐடி தெரிந்து விட்டால் போதும், டாலருக்கு நாலு நயாகரா வாங்கிக்கோ! வயாக்ரா வாங்கிக்கோ!னு மெயில் அள்ளி விடுவான்.
//
ஆள் தெரியாம அனுப்பிட்டான் போல.. :-)
13 -- ரிசர்வ்ட் ஃபார் அண்ணன் கோப்ஸ். :-)
//நம்ம பாசக்கார மக்கள் மட்டும் என்ன சும்மாவா? தியேட்டருக்கு போனா பக்கத்து சீட்ல யாரு இருக்கா?னு பாக்காம உன் சீட்டுல ஊசி இருக்கா?னு பாரு//
இது டாக்டர் DD & சுமதி அக்கா? ;-)
//(இப்போ உங்களுக்கு ஜி3 அக்கா, ரசிகன் எல்லாம் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பில்லை) //
அப்படி போடுங்க ஆப்பு! ;-)
//தப்பி தவறி சவுக்கியமா?னு மெயில் அனுப்பினா நம்ம ஐடிக்கு சும்மா வளைச்சு வளைச்சு கும்மி அடித்து விடுவார்கள்.
//
இது கூட பரவால்லண்ணே.. வணக்கம் சொல்லிட்டு திரும்ப நாமளும் வணக்கம் சொன்னா, ரயில் வண்டீ கணக்கா பேசிட்டே போவாங்க்க.. நடுவுல நாம கொஞ்சம் வேலைல பிஜியா இருந்தா, பை பை கூட சொல்லாம ஓடிட்டா மை ஃபிரண்ட்ன்னு நம்மளையே திட்டுறாங்க. :-(
//ஒரு கட்டத்தில் நமக்கு வரும் மெயிலுக்கு, நமது ஆபிஸில் பொழுது போகாமல் பிளாக் படித்து கொண்டிருக்கும் நாகை சிவா போன்ற நெட்வர்க் அட்மின்களே பதில் போடும் அளவுக்கு நம் இன்பாக்ஸ் எகிறி விடும்.//
;-))
/இந்த களேபரத்தில், "சாயந்தரம் வரும் போது அரைகிலோ தக்காளி, மற்றும் எலுமிச்சம்பழம் வாங்கி வரவும்! வழக்கம் போல, கறிவேப்பிலைக்கு தனியாக காசு குடுத்து ஏமாற வேண்டாம்"னு பின்குறிப்பு போட்டு தங்கமணியிடமிருந்து வந்திருக்கும் அதிமுக்யமான மெயிலை காண தவறிவிட்டால், //
இதுக்கும் அவுட்லுக்தானா? கம்பெனி போன் இல்லையா? ஹீஹீ
//இரண்டு வருடங்களுக்கு ஒருதரம், ஒரு கம்பெனி விட்டு இன்னொரு கம்பெனி தாவும் என்னை போன்ற வானரங்களுக்கு, அட்ரஸ்புக்கில் இருக்கும் ஈமெயில் ஐடிகளை சிந்தாமல் சிதறாமல் கொண்டு போவதே பெரிய வேலை.
//
அதுக்குதான் இம்போர்ட் எக்ஸ்போர்ட் ஃபங்ஷன் இருக்குல்லே?
அவுட்லுக்கை வச்சே இப்படி ஒரு போஸ்ட்.. ஜூப்பர்..
ரொம்ப நாள் ஆச்சு..
இங்கே கும்மி அடிச்சு
பார்க்கிறவங்க பயப்பட வேணாம்
26-லிருந்து உங்க கணக்கு ஸ்டார்ட்.. ;-)
எவ்வளவோ செஞ்சிட்டோம்.. இதுக்கூட செய்ய மாட்டோமா!!!
25 25 25 25 25 25 25 25 25 25 25 25 25 25 25 25 25 25 25 25 25 25 25 25 25
சூப்பரு... :)
@my friend, அம்மா தாயே! மலேசிய மாரியாத்தா! இப்படி கும்மி அடிச்சிட்டியே தாயி! அண்ணனை டோட்டல் டேமேஜ் பண்ணிட்டியே மா! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
//சூப்பரு... :)
//
@ராம் அண்ணே! என்ன சூப்பர்? ஒரு வேளை மங்களுர் சிவா பிளாக்குல போட வேண்டிய கமண்டை இங்க போட்டுடீங்களா என்ன? :))
ada! ella edathilum polappu ippadithan povutha..
சூப்பர் போஸ்ட்டு தல ;))
myfriend,
ungaluku romba porumai.....
ADharkul 29 comments nu konjam shock ayten.Parthal,
Ellam unga post dhan.....
Dear ambi,
Unga kindal writings kanama pogalae... Keep it up...
மதியம் புவா முடிந்ததும் ஒரு அரை மயக்கத்தில் நாம் என்ன தட்டுகிறோம்?னு நமக்கும் தெரியாம, கணினிக்கும் தெரியாத அந்த பேரானந்த நிலையை அடையும் போது என்ன தூக்கமா?னு வரும் மெயிலாகட்டும், சாயந்தரம் டீ குடித்த சூடு தணிவதற்குள் ஐஸ் குட்டி
Oru madhyana thookathai (Sapita pin) evvalavu azhaga varnanai senju irukeenga... v.Nice.
Idhai padichadhum, School days il madhyanam first period - Maths varum parunga.... Kodumai.
Namba thookam teacher kum vandhudum.. He He He.. Adhu nyabagaam vandhadhu.
ஏதாவது ஒரு ஏடாகூட வெப்சைட்காரனுக்கு நம்ம ஐடி தெரிந்து விட்டால் போதும், டாலருக்கு நாலு நயாகரா வாங்கிக்கோ! வயாக்ரா வாங்கிக்கோ!னு மெயில் அள்ளி விடுவான்.
ADhanae parthen. Romba samatha ezhudhiteengalo nu.... He He He.
With Love,
Usha Sankar.
வாழ்த்துக்கள் !!
Ambi,
Hilarious post...
//நான் செய்யும் முதல் வேலை என்ன? அவுட்லுக்கை தொறந்து என்ன மெயில் வந்ருக்குனு பாக்கறது தானே?
//
Sila perukku athuve muthalum kadaisi velaiya irukku..he he..
//டேமேஜர் சீட்டுக்கு முதுகுபக்கமா இருக்கனும், அப்ப தான் நம்ம வழக்கமான தமிழ்தொண்டை(ஹிஹி) தங்குதடையில்லாமல் செய்ய முடியும்! //
nallave Thamizhthondai aatrunga...
Tendulkar maathiri romba steadya myfriend score pannitu irukkanga... Enna oru 50 potrukkalam...
ஹாய் அம்பி,
//இன்று உங்கள் பதிவுக்கு கமண்ட் போடாம கமுக்கமா படிச்சுட்டு போற கூட்டம் தான் அதிகம்! கவனம்//
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா...சூப்பர்.
ஹாய்,
//(இப்போ உங்களுக்கு ஜி3 அக்கா, ரசிகன் எல்லாம் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பில்லை//
இது தான் டிடி அக்கா போஸ்டுக்கு வைச்சிருக்கற ஆப்போ?
ஹாய்,
//பொழுது போகாமல் பிளாக் படித்து கொண்டிருக்கும் நாகை சிவா..//
ஹலோ மிஸ்டர் சிவா, நோட் திஸ் பாயிண்ட்..
ஹாய்,
//பின்குறிப்பு போட்டு தங்கமணியிடமிருந்து வந்திருக்கும் அதிமுக்யமான மெயிலை..//
ஓஹோ, உங்க தங்கமணி மெயில்ல தான் இதெல்லாம் சொல்வாங்களா?
அப்ப போன் பில் கம்மி தான் ஆகும்னு சொல்லுங்க..
ஹாய்,
//இரண்டு வருடங்களுக்கு ஒருதரம், ஒரு கம்பெனி விட்டு இன்னொரு கம்பெனி தாவும் என்னை போன்ற//
அட ஆமாம் உங்க புது ஆபீஸ் எப்படி இருக்கு? இங்க என்னன்ன வசதில்லாம் குடுத்து இருக்காங்க?
இங்க ஜிமெயில்லாம் அப்பறம் ஜிடாக்கெல்லாம் உண்டா?
As usual ROFL post!!
Rock on!! B-)
புது கம்பெனியில் பிளாக் எல்லாம் பிலாக் ஆகாமல் இருக்கனும்!
நம்ம கணினியில் சீன, ஜப்பான் மொழி எல்லாம் வராமல் தமிழ் எழுத்துக்கள் தெரியனும், நாம் உட்காரும் சீட் டேமேஜர் சீட்டுக்கு முதுகுபக்கமா இருக்கனும்
அதுவும் தம்பி கணேசனுக்கு தெரியாம இருக்கணும். இல்லைனா அவன் வேறு இப்படிஎல்லாம் பண்ணா புரொபேஷனை நீடிக்கச் செய்துவிடுவேன் என்று பயமுறுத்துவான்
சூப்பர் அப்பு
புது கம்பெனியா!! வாழ்த்துக்கள்.
ஆகா கும்மின்னா என்னன்னு இந்த பதிவு மூலமாத்தான் தெரியுது..
ஆமாம், இன்னும் ஏன் புது மெயில் ஐடியை எனக்கு சொல்லை?. என்னது? தம்பியிடம் கேட்டுக்கவா?..
//வழக்கம் போல, கறிவேப்பிலைக்கு தனியாக காசு குடுத்து ஏமாற வேண்டாம்"னு பின்குறிப்பு போட்டு தங்கமணியிடமிருந்து வந்திருக்கும் அதிமுக்யமான மெயிலை காண தவறிவிட்டால், சாலமன் பாப்பையா சொன்ன மாதிரி, இந்த நாள் இனிய நாளாகி விடும்.//
ROFL!
உண்மை எல்லாம் சொல்லறீங்களே... சூப்பரு :)
//ஆனால், இங்கே கும்மிக்கு ஸ்டார்ட் மியூசிக் பண்ணலாம்ன்னு நெனச்சேனே?// :(
நான் கொஞ்சம் லேட்
சரி வந்ததுக்கு.. எக்ஸ்ட்ரா
45
//இந்த களேபரத்தில், "சாயந்தரம் வரும் போது அரைகிலோ தக்காளி, மற்றும் எலுமிச்சம்பழம் வாங்கி வரவும்! வழக்கம் போல, கறிவேப்பிலைக்கு தனியாக காசு குடுத்து ஏமாற வேண்டாம்"னு பின்குறிப்பு போட்டு தங்கமணியிடமிருந்து வந்திருக்கும் அதிமுக்யமான மெயிலை காண தவறிவிட்டால், சாலமன் பாப்பையா சொன்ன மாதிரி, இந்த நாள் இனிய நாளாகி விடும்//
ரொம்ப அனுபவம் போல..:P
//:: மை ஃபிரண்ட் ::. said...
//(இப்போ உங்களுக்கு ஜி3 அக்கா, ரசிகன் எல்லாம் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பில்லை) //
அப்படி போடுங்க ஆப்பு! ;-//
ஃமைபிரண்டு ,மைஎதிரியா ஆக வேணாமுன்னு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.:P...
//நடுவுல நாம கொஞ்சம் வேலைல பிஜியா இருந்தா, பை பை கூட சொல்லாம ஓடிட்டா மை ஃபிரண்ட்ன்னு நம்மளையே திட்டுறாங்க. :-(//
எப்டி பிஜி இல்லாம இருக்கும்?,இப்டி ஒத்தையா ரவுண்டு கட்டி கும்மி அடிச்சிக்கிட்டிருந்தா :P
//புது கம்பெனியில் பிளாக் எல்லாம் பிலாக் ஆகாமல் இருக்கனும்!
நம்ம கணினியில் சீன, ஜப்பான் மொழி எல்லாம் வராமல் தமிழ் எழுத்துக்கள் தெரியனும், நாம் உட்காரும் சீட் டேமேஜர் சீட்டுக்கு முதுகுபக்கமா இருக்கனும், அப்ப தான் நம்ம வழக்கமான தமிழ்தொண்டை(ஹிஹி) தங்குதடையில்லாமல் செய்ய முடியும்! போன்ற நியாயமான கவலைகள் எல்லாம் தலைவிரித்தாடும்.//
அம்பியண்ணா...இதுல இத்தனை பிரமபிரயத்தம்ல்லாம் இருக்கா?.. நான் பரவாயில்லைப்பா... ஹிஹி..:))))))
//அப்ப தான் நம்ம வழக்கமான தமிழ் தொண்டை (ஹிஹி) தங்கு தடையில்லாமல் செய்ய முடியும்!//
அடப் பாவீங்களா! தமிழ்த் தொண்டை!! தொண்டை கிழியத் தமிழ்ல தான் டேமேஜரைத் திட்டுவீங்களா? :-))
//சாயந்தரம் வரும் போது அரைகிலோ தக்காளி, மற்றும் எலுமிச்சம்பழம் வாங்கி வரவும்!//
தக்காளி சரி புரியுது! ஒங்க மேல வீச! எலுமிச்சம் பழம் எதுக்குங்கண்ணே? :-))
///இன்று உங்கள் பதிவுக்கு கமண்ட் போடாம கமுக்கமா படிச்சுட்டு போற கூட்டம் தான் அதிகம்! கவனம்
Ayaa ..naan comment potutean pa ..enna sabikadheenga ..
ROTFL..
as usual unga style-la supera ezhudi irukkinga thala..
//வழக்கம் போல, கறிவேப்பிலைக்கு தனியாக காசு குடுத்து ஏமாற வேண்டாம்"னு பின்குறிப்பு போட்டு தங்கமணியிடமிருந்து வந்திருக்கும் அதிமுக்யமான மெயிலை காண தவறிவிட்டால், சாலமன் பாப்பையா சொன்ன மாதிரி, இந்த நாள் இனிய நாளாகி விடும்.//
ungalukku ranagalam
engalukku ROTFL-O-ROTFL...
Hi,
உங்க பதிவு நல்லா இருக்கு. உங்க style of writing is nice.
Do Visit my page when time permits.
நட்புடன்..
நிவிஷா
அம்மாஞ்ஜி அம்பி இப்போ அவுட்லுக் அம்பியா? as usual கலக்கிட்டீங்க.
super! neenga office porathay mail padikathan pola (sari sari elarum apdithan!) ivalavum eluthitu , thangamani anupara mailayum pathi soli escapeaaa? too much brother!!
best in this post:
//நமக்கும் தெரியாம, கணினிக்கும் தெரியாத அந்த பேரானந்த நிலையை அடையும் போது என்ன தூக்கமா?னு வரும் மெயிலாகட்டும்,// ROTFL
//ஆபிஸில் இந்த யாஹூ, ஜிமெயில் எல்லாம் தடா செய்யப்பட்ட திக்கற்றவர்களுக்கு அவுட்லுக்கே துணை!// why blood? same blood!
//நாம் உட்காரும் சீட் டேமேஜர் சீட்டுக்கு முதுகுபக்கமா இருக்கனும்// ippo enga poi unga velaya kaataporinga brother?
anyway all the bestu!! :-) unga thamizh - thundai (sorry thondai) thavaraamal thodaravum..
ipadiku,
apppavi thangai deekshanya :-);-)
:-);-)
athukkulla 56aaaaa.vazhga nam makkal.thakkali elumichai vanga ippadi oru vazhiya,adhuteriyama naan ithanai nalla phone call waste panittene.
thakkali arra kilo seri,elumichaiyuma araa kilo.thangathu boss!!!!!!!!!!
nivi.
mothathula officela neenga karumame kannaiyinar(outlook punniyathula)
nivi.
25 potta maganubavan madhiri engalala mudiyila,irundhalum kodakandannana ambiikku oru vendukol.officella aaanikku velayillana 50 sochatukku thaniya reply podannumunnu ketukaren.
nivi.
=))
மை ஃபிரண்ட்,இப்படி கும்மக்கூடாது.
அவ்வ்வ்வ்வ்வ்....
hope you are enjoying as much as you can in ur new office as you always did in all your old office!
vambi..chancela..santhadisaakula karuvepalaku kaasu kudukara matter varaikum pinni pedaladichaahu :) ammani ipolam blog padikarathillayo?themba post varuthu? :)
//காலையில், ஒரு கரடி கையில ரோஜா பூவை வைத்து கொண்டு குட் மார்னிங்க் சொல்லும் மெயிலாகட்டும், மதியம் புவா முடிந்ததும் ஒரு அரை மயக்கத்தில் நாம் என்ன தட்டுகிறோம்?னு நமக்கும் தெரியாம, கணினிக்கும் தெரியாத அந்த பேரானந்த நிலையை அடையும் போது என்ன தூக்கமா?னு வரும் மெயிலாகட்டும், சாயந்தரம் டீ குடித்த சூடு தணிவதற்குள் ஐஸ் குட்டி முழுகாம இருக்காளாம்!னு என்டி.டிவி கர்ம சிரத்தையாக அளித்த ரிப்போர்டை காப்பி பேஷ்ட் பண்ணி நமக்கு வரும் மெயிலாகட்டும் அடடா! நாம் பிறந்த பயனை அடைந்தே விடுவோம்.//
ரொம்ப முக்கியம்! :P
மைஃப்ரண்டுக்கு எவ்வளவு கொடுத்தீங்க? அதைச் சொல்ல வேணாம்?
சில பேர் எத்தன கம்பெனி மாறினாலும் ப்ளாக்ல மொக்கை போட டைம் இருக்கு ...ஹூம்ம்ம்ம்ம் வெள்ளக்காரான் என்னிக்கு திருந்தப்போறானோ... :)))
தல அவுட்லுக்கு ஒரு போஸ்ட்டா..
அட்ரா அட்ரா....நீங்களுமா..
நீங்க சொல்லுறத பார்த்தா அவுட்லுக்கையே தான் லுக்கு வுட்டுட்டு இருப்பீங்க போல? :P
//ஒரு அரை மயக்கத்தில் நாம் என்ன தட்டுகிறோம்?னு நமக்கும் தெரியாம, கணினிக்கும் தெரியாத அந்த பேரானந்த நிலையை அடையும் போது என்ன தூக்கமா?னு வரும் மெயிலாகட்டும்,//
Rotfl.... அசத்திடீங்க தல....
//இன்று உங்கள் பதிவுக்கு கமண்ட் போடாம கமுக்கமா படிச்சுட்டு போற கூட்டம் தான் அதிகம்!//
ஹி ஹி ஹி ஹி இதை விவேக் ஸ்டைலில் படிச்சேன்..
rotfl post thala :)
அடிச்சு பிடிச்சு டிராபிக்ல சிக்கி ஒரு வழியா ஆபிஸ் போய், கணினி பொட்டியை தொறந்தவுடன் நாம், சரி, நான் செய்யும் முதல் வேலை என்ன? அவுட்லுக்கை தொறந்து என்ன மெயில் வந்ருக்குனு பாக்கறது தானே?
xactly ! :) supera soneenga ambi.
indha maari nakkal postkellam ambiya adichuka mudiyadhu.
pudhu officela velai eppadi ?
indha post padichale theriyudhu neenga endha window thirandhu vechu ukandhirukeenganu :)
vaazhga IT comp !!
valarga outlook versions !
thodarga emails :)
ensoyy !
kittu mami
@anony, ஆமா அனானி அண்ணே! :)
@gopinath, மிக்க நன்னி ஹை! :)
@usha shankar, நீங்களுமா? :)
ஹிஹி, ஸ்கூலில் ஆரம்பிச்சது ஆபிஸ் வரைக்கும் தொடருது! :p
@நன்றி இனியவன்!
@mgnithi, ஆமா! டேமேஜர்கள் எல்லாம் அவுட்லுக்குல தான் வேலையே பாக்கறாங்க. :p
@suamthi, வாங்க சுமதியக்கா, இங்க ஜிமெயில் எல்லாம் இருக்கு, ஆனா நம்ம சுத்தி தான் எல்லாரும் உக்காந்து இருக்காங்க. போன் பில்லும் நிறைய தான் ஆகுது. :)
@CVR, நன்னி சிவிஆர். :)
@TRC sir, உங்களுக்கு எனக்கு ஆப்பு வெச்சு கனேசன் புகழ் பாடலைனா தூக்கம் வராதே! :D
@koths, நன்றி கொத்ஸ் அண்ணாச்சி!
@M'pathi, என்னது புது ஐடியா? இன்னும் எனக்கே தர மாட்டேங்கறாங்க. :p
@dreamz, வாங்க தினேஷ், மிக்க நன்னி. :)
@rasigan, ஆமா! ஒரு பதிவு போடறத்துக்குள்ள நான் படும் பாடு இருக்கே! :D
//தொண்டை கிழியத் தமிழ்ல தான் டேமேஜரைத் திட்டுவீங்களா? //
@KRS, அட, நீங்களும் ஒரு டேமேஜரா? அப்படி போடுங்க அறுவாள! :)
எலுமிச்சையா? தலைல தேய்ச்சு... சரி விடுங்க, வீட்டுக்கு வீடு வாசப்படி! :p
@madu, உங்கள போய் சபிப்பேனா? :D
@arun,மிக்க நன்னி அருண், உனக்கும் ஒரு பிளாக் இருக்கு!னு ஊர்ல சொல்லிக்கறாங்க. :p
@nivisha, மிக்க நன்னி நிவிஷா!
@manipayal, மிக்க நன்னி சார்! இப்போ மார்கட் எப்படி இருக்கு?
@deekshanya, வாங்க தீக்க்ஷ்! புது ஆபிஸ் எப்படி இருக்கு? பிளாக் எல்லாம் பிலாக் ஆவலையே? :p
@nivi, வாங்க நிவி, எலுமிச்சை 2 தான் வாங்க சொன்னாங்க. உங்க ஆசைபடியே எல்லாத்துக்கும் பதில் போடறேன். :)
@சாமானியன், ஆமா! ரொம்பவே கும்மிட்டாங்க சாமானியன். :p
@DTamilan, ஆமா! சில விஷயங்கள் அதே மாதிரி, பல விஷயங்கள் இங்கே இல்லை. :D
@gils, வாப்பா ஜொள்ஸ்! அம்மணி அதேல்லாம் ஒழுங்கா படிக்கறாங்க.
*ahem, சென்னைக்கு எப்போ டிரேயின்? :D
//மைஃப்ரண்டுக்கு எவ்வளவு கொடுத்தீங்க? அதைச் சொல்ல வேணாம்?
//
@geetha paati, நீங்களா இருந்தா எவ்ளோ குடுத்ருப்பீங்க? அத சொல்லுங்க முதல்ல. :)))
@dubukku, சில பேருக்கு டைம் இருந்தாலும், மாசம் ஒரு பதிவு தான் போடறாங்க. பிளாக்கர்கள் எப்போ திருந்த போறாங்களோ? :p
@gops, நீ என்சாய் பண்ணி படிச்சதுல எனக்கு ரெம்ப சந்தோஷம் கோப்ஸ்! கார் சரியாயிடுச்சா? :))
@kittu maama, மிக்க நன்னி கிட்டு மாமா! நீங்க தான் பிளாக் உலக ஜோடி நம்பர் 1! :))
@k-mami, எல்லாம் உங்க ஆசிர்வாதம் கிட்டு மாமி! :p
// நாம் உட்காரும் சீட் டேமேஜர் சீட்டுக்கு முதுகுபக்கமா இருக்கனும், அப்ப தான் நம்ம வழக்கமான தமிழ்தொண்டை(ஹிஹி) தங்குதடையில்லாமல் செய்ய முடியும்//
டேமேஜர் பக்கத்து சீட்ல உட்கார்ந்திருக்கும் போதே இதெல்லாம் பண்ணாதாங்க த்ரில்லே..ஹிஹி
Hillarious
Chance'ae illa thala....soooober :))
ROTFL-o-ROTFL dhaan :)
Post a Comment